செவ்வாய், 7 நவம்பர், 2017

ரஷ்யப்புரட்சி100@ சோவியத் புரட்சி அப்படி என்ன தான் சாதித்தது?


ரஷ்யப்புரட்சி100@ சோவியத் புரட்சி அப்படி என்ன  தான் சாதித்தது?
                    ☆☆☆புரட்சி☆☆☆
☆ரஷ்ய சமூகம் தன் புரட்சியின் மூலம் அப்படி என்ன தான் செய்தது.. வாருங்கள் பார்ப்போம்...
☆உலகின் முதல் பட்டினியற்ற தேசத்தை உருவாக்கிக்காட்டியது.
☆உலகின் முதல் கல்லாதோர் அற்ற தேசத்தை உருவாக்கிக் காட்டியது.
☆முழுக்கல்வியும் இலவசமாக்கப்பட்டது.
☆உயர் கல்வி வரை கட்டாயமாக்கப்பட்டது.
☆சுகாதாரத்திற்கு ஆகும் மொத்த செலவையும் அரசே ஏற்றது.
☆தொழிலாளர்களின் வேலை நேரம் 7 மணி நேரமாக்கப்பட்டது.
☆24 மணிநேரம் பணியாற்ற வேண்டிய அத்தியாவசியத் தொழிலாளர்களின் வேலை நேரம் 6 மணி நேரமாக்கப்பட்டது.
☆தவிர்க்க முடியாத காலகட்டத்தை தவிர கூடுதல் நேர உழைப்பு தடை செய்யப்பட்டது.
☆தொழிலாளர்களுக்கு இதர விடுமுறை இல்லாமல்,ஆண்டிற்கு ஒரு மாதம் முழு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டது.
☆விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்வோருக்கான மானியத்துடன் கூடிய உல்லாச விடுதிகள் கொடுக்கப்பட்டன.
☆ஆண்களுக்கு 60 வயதும், பெண்களுக்கு 55 வயதும் ஓய்வு பெறும் வயதாகவும், ஓய்வு பெறுவோர்க்கும், உழைக்க இயலாதவர்களுக்கும் ஓய்வூதியமாக முழுச்சம்பளமும் வழங்கப்பட்டது.
☆ஓய்வூதியத்தை உலகமே அறிந்தது ரஷ்ய புரட்சியின் விளைவாகத்தான்.
☆எல்லோருக்கும் குடியிருப்பு உறுதி செய்யப்பட்ட முதல் நாடும் ரஷ்யா தான்.
☆வீட்டு வாடகை, எரிபொருள், மின்சாரம், தண்ணீர் உட்பட எல்லாவற்றிற்கும் சேர்த்தே ஊதியத்தில் 3 சதவீதம் மட்டுமே பெறப்பட்டது.
☆பெண்களுக்கு பேறுகால விடுப்பு நான்கு மாதங்கள் முழு ஊதியத்துடன் வழங்கப் பட்டது.
☆தேவைப்படின் ஓராண்டு காலம் வரை பாதி ஊதியத்துடன் கூடிய விடுப்பும் வழங்கப்பட்டது.
☆தாய்ப்பால் கொடுக்கும் காலம் வரைக்கும் பெண்களுக்கு வாரத்தில் 6 நாட்களோ, நாள் ஒன்றுக்கு 7மணி நேரமோ உழைக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை.
☆எல்லா குழந்தைகளுக்கும் 16 வயது வரையிலும், தனித்து வாழும் பெண்கள் வளர்க்கும் குழந்தைகளுக்கு 18 வயது வரையிலும் அரசு மானியம் வழங்கியது.
☆எல்லோருக்கும் வேலை வழங்கிய முதல் நாடும் ரஷ்யா தான்.
☆இன்னும் இதுபோன்ற பட்டியல் நீண்டுகொண்டே போகும். இவ்வளவு ஏன், இன்றைக்கு நான்
☆அனுபவிக்கிற பல உரிமைகளும், தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள பல உரிமைகளும் ரஷ்ய புரட்சியின் மூலமாகவே இந்த உலகம் அறிந்தது, பெற்றது.
☆சூரிய அஸ்தமனமே இல்லாத பெரும் செல்வம் படைத்த பிரிட்டிஷ் சாம்ராஜியமே, தன் சொந்த நாட்டு மக்களுக்கு அறிமுகம் கூட செய்யாத பல நலத்திட்டங்களை அன்றைக்கு வறுமையிலிருந்து உருவான ரஷ்யாவின் புரட்சிகர அரசாங்கம் செய்துகாட்டியது.
☆காரணம் செல்வம் ஒரே இடத்தில் குவியாமல், எல்லோருக்கும் நாட்டின் மொத்த செல்வமும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்கிற உயரிய பொதுவுடைமை கருத்தாலேயே அது சாத்தியமானது.


‬1917 ஆம் ஆண்டு நவம்பர் 7 உலக வரலாற்றில் பொன் ஏடுகளால் பொறிக்கப்பட்ட ஒரு நாள்.அதுவரை ரஷ்யாவில் ஜார் மன்னர்களின் காலடியில் பசியும்,பட்டினியுமாக  செத்துக்கொண்டிருந்த மக்கள் ஒன்றிணைந்து லெனின் தலைமையில் புரட்சி செய்த நாள்.

ரஷ்யாவில் மக்கள் இருப்பதை மறந்து விட்டு ஆடம்பரம்,அதிகாரம்,உல்லாசம் என்று தான்தோன்றித்தனமாக நாட்டை ஆண்டு வந்தனர் ஜார் மன்னர் வம்சத்தினர்.இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானர்கள்.தின்னும் ரொட்டிக்குக் கூட நீண்ட வரிசையில் நின்று காத்துக் கிடந்தார்கள்.அதுவும் பல நேரங்களில் கிடைக்காமல் போகும்.
மக்களுக்கு மட்டுமல்ல,மக்களைக் காப்பாற்றும் ராணுவ வீரர்களுக்கும் இதே பிரச்சினை தான்.அவர்களுக்கு ரொட்டியும் இல்லை,சம்பளமும் இல்லை.நாட்டைக் காப்பாற்றும் ராணுவத்தினருக்கே இந்த கதி என்றால்,மற்றவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் கேடு பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை...

இந்நிலையில் தான் 1917ஆம் ஆண்டு ரஷ்யாவில் புரட்சி வெடித்தது. அந்த மாபெரும் மக்கள் புரட்சி நடந்து இன்றுடன் நூறு ஆண்டுகள் நிறைவுறுகிறது...


 ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டை நினைவு கூர்வதென்பது சடங்கல்ல; மாறாக சரித்திரத்தின் போக்கைப் புரிந்துகொள்ளவும் நாளை புதிய சரித்திரம் படைக்கவுமான நிகழ்வின் தொடக்கமாகவே பார்க்க வேண்டும் .

முதலாளித்துவத்தின் நோய் முற்றிக்கொண்டே இருக்கிறது. அது தன் லாபவெறியில் இயற்கையை,மானுடத்தை கண்மூடித்தனமாகச் சூறையாட பைத்தியம் பிடித்த நிலையில் அலைகிறது. இதிலிருந்து தப்பிக்கும் மருந்து மார்க்ஸ் என்கிற சமூக விஞ்ஞான மருத்துவனிடமே இருக்கிறது. ஆகவேதான் மீண்டும் மீண்டும் உலகம் அவனைக் கல்லறையிலிருந்து எழுப்பி கேட்டுக் கொண்டிருக்கிறது.

முதலாளித்துவத்தின் வீழ்ச்சி தவிர்க்கவியலாதது - மனிதரை மனிதர் இனிமேலும் சுரண்ட முடியாத அமைப்பாகிய கம்யூனிஸத்துக்கு சமூகம் மாற்றமுறும்.’

மானுடத்தின் மாபெரும் விடுதலைக் கனவு தடைப்பட்டிருக்கலாம். ஆனால், மார்க்சியம் வெற்றி பெற்றே தீரும். மனிதர்கள் அனைவரும் சமம் என்ற சோஷலிஸக் கனவு முழுமையாய் நிறைவேறும் நாளில்தான் மானுடம் என்ற வார்த்தை தனக்கான முழுமையான பொருளைப் பெறும்.

#ரஷ்யப்புரட்சி100

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக