இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 325,335,337,338,343,344,346,354,357,379,381,403,406,407,408,411,414,417,418,419,420,421,422,423,424,428,429,430,451,482,486,494,500,509 ஆகியவற்றின் கீழ் அடங்கிய குற்றங்களை நீதிமன்றத்தின் முன் அனுமதியை பெற்று சமரசம் செய்து கொள்ளலாம்.
நீதிமன்றத்தின் முன் அனுமதியை பெற்று சமரசம் செய்து கொள்ளும் குற்றங்களில் மனுத்தாக்கல் செய்வதற்கு முன்பாக அரசு குற்றவியல் வழக்கறிஞருக்கு அறிவிப்பு கொடுக்க வேண்டும்.
325- கொடுங்காயம் விளைவித்தல்
335- திடீரென ஆத்திரமூட்டப்பட்டதன் பேரில் கொடுங்காயம் விளைவித்தல்
337- மற்றவர்களின் உயிருக்கோ, உடலுக்கோ அபாயம் விளைவிக்கும் வகையில் முரட்டுத்தனமான அல்லது கவனமின்மை செயல் ஒன்றால் கொடுங்காயம் விளைவித்தல்
343- 3 நாட்களுக்கு மேற்பட்ட அளவில் ஒருவரை சட்ட விரோதமாக அடைத்து வைத்தல்
346- இரகசியமான முறையில் ஒருவரை சட்ட விரோதமாக அடைத்து வைத்தல்
354- ஒரு பெண்ணை மானபங்கப்படுத்தும் கருத்துடன் தாக்குதல் அல்லது வன்முறை தாக்குதல்
357- ஒருவரை சட்ட விரோதமாக அடைத்து வைக்க முயலும் போது தாக்குதல்
381- முதலாளியின் பொருளை வேலைக்காரன் திருடுவது
403- கையாடல்
406- நம்பிக்கை மோசடி
407- கொண்டு செல்வோர் அல்லது துறைமுக சரக்கு மேடைக்குரியவர் முதலியவர்களால் செய்யப்பட்ட நம்பிக்கை மோசடி குற்றம்.
411- திருட்டு பொருளை வாங்குதல்
414- திருட்டு பொருளை மறைத்து வைத்தல்
415- ஏமாற்றுதல்
418- சட்டத்தின் மூலம் நபர் ஒருவரை காப்பாற்றக் கடமைபட்டவரை ஏமாற்றுதல்
419- ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல்
420- ஏமாற்றி நேர்மையற்ற வகையில் பொருளை ஒப்படைக்க தூண்டுதல் அல்லது ஆவணமொன்றை உருவாக்குதல் அல்லது மறைத்தல்
421- கடன் கொடுத்தவர்களிடையே பகிர்ந்து கொள்வதை தடுப்பதற்காக பொருள் முதலியவற்றை மோசடியாக அகற்றுதல் அல்லது மறைத்தல்
422- குற்றவாளிக்கு வந்து சேர வேண்டிய கடன் அல்லது உரிமை பணத்தை குற்றவாளிக்கு கடன் கொடுத்தவர்கள் அடையாதிருக்கும் வகையில் மோசடியாக தடுத்தல்
423- மறுபயன் குறித்து பொய்யான உரை அடங்கியுள்ள மாற்றல் பத்திரத்தை மோசடியாக எழுதி கொடுத்தல்
424- பொருளை மோசடியாக அகற்றுதல் அல்லது மறைத்தல்
428- 10 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பு வாய்ந்த விலங்கினை கொல்லுதல் அல்லது ஊனமாக்குதல்
429- எத்தகு மதிப்பு வாய்ந்ததாக இருந்தாலும் கால்நடை முதலியவற்றை, 50 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பு வாய்ந்த விலங்குகளை கொல்லுதல் அல்லது ஊனமாக்குதல்
430- சட்ட விரோதமாக நீரோட்டத்தை திருப்பி விட்டு நீர் பாசனத்துக்கு கேடு விளைவித்தல், இக்குற்றம் தனிப்பட்ட நபர் ஒருவருக்கு எதிராக செய்யப்பட்டிருக்கும் போது மட்டுமே சமரசம் செய்து கொள்ள முடியும்.
451- சிறை தண்டனை விதிப்பதற்குரிய (திருட்டு அல்லாத) குற்றம் ஒன்றை செய்வதற்காக வீட்டிற்குள் அத்துமீறி நுழைதல்
482- போலி வணிக அல்லது சொத்து அடையாளத்தை பயன்படுத்துதல்
483- வணிக அல்லது சொத்து அடையாளத்தை கள்ளத்தனமாக தயாரித்தல்
494- இரண்டாம் திருமணம் செய்து கொள்ளல்
500- குடியரசுத் தலைவர், குடியரசுதய துணைத் தலைவர், மாநில ஆளுநர், மண்டலம் ஒன்றின் ஆட்சியாளர், அமைச்சர் ஆகியோர்களுக்கு எதிரான அவதூறு
509- பெண் ஒருவரின் மானத்திற்கு பங்கம் விளைவிக்கும் உட்கருத்துடன் சொற்களை சொல்லுதல், ஒலிகளை எழுப்புதல், சைகை காட்டுதல், பொருள் எதையும் தெரியும்படி காட்டுதல், பெண்ணின் அந்தரங்கத்தில் தகாத முறையில் தலையிடுதல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக