திங்கள், 27 ஆகஸ்ட், 2018

கல்வி தொடர்பாக கொண்டாடப்படும் தினங்கள்


நம் நாட்டில் கல்வி தொடர்பாக கொண்டாடப்படும் தினங்கள் எவையென்று தெரியுமா? - தெரிந்துகொள்வோம்

* ஜனவரி 23 - தேசிய படிக்கும் தினம்.

* பிப்ரவரி 21 - தாய்மொழி தினம்.

* பிப்ரவரி 28 - அறிவியல் தினம்

* மே 11 - தேசிய தொழில்நுட்ப தினம் (பொக்ரான் 2-  இந்தியா அணுகுண்டு சோதித்த தினம்).

* ஜூலை 1 - மருத்துவர் தினம் (மருத்துவர் பிபன் சந்திர ராயின் பிறந்த நாள்)

* ஜூலை 15 - கல்வி முன்னேற்ற தினம் (காமராஜர் பிறந்த நாள்).

* ஆகஸ்ட் 12 - தேசிய நூலக தினம் (நூலக நிபுணர் எஸ்.ஆர்.ரங்கநாதன் பிறந்த நாள்).

* செப்டம்பர் 5 - ஆசிரியர் தினம் (ராதாகிருஷ்ணன் பிறந்த நாள்).

* செப்டம்பர் 8 - அனைத்துலக எழுத்தறிவு நாள்.

* செப்டம்பர் 15 - பொறியாளர் தினம் (விஸ்வேஸ்வரய்யா பிறந்த நாள்).

* நவம்பர் 11 - தேசிய கல்வி தினம். (அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாள்)..

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

பாம்பு –அறிந்தும் அறியாததும்


பாம்பு –அறிந்தும் அறியாததும்...

உலகில் ஆயிரக்கணக்கான பாம்பு வகைகள் உள்ளன. அதில் 246 வகை பாம்புகள் இந்தியாவில் உள்ளன. அயர்லாந்து, நியூசிலாந்து, ஆர்ட்டிக் போன்ற பகுதிகளைத் தவிர உலகின் அனைத்து பகுதிகளிலும் பாம்புகள் காணப்படுகின்றன.

பாம்புகள் அனைத்தும் விஷமுள்ளவை என்ற கருத்து மிகவும் தவறானது சில வகைப் பாம்புகளைத் தவிர பெரும்பான்மையான பாம்புகள் விஷ மற்றவையே. இந்தியாவில் வாழக்கூடிய நச்சுப் பாம்புகளில் ஆறு வகைப் பாம்புகள் தான் மிகவும் அபாயம் அளிக்கக் கூடியவை அவை,

1.நல்ல பாம்பு

2.கட்டு வீரியன்

3.கண்ணாடி வீரியன்,

4.சுருட்டை பாம்பு

5.கரு நாகம்

6. ராஜ நாகம்.

மேற்கூறிய ஆறு வகைகளில் முதல் நான்கு வகைகளே நம் நாட்டில் பெருமளவு காணப்படுகின்றன. பாம்பு விஷக் கடிக்கான முறிவு மருந்து "சீர நஞ்சு" (anti -venum) இந்த நான்கு வகை பாம்பு விஷத்தை சேகரித்து கலந்து அதைக் குதிரைக்கு சிறிது சிறிதாக ஊசி மூலம் செலுத்தி பிறகு அதன் இரத்தத்தில் இருந்து சீரம் பிரித்து எடுக்கின்றனர்.

இதுவே அலோபதி மருத்துவத்தில் அனைத்து பாம்பு கடிக்கும் விஷ முறிவு மருந்தாக பயன் படுத்தப் படுகின்றது. ஒருவருக்கு பாம்பு கடித்துவிஷம் ஏறிய நிலையில் இந்த "சீர நஞ்சு" நல்ல குணமளிக்கும் மருந்து தான் ஆனால் பாம்பு கடிக்காத நிலையில் இந்த ஊசி மருந்தைப் போட்டால் இதுவே விஷமாகி அந்த மனிதர் இறந்து விடக்கூடும்.

நல்லபாம்பு கடித்து விட்டால் சித்த மருத்துவ முறையில் செய்யப்படும் மருத்துவம் :-

கடிவாய் எரியும், வாந்தி வரும், நடை தளரும், மயக்கம் வரும், மூக்கில் நுரை வரும், உயிர்ப்பு தடை படும், இறப்பு நேரிடும், அந்நிலையில் வேப்பிலை கசக்காது, மிளகு காரம் இருக்காது, ஆடு தீண்டாப்பாளை வேர் இனிக்கும், இரு பற்கள் தடம் இருக்கும் குருதி பெரும்பாலும் வராது இதற்க்கு அரை மணி நேரத்தில் மருந்து கொடு

சனி, 18 ஆகஸ்ட், 2018

யானைகள் பற்றிய ஆர்வமான தகவல்கள் வாங்க பார்க்கலாம்!!

யானைகள் பற்றிய ஆர்வமான தகவல்கள் வாங்க பார்க்கலாம்!!

யானைகள் பூமியிலுள்ள மிகப்பெரிய நில விலங்குகளாக இருக்கின்றன. அவர்கள் குணாதிசயமான நீண்ட மூக்கு, அல்லது டிரங்க்குகள்; பெரிய, நெகிழ்வான காதுகள்; மற்றும் பரந்த, தடித்த கால்கள். யானை இரண்டு இனங்கள் உள்ளன. ஆசிய யானை மற்றும் ஆப்பிரிக்க யானை தனி கண்டங்களில் வாழ்கின்றன.சில யானைகள் சிவப்பு காதுகளை கொண்டது.
அளவு:
ஆப்பிரிக்க யானைகள் இரண்டு வகைகளில் பெரியவை. அவர்கள் 8.2 முதல் 13 அடி (2.5 முதல் 4 மீட்டர்) தோள்பட்டை வரை வளர மற்றும் 5,000 முதல் 14,000 பவுண்டுகள் எடையை வளர்க்கிறார்கள். (2,268 முதல் 6,350 கிலோகிராம்கள்), தேசிய புவியியல் படி. ஆசிய யானைகள் தோள்பட்டை இருந்து 6.6 முதல் 9.8 அடி (2 முதல் 3 மீ) வரை வளர மற்றும் 2.25 முதல் 5.5 டன் வரை எடையுள்ளதாக (2,041 to 4,990 கிலோ) வளர முடியும்.
வாழ்விடம்:
ஆப்பிரிக்க யானைகள் துணை சஹாரா ஆப்பிரிக்காவில் வாழ்கின்றன, மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்காவின் மழைக்காடுகள் மற்றும் மாலியில் Sahel பாலைவனம். ஆசிய யானைகள் நேபால், இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் வாழ்கின்றன.
உணவுமுறை:
யானைகள் புல், வேர்கள், பழம் மற்றும் பட்டை சாப்பிடுகின்றன. மரங்களின் மரப்பட்டைகளை இழுத்து, தரையிலிருந்து வெளியேற்றுவதற்கு அவர்கள் தந்தங்களைப் பயன்படுத்துகின்றனர்.ஒரு யானை அதன் அளவுடன் பொருந்தக்கூடிய ஒரு பசி. ஒரு வயது 300 பவுண்டுகள் சாப்பிடலாம்.

வியாழன், 16 ஆகஸ்ட், 2018

பொது அறிவு


பொது அறிவு

#தேசிய விளையாட்டு மற்றும் தடகள நிறுவனம் எங்குள்ளது?பாட்டியாலா (பஞ்சாப்)

#மராத்தி மொழியில் பகவத்கீதையை எழுதியவர் யார்?தானேஸ்வரா

#மருதுபாண்டியர் நினைவு மண்டபம் எங்குள்ளது?திருப்பத்தூர்
( சிவகங்கை மாவட்டம் )

#மனிதனின் வாழ்நாள் முழுவதும் வளரும் ஒரே உறுப்பு எது? காது

#மும்பையில் பங்குச்சந்தை எந்தத் தெருவில் அமைந்துள்ளது?
தலால் தெரு

#முஸ்லீம் லீக் கட்சி நிறுவப்பட்டது எந்த ஆண்டில்?
1906 ம் ஆண்டு

#மெழுகுவர்த்திகள் தொடர்ந்து எரிவதற்கு எது உதவுகிறது?ஹைட்ரோ கார்பன் துகள்கள்

#மொகஞ்சதாரோ என்ற சொல்லின் பொருள் என்ன?
இறந்தவர்களின் மேடு

#லோக்நாயக் என்றழைக்கப்படுபவர் யார்? ஜெயப்பிரகாஷ் நாராயணன்

#வ.உ.சி மணிமண்டபம் எங்குள்ளது?திருநெல்வேலி

#வடதுருவத்தை முதன்முதலில் அடைந்த பெண் யார்?
கிறிஸ்டின் ஜனியன்

#விண்ணில் உள்ள நட்சத்திரங்களின் எடை எதை வைத்துக் கணக்கிடப்படுகிறது?ஈர்ப்பு விசை பாதிப்பு

#விண்மீன்களின் ஒளியை எதனால் அளக்கிறார்கள்?
ஒளி எண்கள்

#வியாழன் வளிமண்டலம் முழுவதும் எதனால் நிரப்பப்பட்டுள்ளது?ஹைட்ரஜன்

#எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோவிலைக் கட்டியவர் யார்? ராஷ்டிரகூட மன்னர் கிருஷ்ணா

#தேவாரப் பாடல்களை எழுதியவர்கள் யார்?அப்பர், மாணிக்கவாசகர் திருஞானசம்பந்தர், சுந்தரர்

# நேருவின் சமாதியின் பெயர் என்ன?
சாந்தி வனம்

#தொடு உணர்வு இல்லாத உள்ளுறுப்பு எது? மூளை

#தோராசமுத்திரத்தில் உள்ள கோவில்கள் யார் காலத்திய கட்டடக்கலைக்கு உதாரணமாக உள்ளன?ஹோய்சாலர்கள்

#நந்த வம்சத்தைத் தோற்றுவித்தவர் யார்?மகா பக்த நந்தா

#காந்தியை சுட்டுக்கொன்றவர் பெயர் என்ன?
நாதுராம் கோட்சே

#காந்தியை மகாத்மா என்று முதன்முதலில் அழைத்தவர் யார்?ரவீந்தரநாத் தாகூர்

#காமன்வீல் என்ற பத்திரிக்கையை தொடங்கியவர் யார்?அன்னிபெசண்ட்

#ராமாயணத்தை
சக்கரவர்த்தி திருமகன் என்ற பெயரில் எழுதிய பிரபல தலைவர் யார்?ராஜாஜி

#காரமாகும் கால்வாய் எவ்வளவு நீளமுடையது?
சுமார் 1300 கி.மீ

#காளிதாசர் எழுதிய நூல்கள் எவை?சாகுந்தலம், ரகுவம்சம், மேகதூதம்

#புத்தரின் தந்தை யார்?சுத்தோதனன்

#புத்தரின் தாய் யார்?மாயா

#பூலித்தேவன் நினைவு மாளிகை எங்குள்ளது?நெற்கட்டும் செவல்

#பேரறிஞர் அண்ணா நினைவு இல்லம் எங்குள்ளது?காஞ்சிபுரம்

#மகாகவி பாரதியார் மணிமண்டபம் எங்குள்ளது?எட்டயபுரம்

அசோக சக்கரம்


அசோக சக்கரம்:

அசோக சக்கரத்தில் ஏன் 24 ஆரக்கால்கள் என்ற சிந்தனை வட்டம் பற்றிய கருத்துக்களை நடத்தும்போது பல இடங்களில் இதற்கான காரணத்தை தேடியபோது சிக்கியதுதான் இது. வட்டத்தை  24 சமபாகங்களாக பிரிப்பது சற்று கடினமாக இருந்தது. பிறகு எப்படி எந்த கணக்கின்படி பிரித்திருப்பர் என தோன்றியது சிந்தனையை சற்று ஓடவிட்டபோது தோன்றியது

360° ஐ 24 ஆரக்கால்களால் வகுத்தால் 15° வருகிறது. ஒவ்வொரு ஆரக்கால்களுக்கும் இடையில் 15° இடைவெளி எதற்கு என பல கேள்விகளால் தேடல் பணியில் ஈடுபட்டபோது கிடைத்த சில தகவல்கள்.

தேசியக் கொடியில் உள்ள 24 ஆரங்கள்
அசோகர் பரப்பிய 24 தர்மங்களை குறிக்கிறது என குறிப்பிட்டிருந்தது.


 அவைகள்:
   
1.அஹிம்சை
  (உயிர்களுக்கு இன்னா செய்யாமை)
2.அப்பந்தா
   (சிக்கனம், சேமிப்பு)
3.அபிச்சதி     
பயபக்தி (பெரியோர்&ஆசிரியர்)
4.அபசினவம் 
  (மானமுடைமை)
5.உத்சஹா
   (உற்சாகமாக செயலாற்றுதல்)
6.கிருதக்ஞாதா
   (செய்நன்றி அறிதல்)
7.சத்யம் 
   (நேர்மையாக இருத்தல், உண்மையை போற்றுதல்.)
8.சமயப்பொறை
( மாற்று மதக்கருத்துக்களையும் மதித்தல்)
9.சாதுதா 
( நல்லவர்களாக இருத்தல்)
10.சாம்யமா 
 (புலனடக்கம்)
11.சாத்வம்   
 (நன்மை தரும் செயல்களைச் செய்தல்)
12.சிரமசேவிதம் 
( கடின உழைப்பு)
13.சுஷ்ருதா    சரீர சஹாயம்
(உடல் நோய் தீர்த்தல்)
14.சௌசம்   
(உடல் தூய்மை)
15.தயை 
  (இரக்ககுணம்)
16.தானம் 
 (வறியோர்க்கு வழங்கல்)
17.தம்மதானம்   
( தர்மத்தைப் பரப்புதல்)
18.தம்ம விஜயம் 
(அறத்தின் வழிபெறும் வெற்றி)
19.தர்மதாமதா   
 (அறம் செய்வதில் ஆர்வம்)
20.த்ருதபக்திதா 
 (மாறாத அன்புள்ளம்)
21.பயம்     
(பாவம் செயவதில் அச்சம்)
22.பரிக்‌ஷா 
  (தன்னம்பிக்கை)
23.பாவசுத்தி 
(எண்ணத்தூய்மை)
24.மார்த்தவம்
     (அருளுடைமை)அசோக சக்கரம்:

 எப்போது வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம் ஆனால் அறிய தகவல்களை அதற்குண்டான நேரத்தில் பதிந்தால்தான் அதற்க்கான மதிப்பு நம் நெஞ்சத்தில் தங்குமென்பதால்தான் இதை இங்கு இப்போது பதிவிட்டேன்.

புதன், 15 ஆகஸ்ட், 2018

எப்படி வாசித்தாலும் எழுத்துக்கள் மாறாமல் ஒன்றுபோல் வார்த்தைகள் அமைவது இதற்குப் பெயர்தான் ‘பேலின்ட்ரோம்’ (Palindrome) !!

எப்படி வாசித்தாலும் எழுத்துக்கள் மாறாமல் ஒன்றுபோல் வார்த்தைகள் அமைவது இதற்குப் பெயர்தான் ‘பேலின்ட்ரோம்’ (Palindrome) !!

எந்த ஒரு வார்த்தையை வாசிக்கும் பொழுதும் வலமிருந்து இடமாகவோ அல்லது இடம் இருந்து வலமாகவோ எப்படி வாசித்தாலும்  எழுத்துக்கள் மாறாமல் ஒன்றுபோல் வார்த்தைகள் அமைவது இதற்குப் பெயர்தான் ‘பேலின்ட்ரோம்’ (Palindrome) என்பதாம்

தமிழில் இதுவரை நான் அறிந்த பாலின்ட்ரோம் வார்த்தைகள்!

விகடகவி
மாவடு போடுவமா,
துவளுவது
தாளாதா
வா தாத்தா வா!
மாலா போலாமா,

தேருவருதே
மேகமே
வாடவா
தாத்தா
கலைக
வினவி
யானை பூனையா,
யானையா பூ யானையா,
பாப்பா
தேருவருதே
தந்த
மாறுமா
தேயுதே
மேளதாளமே.
மாடு ஓடுமா
கலைக
கலக
மோருபோருமோ,
போ வாருவா போ.
மாடமா
மாதமா
மானமா
மாயமா
கற்க
மாமா
காக்கா
சிவா வாசி

ஆங்கிலத்தில் இதுவரை நான் அறிந்த (PALIMDROME) வார்த்தைகள் !

1: civic
2: Dewed
3: deified
4: dad
5: mom
6: devoved
7: Hannah
8: peeweep
9: repaper
10: kayak
11: minim
12: radar
13: murdrum
14: Malayalam
15: madam
16: lemel
17: level
18: racecar
19: radar
20: redder
21: bob
22: pop
23: tot
24: refer
25: reviver
26: rotator
27: rotavator
28: stats
29: solos
30: tenet
31: terret
32: testset
33: Kinikinik
34: Wassamassaw
35: Yreka Bakery
36: Navan
37: Cain: a maniac.
38: A Toyota.
38: Race fast, safe car.
39.RACECAR
40.MALAYALAM
41.EVE
42.LEVEL
43DEED
44.ROTOR
45.CIVIC
46.POP
47.MADAM
48.EYE
49.NUN
50.RADAR
51.TOOT

தமிழக அரசின் நல்ஆளுமை விருதுகள் அறிவிப்பு

தமிழக அரசின் நல்ஆளுமை விருதுகள் அறிவிப்பு


நாட்டின் 72 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் நல்ஆளுமை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

🏆விருதுகள் விபரம் :

அப்துல் கலாம் விருது - சென்னை அண்ணா பல்கலை.,யில் உள்ள வான்வெளி ஆய்வு நிறுவனமான தக்ஷா குழுவுக்கு அப்துல் கலாம் விருது.

🏆சிறந்த துறை : தமிழக அரசின் சிறந்த துறைக்கான முதல் பரிசுக்கு பதிவுத்துறையும், 2வது பரிசுக்கு உணவுத்துறையும், 3வது பரிசுக்கு சுகாதாரத்துறையும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

🏆சிறந்த மாநகராட்சி : உள்ளாட்சி அமைப்புக்களில் சிறந்த மாநகராட்சியாக திருப்பூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

🏆சிறந்த நகராட்சி :
1st கோவில்பட்டி,
2nd கம்பம்,
3rd சீர்காழி

🏆சிறந்த பேரூராட்சி :
1st சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம், தேனி - பழனிசெட்டிபட்டி 2வது பரிசும், தர்மபுரி - பாலக்கோடு 3வது பரிசும் பெற்றுள்ளன.

🏆கல்பனா சாவ்லா விருது : கட்டையால் சிறுத்தையை விரட்டிய கோவை மாவட்டம் வால்பாறை - பெரியகல்லார் கிராமத்தை சேர்ந்த முத்துமாரிக்கு கல்பனா சாவ்லா விருது

🏆சிறந்த கூட்டுறவு வங்கி -சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி .
மாற்றுதிறனாளிகளுக்கு சிறப்பாக சேவையை புரிந்ததற்காக வழங்கப்படுகிறது.


தமிழக அரசின் நல்ஆளுமை விருது
பிற துறைகள்

🏆சிறந்த மருத்துவர் -செந்தில் குமார்

🏆சிறந்த சமூக பணியாளர் விருது -லதா ராஜேந்திரன்

🏆சிறந்த தொண்டு நிறுவனம் -திருச்சி தனியார்  அறிவாலயம்

🏆முதலமைச்சர் நல்ஆளுமை விருது-சுப்ரமணியன்

🏆முதலமைச்சரின் சிறந்த இளைஞர் ஆண்கள் விருது -பாஸ்கரன் ,மகேஷ்
பெண்கள் பிரிவில் -அஸ்விதா

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

4102 வங்கி அதிகாரி வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்



4102 வங்கி அதிகாரி வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

பொதுத்துறை வங்கிகளில் காலியாக 4102 புரொபஷனரி அதிகாரி, மேலாண்மை டிரெயினி பணியிடங்களுக்கான அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 4102

பணி: Probationary Officer, Management Trainee (CRP PO/MT-VIII)

வங்கிகள் வாரியான காலியிடங்கள் விவரம்:
1. Allahabad Bank - 784
2. Bank of India - 965
3. Canara Bank - 1200
4. Corporation Bank - 84
5. UCO Bank - 550
6. Union Bank of India - 519

வயதுவரம்பு: 01.08.2018 தேதியின்படி 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100 கட்டணமாக செலுத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.09.2018

ஆன்லைன் முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 13.10.2018, 14.10.2018, 201.10.2018 மற்றும் 21.10.2018

முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி: 18.11.2018

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: ஜனவரி, பிப்ரவரி 2019

நீலத் திமிங்கலத்தைப் பற்றி அறியாத தகவல்கள் பற்றி அறிந்துகொள்வோம்.

நீலத் திமிங்கலத்தைப் பற்றி அறியாத தகவல்கள் பற்றி அறிந்துகொள்வோம்.

 உலகிலுள்ள தாவர, விலங்கினங்கள் பல்வேறு வகையாக பட்டியலிடப்படுகின்றன. அவற்றுள் பாலுட்டிகள் என்பவை ஒரு வகை விலங்கினங்களாகும். பாலுட்டி விலங்கினங்கள் குட்டி போட்டு பால் கொடுக்கக் கூடிய குணத்தைக் கொண்டவை.
உலகிலுள்ள உயிரினங்களுள் மிகப்பெரியதாக வளரக்கூடிய இனம் நீலத்திமிங்கலம் ஆகும். இது சற்றேறக்குறைய 100 அடி நீளமும் (அதாவது 5 மாடிக்கட்டிட உயரம்) 150 டன் எடையுள்ளதாக வளரக்கூடியது.
நீலத்திமிங்கலத்தின் இதயத்தின் எடை மட்டுமே சுமார் 907 கிலோ.
நீலத்திமிங்கலத்தின் நாக்கில் 50 பேர் உட்காரக்கூடிய அளவு இடமிருக்குமென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இத்தகைய ராட்சதத்தனமான அளவை விட திமிங்கலத்திடம் ராட்சதத்தனமான குணங்கள் கிடையாது.

உண்மையில் திமிங்கலங்கள், வெப்ப இரத்த நுரையீரலைக் கொண்ட பாலுட்டி விலங்கினங்களாகும். திமிங்கலங்கள் நீரில் வசிப்பினும் அவை மற்ற மீனினங்களை போல செவுள்களால் சுவாசிப்பதிலை. அவை நம்மைபோல் நுரையீரலைக் கொண்டிருப்பதால் எப்பொழுதெல்லாம் சுவாசிக்க வேண்டுமோ அப்பொழுதெல்லாம் நீரின் மேற்பரப்புக்கு வந்து காற்றை அதன் மூக்கு வழியாக உள்ளிழுத்துச் செல்லும்.
திமிங்கலங்கலங்களின் நுரையீரல் மிகவும் பெரியதாகும். அவை நீரின் மேல்மட்டத்திற்கு வரும்போது தேவையான அளவு காற்றை தலைப்பகுதியில்.. அமைந்துள்ள மூக்கின் வழியாக உள்ளிழுத்துக்கொண்டு நீரில் மூழ்குகின்றன. நீரில் மூழ்கும்போது மூக்கு வழியாக நீர் உள்ளே நுழையாமல் இருக்க மூடி.. உள்ளது. சில திமிங்கலங்களில் ஒரு துவாரம் உள்ள மூக்கையும், சில வகை இரு துவார மூக்கையும் கொண்டுள்ளன.

