#100YearsOfRussianRevolution
ரஷ்யப் புரட்சி/சோவியத் புரட்சி என்று சொல்லப்படுபவை மொத்தம் 3 புரட்சிகள் எனக் கூற வேண்டும்.
முதல் புரட்சி 1905ஆம் ஆண்டு தொடங்கியது. ஆனால் அது மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது.
2ஆவது புரட்சி 1917ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மென்ஷ்விக்குகள் என சொல்லப்படும் ஒரு பிரிவினரால் நடத்தப்பட்டு ஆட்சியும் கைப்பற்றப்பட்டது. ஆனால் அது 6 மாதங்களில் முடிவுக்கு வந்தது.
இறுதியாக இன்று நாம் சோவியத் புரட்சி என்று சொல்லக் கூடிய 1917ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புரட்சியாளர் லெனின் தலைமையில் போல்ஷ்விக்குகளால் நடத்தப்பட்டதேயாகும்.
போல்ஷ்விக்குகள் என்பது பெரும்பான்மையினர் என்ற பொருள் குறிக்கும் சொல்.
ஜார் வம்சத்தைச் சேர்ந்த 2ஆம் நிக்கோலஸ் மன்னர் ஆட்சிக்கு எதிராக மக்கள் எழத் தொடங்கி இருந்தனர். ஆனால் அது முழுமை பெறுவதற்கு ஏறத்தாழ 20 ஆண்டுகள் ஆகின.
முதல் உலகப் போர் தொடங்கும் வேளையில் 2ஆம் நிக்கோலஸ் அந்தப் போரில் தன்னையும் இணைத்துக் கொண்டு ஒரு பெரிய பொருளாதார இழப்புக்கு காரணமாக இருந்தார்.
1914ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் உலகப் போர் தொடங்கியது.
1916ஆம் ஆண்டு இறுதியில் ஏறத்தாழ 18 லட்சம் ரஷ்ய வீரர்கள் இந்தப் போரில் இறந்து போய்விட்டார்கள்.
20 லட்சம் வீரர்கள் எதிரிப் படையால் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.
இதன் விளைவாக இராணுவத்திற்கு மன்னர் நிக்கோலசே தலைமை ஏற்று போருக்கு சென்றார். அது பெரிய வெற்றி எதனையும் ஈட்டித் தரவில்லை.
தேசம் சமூக பொருளாதார குழப்பங்களுக்கு ஆளாவதற்கே வழி வகுத்தது.
நிக்கோலஸின் மனைவி பெயருக்கே அரசியாக இருந்தார். சாமியார் ரஸ்புடினின் ஆட்சி தான் அப்போது நடைபெற்றது.
ரஸ்புடினுக்கும் மிகக் கடுமையான எதிர்ப்பு ரஷ்யாவில் இருந்தது.
அதன் விளைவாக 1917ஆம் ஆண்டு, ஜனவரியில் ரஸ்புடின் சாமியார் சுட்டுக் கொல்லப்பட்டார்
இப்படி பல்வேறு குழப்பங்களுக்கு உள்ளான தேசம், லெனினின் புரட்சி போராட்டத்திற்கு பின்னர்தான் ஒரு நிலைக்கு வந்து சேர்ந்தது.
ஆட்சியை கைப்பற்றிய லெனின் முதல் உலகப் போரில் இருந்து ரஷ்யாவை உடனடியாக விடுவித்துக் கொண்டார்.
முதல் உலகப் போர் ஏகாதிபத்தி யங்களுக்கு இடையிலான போர்,நாங்கள் எங்கள் தேசத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்தப் போகிறோம் என்றார் லெனின். அதற்கு பிறகு ரஷ்யா என்பது சோவியத் ஒன்றியம் என்று பெயர் மாற்றம் பெற்றது. அந்த ஒன்றியம் 75 ஆண்டுகள் நிலைத்து நின்றது.
1989 வரைக்கும் சோவியத் யூனியன் உலகத்திற்கு முன்னோடியாக திகழ்ந்தது. தொடர்ந்து உலகின் பல நாடுகள் சோஷலிஸ்ட் நாடுகளாக வலம் வந்தன.
உலக வரைபடத்தில் ஒரு பாதிக்கும் மேல் சிவப்பாக மாறியது. உலக வரலாற்றில் என்றும் நினைவுகூர வேண்டிய மிகப் பெரிய புரட்சி இது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக