நீராரும் கடலுடுத்த என்ற தமிழ்த்தாய் வாழ்த்தின் இலக்கணம்.
இவ்வரிகள் *பேராசிரியர்.சுந்தரம் பிள்ளை* எழுதிய *மனோன்மணீயம்* என்ற கவிதைநாடகநூலில் இடம்பெற்ற *தமிழ்த்தெய்வ வணக்கம்* என்ற 49
அடிகள் கொண்ட பாடலின் முதல் 12
அடிகளிலிருந்து, 5
அடிகளை நீக்கி 7
அடிகளை மட்டுமே *கலைஞர்* தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு/தமிழ் விழாக்களில் பாடத் தேர்வு செய்யப்பட்டவை.
மொத்தப்பாடலின் *இலக்கணம்.*
*பஃறாழிசைக்கொச்சகக்கலிப்பா*
*ஓரெதுகை* *இரண்டு அடிகள்* கொண்ட
*கண்ணிகளையும்*
*ஒரு தனிச்சொல்லையும்* கொண்டு *நேரிசை ஆசிரியப்பா* என்னும் *சுரிகதகம்* கொண்டு முடிவது.
இப்பாடல்36
கண்ணிகள் கொண்டது. 12
அடிகள் கொண்ட ஆசிரியச்சுரிதகம் கொண்டது.
*பஃறாழிசை* என்பது *பல தாழிசைகள்*
*தாழிசை* என்பது
*ஒரே அளவுள்ள இரண்டு அடிகள்*
*கலிப்பாக்கள்* 10
வகைப்படும்.
அவற்றுள் ஒன்றே பஃறாழிசைக்கொச்சகக் கலிப்பா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக