செவ்வாய், 17 ஜனவரி, 2017

கணிகங்கள் மற்றும் சென்ட்ரோசோம் பற்றிய சில தகவல்கள்:-

கணிகங்கள் மற்றும் சென்ட்ரோசோம் பற்றிய சில தகவல்கள்:-

⭕ கணிகங்கள்: (பிளாஸ்டிகள்)
💢 தாவர செல்களில் மட்டும் காணப்படும் தட்டு வடிவ (அல்லது) முட்டை வடிவ நுண்ணுறுப்புகள் - கணிகங்கள்

💢 கணிகங்க வகைகள் - 3

1. வெளிர் கணிகங்கள் (லியூக்கோபிளாஸ்ட்டுகள்)

2. வண்ணக் கணிகங்கள் (குரோமோ பிளாஸ்டுகள்)

3. பசுங்கணிகங்கள் ( குளோரோ பிளாஸ்டுகள்)

1. வெளிர் கணிகங்கள்:

💢 இவை பணி சேமித்தல்

💢 இவை நிறமற்ற கணிகங்கள்

💢 தரசம்(ஸ்டார்ச்), கொழுப்பு, புரதங்கள் இவற்றை சேமிக்கின்றது.

2. வண்ண கணிகங்கள்:

💢 இவை மலர் மற்றும் கனிகளுக்கு நிறத்தை அளிக்கின்றது.

💢 இவை சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறமுள்ள கணிகங்கள்

3. பசுகணிகங்கள்:

💢இவை ஒளிச்சேர்க்கை நிறமியான பச்சையத்தை பெற்றுள்ள பசுமை நிறக் கணிகங்கள்

💢 இவை பசுமை நிற குளோரோஃபில்கள் காணப்படுகின்றன.

💢 இவை ஒளிச்சேர்க்கை நிகழ்ச்சிக்கு முக்கிய காரணமாகிறது.

💢 உட்சவ்வு கணிகங்களில் முழுநீளத்திற்கும் லேமல்லாக்களாக அமைந்து காணப்படுகிறது.

💢 சில பகுயில் லேமெல்லாக்கள் தடித்து, நாணயங்கள் அடுக்கி வைக்கப்பட்டது போல காணப்படும் அதற்கு பெயர் - கிரானாக்கள்

💢 ஒவ்வொரு கிரானாவும் தைலகாய்டுகள் என்று அழைக்கப்படும் தட்டு வடிவச் சவ்வினால் ஆன பைகளை பெற்றுள்ளது.

💢 ஒளிச்சேர்க்கை நிறமியான பச்சையம் தைலக்காய்டு சவ்வில் அமைந்துள்ளது.

💢 தளப்பொருளின் தைலக்காய்டுகளற்ற பகுதி ஸ்ட்ரோமா என்று அழைக்கப்படும்.

💢 ஒளிச்சேர்க்கையில் பங்குபெறும் எண்ணற்ற நொதிகளை ஸ்ட்ரோமா பெற்றுள்ளது.

சென்ட்ரோசோம்:

💢 விலங்கு செல்களிலும் சில மேம்பாடு அடையாதத்தாவரங்களிலும் சென்ட்ரோசோம் காணப்படும்.

💢 புரோகேரியோட்டுகள் செல்களிலும் இவை காணப்படுவதில்லை

💢 இவை சைட்டோபிளாசத்தில் உட்கருவுக்கு வெளியே மிக அருகில் காணப்படுகிறது. இவை சென்ட்ரியோல்கள் என்று அழைக்கப்படும்.

⭕பணிகள்:

💢 செல் பகுப்பின் போது ஸ்பின்டில் நார்கள் தோன்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

செல்லின் முக்கிய உறுப்பான மைட்டோகாண்ட்ரியா பற்றிய சில தகவல்கள்:-

💢 அனைத்து உயிருள்ள செல்களும் தங்களுக்குத் தேவையான ஆற்றலை மைட்டோகாண்ட்ரியங்களில் இருந்து பெற்றுக் கொள்கின்றன.

💢 மைட்டோகாண்ட்ரியா உருளை வடிவமான செல் நுண்ணுறுப்பு ஆகும்.

💢 செல்லின் ஆற்றல் நிலையம் என்று அழைக்கப்படுகிறது.

💢 ஒவ்வொரு மைட்டோகாண்ட்ரியா வும் இரண்டு சவ்வினால் (உட்சவ்வு, வெளிச்சவ்வு) சூழப்பட்டு இருக்கும்.

💢 உட்சவ்வு கிரிஸ்டே எனப்படும் பல உட்பகுதிகளை முழுமையற்ற முறையில் புரிக்கின்றன.

💢 உட்சுவற்றில் பல என்சைம்கள் உண்டு.

💢 என்சைம்கள் உதவியால் குளுக்கோஸ் ஆக்ஸிகரணமடைந்து சக்தி உண்டாகிறது.

💢 சுவாச நிகழ்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் F1 துகள்கள் (அ) ஆக்ஸிசோம்கள்

💢 மைட்டோகாண்ட்ரியா உட்சவ்வின் உள்ளே காணப்படும் பகுதி தளப்பொருள் (matrix) எனப்படும்.

💢 கிரிஸ்டே மடிப்புகள் உட்பரப்பை அதிகரிக்கச் செய்து ஆற்றல் மிகு கூட்டுப் பொருட்களான ATP (அடினோசின் ட்ரை பாஸ்பேட்) உருவாக்குகிறது.

⭕ பணிகள்:
💢 ATP போன்ற ஆற்றல் மிகு கூட்டுப் பொருட்களை மைட்டோகாண்ட்ரியங்கள் உற்பத்தி செய்கின்றன.

💢 மைட்டோகாண்ட்ரியாவின் தளப்பொருளில் DNA மற்றும் ரைபோசோம்கள் காணப்படுகின்றன.

💢 மைட்டோகாண்ட்ரியா தனித்தன்மை வாய்ந்த செல் நுண்ணுறுப்பு ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக