ராகங்கள்- தமிழ்,வடமொழிப் பெயர்கள்
தற்போது இன்னிசை நிகழ்ச்சிகளுக்குச் செல்வோரிடம் தமிழ் பண்களின் (ராகம்) பெயரைச் சொன்னால் அவர்களுக்கு என்ன ராகம் என்று தெரியாது. ஏனெனில் தேவாரம் முதலிய திருமுறைகள் பாடப்பட்ட ராகங்களின் தமிழ்ப் பெயர்கள் காலப்போக்கில் மறைந்துவிட்டன. ஆயிரம் ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்ட பழைய பண்களின் பெயர்களை நாம் மீண்டும் உயிர்ப்பிப்பது தமிழ் பண்பாட்டின் பெருமையையும், பழமையையும் நிலைநாட்டும். இப்போது வழக்கத்திலுள்ள பெயர்களுடன் பழைய பண்களின் பெயர்களையும் பயன்படுத்துவது நல்லது.
சம்பந்தரின் தோடுடைய செவியன் என்ற முதற்பாட்டு நைவளம் (நட்டபாடை) என்னும் பண்ணிலும் காரைக்கால் அம்மையாரிம் சில முதல் பாட்டுகளும் இதே பண்ணில் பாடப்பட்டதும் ஒப்புநோக்கத் தக்கது.
பழந்தமிழ் நூல்களில் 103 பண்கள் இருந்ததாகச் சொல்லபடுகிறது. அவைகளில் 23 பண்கள் தேவாரத் திருப்பதிகங்களில் பயன்படுதப்பட்டன:–
செவ்வழி, தக்கராகம், நேர்திறம்-புறநீர்மை, பஞ்சமம், காந்தாரம், நட்டபாடை, அந்தாளிக் குறிஞ்சி, பழம் பஞ்சுரம், மேகராகக் குறிஞ்சி, கொல்லிக் கௌவாணம், பழந்தக்கராகம், நட்டராகம், குறிஞ்சி, வியாழக் குறிஞ்சி, செந்துருத்தி, தக்கேசி, கொல்லி, இந்தளம், காந்தார பஞ்சமம், கௌசிகம், பியந்தை, சீகாமரம், சாதாரி.
பழைய பண்கள் இப்போது என்ன பெயரில் உலவுகின்றன என்பதைக் கீழ்க்கண்ட பட்டியல் காட்டும்:–
செவ்வழி = யதுகுல காம்போதி
சதாரி = காம வர்த்தினா
வியாழக் குறிஞ்சி = சௌராஷ்டிரம்
பழந்தக்க ராகம் = ஆரபி /சுத்த சாவேரி
இந்தோளம் = மாய மாளகௌளம்
புறநீர்மை = பூபாளம் /ஸ்ரீகண்டி
நட்டராகம் = பந்துவராளி
நட்டபாடை = நாட்டை
கொல்லி = பிலஹரி
கொல்லி கவ்வாமை = நவரோகி
தக்கேசி = காம்போதி
தக்கராகம் = ஏகதேச காம்போதி
நேரிசை = சிந்து கன்னடா
குறிஞ்சி = மலகரி
கௌசிகம் = பைரவி
காந்தார பஞ்சமம்= கேதார கௌளம்
பழம்பஞ்சுரம் = சங்கராபரணம்
மேகராக குறிஞ்சி == நீலாம்பரி
குறுந்தொகை = நாதநாமக்கிரியை
அந்தாளிக் குறிஞ்சி = சாமா / சைலதேசாட்சி
செந்துருத்தி = மத்யமாவதி
திருத் தாண்டகம் = ஹரிகாம்போதி
பஞ்சமம் = ஆஹிரி
ஏகாமரம் = புன்னாக வராளி
சீகாமரம் = நாதநாமக்கிரியை
கொல்லி, கொல்லி,க்கௌவாணம் = சிந்து கன்னடா
தேவார மூவர் ஊர் ஊராகச் சென்றபோது பண்களோடு பதிகங்களைப் பாடிச் சென்றனர். “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தன் என்று அவர் போற்றப்படுவதால் அவர் தமிழையும் இசையையும் தலம் தலமாக கோவில் கோவிலாகப் பரப்பியது தெரிகிறது. அவர்கள் காலத்துக்கு முன்னரே இந்தப் பண்கள் வழக்கில் இருந்ததால்தான் அவர்களால் இப்படிச் செய்யமுடிந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக