புதன், 31 அக்டோபர், 2018

உலகின் மிக உயரமான படேல் சிலை : 10 சிறப்பம்சங்கள்


உலகின் மிக உயரமான படேல் சிலை : 10 சிறப்பம்சங்கள்

புதுடில்லி : சர்தார் வல்லபாய் படேலின் 143 வது பிறந்தநாளை முன்னிட்டு, ஒற்றுமையின் அடையாளமாக குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான 182 மீட்டர் உயரம் கொண்ட படேலின் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்.
படேல் சிலையின் சிறப்பம்சங்கள் :
1. குஜராத்தின் நர்மதா அணை அருகே 3.2 கி.மீ., தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள படேலின் சிலை ரூ.2389 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை அமெரிக்காவின் சுதந்திரா தேவி சிலையை விட 3 மடங்கு உயரமானது.
2. இந்தியாவின் இரும்பு மனிதர் என புகழப்படும் நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான படேலுக்கு நாடு முழுவதிலும் இருந்து இரும்பு சேகரிக்கப்பட்டு இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
3. பத்மபூஷண் விருது பெற்ற ராம் வி.சுதர் என்ற சிற்ப கலைஞரால் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவனமும், குஜராத்தின் சர்தார் சரோவர் நர்மதா நிஜாம் லிமிடெட் நிறுவனமும் இணைந்து இந்த சிலையை உருவாக்கி உள்ளன. 250 இன்ஜினியர்கள், 3400 தொழிலாளர்கள் இணைந்து 33 மாதங்களில் இந்த சிலையை உருவாக்கி உள்ளனர்.
4. ஒற்றுமையின் சின்னமாக 597 அடி உயரம் கொண்ட இந்த சிலை, தற்போது உலகின் மிக உயரமான சிலையாக கருதப்படும் சீனாவின் புத்தர் கோயில் சிலையை விட உயரமானது.
5. இந்த சிலை 553 வெண்கல பகுதிகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் 10 முதல் 15 நுண்ணிய பகுதிகளை கொண்டதாகும். இந்த பகுதிகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, கட்டமைக்கப்பட்டுள்ளது. கான்க்ரீட்டால் அமைக்கப்பட்டுள்ள இந்த அடிப்பகுதி பிரத்யேக வடிவமைப்பை கொண்டுள்ளது இதன் மற்றொரு தனிச்சிறப்பாகும்.
6. சர்வதேச முறையில் உருவாக்கப்பட்ட இந்த வெண்கல பகுதிகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இத்தகைய வெண்கல பகுதிகளை உருவாக்கும் வசதி இந்தியாவில் இல்லை என்பதால் சீனாவில் உருவாக்கப்பட்டு, இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளன.
7. இந்த சிலையில் ஒரே நேரத்தில் 200 பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் 135 மீட்டர் உயரத்தில் பார்வையாளர் மாடம்அமைக்கப்பட்டுள்ளது.
8. படேலின் சிலையின் அடிபாகத்தில் அருங்காட்சியகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகமும் இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது.
9. இந்த அருங்காட்சியகத்தில் படேலின் வாழ்க்கை குறித்த 40,000 ஆவணங்கள், 2,000 புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் ஆராய்ச்சி மையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
10. இந்த சிலை திறக்கப்பட்ட பிறகு, இதனை காண தினமும் 15,000 பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய், 30 அக்டோபர், 2018

குதுப்மினார் பற்றி நீங்கள் அறியாத உண்மைகள் வாங்க பார்க்கலாம்...

குதுப்மினார் பற்றி நீங்கள் அறியாத உண்மைகள் வாங்க பார்க்கலாம்...

இந்தியாவிலேயே உயர்ந்த கோபுரமாக குதுப்மினார் கருதப்படுகிறது. அந்தக் காலத்தில் எதிரிகளின் நடமாட்டத்தை இக்கோபுரத்தின் மீதிருந்து கண்காணித்துள்ளனர்.
1)இப்போதும் டெல்லி மற்றும் அதன் அருகில் வாழும் மக்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் பயன்பட்டு வருகிறது.
2)கி.பி. 1192 இல் டெல்லியை ஆண்ட முதல் மன்னர் துருக்கியரோடு ஏற்பட்ட போரில் இறந்தார். பின்பு, இந்தியாவின் மீது படையெடுத்து வந்த முஸ்லிம் அரசர்களும் அவர் வாரிசுமே ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்புவரை ஆண்டனர்.
3)கி.பி. 1200 ஆம் ஆண்டு வெற்றியின் சின்னமாக குதுப்மினார் கோபுரம் எழுப்பப்பட்டது. அடிமை அரசர்கள் (Slave dynasty) என்ற சுல்தான் குதபுதீன் என்பவர் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.
4)இவரது மருமகன் இல்தத் - மூஷ் என்பவரால் கோபுரம் வடிவமைக்கப்பட்டு 12-11-1236 இல் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. 14,15 ஆம் நூற்றாண்டுகளில் ஆண்ட மன்னர்களால் பழுது பார்த்துச் சரி செய்யப்பட்டுள்ளது.
5)ஆரம்ப காலத்தில் 7 அடுக்குகளுடன் 300 அடி உயரத்துடன் காட்சியளித்ததாகக் கூறப்படுகிறது. தற்போது, 5 அடுக்குகளுடன் 233 அடி உயரத்துடன் காணப்படுகிறது.
6)உச்சிக்குச் செல்ல 379 வட்ட வடிவில் அமைந்த படிக்கட்டுகள் உள்ளன. ஒவ்வொரு மாடியும் ஒரு பால்கனியாக தனித்தனியாக உள்ளது. முதல் மாடி சிவப்புக் கற்கள் பதித்து காண்போர் கண்களையும் கருத்தையும் ஆக்ரமிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
7)குதுப்மினார் அருகில் மெஹ்ராலி என்ற இடத்தில் உள்ளது. பழங்கால இந்தியாவின் அதிசயச் சின்னமாகவும் கருதப்படுகிறது. மழை, வெயிலினால் இந்த இரும்புத் தூண் எந்த வகையிலும் பாதிப்பு அடையவில்லை என்பதே இதன் சிறப்பம்சமாக விளங்குகிறது.
8)உறுதியான இரும்பினால் 32 அடி 8 அங்குல உயர ஸ்தூபியாக உள்ளது. அடிப்பாகம் 6 அடி 4 அங்குலத்துடனும், உச்சி 2 அடி 4 அங்குலப் பருமனுடனும் காணப்படுகிறது. இதனை, 8 இரும்புக் கம்பிகளால் பூமிக்கடியில் கட்டி உறுதியாகவும் உயரமாகவும் நிறுவியுள்ளனர்.
9)குப்தர் காலத்தில் (கி.பி. 375) கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இதன் தோற்றம் குறித்து வரலாற்றாசிரியர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை.
10)குதுப்மினாருக்குத் தென்கிழக்குப் பாகத்தில் காணப்படும் பெரிய நுழைவு வாயிலின் பெயரே அலாய் டார்வாஜா. உலகின் பெரிய உன்னத கேட் என்றும் அழைக்கப்படுகிறது.
11)கி.பி. 1310 ஆம் ஆண்டு அலாவுதீன் கில்ஜியால் சிவப்பு வண்ணக் கற்களைப் பயன்படுத்தி எழில்மிகு தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாயில் சதுரமானதாகத் திட்டமிட்டுக் கட்டப்பட்டுள்ளது. 35 1/2 அடி உள்புற அகலத்துடனும் 55 1/2 அடி வெளிப்புற அகலத்துடனும் 47 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
12)தரைப் பாகத்திலிருந்து உள்ள கூரையின் கனம் 11 அடியாகும்.
குதுப்மினாரில் மிகவும் அழகான வேலைப்பாடுகளுடன் அமைந்த இந்த கேட்டின், வெளிப்புற உள்புற வேலைப்பாடு, இந்தியா மட்டுமல்ல வேறு எங்கும் இதுபோல் பார்க்க முடியாத உலகிலேயே சிறந்த வாயில். உலகின் மற்ற நேர்த்திவாய்ந்த வேலைப்பாடுகளுடன் அமைந்தவற்றுடன் போட்டி போடுமளவுக்குச் சிறந்து விளங்குகிறது.
13)உலக வரலாற்றில் குதுப்மினார் கோபுரம், இரும்புத்தூண், அலாய் டார்வாஜா ஆகியன உயிரோவியங்கள் என்ற பான்ஷேப் கூற்று நினைவுகூறத்தக்கது.

நாம் வாழும் பூமியை பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்...

நாம் வாழும் பூமியை பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்...

விண்வெளியிலிருந்து பார்த்தால் வெள்ளி கிரகமே அதிக பிரகாசமாக தெரியும் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் சூரியனிலிருந்து 5-ஆவது கிரகமாக இருக்கும் பூமியும் வெள்ளிக்கு நிகராக பிரகாசமாகவே தெரியும், நீரினால் சூழப்பட்டு இருப்பதால்தான் அத்தனை பிரகாசம் பூமிக்கு கிடைக்கிறது என்கிறது ஆராய்ச்சிகள்.
1) சுமார் 3,700 மைல்கள் பூமிக்கு அடியில் இருக்கும் மைய பகுதியிலிருந்து கொடுக்கப்படும் அழுத்தமும், டெக்டானிக் ப்ளேட்ஸ் (Tectonic plates) எனப்படும் தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பின் நகர்தலினாலும் ஓராண்டிற்கு சுமார் 1 மில்லியன் நிலநடுக்கங்கள் ஏற்படுவதாகவும், இதில் பல பதிவு செய்யப்படமலேயே போவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
2) எர்த் ஆக்சிஸ் எனப்படும் புவி இருசையை பொருத்தே பருவ காலங்கள் உருவாகின்றன. தற்போது புவி இருசு 23.4 டிகிரியில் இருக்கிறது. ஆனால் இது ஆண்டுகள் போகப் போக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.
3) புவியீர்ப்பு விசை பூமி முழுவதும் ஒரு சீராக அமைவதில்லை. பூமியின் மைய பகுதியிலிருந்து நாம் வசிக்கும் இருப்பிடத்தின் அடிப்படையில்தான் புவியீர்ப்பு விசை உணரப்படுகிறது.
4)97 சதவீத நீரானது கடலாகவும், 3 சதவீதம் நன்னீராகவும் பூமியில் நிறைந்திருக்கிறது.
5)சுமார் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியுடன் மற்றொரு கிரகமும் ஒரே சுற்றுப்பாதையில் சுற்றி வந்தது என்றும், தியா (Theia) எனப்படும் அந்த கிரகத்தோடு மோதிக்கொண்டதில் நிலவு போன்ற கோள் உருவானது என்றும் ஆய்வுகள் சொல்கின்றன.
6)நிலவை விட சிறிய அளவில் மற்றொரு கோளும் பூமியை சுற்றி வந்ததாக தெரிகிறது. தற்போது தினமும் பூமியை நிலவோடு சேர்ந்து எரிகற்களும் சுற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
7)பூமிக்கு வயது 4.6 பில்லியன் ஆண்டுகள் ஆவதாக கணிக்கப்பட்டுள்ளது.
8)பூமியில் 2 ஆண்டுகள் என்பது செவ்வாயில் 1 ஆண்டு ஆகும்.

பழந்தமிழரின் கடல் மேலாண்மை பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்...

பழந்தமிழரின் கடல் மேலாண்மை பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்...

தமிழர்களின் கடல் மேலாண்மை பற்றி ‘கடல் புறா’ போன்ற வரலாற்று நாவல்கள் மூலம் அரசல் புரசல்களாக நம்மில் பலரும் அறிந்திருப்போம்.
’கலிங்கா பாலு’ என்னும் கடல்சார் ஆராய்ச்சியாளரின் கடல் ஆமைகள் பற்றிய ஆய்வில் தமிழர்கள் பற்றிய பல அறிய உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
அவருடைய ஆய்வறிக்கை “தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்” நடத்திய “பழந்தமிழரின் கடல் மேலாண்மை” கருத்தாய்வு கூட்டத்தில் விளக்கப் பட்டது. அந்த ஆய்வறிக்கையின் சாராம்சம் பின்வருமாறு-
கடல் வாழ் உயிரனமான ஆமைகள் கூட்டம் கூட்டமாக முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்காக வருடா வருடம் பல்லாயிரம் மையில்கள் கடந்து தமிழகம் மற்றும் ஒடிசா மாநில கடற்கரைகளில் தஞ்சம் புகுவது பலர் அறிந்த விஷயம்.
இந்த ஆமைகள் பற்றிய ஆய்வில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரிய வந்திருக்கிறது. சராசரியாக ஒரு கடல் ஆமையால் ஒரு நாளைக்கு 85கி.மி தூரமே நீந்தி கடக்க முடியும் ஆனால் இவ்வாமைகள் கடந்து வந்ததோ பல்லாயிரம் மையில்கள்!
அதுவும் குறுகிய காலத்தில்!! எவ்வாறு என்று சில புதிய தொழில் நுட்பங்களின்(RFID-செயர்கைக்கோள் சாதனம்)RFID உதவியுடன் ஆராய்ந்த போது ஆமைகள் Ocean currents எனப்படும் கடலில் பாயும் நீரோட்டங்களின் உதவியுடன் பல்லாயிரம் கிலோ மீட்டர் நீந்தாமல் மிதந்து கொண்டு பயணிக்கும் விஷயம் தெரிய வந்திருக்கிறது.
இப்படி பயணம் செய்யும் ஆமைகளை செயர்கைகோளின் மூலம் பின்தொடர்ந்த போது மியான்மர்(பர்மா), மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள், ரஷ்யா, மெக்சிகோ, ஐஸ்லேண்ட், ஆப்ரிக்கா என பல உலக நாடுகளின் கடற்கரைகளுக்கு ஆராய்ச்சியாளர்களை இட்டு சென்றுள்ளன.
அப்படி அவை கடந்த கடற்கரைகளை ஆராய்ந்த கலிங்க பாலுவிற்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்த்து. ஆமைகள் தொட்டுச் சென்ற பல கடற்கரைகளில் துறைமுகங்களும் அவற்றில் 53 இடங்களின் பெயர்களும், அதன் மக்களும், பண்பாடும், மொழியும் ஏதாவது ஒரு வகையில் தமிழின் தாக்கத்தோடு இருந்திருக்கிறது. அந்த கடற்கரைகளில் உள்ள ஊர்கள் சிலவற்றின் பெயர்கள் உங்கள் பார்வைக்கு:
ஊர் பெயர்களும் அந்த நாடுகளும்:
தமிழா-மியான்மர்
சபா சந்தகன் – மலேசியா
கூழன், சோழவன், ஊரு, வான்கரை, ஓட்டன்கரை, குமரா- ஆஸ்திரேலியா
கடாலன் – ஸ்பெயின்
நான்மாடல், குமரி,- பசிபிக் கடல்
சோழா, தமிழி பாஸ் –மெக்சிகோ
திங் வெளிர்- ஐஸ்லாந்து
கோமுட்டி-ஆப்ரிக்கா
இப்படி அந்த ஆமைகள் சென்ற கடற்கரை நகரங்களின் பெயர்களும் ஒரு சில பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினத்தினரின் மொழி, பண்பாடு ஆகியன தமிழோடு தொடர்புள்ளதாக இன்றளவும் இருக்கின்றன.
இன்னொரு சுவாரஸ்யிமான விஷயம்.
‘சர்க்கரை வள்ளிக்கிழங்கு’(sweet potato) என்பது தமிழ் நாட்டில் விளையும் கிழங்கு வகை. நம் மீனவர்கள் கடலோடும்போது பல நாள் பசி தாங்க இவற்றையே உணவாக கொள்ளும் வழக்கம் இன்றளவும் உள்ளது. இதே வழக்கத்தை தமிழுடன் தொடர்புடையதாக கருதப்படும் பல பழங்குடியின மக்கள் பின்பற்றுகின்றனர்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் மியானமர், இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவின் சில பகுதி என பல இடங்களில் நம் சர்க்கரை வள்ளிக்கிழங்கின் பெயர் ‘குமரா’!!
பிசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவில் வாழும் ஒரு குறிப்பிட்ட இனமக்கள் உபயோகப்படுத்தும் படகின் பெயர் ‘திரி மரம்’.
அதில் உள்ள நடு பாகத்தின் பெயர் ‘அம்மா’ வலது பாகம் ‘அக்கா’ இடது பாகம் ‘வக்கா’. அடி பாகம் ‘கீழ்’.
நியுசிலாந்து பகுதியில் 1836ஆம் வருடம் ஒரு பழங்குடியினர் குடியிருப்பில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட இரும்பாலான மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல் விக்கிபிடியாவில் உள்ளது. அதை படிக்க http://en.wikipedia.org/wiki/Tamil_bell சொடுக்கவும்.
இப்படி தமிழுடன் தொடர்புடைய பல விஷயங்களை விஷயங்களை மேலும் பல வருடங்கள் ஆராய்ந்த கலிங்க பாலு அவர்களின் ஆராய்ச்சி முடிவில் பழந்தமிழர்கள் தம்முடைய கடல் பயணங்களுக்கும் படையெடுப்புகளுக்கும் ஆமைகளை வழிகாட்டிகளாக (Navigators) பயன்படுத்தி பல்லாயிரம் மைல்கள் கடந்து பல நாடுகளில் கோளோச்சிருப்பது ஆதாரப் பூரவமாக நிரூபனமாகியிருக்கிறது.
இது பற்றி அவர் பல ஆதாரங்களை முன் வைத்திருக்கிறார். அடுத்த மாதம் இது பற்றிய புத்தகம் அவர் வெளியிட இருப்பதால் நான் பல விஷயங்களை இங்கே பகிர இயலாது.

தூக்கம் பற்றி நீங்கள் அறியாத விசித்திரமான உண்மைகள்....

தூக்கம் பற்றி நீங்கள் அறியாத விசித்திரமான உண்மைகள்....

ஆரோக்கியத்தின் அடையாளம் நல்ல தூக்கம் என்பது நிருபிக்கப்பட்ட மருத்துவ உண்மை.
1)ஆனால் எது ஆரோக்கியமான தூக்கம்? என்ற கேள்வி எழுவதுண்டு.அவர்கள், படுத்தவுடன் 30 நிமிடங்களுக்குள் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் தூங்குவது இடையில் இரவில் ஒரே ஒரு முறை மட்டும் எழுந்து பின் 20 நிமிடங்களுக்குள் மீண்டும் ஆழ்ந்து தூங்குவது என்பதுதான் ஆரோக்கியமான தூக்கம்.
2)65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விதிவிலக்கு உண்டு. அவர்கள் படுத்தவுடன் 60 நிமிடங்களுக்கு முன்னர் தூங்கிவிட வேண்டும்.
3)வயதானவர்கள் என்றால் இரவில் இரண்டு முறை எழலாம். ஆனால் அந்த இருமுறையும் 30 நிமிடங்களுக்குள் மீண்டும் தூங்கிவிட வேண்டும்.
4)இரவில் படுக்கையில் இருக்கும் நேரத்தில் 85 சதவீத நேரம் அவசியம் தூங்கியாக வேண்டும். மாறாக புரண்டு புரண்டு படுத்து 40 சதவீத நேரமே தூங்குவது ஆரோக்கியத்துக்கு கேடு தரும் என எச்சரிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
5)பின்னாளில் வரும் ஒவ்வொரு பெரிய நோய்க்கும் தொடக்க நாட்களில் நீங்கள் சரிவர தூங்காததுதான் காரணமாக அமைகிறது.
6)இளமையில் நன்றாக தூங்கி எழுந்தவர்கள் முதுமையில் ஆரோக்கியமாகவும், அறிவுப்பூர்வமாகவும் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
7)ஒரு மனிதனுக்கு 7 மணிநேர தூக்கம் அவசியம். அதற்கு குறைவாக தூங்குவதும், அதையும் தாண்டி நீண்ட நேரம் தூங்குவதும் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும்.
8)அதிக தூக்கமும், குறைந்த தூக்கமும் 7 ஆண்டுகளுக்கு முன்னதாகவே நம்மை முதுமை அடைய வைக்கிறதாம். ஆக, தினமும் நீங்கள் இரவில் படுக்கச்செல்லும் நேரத்தை வரையறுத்துக்கொள்வது மிகவும் முக்கியம்.

இதுவரை நீங்கள் அறியாத விசித்திரமான உண்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...

இதுவரை நீங்கள் அறியாத விசித்திரமான உண்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...

நாம் நமது அன்றாட வாழ்வில் பல விசித்திரமான மற்றும் வினோதமான பொருள்கள் மற்றும் செயல்களை கடந்து வந்துள்ளோம். அவற்றை பற்றி தெரிந்தால் அட அட என்று ஆச்சர்யபடுவீர்கள்.
1)லிப்ஸ்டிக்
பெண்களுக்கு லிப்ஸ்டிக் என்றால் அவ்வளவு பிரியம். ஆனால் அந்த லிப்ஸ்டிக்கை போடும் முன், அது எதனால் ஆனது என்று சற்று யோசியுங்கள். ஏனெனில் லிப்ஸ்டிக்கில் மீன் செதில்கள் உள்ளன.
2)ஹெட்போன்
தொடர்ச்சியாக விருப்பமான பாடல்களை ஹெட்போனில் கேட்கிறீர்களா? அவ்வாறு ஒரு மணிநேரம் பாட்டு கேட்டால், காதுகளில் பாக்டீரியாவானது 700 மடங்கு அதிகரிக்கும்.
3)இறால்
கடல் உணவுகளில் இறால் ரொம்ப பிடிக்குமா? அப்படியெனில் அடுத்த முறை அதன் தலையை சாப்பிடும் போது, அதன் இதயத்தை சாப்பிடும் உணர்வைப் பெறுவீர்கள். ஏனெனில் இறாலுக்கு இதயமானது அங்கு தான் உள்ளது.
4)நாக்கு
எப்படி கைவிரலில் உள்ள ரேகைகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறதோ, அதேப் போன்று உதடுகளின் ரேகைகளும்.
5)பட்டாம்பூச்சி
இந்த அழகான பட்டாம்பூச்சி, பூக்களில் உள்ள தேனின் சுவையை வாயால் தான் சுவைக்கிறது என்று நினைத்தால், அது தான் தவறு. ஏனெனில் உண்மையில் பட்டாம்பூச்சி தேனின் சுவையை அதன் கால்களில் தான் சுவைக்கிறது.
6)யானை
பாலூட்டிகளிலேயே யானையின் பிரசவ காலம் தான் அதிகம். அதுவும் 645 நாட்கள், யானையானது தன் கருவை சுமக்கும்.
7)ஆங்கில மொழி
ஆங்கில மொழியில் உள்ள ரைம்ஸ்களில் மாதம், ஆரஞ்சு, ஊதா மற்றும் சில்வர் போன்ற வார்த்தைகளே வராது என்ற உண்மை தெரியுமா?
8)நெருப்புக்கோழி
உலகிலேயே மிகவும் பெரிய பறவையான நெருப்புக்கோழியின் மூளையை விட, அதன் கண்கள் பெரியது என்பது ஆச்சரியப்பட வைக்கும் ஒரு உண்மை.
9)புகைப்பிடித்தல்
இப்போது சொல்லப்போகும் உண்மை அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது என்னவெனில், சிகரெட்டை பற்ற வைக்கும் லைட்டரானது, தீக்குச்சிக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது.
10)முழங்கை ட்ரிக்
கைகளை எவ்வளவு தான் அங்கும் இங்கும் அசைக்க முடிந்தாலும், முழங்கையை மட்டும் எவராலும் நாக்கால் தொட முடியாது. இப்போது அதை நிச்சயம் முயற்சிப்பீர்கள் பாருங்களேன்.

கடல் கன்னி பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்...

கடல் கன்னி பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்...

கடல் கன்னி என்றதும் ஒரு பெண்ணும் மீனும் கலந்த உடல் சட்டென ஞாபகத்துக்கு வரும்.உடலின் மேல்பகுதி பெண்ணாகவும் அடிப்பகுதி மீனின் வாலாகவும் இருக்கும் கடல்கன்னியின் படங்களை கார்ட்டூன்கள் மற்றும் ஓவியங்களில் பார்த்து மகிழ்ந்திருப்பீர்கள்.கடல் கன்னி பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள்
1)கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கடல்கன்னி பற்றிய கதைகள் சிரியாவில் வலம் வரத் தொடங்கிவிட்டன. ஐரோப்பா, ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவிலும் கடல்கன்னி பற்றிய கதைகள் ஏராளம் உள்ளன.

2)கடல்வாழ் உயிரியான கடல்கன்னியைத் தேவதையாக வர்ணிக்கப்படுகிறது.
3)குழந்தைகள் கதையாசிரியரான ஹேன்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சனின் ‘தி லிட்டில் மெர்மெய்ட்’ (சின்னஞ்சிறிய கடல்கன்னி) கதை மிகவும் புகழ்பெற்றது. பூமியில் உள்ள இளவரசன் மீது ஆசைகொண்டு வாழரும் கடல்கன்னியின் கதை அது.
4)வெள்ளம், புயல், கப்பல் விபத்துகள் மற்றும் படகுகள் மூழ்கிப்போகும் சம்பவங்களுடன் கடல்கன்னிகளுக்குத் தொடர்பு இருப்பதாக இப்போதும்கூட சில நாடுகளில் நம்பப்படுகிறது.
5)மனதைக் கவரும் ஆண்களுக்குப் பல பரிசுகளையும் வரங்களையும் கடல்கன்னிகள் வழங்குவார்களாம். கடல்கன்னி அழுது வடிக்கும் கண்ணீர்தான் கடலில் முத்துகளாகக் கிடைக்கின்றன என்ற நம்பிக்கையும் உள்ளது.
6) கடல்வாழ் உயிரியான ஆவுலியாவைப் பார்த்து, கடல்கன்னியைப் பார்த்ததாகச் சொல்லிவிடும் வழக்கமும் உண்டு. அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ் கரீபியன் கடலில் இந்த ஆவுலியாக்களைப் பார்த்துதான் கடல்கன்னிகளைப் பார்த்ததாகக் குறிப்புகளை எழுதிவிட்டார்.
7)கிரேக்க மன்னன் மகா அலெக்சாண்டரின் தங்கையான திசலோனி இறந்தபிறகு கடல்கன்னியாக மாறி ஈஜியன் கடலில் வசிப்பதாக ஒரு கதை உள்ளது. அந்தக் கடலைக் கடக்கும் கப்பல்களை நிறுத்தி மாலுமிகளிடம் திசலோனி ஒரு கேள்வியைக் கேட்பாளாம். ‘அரசன் அலெக்சாண்டர் உயிரோடு இருக்கிறாரா?’ என்பதே அந்தக் கேள்வி. அலெக்சாண்டர் உலகத்தையெல்லாம் வென்று ஆரோக்கியமாய் வாழ்கிறார் என்ற பதிலை மாலுமிகள் சொல்ல வேண்டும். அந்தப் பதிலில் திருப்தியடைந்தால் மட்டுமே, கப்பலை அமைதியாகத் திசலோனி அனுமதிப்பாள். தவறாகப் பதில் சொன்னால், கடலில் பெரும்புயலை உருவாக்கிக் கப்பலை அழித்துவிடுவாளாம்.
8)கம்போடியா மற்றும் தாய்லாந்தில் கூறப்படும் ராமாயணக் கதையில் சுவன்னமச்சா என்ற தங்கக் கடல்கன்னியைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது.
9)ஒபேரா நாடகங்கள், ஓவியங்கள், தேவாலயச் சிற்பங்களில் காலங்காலமாகக் கடல்கன்னிகள் இடம்பிடித்துவருகின்றன.

இதிகாச இராவணன் பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்...

இதிகாச இராவணன் பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்...

என்னதான் சீதையை இராவணன் கடத்திக் கொண்டு சென்றான் என்றாலும் அவளை அவன் பலவந்தமாக அடைய முயற்சி செய்யவில்லையே, இதன்படி பார்த்தால் இராவணன் ஒழுக்கமானவன் என்று இன்றும் பலர் கூறுவருகின்றார்கள்.
அவன் அசுரகுலத் தலைவன், சாவை வெல்லும் வரமும் பெற்றவன் அவன் நினைத்திருந்தால் சீதையை பலவந்தமாக அடைந்திருக்கலாம் ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை. சீதையின் விருப்பத்திற்காக காத்திருந்தான், காவலிருந்தால். இதற்கு காரணம் என்ன?
ஒருசமயம் மைலாய மலையில் தங்கியிருந்து தேவலோகத்தை தாக்கத் திட்டமிடுகின்றான் இராவணன். அப்போது அப்சரப் பெண்களில் ஒருத்தியான ரம்பையை காண்கின்றான், அவள் அழகில் கவரப்படுகின்றான்.
அவளை அடைய ஆசைகொண்டு அவளின் விருப்பத்தை வினவுகின்றான் இராவணன். அதற்கு நீங்கள் என் மாமனார் முறை என பதில் கூறும் ரம்பை இராவணனின் ஆசைக்கு இணங்க மறுக்கின்றாள்.
குபேரனனும், இராவணனும் சகோதரர்கள் முறை. குபேரனனின் மகன் நளகூவரனுக்கும், ரம்பைக்கும் இடையில் காதலிருந்ததால், அம்முறைப்படி இராவணனன் ரம்பைக்கு மாமனாராகின்றான்.
எனினும், அம்சரப் பெண்களுக்கு இது போன்ற உறவுமுறை விதிகள் எதுவும் இல்லை எனக் கூறிய இராவணன் ரம்பையை பலவந்தமாக அடைகின்றான்.
இராவணனின் துர்செயலை ஞானத்தால் அறியும் நளகூவரன் “பலவந்தமான எப் பெண்ணை அடைந்தாலும், விருப்பமின்றி பெண்ணை பலாத்காரம் செய்தாலும் அவன் தலை சில்லுகளாக சிதறிப்போகும்” என்ற பயங்கரச் சாபத்தை இராவணனுக்கு அளிக்கின்றான்.
இந்தச் சாபத்தை அறிந்த இராவணன் அன்று தொடக்கம் எந்தப்பெண்ணையும் பலவந்தமாக அடையும் வழக்கத்தை விட்டுவிட்டான். இதன்காரணமாகவே பலத்தால் சீதையைக் கவர்ந்த இராவணன் பலவந்தமாக அவளை அடையவில்லை.

சிங்கங்களை பற்றி நீங்கள் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்...

சிங்கங்களை பற்றி நீங்கள் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்...

யாருடைய வீரத்தையாவது புகழ்ந்து சொல்லும் போது நாம் அதிகம் பயன்படுத்துவது"சிங்கம்மாதிரி"அவன் என்று கூறுவோம். சிங்கங்களை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் வாங்க பார்க்கலாம்
1)சிங்கம் பூனை குடும்பத்தை சேர்ந்தது. ஆண் சிங்கம் வேட்டைக்கு செல்லாது. பெண் சிங்கம் வேட்டையாடி கொண்டு வரும் உணவை தான் ஆண் சிங்கம் சாப்பிடும். ஆண் சிங்கங்கள் அபூர்வமாக தான் வேட்டைக்கு செல்லும்.
2)சிங்கங்கள் இனப்பெருக்கதின் போது தொடர்ந்து ஒரு நாளுக்கு 25-40முறை வரை கூட உடல் உறவில் ஈடுபடுமாம்.
3)சிங்கங்களுக்கு இனிப்பு சுவையை உணர முடியாது.
4)சிங்கங்களின் கூட்டத்தை எதிர்த்து சண்டையிடும் துணிச்சல் முள்ளம்பன்றிக்கு உள்ளது.
5)சிங்கங்களின் கர்ஜிக்கும் சத்தம் 8கி.மீ வரை எதிரொலிக்கும் தன்மை கொண்டது.
6)தீ கோழி ஒரே உதையில் சிங்கங்களை உயிர் இழக்க செய்துவிடும் திறன் கொண்டது.
7)சிங்கங்கள் பொதுவாக 10-14 வருடங்கள் உயிர் வாழும்.
8)பெண் சிங்கங்களுக்கு பிடரி மயிர் அதிகமாக இருக்கும். ஆண் சிங்கங்களின் மீது அதிக ஈர்ப்பு இருக்கும்.
9)சிங்கங்கள் 250 கிலோ வரை எடை கொண்டது.
10)மலை சிங்கங்கள் தனக்கு கிடைத்த உணவை மண்ணில் புதைத்து வைத்து பசி எடுக்கும் போது எடுத்து சாப்பிட வேண்டும்.

மீன்கள் பற்றி இதுவரை நீங்கள் அறியாத உண்மைகள்...

மீன்கள் பற்றி இதுவரை நீங்கள் அறியாத உண்மைகள்...

முதுகெலும்புள்ள மற்ற உயிரினங்களின் எண்ணிக்கையை விட மீன்களின் எண்ணிக்கை அதிகம்.
1) மீன்கள் குளிர் ரத்த பிராணிகள். இவற்றின் உடல் சூடு, அவை வாழும் நீரின் வெப்பநிலையைப் பொறுத்து மாறும்.
2)ஏறக்குறைய எல்லா மீன்களும் துடுப்புகளைப் பெற்றுள்ளன. இவை நீந்துவதற்குப் பயன்படுகின்றன. அதே போல் செதில்கள் மீன்களின் உடல் பாதுகாப்புக்கு உதவுகின்றன.
3) மீன்களில் சுமார் 22 ஆயிரம் வகைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகை மீனும் நிறத்திலும் வடிவத்திலும் பருமனிலும் வேறுபட்டு உள்ளது.
4)பொதுவாக மீன்களுக்கு நுரையீரல் கிடையாது. மீன்கள் வாய் மூலம் நீரைக் குடித்து கன்னத்திலுள்ள செவுள்கள் மூலம் வெளியேற்றுகின்றன. அப்போது நீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகின்றன.

5) மீன்கள் கண்ணைத் திறந்து கொண்டே தூங்குகின்றன. ஏனென்றால் இவற்றுக்கு இமைகள் கிடையாது. ஆழ்கடலில் வாழும் மீன்கள் தூங்குவதில்லை.
6)மீன்களுக்கு புறச்செவிகள் கிடையாது. அதேசமயம் நீரில் உண்டாகும் அதிர்வுகளைத் துல்லியமாக உணர்ந்து கொள்கின்றன.

7) காட், சுறா போன்ற மீன்களில் இருந்து எண்ணெய் எடுக்கிறார்கள். உணவாகவும், எலும்பு மற்றும் செதில்கள் உரமாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
8)மிகச்சிறிய மீன் கோபி. இது 13 மி.மீட்டர் அளவே இருக்கும். மிகப்பெரிய மீன் திமிங்கலச் சுறா. இது 18 மீட்டர் நீளம் இருக்கும்.
9)பெரிய மீன்களின் வாயையும் உடலையும் சுத்தம் செய்யக்கூடியது ‘க்ளீனர்’ மீன்.
10)‘பஃபர் ஃபிஷ்’ தட்டையாக இருக்கும். எதிரியைக் கண்டதும் தண்ணீரைக் குடித்து உருண்டையாகிவிடும். அதைக் கண்ட எதிரி பயந்து ஓடும்!

கடலைக் கலக்கும் வினோத மீன்கள் பற்றி அறிவோம்...

கடலைக் கலக்கும் வினோத மீன்கள் பற்றி அறிவோம்...

கடல் மீன்கள் என்னென்ன உள்ளன? இப்படிக் கேட்டால் நாம் சாப்பிடும் வஞ்சிரம், வாவல், சங்கரா மீன்களின் பெயர்களைச் சொல்லிவிடுவீர்கள். கடலில் இந்த வகை மட்டுமல்ல; ஏராளமான மீன் வகைகள் உள்ளன. இதுவரை நீங்கள் அறிந்திராத சில மீன்களைப் பார்ப்போமா?
விரியன் மீன்
விரியன் மீனைக் (viper fish) கொலைகார மீன் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு மிகவும் மூர்க்கமாக இருக்கும் இந்த மீன். ஆனால், இந்த மீன் இரண்டு அடி நீளம் வரைதான் வளரும். பெரிய கண்களும் ஊசி போன்ற கூர்மையான பற்களும் இந்த மீனுக்கு உண்டு. பிறந்தது முதல் இறக்கும் வரை வாயைத் திறந்தபடியே வைத்திருக்கும். வாயை மூட முடியாத அளவுக்கு இதன் பற்கள் மிக நீளமானவை. சாப்பிடாமல் நீண்ட நாட்கள் உயிர் வாழக் கூடிய ஆற்றல் இந்த மீனுக்கு உண்டு.
சவப்பெட்டி மீன்
சவப்பெட்டி மீன்கள் (coffin fish) தெற்கு ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா கடற்கரை யோரங்களில் அதிகம் காணப்படுகின்றன. இந்த மீன்கள் 15 செ.மீ. வரை வளரும். அதாவது அரை அடி ஸ்கேல் அளவுக்கு இருக்கும். சிறிய கால்கள் போல் காட்சியளிக்கும் துடுப்புகளைக் கொண்டு தரையில் நடந்து செல்லும் இந்த மீன். இதை ‘கை மீன்’ (hand fish) என்றும் சொல்வதுண்டு. எதிரி தாக்க வந்தால், அவசர அவசரமாக நிறைய தண்ணீரைக் குடித்து, உடலை உப்பச் செய்துவிடும். இதன் உப்பிய உடலை எதிரியால் கடிக்கக்கூட முடியாது.
நீல வளைய ஆக்டோபஸ்
கடல்வாழ் உயிரினங்களில் அதிக விஷம் கொண்ட மீன் நீல வளைய ஆக்டோபஸ்தான் (Blue ringed octopus). ஒரு கோல்ஃப் பந்து அளவே இந்த மீன் இருக்கும். நீளம் 58 அங்குலம் மட்டுமே. ஆள்தான் பார்க்க மிகவும் சிறிது. ஆனால், விஷமோ மனிதர்களைக் கொல்லக் கூடிய அளவு கொடியது. இதன் விஷத்திற்கு மாற்று மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

வியாழன், 25 அக்டோபர், 2018

மிக முக்கியமான சுருக்கமான அரசு திட்டங்கள்


மிக முக்கியமான சுருக்கமான அரசு திட்டங்கள்

1. UDAY: உஜ்வால் டிஸ்காம் அஷ்யூரன்ஸ் யோஜனா

2. PMMY: பிரதான் மந்திரி முத்ரா யோஜனா

3. PMJDY: பிரதான் மன்ட்ரி ஜான் தன்பன் யோஜனா

4. PMJJBY: பிரதான் மந்திரி ஜீவன் ஜியோதி பீமா யோஜனா

5. PMSBY: பிரதான் மந்திரி சரக்ஷா பீமா யோஜனா

6. ஏபி: அடல் ஓய்வூதிய யோஜனா

7. கே.வி.பீ: கிசான் விகாஸ் பேட்ரா

8. எஸ்.ஏ.பி.ஏ: ஸ்வத் பரத் அபியான்

9. PMSAGY: பிரதான் மந்திரி சன்சாத் ஆதார்ஷ் கிராம் யோஜனா

10. AMRUT: Atal மிஷன் புத்துணர்வு மற்றும் நகர்ப்புற மாற்றம்

11. என்ஜிஎம்: நமிமி கங்கா யோஜனா

12. HRIDAY: பாரம்பரிய நகர அபிவிருத்தி & மேம்பாட்டு யோஜனா

13. முத்திரை: மைக்ரோ யூனிட்ஸ் டெவலப்மென்ட் & ரிபினேன்ஸ் ஏஜென்சி

14. SETU: சுய வேலைவாய்ப்பு மற்றும் திறமை பயன்பாடு

15. NPS: தேசிய ஓய்வூதிய திட்டம்

16. PMKVY: பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா

17. PMKSY: பிரதான் மந்திரி கிருஷி சின்சாய் யோஜனா

18. BBBP யோஜனா: பேட்டி பச்சோவ், பேட்டி பத்ஹோ யோஜனா

19. எஸ்.எஸ்.ஓ: சுகண சிருத்தி யோஜனா

20. பிஎம்டிபிவீ: பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா

21. PMGSY: பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா

22. பிரதமர்: பிரதான் மந்திரி உஜ்ஜ்வல யோஜனா

22. டி.ஜி.கே: டெய்லி ஜி.கே.ஜோன் டெலிகிராம் சேனல்

23. PMGKY: பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா

24. டி.ஐ.சி.ஜி.சி: வைப்புத்தொகை காப்புறுதி மற்றும் கடன் உத்தரவாதக் கூட்டுத்தாபனம்

25. TEC இந்தியா: ஆற்றல்மிகுந்த மற்றும் சுத்தமான இந்தியாவை மாற்றுதல்

26. PACS: முதன்மை விவசாய கடன் சங்கங்கள்

27. சிபிஐ: நுகர்வோர் விலை குறியீட்டு எண்

28. WPI: மொத்த விலை குறியீட்டு எண்

29. சிஏடி: நடப்பு கணக்கு பற்றாக்குறை

30. கே.வி.கேக்கள்: கிருஷி விஜயன் கெண்ட்ராஸ்

31. MSMEs: மைக்ரோ, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள்

32. சிபிஎஸ்: கோர் பேங்கிங் தீர்வு

33. CORE: மையப்படுத்தப்பட்ட ஆன்லைன் ரியல் டைம் பரிமாற்றம்

34. LTIG: நீண்ட கால நீர்ப்பாசன நிதி

சனி, 6 அக்டோபர், 2018

அங்கன்வாடியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: உடனே விண்ணப்பிக்கவும்


அங்கன்வாடியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: உடனே விண்ணப்பிக்கவும்

சேலம் அங்கன்வாடியில் நிரப்பப்பட உள்ள 1101 அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 1101

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: அமைப்பாளர் - 316

சம்பளம்: மாதம் ரூ.7700 - 24200

வயதுவரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் 8-ஆம் வகுப்பு தேர்தச்சி அல்லது தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: சமையல் உதவியாளர் - 785

சம்பளம்: மாதம் ரூ.3000 - 9000

வயதுவரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

தகுதி: 5-ஆம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். பழங்குடியினர் எழுத்த, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.

மேலும் விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர் மேற்படி கல்வித் தகுதியிருப்பின் 20 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மூன்றாம் பாலினத்தை சேர்ந்த பெண்தன்மைக்கு உரிய சான்றிதழ்கள் பெற்றவர்கள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட இரண்டு பணிகளுக்கும் விண்ணப்பிப்போர் நியமன பணியிடத்திற்கும் விண்ணப்பதாரர் குடியிருப்புக்கும் இடையே தூரம் 3 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் 15,10.2018 வரை அலுவலக வேலை நேரங்களில் வழங்கப்படும். அலுவலகத்தால் வரையறுக்கப்பட்ட படிவம் அடங்கிய விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ள தக்கதாகும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.10.2018

மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3c81e728d9d4c2f636f067f89cc14862c/uploads/2018/10/2018100178.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

திங்கள், 1 அக்டோபர், 2018

தமிழக கிராம சபை கூட்டங்களை நடத்துதல் மற்றும் நடத்துவதற்கான நடைமுறை விதிகள், 1999.

தமிழக கிராம சபை கூட்டங்களை நடத்துதல் மற்றும் நடத்துவதற்கான நடைமுறை விதிகள், 1999.

கிராம சபை கூட்டத்தின் அறிவிப்பு, நிகழ்ச்சிநிரல், தீர்மானத்தின் மாற்றம் அல்லது இரத்து செய்தல்

தமிழக கிராம சபை (குறைவெண் உறுப்பினர்கள் மற்றும் கூட்டங்களை நடத்துதல் மற்றும் நடத்துவதற்கான நடைமுறைகள்) விதிகள், 1999.

தமிழ்நாடு கிராம சபை (ஏற்பாடு மற்றும் நடத்துவதற்கான நடைமுறை கூட்டம்) விதிகள், 1999 (The Tamil Nadu Grama Sabha (Procedure for convening and conducting of meeting) Rules, 1999)

தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டத்தின் பிரிவு 242(1) ன் துணை பிரிவு 3, (5) வழங்கிய அதிகாரங்களைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டின் கவர்னர் பின்வரும் விதிகள் அமைக்கிறார்:

அரசாணை (நிலை) 167 எண்.150 உள்ளாட்சித் (C-4) துறை நாள், 17 ஜூலை,1998 (G.O. (Ms) No. 167 Rural Development (C-4) Department, dated 9th August, 1999) இன் படி இந்த விதிகள் தமிழக கிராம சபை (குறைவெண் உறுப்பினர்கள் மற்றும் கூட்டங்களை நடத்துதல் மற்றும் நடத்துவதற்கான நடைமுறைகள்) விதிகள், 1999. (Tamil Nadu Grama Sabha (Quorum and Procedure for Convening and Conducting of Meetings) Rules, 1999 சொல்லப்படுகிறது.

1. குறுகிய தலைப்பு -

இந்த விதிகள் தமிழக கிராம சபை (குறைவெண் உறுப்பினர்கள் மற்றும் கூட்டங்களை நடத்துதல் மற்றும் நடத்துவதற்கான நடைமுறைகள்) விதிகள், 1999.

2. வரையறைகள் (Definitions)

(a) "சட்டம்" என்பது தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம், 1994 (1994 ன் தமிழ்நாடு சட்டம் 21):
(b) இந்த விதிகளில் பயன்படுத்தப்படும் சொற்கள் மற்றும் வெளிப்பாடுகள்,  இதில் வரையறுக்கப்படாதவைகள், சட்டத்தில் கூறப்பட்டுள்ள அர்த்தங்களுக்கு பொருந்தும்.

3. கூட்டங்களுக்கு இடையே காலம் (Duration between the meetings)

(1) கிராம பஞ்சாயத்து ஒவ்வொரு மாதத்திலும் குறைந்தது ஒரு முறை கூட்டப்பட்டு, அலுவல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

(2) அரசு விடுமுறை நாட்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்த உள்ளூர் விடுமுறை நாட்கள் கூட்டம் நடைபெறாது

4. கூட்டத்தின் அறிவிப்பு( Notice of the meeting)

(1) கூட்டம் நடத்தப்படும் நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் குறிப்பாக தேதி மற்றும் நேரம் கூட்டம் நடைபெறும் இடம், கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்கள் உள்ளிட்டவை  குறித்து  குறிப்பிடப்பட  வேண்டும்.

(2) அவசரகாலத்தில், தலைவர் 24 மணி நேரத்திற்குக் குறையாமல் தேதி மற்றும் நேரம் கூட்டத்தின் இடம் மற்றும் அங்கே நடக்கவுள்ள அலுவல்கள், அத்தகைய அவசரத்தன்மைக்கான காரணங்கள் தெளிவாகக் குறிப்பிட்டு கூட்டத்தை கூட்டலாம்.

5. சிறப்பு கூட்டம் (Special meeting)

சிறப்புக் கூட்டத்தில் சட்டத்தின் விதிகளின் படி ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக, கூட்டப்பட்டு முடிவு செய்யப்படும், அத்தகைய கூட்டத்தில் வேறு எந்த விஷயமும்  முன் வைக்கப்படாமல் சிறப்பாகக் குறிப்பிடப்பட்ட விஷயத்தைக் குறித்து மட்டுமே முடிவு செய்யப்படும்.

6. நிகழ்ச்சிநிரல் (Agenda)

(1) கூட்டத்தின் நிகழ்ச்சிநிரல் தலைவரால் தயாரிக்கப்படும். உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்துரையாடலுக்கான நிகழ்ச்சிநிரலைக் கொண்டு வரலாம் மற்றும் தலைவருக்கு விபரங்களை கூட்ட தேதிக்கு ஏறக்குறைய ஏழு நாட்களுக்கு முன் வழங்க வேண்டும். தலைவர், அதன்படி தனது கருத்துக்களை கொண்டு, கூட்டத்தில் கலந்துரையாடலுக்கான நிகழ்ச்சி நிரலை வகுக்கலாம்.

(2) தலைவர், சாதாரண கூட்டத்திற்கான நிகழ்ச்சித்திட்டத்தை தயாரிக்கும் போது, அவைகளுக்கிடையில், பின்வரும் விசயங்களைத் தவிர்க்க இயலாது.

(a) கிராம ஊராட்சியின் அனைத்து கணக்குகளின் கீழ் மாதாந்திர ரசீதுகள் மற்றும் செலவுகளைக் காட்டும் ஒரு அறிக்கை

(b) மாதாந்திர அனைத்து திட்டங்கள், செயல்திட்டங்கள் மற்றும் வேலைகளில் முன்னேற்றம்;

(c) ஒவ்வொரு நிதி ஆண்டிற்கும் அடுத்த ஆண்டில்   மூன்று மாதங்களுக்குள் கிராம பஞ்சாயத்து நிர்வாக அறிக்கை.

(d) கிராம பஞ்சாயத்து விளக்கக் குறிப்புகளுடன் கூடிய தணிக்கை அறிக்கையின் முதல் அறிக்கை பெறப்பட்டவுடன் கிராம பஞ்சாயத்தின் முதல் கூட்டத்தில் அதைத் தாக்கல் செய்யவேண்டும்.

(e) கிராம பஞ்சாயத்துகளின் முதல் கூட்டத்தில் கிராம பஞ்சாயத்துத் திட்டங்களின் திட்டங்கள், திட்டங்கள் மற்றும் பணிகளை ஆய்வு செய்த ஒவ்வொரு உயர் அதிகாரிகளின் சுற்றுப்பயண அறிக்கைகள் மற்றும் ஆய்வு அறிக்கைகள் கிராமப்புற பஞ்சாயத்துக்கான திட்டத்தை உருவாக்குதல்.

மிக முக்கியமான சுருக்கமான அரசு திட்டங்கள்

மிக முக்கியமான சுருக்கமான அரசு திட்டங்கள்

1. UDAY: உஜ்வால் டிஸ்காம் அஷ்யூரன்ஸ் யோஜனா

2. PMMY: பிரதான் மந்திரி முத்ரா யோஜனா

3. PMJDY: பிரதான் மன்ட்ரி ஜான் தன்பன் யோஜனா

4. PMJJBY: பிரதான் மந்திரி ஜீவன் ஜியோதி பீமா யோஜனா

5. PMSBY: பிரதான் மந்திரி சரக்ஷா பீமா யோஜனா

6. ஏபி: அடல் ஓய்வூதிய யோஜனா

7. கே.வி.பீ: கிசான் விகாஸ் பேட்ரா

8. எஸ்.ஏ.பி.ஏ: ஸ்வத் பரத் அபியான்

9. PMSAGY: பிரதான் மந்திரி சன்சாத் ஆதார்ஷ் கிராம் யோஜனா

10. AMRUT: Atal மிஷன் புத்துணர்வு மற்றும் நகர்ப்புற மாற்றம்

11. என்ஜிஎம்: நமிமி கங்கா யோஜனா

12. HRIDAY: பாரம்பரிய நகர அபிவிருத்தி & மேம்பாட்டு யோஜனா

13. முத்திரை: மைக்ரோ யூனிட்ஸ் டெவலப்மென்ட் & ரிபினேன்ஸ் ஏஜென்சி

14. SETU: சுய வேலைவாய்ப்பு மற்றும் திறமை பயன்பாடு

15. NPS: தேசிய ஓய்வூதிய திட்டம்

16. PMKVY: பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா

17. PMKSY: பிரதான் மந்திரி கிருஷி சின்சாய் யோஜனா

18. BBBP யோஜனா: பேட்டி பச்சோவ், பேட்டி பத்ஹோ யோஜனா

19. எஸ்.எஸ்.ஓ: சுகண சிருத்தி யோஜனா

20. பிஎம்டிபிவீ: பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா

21. PMGSY: பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா

22. பிரதமர்: பிரதான் மந்திரி உஜ்ஜ்வல யோஜனா

22. டி.ஜி.கே: டெய்லி ஜி.கே.ஜோன் டெலிகிராம் சேனல்

23. PMGKY: பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா

24. டி.ஐ.சி.ஜி.சி: வைப்புத்தொகை காப்புறுதி மற்றும் கடன் உத்தரவாதக் கூட்டுத்தாபனம்

25. TEC இந்தியா: ஆற்றல்மிகுந்த மற்றும் சுத்தமான இந்தியாவை மாற்றுதல்

26. PACS: முதன்மை விவசாய கடன் சங்கங்கள்

27. சிபிஐ: நுகர்வோர் விலை குறியீட்டு எண்

28. WPI: மொத்த விலை குறியீட்டு எண்

29. சிஏடி: நடப்பு கணக்கு பற்றாக்குறை

30. கே.வி.கேக்கள்: கிருஷி விஜயன் கெண்ட்ராஸ்

31. MSMEs: மைக்ரோ, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள்

32. சிபிஎஸ்: கோர் பேங்கிங் தீர்வு

33. CORE: மையப்படுத்தப்பட்ட ஆன்லைன் ரியல் டைம் பரிமாற்றம்

34. LTIG: நீண்ட கால நீர்ப்பாசன நிதி

தமிழகத்தின் 13வது மாநகராட்சியாக மலரவுள்ளது நாகர்கோவில்


தற்போது நாகர்கோவில் 13வது மாநகரமாக இந்த வரிசையில் இணையவுள்ளது.

 *தமிழகத்தில் தற்போது உள்ள மாநகராட்சிகளின் விவரம்:*
1.சென்னை (மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட ஆண்டு 1688),
2.மதுரை (1971),
3.கோவை (1981),
4.திருச்சி (1994),
5.சேலம் (1994)
6.நெல்லை (1994)
7.வேலூர் (2008)
8.தூத்துக்குடி (2008)
9.திருப்பூர் (2010)
10.ஈரோடு (2010)
11.தஞ்சாவூர் (2013)
12.திண்டுக்கல் (2014).