வியாழன், 10 மே, 2018

மாநிலக்கல்லூரி (தன்னாட்சி ), சென்னை. 600 005.


மாநிலக்கல்லூரி  (தன்னாட்சி ), சென்னை. 600 005.

செந்தமிழ் நாட்டின் தலைநகரமான சென்னையில் ஆர்ப்பரிக்கும் வங்கக் கடலை நோக்கி நிமிர்ந்து நிற்கும் கலைக் கூடம் ஒன்று உண்டு என்றால் அதுவே நானிலம் போற்றும்  மாநிலக் கல்லூரி ஆகும். ஆயிரக்கணக்கான சான்றோர்களையும் பேரறிஞர்களையும் அறிவியல் வல்லுனர்கள் உருவாக்கிக் கொடுத்து தமிழ் நாட்டிற்குப் பெருமை சேர்த்த கல்லூரி ஆகும். இக்கல்லூரி வெள்ளி விழா, பொன் விழா, பவள விழா, நூற்றாண்டு விழா, மற்றும் நூற்றாண்டு பவள விழா கொண்டாடிய கல்லூரிகளிலேயே மிகவும் பழமை வாய்ந்தது. 1840 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 15 ஆம் நாள், திரு அயர் பர்ட்டன் பிரபு என்ற கணித பேராசிரியரால்  தொடங்கப்பட்ட இக்கல்லூரி இன்றைய முதல்வர் முனைவர் பிரம்மானந்த பெருமாள் வரை 42 முதல்வர்களால்  கண்ணும் கருத்துமாய் நிர்வகிக்கப்பட்டு முன்னேற்றம் கண்டு வருகிறது. சென்னை மாநிலக் கல்லூரி,  1757 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சென்னை பல்கலைக்கழகத்திற்கு இந்நிறுவனம் முன்னோடியாக விளங்கியது சென்னை பல்கலைக்கழகத்தின் தாய் என்ற பெருமை இந்த மாநிலக் கல்லூரிக்கு உண்டு.மேலும் தேசிய மதிப்பீடு மற்றும் சான்றளிப்பு கழகத்தால்" A " சான்றளிப்பு தகுதிபெற்றுள்ளது.


*இடம்பெற்றுள்ள துறைகள்*

1. தமிழ்த்துறை
2. ஆங்கிலதுறை
3. பொருளியல்துறை
4. வரலாற்றுத்துறை
5. அரசியல் அறிவியல் துறை
6. பொது நிர்வாகவியல் துறை
7. வணிகவியல்
8. பி. காம் (காதுகேளாருக்கு சிறப்புப்பிரிவு )
9. நிருமச்செயலறியல் துறை
10. தாவரஉயிரியல் மற்றும் தாவரஉயிர்தொழில்நுட்பவியல் துறை
11. கணிதம்
12. கணினி அறிவியல்
13. இயற்பியல்
14. உளவியல்
15, வேதியியல்
16. விலங்கியல்
17. புவிஅமைப்பியல்
18. புவியியல்
19 புள்ளியியல்
20. நுண்ணுயிரியல்
21. சமூகப்பணி துறை
22.இந்தி
23. மலையாளம்
24.சமஸ்கிரதம்
25.தெலுங்கு
26.உருது
27. உடற்கல்வி துறை என மொத்தம் 27 துறைகளை கொண்டுள்ளது.


2018-2019 ம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படவுள்ள (07-05-2018) நிலையில் நம் கல்லூரி மாணவர்கள், மற்ற கல்லூரி மாணவர்களை நம் கல்லூரியின் பெருமைகளை எடுத்துக்கூறி மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


*இவ்வருடம் மாநிலக்கல்லூரி இந்தியாவின் தலைசிறந்த முதல் பத்து கல்லூரிகளில் 5 (ஐந்தாவது ) இடம் பெற்றுள்ளது*


கல்லூரி இணையதளம் :www.Presidencycollege.Com.


கல்லூரியில் சேரவிரும்பும் அனைவர்க்கும் மாநிலக்கல்லூரி இடமளிக்கும், உங்களுக்கு அதிஷ்டம் இருந்தால்.......


*மாணவர்கள் இதனை படித்து பின்பு உங்களுக்கு தெரிந்த மாணவர்களுக்கு பகிருங்கள். இது ஏதாவது ஒரு மாணவனுகு நாம் செய்யும் உதவியாக இருக்கட்டும்.*

     
மாநிலக்கல்லூரி.,
திருவல்லிக்கேணி.,
சென்னை,  600 005,

மெரினா கடற்கரை எதிரில்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக