நாம் வாழும் பூமியை பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்...
விண்வெளியிலிருந்து பார்த்தால் வெள்ளி கிரகமே அதிக பிரகாசமாக தெரியும் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் சூரியனிலிருந்து 5-ஆவது கிரகமாக இருக்கும் பூமியும் வெள்ளிக்கு நிகராக பிரகாசமாகவே தெரியும், நீரினால் சூழப்பட்டு இருப்பதால்தான் அத்தனை பிரகாசம் பூமிக்கு கிடைக்கிறது என்கிறது ஆராய்ச்சிகள்.
1) சுமார் 3,700 மைல்கள் பூமிக்கு அடியில் இருக்கும் மைய பகுதியிலிருந்து கொடுக்கப்படும் அழுத்தமும், டெக்டானிக் ப்ளேட்ஸ் (Tectonic plates) எனப்படும் தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பின் நகர்தலினாலும் ஓராண்டிற்கு சுமார் 1 மில்லியன் நிலநடுக்கங்கள் ஏற்படுவதாகவும், இதில் பல பதிவு செய்யப்படமலேயே போவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
2) எர்த் ஆக்சிஸ் எனப்படும் புவி இருசையை பொருத்தே பருவ காலங்கள் உருவாகின்றன. தற்போது புவி இருசு 23.4 டிகிரியில் இருக்கிறது. ஆனால் இது ஆண்டுகள் போகப் போக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.
3) புவியீர்ப்பு விசை பூமி முழுவதும் ஒரு சீராக அமைவதில்லை. பூமியின் மைய பகுதியிலிருந்து நாம் வசிக்கும் இருப்பிடத்தின் அடிப்படையில்தான் புவியீர்ப்பு விசை உணரப்படுகிறது.
4)97 சதவீத நீரானது கடலாகவும், 3 சதவீதம் நன்னீராகவும் பூமியில் நிறைந்திருக்கிறது.
5)சுமார் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியுடன் மற்றொரு கிரகமும் ஒரே சுற்றுப்பாதையில் சுற்றி வந்தது என்றும், தியா (Theia) எனப்படும் அந்த கிரகத்தோடு மோதிக்கொண்டதில் நிலவு போன்ற கோள் உருவானது என்றும் ஆய்வுகள் சொல்கின்றன.
6)நிலவை விட சிறிய அளவில் மற்றொரு கோளும் பூமியை சுற்றி வந்ததாக தெரிகிறது. தற்போது தினமும் பூமியை நிலவோடு சேர்ந்து எரிகற்களும் சுற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
7)பூமிக்கு வயது 4.6 பில்லியன் ஆண்டுகள் ஆவதாக கணிக்கப்பட்டுள்ளது.
8)பூமியில் 2 ஆண்டுகள் என்பது செவ்வாயில் 1 ஆண்டு ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக