சனி, 9 செப்டம்பர், 2017

மின்மினி பூச்சிகள் இரவில் ஒளிர்வது ஏன்?



மின்மினி பூச்சிகள் இரவில் ஒளிர்வது ஏன்?


மின்மினிப் பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்று கூறுவார்கள்.

Coleopteran என்ற குடும்பத்தைச் சேர்ந்த மின்மினிப் பூச்சிகள் உலகம் முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

மின்மினி பூச்சிகளின் முட்டை, புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என்று அனைத்துமே ஒளிரும் திறன் வாய்ந்ததாம்.

இதன் ஒளிரும் நிகழ்வு ஒரு சிக்கல் நிறைந்த உயிர் இராசயனவியல். இம்முறை bioluminescence என்று அழைக்கப்படுகிறது.

மின்மினி பூச்சிகள் ஒளிர்வது ஏன்?மின்மினிப் பூச்சி தரும் ஒளியில் எரிபொருளாகப் பயன்படுவது லூசிஃபெரின் (luciferin) என்ற ரசாயன கூட்டுப் பொருள் ஆகும். இது பூச்சியின் ஒளியுமிழ் உறுப்பில் நிறைந்துள்ளது.

இந்த லூசிஃபெரின், லூசிஃபெரெஸ் என்ற என்ஸைமில் உள்ள உயிர்வளி, உயிரணுக்களில் நிறைந்துள்ள ATP என்ற ரசாயனவியல் பொருள், மற்றும் மக்னீசியம் ஆகியவற்றுடன் சேரும் போது ஒளி உண்டாகிறது.இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாயெனினும் மின்மினிப் பூச்சியில் இருந்து ஒளி உண்டாகாது.

அதுவும் மின்மினிப்பூச்சிகள் விட்டு விட்டு ஒளிர்வதற்குக் அதன் ஒளியுமிழ் உறுப்புக்குச் செல்லும் நரம்புத் தூண்டல்கள் விட்டு விட்டுச் செல்வதே காரணமாகும். இதனால் தான் மின்மினி பூச்சிகள் ஒளிர்கின்றது.

மின் மினிப் பூச்சிகள் தங்களது துணையை தேடிக்கொள்ள இரவுகளில் சில குறிப்பான இடங்களில் கூடி வித்தியாசமான மின்னல்களுடன் தங்களின் விருப்பத்தையும் இருப்பிடத்தையும் தெரிவித்து தங்களுக்குரிய துணையை தேடிக் கொள்ளுமாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக