செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

ஹர்ஷ சரிதம் நூல் பற்றிய வரலாற்றுத் தகவல்கள்.


ஹர்ஷ சரிதம் நூல் பற்றிய வரலாற்றுத் தகவல்கள்.

* ஹர்ஷரின் அவைப்புலவரான பாணர் வடமொழியில் எழுதிய நூல்?

ஹர்ஷசரிதம்.

* பாணர் எழுதிய ஹர்ஷசரிதத்தின் மொத்த அத்தியாயங்கள்?

8.

* ஹர்ஷ சரிதத்தின் முதல் அத்தியாயம் தரும் வரலாற்றுச் செய்தி?

பாணரின் குடும்பப்பின்னணி.பாணர் பார்கவா என்ற பிராமணர் குலத்தில் பிறந்த தகவல்.

* ஹர்ஷ சரிதத்தின் இரண்டாம் அத்தியாயம் தரும் வரலாற்றுத்தகவல்?

பாணர் ஹர்ஷரிடம் அறிமுகப்படுத்தப்பட்ட விதம்.

* ஹர்ஷசரிதத்தின் மூன்றாம் அத்தியாயம் தரும் வரலாற்றுச் செய்தி?

வர்த்தன வம்ச ஆட்சியின் ஆரம்பத் தலைநகரான தானேஸ்வரம் பற்றியத் தகவல்கள்.

* ஹர்ஷசரிதத்தின் நான்காம் அத்தியாயம் தரும் செய்தி?

ஹர்ஷரின் பூர்வீகம்.

* ஹர்ஷ சரிதத்தின் ஐந்தாம் அத்தியாயம் தரும் வரலாற்றுச் செய்தி?

தன் கணவர் இறந்ததால் ஹர்ஷரின் தாய் யசோமதி தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு.

* ஹர்ச சரிதத்தின் ஆறாம் அத்தியாயம் தரும் வரலாற்றுத் தகவல்?

ஹர்ஷரின் சகோதரர் கொல்லப்படுதல்.சகோதரி கடத்தப்படுதல்.ஹர்ஷர் அரியணையேறுதல்.

* ஹர்ஷ சரிதத்தின் ஏழாம் அத்தியாயம் தரும் வரலாற்றுத் தகவல்?

எதிரியின் சிறையிலிருந்து தப்பிய தன் சகோதரி ராஜ்ய ஸ்ரீ யை ஹர்ஷர் காப்பாற்றிய நிகழ்வு.

* ஹர்ஷ சரிதத்தின் எட்டாம் அத்தியாயம் தரும் வரலாற்றுச் செய்தி?

விந்திய மலைப்பகுதியில் வாழ்ந்த பல்வேறு மதப் பிரிவு மக்களின் வாழ்க்கை முறை.

* 1897 ஆம் ஆண்டில் ஹர்ச சரிதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்கள்?

எட்வர்ட் பைல்ஸ் கோவெல்.

ஃபிரடெரிக் வில்லியம் தாமஸ்.

* முற்று பெறாத வாழ்க்கை சரித நூல்?

ஹர்ஷ சரிதம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக