திங்கள், 29 ஜூலை, 2019

மருத்துவமனை தினம் ஜூலை 30.

மருத்துவமனை தினம் ஜூலை 30.

முத்துலட்சுமி ரெட்டி பிறந்த தினமான இன்று, அரசு மருத்துவ மனைகளில் ‘மருத்துவமனை தினம்’ கொண்டாடப்படுகிறது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த தினமான ஜூலை 30-ம் தேதி மருத்துவமனை தினமாக கொண்டாடப்பட உள்ளது. புதுக் கோட்டை மாவட்டத்தில் பிறந்த முத்துலட்சுமி ரெட்டி, சென்னை மருத்துவக் கல்லூரியில் 1907-ம் ஆண்டு படித்தார். சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ மனை தொடங்க காரணமாக இருந்துள்ளார். பல்வேறு சமூகப் பணிகளை செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் முதல் பெண் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

தி இந்து காமதேனுவுக்கு நன்றிகள்!!!


தி இந்து காமதேனுவுக்கு  நன்றிகள்!!!

தி இந்து குழுமத்தில் இருந்து  வெளிவரும் முழுமையான வார இதழ் காமதேனு வில், இந்த வாரம் (ஆகஸ்ட் 04 -2019). நமது மதி கல்வியகம் பிளாகர், (Mathi Academy Blogger) மற்றும் எம்பிஎம் அகடாமி வாட்ஸ்-அப் குழுக்கள்,( MBM Academy Whatsapp Groups) களின், செயல்பாடுகள் மற்றும் சேவைகள் பற்றி ஒளிர் "மண்ணில் இப்படி  மனிதரும் உண்டோ" என்ற பகுதியில் " வாட்ஸ்- அப்  டீச்சர், போட்டித்தேர்வுகளுக்கு வழிகாட்டும் புவனேஸ்வரி" என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டு, பாராட்டுக்களும், அங்கீகாரமும்
வழங்கிய காமதேனு வார இதழுக்கும்,நிருபர் என்.சுவாமிநாதன், புகைப்பட கலைஞர் மு.லெட்சுமி அருண்
அவர்களுக்கும் நமது மதி கல்வியகம்  மற்றும் எம்பிஎம் அகடாமி வாட்ஸ்-அப் குழுக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.


https://mathiacademy.blogspot.com/?m=1

சனி, 20 ஜூலை, 2019

சட்டமன்றத்தில் தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மான நாள் 18.7.1967


சட்டமன்றத்தில் தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மான நாள் 18.7.1967

1956ஆம் ஆண்டு மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, ஹைதராபாத்தும் இதர பகுதிகளும் ‘ஆந்திரப் பிரதேசம்’ என்றும், திருவிதாங்கூரும் இதரப் பகுதிகளும் ‘கேரளம்’ என்றும் அழைக்கப்பட்டது.

ஆனால், சென்னை மாகாணமும் இதர பகுதிகளும் தமிழ்நாடாக மாறவில்லை. சரியாக 11 ஆண்டுகள் கழித்து அண்ணா முதல்வரான பிறகே சென்னை மாகாணம் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. இங்கு மொழி வழித் தேசிய உணர்வை ஊட்ட மறுத்த இந்திய தேசியமும், திராவிடத் தேசியமும் தமிழர்களை விழிப்படைய செய்யாமல் தூங்க வைத்ததே இதற்கெல்லாம் அடிப்படைக்காரணம்.

தமிழ்நாடு என்று பெயர் சூட்டக்கோரி 1956ஆம் ஆண்டு 73 நாட்கள் பட்டினிப் போராட்டம் நடத்தி உயிர் ஈகம் செய்த சங்கரலிங்கனாரின் ஈகத்தை தமிழக காங்கிரசுக்கட்சி ஏகடியம் செய்த நிலையில், அக்கோரிக்கைக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்தவர் ம.பொ.சிவஞானம்.

25.12.1960இல் சென்னை கோகலே மன்றத்தில் தமிழ்நாடு பெயர் மாற்றச் சிறப்பு மாநாட்டை முதன்முதலாக ம.பொ.சி. நடத்தினார். அந்த மாநாட்டிலே காந்தியார் நினைவு நாளில் 30.1.1961இல் மாநில அரசு அலுவலகங்கள் முன்பு தமிழரசுக் கழகம் சார்பில் சத்தியாகிரகப் போர் நடத்தப் போவதாக அறிவிப்பொன்றை வெளியிட்டார்.

அப்போது ஆதரவும் எதிர்ப்பும் தோன்றின. தமிழ் மன்றங்கள், உள்ளாட்சி மன்றங்கள், கல்லூரிகள் மற்றும் தமிழக ஏடுகளான தினத்தந்தி, தமிழ்நாடு, ஆனந்த விகடன் குமுதம், தினமலர் ஆகியவை தமிழ்நாடு போராட்டத்திற்கு ஆதரவளித்தன.
ஆனால், காமராசர் தலைமையிலான காங்கிரசு அரசு அதனை கடுமையாக எதிர்த்ததோடு பெயர் மாற்றத் தீர்மானம் போட்ட உள்ளாட்சி அமைப்புகளை கலைத்து விடுவதாக மிரட்டல் விடுத்தது. தினமணி, மெயில், இந்து போன்ற ஏடுகள் கண்டனம் செய்து தலையங்கம் தீட்டின.

1961சனவரி 30ஆம் நாள் போராட்டம் தொடங்கியது. சென்னை, காஞ்சி, குடந்தை, வேலூர், திருச்சி, மதுரை, நாகர் கோயில், பழனி, தூத்துக்குடி, காரைக்குடி, திருவள்ளூர் ஆகிய ஊர்களில் போராட்டம் நடத்திய தமிழரசுக் கழகத் தலைவர்களாகிய நாடகக்கலைஞர் ஒளவை சண்முகம், கு.சா.கிருஷ்ண மூர்த்தி, கவிஞர் கா.மு.செரீப், கு.மா.பாலசுப்பிரமணியம், இயக்குநர் ஏ.பி.நாகராசன், புலவர் கீரன், கோ.கலிவரதன் ஆகியோர் உள்பட 1700 பேர் கைது செய்யப்பட்டனர்.

அன்றைக்கு சட்ட மன்றத்தில் நுழைய முயன்ற காமராசரின் காரை மறித்தும் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் மூன்று நாட்கள் கழித்து, அமைச்சர்களுக்கு கறுப்புக் கொடி காட்டப்படும் என்ற ம.பொ.சி. அறிவிப்பும், பிரஜா சோசலிஸ்ட் சட்ட மன்ற உறுப்பினர் சின்னத்துரை கொண்டு வந்த முதல் பெயர் மாற்றத் தீர்மானமும், அவருக்கு ஆதரவாக தி.மு.க. கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வெளிநடப்பும் காமராசர் அரசை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது.

24.2.1961இல் நடந்த சட்டமன்ற விவாதத்திற்குப் பிறகு, சென்னை மாகாணம் இனிமேல் ஆங்கிலத்தில் “MADRAS STATE” என்றும், தமிழில் “தமிழ்நாடு” என்றும் அழைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தமிழிலும், ஆங்கிலத்திலும் ‘தமிழ்நாடு’ என்று ஒரே பெயரில் மாற்றம் செய்வதற்கு சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி, அதனை அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தும்படி தில்லி அரசைக் கேட்டுப் பெறுவதற்குப் பதிலாக இப்படியொரு சமரசத்தை காங்கிரசு அரசு அன்றைக்கு மேற்கொண்டது.

அதன் பிறகு தமிழர்களின் விருப்பமான அரசியல் சட்டத் திருத்தக் குரலுக்கு தமிழரல்லாத ஒருவர் வலு சேர்த்தார். அவர் பெயர் பூபேஷ் குப்தா. அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் மேலவை உறுப்பினர். 1962 ஆம் ஆண்டு தில்லி பாராளுமன்ற மேலவையில் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதாவை அவர் தான் முதன் முதலில் கொண்டு வந்தார். அவர் கொண்டு வந்த மசோதாவை அப்போது முதன்முறையாக மேலவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணாதுரை ஆதரித்துப் பேசினார். தமிழக காங்கிரசின் ஆதரவில்லாத காரணத்தால் பூபேஷ்குப்தாவின் மசோதா நேரு அரசால் தோற்கடிக்கப்பட்டது.

1964ஆம் ஆண்டு தி.மு.க.வைச் சேர்ந்த இராம.அரங்கண்ணல் மீண்டும் பெயர் மாற்றத் தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்த போது “அது முடிந்த போன விசயம்” என்று காங்கிரசு அரசு கைகழுவியது.

1952 முதல் 1967 வரை தமிழகத்தில் ஆட்சி நடத்திய காங்கிரசு கட்சி ‘தமிழ்நாடு’ பெயர் மாற்றக் கொரிக்கையை நிராகரித்ததன் முலம் அது வரலாற்றில் தீராப்பழியை தேடிக்கொண்டது.

1967இல் அண்ணா ஆட்சிக்கு வந்த போது தான் தமிழர்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். தமிழ்நாடு என்பதைக் கூட ஆங்கிலத்தில் எப்படி அழைக்க வேண்டும் என்பதில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, தமிழ்நாடு என்பதை TAMIL NAD என்று தான் அழைக்க வேண்டும் என்று இராசாசி அறிக்கை விட்டார். அவரின் சீடர் என்று அறியப்பட்ட ம.பொ.சி. இதனை மறுத்து, “THAMIZH NADU” என்று தான் அழைக்க வேண்டும் என்று திருத்தம் கோரினார். இதனை மறுத்த அண்ணா ‘ழ’ கர உச்சரிப்பை வடக்கே உள்ளவர்கள் பிழையின்றி ஒலிக்க முடியாது என்பதால் “THAMIZH NADU” க்கு பதிலாக “TAMIL NAD” என்று அழைப்போம் என்று கூறினார்.

அதற்கு மறுமொழியாக ம.பொ.சி. அவர்கள் “TAMIL” கூட இருக்கட்டும், ‘உ’ கர உச்சரிப்பை என்னால் விட்டுக் கொடுக்க முடியாது. “NAD” என்பதை “NADU” என்று தான் அழைக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறிடவே, அண்ணாவும் இதனை மனமுவந்து ஏற்றுக் கொண்டார்.

தமிழக சட்டமன்றத்தில் அண்ணா தீர்மானம் கொண்டு வந்த போது காங்கிரசு கட்சி அப்போது வேறுவழியின்றி ஒப்புக் கொண்டது. ம.பொ.சி. அண்ணாவின் தீர்மானம் குறித்து ‘எனது போராட்டம்’ நூலில் கூறுகிறார்:
“தீர்மானம் எதிர்ப்பின்றி பேரவைத் தலைவர் அறிவித்த போது, முதல்வர் அண்ணா அவர்கள் தமிழ்நாடு என்று கூற, பேரவை உறுப்பினர்கள் அனைவரும் வாழ்க என்று உரக்க ஒலித்தனர். இப்படி, மும்முறை ஒலிக்கப்பட்டது. அப்போது என் உடம்பு சிலிர்த்தது.”
ஆம்! ஈகி சங்கரலிங்கனாரின் கனவு பலித்ததை எண்ணி சிலிர்க்காத தமிழர் எவரும் உண்டோ?
நன்றி தி இந்து தமிழ்.

வெள்ளி, 19 ஜூலை, 2019

தமிழ்நாடு நாள் நவம்பர் 1ம் தேதி,தமிழக அரசு அறிவிப்பு!




தமிழ்நாடு நாள் நவம்பர் 1ம் தேதி,தமிழக அரசு அறிவிப்பு!


நவம்பர் 1-ம் தேதி இனி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சிறப்பான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

50'களில் நடந்த சம்பவம் இது.. 'மதராஸ் மாகாணம்' என்றா பெயர் இருப்பது... கூடாது... கூடவே கூடாது.. தமிழ்நாடு என பெயர் மாற்றுங்கள்" என்று கூறி உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தவர் தியாகி சங்கரலிங்கனார். ஒருநாள் இல்லை, இரண்டு நாள் இல்லை.

மொத்தமாக 75 நாள். மொழிக்காக 75 நாள் உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்ட ஒரே போராளி இவர்தான். இத்தனைக்கும் இவர் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர். இவர் உண்ணாவிரதம் இருந்த ஒவ்வொரு நாளும் செய்திகள் தீப்பொறியாக நாடு முழுவதும் பரவி விழுந்தன. ஒவ்வொரு நாளும் காங்கிரஸ் கட்சிக்கு பகீர் பகீர்தான்.

 தலைவர்கள்
சங்கரலிங்கம்
நாள் ஆக ஆக ஒவ்வொரு தலைவராக ஓடி வந்தார்கள். 'இந்த உண்ணாவிரதம் வேண்டாமே... நிறுத்தி கொள்ளுங்களேன்' என்று ம.பொ.சிவஞானம்., காமராசர், கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா என கோரிக்கை மேல் கோரிக்கை விடுத்தும், அசைந்து கொடுக்கவில்லை சங்கரலிங்கம்.

வேண்டுகோள்
ஏக்கம்
இறுதியாக, சங்கரலிங்கம் அறிஞர் அண்ணாவிடம், 'அண்ணா! நீங்களாவது என்னுடைய ‘தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையை' நிறைவேற்ற சொல்லுங்களேன்... ஒருவேளை நான் இறந்த பிறகாவது என் கோரிக்கையை நிறைவேற்றுவார்களா? ' என்று ஏக்கமாக கேட்டார். 76-வது நாள் உடம்பு மோசமாகி ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உயிரும் பிரிந்துவிட்டது. அப்போது அவருக்கு வயதோ 78.

அழுத்தங்கள்
சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதமும், கோரிக்கையும், மறைவும் தமிழக அரசியலை அதிர்ச்சிக்கும், சலசலப்புக்கும் உண்டாக்கியது. ‘தமிழ்நாடு' என்று பெயர் சூட்ட அழுத்தங்கள் தரப்பட்டன. ஆனால் காங்கிரஸ் அரசு அதற்கும் செவிசாய்க்கவில்லை. 1967 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற அண்ணா தலைமையிலான திமுக அரசு, ‘தமிழக அரசு' என்று பெயரை மாற்றி வரலாறு படைத்தது.

தீர்மானம்
அதன் தொடர்ச்சியாக 1968 ஜூலை 18-ம் தேதி மெட்ராஸ் ஸ்டேட் என்பதை ‘தமிழ்நாடு' என பெயர் மாற்றி தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. அதே ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசின் பெயர் மாற்ற சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

நவம்பர் 1
பிறந்த நாள்
அது மட்டுமல்ல, நவம்பர் 1ம் தேதிதான் மொழி வழி மாநிலங்கள் பிறந்தன. ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்திலிருந்து கர்நாடகம், கேரளம் உள்ளிட்டவை பிரிந்து சென்றன. அந்த மாநிலங்களில் இந்த நாளை சிறப்பாக மாநிலம் பிறந்த நாளாக கொண்டாடி வருகின்றனர். இதன் அடிப்படையிலும் நவம்பர் 1ம் தேதியை தமிழ்நாடு பிறந்த நாளாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.

அறிவிப்பு
தமிழ்நாடு நாள்
இந்த வரலாற்று சம்பவத்தின் அடுத்த கட்டத்துக்கு தமிழகத்தை கொண்டு சென்றுள்ளார் நம் தமிழக நம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இன்று ஆம்.. இன்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் பேசினார். அப்போது, 'ஆண்டுதோறும் நவம்பர் 1 ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்' என்ற மாபெரும் சிறப்பு அறிவிப்பினை வெளியிட்டார். இதற்கு அவையில் உறுப்பினர்கள் அனைவரும் கரகோஷம் எழுப்பி மகிழ்ந்தனர்.


தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்ட நாள்  18-07-1967.

சென்னை மாகாணத்திலிருந்து மொழிவாரி மாநிலங்களாக ஆந்திரா, கர்நாடகா, கேளரா, ஒடிசா ஆகியவற்றின் பகுதிகள் பிரிக்கப்பட்டபிறகு, நம்முடைய நிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்ட வேண்டும் என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

தமிழ்நாடு என்கிற பெயர் மாற்றத்தை வலியுறுத்தி தியாகி சங்கரலிங்கனார் 1956ஆம் ஆண்டு 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்தார். ஜீவானந்தம் போன்ற பொதுவுடைமை இயக்கத் தலைவர்கள், தி.மு.க நிறுவனர் அண்ணா, தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சி. உள்ளிட்டோர் சங்கரலிங்கனாரின் உயர்ந்த  நோக்கத்தை ஆதரித்த அதே வேளையில், சாகும்வரை உண்ணாவிரதம் என்பதை கைவிட வலியுறுத்தினர். எனினும், தனது கொள்கையில் உறுதியாக இருந்து உண்ணாவிரதத்தைத் தொடர்ந்த சங்கரலிங்கனார் அக்டோபர் 31ல் உயிர்நீத்தார்.

1957ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க முதல்முறையாக வெற்றி பெற்று, பேரவையில் நுழைந்தபோது தமிழ்நாடு பெயர் மாற்றத்தை வலியுறுத்தியது. பெயர் மாற்றம் செய்வதால், சர்வதேச அளவில் சிக்கல்கள் ஏற்படும் எனக் காரணம் தெரிவித்த, காங்கிரஸ் அரசு அதனை நிறைவேற்றவில்லை. 1967ல் அண்ணா தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்தபிறகுதான் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டது. அதற்கானத் தீர்மானத்தை பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார் முதலமைச்சர் அண்ணா.

 “தமிழ்நாடு என்ற பெயர் இருந்தால் வெளிநாடுகளில் உள்ளவர்கள் அறிந்துகொள்ள மாட்டார்கள் என்பது மட்டுமல்ல, நம்முடைய தொழில் அமைச்சராக முன்பிருந்த திரு.வெங்கட்ராமன் அவர்கள் ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் இடையே செய்துகொள்ளக்கூடிய ஒப்பந்தம் எல்லாம் திருத்தி எழுதப்படவேண்டி வரும். அதனால் சிக்கல்கள் நாடுகளுக்கெல்லாம் விளையும் என்றெல்லாம் சொன்னார்கள். அதிலிருந்து அவர்கள் வெளிநாடுகளெல்லாம் போய் வந்தார்கள் என்பதைத்தான் கவனப்படுத்துகிறார்களே தவிர, உண்மையாக சிக்கல்கள் இருக்கின்றனவா என்பதைக் கவனப்படுத்தவில்லை. மதிப்பிற்குரிய நண்பர் பாலசுப்ரமணியம் எடுத்துச்  சொன்னபடி, ‘கோல்ட் கோஸ்ட்’ என்பது ‘கானா’ ஆகிவிட்டது. அதனால் எந்தவிதமான சர்வதேச சிக்கல்களும் ஏற்பட்டுவிடவில்லை. தமிழ்நாடு தனிநாடாகி இந்த பெயரை இடவில்லை. இந்தியாவில் ஒரு பகுதியாக இருந்துகொண்டிருந்த பெயரை இடுவதால் இதில் சர்வதேச சிக்கல்கள் எழுவதற்கு நியாயமில்லை. ஆகவே, இந்தத் தீர்மானத்தை அனைவரும் தங்கள் தங்கள் கட்சியில் சார்பில் ஆதரிக்க வேண்டும் என்பதை ஒரு கடமையுணர்ச்சியாகக் கொண்டதற்காக மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தத் தீர்மானம் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் இந்த அவையில் நிறைவேற்றப்பட இருக்கிறது என்று கருதுகிறேன். அப்படிப்பட்ட ஒரு வெற்றி கிடைக்குமானால் அது இன்று (தி.மு.)கழகத்திற்கு  வெற்றியல்ல; (ம.பொ.சி) தமிழரசுக் கழகத்திற்கு வெற்றியல்ல, மற்ற கட்சிகளுக்கு வெற்றியல்ல- இது தமிழுக்கு வெற்றி, தமிழருக்கு வெற்றி, தமிழ் வரலாற்றுக்கு வெற்றி, தமிழ்நாட்டுக்கு வெற்றி என்ற விதத்தில் அனைவரும் இந்த வெற்றியிலே பங்குகொள்ளவேண்டும்.


நண்பர் ஆதிமூலம் அவர்கள், “தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்காகத்தன்னைத்தானே தியாகம் செய்துகொண்ட சங்கரலிங்கனார் அவர்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும்” என்று குறிப்பிட்டார்கள். அவருடைய எண்ணங்கள் இன்றைய தினம் ஈடேறத்தக்க நிலை கிடைத்திருப்பதும் அந்த நிலையை உருவாக்குவதிலே நாம் அனைவரும் பங்கு பெற்றிருக்கிறோம் என்பதும் நமக்கெல்லாம், நம் வாழ்நாள் முழுவதும் பெருமைப்படத்தக்க காரியமாகும்.

நம்முடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் நெடுங்காலத்திற்குப் பிறகு நம்முடைய இல்லங்களிலே அமர்ந்து பேசிக்கொள்கின்ற நேரத்தில், “என்னுடைய பாட்டனார் காலத்திலேதான் நம்முடைய நாட்டுக்குத் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் இடப்பட்டது என்று பெருமையோடு சொல்லிக் கொள்ள இருக்கிறார்கள்.


-என்று அறிஞர் அண்ணா 18-7-1967 அன்று சட்டமன்றத்தில் இவ்வாறு பேசினார். இதன்பின் தீர்மானம் பேரவையின் முடிவுக்கு விடப்பட்டு, எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சியினராலும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் அண்ணா அவர்கள், “வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்ற இந்த நாளில், ‘தமிழ்நாடு’ என்று நான் சொன்னதும், ‘வாழ்க’ என்று அவை உறுப்பினர்கள் சொல்லுவதற்கு பேரவைத் தலைவரின் அனுமதி பெற்றார். அதன்படி, அண்ணா அவர்கள் தமிழ்நாடு என்று மூன்று முறை சொல்ல, ஒவ்வொரு முறையும் அனைத்து உறுப்பினர்களும் வாழ்க என முழக்கமிட்டனர்.  1967 நவம்பர் 23 அன்று மத்திய அரசு இந்த தீர்மானத்திற்கு ஏற்பளித்தது.

தமிழ்நாடு என்ற பெயர் 50 ஆண்டுகளாக உலகெங்கும் பரவியுள்ளது. எவ்வித சர்வதேச சிக்கலும் எழவில்லை. அதுபோலவே, மதறாஸ் என அழைக்கப்பட்ட தமிழ்நாட்டின் தலைநகரை ‘சென்னை’ என ஆங்கிலம் உள்பட அனைத்து மொழிகளிலும் மாற்றியது கலைஞர் தலைமையிலான (1996-2001) தி.மு.க. அரசு. இன்று எல்லோருடைய உதடுகளும் சென்னை என்றே உச்சரிக்கின்றன. தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த சங்கரலிங்கனாருக்கு கலைஞர் ஆட்சிக்காலத்தில் சென்னையில் மணிமண்டம் எழுப்பப்பட்டது.

இந்த மண்ணின் பண்பாட்டு அடையாளத்தை உலகெங்கும் உரத்துச் சொல்லும் வகையில்தான் நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டது. பெயரைக் காப்பாற்றியதுபோலவே மாநிலத்தின் உரிமைகளைக் காப்பாற்ற வேண்டிய கட்டத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். தமிழகம் என சுருக்கமாகக் குறிப்பிடுவதை இயன்றவரையில் தவிர்த்து, தமிழ்நாடு எனப் பெருமிதத்துடன் குறிப்பிட வேண்டிய கடமையும் தமிழர்களுக்கு இருக்கிறது.
நன்றி நக்கீரன்.ஒன்இந்தியா

வியாழன், 18 ஜூலை, 2019

தென்காசி, செங்கல்பட்டு புதிய மாவட்டங்கள் உதயம்.


தென்காசி, செங்கல்பட்டு புதிய மாவட்டங்கள் உதயம்.

தமிழக முதல்வர் அறிவிப்பு.

தென்காசி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று அதிமுக கூட்டணிக் கட்சியான புதிய தமிழகம் கட்சி கடந்த 1998 முதல் கோரிக்கை வைத்து வந்தனர்.
தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர், வாசுதேவநல்லூர் பகுதியை மேம்படுத்த தென்காசி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ.வாக இருந்த  புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சட்டமன்றத்தில் குரல் கொடுத்துள்ளார்.
சங்கரன்கோவில் அதிமுக  எம்.எல்.ஏ. கருப்பசாமி, மதிமுக எம்.எல்.ஏ. டாக்டர் சதன் திருமலைக்குமார், திமுக எம்.எல்.ஏ. டாக்டர் பூங்கோதை, சமக எம்.எல்.ஏ. ஆர்.சரத்குமார் உள்ளிட்டோரும் தென்காசி மாவட்டம் உருவாக்க வேண்டுமென சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.
தேர்தல் வாக்குறுதியாக அதிமுக, திமுக இரு கட்சிகளும் தென்காசி மாவட்டம் குறித்து உறுதி கொடுத்துள்ளனர்.

புதிய வரையறை
திருநெல்வேலி மாவட்டம் :

*சீதபற்பநல்லூர்*
*திசையன் விளை*
*தேவர் குளம்*
*கயத்தார்*
*நாங்குநேரி*
*வள்ளியூர்*
*களக்காடு*
*அம்பை*

புதிய வரையறை
தென்காசி மாவட்டம் :

*ஆலங்குளம்*
*தென்காசி*
*கடையநல்லூர்*
*புளியங்குடி*
*சங்கரன்கோவில்*
*வாசுதேவநல்லூர்*
*சிவகிரி*

புதன், 17 ஜூலை, 2019

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாதிகளையும் தமிழ்நாடு அரசு பட்டியலிட்டுள்ளது.


தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாதிகளையும் தமிழ்நாடு அரசு பட்டியலிட்டுள்ளது. இவை முறையே 1. ஆதிதிராவிடர் பட்டியல், 2. பழங்குடியினர் பட்டியல், 3. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல், 4. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் (இஸ்லாமியர்), 5. மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பட்டியல் 6. சீர்மரபினர் பட்டியல் 7. இதர சாதியினர் என்று பிரிக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் பட்டியல்

1. ஆதி ஆந்திரர்
2. ஆதி திராவிடர்
3. ஆதி கர்நாடகர்
4. அஜிலா
5. அருந்ததியர்
6. அய்யனார் (சாதி) (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
7. பைரா
8. பகூடா
9. பண்டி
10. பெல்லாரா
11. பரதர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
12. சங்கிலியர், சக்கிலியன்
13. சாலாவாடி
14. சாமார், மூச்சி
15. சண்டாளா
16. செருமான்
17. தேவேந்திர குலத்தார்
18. டோம், தொம்பரா, பைதி, பானே
19. தோம்பன்
20. கொடகலி
21. கொடடா
22. கோசாங்கி
23. ஹொலையா
24. ஜக்கலி
25. ஜம்புவுலு
26. கடையன்
27. கக்காளன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
28. கல்லாடி
29. கணக்கன், பாடண்ணா (நீலகிரி மாவட்டம்)
30. கரிம்பாலன்
31. கவரா (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
32. கோலியன்
33. கூசா
34. கூத்தன், கூடன்(கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
35. குடும்பன்
36. குறவன், சித்தனார்
37. மடாரி
38. மாதிகா
39. மைலா
40. மாலா
41. மன்னன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
42. மாவிலன்
43. மோகர்
44. முண்டலா
45. நலகேயா
46. நாயாதி
47. பாதண்ணன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
48. பகடை
49. பள்ளன்
50. பள்ளுவன்
51. பம்பாடா
52. பாணன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
53. பஞ்சமா
54. பன்னாடி
55. பன்னியாண்டி
56. பரையன், பறயன், சாம்பவார்
57. பரவன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
58. பதியன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
59. புலையன்
60. புதிரை வண்ணான்
61. ராணேயர்
62. சாமாகாரா
63. சாம்பான்
64. சபரி
65. செம்மான்
66. தாண்டன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
67. தோட்டி
68. திருவள்ளுவர்
69. வல்லோன்
70. வள்ளுவன்
71. வண்ணான் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
72. வாத்திரியன்
73. வேலன்
74. வேடன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
75. வெட்டியான்
76. வேட்டுவன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

பழங்குடியினர் பட்டியல்

1. ஆதியன்
2. ஆரநாடான்
3. எரவள்ளன்
4. இருளர்
5. காடர்
6. கம்மாரா (கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)
7. காணிக்கர், காணிக்காரன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
8. கணியர், காணியான், கணியன்
9. காட்டு நாயகர், காட்டு நாயகன்
10. கொக்கவேலன்
11. கொண்டகாப்புகள்
12. கொண்டாரெட்டிகள்
13. கொராகா
14. கோடா (கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)
15. குடியா, மேலக்குடி
16. குறிச்சன்
17. குறும்பர் (நீலகிரி மாவட்டத்தில்)
18. குறுமன்கள்
19. மகாமலசார்
20. மலை அரையன்
21. மலைப் பண்டாரம்
22. மலை வேடன்
23. மலைக்குறவன்
24. மலசார்
25. மலயாளி (தர்மபுரி, வேலூர், புதுக்கோட்டை, சேலம், கடலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில்)
26. மலயக்கண்டி
27. மன்னன் (சாதி)
28. மூடுகர், மூடுவன்
29. முதுவர், முத்துவன்
30. பள்ளோயர், பள்ளேயன்
31. பள்ளியன்
32. பள்ளியர்
33. பாணியர்
34. சோலகா
35. தோடர் (கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)
36. உரளி

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல்

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபாண்மை நலத்துறையின் அரசாணைகள் எண்:85, நாள் 29-07-2008, எண்:97, நாள் 11-09-2008 மற்றும் எண்:37, நாள்: 21-05-2009

1. அகமுடையார் (தொழுவ அல்லது துளுவவெள்ளாளர் உட்பட )
2. அகரம் வெள்ளாஞ் செட்டியார்
3. ஆழ்வார், அழவர் மற்றும் அளவர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
4. சேர்வை (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் நீங்கலாக)
5. அரயர், நுலயர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
6. அர்ச்சகர வேளாளர்
7. ஆர்யவதி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
8. ஆயிர வைசியர்
9. படகர்
10. பில்லவா
11. பொண்டில்
12. போயர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நீலகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் நீங்கலாக), பெத்தபோயர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை நீங்கலாக), ஒட்டர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் நீங்கலாக), கல் ஒட்டர்கள் (காஞ்சிபுரம், திருவள்ளூர், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாமக்கல், சேலம் மாவட்டங்கள் நீங்கலாக), நெல்லூர்பேட்டை ஒட்டர்கள் (வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் நீங்கலாக), சூரமாரி ஒட்டர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டம் நீங்கலாக)
13. சக்காலா (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்கள் நீங்கலாக)
14. சவலக்காரர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
15. செட்டு அல்லது செட்டி (கோட்டார் செட்டி, ஏலூர் செட்டி, பாத்திரச் செட்டி, வேலூர் செட்டி, புதுக்கடை செட்டி உட்பட) (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
16. சௌத்திரி
17. கல்வி நிலையங்களில் இருக்கைகள் மற்றும் அரசுப்பணிகளின் இருக்கைக்களுக்கும் இட ஒதுக்கீடு பெறும் நோக்கத்திற்காக தலைமுறையைப் பொருட்படுத்தாமல் ஆதிதிராவிடர் வகுப்பினர்களிலிலிருந்து கிறித்துவராக மாறியவர்கள்.
18. தென்னிந்திய திருச்சபை (முன்னாள் தெ.இ.கி.ஒ) (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
19. தொங்க தாசரிகள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சென்னை, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்கள் நீங்கலாக)
20. தேவாங்கர், சேடர்
21. தொம்மார்கள் (புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் நீங்கலாக), தோமர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் நீங்கலாக)
22. ஏனாதி
23. எழவதி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
24. எழுத்தச்சர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
25. எழுவா (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
26. கங்கவார்
27. கவரா, கவரை மற்றும் வடுகர் (வடுவர்) (கம்மா, காப்பு பலிஜா மற்றும் ரெட்டி இல்லாத பிற)
28. கௌண்டர்
29. கௌடா (கம்மாளர், கலாலி மற்றும் அனுப்பக் கவுண்டர்)
30. ஹெக்டே
31. இடிகா
32. இல்லத்துப்பிள்ளைமார், இள்ளுவர்(ஈழவர்), எழுவர், இல்லத்தார்
33. ஜெட்டி
34. ஜோகிகள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், மதுரை, தேனி, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் நீங்கலாக)
35. கப்போரா
36. கைக்கோளர், செங்குந்தர்
37. காலாடி (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலுர் மாவட்டங்கள் நீங்கலாக)
38. களரி குரூப், களர் பணிக்கர் உட்பட (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
39. கலிங்கி
40. கள்ளர், ஈசநாட்டுக் கள்ளர், கந்தர்வ கோட்டை கள்ளர்கள் உட்பட (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்
டங்கள் நீங்கலாக) கூத்தப்பால் கள்ளர்கள் (புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் நீங்கலாக), பிரமலைக் கள்ளர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் நீங்கலாக), பெரிய சூரியர் கள்ளர்கள் ( திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் நீங்கலாக)
41. கள்ளர் குலத் தொண்டைமான்
42. கால்வேலிக் கௌண்டர்
43. கம்பர்
44. கம்மாளர் அல்லது விஸ்வகர்மா (விஸ்வகர்மாலா, தட்டார், பொற்கொல்லர், கன்னார், கருமார், கொல்லர், தச்சர், கல்தச்சர், கம்சாலா மற்றும் விஸ்வபிராமணர் உட்பட)
45. கணி, கணிசு, கனியர், பணிக்கர்
46. கனியால வேளாளர்
47. கன்னட சைனீகர், கன்னடியார் (மாநிலம் முழுவதும்) மற்றும் தசபலான்ஜிகா (கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில்)
48. கன்னடியநாயுடு
49. கற்பூர செட்டியார்
50. கரூணீகர் (சீர் கருனீகர், ஸ்ரீ கருணீகர், சரடு கரூணீகர், கைகட்டிக் கரூணீகர், மாத்து வழ கணக்கர், சோழிக் கணக்கர் மற்றும் சுண்ணாம்பு கரூணீகர்)
51. காசுக்கார செட்டியார்
52. கடேசர், பட்டம்கட்டி
53. கவுத்தியர்
54. கேரளமுதலி
55. கார்வி
56. கத்ரி
57. கொங்கு வைணவர்
58. கொங்கு வேளாளர்கள்(வெள்ளாளக் கௌண்டர், நாட்டுக் கௌண்டர், நரம்புக் கட்டிக் கௌண்டர், திருமுடி வேளாளர், தொண்டு வேளாளர், பாலக் கௌண்டர், பூசாரிக் கௌண்டர், அனுப்ப வேளாளக் கௌண்டர், குரும்பக் கௌண்டர், படைத்தலைக் கௌண்டர், செந்தலைக் கௌண்டர், பாவலன்கட்டி வெள்ளாளக் கௌண்டர், பால வெள்ளாளக் கௌண்டர், சங்கு வெள்ளாளக் கௌண்டர் மற்றும் ரத்தினகிரிக் கௌண்டர் உடபட)
59. கோப்பல வேலம்மா
60. கோட்டேயர்
61. கிருஷன்வாகா (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
62. குடிகார வேளாளர்
63. குடும்பி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
64. குக வேளாளர்
65. குஞ்சிடிகர்
66. லம்பாடி
67. இலத்தீன் கத்தோலிக்கர்கள் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
68. லிங்காயத் (ஜங்கமா)
69. மராட்டிய (பிராமணரல்லாதோர்) நாம்தேவ் மராட்டியர் உட்பட
70. மலயர்
71. மாலி
72. மானியகார்
73. மறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் நீங்கலாக) கருமறவர்கள், அப்பனாடு கொண்டையம் கோட்டை மறவர் உட்பட (சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள் நீங்கலாக) மற்றும் செம்பனாடு மறவர்கள் (சிவகங்கை, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் நீங்கலாக)
74. மூன்று மண்டை எண்பத்துநாலு (84) ஊர் சோழிய வெள்ளாளர்கள்
75. மூப்பன்
76. முத்துராசா, முத்துராச்சா, முத்திரியர், முத்தரையர்
77. நாடார்,சாணார் மற்றும் கிராமணி (கிறித்துவ நாடார், கிறித்துவ சாணார் மற்றும் கிறித்துவ கிராமணி உட்பட)
78. நகரம்
79. நாயக்கர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
80. நன்குடி வேளாளர்
81. நாஞ்சில் முதலி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
82. ஓடர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
83. ஓதியா
84. ஊற்று வளநாட்டு வேளாளர்
85. ஓ.பி.எஸ்.வேளாளர்
86. உவச்சர்
87. பய்யூர் கோட்ட வேளாளர்
88. பாமுலு
89. பாணர் (இந்த இனம் ஆதிதிராவிட வகுப்பினர்களாக இருக்கும் (கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக)
90. பாணிசைவன் (வீரக்கொடி வெள்ளாளர் உட்பட)
91. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கதிகாரர்
92. [பன்னிரண்டாம் செட்டியார்]] அல்லது உத்தமச் செட்டியார்
93. பார்க்கவகுலம் (சுரிதிமார், நத்தமார், மலைமார், மூப்பனார், நைனார் உட்பட)
94. பெருக்கி (பெரிகே, பலிஜா உட்பட)
95. பெரும்கொள்ளர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
96. பொடிகார வேளாளர்
97. பூலுவ கவுண்டர்
98. பொராயா
99. புலவர்(கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களில்)
100. புள்ளுவர் அல்லது பூலூவர்
101. புசலா
102. ரெட்டி (கஞ்சம்)
103. சாதுச் செட்டி (தெலுங்குச் செட்டி, இருபத்து நான்கு மனைத் தெலுங்குச் செட்டி உட்பட)
104. [[சக்கரவார்] அல்லது கவதி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
105. சாலிவாகனா
106. சாலியர், பத்மசாலியர், பட்டு சாலியர், பட்டாரியர் மற்றும் அடவியர்
107. சவலக்காரர்
108. சேனைத்தலைவர், சேனைக்குடியர், இலை வாணியர்
109. சௌராட்டிரா (பட்டுநூல்காரர்)
110. சோழிய வெள்ளாளர் (சோழ வெள்ளாளர், வெற்றிலைக்காரர், கொடிக்கால்காரர் மற்றும் கீரைக்காரர்)
111. ஸ்ரீசயர்
112. சுந்தரம் செட்டி
113. தொகட்டா வீரசத்திரியர்
114. தொல் கொல்லர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
115. துளவ நாய்க்கர் மற்றும் வெத்தலக்கார நாய்க்கர்
116. தொரையர்
117. தோரியர்
118. உக்கிரகுல சத்திரிய நாயக்கர்
119. உப்பாரா, உப்பிலியா மற்றும் சகாரா
120. ஊராளிக் கவுண்டர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் நீங்கலாக) மற்றும் ஒருடைய கவுண்டர் அல்லது ஊருடைய கவுண்டர் (மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் நீங்கலாக)
121. உரிக்கார நயக்கர்
122. வல்லம்பர்
123. வால்மீகி
124. வாணியர், வாணியச் செட்டியார் (கண்டல், கனிகா, தெலிகுல செக்கலார் உட்பட)
125. வேடுவர் மற்றும் வேடர் (இச்சமூகத்தினர் ஆதிதிராவிடராக இருக்கும் (கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக)
126. வீர சைவர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
127. [வேளர்]]
128. வெள்ளாஞ்செட்டியார்
129. வெலுதொடத்து நாயர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
130. வொக்கலிகர் (வக்கலிகர், ஒக்காலிகர், கப்பிலியர், ஒக்கலிக கௌடா, ஒக்காலியா கௌடா, ஒக்காலிய கவுடர், ஒக்காலிய கவுடா உட்பட)
131. வயநாடு செட்டி (நீலகிரி மாவட்டம்)
132. யாதவா (இடையர், வேடுக ஆயர் அல்லது வடுக இடையர் அல்லது கொல்லா மற்றும் அஸ்தந்திர கொல்லா என அழைக்கப்படுகிற தெலுங்கு மொழி பேசும் இடையர் உட்பட)
133. யவன
134. ஏருகுலா
135. மீனவர், பர்வதராஜகுலம், பட்டணவர், செம்படவர், முக்குவார் அல்லது மூகையர் மற்றும் பர்வரிலிருந்து கிறித்துவ மதத்திற்கு மதம் மாறியவர்கள் நீங்கலாக எந்த ஒரு இந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பு அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு அல்லது சீர்மரபினர்கலிலிருந்து கிறித்துவ மதத்திற்கு மதம் மாறியவர்கள்.
136. 10 வயதுக்கு முன்பு பெற்றோர்களை இழந்தவர்கள் மற்றும் ஆதரவற்றவர்கள். சட்டப்படியோ அல்லது வழக்கமாகவோ எவர் ஒருவரும் அவர்கள் மீது அக்கறை கொள்ளாதவர்கல் மற்றும் அரசால் ஏற்பளிக்கப்பட்ட பள்ளிகள் அல்லது அனாதைகள் மற்றும் ஆதரவற்றவர்கள்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் (இஸ்லாமியர்)

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபாண்மை நலத்துறையின் அரசாணை எண்:85, நாள் 29-07-2008.

1. அன்சார்
2. தக்கானி முஸ்லீம்
3. துதிகுலா
4. லப்பைகள் இராவுத்தர் மற்றும் மரைக்காயர் உட்பட (அவர்கள் பேசும் மொழி தமிழ் அல்லது உருது ஆக இருப்பினும்)
5. மாப்பிள்ளா
6. ஷேக்
7. சையத்

மிகவும் பிற்பட்ட வகுப்பினர்

1. ஆண்டிப்பண்டாரம்
2. பெஸ்தா, சீவியர்
3. பட்ராஜீ (சத்திரிய ராஜீக்கள் நீங்கலாக)
4. போயர், ஒட்டர்
5. தாசரி
6. தொம்மரா
7. எரவள்ளர் (இவ்வினத்தவர்கள் பட்டியலில் பழங்குடியினராக உள்ள கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக)
8. இசை வேளாளர்
9. ஜம்புவானோடை
10. ஜங்கம்
11. ஜோகி
12. கொங்குச் செட்டியார் (கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மட்டும்)
13. கொரச்சா
14. குலாலா (குயவர், கும்பரர் உள்ளிட்ட)
15. குன்னுவர் மன்னாடி
16. குறும்பர்
17. குறு உறனி செட்டி
18. மருத்துவர், நாவிதர், மங்கலா, வேலக்கட்டலவா, வேலக்கட்டல நாயர் மற்றும் புரோனோபகாரி
19. மோண்ட் கொல்லா
20. மவுண்டாடன் செட்டி
21. மகேந்திரா, மேதரா
22. முட்டலகம்பட்டி
23. நரிக்குறவர்
24. நோக்கர்
25. வன்னிய குலச் சத்திரியர்(வன்னியர், வன்னியா, வன்னியகவுண்டர், கவுண்டர் அல்லது கண்டர், படையாட்சி, பள்ளி மற்றும் அக்னிகுல சத்திரியர் உட்பட)
26. பரவர்,பரதவர்,பரதர் (இச்சமுதாயத்தினர் பட்டியல் வகுப்பினராக உள்ள கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக, கிறித்துவ மதத்திற்கு மாறியவர் உட்பட)
27. மீனவர் (பர்வதராஜகுலம், பட்டனவார், செம்படவர் கிறித்துவ மதத்திற்கு மாறியவர் உட்பட)
28. முக்குவார் அல்லது முகயர் (கிறித்துவ மதத்திற்கு மாறியவர் உட்பட)
29. புன்னன், வேட்டுவ கௌண்டர்
30. பண்ணையார் (கன்னியாகுமரி மாவட்டத்தில் கதிகாரர் நீங்கலாக)
31. . சதாத ஸ்ரீ வைஷ்ணவ (சதானி, சட்டாடி மற்றும் சட்டாட வைஷ்ணவ உட்பட)
32. சோழிய செட்டி
33. தெலுங்குப் பட்டி செட்டி
34. தொட்டிய நாயக்கர் (ராஜகம்பளம், கொல்லாவர், சில்லவர், தொக்களவார் மற்றும் தொழுவ நாயக்கர்)
35. தொண்டைமான்
36. வலையர் (செட்டிநாடு வலையர் உட்பட)
37. வண்ணார்(சலவைத் தொழிலாளர்), அகசா, மடிவளா, ஏகாலி, ராஜகுல வேலுத்தடார் மற்றும் ராஜாகா உட்பட) (இச்சமூகத்தினர் ஆதிதிராவிட வகுப்பினராக இருக்கும் கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக)
38. வேட்டைக்காரர்
39. வேட்டுவக் கௌண்டர்
40. யோகீஸ்வரர்

சீர்மரபினர் பட்டியல்

1. ஆத்துர் கீழ்நாடு குறவர்கள் (சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்)
2. ஆத்தூர் மேல்நாடு குறவர்கள் (சேலம், நாமக்கல் மாவட்டங்கள்)
3. அப்பநாடு கொண்டையம் கோட்டை மறவர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள்)
4. அம்பலகாரர் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
5. அம்பலக்காரர் (சூரியனூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம்)
6. போயர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நீலகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள்)
7. பட்டுதுர்காஸ்
8. சி.கே.குறவர்கள் (கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள்)
9. சக்கலா (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், மதுரை, திண்டுக்கல், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்கள்)
10. சங்கயம்பாடி குறவர்கள் (வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
11. செட்டிநாடு வலையர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்கள்)
12. தொம்பர்கள்(புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள்)
13. தொப்ப குறவர்கள் (சேலம், நாமக்கல் மாவட்டங்கள்)
14. தொம்மர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
15. தொங்கபோயர்
16. தொங்கஊர் கொறச்சார்கள்
17. தேவகுடி தலையாரிகள்
18. தொப்பை கொறச்சாக்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
19. தாபி குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
20. தொங்கதாசரிகள் (கரூர், பெரம்பலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
21. கொரில்லா தோட்ட போயர்
22. குடு தாசரிகள்
23. கந்தர்வ கோட்டை குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள்)
24. கந்தர்வ கோட்டை கள்ளர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
25. இஞ்சிக் குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும்புதுக்கோட்டை மாவட்டங்கள்)
26. ஜோகிகள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், சென்னை, கடலூர், விழுப்புரம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
27. ஜம்பவனோடை
28. காலடிகள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
29. கல் ஒட்டர்கள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கரூர், பெரம்பலூர், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
30. குறவர்கள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்கள்)
31. களிஞ்சி தாபி குறவர்கள்(தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
32. கூத்தப்பால் கள்ளர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
33. கல குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
34. கலவதிலா போயர்கள்
35. கேப்மாரிகள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள்
36. மறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்)
37. மொந்த குறவர்கள்
38. மொந்த கொல்லா (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
39. முடலகம்பட்டி (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
40. நோக்கர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
41. நெல்லூர்பேட்டை ஒட்டர்கள் (வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
42. ஒட்டர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள்)
43. பெத்த போயர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
44. பொன்னை குறவர்கள் (வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள்)
45. பிரமலைக்கள்ளர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள்)
46. பெரிய சூரியூர் கள்ளர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
47. படையாட்சி (கடலூர் மாவட்டத்தில் வெள்ளையன் குப்பம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தென்னூர்)
48. புன்னன் வேட்டுவ கவுண்டர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
49. சேர்வை (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
50. சேலம் மேல்நாடு குறவர்கள் (மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
51. சேலம் உப்பு குறவர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
52. சர்க்கரைத்தாமடை குறவர்கள் (வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
53. சாரங்கபள்ளி குறவர்கள்
54. சூரமாரி ஒட்டர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
55. செம்பநாடு மறவர்கள் (சிவகங்கை, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள்)
56. தல்லி குறவர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
57. தெலுங்குபட்டி செட்டிகள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
58. தொட்டிய நாயக்கர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், காஞ்சீபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, கரூர், பெரம்பலூர், தூத்துக்குடி, சேலம், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள்)
59. தோகமலைக் குறவர்கள் அல்லது கேப்மாரிகள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
60. உப்பு குறவர்கள் அல்லது செட்டி பள்ளி குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், வேலுர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
61. ஊராளிக் கவுண்டர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
62. வயல்பாடு அல்லது நவல்பட்டு கொரசாக்கள்
63. வடுவார்பட்டி குறவர்கள் (மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
64. வலையர்கள் (மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்கள்)
65. வேட்டைக்காரர் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
66. வெட்டா குறவர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
67. வரகநேரி குறவர்கள் ((திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
68. வேட்டுவக் கவுண்டர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)

இதர வகையினர்

மேற்கண்ட பட்டியலில் இல்லாத அனைத்து சாதியினரும் முற்பட்ட வகுப்பினராகவும், இதர வகையினராகவும் உள்ளனர்.

சனி, 13 ஜூலை, 2019

கணினி தொடர்பான அணைத்து Keyboard Sortcut Keys இதோ தெரிந்து கொள்ளுங்கள்.!


கணினி தொடர்பான அணைத்து Keyboard Sortcut Keys இதோ தெரிந்து கொள்ளுங்கள்.!

Save Your time with Short Cut 📌

Ctrl + A - Select All
Ctrl + B - Bold
Ctrl + C - Copy
Ctrl + D - Fill
Ctrl + F - Find
Ctrl + G - Find next instance of text
Ctrl + H - Replace
Ctrl + I - Italic
Ctrl + K - Insert a hyperlink
Ctrl + N - New workbook
Ctrl + O - Open
Ctrl + P - Print
Ctrl + R - Nothing right
Ctrl + S - Save
Ctrl + U - Underlined
Ctrl + V - Paste
Ctrl W - Close
Ctrl + X - Cut
Ctrl + Y - Repeat
Ctrl + Z - Cancel
F1 - Help
F2 - Edition
F3 - Paste the name
F4 - Repeat the last action
F4 - When entering a formula, switch between absolute / relative references
F5 - Goto
F6 - Next Pane
F7 - Spell Check
F8 - Extension of the mode
F9 - Recalculate all workbooks
F10 - Activate Menubar
F11 - New graph
F12 - Save As
Ctrl +: - Insert the current time
Ctrl +; - Insert the current date
Ctrl + "- Copy the value of the cell above
Ctrl + '- Copy the formula from the cell above
Shift - Offset Adjustment for Additional Functions in the Excel Menu
Shift + F1 - What is it?
Shift + F2 - Edit cell comment
Shift + F3 - Paste the function into the formula
Shift + F4 - Search Next
Shift + F5 - Find
Shift + F6 - Previous Panel
Shift + F8 - Add to the selection
Shift + F9 - Calculate the active worksheet
Shift + F10 - Popup menu display
Shift + F11 - New spreadsheet
Shift + F12 - Save
Ctrl + F3 - Set name
Ctrl + F4 - Close
Ctrl + F5 - XL, size of the restore window
Ctrl + F6 - Next Workbook Window
Shift + Ctrl + F6 - Previous Workbook Window
Ctrl + F7 - Move window
Ctrl + F8 - Resize Window
Ctrl + F9 - Minimize the workbook
Ctrl + F10 - Maximize or Restore Window
Ctrl + F11 - Inset 4.0 Macro sheet
Ctrl + F1 - Open File
Alt + F1 - Insert a graph
Alt + F2 - Save As
Alt + F4 - Output
Alt + F8 - Macro dialog
Alt + F11 - Visual Basic Editor
Ctrl + Shift + F3 - Create a name using the names of row and column labels
Ctrl + Shift + F6 - Previous Window
Ctrl + Shift + F12 - Printing
Alt + Shift + F1 - New spreadsheet
Alt + Shift + F2 - Save
Alt + = - AutoSum
Ctrl + `- Toggle value / display of the formula
Ctrl + Shift + A - Insert the argument names in the formula
Alt + down arrow - automatic view list
Alt + '- Format Style Dialog
Ctrl + Shift + ~ - General Format

வியாழன், 11 ஜூலை, 2019

வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள்


வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் என்ற இக்கட்டுரையில் நாம் அன்றாடம் தமிழ்ச் சொற்கள் போலவே பயன் படுத்தும் சில வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் பட்டியலிட்டுத் தரப்பட்டுள்ளன.


அகங்காரம் - செருக்கு
அக்கிரமம் - முறைகேடு
அசலம் - உறுப்பு, மலை
அசூயை - பொறாமை
அதிபர் - தலைவர்
அதிருப்தி - மனக்குறை
அதிருஷ்டம்- ஆகூழ், தற்போது
அத்தியாவசியம் --இன்றியமையாதது
அநாவசியம் -வேண்டாதது
அநேகம் - பல
அந்தரங்கம்- மறைபொருள்
அபகரி -பறி, கைப்பற்று
அபாயம் -இடர்
அபிப்ராயம் -கருத்து
அபிஷேகம் -திருமுழுக்கு
அபூர்வம் -அரிது ,அரிய
அமிசம் -கூறுபாடு
அயோக்கியன் -நேர்மையற்றவன்
அர்த்தநாரி -உமைபாகன்
அர்த்த புஷ்டியுள்ள -பொருள் செறிந்த
அர்த்தம் -பொருள்
அர்த்த ஜாமம் - நள்ளிரவு
அர்ப்பணம் -படையல்
அலங்காரம் -ஒப்பனை
அலட்சியம் - புறக்கணிப்பு
அவசரமாக - உடனடியாக, விரைவாக
அவஸ்தை - நிலை, தொல்லை
அற்பமான - கீழான, சிறிய
அற்புதம் - புதுமை
அனுபவம் - பட்டறிவு
அனுமதி - இசைவு

ஆச்சரியம் - வியப்பு
ஆக்ஞை - ஆணை, கட்டளை
ஆட்சேபணை - தடை, மறுப்பு
ஆதி - முதல்
ஆபத்து - இடர்
ஆமோதித்தல் - வழிமொழிதல்
ஆயுதம் - கருவி
ஆரம்பம் -தொடக்கம்
ஆராதனை -வழிபாடு
ஆரோக்கியம் - உடல்நலம்
ஆலோசனை - அறிவுரை
ஆனந்தம் - மகிழ்ச்சி

இஷ்டம் - விருப்பம்
இங்கிதம் - இனிமை

ஈன ஜன்மம் - இழிந்த பிறப்பு
ஈனஸ்வரம் - மெலிந்த ஓசை

உக்கிரமான - கடுமையான
உபசாரம் - முகமன் கூறல்
உபயோகம் - பயன்
உதாசீனம் - பொருட்படுத்தாமை
உத்தரவாதம் - பிணை, பொறுப்பு
உத்தரவு - கட்டளை
உல்லாசம் - களிப்பு
உற்சாகம் - ஊக்கம்


ஐதீகம் - சடங்கு, நம்பிக்கை


கர்ப்பக்கிருகம் - கருவறை
கர்மம் - செயல்
கலாச்சாரம் - பண்பாடு
கலாரசனை - கலைச்சுவை
கல்யாணம் - மணவினை, திருமணம்
கஷ்டம் - தொல்லை, துன்பம்
கீதம் - பாட்டு, இசை
கீர்த்தி - புகழ்
கீர்த்தனை- பாமாலை, பாடல்
கோஷம் - ஒலி


சகலம் - எல்லாம், அனைத்தும்
சகஜம் - வழக்கம்
சகி - தோழி
சகோதரி - உடன் பிறந்தவள்
சங்கடம் - இக்கட்டு, தொல்லை
சங்கதி - செய்தி
சங்கோஜம் - கூச்சம்
சதம் - நூறு
சதவீதம், சதமானம் - விழுக்காடு
சதா - எப்பொழுதும்
சதி- சூழ்ச்சி
சத்தம் - ஓசை, ஒலி
சந்தானம் - மகப்பேறு
சந்தேகம் - ஐயம்
சந்தோஷம் - மகிழ்ச்சி
சபதம் - சூளுரை
சம்சாரம் - குடும்பம், மனைவி
சம்பந்தம் - தொடர்பு
சம்பவம் - நிகழ்ச்சி
சம்பாதி - ஈட்டு, பொருளீட்டு
சம்பிரதாயம் - மரபு
சம்மதி - ஒப்புக்கொள்
சரணாகதி - அடைக்கலம்
சரித்திரம் - வரலாறு
சரீரம் - உடல்
சருமம் -தோல்
சர்வம் - எல்லாம்

சா
சாதாரணம் - எளிமை, பொதுமை
சாதித்தல் - நிறைவேற்றுதல், விடாது பற்றுதல்
சாதம் - சோறு
சாந்தம் - அமைதி
சாகசம் - துணிவு, பாசாங்கு
சாராமிசம் - பொருட்சுருக்கம்
சாயந்திரம் - மாலை வேளை, அந்திப் பொழுது
சாவகாசம் - விரைவின்மை
சாஸ்திரம் - நூல்
சாசுவதம் - நிலை

சி
சிகிச்சை - மருத்துவம்
சித்தாந்தம் - கொள்கை, முடிவு
சித்திரம் - ஓவியம்
சிநேகிதம் - நட்பு
சிம்மாசனம் - அரியணை
சிரத்தை - அக்கறை, கருத்துடைமை
சிரமம் - தொல்லை
சின்னம் - அடையாளம்

சீ
சீக்கிரமாக - விரைவாக

சு
சுதந்திரம் - தன்னுரிமை, விடுதலை
சுத்தமான - தூய்மையான
சுபாவம் - இயல்பு
சுலபம் - எளிது
சுவாரஸ்யமான - சுவையான

சே
சேவை - பணி,தொண்டு
சேனாதிபதி - படைத்தலைவன்
சௌகர்யம் - வசதி, நுகர்நலம்
சௌக்கியம் - நலம்

தசம் - பத்து
தத்துவம் - உண்மை
தம்பதியர் - கணவன் மனைவி, இணையர்
தரிசனம் - காட்சி
தர்க்கம் - வழக்கு
தர்க்க வாதம் - வழக்காடல்

தா
தாபம் - வேட்கை
தி
திகில் - அதிர்ச்சி
திருப்தி - நிறைவு
தினசரி - நாள்தோறும்
தினம் - நாள்

தீ
தீர்க்கதரிசி _ ஆவதறிவார்
து
துரதிருஷ்டம் - பேறின்மை
துரிதம் - விரைவு
துரோகம் - வஞ்சனை
துவம்சம் - அழித்தொழித்தல், அழித்துத் தொலைத்தல்
.தே
தேகம் - உடல்
தேசம் - நாடு

தை
தைரியம் - துணிவு


நட்சத்திரம் - விண்மீன், நாள்மீன்
நமஸ்காரம் - வணக்கம்
நர்த்தனம் - ஆடல், நடனம்,கூத்து
நவீனம் - புதுமை
நவீன பாணி - புது முறை

நா
நாசம் - அழிவு, வீண்
நாசூக்கு - நயம்
நாயகன் - தலைவன்
நாயகி - தலைவி

நி
நிஜம் - உண்மை, உள்ளது
நிசபதமான - ஒலியற்ற, அமைதியான
நிச்சயம் - உறுதி
நிச்சயதார்த்தம் - மண உறுதி
நிதானம் - பதறாமை
நித்திய பூஜை - நாள் வழிபாடு
நிரூபி - மெய்ப்பி, நிறுவு
நிருவாகம் - மேலாண்மை
நிதி - பொருள்,செல்வம், பணம்
நீதி - அறம், நெறி, அறநெறி, நடுவுநிலை, நேர், நேர்நிறை, நேர்பாடு, முறை

பகிரங்கம் - வெளிப்படை
பஞ்சாட்சரன்- ஐந்தெழுத்து
பரவசம் - மெய்மறத்தல்
பராக்கிரமம் - வீரம்
பராமரி - காப்பாற்று , பேணு
பரிகாசம் - இகழ்ச்சிச் சிரிப்பு
பரிசோதனை - ஆய்வு
பரீட்சை - தேர்வு
பலவந்தமாக - வற்புறுத்தி
பலவீனம் - மெலிவு, வலிமையின்மை
பலாத்காரம் - வன்முறை

பா
பாணம் - அம்பு
பாதம் - அடி
பாரம் - சுமை
பால்யம் - இளமை

பி
பிம்பம் - நிழலுரு
பிரகாசம் - ஒளி, பேரொளி
பிரகாரம் - சுற்று
(அதன்)பிரகாரம் - (அதன்)படி
பிரசங்கம் - சொற்பொழிவு
பிரசுரம் - வெளியீடு
பிரச்சினை - சிக்கல்
பிரதிநிதி - சார்பாளர்
பிரதிபலித்தல் - எதிரியக்கம்
பிரதிபிம்பன் - எதிருரு
பிரத்தியோகம் - தனி
பிரபலம் - புகழ்
பிரமாதமான - பெரிய
பிரமிப்பு - திகைப்பு
பிரயோகி - கையாளு
பிரயோசனம் - பயன்
பிரவாகம் - பெருக்கு
பிரவேசம் - நுழைவு, புகுதல், வருதல்
பிரார்த்தனை - தொழுகை,
பிரியம் - விருப்பம்
பிரேமை - அன்பு

பீ
பீடிகை - முன்னுரை

பு
புண்ணியம் - நல்வினை
புத்தி - அறிவு
புத்திரன் - புதல்வன்
புனிதமான - தூய
புஷ்பம் - மலர், பூ
புஜபலம் - தோள்வன்மை

பூ
பூஜை - வழிபாடு
பூர்த்தி - நிறைவு
பூஷணம் - அணிகலம்-

போ
போதனை - கற்பித்தல்


மகான் - பெரியவர்
மகாயுத்தம் -பெரும்போர்
மத்தியஸ்தர் - உடன்படுத்துபவர்
மத்தியானம் - நண்பகல்
மந்திரி - அமைச்சர்
மனசு - உள்ளம்
மனிதாபிமானம் - மக்கட்பற்று
மானசீகம் - கற்பனை
மல்யுத்தம் - மற்போர்

யந்திரம் - பொறி
யூகம் - உய்த்துணர்தல்
யூகி - உய்த்துணர்
யோக்யதை - தகுதி

ரதம் - தேர்
ரத சாரதி- தேரோட்டி
ராணி - அரசி
ராத்திரி - இரவு
ராச்சியம் - நாடு,மாநிலம்
ராஜா - மன்னன்
ரசம் - சாறு, சுவை

லட்சம் - நூறாயிரம்
லட்சணம் - அழகு
லட்சியம் - குறிக்கோள்

வதம் - அழித்தல்
வதனம் - முகம்
வம்சம் - கால்வழி
வஸ்திரம் - துணி, ஆடை
வாஞ்சை - பற்று
வாயு - காற்று
விக்கிரகம் - வழிபாட்டுருவம்
விசாரம் - கவலை
விசாலமான - அகன்ற
விசித்திரம் - வேடிக்கை
விஷேசம் - சிறப்பு
விஞ்ஞானம் - அறிவியல்
விஷயம் - செய்தி
விதானம் - மேற்கட்டி
விநாடி - நொடி
வித்தியாசம் - வேறுபாடு
விபூதி - திருநீறு , பெருமை
விமோசனம் - விடுபடுதல்
வியாதி - நோய்
விரதம் - நோன்பு
விவாகம் - திருமணம்
விவாதி -வழக்காடு
வேகம் - விரைவு
வேதம் - மறை
வேதவிற்பனன்ர் - மறைவல்லார்
வேதியர் - மறையவர்

ஜனநாயகம் - குடியாட்சி
ஜனம் - மாந்தர், மக்கள்
ஜனனம் - பிறப்பு
ஜாதகம்- பிறப்புக் குறிப்பு
ஜாலம் - வேடிக்கை
ஜூரம் - காய்ச்சல்
ஜோதி - ஒளி
ஜோடி - இணை
ஜோடித்தல் - அழகு செய்தல்

ஸந்ததி - கால்வழி
ஸமத்துவம் - ஒரு நிகர்
ஸமரசம் - வேறுபாடின்மை
ஸமீபம் - அண்மை
ஸம்ஹாரம் - அழிவு
ஸோபை - பொலிவு
ஸௌந்தர்யம் - பேரழகு
ஸ்தாபனம் _ நிறுவனம்
ஸ்தானம் - இடம்

உசாத்துணை

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இலக்கணம்', தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம். வெளியீடு- 1983

நாடக வரலாறு தமிழ் நாடகங்களின் தோற்றம்


நாடக வரலாறு
தமிழ் நாடகங்களின் தோற்றம்
--------------------------------------------------------

தமிழ் நாடகங்களின் தோற்றத்தை விவரிக்கும், தலைச் சங்ககாலத்து நூல் அகத்தியம். நாடகம் என்பது பாட்டும், நடிப்பும் கொண்டது என்று தமிழ்மரபு வழி கூறுகிறது.சங்கக் காலத்தில் குணநூல், கூத்த நூல், சயந்தம் நூல், மதிவாணர் நாடகத் தமிழர்,முறுவல் போன்ற நாடக நூல்கள் இருந்தன என்பதனை சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகின்றது.

மேலும், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் தமிழ் நாடகக்கலை பற்றிய சான்றுகள் உள்ளன.

நாடகத் தோற்றம்
-----------------------------------

இறைவன் ஆடிய கூத்தின் உடுக்கையிலிருந்து பிறந்தது ஓசை.ஓசையின் சுழலிலிருந்து இசையின் உயிர்ப்பும்,அதினின்று ஆட்டமும், ஆட்டத்திலிருந்து கூத்தின் ஒழுங்கும், நாட்டியக் கோப்பும், நாடக வகைகளும் தோன்றின எனக் கூத்த நூலில் சொல்லப்படுகிறது.இவாறு பிறந்த நாடகம் தொல்காப்பியர் காலத்தில் வளர்ச்சியடைந்து புகழ் பெற்றது.தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில்,
"பாடல் சான்ற புலநெறி வழக்கம்" என்கிறார். இவ்வரிகள், தொல்காப்பியர் வாழ்ந்ததற்கு முற்பட்ட காலகட்டங்களிலேயே தமிழில் நாடகமும்,நாடகங்களில் பாடல்களும் இடம் பெற்றிருந்ததை அறியலாம்.நாடக வழக்கைப் பற்றி மேலும் தொல்காப்பியம் கூறுகிறது....

"நகையே அழுகை இனிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பா லெட்டாம் மெய்ப்பா என்பர்"

சுவைபடவருவதெல்லாம் ஓரிடத்தில் வந்தன.பொருளின் தன்மையினை மட்டும் உணர்த்தி, வடிவம் உணர்த்தபடாதது.
பொருளின் தன்மையினையும் உணர்த்தி, வடிவத்தையும் உணர்த்துவது என பொருள்கள் இருவகைப் படும்.
பொருளின் த்ன்மையினை உணர்த்தி, வடிவம் உணர்த்தப்படாதது...காமம், வெகுளி(சினம்),மயக்கம்,இன்பம்,துன்பம் முதலியன.இவையே நடிப்பின் இன்றியமையாக் கூறுகளாக , அனைத்து நாடுகளின் மொழி,நாடகம், திரைப்படம் போன்ற கலைவடிவங்களில் காணப்படுகின்றன.

இப்படி நாடகச்சுவைகளைக் கூறுவதால்...நாடகக்கலை தொல்காப்பியர் காலத்திற்கும் முற்பட்டது எனலாம்.

நாடக அரங்கம்
---------------------------

நாடகம் நடைபெறும் அரங்கம் இந்தந்த அளவில்தான் இருக்க வேண்டும் என்கிறது சிலப்பதிகாரம்

"நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்
கோலளவு இருப்பத்து நல்விரலாக
எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து
ஒருகோல் உயரத்து உறுப்பின தாகி
உத்திரப் பலகையோடு அரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நாற்கோ லாக
ஏற்ற வாயில் இரண்டுடன்
தோன்றிய அரங்கில்"
    (சிலப்பதிகாரம்.அரங்கேற்று காதை)

அரங்கம் அளக்கப்படும் கோலானது, ஒரு சாண் மூங்கிலைக் கொண்டு, மனிதர் ஒருவர் பெருவிரல் இருபத்தினான்கு கொண்ட அளவில் ஒரு கோல் நறுக்கினர்( அதுவே அக்கால அளவு கோலாகும்)

எட்டு அணுக்கள் கொண்டது ஒரு தேர்ந்துகள்.எட்டு தேர்ந்துகள் ஒரு இம்மி.எட்டு இம்மிகள் ஒரு எள்.எட்டு எள் கொண்டது ஒரு நெல்.எட்டு நெல் ஒரு பெருவிரல்.

இதன்படி சிலப்பதிகாரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் அரங்கின் அகலம் ஏழு கோலாகவும்..நீளம் எட்டு கோலாகவும்..உயரம் ஒரு கோலாகவும் அரங்கின் மேற்பகுதியில் பலகை பதித்து அதற்கும் தூண்களின் மேல் பாவிய உத்திரப்பலகைக்கும் இடையே நான்குகோல் உயரம் இருக்கச்செய்து அரங்கினுள் செல்லவும், வெளியேறவும் இருவாயில்கள் அமைத்துத், தூண்களின் நிழல்கள் ஆடும் இடத்தில் விழாமல்நிலை விளக்கினைப் பொறுத்தினராம்.

நாடகத்திரைகள்
--------------------------

மூன்றுவகையான திரைகள் பண்டைகாலந் தொட்டு பழக்கத்தில் உள்ளன.அவை...

1) ஒருமுக எழினி -  ஒருமுகமாக சுரிக்கிக் கட்டப்பெற்ற திரையாகும் (இன்றும் சென்னை நாடகக் குழுக்களால் நாடகமேடைகளில் பயன்படுத்தப் படுகின்றன)

2)பொருமுக எழினி - ஒரு திரை இரண்டாகப் பிரிக்கப்பட்டு  ஒன்றோடொன்று சேரவும், பிரிக்கவும் கூடியதாக அமைந்த திரையாகும் (இம்முறை இப்பொழுது தட்டி என அழைக்கப் படுகிறது.இம்முறை பயிற்றுமுறை நாடகக் குழுக்கள் மற்றும் அரங்க அமைப்பாளர்களால் பயன்படுத்தப் படுகிறது)

3)கந்து வரல் எழினி- மேற்கட்டிலிருந்து கீழே விரிந்து விடவும்,பின்னர் சுருக்கிக் கொள்ளவும் கூடியதாகத் தொங்கும் திரையாக அமையப் பெற்றுள்ள திரை..

இவற்றைத் தவிர்த்து, முத்து மாலைகள்,பூமாலைகளை வளைவாகத் தொங்கவிட்டு நாடக ரங்கினை அலங்கரித்தனர்

அரங்கைப் பயன் படுத்தும் முறை
-----------------------------------------------------------------

இன்றும் நாடக மேடையில், ஒரு நடிகர் வீட்டின் உள்ளே செல்ல வலப்புறமும், வெளியே செல்ல இடப்புறமும் பயன்படுத்துகின்றனர்.இம்முறை சிலப்பதிகாரக் காலத்திலிருந்து வருவதை இப்பாடலால் காணமுடிகிறது

"இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்
குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப
வலக்கால் முன்மிதித்து ஏறி அரங்கத்து
வலத்தூண் சேர்தல் வழக்கு எனப் பொருந்தி
இந்நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த
தொல்நெறி இயற்கைத் தோரிய மகளிரும்"

இப்பாடலில், குயிலுவர் என்பது இசைக்கருவிகளை வாசிப்பவர்கள்.நிலையிடம் ஒருகோல் என்ற ஒழுங்குபடி நின்றனர்.அனைத்தும் ஒழுங்கானதும், மாதவி தன் வலதுகாலை முன் வைத்து....பொருமிக எழினியுள்ள வலத்தூண் பக்கம் சேர்ந்தாள்.ஒருமிக எழினியுள்ள இடதுத்தூண் பக்கம் தோரிய மடந்தையர் என்ற...ஆடி மூத்தவர்,நாட்டியத்திற்கு துணை செய்பவர் , மாதவி வந்தபடியே வலக்காலை முன்வைத்து வந்து நின்றனர் "என்கின்றது இப்பாடல் வரிகள்.

நடிப்பும், இசையும்
---------------------------------------

இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து
பலவகைக் கூத்தும் விலக்கினில் புணர்ந்து
பதினோர் ஆடலும், பாடலும், கொட்டும்
விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்து - ஆங்கு
ஆடலும், பாடலும், பாணியும், தூக்கும்,
கூடிய நெறியின் கொளுத்தும் காலை,
பாண்டியும், பிணையலும், எழில் கையும், தொழில் கையும்
கொண்டவகை அறிந்து, கூத்து வரு காலை
கூடை செய்த கை பிண்டியில் களைதலும்
ஆடல் செய்த கை பிண்டியில் களைதலும்
குரவையும் வரியும் விரவல செலுத்தி
ஆடற்கு அமைந்த ஆசான்- தன்னோடும்
                     (அரங்கேற்ற காதை)
இப்பாடல் வரிகளின் பொருள் வருமாறு-

கூத்து வகைகள் இரண்டு
அகக்கூத்து - அரசனுக்காக ஆடும் கூத்தை "வேத்தியலை:" அகக்கூத்து என்பர்
புறக்கூத்து- பிறருக்காக ஆடும் பொதுவியல்

நாடகம், நாட்டியம் இரண்டும் கூத்து என்றே அழைக்கப் பெற்றது.அகக்கூத்து இரு வகைகளைக் கொண்டிருந்தது.சாந்திக் கூத்து, மற்றும் விநோதக் கூத்து.

சாந்திக் கூத்து நான்கு வகைப்படும்

சாக்கம்- தாளத்தின் அடைப்படையைக் கொண்டது
மெய்க் கூத்து- அகச்சுவையினை அடிப்படையாகக் கொண்டது
அபிநயக்கூத்து- பாட்டின் பொருளை அபிநயத்து கதையை தழுவாது வருவது
நாடகக் கூத்து- கதையினைத் தழுவி நடிக்கும் கூத்தாகும்
விநோதக் கூத்து- பொது மக்களின் பொழுது போக்கு கூத்தாக ஆடல் பெற்றது...இந்த விநோதக் கூத்து ஏழு வகைப்படும்
குரவைக் கூத்து- ஒன்பது கலைஞர்கள் காதல் அல்லது வெற்றிப்பாக்கள் பாடி கை கோர்த்து ஆடும் கூத்தாகும்
கழாய்க்கூத்து- கலை நடனம் என அழைக்கப்படும் கூத்தாகும்
குடக்கூத்து- கரகம் எனாழைக்கப்படும் கூத்து
கரணம்- பாய்ந்து ஆடப்படும் கூத்தாகும்
பார்வைக்கூத்து- கண்களினால் நோக்கப்படும் கூத்தாகும்
வசைக்கூத்து- நகைச்சுவை உணர்வுகளை மையமாகக் கொண்ட கூத்தாகும்
சாமியாட்டம் அல்லது வெறியாட்டம்
வென்றிக் கூத்து- மாற்றான் ஒடுக்கப்படுதலும் மற்றும் மன்னனின் உணர்ச்சியினைப் பற்றியும் வெளிக்காட்டக் கூடிய கூத்தாகும்
இந்தக் கூத்தில் தாளத்திற்கேற்ப இசைந்து நடிக்கப்படுவது நாடகம் எனப்பட்டது

கடைச்சங்கக் காலத்தில் நாடகத்தழிழ்
----------------------------------------------------------------------

கழைவளர் அடுக்கத்து இயலி யாடுமயில்
விளைவுகள விறலியிற் தோன்று நாடன்

என்ற கபிலரின் அகநாநூற்றுப் பாடல், "மூங்கில்கள் வளர்ந்திருக்கும் மலையடுக்குகளிலே உலவி ஆடுகின்ற மயில் இனங்கள், களத்திலே புகுந்து ஆடும் விறலியைப் போலத் தோன்றும் நாட்டினன் என்கிறது இவ்வரிகள்

:படுகண் இமிழ்கொளை பயின்றனர் ஆடும்
களிநாள் அரங்கின் அணிநலம் புரையும்"

என்ற வரிகளில் ஆடல் அரங்குகள் பற்றிய சான்றுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.இதிலிருந்து கடைச்சங்கக் காலத்தில் தமிழ் நாடகம் செழுமைப் பெற்று விளங்கியது குறிப்பிடத்தக்கது

பின்னர், கடைச்சங்கக் காலம் வரை செழுமையுடன் இருந்தது நாடகக்கலை. கிபி 3ஆம் நூற்றாண்டிலிருந்து கிபி 5ஆம் நூற்றாண்டுவரை நாட்டில் புத்த-சமண மதங்கள் பரப்பப்பட்டன.அச்சமயம் இருந்த நாடகங்களை "சிற்றின்ப வேட்கையினை எழுப்புவது" என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.ஆகவே, இக்காலக்கட்டத்தில் தமிழ் நாடகக் கலை தழைக்க வாய்ப்பில்லாமல் போனது.

பின் கிபி 900 முதல் 1300 வரை சோழமன்னர்களின் ஆட்சியில் தமிழகத்தின் கலைகள் வளர்ச்ச்யடையத் தொடங்கின.

கிபி 846ஆம் ஆண்டு விஜயாலய சோழனால் எழுச்சிப் பெற்ற சோழப்பேரரசு முதலாம் பராந்தக சோழன் ஆட்சியின் பின்னர் வலுப்பெற்றது.கிபி1246 முதல் 1272 வரை ஆட்சி செய்த மூன்றாம் ராஜேந்திர சோழன் காலத்தில் நாடகக்கலை வளர்ச்சி பெற்றது.

கிபி 17ஆம் நூற்றாண்டின் காலப்பகுதியில் சோழ அரசர்களின் ஆதரவில் அரண்மனைகள், கோயில்கள் போன்றவற்றில் நடத்தப்பெற்ற நாடகங்கள் மக்கள் மன்றங்களில் நடத்தப்பட்டன. சங்ககாலத்தில் நடைபெற்ற பொதுவியற் கூத்துகள் போலவே நாடகக்கலை மக்களின் கலையாக வளர்ச்சிப் பெற்றது.

பின்பள்ளு,குறவஞ்சி,நொண்டி, போன்ற நாடகங்கள் இக்காலக்கட்டத்தில் தோன்றின


இன்றைய தமிழ் நாடகங்களுக்கு வித்திட்டவர்கள்
---------------------------------------------------------------------------------------------

கிபி 19ஆம் நூற்றாண்டில் "தெருக்கூத்து" என்ற நாடக வடிவம் தோன்றியது.இதற்கு கோவிந்தசாமி ராவ் என்பவர் வித்திட்டார்.நாடகத்தின் நேரத்தையும் காலத்திற்கேற்ப மாற்றி அமைத்தார்.1891ல் பம்மல் சம்பந்த முதலியாரால் தமிழ் உரை நாடகங்கள் தமிழ் நாடக மேடையில் அறிமுகம் செய்யப்பட்டது.நாடகமேடையில் கட்டிடம் போன்ற செயற்கையில் செய்யப்பட்ட அமைப்பு மேடையில் கீழும், மேலும் ஏறுவது, இறங்குவது போன்ற யுக்திகள் அறிமுகமாகின

தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்,  மின்விளக்கு ஒளிகளால் வண்ணத்திரைகளுடன் புதிய விஷயங்களை மேடையில் தோற்றுவித்த முதல் நாடக மைப்பாளர் ஆனார்.இவரது நாடகங்களில் உயிருள்ள மான், காளை, பசு, யானை போன்ற விலங்குகளை நடிக்க வைத்து புதுமை படைத்தார்.

நாடக அரங்குகள் மேடைகளாக இருந்து வந்ததை சி.கன்னையா அவர்கள் முக்கோண கனபரிமாண அமைப்பின் மூலம் அரங்குகளை அமைத்து ஒரு அரங்கில் காட்சி நடந்து கொண்டிருக்கும் போதே அடுத்த அரங்கில் அடுத்தக் காட்சிக்கான தேவையான ஏற்பாடுகளை செய்யப்பட்டிருக்கும் முறையினைத் தோற்றுவித்தார்.காட்சியமைப்புகளின் வழிகாட்டி கன்னையா எனலாம்.

இருபதாம் ஆண்டின் தொடக்கம் முதல் ஐம்பது ஆண்டுகள், தமிழ் வரபுமொழி நாடகங்கள் வளர்ச்சி பெற்றன.

இவற்றை இனிவரும் அத்தியாயங்களில் விரிவாகக் காணலாம்

தமிழ் மொழியை இயல், இசை, நாடகம் என மூவகையாக முன்னோர் வகுத்ததையும், நம் தமிழ் முத்தமிழ் என வழங்கப்படுவதையும், இசைத் தமிழ் கேட்டு இன்புறத்தக்கது  என்றும், நாடகத் தமிழ் பார்த்து மகிழத்தக்கது என்றும் முந்தைய அத்தியாயத்தில் பார்த்தோம்.

இவ்வாறு ஒரு மொழியை மூன்று கூறாகப் பாகுப்படுத்திப் பாராட்டிய பெருமை உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லை.


இந்தக் காலக் கட்டத்தில், இராமாயணம், மகாபாரதம் ஆகிய கதைகளை சிலர் நாடகமாக்கினர்.அருணாசலக் கவிராயரின் இராம நாடகம், சுவாமினாத பிள்ளையின் இராம நாடகம் ஆகியவை இராமாயணத்தை ஒட்டித் தோன்றிய நாடகங்கள் ஆகும்.

அல்லி நாடகம், அர்ச்சுன நாடகம்,அபிமன்யூ நாடகம், அதிரூப அமராவதி ஆகிய நாடகம் பாரதத்தினின்று தோன்றின.

தவிர்த்து, 'அரிச்சந்திர விலாசம்", "மதுரை வீரன் விலாசம்". "வள்ளித் திருமணம்" ஆகிய நாடகங்களும் நடத்தப்பட்டன.


பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஷேக்ஸ்பியர்,காளிதாசர், பவபூதி ஆகியோரின் ஆங்கில, வடமொழி நாடகங்களைத் தழுவியும், மொழி பெயர்த்தும் தமிழ் நாடகங்கள் இயற்றப்பட்டன.பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்களின் மனோன்மணீயம் நாடகம் தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கும் வகையில் ஒப்பும், உயர்வும் பெற்று விளங்கியது.

ஆங்கிலப் புலவர் லார்ட் லிட்டன் என்பவர் எழுதிய "இரகசிய வழி" என்ற கதையைத் தழுவியது "மனோன்மணீயம்".இது ஒரு தழுவல் நாடகமாக இருந்தாலும், மூல நாடகத்தை மிஞ்சும் வகையில் இருந்தது எனலாம்..ஆனாலும் "மனோன்மணீயம்" படிக்க எழுதிய நாடகமாகவே இருந்ததே தவிர, நடிக்க எழுதிய நாடகமாக இல்லை.

மகாகவி காளிதாசரின் சாகுந்தலம் நாடகத்தை வடமொழியிலிருந்து தமிழில் அழகாக மொழிபெயர்த்துத் தந்துள்ளார் மறைமலையடிகள் அவர்கள்.

பரிதிமாற் கலைஞர் என்று தன் பெயரை தமிழின் பால் கொண்ட மையலால் மாற்றிக் கொண்ட வி.கே.சூரிய நாராயண சாஸ்திரியார் ,நாடகக் கலைக்கு ஆற்றிய தொண்டும் சிறப்பானது..நாடகம் அமையும் முறைகளை விளக்கும் வகையில் அரிய "நாடகவியல்" என்னும் நூலை இவர் எழுதியுள்ளார்.

தவிர்த்து, "கலாவதி:", மான விஜயம்" "ரூபாவதி" ஆகிய நாடகங்களையும் இவர் எழுதியுள்ளார்.

அடுத்து, சங்கரதாஸ் சுவாமிகள் நாடக உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தினார்  எனலாம்

வெள்ளி, 5 ஜூலை, 2019

#TNPSC- 2019 Exam important Questions and Answer


#TNPSC- 2019 Exam important Questions and Answer

#பொதுத்தமிழ்

#அப்பர்_முக்கிய_குறிப்புகள்!!

💐 திருநாவுக்கரசர் பிறந்த ஊர்? -

#திருவாமூர்

💐 திருநாவுக்கரசரின் பெற்றோர் பெயர்?

- #புகழனார், #மாதினியார்

💐 திருநாவுக்கரசரின் #தமக்கையார் யார்?

- #திலகவதியார்

💐 திருநாவுக்கரசருக்கு #பெற்றோர் #இட்டபெயர்?

- #மருணீக்கியார்

💐 #தருமசேனர், அப்பர், #வாகீசர் என அழைக்கப்படுபவர்? -

#திருநாவுக்கரசர்

💐 யாருடைய நெறி #தொண்டு நெறி ஆகும்.

- #திருநாவுக்கரசர்

💐 #சைவ #அடியார்களை எவ்வாறு அழைப்பர்?

- #நாயன்மார்கள்

💐 திருநாவுக்கரசரின் பாடல்கள் எவ்வாறு போற்றப்படுகிறது?

 - #தேவாரம்

💐 #தாண்டகவேந்தர் என அழைக்கப்படுபவர் யார்? -
#திருநாவுக்கரசர்

💐 திருநாவுக்கரசரின் காலம்

- கி.பி #ஏழாம் #நூற்றாண்டு

💐 தேவாரம் என்னும் சொல்லை --------- எனப் பிரித்து தெய்வத்திற்கு சூட்டப்பெற்ற #பாமாலை என்று கூறுவர்.

 - #தே + #ஆரம்

💐 திருநாவுக்கரசர் பாடி அருளிய திருமுறைகள்?

- #நான்கு, #ஐந்து, #ஆறு

💐 சிவாலயங்களை தூய்மை செய்யும் பணியை செய்தமையால் பெற்ற பட்டப்பெயர்?

- #உழவாரத்தொண்டர்

💐 திருநாவுக்கரசர் எத்தனை பதிகங்களைப் பாடியுள்ளார்?

- #49,000

💐தாமார்க்கும் குடியல்லாத் தன்மை யான
  சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற் - என்னும் பாடல்வரிகளை எழுதியவர் யார்?

- #திருநாவுக்கரசர்

💐 நடலை பொருள் தருக.

- #துன்பம்

💐 நமன் பொருள் தருக

- #எமன்

💐 நற்சங்கு, வெண்குழை #இலக்கணக்குறிப்பு தருக

 - #பண்புத்தொகைகள்

💐 மீளா ஆள் இலக்கணக்குறிப்பு தருக.

 - #ஈறுகெட்ட_எதிர்மறைப்_பெயரெச்சம்

💐 பிரித்து எழுதுக: -

பிணியறியோம் - #பிணி + #அறியோம்


1. கல்வியில் சிறந்த தமிழ்நாடு என புகழ்ந்தவர் பாரதியார்
2. இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர் மருதூர்
3. திருக்குறளில் அன்புடைமை என்னும் அதிகாரத்தில் வரும் குறளின்
எண்ணிக்கை 10
4. உ.வே.சா பிறந்த மாவட்டம் திருவாருர் மாவட்டம்
5. உ.வே.சா பதிப்பித்த அந்தாதி நூல்களின் எண்ணிக்கை 3
6. உ.வே.சா பதிப்பித்த உலா நூல்களின் எண்ணிக்கை 9
7. உ.வே.சா நினைவு இல்லம் உள்ள இடம் உத்தமதானபுரம்
8. உ.வே.சாவிற்கு நடுவணரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு 2006
9. ஜப்பானியர் வணங்கும் பறவை கொக்கு
10. காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலையில் புகழ் பெற்றவர்கள் ஜப்பானியர்கள்
11. முயர்சிக்கு நோய் ஒரு தடை இல்லை
12. பதினெண்கீழ்கணக்கு நூல்கள் பெரும்பாலும் அறநூளகள்
13. ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம் என கூறியவர் பாரதியார்
14. உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம் என கூறியவர் பாரதியார்ரூசுல்லிதாசன்
15. கடும் வெப்பத்தை எதிர்கொள்ளும் பறவை ப+நாரை
16. நீர் நிலையில் வாழும் பறவை முக்குளிப்பான்
17. மலைகளில வாழும் பறவை கொண்டை உழவாரன்
18. சமவெளியில் வாழும் பறவை சுடலைகுயில் செங்காகம்
19. பறவைகளின் வகைகள் 5
20. உதய மார்த்தாண்டம் பறவை சரணாலயம் உள்ள இடம் திருவாரூர்
21. உலகில் மிக நீளமான நஞ்சுள்ள பாம்பு எத்தனை அடி நீளம் உள்ளது 15
22. பாம்பின் பற்கள் எவ்வாறு இருக்கும் உள்நோக்கி வளைந்து இருக்கும்
23. பாம்புகள் கொல்லப்படுவதை தடுக்க சட்டம் இயற்றிய ஆண்டு 1972
24. உயிர்மெய் எழுத்துக்கள் 216
25. நான்மணிகடிகை ஒவ்வொரு பாட்டும் எத்தனை அறகருத்தை கூறுகிறது நான்கு
26. கடிகை என்பது நகை, அணிகளண்
27. குதிரை வண்டியில் உயிருக்கு பெண்மணிக் குழந்தை இருவரையும் காப்பாற்றியவர் ராஜேந்திரநாத் விவேகானந்தர்
28. தழைய வெப்பம் தழைக்கவும் மெய் தாங்கா வெப்பம் நீங்கவும் என பாடியவர் பாரதிதாசன்
29. பாரதிதாசனின் கவிதை நூல் பாண்டியன் பரிசுஇ அழகின் சிரிப்பு
30. அரைவன் என்பது புலவரின் குடிபெயர்
31. நேரு மகள் இந்திராவுக்கு எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை கடிதம் எழுதினார் 1922-1964
32. நேரு இருந்த சிறை அல்மோரா சிறை
33. மில்டன் ஒரு ஆங்கில கவிஞர்
34. காளிதாசர் ஒரு வடமொழி நாடக ஆசிரியர்
35. அரையன் என்ற சொல் குறிப்பது
36. ஆறு என்ற சொல் எத்தனை பொருளை குறிக்கிறது மூன்று
37. தழை என்பது பெயர்ச்சொல்,வினைச்சொல்
38. நேரு விரும்பி படித்த நூல்கள் எந்த மொழியில் இருந்தன ஆங்கிலம்
39. பாம்பாட்டிச் சித்தர் என்பது என்ன இலக்கணம் காரணப்பெயர்
40. ஜக்கிய நாட்டு அவையின் யுனஸ்கோ விருது பெரியருக்கு வழங்கிய ஆண்டு 1970
41. பெரியாருக்கு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு 1978
42. நாடாகு ஒன்றோ,காடாகு ஒன்றோ இடம் பெறும் நூல் புறநானூறு(ஒளவையார்)
43. சங்க கால பெண்பாற் புலவர்கள் மிகுதியான பாடல் பாடியவர் ஒளவையார்
44. எழுச்சிமிக்க கவிதைகள் எழுதுவதில் வல்லவர் பட்டுகோட்டை கல்யாண சுந்தரனார்
45. மூத்துராமலிங்க தேவர் எத்தனை ஊர்களில் இருந்து நிலங்களை உழவர்களுக்கு பங்கிட்டு கொடுத்தார் 32
46. தண்ணீர் விட்டோ வளர்த்தோம் கண்ணீரால் காத்தோம்" யார் வாக்கு பாரதியார்
47. முத்துராமலிங்க தேவர் யாரை தன் அரசியல் வழிகாட்டியாக கொண்டார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
48. ஆங்கில அரசு வாய்ப்பூட்டுச் சட்டம் வட இந்தியாவில் திலகருக்கும் தென் இந்தியாவில் முத்துராமலிங்க தேவர்
49. பனை மரத்தில் இருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு என்று கூறியவர் முத்துராமலிங்க தேவர்
50. "தேசியம் காத்த செம்மல்" என்று முத்துராமலிங்க தேவரை பாராட்டியவர் திரு.வி.க
51. முத்துராமலிங்க தேவர் வெற்றி பெற்ற தேர்தலின் எண்ணிக்கை 5
52. முத்துராமலிங்க தேவர் மக்கள் முன்னேற்றத்திற்காக எத்தனை ஆண்டுகள் பாடுபட்டார் 55
53. முத்துராமலிங்க தேவர் இறந்த ஆண்டு 1963ழஉவ30
54. தேசியம்,தெய்வீகம் இரண்டையும் இரு கண்களாக போற்றியவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவனார்
55. பசும்பொன்னார் தம் சொத்துக்களை எத்தனை பாகங்களாக பிரித்தார் 17
56. பசும்பொன்னாருக்கு நடுவணரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு 1995
57. மதுரைக்கு நேதாஜி வருகை தந்த ஆண்டு 1938
58. மனிதனின் மனநிலையை அருள்,இருள்,மருள்,தெருள் என குறிப்பிட்டவர் பசும்பொன்னார்
59. தென் பாண்டி சீமையின் முடிசூடா மன்னர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
60. வலிமையில் கரிகாலனாக கொடையில் கர்ணனாக இருந்தவர் பெரியார்
61. முத்துராமலிங்க தேவருக்கு சிலை நிறுவியுள்ள இடம் சென்னை
62. பசும்பொன்னார் பிறந்த ஆண்டு 1908ழஉவ30
63. பசும்பொன்னாரின் தாயார் பெயர் இந்திராணி
64. இராமநாதபுரத்தில் பசும்பொன்னார் படித்த போது பரவிய நோய் பிளேக்
65. செய்யும் தொழிலே தெய்வம் அந்தத் திறமை தான் நமது செல்வம் எனக் கூறியவர் பட்டுகோட்டையார்
66. மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார்
67. காவிரி பாயும் சோழ வள நாடு கலைகளின் விளைநிலம் நிறைந்த ஊர் கும்பகோணம்
68. கும்பகோணத்தின் தென்புறம் பாயும் ஆறு அரசிலாறு
69. ஜராதீஸ்வரர் கோயில் உள்ள இடம் தாராசுரம்
70. இருபுறமும் யானைகளும்,குதிரைகளும் பூட்டிய இரதம் போல் அமைந்த மண்படம் தாராசுரம்
71. அறுபத்து மூன்று நாயன்மார்களின் கதைகளை கூறும் கல்வெட்டு உள்ள இடம் தாராசுரம்
72. கோயிலின் நுழைவு வாயிலில் எத்தனை கருங்கற் படிகள் சரிகமபதநி நாதப் படிகளாக 7 உள்ளது
73. கியூரி அம்மையார் போலாந்து நாடு
74. கியூரி அம்மையாரின் பெற்றோருக்கு எத்தனை குழந்தைகள் 5
75. கியூரி அம்மையார் தன் சகோதருள் இளையவர்
76. கியூரி யும் அவர் கணவனும் முதலில் கண்டறிந்தது பொலோனியம்
77. 2-வது முறையாக கியூரி யும் அவர் கணவரும் கண்டறிந்தது. ரேடியம்
78. மேரி கியூரி க்கும் பியரி கியூரி கும் நோபல் பரிசு கிடைத்தது 1903
79. கியூரி அம்மையார் கண்டறிந்த ரேடியத்தை தனியார் நிறுவனம் எத்தனை டாலருக்கு வாங்க முன் வந்தது 50 லட்சம் லாலர்
80. கியூரி அம்மையார் 2-வதாக நோபல் பரிசு பெற்றது 1911
81. கியூரி அம்மையார் எதற்காக 2-வதாக நோபல் பரிசு பெற்றார் ரேடியத்தின் அணு எடை
82. கியூரி அம்மையார் இறந்த ஆண்டு 1934
83. செயற்கை கதிர்வீச்சுப் பற்றிய வேதியியல் ஆராய்ச்சிக்கு பரிசு கிடைத்த ஆண்டு 1935
84. கியூரி அம்மையார் குடும்பம் பெற்ற நோபல் பரிசு எண்ணிக்கை
85. பெயர்ச்சொல் 2 வகைப்படும்
86. பால் எத்தனை வகைப்படும் 5 வகைப்படும்
87. கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தான் இப்பாடல் எந்த வகை தனிப்பாடல்
88. அல்லைத் சொல்லித்தான் ஆசைத்தான் நோவத்தான் ஜயோ என்ற பாடலை இயற்றியவர் ராமச்சந்திர கவிராயர்
89. பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயண கவி
90. டெலஸ்கோப் என்பதன் தமிழ்ச்சொல் தொலைநோக்கி
91. மைக்ராஸ்கோப் என்பதன் தமிழ்ச்சொல் நுண்ணோக்கி
92. பல்கலைக்கழகம் என்பதன் தமிழ்ச்சொல் சர்வகலாசாலை
93. மீடியா என்பதன் தமிழ்ச்சொல் ஊடகம்
94. முன்னாளில் மரப்பு நாடு என்பது எந்த நாடுகளுள் ஒன்று பாண்டிய மண்டலம்
95. நம்மாழ்வார் பிறந்த ஊர் குருகூர்
96. சென்னை எத்தனை ஆண்டுகளுக்கு முன் பட்டினமாக காணப்பட்டது 300
97. புரம் என்னும் சொல் குறிப்பது ஊர்
98. புலம் என்னும் சொல் குறிப்பது நிலம்
99. வானரங்கள் கனிகொடுத்து மந்தியோடு கொஞ்சும் மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும் என்னும் பாடலை பாடியவர் திரிகூடராசப்ப கவிராயர்
100.துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்லுவதில்வல்லவர்ராமசந்திர கவிராயர்


இரத்தம்...,
***********

🍎 இரத்த ஓட்டத்தை கண்டரிந்தவர் - வில்லியம் ஹார்வி

🍎 இரத்த வகைகளைக் கண்பிடித்தவர் - கார்ல்லாண்ட் ஸ்டீனர்

🍎  இரத்த வகைகள் - A, B, AB, O

🍎 இரத்தத்தில் Rh Factor முதன்முதலில் எந்த உயிரியியல் இருந்து கண்டுபிடிக்க பட்டது -   Rhesus குரங்கில்

🍎 இரத்தத்தில் Rh  காரணி இருந்தால் - பாசிடிவ்  (Positive)

🍎 இரத்தத்தில் Rh  காரணி இல்லாத வகை - நெகடிவ் (Negative)

🍎 சராசரி எடையுள்ள மனித உடலில் இரத்த அளவு - 5 லிட்டர்

🍎 இரத்தம் சிவப்பாக இருக்க காரணம் - ஹீமோகுளோபின் என்ற நிறமி

🍎 இரத்தத்தில் உள்ள திரவப் பொருள் - பிளாஸ்மா (Plasma)

🍎 இரத்தத்தில் சராசரி குளூகோஸ் அளவு - 100-120mg%

🍎 மனித உடலில் சராசரி இரத்த அழுத்தம் - 120/80mm Hg

🍎 இரத்தத்தில் சக்கரை அளவை கட்டுப்படுத்தும் ஹர்மோன் - இன்சுலின்

🍎  அனைத்து வகையான இரத்தத்தை ஏற்றுக் கொள்ளும் இரத்த வகை - AB
🍎  அனைவருக்கும் இரத்தம் வழங்கும் இரத்த வகை -  O

🍎 120 mmHg என்பது - Systolic Pressure

🍎 80 mmHg என்பது - Diastolic Pressure

🍎 இரத்த செல்களின் வகைகள் - 3
1. சிவப்பு இரத்த செல்கள்
2. வெள்ளை இரத்த செல்கள்
3. இரத்த தட்டுகள்

1. இரத்த சிவப்பு அணுக்கள்:-
🍓 இரத்த சிவப்பு அணுக்கள் வேறுபெயர் - எரித்ரோசைட்டுகள்

🍓 இரத்த சிவப்பு அணுக்கள் உருவாகும் இடம் - எலும்பு மஜ்ஜை

🍓 இரத்த சிவப்பு அணுக்கள் வடிவம் - இரு பக்கமும் குவித்த தட்டையான வட்ட வடிவம்

🍓 இரத்த சிவப்பு அணுக்கள் சிவப்பாக இருக்க காரணம் - ஹீமோகுளோபின்
🍓 ஆண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள்  எண்ணிக்கை -  5.2 மில்லியன்

🍓 பெண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள்  எண்ணிக்கை - 4.5 மில்லியன்

🍓 ஆண்கள் இரத்த சிவப்பு அணுக்கள்  வாழ்நாள் - 120 நாட்கள்
🍓 பெண்கள் இரத்த சிவப்பு அணுக்கள் - 110 நாட்கள்

🍓 இரத்த சிவப்பு அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய் - இரத்த சோகை (அனிமியா)
🍓  இரத்த சிவப்பு அணுக்கள் அதிகரித்தால் ஏற்படும் நோய் - பாலிசைதீமியா

2. இரத்த வெள்ளை அணுக்கள்:-
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் வேறு பெயர் - லியூகோசைட்டுகள்
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் உருவாகுமிடம் - எலும்பு மஜ்ஜை, நிணநீர் சுரப்பி

🍉 இரத்த வெள்ளை அணுக்கள் வடிவம் - வடிவமற்றது
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் ஆயுட்காலம் - 2 (அ) 3 வாரம்
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய் - லியூகோபினியா

🍉 இரத்த வெள்ளை அணுக்கள் அதிகமானால் ஏற்படும் நோய் - லூகீமியா
🍉 உடலின் போர்வீரர்கள் என்று அழைக்கப்படுவது - இரத்த வெள்ளை அணுக்கள்

🍉 லியூகோசைட்டுகள் வகைகள் - 2
1. துகளுள்ள வெள்ளை அணுக்கள்
2. துகளற்ற வெள்ளை அணுக்கள்

🍉 துகளுள்ள வெள்ளை அணுக்கள் வகைகள் -3
☆ நியூட்ரோஃபில்கள்
☆ இயோசினாஃபில்கள்
☆ பேசோஃபில்கள்

🍉 துகளற்ற வெள்ளை அணுக்கள் வகைகள் - 2
☆ லிம்போசைட்டுகள்
☆ மோனோசைட்டுகள்

🍉 மனித உடலில் இரத்த வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை - 8000 - 10,000 வரை

🍍இரத்த வெள்ளை அணுக்கள் விகிதாச்சார எண்ணிக்கை கீழ் வருமாறு:-
🍉 நியூட்ரோஃபில்கள் - (60 - 70%)

🍉 இயோசினாஃபில்கள் - (0.5 - 3.0%)

🍉 பேசோஃபில்கள் - 0.1%

🍉 லிம்போசைட்டுகள் - (20 - 30%)

🍉 மோனோசைட்டுகள் - (1 - 4%)

3. இரத்த தட்டுகள் :-
🍈 இரத்த தட்டுகள் வேறு பெயர் - திராம்போசைட்டுகள் (பிளேட்லெட்டுகள்)

🍈 இரத்த தட்டுகள் வாழ்நாள் - 5 - 9 நாட்கள்

🍈 இரத்த உறைதலில் முக்கிய பங்கு வகிப்பது - இரத்த தட்டுகள்

🍈 இரத்த தட்டுங்கள் எண்ணிக்கை - 2,50,000 - 5,00,000


1. 📚 தமிழ் தென்றல் - திரு.வி.க.
2. 📚 தமிழ் வியாசர் - நம்பியாண்டார் நம்பி
3. 📚 தமிழ் வரலாற்று நாவிலின் தந்தை - கல்கி
4. 📚 தமிழ் தாத்தா - உ.வே.சாமிநாதன்
5. 📚 தமிழ் நாடகத் தந்தை - பம்மல் சம்பந்த முதலியார்
6. 📚 தமிழ் நாடக தலைமையாசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்
7. 📚 தமிழ் உரைநடையின் தந்தை - வீரமாமுனிவர்
8. 📚 தமிழ் கவிஞருள் இளவரசர் - திருத்தக்க தேவர்
9. 📚 தமிழ் முனி - அகத்தியர்
10. 📚 தமிழ் மகள் - ஔவையார்
11. தமிழ் நந்தி - மூன்றாம் நந்திவர்மன்
12. 📚 தமிழ் நாட்டுப்புறவியலின் தந்தை - வானமாமலை
13. 📚 தமிழ் நாட்டின் ரசூல் கம்சத்தேவ் - பாரதிதாசன்
14. 📚 தமிழ் நாட்டின் பெர்னாட்ஷா - மு. வரதராசனார்
15. 📚 தமிழ் நாட்டின் அட்லி சேஸ் - சுஜாதா
16. 📚தமிழ் இலக்கிய விடிவெள்ளி - பாரதியார்
17. 📚 தமிழ் நாட்டின் டால்ஸ்டாய் - ஜீவா
18. 📚 தமிழ் மாணவன் - ஜி.யூ.போப்
19. 📚 தமிழில் புதுக்கவிதை தோற்றிவித்தவர் - ந.பிச்சமூர்த்தி
20. 📚 தமிழில் உபநிடதங்கள் படைத்தவர் – தாயுமானவர்

#TNPSC_Tamil - 2019

#பொதுத்தமிழ்

#இரட்டுறமொழிதல், #பாஞ்சாலி_சபதம்

பற்றிய முக்கிய வினா விடைகள்!!

🌷 ஒரு #சொல்லோ, #சொற்றொடரோ #இருபொருள்பட வருவது ---------- எனப்படும்.

#இரட்டுற_மொழிதல்_அணி

🌷 #இரட்டுற_மொழிதல் அணியின் வேறு பெயர்?

#சிலேடை

🌷 #செய்யுளிலும் #உரைநடையிலும் #மேடைப்பேச்சிலும் ---------- பயன்படுத்தப்படுகின்றன.

#சிலேடைகள்

🌷 #தமிழழகனாரின் இயற்பெயர்?

 #சண்முகசுந்தரம்

🌷 --------- வருகின்ற செய்தியைக் கேட்ட வலிமை மிக்க பாண்டவர் ஐவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்?

 #விதுரவன்

🌷 பாண்டவர் நாடு அழியும் பாவச் செயலுக்குத் தானும் துணைபுரிய நேர்ந்ததனை எண்ணி #வருந்தியவன் ?

 #விதுரன்

🌷 பாஞ்சாலி சபதம் எத்தனை #சருக்கத்தை கொண்ட #குறுங்காப்பியம் ஆகும்?

#ஐந்து

🌷 #பாஞ்சாலி_சபதம் எத்தனை #பாடல்களைக் கொண்டது?

#_412

🌷 #வியாசரின் பாரதத்தைத் தழுவி எழுதப் பெற்ற நூல் எது?

#பாஞ்சாலி_சபதம்

🌷 காளமேகப்புலவரின் #காலம்?

#15_ஆம்_நூற்றாண்டு

🌷 #சரஸ்வதி_மாலை என்னும் நூலை இயற்றியவர்?

#காளமேகப்புலவர்

🌷 #ஆசு_கவி என அழைக்கப்படுபவர்? -

#காளமேகப்புலவர்

🌷#காளமேகப்புலவர் எந்த சமயத்தில் இருந்து எந்த சமயத்திற்கு மாறினார்? -

#வைணவ சமயத்தில் இருந்து #சைவ சமயத்திற்கு

🌷 #ஓடும்_சுழிசுத்தம் உண்டாகும் துன்னலரைச்
   சாடும் பரிவாய்த் தலைசாய்க்கும் - என பாடியவர்?

 #காளமேகப்_புலவர்

🌷 #நாடகத்தமிழ்_நூல்களுள் தலையாய #சிறப்பினையுடையதாக விளங்கும் நூல் எது?

#மனோன்மணீயம்


🍅தேசிய அறிவியல் ஆய்வகங்கள்🍅🍅🍅🍅🍅

1. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் எங்குள்ளது - தும்பா (திருவனந்தபுரம்)
2. அடையாறு புற்றுநோய் கழகம் எங்கு அமைந்துள்ளது - சென்னை
3. தேசிய கனிமங்கள் பரிசோதனைக்கூடம் எங்கு அமைந்துள்ளது - ஜாம்ஷெட்பூர்
4. மத்திய கட்டிடக்கலை ஆய்வு மையம் எங்கு அமைந்துள்ளது - ரூர்கி
5. தேசிய கடல் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது -பனாஜி (கோவா)
6. தேசிய பௌதிக ஆராய்ச்சிக் கூடம் எங்கு அமைந்துள்ளது - நியூடெல்லி
7. இந்திய தேசிய அறிவியல் பதிவுமையம் -----------------யில் உள்ளது - நியூடெல்லி
8. தேசிய இராசாயன ஆய்வுக்கூடம் எங்கு அமைந்துள்ளது - புனே
9. தமிழ்நாட்டில் நெல்லுக்கான ஆராய்ச்சி மையம் உள்ள இடம் - ஆடுதுறை (தஞ்சாவூர்)
10. தேசிய வைரஸ் ஆய்வு மையம் எங்குள்ளது - புனே
11. மத்திய தோல் ஆராய்ச்சி மையம் உள்ள இடம் - சென்னை
12. தேசிய விண்வெளி ஆய்வகம் அமைந்துள்ள இடம் - பெங்களூர்
13. இந்திய அணுசக்தி கமிஷன் எங்குள்ளது - மும்பை
14. மத்திய சாலை ஆய்வு மையம் உள்ள இடம் - நியூடெல்லி
15. இந்தியாவில் பண நோட்டுகள் அச்சடிக்கும் அச்சகம் உள்ள இடம் – நாசிக்


#TNPSC_CCSE-IV Exam 2019 :

#ஒளவையார்_பாடல்கள் தொடர்பான செய்திகள்

🏵 #அறிவில்_சிறந்தவர் #ஒளவையார் என்பது அனைவரும் அறிந்ததே.

🏵 இவர் #சிறுவர்களை_நல்வழிப்படுத்த பாடும் பாடல்களில் நாயன்மார்களையும், நம்மாழ்வாரையும் குறிப்பிடுகின்றார்.

🏵 #ஆத்திச்சூடியை, மாணவர்கள் மனப்பாடம் செய்யும் வகையில் சிறு சொற்றொடர்களைக் கொண்டு (108 பாடல்கள்) அமைத்துள்ளார்.

🏵 #கொன்றை_வேந்தன் என்ற நூலைப் படிப்படியாக மனவளர்ச்சி பெற்ற மாணவர்கள் கற்கும் முறையில் (91 பாடல்கள்) அமைத்துள்ளார்.

🏵 இவரின் பாடல்கள் #எளிமையும், #இனிமையும் கொண்டு விளங்குகின்றன.

🏵 இவரின் நூல்களில் பல அரிய கருத்துக்களையும், #நீதிகளையும் காணலாம்.

🏵 இவரது பாடல்களில் சமயங்கள் பற்றியும், சில #தத்துவங்களை பற்றியும் தெரிவித்துள்ளார்.

🏵 #நல்வழி என்னும் நூலில் சிவபெருமானின் #ஐந்தெழுத்தும் #திருநீறும் சிறப்பிக்கப்படுகிறது.

🏵 #கம்பர், #புகழேந்தி, ஒட்டக்கூத்தர் முதலிய புலவர்கள் இவர் காலத்தில் வாழ்ந்ததாக கூறுவர்.

🏵 #விநாயகர்_அகவல், ஞானக் குறள், அசதிக் கோவை ஆகிய நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.

🏵 #மூதுரை என்ற நூல், #வாக்குண்டாம் என்ற கடவுள் வணக்கத்துடன் (30 பாடல்கள்) தொடங்குகின்றது.

🏵 மக்கள் தங்களுடைய வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல வழிகளை நல்வழி என்ற நூலில் (40 பாடல்கள்) தெளிவுபடக் கூறியுள்ளார்.

#சிறப்புத்_தொடர்கள் :

🌺 அறம் செய்ய விரும்பு.

🌺 இளமையில் கல்.

🌺 சேரிடம் அறிந்து சேர்.

🌺 இல்லறம் அல்லது நல்லறம் அன்று.

🌺 குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.


 TNPSC CCSE-4 Exam 2019 :

#இனியவை_நாற்பது

#தொடர்பான_செய்திகள்

🌺#பூதஞ்சேந்தனார் என்பவர் இயற்றிய நூல் இனியவை நாற்பது.

🌺 இவரது காலம் கி.பி. #இரண்டாம் நூற்றாண்டு ஆகும்.

🌺 இவர் வாழ்ந்த ஊர் #மதுரை.

🌺 இவர் #சிவன், #திருமால், #பிரம்மன் ஆகிய மூவரையும் பற்றி பாடியுள்ளார்.

🌺 பண்டைக்காலத் தமிழ்நூல் தொகுப்புகளில் ஒன்றான #பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று.

🌺 உலகில் நல்ல அல்லது #இனிமையான_விடயங்களை #எடுத்துக்கூறுவதன் மூலம் மக்களுக்கு #நீதி_புகட்டுவதே இந்நூலின் நோக்கம்.

🌺 இதில் ஒவ்வொரு பாடலும் #மூன்று #நல்ல_விடயங்களை எடுத்துக் கூறுகின்றது.

🌺 இந்நூல் #40_பாடல்களைக் கொண்டது.

🌺 இவற்றுள், '#ஊரும்_கலிமா" எனத் தொடங்கும் பாடல் ஒன்று மட்டுமே (8) #பஃறொடை_வெண்பா ஆகும். ஏனைய வெண்பா அனைத்தும் #இன்னிசை #வெண்பாவினால் ஆனது.

🌺 வாழ்க்கையில் நன்மை தரும் கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து '#இனிது" என்ற தலைப்பிட்டு அமைந்திருப்பதால் இஃது '#இனியவை #நாற்பது" எனப்பட்டது.

🌺 இந்நூல் #பிரம்மன்_வழிபாடு பற்றி குறிப்பிட்ட ஒரே பதினெண் கீழ்க்கணக்கு நூல் ஆகும்.

🌺 இதனை '#இனிது_நாற்பது", '#இனியது_நாற்பது", '#இனிய_நாற்பது" என்றும் உரைப்பர்.

🌺 இந்நூலின் ஆசிரியர் #பெண்ணை #இழிவுபடுத்தி_நஞ்சாகப் பாடியுள்ளார்.

🌺 இந்நூலில் #124_இனிய_சொற்கள் கூறப்படுகின்றன.

*2019 மத்திய அமைச்சரவையில் மாநிலங்களின் உறுப்பினர்கள் எண்ணிக்கை*

#மோடி அமைச்சரவை  2019
1. உத்தரப் பிரதேசம் - 10
2. மகாராஷ்டிரா - 7
3. மத்தியப் பிரதேசம் - 5
4. பீகார் - 6
5. கர்நாடகா - 4
6. அரியானா - 3
7. குஜராத் - 3
8. ராஜஸ்தான்    - 3
9. ஜார்க்கண்ட்    - 2
10. ஒடிசா - 2
11. பஞ்சாப் - 2
12. மேற்கு வங்கம் - 2
13. அருணாச்சல பிரதேசம் - 1
14. அசாம் - 1
15. சட்டீஸ்கர் - 1
16. டெல்லி - 1
17. கோவா - 1
18. இமாச்சல் - 1
19. காஷ்மீர் - 1
20. தெலங்கானா - 1
21. உத்தரகாண்ட் - 1

#TNPSC_CCSE_IV  - 2019

#பொதுத்தமிழ்

#பொருத்தமான_பொருளை_தேர்வு

#செய்தல்!!

💐 மின்னாள் - ஒளிரமாட்டாள்

💐 மூவாது - முதுமை அடையாமல்

💐 நாறுவ - முளைப்ப

💐 தாவா - கெடாதிருத்தல்

💐 புரிசை - மதில்

💐 அணங்கு - தெய்வம்

💐 புழை - சாளரம்

💐 மாகால் - பெருங்காற்று

💐 பணை - முரசு

💐 கயம் - நீர் நிலை

💐 நியமம் - அங்காடி

💐 மைவனம் - மலைநெல்

💐 முருகியம் -குறிஞ்சிப்பறை

💐 பூஞ்சினை - பூக்களை

💐 செறு - வயல்

💐 சதிர் - நடனம்

💐 தாமம் - மாலை

💐 அடிசில் - சோறு

💐 மடிவு - சோம்பல்

💐 கொடியன்னார் - மகளிர்

💐 வட்டம் - எல்லை

💐 வெற்றம் - வெற்றி

💐 ரவி - கதிரவன்

💐 நசை - விருப்பம்

💐 நல்கல் - வழங்குதல்

💐 வேழம் - ஆண்யானை

💐 பொளிக்கும் - உரிக்கும்

💐 ஆறு - வழி

💐 விதிர்வித்து - உடல் சிலிர்த்து

💐 விரை - மணம்

💐 ததும்பி - பெருகி

💐 சயசய - வெல்க வெல்க

💐 அழுக்காறு - பொறாமை


#TNPSC_CCSE_4_Exam_2019

#முதுமொழிக்காஞ்சி

தொடர்பான செய்திகள்

🌺 இந்நூலின் ஆசிரியர் மதுரைக் #கூடலூர்_கிழார்.

🌺 இவர் #ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

🌺 #ஐங்குறு_நூற்றைத் தொகுத்தவரும் இவரே.

🌺 #கல்வியை விட #ஒழுக்கமே சிறந்தது எனக் கூறும் நூல்.

🌺 இந்நூலில் #100_பாடல்கள் உள்ளன. பிரிவுக்கு #பத்து பாடல் வீதம் 10 பிரிவுகள் உள்ளன.

🌺 ஒவ்வொரு பத்தின் முதலடியும் #ஆர்கலி_உலகத்து எனத் தொடங்கும்.

🌺 இந்நூல் #அறவுரைக்_கோவை எனவும் அழைக்கப்படுகிறது.

🌺 இந்நூல், கற்போரின் #குற்றங்களை நீக்கி, அறம் பொருள் இன்பங்களை அடைவதற்கான வழிமுறைகளை கூறி அறவழி நடக்கச் செய்யும்.

🌺 இப்பாடல்கள் #குறள்வெண் #செந்துறை என்ற யாப்பால் இயற்றப்பட்டவை.

🌺 #சிறந்ததெனக் கூறப்படும் #10 பொருளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் நூல்.

🌺 காஞ்சி என்ற #புறத்திணையால் பெயர் பெற்ற நூல் இதுவாகும்.

🌺 இந் நூல் #நிலையாமையைப் பற்றி கூறுகிறது.

🌺 முதுமொழிக்காஞ்சி என்பது #காஞ்சித்_திணையின் துறைகளுள் ஒன்று.