வெள்ளி, 29 செப்டம்பர், 2017

பொது அறிவு - இந்திய வீரர்களும் தொடர்புடைய விளையாட்டுகளும்

பொது அறிவு - இந்திய வீரர்களும் தொடர்புடைய விளையாட்டுகளும்

1. சாய்னா நெஹ்வால், பி.வி.சிந்து - பேட்மிட்டன்

2. விஸ்வநாதன் ஆனந்த் - செஸ்

3. மேரிகோம், சரிதா தேவி - குத்துச்சண்டை

4. மங்கல்சிங் சாம்பியா, தீபிகா குமாரி - வில்வித்தை

5. விஜேந்தர் சிங் - குத்துச் சண்டை

6. ககன் நரங், அபிநவ் பிந்த்ரா, ரஞ்சன் ஜோதி - துப்பாக்கி சுடுதல்

7. ஆர்த்தி குப்தா - கடல் நீச்சல்

8. கர்ணம் மல்லேஸ்வரி, குஞ்சராணி தேவி - பளு தூக்குதல்

9. தேவேந்திர ஜஜாரியா - தடகளம்

10. ஏ. சரத் கமல் - டேபிள் டென்னிஸ்

11. தீப் அஹ்லாவத் - குதிரைஏற்றம்

12. ஜோதி ரந்தவா - கோல்ஃப்

13. அஞ்சு ஜார்ஜ் - நீளம் தாண்டுதல்

14. கரீந்தர் கவுர், இக்னேஷ் திர்கி - ஹhக்கி

15. டானியா சச்தேவ் - செஸ்

16. ராகேஷ் குமார், தேஜஸ்வினி - கபடி

17. இஷார் சிங் தியோல், பிரிஜா ஸ்ரீதரன் - தடகளம்

18. ரவிகுமார் - பளுதூக்குதல்

19. ரவீந்தர்சிங், ராஜீவ் தோமர் - மல்யுத்தம்

20. சோம்தேவ் தேவ்வர்மன், ரோஹன் போபண்ணா - டென்னிஸ்

21. தேஜஸ்வினி சவந்த் - துப்பாக்கி சுடுதல்

22. விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, தோனி, சச்சின் டெண்டுல்கர் - கிரிக்கெட்

23. பிரசண்டா கர்மாகர் - நீச்சல்

24. ராஜ்பால்சிங், ஜஸ்ஜித் கௌர் - ஹhக்கி

25. ஜீவாலா கட்டா - பாட்மிட்டன்

26. சுனில் சேத்ரி - கால்பந்து

27. சதீஷ் ஜோஷி - துடுப்பு படகு

28. கிருஷ்ணா பூனியா - வட்டு எரிதல்

29. தீபிகா குமாரி - வில்வித்தை

30. மிதாலி ராஜ் - கிரிக்கெட்

புதன், 27 செப்டம்பர், 2017

இந்தியாவின் பிரதமர்கள் வரிசை



இந்தியாவின் பிரதமர்கள் வரிசை

நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரையில் 13 பேர் முழு நேரப் பிரதம மந்திரிகளாகப் பதவி வகித்துள்ளனர்.
குல்சாரிலால் நந்தா மட்டும் 2 முறை இடைக்காலப் பிரதமராகப் பதவி வகித்துள்ளார். நேருவின் மறைவுக்குப் பிறகு 27.5.1964 முதல் 9.6.1964 வரை 13 நாள்களும், லால் பகதூர் சாஸ்திரியின் மறைவுக்குப் பிறகு 11.1.1966 முதல் 24.1.1966 வரையில் மீண்டும் ஒரு 13 நாள்களும் இடைக்காலப் பிரதமராக இருந் திருக்கிறார்.

பாரதிய ஜனதா தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய் 3 முறை பிரதமராகப் பதவியேற்றுள்ளார். முதல்முறை வெறும் 16 நாள்கள் மட்டுமே பதவியிலிருந்துவிட்டு எந்தக் கட்சியும் ஆதரவு தர முன்வராததால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என்று பதவி விலகினார்.
இரண்டாம் முறை அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் சுமார் 13 மாதங்கள் பதவியிலிருந்தார். அதிமுக ஆதரவை விலக்கிக் கொண்ட பிறகு ராஜிநாமா செய்தார்; மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று 5 ஆண்டுகளைப் பூர்த்தி செய்தார். மொத்தம் 6 ஆண்டுகள் 64 நாள்கள் பதவியிலிருந்தார்.
நாடு சுதந்திரம் அடைந்தவுடன் பிரதமராகப் பதவியேற்ற ஜவாஹர்லால் நேரு 1952, 1957, 1962 பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்று பதவியேற்றுள்ளார். அவர் பதவியேற்றது மட்டும் 4 முறை. அவர் மொத்தம் 16 ஆண்டுகள் 286 நாள்கள் பதவியில் இருந்துள்ளார். இந்தியப் பிரதமராக அதிக காலம் பதவி வகித்தவரும் இவரே.
லால் பகதூர் சாஸ்திரியின் மறைவுக்குப் பிறகு பிரதமராகப் பதவியேற்ற இந்திரா காந்தி அதன் பிறகு 1967, 1971 பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகு 2 முறை பதவியேற்றார். பிறகு 1980 பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று பதவியேற்றார். அவரும் நேருவைப்போல மொத்தம் 4 முறை பதவியேற்றிருக்கிறார். அவர் 15 ஆண்டுகள் 350 நாள்கள் பிரதமராகப் பதவி வகித்திருக்கிறார்.
நெருக்கடி நிலை விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட மொரார்ஜி தேசாய் 24.3.1977-ல் பிரதமராகப் பதவி ஏற்றார். 28.7.1979-ல் பதவி விலகினார். அவர் 2 ஆண்டுகள் 126 நாள்கள் பதவி வகித்தார்.
இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு ராஜீவ் காந்தி பதவியேற்றார். அதன் பிறகு பொதுத் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்று மீண்டும் பதவி யேற்றார். அவர் 2 முறை பதவியேற்றார். அவர் மொத்தம் 5 ஆண்டுகள் 32 நாள்கள் பதவி வகித்தார்.
சரண் சிங் (170 நாள்கள்), சந்திரசேகர் (223 நாள்கள்), எச்.டி. தேவகௌடா (324 நாள்கள்), ஐ.கே. குஜ்ரால் (332 நாள்கள்) ஆகியோர் ஓராண்டுக்கும் குறைவாகப் பதவி வகித்தனர்.
நரசிம்ம ராவ் 21.6.1991-ல் பதவியேற்று 16.5.1996 வரை பதவி வகித்தார். மொத்தம் 4 ஆண்டுகள் 330 நாள்கள்.
மன்மோகன் சிங் 22.5.2004-ல் முதல் முறையாகப் பிரதமர் பதவி ஏற்றார். பிறகு 2009-ல் நடந்த பொதுத் தேர்தலிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து இரண்டாவது முறையாகப் பிரதமர் பதவி ஏற்றார். மொத்தம் 10 ஆண்டுகள் 4 நாள்கள் பிரதமராகப் பதவி வகித்துள்ளார். நேரு, இந்திராவுக்குப் பிறகு அதிக ஆண்டுகள் பிரதமராக இருந்த சாதனையைப் புரிந்துள்ளார்.
இப்போது 26.5.2014-ல் நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.
ஜவாஹர்லால் நேரு, குல்சாரிலால் நந்தா, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், சரண் சிங், ராஜீவ் காந்தி, வி.பி. சிங், சந்திரசேகர், பி.வி. நரசிம்ம ராவ், அடல் பிஹாரி வாஜ்பாய், தேவகௌடா, ஐ.கே. குஜ்ரால், மன்மோகன் சிங் என்று 14 பேர் இதுவரை பதவி வகித்துள்ளனர்.
இவர்களில் குல்சாரிலால் நந்தா 'இடைக்காலப் பிரதமர்தான்' என்பதால் அவரை முழுநேரப் பிரதமர் பட்டியலில் சேர்க்காமல் சிலர் விட்டுவிடுவதுண்டு. ஆனால், அரசியல் சாசன சட்டப்படி இடைக்கால/ தற்காலிகப் பிரதமர் என்றெல்லாம் இல்லை என்பதால், குல்சாரிலால் நந்தாவும் அதிகாரப்பூர்வ பிரதமரே. ஆகவே, மோடி 15-வது பிரதமர்.
பிரதமர்கள் பதவிக்காலம்
1. ஜவாஹர்லால் நேரு 1947-1952
2. ஜவாஹர்லால் நேரு 1952-1957
3. ஜவாஹர்லால் நேரு 1957-1962
4. ஜவாஹர்லால் நேரு 1962-1964
5. குல்சாரிலால் நந்தா 1964-1964
6. லால்பகதூர் சாஸ்திரி 1964-1966
7. குல்சாரிலால் நந்தா 1966-1966
8. இந்திரா காந்தி 1966-1967
9. இந்திரா காந்தி 1967-1971
10. இந்திரா காந்தி 1971-1977
11. மொரார்ஜி தேசாய் 1977-1979
12. சரண் சிங் 1979-1980
13. இந்திரா காந்தி 1980-1984
14. ராஜீவ் காந்தி 1984-1989
15. வி.பி. சிங் 1989-1990
16. சந்திரசேகர் 1990-1991
17. பி.வி. நரசிம்ம ராவ் 1991-1996
18. அடல் பிஹாரி வாஜ்பாய் 1996-1996
19. எச்.டி தேவகௌடா 1996-1997
20. ஐ.கே. குஜ்ரால் 1997-1998
21. அடல் பிஹாரி வாஜ்பாய் 1998-1999
22. அடல் பிஹாரி வாஜ்பாய் 1999-2004
23. மன்மோகன் சிங் 2004-2009
24. மன்மோகன் சிங் 2009-2014
25. நரேந்திர மோடி 26.5.2014
நரேந்திர மோடி : இந்தியப் பிரதமர் | மே 26, 2014
இயற்பெயர்: நரேந்திர தாமோதர்தாஸ் மோடி
பிறந்த தேதி, இடம்: 17 செப்டம்பர் 1950 (வயது 63), வட்நகர், மேஷனா மாவட்டம், குஜராத்
கல்வி:
அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம், குஜராத் பல்கலைக்கழகம்.
மனைவி: யசோதாபென் (1968-ல் திருமணம்)
• பிற்படுத்தப்பட்ட சமூகம் (ஓ.பி.சி.) நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்
• தாமோதர்தாஸ் மூல்சந்த் மோடி, ஹிராபென் தம்பதியருக்கு 3-வது குழந்தையாகப் பிறந்தார்.
• சிறுவயதில் தனது சகோதரருடன் இணைந்து டீ கடை நடத்தினார்
• சிறுவயதிலேயே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்து தனது கல்லூரி பருவத்தில் அந்த அமைப்பின் முழுநேர பிரச்சாரகராகப் பணியாற்றினார்.
குஜராத் முதல்வர் பதவி
07 அக். 2001 முதல் 22 டிச. 2002 வரை
22 டிச. 2002 முதல் 22 டிச. 2007 வரை
23 டிச. 2007 முதல் 20 டிச. 2012 வரை
20 டிச. 2012 முதல் 22 மே 2014 வரை
17 செப்டம்பர் 2011- 2012 தொடக்கம் வரை: சத்பாவனா இயக்கத்தில் தொடர்ச்சியாக பல்வேறு முறை உண்ணாவிரதம் இருந்தார்.
செப்டம்பர் 2013: கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிப்பு
மே 16, 2014: மக்களவைத் தேர்தலில் மோடியின் தலைமையில் போட்டியிட பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றது.
வெளிநாட்டுப் பயணங்கள்:
சீனா, சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.
1995: ஐந்து மாநில பொறுப்புடன் பாஜக தேசிய செயலாளராக நியமனம்
1998: தேசியச் செயலாளராக பதவி உயர்வு. 2001-ம் ஆண்டு வரை இந்தப் பதவியை வகித்தார்.
2002: கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று மோடி நிர்வாகத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இந்திய பிரதமர்கள் இதுவரை...


இந்திய பிரதமர்கள் இதுவரை...

இந்திய வரலாறு 5000 ஆண்டுகளுக்கும் மேற்பட்டது. இதிகாச கால இந்தியா, இடைக்கால இந்தியா என நகரும் இதில் 1947 ஆகஸ்ட் 15 இந்திய விடுதலைக்குப் பிறகான சுதந்திர இந்தியாவை வழி நடத்திய பிரதமர்கள் பற்றிய குறிப்புகள் இங்கே...


ஜவஹர்லால் நேரு

உத்தரப் பிரதேச மாநிலம், அலகாபாத்தில் பிறந்தவர். வழக்கறிஞரான இவர், இந்தியாவின் முதல் பிரதமர் என்ற பெருமை பெற்றவர். ஆகஸ்ட் 15, 1947 முதல் மே 27, 1964 வரை பிரதமராக பதவி வகித்தார். பஞ்சசீலக் கொள்கையை வகுத்தவர் இவரே. இவர் பதவியில்  இருந்தது 6,131 நாட்கள். இந்திய-சீனப் போர் இவர் காலத்தில் நிகழ்ந்தது. புதுச்சேரி, கோவா என ஆங்கிலேயர் அல்லாத மற்ற நாடுகளின் ஆட்சிப் பகுதிகளை இந்தியாவுடன் சேர்த்தது இவரது ஆட்சிக்காலத்தில்தான். ‘அணிசேரா நாடுகள் அமைப்பு’ உருவாக்கி, அமெரிக்கா பக்கமோ, ரஷ்யா பக்கமோ சாயாமல் நடுநிலை வகிக்க முயன்றதன் மூலம் பல உலகத் தலைவர்களின் நட்பை சம்பாதித்தார். ‘டிஸ்கவரி ஆஃப் இண்டியா’ இவர் எழுதிய உலகப் புகழ்பெற்ற நூல்.


குல்சாரிலால் நந்தா

பஞ்சாப் மாநிலம் சியால்கோட்டில் பிறந்தவர். பேராசிரியர். இருமுறை இடைக்கால (தற்காலிக) பிரதமர் பொறுப்புப் பதவி வகித்தவர். 1964 மே 27 முதல்  ஜூன் 9 வரையிலும், இரண்டாவது முறையாக  1966  ஜனவரி 11 முதல் ஜனவரி 24 வரையிலும்  பிரதமராக இருந்தார்.  அப்பழுக்கில்லாத அரசியல்வாதி. தனக்கு வழங்கப்பட்ட பதவிக்கு மிகவும் பொறுப்புடன் செயல்படக் கூடியவர் என்று பெயர் எடுத்தவர். பாரத ரத்னா விருது பெற்றவர்.

லால் பகதூர் சாஸ்திரி

உத்தரப் பிரதேச மாநிலம் முகாரி என்னும் ஊரில் பிறந்தவர். 1964ம் ஆண்டு ஜூன் 9 முதல் 1966 ஜனவரி 11 வரை பதவியில் இருந்த நாட்கள் 582. 1965 பாகிஸ்தான் போரின் வெற்றிக்குப் பின்னர் இவர் கூறிய ‘ஜெய் ஜவான், ஜெய் கிஸான்’  என்ற வாசகம் புகழ்பெற்றது. பசுமைப் புரட்சி,  தேசிய பல்துறை வாரியம் ஆகியவை இவர் காலத்தில் நடந்த நிகழ்வுகள் ஆகும். வெளிநாட்டில் (தாஷ்கண்ட்-சோவியத் ரஷ்யா) இறந்த ஒரே இந்தியப் பிரதமர் இவரே.


இந்திரா காந்தி

முதல் இந்தியப் பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றவர். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மகள். 1966 ஜனவரி 24 முதல் 1977 மார்ச் 24 வரையிலும் 1980 ஜனவரி 14 முதல் 1984 அக்டோபர் 31 வரை பதவியில் இருந்தார்.  பதவியில் இருந்த நாட்கள் 5,831. இவருடைய காலத்தில்தான்  வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டன. அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதும் இவரது ஆட்சிக் காலத்தில்தான்.

மொரார்ஜி தேசாய்

1977 மார்ச் 24 முதல் 1979 ஜூலை 15 வரை பிரதமராக இருந்தார். இந்திய விடுதலைக்குப் பிறகு பதவி வகித்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சாராத முதல் பிரதமர் இவர். இவர் ஜனதா கட்சியைச் சார்ந்தவர்.

ராஜீவ் காந்தி

1984 அக்டோபர் 31 முதல்  1989 டிசம்பர்  2 வரை பதவியில் இருந்தார். இந்திரா காந்தியின் மகன். மிக இளம் வயதில் (41) பிரதமரானவர்.  இந்திய - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானதும்,  இந்தியாவில் தொலைத் தொடர்புத்துறை வளர்ச்சி பெற்றதும் இவரது ஆட்சிக் காலத்தில்தான்.

வி.பி.சிங்

உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் பிறந்தவர். 1989 டிசம்பர் 2 முதல் 1990 நவம்பர் 10 வரை பிரதமராக இருந்தார். மண்டல் பரிந்துரைகளை அமல்படுத்தி, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசு பணிகளிலும் கல்வி நிலையங்களிலும் இட ஒதுக்கீடு முறையைக் கொண்டுவர முயற்சியெடுத்தவர் இவர்.

சந்திரசேகர்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பலியா என்னும் ஊரில் பிறந்தார்.  1990 நவம்பர் 10 முதல்  1991 ஜூன் 21 வரை  பிரதமராக இருந்தார். காங்கிரஸ் ஆதரவை வாபஸ் பெற்றதால் பதவி விலகினார்.

பி.வி.நரசிம்மராவ்

ஆந்திர மாநிலம் கரீம் நகரில் பிறந்தவர். ஜூன் 21, 1991 முதல் மே 16, 1996 வரை ஐந்து ஆண்டுகள் பதவியில் இருந்த, நேரு குடும்பத்தைச் சேராத, காங்கிரசை சேர்ந்த முதல் பிரதமர். இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தம் கொண்டுவர முயன்றார்.

வாஜ்பாய்

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பிறந்தவர். 1996  மே 15 முதல் 1996 ஜூன் 1 வரையிலும்,  மீண்டும்  1998 மார்ச் 19 முதல் 2004 மே 22 வரையிலும் பிரதமராக இருந்துள்ளார். திருமணமாகாதவர். காங்கிரஸ் கட்சியைச் சாராத, தொடர்ந்து 5 ஆண்டுகள் பதவியிலிருந்த முதல் பிரதமர் இவரே. பா.ஜ.கவைச் சேர்ந்த இவரது ஆட்சிக் காலத்தில்தான் தங்க நாற்கரச் சாலை எனும் பெயரில்  இந்திய தேசிய நெடுஞ்சாலை அபிவிருத்தித் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

தேவ கவுடா

1996 ஜூன் 1 முதல் 1997 ஏப்ரல் 21 வரை பிரதமர் பதவி வகித்தார். கர்நாடகா மாநிலம்  ஹர்டன்ஹல்லி என்னும் ஊரில் பிறந்தவர் ஆவார்.

ஐ.கே.குஜ்ரால்

பஞ்சாப் மாநிலம் ஜீலம் என்ற ஊரில் பிறந்தவர். 1997 ஏப்ரல் 21 முதல் 1998 மார்ச் 19 வரை பிரதமராக இருந்தார்.

மன்மோகன் சிங்

2004 மே 21 முதல் 2014  மே 26 வரை பத்து ஆண்டுகள் பிரதமராக இருந்தார். உலகளவில் புகழ்பெற்ற பொருளாதார மேதை,  நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது  மத்திய நிதியமைச்சராகப் பணியாற்றியவர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம்,  தகவல் பெறும் உரிமைச் சட்டம் ஆகியவை இவரது ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டவை.

நரேந்திர மோடி

குஜராத் மாநிலம் வத் நகரில் பிறந்தவர். 2014 மே 26 முதல் பிரதமராக உள்ளார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பிரதமர் இவரே! 

செவ்வாய், 26 செப்டம்பர், 2017

24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதிக்கும் 6 நாடுகள்..



24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதிக்கும் 6 நாடுகள்..

காலையில் சூரியன் உதிக்கும் மாலையில் மறைந்திடும். சூரியனைச் சுற்றியே எல்லா உயிர்களும் தங்களின் செயல்பாடுகளை வகுத்துக் கொண்டிருக்கின்றன,அறிவியல் கோட்பாடுகளின் படி இப்படி நடப்பது தான் வழக்கம். ஆனால் உலகின் சில நாடுகளில் சூரியன் மறையாமல் 24 நான்கு மணி நேரமும் வெளிச்சத்தை தந்து கொண்டிருக்கிறது. இரவு ஏழு மணி அந்தி சாயும் நேரத்தில் கருமை படந்து பார்த்தே பழகிய நமக்கு பகல் பன்னிரெண்டு மணி போல சுரீரென்று வெயில் அடித்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.

*எந்தெந்த நாடுகளில் இரவுகளில் சூரியன் தெரிகிறது தெரியுமா?


"நார்வே :

ஆர்டிக் சர்கிளில் அமைந்திருக்கிறது நார்வே. நடுஇரவு சூரியனுக்கு இந்த ஊர் ரொம்பவே பிரபலம். இங்கே இரவில் சூரியனைக் காணவே பல்வேறு சுற்றுலாப்பயணிகள் வருகை தருகிறார்கள்.

இங்கே இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்ன தெரியுமா

சுமார் 100 ஆண்டுகள் முழுவதுமே சூரியனே தெரியாமல் இருட்டாகவே இருந்திருக்கிறது.

"ஃபின்லாந்து :

ஆயிரம் ஏரிகளுடன் இயற்கை சூழல் நிரம்பிய இடம் இது.

இங்கே கோடைக் கால ஆரம்பத்தில் சூரியன் உதிக்கிறது. அதன்பிறகு 73 நாட்கள் கழித்தே மறைகிறது.

தொடர்ந்து 73 நாட்களும் சூரியனை நாம் பார்க்கமுடியும்.


"அலஸ்கா :

பனிக்கட்டிகள் நிறைந்த இடம் இது.

மே முதல் ஜூலை வரை சுமார் 1440 மணி நேரங்கள் இங்கே பகலாகத் தான் இருக்கும்.

இந்த காலத்தில் சூரியன் மறையாது.


திங்கள், 25 செப்டம்பர், 2017

புயல் அது தொடர்பான 50 குறிப்புகள்:-


புயல் அது தொடர்பான 50 குறிப்புகள்:-

1) புயல் முனை என்று அழைக்கப்பட்டது - ஆப்ரிக்காவின் தென் முனை.

2) ஆப்ரிக்காவின் தென் முனைக்கு புயல் முனை என்று பெயரிட்டவர் - மார்க்கோபோலோ டயஸ்

3) புயல் முனைக்கு நன்னம்பிக்கை முனை என்று பெயரிட்டவர் - போத்துக்கீசிய மன்னர் இரண்டாம் ஜான்

4) வளிமணடல அழுத்தம் திடீரெனக் குறைவதால் புயல் ஏற்படுகிறது.

5) கொப்பு புயல்=பிலிப்பைன்ஸ்

6) பேட்ரிசியா புயல்=மெக்சிகோ

7) முஜிகே புயல்=சீனா

8) கோமன்புயல் =வங்கதேசம்

9) புயல் மைய பகுதி :வெற்றிடம்

10) ஒரிஸ்ஸா புயல் -1999

11) ஆஸ்திரேலியாவில் புயல் காற்று எப்படி அழைக்கப்படுகிறது?
வில்லிவில்லி

12) அரேபியாவில் புயல் காற்று எப்படி அழைக்கப்படுகிறது?
சுமுன்ஸ்

13) சீனா, ஜப்பான் நாடுகளில் புயல் காற்று எப்படி அழைக்கப்படுகிறது?
டைபூன்ஸ்

14) வட அமெரிக்காவில் புயல் காற்று எப்படி அழைக்கப்படுகிறது?
ஹரிக்கேன்

15) 2015ல் தமிழகத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ள சேதங்களுக்கு காரணமான புயல்?
ரேணு புயல்
(2016-ல் வார்தா புயல்)

16) ஆந்திராவை தாக்கிய புயல்=ஹூட்-ஹுட்(ஹுத் ஹுத் புயல் பெயர் வைத்த நாடு ஓமன்& ஒருவகை மரங்கொத்தி பறவை)

17) " புயல் கடல் " மற்றும் " அமைதிக் கடல் " எங்கு உள்ளன?
சந்திரன்

18) ஏமனில் ஏற்படாத புயல் - சபாலா

19) பமாஹஸ்-ஜேகுய்ன் புயல்

20) சௌடேஸ்வர் புயல் = வங்காளதேசம்

21) சின்கே-நார்வே

22) எரிகா புயல் தாக்கிய நாடு கியூபா

23) மேற்கு காற்றுகள் மத்தியதரைகடலிலும், வெப்ப மண்டலப் புயல் காற்றுகள் வங்காள விரிகுடாவிலும் உருவாகின்றன

24) ஜோக்கின் புயல் - பஹாமாஸ்

25) தானே புயல்= தமிழ்நாடு

#(*சேகர் சுபா டி*)

26) ஜல்புயல் =தமிழ்நாடு

27) ஹூத் ஹூத் புயல்=ஆந்திரா

28) டோர்னடோ புயல் S வடிவத்துடன் இருக்கும்

29) புயல் பற்றிய எச்சரிக்கை கொடுக்கத் துவங்கிய ஆண்டு?1886

30) கிழக்கு கரிபியன் கடல்பகுதியில் உள்ள டொமினிக் குடியரசு -தாக்கியப் புயல் – எரிகா புயல்

31) ஜப்பானில் Kyushu தீவை Goni என்ற புயல் தாக்கியது.

33) திடீர் வளிமண்டல அழுத்தக்குறைவு – புயல்

34) மகாசென் புயல் எந்த நாட்டினை தாக்கியது?
ஸ்ரீலங்கா

35) தைவான் மற்றும் சீனாவை தாக்கிய 'Soudlor' புயல் 2015ல் உருவாகிய அதிவேக புயலாகும்.

36) தனுஷ்கோடி புயல், 1964

37) நிசாப் புயல் (2008) இப்புயலுக்கு நிசா என்ற பெயரை வங்காளதேசம் சூட்டியது

38) லைலா புய‌ல்19 மே, 2010ஆந்திராவில்

39) ஜல்' புயல் எண்ணூரில் புதுச்சேரிக்கும், நெல்லூருக்கும் 6 நவ., 2010

40) தானே புயல் புதுவையில் டிசம்பர் 30, 2011.

41) நீலம் புயல் சென்னை 1 நவ., 2012

42) ஒடிசாவில் 'பைலின்' புயல் oct 2013

43) சாண்டி புயல்: அமெரிக்காவில் 50 பேர் ...
1 நவ., 2012 - சாண்டி புயல்: அமெரிக்காவில் 50 பேர் பலி - அணுஉலைகள் மூடப்பட்டன.

44) தென்சீனாவை தாக்கிய புயலின் பெயர் : லின்பா புயல் (Typhoon Linfa)

45) மேற்கு வங்கத்தை தாக்கிய புயல்-கொமேன்

46) *தைவானை தாக்கிய புயல்-சௌடிலார்

47) ஹுட் ஹுட் புயல் பெயர் வைத்த நாடு? ஓமன்

48) ஜப்பான் நாட்டை கடந்த 2016 அக்டோபர் மாதம் ஒரு சத்தி வாய்ந்த புயல் ஒன்று தாக்கியது அதன் பெயர் என்ன?
வொங்ஃபாங் (Vongfong)

49) சமீபத்தில் ஒடிசாவின் புடிமட்காவில் ஹீட் ஹீட் புயல் கரையைக் கடக்கும் போது அதன் வேகம்?
மணிக்கு 195 கிமீ

50) புயல் அல்லது மழை மேகங்கள் என அழைக்கப்படுவது-கார்படை மேகங்கள் / Nimbus

51) Hudhud புயல் :"HUDHUD" என்ற பெயர் பரிந்துரைத்த நாடு :- ஓமன்="இது அரேபிய மொழியில் Hoopoe(கொண்டலாத்தி) பறவையை குறிக்கிறது .

52) கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர்
வைக்கும் வழக்கத்தை ஆரம்பித்தவர்கள்
ஆஸ்திரேலியர்கள்தான்.

35) புயல்களின் பெயர்கள் வைத்த நாடுகள்?
முர்ஜன் (ஓமன்),
நீலம் (பாகிஸ்தான்),
மகசென்(இலங்கை),
பைலின் (தாய்லாந்து), ஹெலன்
(வங்கதேசம்),
லெகர் (இந்தியா)

36) சில புயல்களும் அவற்றுக்குப் பெயர் சூட்டிய நாடுகளும் ...
நர்கீஸ் - பாகிஸ்தான்
நிஷா - வங்கதேசம்
அய்லா - மாலத்தீவு
வார்டு - ஓமன்
காய்முக் - தாய்லாந்து
பிஜிலி - இந்தியா
பியான் - மியான்மர்

37) இந்தியா கொடுத்து ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட புயலின் பெயர்கள்?
அக்னி,
ஆகாஷ்,
பிஜ்லி,
ஜல் (நான்கு பூதங்கள்),
கடைசியாக லெஹர் (அலை).
இன்னும் வரவிருப்பவை
மேக்,
சாஹர்,
வாயு.
சைக்ளோன் -- இந்தியா.
டைபூன் -- சீனா.
டைபூ -- தைவான்.
டோர்னாடோ,ஹரிக்கேன் --அமெரிக்கா.
சதர்விபஸ்டர் -- ஆஸ்திரேலியா.
பெர்க் விண்ட் -- ஆப்பிரிக்கா.
பாம்பரோ -- அர்ஜென்டினா.

38) இட்டா புயல் எந்த நாட்டைத்தாக்கியது?ஆஸ்திரேலியா

39) நிஷா புயல் ஆண்டு?2008

40) தமிழ்நாட்டில் எத்தனை புயல் மையங்கள் உள்ளன?
124

41) காற்றின் வேகமும் பெயர்களும்!
மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினால் அது மென் காற்று.
மணிக்கு 6 முதல் 11 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினால் அது இளம் தென்றல்.
மணிக்கு 12 முதல் 19 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினால் அது தென்றல் காற்று.
மணிக்கு 20 முதல் 29 கிலோ மீட்டர் வேகத்தில் புழுதியைக் கிளப்பிக் கொண்டு வீசினால் அது புழுதிக் காற்று.
மணிக்கு 30 முதல் 39 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினால் அது ஆடிக் காற்று.
மணிக்கு 40 க்கு மேல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினால் அது கடுங்காற்று.
மணிக்கு 101 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினால் அது புயல் காற்று.
மணிக்கு 120 கிலோ மீட்டருக்கு மேலான வேகத்தில் வீசினால் அது சூறைக் காற்று.

42) மணிக்கு 222 கி.மீ- க்கு மேல் வீசும் அதிகபட்ச காற்றின் நிலை?உச்சமான சூறாவளிப் புயல்

43) எப்போதும் புயல் வீசிக் கொண்டிருக்கும் கோள் வெள்ளி

44) எந்த புயல் 2013-நவம்பர்24-ல் அந்தமானை தாக்கியது?லெகர்.

45) மாருதி = புயல் கடவுள்

46) அக் 30 2012 நிலம் புயலுக்கு பெயர் வைத்த நாடு ஒமன்.(பிரதீபா கப்பல்-பட்டினபாக்கம் )

47) Fulminology என்பது எதை பற்றி படிக்கும் படிப்பாகும்-புயல்

48) போரோமீட்டரில் அழுத்தக்குறைவு திடீரென ஏற்பட்டால் – புயல் வரப்போகிறது என்று அர்த்தம்

49) சமீபத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டைத் தாக்கிய புயல்-தக்லோபனா

50) புயல் முனைக்கு நன்னம்பிக்கை முனை எனப்பெயரிட்டவர்-இரண்டாம் ஜான்

51) ஹெலன் புயல் ஆந்திராவில் கரையை கடந்து மிக மோசமான நிலையை ஏற்படுத்தியது

52) புயல் கண் என்பது என்ன? புயலின் மைய பகுதி

53) கரீபியன் தீவுகள், வெனிசுலா, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் ஆகியவற்றை இர்மா புயல் தாக்கியது.

#உங்களுக்கு_தெரிந்தவற்றையும்_கீழே_குறிப்பிடவும்

ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

ராகங்கள்- தமிழ்,வடமொழிப் பெயர்கள்

ராகங்கள்- தமிழ்,வடமொழிப் பெயர்கள்

indian-figurines-banjara-musician-statues

தற்போது இன்னிசை நிகழ்ச்சிகளுக்குச் செல்வோரிடம் தமிழ் பண்களின் (ராகம்) பெயரைச் சொன்னால் அவர்களுக்கு என்ன ராகம் என்று தெரியாது. ஏனெனில் தேவாரம் முதலிய திருமுறைகள் பாடப்பட்ட ராகங்களின் தமிழ்ப் பெயர்கள் காலப்போக்கில் மறைந்துவிட்டன. ஆயிரம் ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்ட பழைய பண்களின் பெயர்களை நாம் மீண்டும் உயிர்ப்பிப்பது தமிழ் பண்பாட்டின் பெருமையையும், பழமையையும் நிலைநாட்டும். இப்போது வழக்கத்திலுள்ள பெயர்களுடன் பழைய பண்களின் பெயர்களையும் பயன்படுத்துவது நல்லது.
சம்பந்தரின் தோடுடைய செவியன் என்ற முதற்பாட்டு நைவளம் (நட்டபாடை) என்னும் பண்ணிலும் காரைக்கால் அம்மையாரிம் சில முதல் பாட்டுகளும் இதே பண்ணில் பாடப்பட்டதும் ஒப்புநோக்கத் தக்கது.
பழந்தமிழ் நூல்களில் 103 பண்கள் இருந்ததாகச் சொல்லபடுகிறது. அவைகளில் 23 பண்கள் தேவாரத் திருப்பதிகங்களில் பயன்படுதப்பட்டன:–
செவ்வழி, தக்கராகம், நேர்திறம்-புறநீர்மை, பஞ்சமம், காந்தாரம், நட்டபாடை, அந்தாளிக் குறிஞ்சி, பழம் பஞ்சுரம், மேகராகக் குறிஞ்சி, கொல்லிக் கௌவாணம், பழந்தக்கராகம், நட்டராகம், குறிஞ்சி, வியாழக் குறிஞ்சி, செந்துருத்தி, தக்கேசி, கொல்லி, இந்தளம், காந்தார பஞ்சமம், கௌசிகம், பியந்தை, சீகாமரம், சாதாரி.


பழைய பண்கள் இப்போது என்ன பெயரில் உலவுகின்றன என்பதைக் கீழ்க்கண்ட பட்டியல் காட்டும்:–

செவ்வழி = யதுகுல காம்போதி
சதாரி = காம வர்த்தினா
வியாழக் குறிஞ்சி = சௌராஷ்டிரம்
பழந்தக்க ராகம் = ஆரபி /சுத்த சாவேரி
இந்தோளம் = மாய மாளகௌளம்
புறநீர்மை = பூபாளம் /ஸ்ரீகண்டி
நட்டராகம் = பந்துவராளி
நட்டபாடை = நாட்டை
கொல்லி = பிலஹரி
கொல்லி கவ்வாமை = நவரோகி
தக்கேசி = காம்போதி
தக்கராகம் = ஏகதேச காம்போதி
நேரிசை = சிந்து கன்னடா
குறிஞ்சி = மலகரி
கௌசிகம் = பைரவி
காந்தார பஞ்சமம்= கேதார கௌளம்
பழம்பஞ்சுரம் = சங்கராபரணம்
மேகராக குறிஞ்சி == நீலாம்பரி
குறுந்தொகை = நாதநாமக்கிரியை
அந்தாளிக் குறிஞ்சி = சாமா / சைலதேசாட்சி
செந்துருத்தி = மத்யமாவதி
திருத் தாண்டகம் = ஹரிகாம்போதி
பஞ்சமம் = ஆஹிரி
ஏகாமரம் = புன்னாக வராளி
சீகாமரம் = நாதநாமக்கிரியை
கொல்லி, கொல்லி,க்கௌவாணம் = சிந்து கன்னடா

தேவார மூவர் ஊர் ஊராகச் சென்றபோது பண்களோடு பதிகங்களைப் பாடிச் சென்றனர். “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தன் என்று அவர் போற்றப்படுவதால் அவர் தமிழையும் இசையையும் தலம் தலமாக கோவில் கோவிலாகப் பரப்பியது தெரிகிறது. அவர்கள் காலத்துக்கு முன்னரே இந்தப் பண்கள் வழக்கில் இருந்ததால்தான் அவர்களால் இப்படிச் செய்யமுடிந்தது.

புதன், 20 செப்டம்பர், 2017

தமிழ் எண்கள் அறிவோம்



தமிழ் எண்கள் அறிவோம்..

1 – க,
2 – உ,
3 – ங,
4 – ச,
5 – ரு,
6 – சு,
7 – எ,
8 – அ,
9 – கூ,
10 – கo,
11 – கக,
12 – கஉ,
13 – கங,
14 – கச,
15 –  கரு,
16 – கசு,
17 – கஎ,
18 – கஅ,
19 – ககூ,
20 – உo
21 – உக,
22 – உஉ,
23 – உங,
24 – உச,
25 – உரு,
26 – உசு,
27 – உஎ,
28 – உஅ,
29 – உகூ,
30 – ஙo
31 – ஙக,
32 – ஙஉ,
33 – ஙங,
34 – ஙச,
35 – ஙரு,
36 – ஙசு,
37 – ஙஎ,
38 – ஙஅ,
39 – ஙகூ,
40 – சo,
41 – சக,
42 – சஉ,
43 – சங,
44 – சச,
45 – சரு,
46 – சசு,
47 – சஎ,
48 – சஅ,
49 – சகூ,
50 – ருo
51–ருக,
52–ருஉ,
53 – ருங,
54 – ருச,
55 – ருரு,
56 – ருஎ,
57 – ருஎ,
58 – ருஎ,
59 – ருகூ,
60 – சுo
61 – சுக,
62 – சுஉ,
63 – சுங,
64 – சுச,
65 – சுரு,
66 – சுசு,
67 – சுஎ,
68 – சுஅ,
69 – சுகூ,
70 – எo
71 – எக,
72 – எஉ,
73 – எங,
74 – ஏசு,
75 – எரு,
76 – எசு,
77 – எஎ,
78 – எஅ
79 – எகூ
80 – அo
81 – அக,
82 – அஉ,
83 – அங,
84 – அச,
85 – அரு,
86 – அசு,
87 – அஎ,
88 – அஅ,
89 – அகூ,
90 – கூo
91 – கூக,
92 – கூஉ,
93- கூங,
94 – கூச,
95 – கூரு,
96 – கூசு,
97 – கூஎ,
98 – கூஅ,
99 – கூகூ,
100 – கoo
101 – கoக
102- கoஉ
103 – கoங,
104 – கoச
105 – கoரு
106 – கoசு,
107 – கoஎ
108-கoஅ …….
————————————
இச்செய்தி வட இந்தியாவில் பஸ்ஸில் கூட அவர்கள் மொழியில் உள்ள எண்கள்தான் எழுதப்பட்டிருக்கும். ஆனால் தமிழருக்குத்தான்  தமிழ் எண்கள் இந்த தலைமுறைக்கு தெரியாமலே போய் விட்டது. பகிற்விற்கு ஏற்றது!
நம்  நண்பர்களுக்கு அவசியம் பகிரலாம்.

செவ்வாய், 19 செப்டம்பர், 2017

செப்டம்பர் மாத நடப்பு நிகழ்வுகள் – 2017



செப்டம்பர் மாத நடப்பு நிகழ்வுகள் – 2017

1. உலக அளவில் மக்கள் மனதைக் கவர்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியா எந்த இடத்தை பிடித்துள்ளது?
🐚 - 7 வது
2.சிலினெக்ஸ் 2017 எனும் கூட்டு கடற்பயிற்சி இந்தியா மற்றும் எந்த நாட்டிற்கு இடையே நடைபெற உள்ளது?
🐚 - இலங்கை
3. எரிசக்தி மேலாண்மையில் எக்சலன்ஸ் தேசிய விருதை பெற்றுள்ள விமான நிலையம் எது?
🐚 - ராஜீவ்காந்தி பன்னாட்டு விமான நிலையம்
4. எந்த மாநில அரசு கியான்குஞ் எனும் e-வகுப்புத் திட்டத்தை தொடங்கியுள்ளது?
🐚 - குஜராத்
5. எந்த நகரத்திலிருந்து நிதி ஆயோக் தேசிய ஊட்டச்சத்து யுத்தியை தொடங்கியுள்ளது?
🐚- புது டெல்லி
6. எந்த இந்தி நடிகை, ஆஸ்திரேலிய சுற்றுலாத்துறையின் முதல் இந்திய பெண் தூதராகியுள்ளார்?
🐚- பரிநீத்தி சோப்ரா
7. 2019 காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்தவுள்ள நாடு எது?
🐚🇮🇳- இந்தியா
8. வடகிழக்கு இந்தியாவின் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக, எந்த நகரத்தில் "North East Calling" நிகழ்வை மத்திய அரசு ஏற்பாடு செய்ய உள்ளது?
🐚 - புது டெல்லி
9.சர்வதேச இந்து மத கூடுகை 2017 எங்கு நடைபெற்றது?
🐚 - நேபாளம் (காத்மண்டு)
10. டென்சிங் நார்வே தேசிய சாகசத்திற்கான விருது 2017 எவருக்கு வழங்கப்பட்டுள்ளது?
🐚- பிரேம்லதா அகர்வால்
11. புகழ்பெற்ற பத்திரிக்கையாளரான கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் எந்த மாநிலத்தவர்?
🐚 - கர்நாடகா
12. உலகளாவிய தலைமைத்துவத்திற்கான "Plus Alliance" பரிசுபெற்ற இந்தியர் யார்?
🐚 - NR நாராயண மூர்த்தி
13. 2017 காமன்வெல்த் இளைஞர் பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் கோன்சம் ஆர்மிலா தேவி தங்கம் வென்றுள்ளார். இவர் எந்த எடைப்பிரிவைச் சார்ந்தவர்?
🐚 - 44 கிலோ
14. அண்மையில் காலமான ஜோம் கென, எந்த மாநிலத்தின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராவார்?
🐚 - அருணாச்சலப் பிரதேசம்
15. உலகின் மிகச் சிறிய ஆளில்லா விமானம் எது?
🐚- டிரோன்
16. பம்பாய் பங்குச் சந்தையின் (Bombay Stock Exchange) புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?
🍃- அஷிஷ் குமார் சௌஹான்
17. கல்பனா சாவ்லாவிற்கு பிறகு, நாசாவால் தேர்வு செய்யப்படும் இரண்டாவது இந்திய பெண்?
🍃- ஜஸ்லீன் கவுர் ஜோசான்
18. சரஸ்வதி சம்மன் 2016 விருது பெற்ற மஹாபலேஷ்வர் சாய் எந்த மொழி எழுத்தாளர்?
🍃 – கொங்கனி
19. உலக அளவில் மக்கள் மனதைக் கவர்ந்த நாடுகள் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு?
🍃– கனடா
20. மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ராஜிவ் கவுபா, எந்த துறை செயலராக பொறுப்பேற்றுக் கொண்டார்?
🍃 – உள்துறை
21. உலக அளவில் அதிக நேரம் விண்வெளியில் செயல்பட்டவர்கள் பட்டியலில், பெக்கி விட்சன் எத்தனையாவது இடத்தை வகிக்கிறார்?
🍃 - 8வது
22. மகாராஷ்டிராவைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தை 2 நிமிடம் 55 விநாடிகளில், 208 நாடுகளின் பெயர்களை கூறி, இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சிறுவன் யார்?🍃 - அவீர் பிரதீப் ஜாதவ்
23. தோல்வியில் முடிந்த செயற்கைக்கோள் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1H எடுத்து சென்ற ராக்கெட்?
🍃- பி.எஸ்.எல்.வி.-சி 39
24. சமீபத்தில் காலமான அகமது கான் எந்த துறையை சேர்ந்தவர்?
🍃– விளையாட்டு
25. சமீபத்தில் தக்காளித் திருவிழா எந்த நாட்டில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது?
🍃– ஸ்பெயின்
26. இந்தியாவின் மராத்தான் வீரர் சஞ்சீவி ஜாதவ், எங்கு நடைபெற்ற உலக பல்கலைக்கழக விளையாட்டில் பெண்கள் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்?
🍃– தைவான்
27 இந்தியாவும் எந்த நாடும் இணைந்து தீபாவளிக்கான இரு தபால் தலைகளை வெளியிட்டுள்ளன?
🍃 - கனடாசெப்டம்பர் மாத நடப்பு நிகழ்வுகள் – 2017 🌷
1. உலக அளவில் மக்கள் மனதைக் கவர்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியா எந்த இடத்தை பிடித்துள்ளது?
🐚 - 7 வது
2.சிலினெக்ஸ் 2017 எனும் கூட்டு கடற்பயிற்சி இந்தியா மற்றும் எந்த நாட்டிற்கு இடையே நடைபெற உள்ளது?
🐚 - இலங்கை
3. எரிசக்தி மேலாண்மையில் எக்சலன்ஸ் தேசிய விருதை பெற்றுள்ள விமான நிலையம் எது?
🐚 - ராஜீவ்காந்தி பன்னாட்டு விமான நிலையம்
4. எந்த மாநில அரசு கியான்குஞ் எனும் e-வகுப்புத் திட்டத்தை தொடங்கியுள்ளது?
🐚 - குஜராத்
5. எந்த நகரத்திலிருந்து நிதி ஆயோக் தேசிய ஊட்டச்சத்து யுத்தியை தொடங்கியுள்ளது?
🐚- புது டெல்லி
6. எந்த இந்தி நடிகை, ஆஸ்திரேலிய சுற்றுலாத்துறையின் முதல் இந்திய பெண் தூதராகியுள்ளார்?
🐚- பரிநீத்தி சோப்ரா
7. 2019 காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்தவுள்ள நாடு எது?
🐚🇮🇳- இந்தியா
8. வடகிழக்கு இந்தியாவின் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக, எந்த நகரத்தில் "North East Calling" நிகழ்வை மத்திய அரசு ஏற்பாடு செய்ய உள்ளது?
🐚 - புது டெல்லி
9.சர்வதேச இந்து மத கூடுகை 2017 எங்கு நடைபெற்றது?
🐚 - நேபாளம் (காத்மண்டு)
10. டென்சிங் நார்வே தேசிய சாகசத்திற்கான விருது 2017 எவருக்கு வழங்கப்பட்டுள்ளது?
🐚- பிரேம்லதா அகர்வால்
11. புகழ்பெற்ற பத்திரிக்கையாளரான கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் எந்த மாநிலத்தவர்?
🐚 - கர்நாடகா
12. உலகளாவிய தலைமைத்துவத்திற்கான "Plus Alliance" பரிசுபெற்ற இந்தியர் யார்?
🐚 - NR நாராயண மூர்த்தி
13. 2017 காமன்வெல்த் இளைஞர் பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் கோன்சம் ஆர்மிலா தேவி தங்கம் வென்றுள்ளார். இவர் எந்த எடைப்பிரிவைச் சார்ந்தவர்?
🐚 - 44 கிலோ
14. அண்மையில் காலமான ஜோம் கென, எந்த மாநிலத்தின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராவார்?
🐚 - அருணாச்சலப் பிரதேசம்
15. உலகின் மிகச் சிறிய ஆளில்லா விமானம் எது?
🐚- டிரோன்
16. பம்பாய் பங்குச் சந்தையின் (Bombay Stock Exchange) புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?
🍃- அஷிஷ் குமார் சௌஹான்
17. கல்பனா சாவ்லாவிற்கு பிறகு, நாசாவால் தேர்வு செய்யப்படும் இரண்டாவது இந்திய பெண்?
🍃- ஜஸ்லீன் கவுர் ஜோசான்
18. சரஸ்வதி சம்மன் 2016 விருது பெற்ற மஹாபலேஷ்வர் சாய் எந்த மொழி எழுத்தாளர்?
🍃 – கொங்கனி
19. உலக அளவில் மக்கள் மனதைக் கவர்ந்த நாடுகள் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு?
🍃– கனடா
20. மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ராஜிவ் கவுபா, எந்த துறை செயலராக பொறுப்பேற்றுக் கொண்டார்?
🍃 – உள்துறை
21. உலக அளவில் அதிக நேரம் விண்வெளியில் செயல்பட்டவர்கள் பட்டியலில், பெக்கி விட்சன் எத்தனையாவது இடத்தை வகிக்கிறார்?
🍃 - 8வது
22. மகாராஷ்டிராவைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தை 2 நிமிடம் 55 விநாடிகளில், 208 நாடுகளின் பெயர்களை கூறி, இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சிறுவன் யார்?🍃 - அவீர் பிரதீப் ஜாதவ்
23. தோல்வியில் முடிந்த செயற்கைக்கோள் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1H எடுத்து சென்ற ராக்கெட்?
🍃- பி.எஸ்.எல்.வி.-சி 39
24. சமீபத்தில் காலமான அகமது கான் எந்த துறையை சேர்ந்தவர்?
🍃– விளையாட்டு
25. சமீபத்தில் தக்காளித் திருவிழா எந்த நாட்டில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது?
🍃– ஸ்பெயின்
26. இந்தியாவின் மராத்தான் வீரர் சஞ்சீவி ஜாதவ், எங்கு நடைபெற்ற உலக பல்கலைக்கழக விளையாட்டில் பெண்கள் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்?
🍃– தைவான்
27 இந்தியாவும் எந்த நாடும் இணைந்து தீபாவளிக்கான இரு தபால் தலைகளை வெளியிட்டுள்ளன?
🍃 - கனடா

ஐன்ஸ்டீன் சொன்ன E=MC^2-ஐ இவ்வளவு ஈஸியாக விளக்க முடியுமா?


ஐன்ஸ்டீன் சொன்ன E=MC^2-ஐ இவ்வளவு ஈஸியாக விளக்க முடியுமா?

உலகில் இதுவரைக்கும் அறிவியல் விஞ்ஞானிகள் பல சமன்பாடுகளைத் தந்திருக்கிறார்கள். அதில், சார்பியல் கொள்கை (the Theory of Relativity), ராமன் விளைவு (Raman's Effect) போன்றவற்றை போல முக்கியமானது ஐன்ஸ்டீன் சொன்ன ஆற்றல் நிறை சமன்பாடு(E=MC^2). ”இது தெரியுமே” என்பவர்களிடம் விளக்கம் கேட்டால் யோசிக்கத்தான் செய்வார்கள்.
ஆரம்பம் :
1905 ஆம் ஆண்டு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது ஆராய்ச்சியை சமர்ப்பிக்கிறார்.அதுதான் E=MC^2.
இதில் M- நிறை ,E- ஆற்றல், C- ஒளியின் திசைவேகம். மேலும், செல்வதற்கு முன் நிறை (Mass), ஆற்றல்(Energy) பற்றி தெரிந்துகொள்வோம்.
ஆற்றல் (Energy):
ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. ஆனால், ஒரு வகை ஆற்றலை இன்னொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும்.
நிலக்கரி ஒரு நிலை ஆற்றல். இதை எரிக்கும் போது வெப்ப ஆற்றலாக மாறுகிறது. இது ஜுல் என்ற அழகால் அளக்கப்படுகிறது..
நிறை (mass):
W=Mg என்பது அனைவரும் அறிந்ததே.
நிறை kg லும், எடை N அலகிலும் அளக்கப்படுகிறது.
எடுத்துகாட்டு: ஐஸ் கட்டி 100கிராம் என்றால் அது உருகி தண்ணீராக மாறினால் கூட அதே 100கிராம்தான் இருக்கும். ஆக, நிறை ஆனது மாறிலி.
கதைக்குள் வருவோம். E=MC^2
ஒரு வரியில் சொல்லவேண்டும் என்றால் மிகக் குறைந்த நிறையைக் கூட மிக மிக அதிக அளவு ஆற்றலாக மாற்ற முடியும் என்பதே ஐன்ஸ்டீன் சொல்வது.
சில எடுத்துக்காட்டுகள் பார்க்கலாம்.
1.ஒரு பீரங்கி மற்றும் ஓர் இரும்புக் குண்டை எடுத்துக்கொள்வோம். இந்தக் குண்டை அதிக ஆற்றலுடன் உந்தி வெளியே தள்ளும் போது, ஒளியின் திசைவகத்தில் சென்று கொண்டிருக்கிறது என வைத்துக்கொள்வோம்.
நாம் வெளியே தள்ளும் ஆற்றலில் (energy)ஒரு பாதி மட்டும் வேகத்தை அதிகப்படுத்தும். மற்றொரு பாதி, அந்த இரும்புக் குண்டின் நிறையை (mass) அதிகப்படுத்தும்.
ஆக, ஒளியின் திசைவேகத்தில் செல்லக்கூடிய எந்த ஒரு பொருளின் வேகத்தை அதிகப்படுத்தக்கூடிய ஆற்றல் அதன் நிறையைத்தான் அதிகப்படுத்தும்.
2. ஒரு கால்பந்தை ஒருவன் மெதுவாக கிக் செய்கிறான்.அது உருண்டு வந்து காலில் படுகிறது. நம்மீது ஒரு மாற்றமும் ஏற்படவில்லை.
அதே பந்தை அதிக வேகத்தில்(m/s) கிக் செய்கிறான் என்றால் அது உங்கள் முகத்தில் வந்து படும் போது அந்தப் பந்தின் நிறையானது முதலில் இருந்ததை விட அதிகமாகக் காணப்படும். அதுவே அந்த பந்தானது ஒளியின் வேகத்தில் சென்றால் நினைத்துப் பாருங்கள்.
PV=MRT.. ஆக, திசைவேகம் அதிகரித்தால் நிறையும் அதிகரிக்கும். அதாவது நேர்த்தகவில் இருக்கும்.


3. ஆற்றலை நிறையாகவும், நிறையை ஆற்றலாகவும் மாற்ற முடியும்.
தங்கக் கட்டியை எடுத்து சுமார் 10-20 டிகிரி செல்சியஸ் வெப்பப்படுத்தினால், அதனுடைய நிறையானது 0.000000000000014கிலோ கிராம் அதிகரிக்கும்.
வெப்பப்படுத்துவதை நிறுத்தினால் பழைய நிலைமைக்குத் திரும்பும்.
ஆகவே, நிறையும் ஆற்றலும் சமம்..(E=M).
இதில் C^2 என்பது மாறிலி..(3×10^8 *3×10^8 = 9×10^16 m/s)
இதைத்தான் ஆற்றல்-நிறை சமன்பாடு E=MC^2 என்று சொல்கிறோம்..
நிறை ஒரு kg என்றால் C^2=9×10^16m/s. ஆக, 9,00,00,00,00,00,00,00,00 joule ஆற்றலை வெளிவிடும். இந்த ஆற்றல் ஐரோப்பா கண்டத்தை ஒரு மணி நேரத்துக்குள் ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடும்.
மிக குறைந்த நிறையை கூட மிக மிக அதிக அளவு ஆற்றலாக மாற்ற முடியும் என்றோமே. அது எப்படி என்று பார்ப்போம்.
யுரேனியம் 235 உடன் ஒரே ஒரு நியூட்ரானை மோதச் செய்தால், அது யுரேனியம் 236 ஆகும். மேலும் , பிரிந்து 141 BR + 92kr + 3நியூட்ரான் ஆகும். இதற்கு பெயர்தான் அணுக்கரு பிளவு(Nuclear Fission)..
இந்த 3 நியூட்ரான்கள் அருகில் உள்ள 3 யுரேனியத்துடன் மோதி அதே வினை நடைபெறும் .
அதோடு 9 நியூட்ரான்கள் வெளிவரும் ...
9 நியூட்ரான்கள் 9 யுரேனியத்துடன் இணைந்து 27 நியூட்ரான்களாக , அப்படியே சங்கிலித் தொடர் (chain reaction) நடத்துகிறது.
என்ன நடக்கிறது :
யுரேனியம் + நியூட்ரான்
235+1=236u
பிளவின் போது
140.883 + 91 + 3×1.008=235.812u
236- 235.812 =0.188u
0.188 u இது மாதிரி குறைந்த அளவு ஆற்றலை ஒரு யுரேனியம் நியூட்ரானிடம் மோதி வெளி வருகிறது. இதேபோல் பல கோடிக்கணக்கான அணுக்கள் ஒன்றோடு ஒன்று மோதி மிகப்பெரிய ஆற்றலை வெளிப்படுத்தும்....
ஹிரோஷிமா, நாகசாகியில் போட்ட அணுகுண்டில் யுரேனியத்தின் அளவு 0.860கிராம் மட்டுமே. அதாவது நமது பேனா மூடியின் நிறையின் பாதி அளவே.
0.8 கிராம் 15,000,000 அளவு TNT ஐ வெளிப்படுத்தியது. சுமார் 80000 பேர் இறந்தனர்..
ஐன்ஸ்டீன்ஸ் E=MC^2 விளக்கம் என்பது குறைந்த அளவு நிறையை கூட மிக மிக அதிக அளவு ஆற்றலாக மாற்ற முடியும் என்பதே.
அணுகுண்டு இப்படித்தான் வெடிக்கிறது:
போரின் போது, எடுத்துக்காட்டாக, அணு குண்டில் யுரேனியம் 100கி இருந்தால்தான் சங்கிலித் தொடரை ஏற்படுத்தும்.
ஆனால் ,95 கி மட்டுமே நிரப்பப்படும்.
குண்டு போடும் இடத்திற்கு வந்த உடன் 10கி உந்தித் தள்ளி 105கி ஆக ஆக்கி விடும். இது 100ஐ விட அதிகம் என்பதால் நியூட்ரானுடன் வினைபட்டு மிக அதிக அளவு ஆற்றலை வெளிப்படுத்தும். அதாவது 5000 செல்சியஸ் வெப்பத்தை உருவாக்கும்.
அறிவியலை ஆக்கத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அழிவுக்குப் பயன்படுத்தினால் நினைக்க முடியாத சேதங்களை ஏற்படுத்தும். இந்தக் கதிர் வீச்சினால் ஏற்படும் புற்று நோய், DNA மாறுபாடு ஆகியவை அபாயகரமானவை.
அணுகுண்டைவிட ஹைட்ரஜன் குண்டு வலிமை வாய்ந்தது. அது வெடிப்பதை நாமோ நமக்கு அடுத்தத் தலைமுறைகளோ நிச்சயமாக பார்க்கக் கூடாது என்று நினைக்கிறேன்.

புதன், 13 செப்டம்பர், 2017

#100YearsOfRussianRevolution ரஷ்யப் புரட்சி/சோவியத் புரட்சி



#100YearsOfRussianRevolution

ரஷ்யப் புரட்சி/சோவியத் புரட்சி என்று சொல்லப்படுபவை மொத்தம் 3 புரட்சிகள் எனக் கூற வேண்டும்.

முதல் புரட்சி 1905ஆம் ஆண்டு தொடங்கியது. ஆனால் அது மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது.

2ஆவது புரட்சி 1917ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மென்ஷ்விக்குகள் என சொல்லப்படும் ஒரு பிரிவினரால் நடத்தப்பட்டு ஆட்சியும் கைப்பற்றப்பட்டது. ஆனால் அது 6 மாதங்களில் முடிவுக்கு வந்தது.

இறுதியாக இன்று நாம் சோவியத் புரட்சி என்று சொல்லக் கூடிய 1917ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புரட்சியாளர் லெனின் தலைமையில் போல்ஷ்விக்குகளால் நடத்தப்பட்டதேயாகும்.

போல்ஷ்விக்குகள் என்பது பெரும்பான்மையினர் என்ற பொருள் குறிக்கும் சொல்.

ஜார் வம்சத்தைச் சேர்ந்த 2ஆம் நிக்கோலஸ் மன்னர் ஆட்சிக்கு எதிராக மக்கள் எழத் தொடங்கி இருந்தனர். ஆனால் அது முழுமை பெறுவதற்கு ஏறத்தாழ 20 ஆண்டுகள் ஆகின.

முதல் உலகப் போர் தொடங்கும் வேளையில் 2ஆம் நிக்கோலஸ் அந்தப் போரில் தன்னையும் இணைத்துக் கொண்டு ஒரு பெரிய பொருளாதார இழப்புக்கு காரணமாக இருந்தார்.

1914ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் உலகப் போர் தொடங்கியது.

1916ஆம் ஆண்டு இறுதியில் ஏறத்தாழ 18 லட்சம் ரஷ்ய வீரர்கள் இந்தப் போரில் இறந்து போய்விட்டார்கள்.

20 லட்சம் வீரர்கள் எதிரிப் படையால் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.

இதன் விளைவாக இராணுவத்திற்கு மன்னர் நிக்கோலசே தலைமை ஏற்று போருக்கு சென்றார். அது பெரிய வெற்றி எதனையும் ஈட்டித் தரவில்லை.

தேசம் சமூக பொருளாதார குழப்பங்களுக்கு ஆளாவதற்கே வழி வகுத்தது.

நிக்கோலஸின் மனைவி பெயருக்கே அரசியாக இருந்தார். சாமியார் ரஸ்புடினின் ஆட்சி தான் அப்போது நடைபெற்றது.

ரஸ்புடினுக்கும் மிகக் கடுமையான எதிர்ப்பு ரஷ்யாவில் இருந்தது.

அதன் விளைவாக 1917ஆம் ஆண்டு, ஜனவரியில் ரஸ்புடின் சாமியார் சுட்டுக் கொல்லப்பட்டார்

இப்படி பல்வேறு குழப்பங்களுக்கு உள்ளான தேசம், லெனினின் புரட்சி போராட்டத்திற்கு பின்னர்தான் ஒரு நிலைக்கு வந்து சேர்ந்தது.

ஆட்சியை கைப்பற்றிய லெனின் முதல் உலகப் போரில் இருந்து ரஷ்யாவை உடனடியாக விடுவித்துக் கொண்டார்.

முதல் உலகப் போர் ஏகாதிபத்தி யங்களுக்கு இடையிலான போர்,நாங்கள் எங்கள் தேசத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்தப் போகிறோம் என்றார் லெனின். அதற்கு பிறகு ரஷ்யா என்பது சோவியத் ஒன்றியம் என்று பெயர் மாற்றம் பெற்றது. அந்த ஒன்றியம் 75 ஆண்டுகள் நிலைத்து நின்றது.

1989 வரைக்கும் சோவியத் யூனியன் உலகத்திற்கு முன்னோடியாக திகழ்ந்தது. தொடர்ந்து உலகின் பல நாடுகள் சோஷலிஸ்ட் நாடுகளாக வலம் வந்தன.

உலக வரைபடத்தில் ஒரு பாதிக்கும் மேல் சிவப்பாக மாறியது. உலக வரலாற்றில் என்றும் நினைவுகூர வேண்டிய மிகப் பெரிய புரட்சி இது.

சனி, 9 செப்டம்பர், 2017

மின்மினி பூச்சிகள் இரவில் ஒளிர்வது ஏன்?



மின்மினி பூச்சிகள் இரவில் ஒளிர்வது ஏன்?


மின்மினிப் பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்று கூறுவார்கள்.

Coleopteran என்ற குடும்பத்தைச் சேர்ந்த மின்மினிப் பூச்சிகள் உலகம் முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

மின்மினி பூச்சிகளின் முட்டை, புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என்று அனைத்துமே ஒளிரும் திறன் வாய்ந்ததாம்.

இதன் ஒளிரும் நிகழ்வு ஒரு சிக்கல் நிறைந்த உயிர் இராசயனவியல். இம்முறை bioluminescence என்று அழைக்கப்படுகிறது.

மின்மினி பூச்சிகள் ஒளிர்வது ஏன்?மின்மினிப் பூச்சி தரும் ஒளியில் எரிபொருளாகப் பயன்படுவது லூசிஃபெரின் (luciferin) என்ற ரசாயன கூட்டுப் பொருள் ஆகும். இது பூச்சியின் ஒளியுமிழ் உறுப்பில் நிறைந்துள்ளது.

இந்த லூசிஃபெரின், லூசிஃபெரெஸ் என்ற என்ஸைமில் உள்ள உயிர்வளி, உயிரணுக்களில் நிறைந்துள்ள ATP என்ற ரசாயனவியல் பொருள், மற்றும் மக்னீசியம் ஆகியவற்றுடன் சேரும் போது ஒளி உண்டாகிறது.இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாயெனினும் மின்மினிப் பூச்சியில் இருந்து ஒளி உண்டாகாது.

அதுவும் மின்மினிப்பூச்சிகள் விட்டு விட்டு ஒளிர்வதற்குக் அதன் ஒளியுமிழ் உறுப்புக்குச் செல்லும் நரம்புத் தூண்டல்கள் விட்டு விட்டுச் செல்வதே காரணமாகும். இதனால் தான் மின்மினி பூச்சிகள் ஒளிர்கின்றது.

மின் மினிப் பூச்சிகள் தங்களது துணையை தேடிக்கொள்ள இரவுகளில் சில குறிப்பான இடங்களில் கூடி வித்தியாசமான மின்னல்களுடன் தங்களின் விருப்பத்தையும் இருப்பிடத்தையும் தெரிவித்து தங்களுக்குரிய துணையை தேடிக் கொள்ளுமாம்.

வியாழன், 7 செப்டம்பர், 2017

TNPSC QUESTION ANSWERS



TNPSC QUESTION ANSWERS

1.”மலைப் பிஞ்சி” என்பது? குறுமணல்
2.குமரி மாவட்டத்தின் பழைய பெயர்?நாஞ்சில் நாடு
3. கலிங்க நாட்டின் தற்போதைய பெயர்?ஒடிஷா
4.”தமிழ் மொழி” என்பது? இரு பெயரொட்டுப் பண்புத்தொகை
5.”இரவும் பகலும்” என்பது?எண்ணும்மை
6.”கல்வியில் பெரியர் கம்பர்”-இதில் பயின்று வந்துள்ள வேற்றுமை? ஐந்தாம் வேற்றுமை
7. ”நல்ல மாணவன்” என்பது? குறிப்புப் பெயரெச்சம்
8. “கடி விடுது”-இச்சொல்லில் “கடி” என்பதன் பொருள்?விரைவு
9. செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சென்னையில் நிறுவப்பட்ட ஆண்டு? 2008, மே 19
10. உயிர் அளபெடையின் மாத்திரை? 3 மாத்திரை
11. வல்லின உயிர் மெய் நெடில் எழுதுக்கள்? 42
12. தமிழில் கலைக்களஞ்சியம் அடிப்படையில் அமந்த நூல்? அபிதான கோசம்
13. சங்க காலத்தில் நிலம் எத்தனை வகைகளாக இருந்தது? 5
14. ”ஓடி கூடி” இச்சொற்களில் அமைந்துள்ள யாப்பிலக்கணம்? எதுகை
15. முதல் சொல்லின் இறுதி எழுத்து அடுத்த சொல்லின் முதல் எழுத்தாக அமைவது? அந்தாதி
16. ”கண்ணே மணியே முத்தம் தா”-குழந்தைப் பாடலின் ஆசிரியர்? கவிமணி
17. ”கட்டிக் கரும்பே முத்தம் தா”-இத்தொடரில் உள்ள கட்டிக் கரும்பே என்பதன் இலக்கணம்? உருவகம்
18. ”நிலா நிலா ஓடி வா”-குழந்தைப் பாடலை இயற்றியவர்? அழ. வள்ளியப்பா
19. ”பச்சைக் கிளியே வா வா”-குழந்தைப் பாடலின் ஆசிரியர்? கவிமணி
20. ”பச்சைக் கிளியே வா வா”-இப்பாடல் வரியில் ”வா வா” எனும் தொடர்? அடுக்குத் தொடர்
21. மகாபாரதத்தின் படி துரியோதனன், பீமன் இவர்களுக்கு கதாயுதம் பயிற்சிஅளித்தவர்? பலராமன்
22. ”அஞ்சுகம்” என்ற சொல் எதைக் குறிக்கும்? கிளி
23. ”தாய்மொழி” என்பது? தாய் குழந்தையிடம் பேசுவது
24. ”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்துப் பிறந்த
மொழி”-எனும் தொடர் உணர்த்துவது? தமிழின் பழமை
25. இரண்டாம் வேற்றுமை உருபு? ஐ
26. ”வனப்பு” எனும் சொல்லின் பொருள்? அழகு
27. ”காலை மாலை”-இதில் பயின்று வருவது? உம்மைத் தொகை
28. அடிதோறும் மாறிக் கிடக்கும் சொற்களை, பொருள் கொள்ளும் வகையில் அமைப்பது?
கொண்டுக் கூட்டுப் பொருள் கோள்
29. ”தளை” எத்தனை வகைப்படும்? 7
30. ”அஞ்சு”-இதில் உள்ள போலி?முற்றுப் போலி
31. மூவகைச் சீர்களின் எண்ணிக்கை?8
32. மகரக் குறுக்கத்திற்கான மாத்திரை அளவு?3/4
33. திராவிட மொழி____________?ஒட்டு நிலைமொழி
34. தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்?இளம் பூரணார்
35. தமிழ் நெடுங்கணக்கு எழுதும் முறை?இடமிருந்து வலம்
36. திராவிட மொழி பற்றி ஆராய்ந்த அமெரிக்கர்?எமனோ
37. அணி இலக்கணத்தை விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்தியம்பும் இலக்கண நூல்? தண்டியலங்காரம்
38. தொல்காப்பியம் குறிப்பிடும் சார்பெழுத்துக்கள்? 3
39. களவியலுக்கு உரை எழுதியவர்?நக்கீரர்
40. தொல்காப்பியம் எத்தனை பிரிவுகளை உடையது?3 (எழுத்து, சொல், பொருள்)
41. நாற்கவிராச நம்பி எழுதிய நூல்?அகப்பொருள்
42. மயிலுக்குப் போர்வை ஈந்த வள்ளல்?பேகன்
43. முற்றியலுகரத்தில் முடியும் எண்?7
44. பத்துப்பாட்டு நூல்களில் அளவில் சிறியது?முல்லைப் பாட்டு
45. எழுவாய் தானே ஒரு செயலை செய்யுமாயின் அது _______________ எனப்படும்?தன்வினை
46. பொருள்பட சொற்றொடர் அமைந்த வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டு?
யாதும் ஊரே யாவரும் கேளீர்
47. ”அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வாரைப் பொறுத்தல்
தலை”-இக்குறளில் அமைந்துள்ள அணி யாது?உவமையணி
48. ”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” எனக் கூறியவர்?திருமூலர்
49. ”காலை மாலை உலாவிநிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக்
கும்பிட்டு காலன் ஓடிபோவானே” எனப் பாடியவர்?தேசிக விநாயகம் பிள்ளை
50. வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் வர ‘ண” கர மெய் _____________ ஆக மாறும்?”ட” கர மெய்
51. செய்யுளில் முதற் சீரின் முதலெழுத்தோடு பின்வரும் சீர்கள் ஒன்றோ பலவோ
முதலெழுத்து ஒன்றி வருவது?மோனை
52.”ஆடையின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு” பாடலின் ஆசிரியர்?சத்திமுத்தப் புலவர்
53. ”நாள்” எனும் வாய்ப்பாட்டின் இலக்கணம்?நேர்
54. வெண்பா எத்தனை வகைப்படும்?5
55. அடியின் வகை?5
56. வஞ்சிப்பாவின் ஓசை?தூங்கலோசை
57. இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும்?3
58. இலக்கண முறைப்படி இல்லையாயினும் இலக்கணமுடையவை போல தோன்றுவது?இலக்கணப்போலி
59. சான்றோர் அவையில் பயன்படுத்த இயலா சொல்லை வேறு சொற்களால் பயன்படுத்துவது? இடக்கரடக்கல்
60. வலிமிகுந்த சொல்லுக்கு எடுத்துக்காட்டு?பலாச்சுளை
61.”திருமுருகாற்றுப்படை” எனும் நூலின் ஆசிரியர்?நக்கீரர்
62. அகத்தியர் சைவ சமயக் குரவர்கள் கூட்டதில் சேராதவர். சரியா? தவறா?சரி
63. தைத் திங்கள் முதல் நாள் கொண்டாடப்படும் விழா?பொங்கல்
64. பரணர் எம்மன்னனின் சம காலத்தவர்?கரிகாலன்
65. பொய்கையார் இயற்றிய இலக்கியம்?களவழி நாற்பது
66. வாகைப் பரந்தலை போரை நடத்திய மன்னன்?கரிகாலன்
67.முதல் சங்கத்தைத் தோற்றுவித்த மன்னன்?காய்ச்சின வழுதி
68. பல்யானை செங்குட்டுவன் தந்தை?உதயஞ்சேரலாதன்
69. கரூரைத் தலைநகராகக் கொண்ட மன்னர் பிரிவு?இரும்பொறை பிரிவு
70. தகடூரை ஆண்ட அதியமானை வென்ற சேரன்?பெருஞ்சேரல் இரும்பொ
71.கரிகாலனைப் பேரரசராக அறிவிக்க உதவிய போர்?வெண்ணிப் போர்
72. திருமாவளவன் என்ற பெயர் கொண்ட சோழன்--கரிகாலன்
73. கோச்செங்கெணன் என்ற சோழ மன்னனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இலக்கியம்? களவழி நாற்பது
74. கோவூர்கிழார் எவ்விரு சோழ அரசர்களிடையே போர் சமாதானம் செய்தார்?
நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி
75. கொல்லிமலை ஆண்ட சிற்றரசர்?ஓரி
76. ”ஆய்” என்ற மன்னர் ஆட்சி புரிந்த மலை?பொதிகை மலை
77. பரம்பு மலையை ஆண்ட மன்னர்?பாரி
78. திருக்கோவிலூர் பகுதியை ஆண்ட மன்னன்?காரி
79.இனிமைத் தமிழ் மொழி எது?-எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர்?பாரதிதாசன்
80.”கனியுண்டு”-இச்சொல்லின் இலக்கணம்?உரிச்சொல்
81.மயொங்கொலி எழுத்துக்களின் எண்ணிக்கை?8
82. ”காண்போம் படிப்போம்”-இப்பாடத் தலைப்பு தொடரில் அமைந்துள்ள இலக்கணம்?முற்றெச்சம்
83. ”மானின் விடுதலை”-கதைப் பாடலின் ஆசிரியர்? அழ. வள்ளியப்பா
84. ”மாற்றானுக்கு இடம் கொடேல்”-போன்ற முதுமொழிகள் மாணவர்களுக்கு உணர்த்துவது?நன்னெறி
85. ”தென்னை மரத்தின் ஓலைகள் நிலவொளி மென்காற்றில் சலசலக்கும்”-இதில் உள்ள
”சலசலக்கும்” என்பது? இரட்டைக்கிளவி
86. ”செந்தமிழ் நாடெனும் போதினிலே”-பாடலின் ஆசிரியர்? பாரதியார்
87.”புதியதோர் உலகம் செய்வோம்” எனப் பாடி முழங்கியவர்?பாரதிதாசன்
88. ”தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு” எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர்?கவிமணி
89. ”மறவன்” எனும் சொல்லின் பொருள்?வீரன்
90. ”கொன்றை வேந்தன்”-ஆசிரியர்?அவ்வையார்
91. ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதை எழுதியவர்?திருவள்ளுவர்
92. தமிழைப் போன்று மிகப் பழமையான மொழிகளில் ஒன்று?லத்தீன்
93. ”பிச்சி” என்னும் சொல்லின் பொருள்?முல்லை
94. மயிலுக்குப் போர்வை ஈந்த வள்ளல்?பேகன்
95. இடைச்சங்கம் இருந்த இடம்?கபாட புரம்
96.”சித்திரப்பாவை”-ஆசிரியர்?அகிலன்
97. ”திருவிளையாடற் புராணம்”-ஆசிரியர்?பரஞ்சோதி முனிவர்
98. ”பெண்ணின் பெருமை”-ஆசிரியர்?திரு.வி.க.
99. ”பாஞ்சாலி சபதம்” -ஆசிரியர்?பாரதியார்
100. இந்திய விடுதலைக்குப் பின் தமிழ் நாட்டின் முதல் அமைச்சரவைக் கவிஞராகஇருந்தவர்? நாமக்கல் கவிஞர்

இந்திய தண்டனைச்சட்டம். ..தெரிந்து கொள்வோம்..



இந்திய தண்டனைச்சட்டம். ..தெரிந்து கொள்வோம்..

1,  ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4)

2,  நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை.  IPC-217

3,  நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம்.  CRPC 404

4,  அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166

5,  எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரிந்த எந்த பாமரனும் இந்தியக் குடிமகன் எவரும் தாய்மொழியில் சட்டம் படிக்கலாம்.

6,  சட்டம் படித்த பாமரன் எவரும் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் தங்கள் வழக்கில் தாங்களே வாதாடலாம்.  Article 19(1) , CRPC 303,302(2)

7,  வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கலாம். CRPC 309(2) 312.

8,  இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும் ஆவணம் மற்றும் சான்றிதழ் தாய்மொழியில் கேட்டு பெறலாம். அதற்கான சட்டப்படியான செலவுத்தொகை செலுத்த வேண்டும். IEA-74,76-ன் கீழ்
எவர் ஒருவரும் பார்வையிடலாம்.

9,  இந்திய குடிமகன் எவரையும் எவர் தாக்கினாலும் (CRPC -4 படியிலான சங்கதிகள் தவிர) 3-ம் நபர் கைது செய்து சிறையில் வைக்கலாம். சட்டையை கழற்றி விடலாம். CRPC-43

10,   ஒரு குற்றம் நடைபெறும் முன்பு நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு காவல் உயர்நிலை அலுவலர்களுக்கும் கீழ்நிலை அலுவலர்களுக்கும் கட்டுப்பாடு உண்டு. CRPC 36, 149.

11,  காவல்நிலையம் மற்றும் நீதிமன்றம் இவற்றிலிரிந்து யாருடைய தயவும் இல்லாமல் சொந்த ஜாமினில் வெளியே வரலாம்.  செலவு ஐந்து ரூபாய் மட்டுமே. Article 21(2)

12,  கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு எத்தனை வருடம் நடந்தாலும் செலவுத்தொகை ரூபாய் 50 லிருந்து 100 வரை மட்டுமே பெறலாம். அதீதமான சூழ்நிலையில்தான் வழக்குச் செலவு கூடும். பொய்வழக்கு தாக்கல் செய்தால் IPC-211-ன்படி 2 வருடம் சிறை தண்டனை உண்டு சிவில் வழக்கில் மனுதாரர் பக்கம் நியாயமிருந்தால் Mount தொகை திரும்ப வந்துவிடும்.  மனுதாரர் பொய் வழக்கு தாக்கல் செய்திருந்தால் 50,000 நஷ்ட ஈடு பிரதிவாதிக்கு தரவேண்டும்.

13,  தாலுக்கா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற செலவு ரூபாய் 25 மட்டுமே. அதற்காக RIOffice-லும் VAO ஆபீசிலும் தவம்கிடந்து காத்திருக்க வேண்டியதில்லை.

14,  காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றால் படித் தொகையும், செலவும் சம்பளத்தொகையும் கேட்டுப்பெறலாம். CRPC.160(2)

15,  அதீதமான சூழ்நிலையில் மட்டும் கைவிலங்கிட முடியும் மற்றப்படி அன்று Article 21(14)

16. புகார்மனுவில் பொய்யான வாதம் வைத்திருந்தால் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் Article 32(8)

17,  பொய் வழக்கில் சிறைதண்டனை பெற்றிருந்தால் ரத்து செய்து விடலாம்.

18,  பொய் என்றும், புனையப்பட்டது என்று தெரிந்திருந்தும் அறிந்திருந்தும் உண்மையைப்போல நேர்மையற்ற முறையில் பயன்படுத்துதல் 7 வருடம் அல்லது 3 வருடம் சிறை தண்டனை உண்டு. IPC 193,196,200.

19,  முத்திரையே இல்லாத தராசை கைவசம் வைத்திருந்தாலே ஒரு வருடம் சிறை தண்டனை உண்டு. IPC.267

20,  அடுத்தவருடைய அசையும் சொத்தை பொருளை நேர்மையற்ற முறையில் அபகரித்தால் 2 வருடம் சிறை தண்டனை உண்டு..IPC-403

21, குழந்தை உயிருடன் பிறப்பதை தடுத்தல் மற்றும் பிறந்தபின் இறக்கச்செய்தல் பத்து வருட சிறை தண்டனை உண்டு.IPC-315.

22,  தற்காப்புக்காக செய்யப்படும் எந்தவொரு செயலும் குற்றமில்லை. IPC-96

23,  பிற மதம் நிந்தித்தல் ஆச்சாரம் கெடுதல் 2 ஆண்டு சிறை.  IPC-295

24,  மத உணர்வுகளை புண்படுத்துதல் ஒரு வருடம் சிறை IPC-295

25,  ஆள்மாராட்டம் செய்து ஏமாற்றுதல்.  3 ஆண்டு சிறை IPC-419

26,  ஏமாற்றும் பொருட்டு போலியாக பத்திரம் தயார் செய்தல் 7வருடம் சிறை. IPC-468.

27,  சொத்து அடையாள குறியை மாற்றுதல் 3ஆண்டு சிறை IPC-484

28,  கணவன் மனைவி உயிருடன் இருக்கும் போது மறுமணம் செய்தல் 7 ஆண்டுகள் சிறை. IPC-494

29,  முந்தைய திருமணம் மறைத்தல் 10 வருடம் சிறை.  IPC-495

30,  IPC-499 ல் 3 முதல் 9 வரை உள்ள விதிவிலக்கு விதியின்படி யாரையும் விமர்சனம் செய்யலாம். நீதிபதியையும் கூட

இதில்
IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்)ஆகும்.
CRPC என்பது குற்றவிசாரனை முறைச்சட்டம் ஆகும்.

ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

மாநிலங்கள் சிதறல்கள்

மாநிலங்கள் சிதறல்கள்
========== ===========
1] எந்த மாநில அரசு இந்திரா உணவகம் திட்டத்தை தொடங்கியுள்ளது = கர்நாடகா
2] எந்த மாநில கிராமப்புற மேம்பாட்டுக்கு நபார்டு வங்கி ரூ.1,350 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது = ராஜஸ்தான்
3] இந்தியாவின் முதல் ரயில்வே பேரழிவு மேலாண்மை மையம் எங்கு அமையவுள்ளது? = கர்நாடகா
4] இந்தியாவின் முதல் விமான பல்கலைக்கழகமான ராஜீவ் காந்தி தேசிய விமானப் பல்கலைக்கழகம் எங்கு அமையவுள்ளது = உத்ரபிரதேசம்
5] அனைத்து மாநில மற்றும் ஒன்றியப்பிரதேசங்களின் முதன்மை தேர்தல் அலுவலர்கள் மாநாடு எங்கு நடைபெற்றது = புதுடெல்லி
6] மின்னுற்பத்திக்காக நிலக்கரி பயன்பாட்டை செயல்படுத்த உள்ள முதல் இந்திய மாநிலம் = குஜராத்
8] அரசு பெண் தொழில்முனைவோரை பயிற்றுவிப்பதற்காக ஃபேஸ்புக்கின் She Means Business எனும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது = ஒடிஷா
9] மொபைல் தெரப்பி வாகனத்தை தொடங்கிய மாநிலம் = பீகார்
10] யானைகளை பாதுகாப்பதற்காக தேசிய அளவிலான "கஜ் யத்ரா தொடங்கிய இடம் = புதுடெல்லி
11] ஊழலை அறவே ஒழிக்க கண்காணிப்பு முறையை பலப்படுத்த உள்ள மாநிலம் = ஒடிஷா
12] நாமமி கங்கே ஜக்ரிட்டி யாத்ரா என்ற புதிய விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கிய மாநிலம் = உத்திர பிரதேசம்
13] இந்தியாவின் முதல் குறுங்காடுகள் எங்கு உருவாக்கப்படுகிறது= சட்டிஸ்கர்
14] பிரபு கீ ரசோய் (கடவுளின் சமையலறை) எனப் பெயரிடப்பட்டுள்ள இலவச உணவகம் தொடங்கிய மாநிலம் = உத்ரபிரதேசம்
15] இந்தியாவின் முதல் ஹெலிகாப்டர் டாக்சி சேவை எங்கு தொடங்கப்பட உள்ளது = பெங்களூர்
16] 14 வயதுக்கு குறைவான குழந்தைகளை தஹி ஹன்டி விழாவில் பங்கேற்க அனுமதி மறுத்த மாநிலம் = மகாராஷ்ட்ரா
17] இலவச வேட்டி சேலைகளை வழங்க முடிவு செய்துள்ள மாநிலம் = ஆந்திரபிரதேசம்
18] திரவ நைட்ரஜனை கொண்டு பாதுகாக்கப்படும் பானம் அல்லது உணவு பொருள்களை அதிகாரப்பூர்வமாக தடை செய்துள்ள மாநிலம் = ஹரியாணா
19] 2017 INDIA - ASEAN இளைஞர் மாநாட்டை நடத்தவுள்ள மாநிலம் = மத்திய பிரதேசம்
20] கப்பல் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக இந்தியாவில் கப்பல் சுற்றுலாவின் எழுச்சி எனும் திட்டம் எங்கு தொடங்கப்பட்டது?
= மகாராஷ்ட்ரா (மும்பை)
21] அப்னி காடி அப்னா ரோஜ்கர் திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் =பஞ்சாப்
22] தக்காளி விலைக்கு எதிராக தக்காளி ஸ்டேட் வங்கி எங்கு தொடங்கப்பட்டது = உத்ரபிரதேசம்
23] தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகளுக்கு மாத ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு அளிக்க முடிவு செய்துள்ள மாநிலம் = கேரளா
24] கட்டாய மத மாற்றம் அல்லது தூண்டுதலால் மதமாற்றம் செய்யப்படுவது போன்றவை ஜாமினில் வெளிவரமுடியாத குற்றமென சட்டம் இயற்றியுள்ள மாநிலம் = ஜார்கண்ட்
25] கனரா வங்கி தனது முதல் டிஜிட்டல் வங்கி கிளை CANDI யை எங்கு துவக்கியுள்ளது = கர்நாடகா(பெங்களூர்)
26] தரமான கல்வியை வழங்குவதற்காக,ஹமரி ஷால கைசி ஹோ என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்திய மாநிலம் = மத்தியபிரதேசம்