ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் செயல்படுத்தி வரும் மத்திய அரசு திட்டங்கள்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் செயல்படுத்தி வரும் மத்திய அரசு திட்டங்கள்

# மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம்
(Swachh Bharat Mission)
# சுதேசி தர்ஷன் திட்டத்தின் கீழ்
பாரம்பரிய சுற்றுலா மற்றும் ஆன்மீக சுற்றுலா
# ராஷ்டிரிய கிரிஷ் விகாஸ் யோஜனா திட்டம் (RKVY)
# கடற்கரை சுற்றுலா என்ற தொகுப்பு திட்டம்
# நகர புனரமைப்புத் திட்டம் (AMRUT)
# தேசிய சுகாதார திட்டம்
(National Health Mission)
#தேசிய நீரியல் திட்டம் கீழ் நீர் ஆதார திட்டமிடுதல் மற்றும் மேலான்மை திட்டம்
# மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம்
(MGNREGA)
# ராஷ்ட்ரிய உச்சாதார் சிக்‌ஷா அபியான் திட்டம் (RUSA)
# பிரதம மந்திரி திறன் மேம்பாடுத் திட்டம்
# பிரதம மந்திரி ஃபசல் பீமா யோஜனா
# மத்திய அரசின் மீனவர் மேம்பாட்டு கழகம் 'நீலப்புரட்சி' திட்டம்
#தேசிய பால் பண்ணை மேம்பாட்டு வாரியம் (NDDB)
# பிரதம மந்திரி கிரிஷ் சிஞ்சாய் யோஜனா திட்டம் (PMKSY)
# பிரதம மந்திரி கிராம டிஜிட்டல் திட்டம்
# மத்திய மருத்துவக் கருவி வழங்கும் திட்டம்
# பிரதம மந்திரி சுரக்‌ஷா பீமா போஜனா திட்டம்
# மத்திய அரசு தேசிய நகர வாழ்வாதார திட்டம் (NULM)
# அனைவருக்கும் வீட்டு வசதி அளிப்பதற்கான (PMAY) என்னும் மைய ஊக்காதரவுத் திட்டம்
# மத்திய ஆய்வு & சான்றளிப்பு மையம் நிறுவும் திட்டம் (சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலைகள்)
# ஜவஹர்லால் நேரு தேசிய சூரிய சக்தி இயக்க ஆற்றல் திட்டம்
# மத்திய அரசின் வேளாண் விரிவாக்க மேலாண்மை (ATMA)
# தேசிய தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் (NHM)
# மண்வளப் பாதுகாப்பு திட்டம் (SHM)
# எண்ணெய் வித்துக்கள் மற்றும் பாமாயில் இயக்க திட்டம்
# மத்திய உணவுப் பாதுகாப்புத் திட்டம் (FSM)
# தீனதயாள் உபாத்யாய கிராம ஜோதி யோஜனா (DDUGJY)

திங்கள், 19 பிப்ரவரி, 2018

டி.எம்.சி” என்றால் என்ன தெரியுமா??



டி.எம்.சி” என்றால் என்ன தெரியுமா??

Thousand Million Cubic[TMC] ஆயிரம் மில்லியன் கன அடி என்று பொருள்.
ஒரு டிஎம்சி கணக்கெடுப்பு - 1 பில்லியன் கன அடி ஆகும்.
கன அளவு : ஒரு பொருள் எவ்வளவு இடத்தை எடுக்கின்றது என்பதைக் குறிக்கும் ஒரு கணித அளவாகும்.

அப்படியெனில் ஒரு கன அடி என்பது 28.3 லிட்டர் நீருக்கு சமம்.
டிஎம்சி அளவிடும் முறை :
கால்வாயின் குறுக்கே ஒரு சிறிய தடுப்பணையை கட்டி அதில் ஒரு மீட்டருக்கு ஒரு மீட்டர் என்ற அளவில் ஒரு மதகு மட்டும் இருக்கும், மதகை திறப்பதன் மூலம் ஒரு வினாடியில் வெளியேறும் நீரின் அளவை கணக்கிட்டால் போதும். ஒரு மணி நேரத்தில் எத்தனை லிட்டர் நீர் வெளியேறியது என்பதை கணக்கிடலாம்.

டிஎம்சியின் கணக்கீடு மற்றும் அவற்றின் பயன்பாடுகள் :

ஒரு டிஎம்சி எவ்வளவு லிட்டர் - 1 பில்லியன்(100 கோடி) கன அடி.
கடந்த முறை மற்றும் இம்முறை வழங்கப்பட்ட நீரின் அளவு என்ன? மற்றும் அவற்றின் நன்மை தீமைகள் :

கடந்த முறை வழங்கிய டிஎம்சி யின் அளவு - 192 டிஎம்சி.

இம்முறை வழங்கிய டிஎம்சி யின் அளவு  177.25 டிஎம்சி.

கடந்த முறையை விட குறைக்கப்பட்ட 14.75 டிஎம்சி நீரால் தமிழகத்திற்கு 41,767,34,87,232 (சுமார் 41,767 கோடியே 34 லட்சம்) லிட்டர் நீர் இழப்பு ஏற்படும்.

தமிழ் நாட்டின் மொத்த விவசாய விளை பரப்பளவு :
தமிழகத்தில் மொத்தம் 22.3 லட்சம் ஹெக்டேர் பாழ்பட்ட நிலம் இருப்பது வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.

காவிரி நீரால் தமிழ்நாட்டில் பாசனம் பெறும் நிலப்பரப்பு 44,000 சதுர கி.மீ.

காவிரி நீரால் கர்நாடகாவில் பாசனம் பெறும் நிலப்பரப்பு 34,000சதுர கி.மீ.

காவிரி நீரால் புதுச்சேரி பாசனம் பெறும் நிலப்பரப்பு 148 சதுர கி.மீ.

காவிரி கேரளாவில் பாசனம் பெறும் நிலப்பரப்பு 2,800 சதுர கி.மீ.

நெல் பயிர் சாகுபடிக்கு இரண்டிலிருந்து மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 20,000 முதல் 40,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகின்றது.

காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பான இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கு வழங்கும் நீரின் அளவு 14 டிஎம்சி அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளதால் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான விவசாயம் பாதிக்கும் என்று காவிரி டெல்டா விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறையில் 1573 உதவியாளர் வேலை


தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறையில் 1573 உதவியாளர் வேலை

தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள 1573 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டு வருகிறது.
தற்போது தஞ்சாவூர், கரூர், திருவண்ணாமலை, வேலூர், கன்னியாகுமாரி, நீலகிரி, ராமநாதபுரம், தேனி, திருநெல்வேலி, விருதுநகர், திருவாரூர் போன்ற மாவடங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, விழுப்புரம், சேலம், திருப்பூர் மாவடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவியாளர்
மாவட்ட வாரியான காலியிடங்கள் மற்றும் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
* தஞ்சாவூர் - 201
கடைசி தேதி: 26.02.2018
* கரூர் - 24
கடைசி தேதி: 22.02.2018
* திருவண்ணாமலை - 57
கடைசி தேதி: 26.02.2018
* வேலூர் - 67
கடைசி தேதி: 22.02.2018
* கன்னியாகுமாரி - 48
கடைசி தேதி: 26.02.2018
* நீலகிரி - 17
கடைசி தேதி: 21.02.2018
* ராமநாதபுரம் - 18
கடைசி தேதி: 21.02.2018
* தேனி - 34
கடைசி தேதி: 22.02.2018
* திருநெல்வேலி - 62
கடைசி தேதி: 23.02.2018
* விருதுநகர் - 43
கடைசி தேதி: 26.02.2018
* திருவாரூர் - 43
கடைசி தேதி: 27.02.2018
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் மற்றும் கால்நடைகளை கையாள தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் அருந்தியர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வகுப்பினர் 35க்குள்ளும், மிகவும் பிறப்டுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்(முஸ்லீம்) 32க்குள்ளும், பொதுபிரிவினருக்கு 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் விண்ணப்பதாரர்களின் சான்று சரிபார்க்கப்பட்டு இனசுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட மாவட்டத்தின் மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை அலுலவலகத்துக்கு அஞ்சலில் அனுப்பி வைக்கவேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ.5க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய விண்ணப்பதாரரின் தற்போதைய இருப்பிட முழு முகவரியுடன் கூடிய அஞ்சல் உறையை (Envelope) இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட மாவட்டத்தின் இணையதளங்களில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக மட்டுமே இருக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய தஞ்சாவூர் மாவட்டம் http://www.thanjavur.nic.in/pdf/AHA.pdf, கரூர் மாவட்டம் http://karur.tn.nic.in/departments/AH_Application.pdf, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் http://www.tiruvannamalai.tn.nic.in/aha.pdf, வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் http://vellore.nic.in/edocs/Ah-asst%20Vacancy.pdf, கன்னியாகுமார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் http://www.kanyakumari.tn.nic.in/AH%20assistant.pdf, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் http://nilgiris.nic.in/images/ah.pdf, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் http://www.ramnad.tn.nic.in/pdf/animal_husbandry.pdf, தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் http://www.theni.tn.nic.in/pdfs/ahasst1.pdf, திருநெல்வேலி மாவட்டத்தை தேர்ந்தவர்கள் http://www.nellai.tn.nic.in/pdf/animhustnv.pdf, திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் http://www.tiruvarur.tn.nic.in/documents/animal2018.pdf, http://virudhunagar.tn.nic.in/ என்ற அதிகார்ப்பூர்வ இணையதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
இதற்கான விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட மாவட்டத்தின் இணையதளங்களில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

வியாழன், 8 பிப்ரவரி, 2018

பட்ஜெட் வார்த்தை எப்படி வந்தது ?


 பட்ஜெட் வார்த்தை எப்படி வந்தது  ?

பட்ஜெட் என்ற வார்த்தையும், அதோடு ஒரு சூட்கேஸுக்கும் ஏறக்குறைய அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டு இருக்கிறது.

இதில் லத்தின் வார்த்தை பல்கா என்பதில் இருந்து வந்த வார்த்தையில் இருந்து மருவி உருவானது பட்ஜெட். பல்கா என்பது, சிறிய வகையான பணம் வைக்கும் பை அல்லது வாலட் ஆகும்.

அதன்பின் பல்கா என்ற வார்த்தை பிரான்ஸ் நாட்டுக்கு பயணித்து அங்கிருந்து போகெட் என்று உருமாறி, 15ம் நூற்றாண்டில் பவுகெட் என்று மாறியது. 16-ம் நூற்றாண்டில் இந்த வார்த்தை பட்ஜெட் என்று உருப்பெற்றது.

பட்ஜெட்- பிரீஃப்கேஸ் என்ன தொடர்பு ?

கடந்த 1860ம் ஆண்டு இங்கிலாந்தின் நிதி அமைச்சர் வில்லியம் எவார் கிளாட்ஸ்டோன் என்பவர் மூலமே பட்ஜெட் தாக்கலின்போது சூட்கேஸ் அல்லது பிரீப்கேஸ் பயன்படுத்தும் வழக்கம் வந்தது. ஒரு நாட்டின் அடுத்த ஒரு ஆண்டுக்கான வரவு செலவு குறித்த ரகசிய ஆவணங்கள் இருப்பதால், இதை பாதுகாப்பாக அந்த பெட்டியில் அப்போது கொண்டுவரப்பட்டது. அப்போது இருந்து இந்த முறை இன்னும் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்தியாவில் சுதந்திரத்துக்கு பின் ஒவ்வொரு நிதி அமைச்சருக்கும் ஒவ்வொரு வண்ணத்தில் பட்ஜெட்டின் போது சூட்கேஸ் பயன்படுத்தி வருகின்றனர். இதில் யஸ்வந்த் சின்ஹா அதிகமான பக்கிள் , ஸ்டிராப் வைத்தும், மன்மோகன் சிங் தாக்கல் செய்யும் போது, ஆங்கிலேயர் எவார்ட் கிளாட்ஸ்டன் காலத்தில் இருப்பது போன்றது போல கருப்பு நிறத்தில் சூட்கேஸ் இருந்தது. அனைவரையும் கவரும் விதத்தில் சிவப்பு நிறத்தில் வெல்வெட் துணியால் ஆன சூட்கேஸை பிராணப் முகர்ஜி வைத்திருந்தார்.

முதல் பட்ஜெட்

ஆங்கிலேயர் ஆட்சியில் முதல் இந்திய பட்ஜெட்டை ஜேம்ஸ் வில்சன் தாக்கல் செய்தார். ஆங்கிலேயர் ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த இவர் பட்ஜெட் தாக்கல் செய்த சில மாதங்களில் மரணமடைந்தார்.

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை நாட்டின் முதல் நிதி அமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டி தாக்கல் செய்தார். அது இடைக்கால பட்ஜெட்டாக ஏழரை மாதங்களுக்கு அதாவது 1948, மார்ச் 31ம் தேதிவரைக்குமே தாக்கல் செய்யப்பட்டது.

வாசிக்காத பட்ஜெட்

சண்முகம் செட்டிக்கு பின் வந்த நிதி அமைச்சர் ஜான் மத்தாய் கடந்த 194-50ம் ஆண்டில் தாக்கல் செய்த பட்ஜெட்டின் போது, பட்ஜெட் உரையை வாசிக்கவில்லை. மாறாக, அனைத்து எம்.பிக்களுக்கும் பட்ஜெட் உரை வழங்கப்பட்டது. பொருளாதார கொள்கைகள் குறித்து மட்டும் ஜான் படித்தார்.

10 பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர்

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், நிதி அமைச்சருமான மொரார்ஜி தேசாய் அதிகபட்சமாக 10 பட்ஜெட்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் மொரார்ஜி தேசாய், பிறந்தநாள் 29ம் தேதியாகும். அந்த நாளில் அவர் இருமுறை அதாவது 1964, 1968ம் ஆண்டுகளில் பட்ஜெட் தாக்கல் செய்து இருக்கிறார்.

அதன்பின் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் 8 முறையும், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 7 முறையும் தாக்கல் செய்தனர். மேலும், யஸ்வந்த்ராவ் பல்வந்த்ராவ் சவான், சிடி தேஸ்முக் ஆகியோரும் 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்.

கருப்பு - கனவு பட்ஜெட்

1973-74ம் நிதி ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் ரூ.550 கோடி பற்றாக்குறையுடன் தாக்கல் செய்யப்பட்டது. இதனால், இதை கருப்பு பட்ஜெட் என்றனர். 1997ம் ஆண்டு நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பல சீர்திருத்தங்களுடன் பட்ஜெட் தாக்கல் செய்ததால், இதை கனவு பட்ஜெட் என்றனர்.

பட்ஜெட் தாக்கல் செய்த குடியரசு தலைவர்

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஆர் வெங்கட்ராமன் ஆகியோர் தாங்கள் நிதி அமைச்சராக இருந்த காலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்.

நெருக்கடியில் பட்ஜெட்

பாஜகவின் ஆட்சிக் காலத்தில் நிதி அமைச்சராக இருந்த யஸ்வந்த் சின்ஹா நெருக்கடியான நேரத்தில் பட்ஜெட்களை தாக்கல் செய்து இருக்கிறார். 1999ம் ஆண்டு பொக்ரான் அணுகுண்டு சோதனை, 2000ம் ஆண்டு கார்கில் போர், 2001ம் ஆண்டு குஜராத் பூகம்பம் ஆகிய நெருக்கடியான நேரத்தில் அவர் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

பட்ஜெட் தாக்கல் செய்த ஒரேபெண்

கடந்த 1970-71ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியின் போது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பட்ஜெட் தாக்கல் செய்தார். நாட்டில் பட்ஜெட் தாக்கல் செய்த முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் எந்த பெண்ணும் பட்ஜெட் தாக்கல் செய்யவில்லை.

ரயில்வே பிரிந்தது

1924ம் ஆண்டு பொது பட்ஜெட்டில் இருந்து ரயில்வே பட்ஜெட், தனியாகப் பிரிக்கப்பட்டது. அதன்பின் கடந்த ஆண்டு அதாவது 93 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைக்கப்பட்டது.

3 பிரதமர்கள்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, நேரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பிரதமர்கள் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி பிரதமராக பதவியில் இருக்கும் போது பட்ஜெட் தாக்கல் செய்தனர்.

நேரம் மாற்றம்

கடந்த 1998-ம் ஆண்டுக்கு முன்பு வரை பட்ஜெட் என்பது ஆங்கிலேயர் கால வழக்கப்படி மாலை 5 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால், வாஜ்பாய் ஆட்சி காலத்தில், பட்ஜெட் தாக்கல் செய்யும் நேரம் மாற்றப்பட்டு, காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு அதிலும் மாற்றம் செய்து, பிப்ரவரி இறுதியில் தாக்கலாகும் பட்ஜெட்டை ஒரு மாதம் முன்பாக 1ம் தேதியே தாக்கல் செய்தது.

புதன், 7 பிப்ரவரி, 2018

நீராரும் கடலுடுத்த என்ற தமிழ்த்தாய் வாழ்த்தின் இலக்கணம்.


நீராரும் கடலுடுத்த என்ற தமிழ்த்தாய் வாழ்த்தின் இலக்கணம்.

இவ்வரிகள் *பேராசிரியர்.சுந்தரம் பிள்ளை* எழுதிய *மனோன்மணீயம்* என்ற கவிதைநாடகநூலில் இடம்பெற்ற *தமிழ்த்தெய்வ வணக்கம்* என்ற 49
அடிகள் கொண்ட பாடலின் முதல் 12
அடிகளிலிருந்து, 5
அடிகளை நீக்கி 7
அடிகளை மட்டுமே *கலைஞர்* தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு/தமிழ் விழாக்களில் பாடத் தேர்வு செய்யப்பட்டவை.

மொத்தப்பாடலின் *இலக்கணம்.*

*பஃறாழிசைக்கொச்சகக்கலிப்பா*

*ஓரெதுகை* *இரண்டு அடிகள்* கொண்ட
*கண்ணிகளையும்*
*ஒரு தனிச்சொல்லையும்* கொண்டு *நேரிசை ஆசிரியப்பா* என்னும் *சுரிகதகம்* கொண்டு முடிவது.

இப்பாடல்36
கண்ணிகள் கொண்டது. 12
அடிகள் கொண்ட ஆசிரியச்சுரிதகம் கொண்டது.

*பஃறாழிசை* என்பது *பல தாழிசைகள்*

*தாழிசை* என்பது
*ஒரே அளவுள்ள இரண்டு அடிகள்*

*கலிப்பாக்கள்* 10
வகைப்படும்.
அவற்றுள் ஒன்றே பஃறாழிசைக்கொச்சகக் கலிப்பா.

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

Tnpsc-TET important questions answers விதிகள் - மத்திய_அரசு ( 52 - 237 )..,

Tnpsc-TET important questions answers  விதிகள் - மத்திய_அரசு ( 52 - 237 )..,

52 – நாட்டின் தலைவராக குடியரசுத்
தலைவர் ஒருவர் இருத்தல் வேண்டும்
53 – நிர்வாக அதிகாரம்
54 – குடியரசுத் தலைவர் தேர்தல்
55 – தேர்தல் முறை
56 – குடியரசுத் தலைவரின்
பதவிக்காலம்
57 – மீண்டும் குடியரசுத் தலைவராக
தேர்ந்தெடுக்க தகுதி படைத்தவர்.
58 – தகுதிகள்
59 – சம்பளம் ஆதாயம் தரும் பதவி
வகிக்க கூடாது
60 – பதவிப் பிரமாணம்
61 – பதவி நீக்கம்
62 – குடியரசுத் தலைவர் பதவி
காலம் முடியும் முன்னரே தேர்தல்
நடத்தப்பட வேண்டும்
63 – நாட்டில் ஒரு குடியரசு துணை
தலைவர் இருக்க வேண்டும்
64 – குடியரசுத் துணை தலைவர்
பதவி வழி மாநிலங்களவையின்
தலைவர்
65 – துணைகுடியரசுத் தலைவர்
குடியரசு தலைவரின் பணிகள்
செய்தல்
66 – குடியரசுத் துணை தலைவரின்
தகுதிகள்
67 - குடியரசுத் துணை தலைவரின்
பதவிக்காலம்
68 - குடியரசுத் துணை தலைவரின்
பதவிக்காலம் முடியும் முன்பே
தேர்தல் நடத்துதல்
69 - குடியரசுத் துணை தலைவரின்
பதவிப் பிரமாணம்
71 – குடியரசுத் தலைவர்
துணைகுடியரசுத் தலைவரின்
தேர்தல் முடிவு பற்றி எழும்
சந்தேகம் இறுதி முடிவு – உச்ச
நீதிமன்றம்
72 – குடியரசு தலைவரின்
மண்ணிக்கும் அதிகாரம்
74 – அமைச்சரவை
75 – அமைச்சரவை மக்களவைக்கு
கூட்டு பொறுப்பு
76 – இந்திய அரசு தலைமை
வழக்குரைஞர்
78 – பிரதம மந்திரியின் கடைமைகள்
79 – நாடாளுமன்றம்
80 – ராஜ்யசபா
81 – மக்களவை
82 – தொகுதி சீரமைப்பு
83 – மக்களவையின் உறுப்பினர்களின்
பதவிக்காலம்
84 - மக்களவையின் உறுப்பினர்களின்
தகுதிகள்
85 – நாடாளுமன்றத்தின் இரு
அவைகளையும் கூட்டும் அதிகாரம்
(குடியரசு தலைவர்)
86 – நாடாளுமன்றத்தின் அவைகளின்
உரை நிகழ்த்தவும் உரிமை
87 – தேர்தல் எழுந்தவுடன் நடக்கும்
முதல் கூட்டத்திலும் ஒவ்வொரு
வருடத்தின் முதல் கூட்டத்தின்
குடியரசு தலைவர் உரை
88 – இந்திய தலைமை
வழக்குரைஞரும் நாடாளுமன்ற
கூட்டங்களின் பங்கெடுக்கவும்
பேசுவதற்கும் உரிமை
89 – குடியரசு துணை தலைவர்
பதவி வழி முறையின்
மாநிலங்களவையின் தலைவர்
90 – பதவி விலகல் கடித்ததை தலைவர்
குடியரசு தலைவரிடம் தர வேண்டும்
91 – தலைவர் பதவி காலியாக
உள்ளதினை துணைத்தலைவர்
மேற்கொள்வார்.
92 – தலைவர் துணைதலைவர் பதவி
நீக்கம்
93 – சபாநாயகர் மற்றும் துணை
சபாநாயகர்
94 – பதவி விலகல் கடிதம்
95 – பதவி காலியாக உள்ளதினை
நிரப்புதல்
96 – சபாநாயகர் பதவி நீக்கம்
97 – சபாநாயகரின் படித்தொகை
98 – செயலகங்கள்
99 – தற்காலிக சபாநாயகர்
100 – கூட்டம் நடத்த (1/10)
உறுப்பினர்கள் தேவை
101 – ஒருவர் நாடாளு மன்றத்தின்
ஒரு அவை மற்றும் சட்டமன்ற
அவையின் உறுப்பினராக இருந்தால்
அவரது நாடாளுமன்ற உறுப்பினர்
பதவி காலியாகி விடும்
102 - உறுப்பினர்களின்
தகுதியின்மை / தகுதியிழப்பு ‘
103 – கட்சி தாவல் சட்டத்தின் படி
தகுதியின்மை செய்யும் அதிகாரம்
104 – பிறசூழல்களில் தகுதி இழப்பு
செய்வது என்பது குடியரசுத்
தலைவரிடம் உள்ளது ( தேர்தல்
ஆணையத்தின் ஒப்புதல் )
105 – நாடாளுமன்றத்தின்
பேச்சுரிமை
106 – நாடாளுமன்ற உறுப்பினர்களின்
ஊதியம் படி
107 – மசோதாக்களின் நிலை
108 – கூட்டு அமர்வு
109 – பண மசோதா
110 – பண மசோதாவின் வரையரை
111 – மசோதா குடியரசு தலைவரின்
இசைவினை
112 – ஆண்டு நிதி நிலை அறிக்கை
( பட்ஜெட் )
113 – வரிவிருத்தம் நிதி ஆண்டின்
திட்டமிடப்பட்ட வருமானம் மற்றும்
செலவினங்களை குறித்த
விவரங்களை தருகிறது
114 – பணம் ஒதுக்கீடு மசோதாக்கள்
115 – Supplementary Grant
117 – நிதி மசோதா
118 – இந்திய நாடாளுமன்ற ஈரவை
மன்றமுறை
119 – முக்கிய பணி, பாதுகாப்பு,
அமைதி நாடாளுமன்றத்தின் பணி
120 – பாராளுமன்றத்தில்
பயன்படுத்தும் மொழி
121 – நாட்டின் நிதிநிலைமைக்கு
முழுபொறுப்பு நாடாளுமன்றம்
122 – பாராளுமன்ற விவகாரத்தில்
நீதிமன்றங்கள் தலையிடாது
123 – குடியரசு தலைவரின் அவசர
சட்டம்
124 – உச்ச நீதிமன்றத்தின் அமைப்பு
125 – உச்ச நீதிமன்றத்தின்
நீதிபதிகளின் சம்பளம்
126 – தற்காலிக நீதிபதி
127 – கூடுதல் நீதிபதி
128 – ஓய்வு பெற்ற நீதிபதி நியமனம்
129 – உச்சநீதிமன்றம் மற்றும்
உயர்நீதிமன்றம் தங்களை அவமதித்த
குற்றத்திற்காக எந்த நபரையும்
தண்டிக்கலாம்
130 – உச்ச நீதிமன்றத்தை எங்கு
வேண்டுமனாலும் மாற்றும் உரிமை
தலைமை நீதிபதி
131 – அசல் முதல் அதிகார வரம்பு
132 – அரசியலமைப்பு குறித்த
வழக்கில் மேல் முறையீடு
133 – உரிமையியல் குறித்த வழக்கில்
மேல் முறையீடு
134 – குற்றவியல் குறித்த வழக்கில்
மேல் முறையீடு
136 – சிறப்பு அனுமதி குறித்த
வழக்கில் மேல் முறையீடு
137 – தனது தீர்ப்புகளை
மறுசீராய்வு செய்யும் அதிகாரம்
138 – அதிகார வரம்பு நீட்டிப்பு
139 – வழக்கினை மாற்றும் அதிகாரம்
141 – உச்சநீதிமன்றம் அனைத்து
நீதிமன்றங்களின் அனைத்தையும்
கட்டுப்படுத்தும்
143 – ஆலோசனை கூறும் அதிகார
வரம்பு
144 – இந்தியாவில் உள்ள அனைத்து
அதிகார அமைப்புகளும்

152 – மாநிலம் என்பது ஜம்மு காஷ்மீர் பகுதியை உள்ளடக்காது
153 – ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருத்தல் வேண்டும்
154 – ஆளுநர் தனது நிர்வாக அதிகாரத்தை நேரடியாகவோ அல்லது தனக்கு கீழுள்ள அலுவலர்களின் வாயிலாகவோ செயலுறுத்துவார்
155 – ஆளுநர் நியமனம்
156 – ஆளுநரின் பதவிக்காலம்
157 – ஆளுநரின் தகுதிகள்
158 – ஆளுநர் ஆதாயம் தரும் பணி வகிக்க கூடாது
159 – பதவி பிரமாணம்
160 – அவசர காலங்களில் செயல்படும் முறைகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று குடியரசு தலைவர் அறிவுறுத்துவார்
161 – மன்னிப்பளிக்கும் அதிகாரம்
162 – ஆளுநரின் நிர்வாக அதிகாரம்
163 – தன் விருப்புரிமை
164 – முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை நியமனம்
165 – மாநில முதன்மை வழக்குரைஞர்
166 – மாநில அரசின் நிர்வாகத் துறை செயல்பாடுகள் அனைத்தும் ஆளுநரின் பெயரில் நடத்தல் வேண்டும்
167 – முதலமைச்சரின் கடமைகள்
168 – சட்டமன்றம்
169 – சட்ட மேலவையை உருவாக்கவும் நீக்குவதற்கும் அதிகாரம் பெற்றது நாடாளுமன்றம்
170 – சட்டப்பேரவையின் உள்ளடக்கம்
171 – சட்ட மேலவை
173 – சட்ட பேரவைக்கான உறுப்பினர்களின் தகுதி
174 – சட்டசபை கூட்டங்களை தள்ளிபோடுதல் மற்றும் கலைத்தல்
175 – சட்டசபை மற்றும் மேலவை பற்றி ஆளுநர் தகவல் அளிக்கும் உரிமை
176 – ஆளுநர் சிறப்புறை
178 – சட்டப்பேரவையின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்
படுகிறார்கள் ( பேரவை தலைவர் , துனைத்தலைவர் )
179 – பேரவை தலைவர் மற்றும் துனைத்தலைவர் பதவி இழத்தல்
196 – பண மசோதா மற்றும் நிதி குறித்து மசோதாக்களின் தவிர மற்ற மசோதாவை இரண்டு அவையிலும் கொண்டு வரலாம்.
197 – ஒரு மசோதாவை இயற்றுதல் சட்ட மேலவையை விடச் சட்டப்பேரவைக்கே மேலாண்மை கொடுத்துள்ளது
198 – பண மசோதாவின் நிலை
199 – பண மசோதாவின் வரையரை
200 – மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்
201 – சில சாதாரண மசோதாக்களை குடியரசு தலைவர் ஒதுக்கீடு
202 – மாநில அரசின் நிதி நிலை அறிக்கை
211 – நீதிபதி குறித்து விவாதம் நடத்த தடை
214 – ஒவ்வொரு மாநிலத்திலும் உயர்நீதிமன்றம் இருக்க வேண்டும்
215 – உயர் நீதிமன்றம் தங்களை அவமதித்த குற்றத்திற்காக எந்த நபரையும் தண்டிக்கலாம்
216 – தலைமை நீதிபதி நியமனம் ( உயர்நீதிமன்றம் )
217 – தலைமை நீதிபதியை நியமனம் செய்யும்போது ஆளுநர் கலந்தோசிக்க வேண்டும்
219 – உயர் நீதிமன்ற நீதிபதியின் பதவி பிரமாணம்
220 – உச்ச்நீதி மன்ற மற்றும் உயர்நீதி மன்றங்கள் தவிர வேறெங்கும் வழக்குரைஞராக வாதாட கூடாது ( உயர் நீதிமன்ற நீதிபதி )
221 – உச்ச நீதிமன்ற நீதிபதியின் ஊதியம்
222 – உயர் நீதிமன்ற நீதிபதிகளை ஒரு நீதிமன்றத்திலிருந்து மற்றொரு நீதிமன்றதிற்கு மாறுதல்
223 – தற்காலிக உயர்நீதிமன்ற நீதிபதி
224 – கூடுதல் நீதிபதி
224(A) – ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமிப்பது
225 – உயர்நீதிமன்றகளின் அரசமைப்புக்கு முந்தைய நிலை பாதுகாப்பு
226 – உயர் நீதிமன்றங்களின் நீதிபேராணை
227 – உயர் நீதிமன்றங்களுக்கு அதன் கீழ் உள்ள நீதிமன்றங்கள் மீதும் தீர்பாயங்கள் மீதும் கண்காணிப்பு அதிகாரம்
228 – தனக்கு கீழ் உள்ள நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் சட்டத் தொடர்பான வினாக்கள் இருக்கிறது என்று உயர்நீதிமன்றம் நினைத்தல் அந்த வழக்கினை மாற்றுதல்
230 – உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பினை யூனியன் பிரதேசத்திற்கு அதிகப்படுத்துற்கும் குறைப்பதற்கும் அதிகாரம் படைத்த்து நாடாளுமன்றம்
231 – இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு அல்லது யூனியன் பிரதேசத்திற்கு பொதுவான ஓர் உயர் நீதிமன்றத்தினை உருவாக்க அதிகாரம் நாடாளுமன்றம்
233 – மாவட்ட நீதிபதிகளை நியமிப்பவர்
234 – மாவட்ட நீதிபதிக்கு கீழ் கீழமை நீதிமன்றங்கள் அமைந்துள்ளது
235 – சார்பு நிலை நீதிமன்றங்களின் மீது உயர்நீதிமன்றம் கொண்டிருக்கும் கட்டுபாடு
182 – சட்ட மேலவை தலைவர் , துணைத்தலைவர்
190 – MLA பதவி காலியிடமாதல்
191 – MLA தகுதியிழப்பு
207 – மாநில நிதி மசோதா
210 – சட்டமன்றத்தில் பயன்படுத்தப்படும் மொழி
212 – சட்ட மன்றத்தின் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட
முடியாது
213 - மாநில ஆளுநரின் அவசரச்சட்டமியற்றும் அதிகாரம்

வியாழன், 1 பிப்ரவரி, 2018

தமிழ் வினாக்களும் விடைகளும் TNPSC examination 2018




  தமிழ் வினாக்களும் விடைகளும் TNPSC  examination 2018

*  ராமாமிர்தம் அம்மையார் முதல் போராட்டத்தை தொடங்கிய ஆண்டு - 1938

*  திருச்செந்திற் கலம்பகம் எத்தனை உறுப்புகளை கொண்டது - 18

*  அம்மானை என்பது - பெண்கள் விளையாடும் விளையாட்டு

*  திருச்செந்திற் கலம்பகத்தில் இடம் பெற்ற அம்மானையில் போற்றப்படும் தெய்வம் - முருகன்

*  முருகனால் சிறைப்பிடிக்கப்பட்டவன் - வேலன்

*  ஈசானதேசிகருக்கு கல்வி கற்றுக் கொடுத்தவர் - மயிலேறும் பெருமாள்

*  திருச்செந்திற் கலம்பகம் என்னும் நூலை இயற்றியவர் - சுவாமிநாததேசிகர்.

*  கதர் ஆடை என்பது - பருத்தி ஆடை

*  இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டவர் - காந்தியடிகள்

*  வானம் பார்த்த பூமி என்பது - புன்செய்

*  வேளாண் தொழிலில் உள்ள கூறுகள் - 6

*  வேளாண் பல்கலைக் கழகம் உள்ள இடம் - கோவை

*  சீவகசிந்தாமணி காப்பியத்தின் கதைத் தலைவன் - சீவகன்

*  நரிவிருத்தம் பாடியவர் - திருத்தக்க தேவர்

*  வீழ்ந்து வெண்மழை தவழும் - என்ற சீவக சிந்தாமணி பாடலில் கூறப்படும் காட்சி -  ஒரு நாட்டியம் நடப்பது போல

*  காராளர் என்பவர் - உழவர்

*  ஆழி என்பதன் பொருள் -  மோதிரம்

*  வேந்தர் என்பதன் பொருள் - மன்னர்

*  கம்பர் பிறந்த ஊர் - தேரழுந்தூர்

*  தமிழரின் தற்காப்பு விளையாட்டுகளில் ஒன்று - சிலம்பாட்டம்

*  யானைப் போர் காண்பதற்காக மதுரையில் கட்டப்பட்டது - தமுக்கம் மண்டபம்

*  விளையாட்டின் விழியாக கிடைப்பது - பட்டறிவு

*  விளையாட்டின் அடிப்படை நோக்கம் - போட்டியிடுவது

*  பாரதிக்கு பிறகு கவிதை மரபில் திருப்பம் விளைவித்தது யாருடைய படைப்பு - ந.பிச்சைமூர்த்தி

*  மருதகாசி பிறந்த ஊர் - மேலக்குடிக்காடு

*   தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு.வரதராசனார்

*   தமிழ் வரலாற்று நாவலின் தந்தை -  ககல்கி

*   தமிழ் நாடகத் தந்தை -  பம்மல் சம்பந்த முதலியார்

*   தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்

*   தனித்தமிழ் இசைக்காவலர் - இராசா.அண்ணாமலைச் செட்டியார்.



* சீட்டுக்கவி பாடுவதில் வல்லவர் - அந்தகக் கவிவீரராகவர்

*  அந்தகக் கவி வீரராகவர் பிறந்த ஊர் - பூதூர்

*  சந்திரவாணன் கோவை என்ற நூலை எழுதியவர் - அந்தகக் கவி வீரராகவர்

*  கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் சைவத்தை காத்தவர் - திருஞானசம்பந்தர்

*  மதுரையில் ஆடைகள் விற்கும் கடைப்பகுதி இருந்த வீதியின் பெயர் - அறுவை வீதி

*  மதுரை நகரின் பெயர் கல்வெட்டில் எப்படி எழுதப்பட்டுள்ளது -மதிரை

*  மதுரையில் தாஜ்மகால் போல கட்டப்பட்ட கட்டிடம் - திருமலை நாயக்கர் மகால்

*  கடைச் சங்கம் எங்கு நிறுவப்பட்டது - மதுரை

*  மதுரை என்ற சொல்லுக்கு இனிமை என்று பெயர்

*  திருவிழா நகர், கோயில் நகர் என்று சிறப்பிக்கப்படும் நகர் - மதுரை

*  தென்னிந்தியாவில் ஏதென்ஸ் என்று புகழப்படும் நகரம் - மதுரை

*  தங்கப் பதுமையாம் தோழர்களோடு இவ்வடிவில் பதுமை என்னும் சொல் உணர்த்தும் பொருள் - உருவம்

*  திருவாரூர் நான்மணி மாலையை எழுதியவர் - குமரகுருபரர்

*  குமரகுருபரர் பிறந்த ஊர் - திருவைகுண்டம்

*  குமரகுருபரர் வாழ்ந்த  காலம் - கி.பி.16

*  நான்மணி மாலை என்பது - சிற்றிலக்கியம்

*  மண் சுமந்தார் என குறிப்பிடப்படுபவர் - சிவபெருமான்

*  வாணிதாசன் சொந்த ஊர் - வில்லியனூர்

*  வாணிதாசன் இயற்பெயர் - அரங்கசாமி

*  தமிழகத்தின் அன்னிபெசன்ட் என்று புகழப்பட்டவர் - ராமாமிர்தம் அம்மையார்


அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்


*    தமிழ்த்தென்றல், தமிழ் முனிவர், தமிழ்ப்பெரியார், தொழிலாளர் தந்தை - திரு.வி,க.

*   தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாத ஐயர்

*   வைணவம் தந்த செல்வி, சூடிக்கொடுத்த சுடர்கொடி - ஆண்டாள்

*   நவீன கம்பர் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை

*   ரசிகமணி  -  டி.கே.சி

*   தத்துவ போதகர்   -   இராபார்ட் - டி - நொபிலி

*   தமிழ்நாட்டின் ஜென் ஆஸ்டின் - அநுத்தமா

*   தமிழ்நாட்டின் ஜேம்ஸ் உறாட்லி -  சுஜாதா

*   தென்னாட்டு தாகூர் - அ.கி.வேங்கடரமணி

*   மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாணர்

*   இசைக்குயில் - எம்.எஸ்.சுப்புலட்சுமி

*   வேதரத்தினம் பிள்ளை -  சர்தார்

*   கரந்தைக் கவிஞர் - வேங்கடாஜலம் பிள்ளை

*   தசாவதானி -  செய்குத் தம்பியார்

*   செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் - வ.உ.சி

*   மே தினம் கண்டவர் -  சிங்கார வேலனார்

*   பகுத்தறிவு பகலவன், சுயசரிதைச் சுடர் பெரியார் - ஈ.வே.ராமசாமி

*   தென்நாட்டு பெர்னாட்ஷா, தென்நாட்டுக் காந்தி, பேரறிஞர்  -  அறிஞர் அண்ணா

*   தமிழ்நாட்டின் மாப்பஸான் -  புதுமைப்பித்தன்

*   தமிழ்நாட்டின் வோர்ட்ஸ்வோர்த், தமிழ்நாட்டுத் தாகூர் - வாணிதாசன்

*   உவமைக் கவிஞர் -   சுரதா

*   கவிக்கோ -    அப்துல் ரகுமான்

*   உரையாசிரியர் -    இளம் பூரணார்

*   கவிமணி -     தேசிய விநாயகம்பிள்ளை

*   குழந்தைக் கவிஞர் -    அழ.வள்ளிப்பா

*   தொண்டர் சீர் பரவுவார் -    சேக்கிழார்

*   குறிஞ்சி மோமான் -    கபிலர்

*   கவிச்சக்கரவர்த்தி -    கம்பன்

*   ஆளுடையரசு, மருள் நீக்கியார், அப்பர் -    திருநாவுக்கரசு

*   ஆளுடையப்பிள்ளை, திராவிட சிசு  -    ஞான சம்பந்தர்

*   முத்தமிழ் காவலர்  - கி.ஆ.பெ.விஸ்வநாதம்

*   திருக்குறளார்  -   வி.முனிசாமி

*   இராமலிங்கனார் -     ஆட்சித் தமிழ் காவலர்

*   20 ஆம் நூற்றாண்டின் ஒளவையார் -     பண்டித அசலாம்பிகை

*   பேயார்   -    காரைக்கால் அம்மையார்

*   பாட்டுக்கொரு புலவன், மகாகவி, தேசிய கவிஞர் -   பாரதியார்

*   சிந்துக்குத் தந்தை -   அண்ணாமலை செட்டியார்.

*   மூதறிஞர் -  இராஜாஜி

*   சொல்லின் செல்வர் -  இரா. பி. சேதுப்பிள்ளை

*   காந்தியக் கவிஞர் -  நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை

*   கிறித்துவக் கம்பர் - எச்.ஏ. கிருஷ்ணப் பிள்ளை

*   மகாவித்துவான் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை

*   சிறுகதை மன்னன் - புதுமைப்பித்தன்

*   சிறுகதை தந்தை - வ.வே.சு.ஐயர்

*   புதுக்கவிதை தந்தை - பாரதியார்

*   சோமசுந்தர பாரதியார் - நாவலர்

*   ரசிகமணி பண்டிதமணி - மு.கதிரேசஞ் செட்டியார்

அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்


*   தாயுமானவர் பாடல்கள் - தமிழ்மொழியின் உபநிடதம்

*   சிலப்பதிகாரம் - ஒற்றுமைக் காப்பியம், மூவேந்தர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், முதல் காப்பியம், தேசிய காப்பியம், முத்தமிழ் காப்பியம், சமுதாயக் காப்பியம்

*   சீவகசிந்தாமணி - மணநூல்

*   கம்பராமாயணம் - இராமவதாரம், இராமகாதை, கம்பச் சித்திரம், கம்ப நாடகம்

*   அகநானூறு - நெடுந்தொகை

*   பழமொழி - முதுமொழி

*   பெரிய புராணம் -  திருத்தொண்டர்புராணம், சேக்கிழார் புராணம்

*   இலக்கண விள்க்கம் - குட்டித் தொல்காப்பியம்

*   பட்டிணப்பாலை - வஞ்சி நெடும்பாட்டு

*   கலித்தொகை - கற்றறிந்தோர் ஏத்தும் தொகை

*   புறநானூறு - தமிழர் வரலாற்றுக் களஞ்சியம்

*   பெரும்பாணாற்றுப்படை - பாணாறு

*   மலைபடும்கடாம் - கூத்தராற்றுப்படை

*   முல்லைப்பாட்டு - பெருங்குறிஞ்சி, நெஞ்சாற்றுப்படை

*   குறிஞ்சிப் பாட்டு - காப்பியப்பாட்டு

*   வெற்றிவேற்கை - நறுத்தொகை

*   மூதுரை - வாக்குண்டாம்

*   பெருங்கதை - கொங்குவேள் மாக்கதை, அகவற்காப்பியம்

*   சிலப்பதிகாரம் - இரட்டைகாப்பியங்கள்

*  மணிமேகலை - மணிமேகலை துறவு, பெளத்த காப்பியம்

*   நீலகேசி – நீலகேசித்தெருட்டு


தமிழ் வினாக்கள்

*   கலம்பகத்தின் உறுப்புகள் - கலம் -12, பகம் - 6, மொத்தம் = 18

*   சிற்றிலக்கியங்களில் எத்தனை வகை - 96 வகை

*   ஐந்தமிழ் - இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், அறிவியல் தமிழ், ஆய்வுத் தமிழ்.

*  மனச்சோர்வின்றி செயாற்றும் பண்பினை உணர்த்தும் திருக்குறள் அதிகாரம் - ஊக்கமுடைமை.

*   நாமக்கல் கவிஞரின் பிறந்தநாள் - 19.10.1988.

* அகத்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை

*  புறந்திணை  - வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்

*  கல்வியில்லாப் பெண் களர்நிலம் போன்றவள் - பாரதிதாசன்

*  வைக்கம் வீரர் -பெரியார்

*  யாதும் ஊரே யாவரும் கேளிர் - கணியன் பூங்குன்றனார்.

*  ஒப்பிலக்கணத் தந்தை என்று அழைக்கப்படுபவர் - கால்டுவெல்

*  புலி தங்கிச் சென்ற குகை போன்றது - வீரத் தாயின் வயிறு

*  நீர் வழிப் படூம் புணை போல் - ஊழ்வழிச் செல்லும் உயிர்

*  கதிரவனைக் கண்ட தாமரை போல - மகிழ்ச்சி

*  தணலிலிட்ட மெழுகு போல  - கரைதல்

*  உடுக்கை இழந்தவன் கைபோல - இடுக்கண் களைபவர்

*  திரிகடுகத்தில் இடம்பெறும் பாடல்கள் எத்தனை - 101 வெண்பாக்கள்

*  திரிகடுகம் குறிப்பிடும் மருந்துப் பொருட்கள் - சுக்கு, மிளகு, திப்பிலி

*  திரிகடுகம் என்னும் நூலின் ஆசிரியர் - நல்லாதனார்

*  "ஆக்டியம்" என்ற சொல்லின் பொருள் - ஏளனம்

*  நல்குரவு என்ற சொல்லின் பொருள் - வறுமை

*  ஞாலம் என்ற சொல்லின் பொருள் - அறிவு


*  வசை என்ற சொல்லின் பொருள் - பழி

*  வெகுளி என்ற சொல்லின் பொருள் - கோபம் (அ) சினம்

*  விளக்கிலிருந்து கிடைப்பது ஒளியா? ஒழியா?  - ஒளி

*  குறுந்தொகை என்னும் தொகை நூலின் பாடிய புலவர்கள் - 205 புலவர்கள்

*  குறிஞ்சித் திணைப் பாடல் பாடுவதில் வல்லவர் - கபிலர்

*  குறுந்தொகையில் இடம் பெற்ற பாடல்கள் எத்தனை - 402 பாடல்கள்

*  புறநானூறு என்னும் நூலில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - ஜி.யூ.போப்

*  புறநானூறு இடம் பெறும் தொகுப்பு - எட்டுத்தொகை

*  சீத்தலைச் சாத்தனார் பாடல்கல் இடம் பெறும் சங்க இலக்கிய நூல்கள் - அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை

*  சீத்தலை சாத்தனார் புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடும் மன்னன் - பாண்டியன் நன்மாறன்

*  எந்த நூல் அரங்கேற்றத்தின்பொது குமரகுருபரருக்கு மீனாட்சியம்மை பெண் குழந்தை வடிவில் வந்து மாணிக்கமாலை பரிசளித்தார்? - மீனாட்சியம்மை குறம்

*  குமரகுருபரர் வாய் ஊமை நீங்கிய உடன் இறைவனைப் பாடிய ிலக்கியம் - கந்தர் கலிவெண்பா

*  குமரகுருபரரின் பேச்சுத்திறன் பெற்ற திருத்தலம் - திருச்செந்தூர் முருகன் திருக்கோவில்

*  குமரகுருபரரின் காலம் - 17-ம் நூற்றாண்டு

*  குமரகுருபரரின் பெற்றோர் - சண்முக சிகாமணி கவிராயர், சிவகாமி சுந்தரி அம்மையார்

*  குமரகுருபரர் பிறந்த இடம் - திருவைகுண்டம் (நெல்லை மாவட்டம்)

*  திரிகூடமலை என்பது எதனைக் குறிக்கிறது - திருக்குற்றால மலை

*  மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் ஆசிரியர் - குமரகுருபரர்

*  தமிழ்த் தென்றல் - திரு. வி. கல்யாண சுந்தரனார் (திரு.வி.க)

*  பொதுமை வேட்டல் என்னும் நூலின் ஆசிரியர் - திரு.வி.க

*  'நாமக்கல் கவிஞர்' என அழைக்கப்படுபவர் - வெ.ராமலிங்கம்.

*  நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது - பத்மபூஷன்

*  குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது - சிலப்பதிகாரம்

*  இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் - சிலப்பதிகாரம்

*  தமிழ்மொழியின் முதல் காப்பியம் - சிலப்பதிகாரம்

*  ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன - ஆறு காண்டங்களாக

*  மாயணத்தில் "சொல்லின் செல்வர்" என அழைக்கப்பட்டவர் - அனுமன்

*  ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் - சுந்தர காண்டம்

*  இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட இடம் - அசோகவனம்

*  சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு - கிட்கிந்தை

*  சீதைக்குக் காவலிருந்த பெண் - திரிசடை

*  கவிச் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் - கம்பர்

*  "கிறிஸ்துவக் கம்பன்" என அழைக்கப்படும் கவிஞர் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை

*  இரட்சண்ய யாத்திரிகம் எனும் காப்பியத்தின் ஆசிரியர் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை

*  இரட்சண்ய யாத்திரிகம் எந்த நூலின் வழி நூலாகும் - பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (ஆங்கிலம்)

*  பில்கிரிம்ஸ் புரோகிரஸ் நூலின் ஆசிரியர் - ஜான் பன்யன்

*  இரட்சண்ய யாத்திரிகம் என்பதன் பொருள் - ஆன்மஈடேற்றம்

*  இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது - ஐந்து

*  எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர் - ஹென்றி ஆல்பர்ட்

*  கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்ப வள்ளல்

*  கம்பர் இயற்றிய மற்றொரு நூல் - சரசுவதி அந்தாதி

*  வள்ளத் தோளின் பாடல்களை மொழி பெயர்த்திருக்கும் கவிஞர் - கவிஞர். துறைவன்

*  "திருவினாள்" என சிறப்பிக்கப்படுபவர் - லட்சும் தேவி

* தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் எத்தனை - ஏழு

*  ஜடாயுவின் அண்ணன் - சம்பாதி

*  "சாகித்திய மஞ்சரி" என்னும் நூலின் ஆசிரியர் - மலையாளக் கவிஞர் வள்ளத்தோள்

*  குலோத்துங்க சோழனின் பிள்ளைத்தமிழ் பாடியவர் - ஒட்டக்கூத்தர்

*  பகழிக்கூத்தர் பாடிய பிள்ளைத்தமிழ் - திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்.

*  திருத்தக்கதேவர் சார்ந்த சமயம் - சமண சமயம்

*  சீவகன் கதையைப் பெருங்காப்பியமாகப் பாடியவர் -  திருத்தக்கதேவர்

*  அறிவு அற்றம் காக்கும் கருவி - முப்பால்

*  செல்வம் சகடக் கால்போல் வரும் - நாலடியார்

*  சிறு மாலை கொல்லுனர் போல வரும் - ஐந்திணை எழுபது

*  காதலி மாட்டுள்ளம் வைப்பார்க்குத் துயிலில்லை - நான்மணிக்கடிகை

*  ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் - இன்னா நாற்பது

*  இளமையை மூப்பு என்றுணர்தல் இனிதே - இனியவை நாற்பது

*  புல் நுனிமேல் நீர் போல் நிலையாமை - நாலடியார்

*  அகம் குன்றி மூக்கில் கரியாருடைத்து - முப்பால்

*  முல்லையும் குறிஞ்சியும் நல்லியல்பு இழந்தால் பாலையாகும்

*  மருந்துப் பெயர் அல்லாத பதினெண் கீழ்க்கணக்கு நூல் - கைந்நிலை

*  தூது இலக்கியத்திற்குரிய யாப்பு – கலிவெண்பா



*  "நாமார்க்கும் குடியேல்லோம், நமனை அஞ்சோம்" என்று பாடியவர் - திருநாவுக்கரசர்

*  "பொய்கை ஆழ்வார்" பாடிய பக்திப் பாடல் தொகுதியின் பெயர் - முதல் திருவந்தாதி

*  "சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே" பாடியவர் - பொன்முடியார்

*  திருமாலின் பல்வேறு அம்சமாகத் தோன்றிய ஆழ்வார்கள்

*  பாஞ்ச சன்யம் - பொய்கையாழ்வார்

*  கருடாம்சம்    - பெரியாழ்வார்

*  சுதர்சனம் - திருமழிசை

*  களங்கம் -  திருமங்கையாழ்வார்

*  காலமுறைப்படி வரிசைப்படுத்துதல்: பொய்கையாழ்வார், பூத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார்

*  நற்றினண, நல்ல குறுந்தொகை, ஐங்குறு நூறு, ஒத்தபதிற்றுபத்து

*  அம்புலி, சிற்றில் சிறுபறை, சிறுதேர்

*  காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி

*  அரியணையைத் துறந்து வைணவத் தொண்டர் கோலத்தை ஏற்றவர் - குலசேகரர்

*  சுந்தர் பாடிய திருத்தொண்டர் தொகை - தொண்டர் தம் பெருமை கூறும் நூல்

*  பிள்ளைத் தமிழின் இலக்கியம் குறித்து விளக்கம் தரும் நிகண்டு - திவாகர நிகண்டு



*  களவியலுரை என்பது ஒர் உரைநூல்.

*  களவியலுரை என்பது ஒர் இலக்கண நூல்

*  களவியலுரை என்பது காலத்தால் பழமையான நூல்

*  பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது - தமிழ்

*  பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் - மதுரைக் காஞ்சி

*  பொருநராற்றுப்படையைப் பாடியவர் - முடத்தாமக் கண்ணியார்.

*  மலைபடுகடாம் என்னும் இலக்கியம் - கூத்தாற்றுப்படை

*  முல்லைப்பாட்டைப் பாடியவர் - நப்பூதனார்.

*  தமிழ் நிலைபெற்ற மதுரை எனக்கூறும் நூல் - சிறுபாணாற்றுப்படை

*  உலா நூல்களுள் மிகப் பழமையைனது -  திருக்கைலாய ஞான உலா

*  தூது இலக்கியத்திற்குரிய யாப்பு - கலிவெண்பா

*  கலிங்கத்துப் பரணி பாட்டுடைத்தலைவன் - குலோத்துங்கன்

*  ஆண்பால் பிள்ளைத் தமிழின் இறுதி நான்கு பருவங்கள் - அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்

*  திருக்கோவையார் என்னும் சிற்றிலக்கியத்தை இயற்றியவர் - மாணிக்கவாசகர்

*  கலம்பக இலக்கியம் பாடுவதில் வல்லவர் - இரட்டைப் புலவர்

*  தமிழ் மொழியில் தோன்றிய முதல் குறவஞ்சி இலக்கியம் - அழகர் குறவஞ்சி

*  கண்ணனே வந்து தன் கைத்தலம் பற்றக் கனவு கண்டதாகக் கூறும் பாடலைப் பாடியவர் - ஆண்டாள்

*  சீவகன் ஆட்சி எய்திய சிறப்புப் பற்றிக் கூறும் இலம்பகம் - நாமகள் இலம்பகம்

*  வளையாபதி எந்தச் சமயத்தைச் சார்ந்த நூல் - சமண சமயம்

*  தருமசேனர் என்று அழைக்கப்பட்டவர் - அப்பர்

*  "வடமேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறு நல்லுலகம்" எனத் தமிழ்நாட்டின் எல்லையைக் குறிப்பிடுபவர் - பனம்பாரனார்

*  "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வானொடு முன்தோன்றி மூத்தகுடி" எனும் தொடர் அமைந்துள்ள பாடல் - புறப்பொருள் வெண்பாமாலை

*  "இவள் என்று பிறந்தவள்" என்றறியாத இயல்பினலாம் எங்கள்தாய்" என்று தமிழின் தொன்மையைக் குறிப்பவர் - பாரதியார்.

*  "விண் இயங்கும் ஞாயிற்றைக் கை மறைப் பாரில்" இவ்வடி இடம்பெறும் நூல் - கார் நாற்பது.

*  திருமாலின் பாஞ்சசன்யம் என்னும் சங்கின் அவதாரமாகக் கருதப் பெறுபவர் - பொய்கையாழ்வார்

*  தமிழ்மொழியியல் ஆய்வுக்கு வித்திட்டவர் - தெ.பா.மீ

*  மொழி என்பது - கருத்துக்களின் பரிமாற்றம்

*  தமிழ்மொழி வழங்கிய பகுதியின் வட எல்லை, தென் எல்லைகளாக அமைந்தவை - வடவேங்கடம் முதல் தென் குமரி வரை

*  சங்கங்கள் கடல்கோள்களால் அழிந்தன.

*  சங்கங்கள் பாண்டியர்களால் புரக்கப் பெற்றன.

*  சங்கங்கள் தமிழ் வளர்த்தன.