 திமிங்களங்களில் 75 வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகையும் வெவ்வேறு நேர அளவுகள் மூச்சை அடக்கும் திறமையுள்ளவை. ஸ்பெர்ம் திமிங்கலம் 90 நிமிடங்கள் மூச்சையடக்கவும், அலகுத்திமிங்கலம் இரண்டு மணி நேரமும் மூச்சையடக்கும் திறனும் பெற்றவையாகும்.
திமிங்கலங்களின் சுவாச மண்டலமானது அவற்றின் நீர்வாழ் சூழ்நிலைக்கு ஏற்ப பல்வேறு வகைகளில் மாறுபட்டுள்ளது. ஒரு திமிங்கலம் நிரின் அடியில் மூழ்கும் போது அதன் இரத்த ஓட்ட அளவு, இதய துடிப்பு மற்றும் ஆக்ஸிஜன் உபயோகப்படுத்துவது கணிசமான அளவு குறைகிறது. எனவே ஒரு முறை உள்ளிழுத்துக் கொள்ளும் காற்றில் உள்ள ஆக்ஸிஜன் மறுமுறை காற்றை உள்ளிழுக்கும் வரை தாங்குகிறது.

இவ்வாறு ஒருமுறை காற்றை நுரையீரலில் நிரப்பிக்கொண்டு திமிங்கலங்கள் 7,000 அடி வரை நீரின் ஆழத்திற்கு சென்று இரை தேடும் வல்லமை பெற்றவை. இத்தகைய சிறப்பமைவுக்கு மற்றுமொரு காரணமும் சொல்லப்படுகிறது. நாம் காற்றை சுவாசிக்கும்போது, அதில் இருந்து 15 சதவிகித ஆக்ஸிஜனை மட்டுமே நமது நுரையீரலால் எடுத்துக்கொள்ளப்படுகிறது, ஆனால் திமிங்கலங்கள், உள்ளிழுக்கும் காற்றில் இருந்து 90 சதவிகித ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்ளும் திறமை பெற்றிருப்பதே இவ்வகையான நீண்ட நேர மூச்சடக்கும் திறமைக்கு காரணமாகும்.
திமிங்கலங்கள் மீன்களா ? என்று கேட்டால், இல்லை என்பது தான் பதில். திமிங்கலங்கள் பாலுட்டிகள் என்றழைப்பதுதான் சரியாகும். மற்ற மீன்களில் இருந்து பல்வேறு வகைகளில் திமிங்கலங்கள் வேறுபட்டுள்ளன.

சனி, 11 ஆகஸ்ட், 2018

GROUP 2 2018 – கவனத்தில் கொள்ள வேண்டியவை


GROUP 2 2018 – கவனத்தில் கொள்ள வேண்டியவை

• இருப்பது  92 நாட்களே... கிட்டத்தட்ட மூன்று மாதங்கள்... கண்டிப்பாக முதல்நிலை தேர்வில் வெற்றி பெறும்படி இந்த நாட்களில் தயார் ஆவது மிக எளிது.

• மொத்த காலிப்பணியிடங்கள் 1199 என்பதால் சுமார் 12000 பேர் மட்டுமே மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்

• தோரயமாக
பொதுப்பிரிவினர்—372
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் -318
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்- 240
தாழத்தபட்டோர் -180
முஸ்லிம் -42
அருந்ததியினர் -35
பழங்குடியினர் -12
பேருக்கு பணி கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.... இறுதி மதிப்பெண் பட்டியலில் உங்கள் தரவரிசை  உங்கள் இட ஒதுக்கீடு படி இதற்குள் இருந்தால் உங்கள் பணி உறுதி..

• சமீப காலமாக போட்டி அதிகம் என்பதால் முதல்நிலைத் தேர்வில் முதல் 12000 பேர் தர வரிசையில் குறைந்தது  158+ கேள்விகள் சரியாக பதில் அளித்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும்.. கேள்வி எளிது என்றால் இன்னும் அதிகமாக பதில் அளிக்க வேண்டும்.. கடினம் என்றால குறைய வாய்ப்பு இருக்கிறது..

• புதிய புத்தகத்தில் தேவையானதை மட்டும் படித்து மற்றவற்றை புறந்தள்ளி விடலாம்

• முக்கியமாக மொழிப்பாடம்+கணிதம்+நடப்பு நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் அளியுங்கள்..ஏனெனில் முதல்நிலை மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ள போவதில்லை

• அதிகமாக பழைய மற்றும் மாதிரி வினாத் தாள்களை பயிற்சி செய்யுங்கள்

• நகராட்சி ஆணையாளர்,சார் பதிவாளர்  போன்ற பசையுள்ள பதவிகள் வந்து இருப்பதால் ஏற்கனவே குருப் 2ல் பணி புரிபவர்கள் போட்டியிட்டு போட்டியை அதிகப்படுத்த வாய்ப்புண்டு.. எனவே போட்டியோ போட்டி..போட்டிக்கு எல்லாம் போட்டி தான் இந்த தேர்வு.. மனதில் வைத்துக் கொள்ளவும்

• விண்ணப்பதை பிழை இல்லாமல் விண்ணப்பிக்கவும்

• இந்த அறிவிக்கை க்கு பிறகு குருப் நான்கு,குருப் 2A போன்ற அறிவிக்கை வர குறைந்தது பத்து மாதங்கள் ஆகலாம்..அல்லது ஒரு வருடம் மேலே ஆகலாம்... எனவே இந்த வாய்ப்பை தவறவிட்டால் நீங்கள் வாழ்க்கையை வெறுக்க வேண்டிய சூழ்நிலை வரும்...

• மெயின் தேர்வு கண்டிப்பாக இருப்பதால்  நீங்கள் படிக் வேண்டியதும் எழுதி பழக வேண்டியதும் கடல் அளவு இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

ஹர்ஷ சரிதம் நூல் பற்றிய வரலாற்றுத் தகவல்கள்.


ஹர்ஷ சரிதம் நூல் பற்றிய வரலாற்றுத் தகவல்கள்.

* ஹர்ஷரின் அவைப்புலவரான பாணர் வடமொழியில் எழுதிய நூல்?

ஹர்ஷசரிதம்.

* பாணர் எழுதிய ஹர்ஷசரிதத்தின் மொத்த அத்தியாயங்கள்?

8.

* ஹர்ஷ சரிதத்தின் முதல் அத்தியாயம் தரும் வரலாற்றுச் செய்தி?

பாணரின் குடும்பப்பின்னணி.பாணர் பார்கவா என்ற பிராமணர் குலத்தில் பிறந்த தகவல்.

* ஹர்ஷ சரிதத்தின் இரண்டாம் அத்தியாயம் தரும் வரலாற்றுத்தகவல்?

பாணர் ஹர்ஷரிடம் அறிமுகப்படுத்தப்பட்ட விதம்.

* ஹர்ஷசரிதத்தின் மூன்றாம் அத்தியாயம் தரும் வரலாற்றுச் செய்தி?

வர்த்தன வம்ச ஆட்சியின் ஆரம்பத் தலைநகரான தானேஸ்வரம் பற்றியத் தகவல்கள்.

* ஹர்ஷசரிதத்தின் நான்காம் அத்தியாயம் தரும் செய்தி?

ஹர்ஷரின் பூர்வீகம்.

* ஹர்ஷ சரிதத்தின் ஐந்தாம் அத்தியாயம் தரும் வரலாற்றுச் செய்தி?

தன் கணவர் இறந்ததால் ஹர்ஷரின் தாய் யசோமதி தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு.

* ஹர்ச சரிதத்தின் ஆறாம் அத்தியாயம் தரும் வரலாற்றுத் தகவல்?

ஹர்ஷரின் சகோதரர் கொல்லப்படுதல்.சகோதரி கடத்தப்படுதல்.ஹர்ஷர் அரியணையேறுதல்.

* ஹர்ஷ சரிதத்தின் ஏழாம் அத்தியாயம் தரும் வரலாற்றுத் தகவல்?

எதிரியின் சிறையிலிருந்து தப்பிய தன் சகோதரி ராஜ்ய ஸ்ரீ யை ஹர்ஷர் காப்பாற்றிய நிகழ்வு.

* ஹர்ஷ சரிதத்தின் எட்டாம் அத்தியாயம் தரும் வரலாற்றுச் செய்தி?

விந்திய மலைப்பகுதியில் வாழ்ந்த பல்வேறு மதப் பிரிவு மக்களின் வாழ்க்கை முறை.

* 1897 ஆம் ஆண்டில் ஹர்ச சரிதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்கள்?

எட்வர்ட் பைல்ஸ் கோவெல்.

ஃபிரடெரிக் வில்லியம் தாமஸ்.

* முற்று பெறாத வாழ்க்கை சரித நூல்?

ஹர்ஷ சரிதம்.


மாமன்னர் அசோகரின் கல்வெட்டுகள். பற்றிய வரலாற்றுச் செய்திகள்.


மாமன்னர் அசோகரின் கல்வெட்டுகள். பற்றிய வரலாற்றுச் செய்திகள்.

* அசோகரின் டெல்லி.மீரட் ஆகிய இடங்களிலுள்ள கல்வெட்டுகளைக் கண்டறிந்தவர்?

பாத்ரே டீஃபென் தாலர்.

* அசோகரின் கல்வெட்டுகளைப் படித்து முதன் முதலில் பொருளறிந்தவர்?

ஜேம்ஸ் பிரின்செப்.

* 1879 இல் அசோகரின் கல்வெட்டுகளைத் தொகுத்து முதன்முதலில் நூலாக வெளியிட்டவர்?

அலெக்சாந்தர் கன்னிங்ஹாம்.

* கன்னிங்ஹாமின் இந்திய சாசனங்களின் தொகுப்பைத் திருத்தி வெளியிட்டவர்?

ஹிதாயிச்.(1925 இல்).

* அசோகரின் கல்வெட்டுகளின் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டவர்கள்?

V,A ஸ்மித்.
டி.ஆர்.பண்டார்க்கர்.
ஆர்.கே.முகர்ஜி.
ரோமிலா தாபர்.

* 1961 இல் அசோகரின் சிறுபாறைக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்ட இடம்?

அரவுரா நகரின் அருகில்(உ.பி).

* 1966 இல் அசோகரின் சிறுபாறைக் கல்வெட்டு கண்டறியப்பட்ட பகுதி?

காரி(டெல்லி அருகில்).

* அசோகர் சமயத்துறையில் படிப்படியாக அடைந்த முன்னேற்றத்தைக் கூறுவது?

முதலாம் சிறிய கற்பாறை ஆணை.

* 1840 இல் பாப்ரு கல்வெட்டுகள் கண்டறியப்பட்ட பகுதி?

பைரத்.

* பாப்ரூ கல்வெட்டாணைகள் தற்போது வைக்கப்பட்ட இடம்?

கொல்கத்தா அருங்காட்சியகம்.

* கரோஷ்டி மொழி வடிவில் பொறிக்கப்பட்ட அசோகரின் கல்வெட்டு கிடைத்த இடங்கள்?

ஜௌகடா.எர்ரகுடி.ஆகிய.இடங்கள்.

* அசோகரின் கற்றூண் ஆணைகள் இருந்த இடங்கள்.?

தோப்ரா.

மீரட்.
அலகாபாத்.
சாஞ்சி.
கௌசாம்பி.
சாரநாத்.

அசோகரின் கற்றூண் ஆணைகளின் எண்ணிக்கை?

7.

* அசோகரின் முதல் மூன்று கற்றூண் ஆணைகள் தரும் வரலாற்றுச் செய்தி?

அசோகரின் தர்மம்.

* அசோகரின் நான்காவது கற்றூண் ஆணை கூறும் வரலாற்றுச் செய்தி?

அசோகரின் கவர்னர்கள் ஆட்சி செய்த விதம்.

* அசோகரின் ஐந்தாம் கற்றூண் ஆணை தரும் வரலாற்றுச் செய்தி?

அகிம்சைக்கு அசோகர் தந்த முக்கியத்துவம்.

* அசோகரின் ஆறாவது கற்றூண் ஆணை தரும் வரலாற்றுச் செய்தி?

சமய சகிப்புத்தன்மை.

* அசோகரின் ஏழாம் கற்றூண் ஆணை கூறுவது?

தர்மத்தின் வளர்ச்சிக்கு அசோகர் செய்த சேவைகள்.

* அசோகரின் கற்றூண் ஆணைகளில் நீளமானது?

ஏழாம் கற்றூண் ஆணை.

*சங்கத்தைப் பிளவு படுத்த முயல்வோர் வாழ்நாள் முழுதும் வெள்ளையாடை உடுத்தும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவர் என்று கூறுவது?


சாரநாத் கல்வெட்டு.

* அசோகரின் மனைவிகளின் அறச்செயல்கள் பற்றிக்கூறுவது?

சாரநாத்.கௌசாம்பி கற்றூண் ஆணைகள்.

* அசோகர் புத்தர் பிறந்த லும்பினிக்குச் சென்றதையும் அங்குள்ள மக்களின் வரியைக் குறைத்ததையும் சமயத்தீர்வைகளையும் தவிர்த்ததையும் கூறுவது?

நீக்லிவா என்ற இடத்திலுள்ள ரும்மிண்டி சிறிய கற்றூண் ஆணை.

* மன்னர் மூலம் புத்தசமய அறிவுரைகளை முதலில் கேட்கும் ராஜுகர்கள் மக்களுக்குத் தெரிவிப்பதைக் கூறுவது?

எர்ரகுடி சிறிய கற்பாறை ஆணை.

* குற்றங்களைக் கண்டுபிடிக்க பெண் மகாமாத்திரர்கள் நியமிக்கப்பட்டதைக் கூறுவது.?

அசோகரின் 12 ஆம் பாறைக் கல்வெட்டு.

* அசோகரின் கற்றூண் அமைப்பு ?

15 மீ உயரம்.50 டன் எடை.

* அசோகரின் கற்றூண்களை பாரசீக மணி வடிவத்தை ஒத்தது என்றவர்?

ஹேவல்.

* அசோகரின் கற்றூண்களில் அழகானது?

சார்நாத் கற்றூண்.

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

இந்தியாவின் பொது அறிவு வீனா விடை பற்றி பார்ப்போமா?

இந்தியாவின் பொது அறிவு வீனா விடை பற்றி பார்ப்போமா?

1.ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.
2.உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).
3.உலகிலேயே குளிந்த இடம் சைபீரியா (ரஷ்யா).

4.விமானம் பறக்கும் உயரத்தை அள்க்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.
5.உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர், மொகரார்ஜி தேசாய்.இவர் 1977ல் மார்ச் 24ல் பதவி ஏற்றபோது வயது 81.

6.பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.
7.ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும்.
8.கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.
9.நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.
10.மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும்

பெயர் மாற்றப்பட்ட நாடுகள் பற்றி இப்பொழுது பார்க்கலாமா?

பெயர் மாற்றப்பட்ட நாடுகள் பற்றி இப்பொழுது பார்க்கலாமா?

1.டச்சு கயானா --- சுரினாம்.
2.அப்பர் வோல்டா --- புர்க்கினா பாஸோ
3.அபிசீனியா --- எத்தியோப்பியா
4.கோல்டு கோஸ்ட் --- கானா
5.பசுட்டோலாந்து --- லெசதொ

6.தென்மேற்கு ஆப்பிரிக்கா --- நமீபியா
7.வட ரொடீஷியா --- ஜாம்பியா
8.தென் ரொடீஷியா --- ஜிம்பாப்வே
9.டாங்கனீகாம,சன்ஸிபார் --- தான்சானியா
10.கோட்டே டி ஐவோயர் --- ஐவரி கோஸ்ட்

11.சாயிர் --- காங்கோ
13.சோவியத்யூனியன் --- ரஷ்யா
14.பர்மா --- மியான்மர்
15.கிழக்கு பாக்கிஸ்தான் --- பங்க்களாதேஷ்
16.சிலோன் --- ஸ்ரீலங்கா

17.கம்பூச்சியா --- கம்போடியா
18.பாரசீகம்,பெர்ஷியா --- ஈரான்
19.மெஸமடோமியா --- ஈராக்
20.சயாம் --- தாய்லாந்து

பெயர் மாற்றப்பட்ட நாடுகள் பற்றி கேள்வி பதில்கள் பார்க்கலாமா?

பெயர் மாற்றப்பட்ட நாடுகள் பற்றி கேள்வி பதில்கள் பார்க்கலாமா?

1.பார்மோஸ --- தைவான்
2.ஹாலந்து --- நெதர்லாந்து
3.மலாவாய் --- நியூசிலாந்து
4.மலகாஸி --- மடகாஸ்கர்

5.பாலஸ்தீனம் --- இஸ்ரேல்
6.டச் ஈஸ்ட் இண்டீஸ் --- இந்தோனேசியா
7.சாண்ட்விச் தீவுகள் --- ஹாவாய்

8.அப்பர் பெரு --- பொலிவியா
9.பெக்குவானாலாந்து --- போட்ஸ்வாd 

10. சமீபத்தில் எந்த நாட்டில் அதிபருக்கு எதிராக மக்கள் புரட்சியில் ஈடுபட்டுள்ளனர்?
எகிப்து
11. மத்திய விமான போக்குவரத்து அமைச்சராக புதிதாக பொறுப்பேற்றுள்ளவர்
வயலார் ரவி
12. ஆஸி., ஓபன் டென்னிஸ் 2011 பெண்கள் ஒற்றையர் சாம்பியன் வென்றவர்?
கிளைஸ்டர்ஸ்

டால்பின் பற்றிய வியப்பான தகவல்கள் வாங்க பார்க்கலாம்...

டால்பின் பற்றிய வியப்பான தகவல்கள் வாங்க பார்க்கலாம்...


இந்தியாவின் தேசிய விலங்கு எது என்று கேட்டால் புலி என்று அனைவரிடம் இருந்தும் பதில் வரும். இந்தியாவின் தேசிய பறவை எது என்று கேட்டால் மயில் என்று பதில் கிடைக்கும். அதே போல, இந்தியாவின் தேசிய மலர், என்று கேட்டால் சட்டென்று தாமரை என்று கூறுவர்.
ஆயினும் இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரினம் எது ? என்று கேட்டால் பலருக்கும் தெரியாது. பள்ளி மாணவர்களுக்கு படித்த பெரியவர்களுக்கும் தெரியாது. இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரினம், தெற்காசிய நதி வாழ் டால்பின்கள்.
1)கங்கை, பிரம்மபுத்ரா, சிந்து நதிகளில் வாழும் இந்த டால்பின்கள், இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.
2)டால்பின்கள் என்றாலேயே கடலில் வாழும் உயிரினம் என்று நினைத்தவர்களுக்கு இந்த தகவல் ஆச்சரியமாக இருந்தாலும் அது தான் உண்மை.

3)பல நூற்றாண்டுகளாக இந்த டால்பீன்கள் நதிகளில் வாழ்ந்து வந்தாலும், 19ஆம் நூற்றாண்டில்தான் உயிரியல் ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்தது. அதன் பிறகு இந்த டால்பின்கள் தனி இனமாகவே கருதப்பட்டு வந்தது.
4)கடல் வாழ் டால்பின்களைப் போல நீண்ட மூக்கைக் கொண்டிருந்தாலும் இவற்றின் கண்பார்வை கடல் டால்பின்களைப் போல கூர்மையானதல்ல.

ஆண் டால்பின்கள் 2 முதல் 2.2 மீட்டர் அளவுக்கும், பெண் டால்பின்கள் 2.4 முதல் 2.6 மீட்டர் அளவுக்கும் வளரக் கூடியவை. இவை டிசம்பர்& ஜனவரி வாக்கிலும், மார்ச் முதல் மே மாதம் வரையிலும் குட்டி போடும்.

5) மீன் பிடிக்கும் வலைகள் இவற்றுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுகின்றது. இதுமட்டுமல்லாமல் 
எண்ணற்ற அணைகள் கட்டப்படுவதால் இவற்றின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுகின்றது.
6)சமீபத்தில் இந்திய அரசும், எண்ணற்ற சர்வதேச அமைப்புகளும் நதிவாழ் டால்பின்களைப் பாதுகாக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சர்வதேச அளவில் பாதுகாக்கப்பட வேண்டிய அரிய வகை உயிரினங்களின் பட்டியலில் இந்த டால்பின் இடம்பெற்றுள்ளது.

வியாழன், 2 ஆகஸ்ட், 2018

CTET - ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பு! on August 02, 2018


CTET - ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பு!
on August 02, 2018

சி.பி.எஸ்.இ.,
பள்ளிகளில், ஆசிரியர் பணிகளில் சேர்வதற்கான, மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு,
இன்று முதல், 'ஆன்லைன்'
விண்ணப்ப பதிவு செய்யலாம் என,
அறிவிக்கப்பட்டுள்ளது.
கேந்திரிய வித்யாலயா போன்ற,
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில்,
ஆசிரியர் பணியில் சேர, மத்திய அரசு நடத்தும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இந்த தேர்வுக்கான அறிவிப்பை,மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,
நேற்று வெளியிட்டது.
இதன்படி, www.ctet.nic.in என்ற இணையதளத்தில், இன்று முதல்,
ஆக., 27 வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மொத்தம், 92
நகரங்களில், 20 மொழிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது என,
அறிவிக்கப்பட்டுள்ளது.


புதன், 1 ஆகஸ்ட், 2018

இந்திய புலவர்கள் பற்றி கேள்வி பதில்கள் பார்க்கலாமா?

இந்திய புலவர்கள் பற்றி கேள்வி பதில்கள் பார்க்கலாமா?

1. மகாவீரர் இறந்த போது அவரது வயது
அ. 42
ஆ. 57
இ. 62
ஈ. 72 

2. 'உபநிஷத்துக்கள்' தொடர்புடையது
அ. மதம்
ஆ. யோகா
இ. தத்துவம்
ஈ. சட்டம் 

3. நந்த வம்சத்தை தொடங்கியவர்
அ. மகாபத்ம நந்தர்
ஆ. தன நந்தர்
இ. ஜாத நந்தன்
ஈ. ரிசாதனன்

4. காந்தார கலைப் பள்ளியை உருவாக்கியவர்
அ. சந்திர குப்த மவுரியர்
ஆ. அசோகர்
இ. கனிஷ்கர்
ஈ. ஹர்ஷர் 
5. இரண்டாம் புலிகேசி - ஹர்ஷர் போர் எந்த நதிக்கரையில் நடந்தது?
அ. ஜீலம்
ஆ. கோதாவரி
இ. நர்மதை
ஈ. தபதி
1. ஈ 2. இ 3. அ 4. இ 5. இ

இந்திய நாடு பற்றி சில கேள்வி பதில்கள் .

இந்திய நாடு பற்றி சில கேள்வி பதில்கள் .

1. முதல் தரெயின் போரில் வெற்றி பெற்றவர்
அ. கோரி முகமது
ஆ. கஜினி முகமது
இ. பிரிதிவிராசன்
ஈ. மகேந்திர பல்லவன்
2. நாலந்தா பல்கலைக்கழகத்தை 1197ல் தாக்கியவர்
அ. குத்புதீன் அய்பெக்
ஆ. முகமதுபின் துக்ளக்
இ. முகமதுபின் பக்தியார் கில்ஜி
ஈ. ஜெயசந்திரன் 

3. பாலர் மரவைச் சார்ந்தவர்கள் பின்பற்றிய சமயம்
அ. புத்த மதம்
ஆ. சமண மதம்
இ. இந்து மதம்
ஈ. பார்சி
4. குத்புதீன் அய்பெக்கின் ஆதிக்கத்தை ஏற்ற வங்காள ஆளுநர்
அ. இல்ட்டுட் மிஷ்
ஆ. அலிமர்த்தன்
இ. ஆராம்ஷா
ஈ. எவருமில்லை

5. தில்லியை ஆண்ட முதல் மற்றும் கடைசி பெண்மணி
அ. சாந்த் பீவி
ஆ. நூர்ஜஹான்
இ. மும்தாஜ் மகால்
ஈ. ரசியா பேகம் 
 1. இ 2. இ 3. அ 4. ஆ 5. ஈ