TNPSC-TET-VAO important questions answers 2018
1. ‘குப்தர் காலம் பொற்காலம்’ எனப்படுவதன் காரணம்? அக்காலத்தில் கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியம் சிறந்து விளங்கியது
2. கனிஷ்கர் ----- மதத்தை பின்பற்றினார்? புத்த மதம்
3. வெற்றித் தூணை கட்டியவர்? ராணா கும்பா
4. ‘ஹோஹார்’ முறை ----------- பெண்களிடம் காணப்படுகிறது. ராஜபுத்திர
5. நாளந்தா பல்கலைகழகம் --- காலத்தில் சிறந்து விளங்கியது? ஹர்ஷவர்த்தனர்
6. ஆலம்கீர் நாமாவை எழுதியவர்? மிர்சா முகமது காசிம்
7. சாளுக்கிய வம்சத்தின் கடைசி அரசர் யார்? இரண்டாம் கீர்த்திவர்மன்
8. மெகஸ்தனிஸ் என்பவர் யார்? தூதர்
9. மௌரிய பேரரசை அழித்தவர்? புஷ்யமித்ர சுங்கர்
10. அடிமை வம்ச அரசர்களில் சிறந்தவர்? பால்பன்.
* தூய்மையான நீரின் PH மதிப்பு - 7
* அதிக ஆற்றல் மூலம் கொண்டது - லிப்பிடு
* இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பன் - வைரம்
*எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் - நுரைப்பான் (ஃபோம்மைட்)
*ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்
* வெள்ளை துத்தம் எனப்படுவது - ஜிங்க் சல்பேட் ZnSO4
*உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் - ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3
TNPSC NOTES 2018 EXAMINATION
1. இந்தியாவின் முதல் விமான பல்கலைக்கழகம் - உத்திரபிரதேசம்
2. இந்தியாவின் முதல் இரயில்வே பல்கலைக்கழகம் - வதோதரா, குஜராத்
3. இந்தியாவின் முதல் உலக அமைதி பல்கலைக்கழகம் - புனே
4. இந்தியாவின் முதல் சமாதான பல்கலைக்கழகம் - புனே
5. இந்தியாவின் முதல் தலீத்-களுக்கான பல்கலைக்கழகம் - ஹைதராபாத்
6. இந்தியாவின் முதல் உலக டிசைன் பல்கலைக்கழகம் - ஹரியானா
7. இந்தியாவின் முதல் அனைத்து ஆயுர்வேத பல்கலைக்கழகம் - டெல்லி
8. இந்தியாவின் முதல் விளையாட்டு பல்கலைக்கழகம் - மணிப்பூர், ஜார்க்கண்ட்
9. இந்தியாவின் முதல் உலக தடய அறிவியல் பல்கலைக்கழகம் - குஜராத்
10.இந்தியாவின் முதல் பசுமை பல்கலைகழகம்(சுற்றுச்சூழல்) -WB(ஹுக்ளி)
TNUSRB TNPSC-TET-VAO important questions. 2018
1. சிந்து சமவெளி மக்களின் முக்கிய கடவுள்? பசுபதி என்ற சிவன்
2. புத்த சமய கொள்கைகளை கூறும் மறை நூல்? திரிபீடகம்
3. இந்திய கோயில் கட்டிடக் கலையின் தொட்டில் எது? அய்ஹோல் நகரம்
4. முகமது கஜினியின் சோமநாதபுரம் படையெடுப்பு நிகழ்ந்த ஆண்டு? கி.பி.1025
5. ‘நீதி சங்கிலி மணி’ என்ற ஒரு புதிய நீதி வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியவர்? ஜஹாங்கீர்
6. யாருடைய ஆட்சிகாலம் ‘மொகலாயர்களின் பொற்காலம்’ என்று அழைக்கப்படுகிறது? ஷாஜகான்
7. சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர்? குருநானக்
8. ’வந்தே மாதரம்’ என்ற முழக்கத்தை எழுப்பியவர்? பக்கிம் சந்திர சட்டர்ஜி
9. ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்ட மொகலாய மன்னர்? பகதூர் ஷா
10. தஞ்சை நாயக்கர் ஆட்சியை தோற்றுவித்தவர் யார்? சேவப்ப நாயக்கர்
TNPSC EXAM TAMIL NOTES 2018
1. வெற்றிலை நட்டான் என்பது எவ்வகை ஆகுபெயர்? சினையாகு பெயர்
2. தொழிற்பெயரின் விகுதிகளே இல்லாமல் பகுதி மட்டும் வந்து தொழிலை உணர்த்துவது? முதனிலை தொழிற்பெயர்
3. “படித்து தேறினான்” என்பதன் இலக்கணக்குறிப்பு? தெரிநிலை வினையெச்சம்
4. தமிழ்நாட்டை சுற்றியுள்ள பிறபகுதிகளிலிருந்து வந்து தமிழில் வழங்கும் சொற்கள் எவ்வாறு வழங்கப்படுகிறது? திசைச்சொல்
5. ஈரெழுத்து சொல்லாக மட்டுமே வரும் குற்றியலுகரம்? நெடில் தொடர் குற்றியலுகரம்
6. “பேறு” என்பதன் இலக்கணக்குறிப்பு? முதனிலை திரிந்த தொழிற்பெயர்
7. “குகைப்புலி” எவ்வகையான வேற்றுமைத்தொகை? ஏழாம் வேற்றுமைத்தொகை
8. ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ என்பது யாருடைய பாடல்வரிகள்? கண்ணதாசன்
9. மாணிக்கவாசகர் கட்டிய கோயில் எங்குள்ளது? திருப்பெருந்துறை
10. நந்திக்கலம்பகத்தின் ஆசிரியர்? பெயர் தெரியவில்லை
TNPSC TNUSRB IMPORTANT NOTES
1. சர்வதேச அளவில் சர்க்கரை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடு எது? பிரேசில்
2. கார்பன்-டை-ஆக்சைடு நீரில் கரைந்து கிடைப்பது எது? கார்பானிக் அமிலம்
3. ‘காந்தளூர் சாலை’ என அழைக்கப்படும் நகரம் எது? திருவனந்தபுரம்
4. இங்கிலாந்து நாட்டில் அதிக அளவில் முதலீடு செய்யும் நான்காவது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது? இந்தியா
5. உலக இணைய பாதுகாப்பு பட்டியல் 2017 –ல் முதலிடம் பெற்றுள்ள நாடு எது? சிங்கப்பூர்
6. 2020 ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடைபெற உள்ளது? டோக்கியோ
7. நிமோனியா காய்ச்சல் மனிதனின் எந்த உறுப்பை பாதிக்கிறது? நுரையீரல்
8. பெண் சிசுகொலையை தடுக்க உத்திரபிரதேச அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் எது? முக்பீர் யோஜனா
9. ‘ஐக்கிய நாடுகளவையின் பொது சேவைகள் தினம் எந்நாளில் கடைபிடிக்கப்படுகிறது? ஜூன் 23
10. நாடு முழுவதும் GST வரி எந்நாளில் இருந்து அமலுக்கு வந்தது? ஜூலை 1, 2017
TNPSC IMPORTANT NOTES
· செல் என்பது உயிரினங்களின் அடிப்படை அமைப்பும், செயல் அலகும் ஆகும்.
· வெறும் கண்களால் செல்லைப் பார்க்க முடியாது.
· செல்லை நேரடியாக காண நுண்ணோக்கி (Microscope) எனும் அறிவியல் கருவி பயன்படுகிறது.
· மனித உடல் மட்டுமல்லாமல், தாவரங்கள், விலங்குகள் போன்ற உயிரினங்களும் செல்களால் ஆனவைதான்.
· முதன் முதலில் செல்லைப் பார்த்தவர் இராபர்ட் ஹூக்
· செல்லுலா எனும் இலத்தீன் மொழிச் சொல்லுக்கு ஒரு சிறிய அறை என்று பெயர்.
· அந்த சிறிய அறைக்கு இராபர்ட்ஹூக், செல் என்று கி.பி. 1665 பெயரிட்டார்.
· செல்லின் உட்கருவைக் கண்டறிந்தவர் - இராபர்ட் பிரெளன்.
· செல்லுக்குள்ளே ஒரு தனி உலகம் இருப்பதை இராபர்ட் பிரெளன் கண்டறிந்தார்.
· பன்னிரண்டு அல்லது பதின்மூன்று உள்ளுறுப்பு உறுப்பினர்கள் சேர்ந்து இரகசியமாகப் பணியாற்றும் குட்டித் தொழிற்சாலை தான் செல்.
· தாவர, விலங்கு இரண்டுக்கும் செல்கள் ஒரே மாதிரியாக இருக்காது.
· பாக்டீரியா, சில பாசிகள் போன்றவை ஒரே செல்லினால் ஆனவை.
· சவ்வினால் சூழப்பட்ட நுண் உறுப்புகள் இல்லாத தெளிவற்ற உட்கரு இல்லாத உட்கரு மட்டுமே கொண்ட செல்லை புரோகேரியாட்டிக் செல் என்று அழைக்கப்படுகிறது.
· புரோகேரியாட்டிக் செல்லுக்கு எடுத்துக்காட்டு – பாக்டீரியா
· யூகேரியாட்டிக் செல் என்பது செல்லின் வெளிச்சுவர் மற்றும் சவ்வினால் சூழப்பட்ட உட்கரு உட்பட நுண் உறுப்புகள் அனைத்தும் கொண்ட செல்.
· யூகேரியாட்டிக் செல் ஒரு முழுமையான செல். தாவர, விலங்கு செல்கள் இந்த வகையைச் சார்ந்தவை.
· விலங்கு செல்லைச் சுற்றியுள்ள படலம் - பிளாஸ்மா படலம்.
· செல்லுக்கு வடிவம் கொடுப்பவை - பிளாஸ்மா படலம்.
· பிளாஸமா படலத்திற்கு உள்ளே இருக்கும் கூழ் - புரோட்டோபிளாசம்.
· புரோட்டோபிளாசம் - சைட்டோபிளாசம், செல்லின் உட்கரு ஆகிய இரண்டையும் உள்ளடக்கியவை.
· புரோட்டோபிளாசம் என்று பெயர் இட்டவர் - ஜே.இ. பர்கின்ஜி.
· புரோட்டோ என்றால் முதன்மை.
· பிளாசம் என்றால் கூழ்போன்ற அமைப்பு என்று பொருள்.
· பிளாஸ்மா படலத்துக்கும் உட்கருவுக்கும் இடைப்பட்ட பகுதி சைட்டோபிளாசம்.
· சைட்டோபிளாசத்துக்குள் உட்கரு, இதர நுண்ணுறுப்புகள், புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் காணப்படுகின்றன.
· செல்லின் கட்டுப்பாட்டு மையம் - உட்கரு(நியூக்ளியஸ்)
· உட்கருவின் வடிவம் கோள வடிவம்.
· உட்கருவில் காணப்படுபவை - உட்கருச்சாறு, உட்கருச்சவ்வு, உட்கரு மணி(நியூக்ளியோலஸ், குரோமேட்டின் வலைப்பின்னல் ஆகியவை காணப்படுகின்றன.
· உட்கரு ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு சார்ந்த பண்புகளை எடுத்துச் செல்கிறது.
· செல்லின் சுவாச உறுப்பு மைட்டோகாண்ட்ரியா
· செல்லின் ஆற்றல் மையம் (Power House of the Cell) - மைட்டோகாண்ட்ரியா.
· கோல்கை உறுப்புகள் குழல் குழலாக காணப்படும்.
· உணவு செரிமானம் அடைய நொதிகளைச் சுரப்பதும், லைசோசோம்களை உருவாக்குவதும் - கோல்கை உறுப்புகள்.
· உண்ணும் உணவிலிருந்து புரதச் சத்தைப் பிரித்து எடுத்துச் செல்லுக்கும். உடலுக்கும் வலு சேர்ப்பது கோல்கை உறுப்புகள்.
· செல்லுக்கு உள்ளே இருக்கும் பொருள்களை ஒரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்வது - எண்டோபிளாச வலை.
· ரிபோசோம்கள் புள்ளி புள்ளியாக காணப்படும்.
· செல்லின் புரதத்தொழிற்சாலை – ரிபோசோம்கள்
· புரதத்தை உற்பத்தி செய்வது ரிபோசோம்கள்.
· லைசோசோம்கள் உருண்டையாக மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
· செல்லின் காவலர்கள் லைசோசோம்கள்.
· செல்லின் தற்கொலைப் பைகள் - லைசோசோம்கள்.
· செல்லின் உள்ளே செல்லும் நுண் கிருமிகளை கொல்லுவது - லைசோசோம்கள்.
· விலங்கு செல்லில் மட்டுமே காணப்படுபவை - சென்ட்ரோசோம்
· சென்ட்ரோசோம் உட்கருவிற்கு அருகில் நுண்ணிய குழல் மற்றும் குச்சி வடிவில் காணப்படும்.
· சென்ட்ரோசோம் உள்ளே சென்ட்ரியோல்கள் உள்ளன.
· செல் பிரிதல் அதாவது புதிய செல்களை உருவாக்குவது சென்ட்ரோசோம்.செல் பிரிதலுக்கு உதவுகிறது சென்ட்ரோசோம்.
· வெளிர் நீலநிறத்தில் ஒரு குமிழ் மாதிரி காணப்படுபவை - நுண் குமிழ்கள்
· செல்லின் உள்ளே அழுத்தத்தை ஒர் மாதிரி வைத்திருப்பதும், சத்துநீரைச் சேமிப்பதும் - நுண் குமிழ்கள்.
· தாவர செல்லில் சென்ட்ரோசோம் எனும் நுண்ணுறுப்பு இல்லை.
· விலங்குகளைவிடத் தாவரம் இறுகி இருப்பதற்குக் காரணம், தாவரங்களின் செல்சுவர் எனும் அமைப்பாகும்.
· செல்லுக்கு வடிவத்தைத் தரும் வெளியுறை செல்சுவர்.
· செல்சுவர் செல்லுலோசினால் ஆனது.
· செல்லின் உள் உறுப்புகளைப் பாதுகாப்பதும், செல்லுக்கு வடிவம் தருவதும் செல்சுவரின் பணி.
· தாவர செல்லுக்கு செல்சுவர் உண்டு
· விலங்கு செல்லுக்கு செல்சுவர் இல்லை.
· தாவர செல்லுக்கு கணிகங்கள் உண்டு.
· விலங்கு செல்லுக்கு கணிகங்கள் இல்லை.
· தாவர செல்லுக்கு சென்ட்ரோசோம் இல்லை.
· விலங்கு செல்லுக்கு சென்ட்ரோசோம் உண்டு.
· தாவர செல்லின் நுண் குமிழ்கள் அளவில் பெரியவை.
· விலங்கு செல்லின் நுண் குமிழ்கள் அளவில் சிறியவை.
· கணிகங்கள் தாவர செல்லுக்கே உரிய நுண்ணுறுப்பு ஆகும்..
· தாவர ஒளிச்சேர்க்கைக்கு உதவுவது, மலர் மற்றும் கனிகளுக்கு வண்ணமளிப்பது கணிகங்களின் பணியாகும்.
· குளோரோபிளாஸ்ட்டில் (பசுங்கணிகம்) காணப்படும் நிறமி - குளோரோஃபில் - பச்சை நிற நிறமி.
· குளோரோபிளாஸ்ட் பணி - தண்டு, இலைகளுக்கு பச்சை வண்மம் தருதல்.
· குரோமோபிளாஸ்ட்டில் காணப்படும் நிறமி கரோட்டின் - ஆரஞ்சு நிற நிறமி, சாந்தோஃபில் - மஞ்சள் நிற நிறமி.
· குரோமோபிளாஸ்ட் பணி - பூக்கள், கணிகளுக்கு வண்ணம் தருதல்
· லியூக்கோபிளாஸ்ட் பணி - தாவரத்தின் வேர்பகுதி மற்றும் தரைகீழ் தண்டுகளில் காணப்படுதல்.
· நமது மூளையில் இலட்சக்கணக்கான செல்கள் உள்ளன.
· மிகவும் நீளமான செல் நரம்புசெல்
· நுண் குமிழ்கள் பெரிய அளவில் காணப்படும் செல் வெங்காயத்தோலின் செல்
· விலங்கு செல்லில் மிக கடினமான செல் எலும்புசெல் .
· விலங்கு செல்லில் மிக நீளமான செல் நரம்புசெல் ஆகும்.
· இரத்தம் சிவப்புச் செல்களால் ஆனவை என்பதை உலகிற்குக் கண்டுபிடித்து அறிவித்தவர் ஆண்டன் வான் லூவன்ஹாக் (1675).
· எலும்புகள் ஈரப்பசையற்ற சிறப்பு வகைச் செல்களால் ஆனவை.
· மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை சுமார் 6,50,00,000 ஆகும்.
TNPSC-TET-VAO EXAMINATION 2018 IMPORTANT NOTES
சமண சமயத்தை தோற்றுவித்தவர்: மகாவீரர்
இயற்பெயர்: வர்த்தமானர்
மகாவீரர் பிறந்த இடம்: குந்த கிராமம் வைசாலி
பிறந்த வருடம் : கி.மு.539
தந்தை: சித்தார்த்தர்
தாய்: திரிசலா
குலம்: சத்திரிய குலம்
சமண சமயத்தில் இவர் 24 தீர்த்தங்கரர்.
மகாவீரர் ஜீனர் என்று அழைக்கப்பட்டார்.
ஜீனர் என்பதன் பொருள் – வென்றவர்.
மகாவீரர் என்பதன் பொருள் - சிறந்த வீரர்
மகாவீரர் தனது போதனையை பரப்பிய மொழி பிராகிருதம்.
சமண சமயம் வலியுறுத்திய கொள்கை கொல்லாமை.
மகாவீரர் போதித்த அடிப்படை கருத்துக்கள் - திரிரத்தினங்கள்
1. நல்ல நம்பிக்கை
2. நல்ல அறிவு
3. நல்ல நடத்தை
மகாவீர் கைவல்யா என்று ஆன்மிக அறிவு பெறும் போது வயது - 42
மகாவீரர் இறந்த ஆண்டு - கி.மு.467
மகாவீரர் இறந்த இடம் - பவபுரி (ராஜகிருகம் அருகில்)
மகாவீரர் இறக்கும் போது வயது - 72
சமண சமயத்தின் இரு பிரிவுகள்
1. திகம்பரர் - திசையை ஆடையாக அணிந்தவர்கள்
2. ஸ்வேதாம்பரர் – வெள்ளை ஆடை அணிந்தவர்கள்
சமண சமய மாநாடுகள்
முதல் மாநாடு
இடம்
பாடலிபுத்திரம்
ஆண்டு
கி.மு. 3ம் நூற்றாண்டு
தலைவர்
ஸ்தூலபாகு
இரண்டாவது மாநாடு
இடம்
வல்லபி
ஆண்டு
கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு
தலைவர்
தேவரதி
சமண சமயத்தை பின் பற்றிய அரசர்கள் - பிம்பிசாரர், அஜாதசத்ரு, சந்திர குப்த மௌரியர்
சமண சமயத்தை பின் பற்றிய தென்னிந்திய அரசர்கள் - கூன்பாண்டியன், மகேந்திர வர்மன்.
மகாவீரர் போதித்த ஐந்து ஒழுக்கங்கள்:
ஊறு செய்யாமை, பொய்யாமை, களவாமை, உடைமை மறுத்தல், புலனடக்கம்.
தமிழ் இலக்கியத்திற்கு சமணர்களின் பங்கு:
சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி, சூடாமணி ஆகிய காப்பியங்களையும்
யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கல விருத்தி, நேமிநாதம், நன்னூல், அகப்பொருள் விளக்கம், இலக்கண விளக்கம் போன்ற இலக்கண நூல்களையும்,
நிகண்டுகளையும், நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி, திணைமாலை நூற்றைம்பது முதலிய அறநூல்களையும் சமணர்கள் இயற்றியுள்ளனர்.
சமண சமயக் கோவில்கள்:
மவுண்ட் அபு, தில்வாரா கோவில், கஜுராஹோ, சித்தூர், ரனக்பூர், உதயகிரி, ஹதிகும்பா, கிர்னார், சிரவணபெலகொலா, கழுகுமலை .
TAMILNADU POLICE EXAMINATION 2018
1. ‘பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட பாடிய கவி வலவ’ என்று பாராட்டப்பட்டவர்? சேக்கிழார்
2. “துரைராசு” என்ற இயற்பெயரை கொண்ட கவிஞர் யார்? முடியரசன்
3. “உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் பெரியபுராணம்” என்று கூறியவர் யார்? திரு.வி.க.காலியான சுந்தரனார்
4. “திகழ்பா ஒரு நான்குஞ் செய்யுள் வரம்பாகப்” தமிழ் விடுதூது குறிப்பிடும் நான்கு வரம்புகள் யாவை? வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
5. ‘ஆர்வலர்’ என்பதன் பொருள் என்ன? அன்புடையவர்
6. கடும் வெப்பத்தை எதிர்கொள்ள கூடிய பறவை? பூ நாரை
7. மனிதனின் இறப்பை நீக்கி காப்பாற்றும் மூலிகை எது? காயசித்தி
8. எந்த போர் காண்பதற்கான மைதானமாக தமுக்கம் மைதானம் விளங்கியது? யானை
9. மருதத் திணைக்குரிய பறை எது? மணமுழா
10. தூது இலக்கிய வகையில் முதல் நூல் எது? நெஞ்சு விடு தூது.