செவ்வாய், 1 மே, 2018

இந்திய நீதித்துறை & நீதிமன்றங்கள்: MINISTRY OF LAW AND JUSTICE, + COURTS


இந்திய நீதித்துறை & நீதிமன்றங்கள்: MINISTRY OF LAW AND JUSTICE, + COURTS

Q1. இந்திய நீதித்துறையின் சரித்திர பின்னணி…

"ஆங்கிலேயர்கள் சிறிது சிறிதாக நம் நாட்டைக் கைப்பற்றத் தொடங்கிய பிறகு, ராஜ வம்ச நீதிமன்றங்களும் முறைகளும் படிப்படியாக மறையத் தொடங்கி ஆங்கிலேயர்களின் ""பொது நீதி முறை"" (Common Law System) நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. 1726ல் கிழக்கிந்திய கம்பெனிக்கு, மா நகராட்சி மன்றத் தலைவர் நீதிமன்றங்கள் (Mayor's Court), சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தாவில் அமைக்க அனுமதி அளிக்கப்பட்ட து. 1772 பிளாசிப் போருக்கு பிறகு, நீதிமன்றங்கள் நாட்டின் பல பகுதிகளில் விரிவடையத் தொடங்கியது. இதன் மூலம் கடைசியாக நடைமுறையில் இருந்த முகலாய நீதிமுறைகளும் மறையத் தொடங்கின. 1857 முதல் சுதந்திரப் போருக்கு பிறகு இங்கிலாந்து ராணியின் ஆட்சி அமல் படுத்தப்பட்டபின், இங்கிலாந்தின் சட்ட அடிப்படையில் நம் நாட்டிலும் நீதித்துறை அமையத் தொடங்கியது.
1862ல் இந்திய உயர் நீதிமன்றச் சட்டம் கொண்டு வரப்பட்டு, மேயர் நீதி மன்றங்களால் மாற்றப்பட்டு, உயர் நீதி மன்றங்கள், கீழ்மட்ட நீதி மன்றங்கள், வழக்கறிஞர்கள் பதிவு, போன்ற மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தன. ஆங்கிலேயர்கள் காலத்தில் Privy Council - அந்தரங்க (அ) பிரத்தியேக குழு என்ற அமைப்பே மிக உச்ச மேல் முறையீடு அமைப்பாக செயல்பட்டது. வழக்கறிஞர்கள் ஆங்கிலேயர்களாகவே இருந்தனர். (இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து வழக்கறிஞர்கள்).
1846 சட்டபயிற்சியாளர்கள் சட்ட (Legal Practitioners Act) சட்டம் வந்த பிறகு, அனைவருக்கும் சட்டப்பயிற்சி/வழக்கறிஞராக பணியாற்ற வழி வகுத்தது. 1862ல் தாமஸ் பேபிங்டன் மெக்காலே தலைமையில் முதல் சட்டக்குழு அமைக்கப்பட்டு (Law Commission), இந்திய தண்டனை சட்டம் (Indian Penal Code), குற்றவியல் நடைமுறைச்சட்டம் (Code of Criminal Procedure), ஆதாரச் சட்டம் 1872 (Evidence Act) மற்றும் இதர சட்டங்களும் நடைமுறைக்கு வந்தன. உச்ச நீதிமன்றம் 1937 முதல் 1958 வரை பாராளுமன்ற வளாகத்தில் செயல்பட்டது. 1958ல் தற்சமயம் இயங்கி வரும் இடத்திற்கு மாற்றப்பட்டது. இந்தியாவின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு இந்திய அரசியல் சட்டம் (Constitution of India) வடிவமைக்கும் பொறுப்பு டாக்டர் அம்பேத்கர் தலைமையில் தொடங்கியது. "

Q2. "இந்திய அரசியல் சாசனத்தின் எந்த விதிகளின்படி உச்ச நீதிமன்றம் (Supreme Court) மற்றும் அதன் நீதிபதிகள், அமைக்க வழி வகுக்கப்பட்டுள்ளது?"

விதி எண். 124 முதல் 147 வரை.

Q3. இந்திய உச்ச நீதிமன்றம் என்று முதல் இயங்க தொடங்கியது?

28.1.1950.

Q4. உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை?

2008 முதல் 31 - தலைமை நீதிபதியும் சேர்த்து - தொடங்கப்பட்டபோது 8 நீதிபதிகள்.

Q5. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பவர்...

குடியரசுத் தலைவர்.

Q6. உச்ச நீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமை நீதிபதி யார்?

ஹரிலால் ஜெய்கிஷன் தாஸ் கானியா - 15.8.47 - 5.2.51.

Q7. உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி யார்?

ஃபாத்தீமா பீவி - 6.10.1989 - 29.4.1992.

Q8. உச்ச நீதிமன்றம், தற்போதைய வளாகத்திற்குள், எந்த வருடம் முதல் இயங்கத் தொடங்கியது?

1958

Q9. உச்ச நீதிமன்றத்தை வடிவமைத்தவர் யார்?

கணேஷ் பிகாஜி தேவ்லாலிகர் - இவர் மத்திய பொதுப்பணித்துறையின் முதல் இந்திய தலைவர்.

Q10. உச்ச நீதிமன்றத்தின் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள சிலை யாருடையது?

இந்திய அன்னை - MOTHER INDIA - வடிவமைத்தவர் சிந்தாமணி கார்.

Q11. உச்ச நீதிமன்றத்தின் முத்திரையும், அதன் அடிப்பாகத்தில் பதிக்கப்பட்டுள்ள வார்த்தைகளும் என்ன?

"சார நாத் சிங்கத்தூண் - ""யதோதர்மஸ்ததோ ஜெயஹ"" (சமஸ்கிருதம்) - ""TRUTH ALONE I UPHOLD"" - ""உண்மையை மட்டும் நிலை நாட்டுவேன்""."

Q12. தமிழ் நாட்டிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்யப்பட்ட முதல் பெண்மணி யார்?

R. பானுமதி.

Q13. உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட பெண்மணிகள் யார்?

எண்

பெயர்

வருடம்

மாநிலம்

1.

ஃபாத்திமா பீவி

1989 - 1992

கேரளா.

2.

சுஜாதா வி.மனோகர்

1994 - 1999

மகாராஷ்டிரா.

3.

ரூமா பால்

2000 - 2006

மேற்கு வங்காளம்.

4.

க்யான் சுதா மிஸ்ரா

2010 - 2014

பீஹார்.

5.

ரஞ்ஜனா ப்ரகாஷ் தேசாய்

2011 - 2014

மகாரஷ்டிரா.

6.

R. பானுமதி

2014 -

தமிழ் நாடு.

Q14. உச்ச நீதிமன்றத்தின் முதல் தலித் நீதிபதியாகவும், தலைமை நீதிபதியாகவும் இருந்தவர் யார்?

K.G. பாலகிருஷ்ணன்.

Q15. பார்ஸி (பாரசீக) இனத்தை சார்ந்த முதல் உச்ச நீதிமன்ற நீதிபதி யார்?

S.H. கபாடியா

Q16. உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது என்ன?

65 (உயர் நீதிமன்ற நீதிபதி வயது 62).

Q17. உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம், எந்த அரசியல் சட்டவிதிப்படி நிர்ணயிக்கப்படுகிறது?

விதி எண். 125ன்படி பாராளுமன்றம் முடிவு செய்கிறது.

Q18. 2015 நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் எவ்வளவு?

நீதிபதிகள் - ரூ. 90,000/- ; தலைமை நீதிபதி - ரூ. 1,00,000/-

Q19. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எவ்வாறு பதவி நீக்கம் செய்யப்படலாம்?

"அரசியல் குற்றச்சாட்டு (Impeachment ) முறையீடு மூலம். இந்த முறையீடு, மக்களவை உறுப்பினர்கள் 100 பேர் அல்லது மா நிலங்களவை உறுப்பினர்கள் 50 பேர் கையொப்பமிட்டு, இரு அவையிலும் 2/3 பெரும்பான்மையில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்."

Q20. அரசியல் குற்றச்சாட்டு முறையீட்டை(Impeachment) சந்தித்த நீதிபதிகள் யார்?

"1. ராமசாமி - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி - 1991ல் இக்குற்றச்சாட்டை சந்தித்தார்.
2. சௌமித்ர சென் - கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி - 1993ல் இக்குற்றச்சாட்டை சந்தித்தார்.
3. தினகரன் - சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி - 2010ல் இக்குற்றச்சாட்டை சந்தித்தார்."

Q21. உச்ச நீதிமன்றம் தான் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய எந்த சட்டம் வழி வகுக்கிறது?

இந்திய அரசியல் சட்டத்தின் 137வது விதியின் மூலம் மறுபரிசீலனை செய்யலாம்.

Q22. "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமரியாதை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க எந்த சட்டம் வழி வகுக்கிறது?"

இந்திய அரசியல் சட்டத்தின் 129 மற்றும் 142வது விதிகளின்படி நடவடிக்கை எடுக்கலாம்.

Q23. "உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளில் முதல் இஸ்லாமியர் யார், அவருடைய மற்ற தகுதிகள் யாவை?"

"1. முகமது ஹிதயத்துல்லா - 1968 - 1970 டிசம்பர் வரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
2. தற்காலிக குடியரசுத்தலைவர் - 20.7.1969 முதல் 24.8.1969 வரை.
3. துணைக்குடியரசுத் தலைவர் - ஆகஸ்ட் 1979 முதல் ஆகஸ்ட் 1984 வரை.
4. ராய்ப்பூரில் ஒரு சட்டப்பல்கலைக்கழகம் அவருடைய பெயரில் இயங்குகிறது."

Q24. நம் நாட்டின் முதல் சட்ட அமைச்சர் யார்?

அம்பேத்கார் - 15.8.1947 - செப் - 1951.

Q25. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை பணி நீக்கம் செய்ய அதிகாரம் படைத்தவர் யார்?

குடியரசுத் தலைவர் - பணி அமர்த்தவும் இவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகளும் குடியரசுத்தலைவரால் பணி அமர்த்தல் மற்றும் நீக்கம் மேற்கொள்ளப்படுகிறது.

Q26. உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர் யார்?

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி.

Q27. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பட்டியல் :

எண்.

பெயர்

முதல்

முடிவு

1.

ஹரிலால் ஜெ.கானியா

26.1.1950

6.11.1951

2.

M. பதாஞ்சலி சாஸ்திரி

7.11.1951

3.1.1954

3.

மெஹர்சந்த் மஹாஜன்

4.1.1954

22.12.1954

4.

B.K. முகர்ஜி

23.12.1954

31.1.1956

5.

S.R. தாஸ்

1.2.1956

30.9.1959

6.

புவனேஷ்வர் ப்ரசாத் சின்ஹா

1.10.1959

31.1.1964

7.

P.B. கஜேந்திர கட்கர்

1.2.1964

15.3.1966

8.

A.K. சர்க்கார்

16.3.1966

29.6.1966

9.

K. சுப்பாராவ்

30.6.1966

11.4.1967

10.

K.N. வாஞ்சூ

12.4.1967

24.2.1968

11.

M. இதயத்துல்லா

25.2.1968

16.12.1970

12.

J.C. ஷா

17.12.1970

21.1.1971

13.

S.M. சிக்ரி

22.1.1971

25.4.1973

14.

A.N. ரே

26.4.1973

27.1.1977

15.

M.H. பெய்க்

28.1.1977

21.2.1978

16.

Y.N. சந்திர சூட்

22.2.1978

11.7.1985

17.

P.N. பகவதி

12.7.1985

20.12.1986

18.

R.S. பதக்

21.12.1986

18.6.1989

19.

E.S. வெங்கடராமைய்யா

19.6.1989

17.12.1989

20.

சபயசாச்சி முகர்ஜி

18.12.1989

25.9.1990

21.

ரங்கநாத் மிஷ்ரா

26.9.1990

24.11.1991

22.

K.N. சிங்

25.11.1991

12.12.1991

23.

M.H. கானியா

13.12.1991

17.11.1992

24.

லலித் மோகன் சர்மா

18.11.1992

11.2.1993

25.

M.N. வெங்கடாசலைய்யா

12.2.1993

24.10.1994

26.

A.M. அஹமதி

25.10.1994

24.3.1997

27.

J.S. வர்மா

15.3.1997

17.1.1998

28.

M.M. பூஞ்சி

18.1.1998

09.10.1998

29.

A.S. ஆனந்த்

10.10.1998

31.10.2001

30.

S.P. பரூச்சா

1.11.2001

6.5.2002

31.

B.N. கிர்பால்

6.5.2002

8.11.2002

32.

G.B. பட்ட நாயக்

8.11.2002

19.12.2002

33.

V.N. காரே

19.12.2002

2.5.2004

34.

ராஜேந்திர பாபு

2.5.2004

1.6.2004

35.

R.C. லஹோத்தி

1.6.2004

1.11.2005

36.

Y.K. சபர்வால்

11.11.2005

14.1.2007

37.

K.G. பாலகிருஷ்ணன்

14.1.2007

12.5.2010

38.

S.H. கபாடியா

12.5.2010

28.9.2012

39.

அல்டமாஸ் கபீர்

29.9.2012

18.7.2013

40.

P. சதாசிவம்

19.7.2013

26.4.2014

41.

ராஜேந்திர மல் லோதா

27.4.2014

27.9.2014

42.

H.L. தத்து

28.9.2014

02.12.2015

43.

தீர்த் சிங் தாக்கூர்

02.12.2015

04.01.2017

44.

ஜகதீஷ் சிங் கேஹர்

04.01.2017

................

Q28. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அதிக காலம் பதவியில் இருந்தவர் யார்?

Y.N. சந்திர சூட் - 7 வருடம் 5 மாதங்கள்.

Q29. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஒரே தமிழர் யார்?

"P. சதாசிவம் - தமிழ் நாட்டின் பவானி, ஈரோடு மாவட்ட த்தில் பிறந்து, சென்னையில் சட்டப்படிப்பு முடித்தவர்.9.7.2013 முதல் 26.4.2014 வரை."

Q30. "இந்திய அரசியல் சட்ட த்தின் (Constitution) எந்த விதிப்படி உயர் நீதிமன்றங்கள் (High Courts) இயங்குகின்றன?"

விதி எண். 214.

Q31. நம் நாட்டின் மிகப் பழமையான உயர் நீதிமன்றம் எது?

கொல்கத்தா - 2.7.1862 முதல் இயங்குகிறது. இரண்டாவதாக மெட்ராஸ் உயர் நீதிமன்றம்.

Q32. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளை நியமனம் செய்பவர் யார்?

குடியரசுத்தலைவர்.

Q33. "உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர் யார்?"

தலைமை நீதிபதி - மாநில ஆளுநர்;
நீதிபதிகள் - தலைமை நீதிபதி.

Q34. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் வயது வரம்பும், சம்பளமும் என்ன?

வயது வரம்பு - 62;
சம்பளம் - தலைமை நீதிபதி - ரூ. 90,000/- ;
நீதிபதிகள் - ரூ. 80,000/-

Q35. உயர் நீதிமன்ற நீதிபதியாகத் தேவையான தகுதி...

உயர் நீதிமன்ற வழக்கறிஞராக 10 வருட அனுபவம் அல்லது சட்ட சம்பந்தபட்ட பதவியில் 10 வருட அனுபவம்.

Q36. உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி...

அன்னா சாண்டி - கேரளா - 1959.

Q37. உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி யார்?

"லீலா சேத் - 1991 - ஹிமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி. இவருடைய மகன் விக்ரம் சேத் உலகப்புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது."

Q38. தமிழ் நாட்டில் வேறு எங்கு உயர் நீதிமன்ற கிளை இயங்குகிறது?

மதுரை - 2004 முதல் இயங்கி வருகிறது.

Q39. நம் நாட்டில் உயர் நீதிமன்றங்கள் எங்கெல்லாம் இயங்குகின்றன?

எண்

மாநிலம்

தலைமை

வருடம்

எல்லை

1.

மே. வங்காளம்

கொல்கத்தா

1862

மே. வங்காளம், அ.நி.தீவு

2.

மகாராஷ்டிரம்

மும்பை

1862

மகாராஷ்டிரம் கோவா, தாத்ரா, நாகர் ஹவேலி

3.

தமிழ் நாடு

சென்னை

1862

தமிழ்நாடு, புதுச்சேரி. மதுரை

4.

உத்திர பிரதேசம்

அலகாபாத்

1866

உ.பிரதேசம்

5.

கர்நாடகம்

பெங்களூரு

1884

கர்நாடகம்

6.

பீஹார்

பாட்னா

1916

பீஹார்

7.

ஜம்மு காஷ்மீர்

ஸ்ரீ நகர், ஜம்மு

1928

ஜம்மு காஷ்மீர்

8.

 அஸ்ஸாம்

குவஹாத்தி

1948

அஸ்ஸாம், அருணாசல அய்ஸால், பிரதேசம், நாகாலந்து,மிசோராம். இட்டாநகர், கொஹிமா

9.

 ஒடிசா

கட்டாக்

1948

ஒடிசா

10.

ராஜஸ்தான்

ஜோத்பூர்,

1949

ராஜஸ்தான் ஜெய்ப்பூர்

11.

 ஆந்திர பிரதேசம்

ஹைதராபாத்

1956

ஆ.பிரதேசம், தெலங்கானா "

12.

மத்திய பிரதேசம்

ஜபல்பூர்,

1956

ம.பிரதேசம் குவாலியர்

13.

கேரளா

கொச்சி

1958

கேரளா, லட்சத்தீவு

14.

 குஜராத்

அஹமதாபாத்

1960

குஜராத்

15.

டெல்லி

டெல்லி

1966

டெல்லி

16.

இமாச்சல பிரதேசம்

ஷிம்லா

1971

இமாச்சல பிரதேசம்

17.

பஞ்சாப், ஹரியானா

சந்திகர்

1975

பஞ்சாப், ஹரியானா

18.

சத்தீஸ்கர்

பிலாஸ்பூர்

2000

சத்தீஸ்கர்

19.

சிக்கிம்

காங்டாக்

1975

சிக்கிம்

20.

ஜார்க்கண்ட்

ராஞ்சி

2000

ஜார்க்கண்ட்

21.

உத்தராகாண்ட்

நைனிடால்

2000

உத்தராகாண்ட்

22.

திரிபுரா

அகர்தாலா

2013

திரிபுரா

23.

மேகாலயா

ஷில்லாங்

2013

மேகாலயா

24.

மணிப்பூர்

இம்ஃபால்

2013

மணிப்பூர்

Q40. நம் நாட்டில் எத்தனை உயர் நீதிமன்றங்கள் உள்ளன?

(24).இருபத்தி நான்கு

Q41. அந்தமான் நிக்கோபார் தீவுகள் எந்த உயர் நீதிமன்றத்தின் கீழ் இயங்குகின்றன?

கொல்கத்தா.

Q42. லட்சத்தீவுகள் எந்த உயர் நீதிமன்றத்தின் கீழ் வருகின்றன?

கேரளா - கொச்சி.

Q43. தீர்ப்பாயம் (Tribunal) என்பது என்ன?

"நீதிமன்றங்களுக்கு அப்பாற்பட்டு அமைக்கப்பட்டுள்ள சட்டபூர்வமான, இரு அல்லது அதற்கு மேற்பட்ட பிரிவினரிடையே ஏற்பட்டுள்ள சர்ச்சையை தீர்த்து வைக்க உதவும், ஒரு அமைப்பு.
பொதுவாக இது ஒரு கால வரம்புக்குள் இயங்குமாறு அமைக்கப்பட்டு, தேவைக்கேற்ப நீட்டிக்கப்படும் தற்காலிக அமைப்பு.
உதாரணம் : காவிரி நீர் பங்கீடு தீர்ப்பாயம்."

Q44. "இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு நிரந்தரமாக இயங்கி வரும் தீர்ப்பாயங்கள் யாவை?"

"1. மத்திய பணியாளர் தீர்ப்பாயம் - Central Administrative Tribunal - இந்திய அரசியல் சட்டத்தின் விதி எண். 323 ன் கீழ் உருவாக்கப்பட்டது.
2. தேசிய பசுமை தீர்ப்பாயம் - National Green Tribunal - இந்திய அரசியல் சட்டத்தின் விதி எண். 21ன் கீழ் உருவாக்கப்பட்டது. "

Q45. மத்திய பணியாளர் தீர்ப்பாயம் (Central Administrative Tribunal) என்பது என்ன?

"இந்திய நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் மற்றும் வேகமாக உயர்ந்து வரும் வழக்குகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, விரைவான தீர்வுகள் காணப்பட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், மத்திய அரசு பணியாளர்களின், நிர்வாக முறையீடுகள் மற்றும் முறைகேடுகளையும் (பணி சம்பந்தப்பட்ட) சீர் செய்யும் வகையில், நிர்வாக தீர்ப்பாயச் சட்டம் 1985 (Administrative Tribunals Act 1985) இயக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட அமைப்பு. நவம்பர் 1985 முதல், டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் அஹமதாபாத் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு, பிறகு, உயர் நீதிமன்றங்கள் இயங்கும் 17 இடங்களில் எல்லாம் அமைக்கப்பட்டன.
இவை தவிர்த்து நாட்டின் பல இடங்களில் சுழற்சி தீர்ப்பாயங்களும் இயங்குகின்றன. இவை மூலம் மத்திய அரசுப் பணியாளர்களின் குறைகளுக்கு துரிதமான தீர்வுகள் காணப்படுவதுடன், நீதிமன்றங்களின் வழக்குச் சுமை குறைந்திருக்கிறது. இது போன்று பல மாநிலங்கள் தங்களது பணியாளர்களுக்கு தீர்ப்பாயங்கள் அமைத்துக் கொடுத்துள்ளது."

Q46. தேசிய பசுமை தீர்ப்பாயம் என்பது என்ன?

"1992ல் ரியோ டி ஜெனிரோவில் (ப்ரேசில்) நடந்த ஐக்கிய நாட்டு சபை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாட்டில், நம் நாடு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் சுற்றுச்சூழல் பாதிப்பால் பாதிக்கப்படும் மக்களுக்கு விரைவான சட்டரீதியான தீர்வும், ஈடும் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட அமைப்பு. இந்திய அரசியல் சட்டத்தின் விதி எண் 21ன் கீழ், 2010ல் சட்டரீதியாக உருவாக்கப்பட்ட (சட்டம் 19, 2010) இந்த அமைப்பு, டெல்லியை தலைமையாகக் கொண்டு, போபால், பூனே, கொல்கத்தா மற்றும் சென்னை கிளைகளை கொண்டு இயங்கி வருகிறது.
ஓய்வு பெற்ற ஒரு நீதிபதியின் தலைமையில், 10 சட்டம் சார்ந்த உறுப்பினர்களையும் கொண்டு இயங்குகிறது (அதிகபட்ச உறுப்பினர்கள் 20+20). தலைவராக இருப்பவர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவோ, அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதியாகவோ இருக்க/இருந்திருக்க வேண்டும்."

Q47. ராணுவ தீர்ப்பாயம் (Armed Forces Tribunal) என்பது என்ன?

"முப்படை வீரர்களின் பணி சம்பந்தப்பட்ட முறையீடுகளை விசாரித்து தீர்வு காண, சட்டரீதியாக (Armed Forces Tribunal Act 2007) அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு. டெல்லியை தலைமையகமாகக் கொண்டு, சந்திகர், லக்னௌ, கொல்கத்தா, குவஹாத்தி, சென்னை, கொச்சி, மும்பை மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய மண்டல அமைப்புகளையும் கொண்டது.
ஒவ்வொரு அமைப்பிலும் ஒரு சட்ட உறுப்பினர் (உயர் நீதிமன்ற நீதிபதி, அதற்கு மேல்) மற்றும் ஒரு நிர்வாக உறுப்பினர் (ராணுவத்தில் மேஜர் ஜெனரல் பதவி, அதற்கு மேலும்) இருப்பார்கள்."

Q48. உழைக்கும் வர்க்கத்தை பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சில சட்டங்கள்:

1. Apprentices Act 1961. பணிப்பயிற்சி சட்டம்
2. Bonded Labour System (Abolition) Act 1976. கொத்தடிமை ஒழிப்புச் சட்டம்
3. Child Labour (Prohibition and Regulation) Act 1986. குழந்தைத் தொழிலாளர் (தடுப்பு மற்றும் ஒழிப்பு) சட்டம்
4. Contract Labour (Regulation and Abolition) Act 1970. ஒப்பந்த்த் தொழிலாளர் சட்டம்
5. Employees Provident Fund (Miscelleaneous Provisions) Act 1952. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சட்டம்.
6. Employees State Insurance Act 1948. ஊழியர் அரசுக் காப்பீடு சட்டம்
7. Equal Remuneration Act 1976. சம ஊதியச் சட்டம்
8. Factories Act 1948. தொழிற்சாலைச் சட்டம்
9. Fatal Accidents Act, 1855. அபாயகரமான விபத்துச் சட்டம்.
10. Industrial Disputes Act 1947. தொழிற்துறை முரண்பாடு சட்டம்.
11. Maternity Benefits Act, 1961. மகப்பேறு நன்மைச் சட்டம்.
12. Minimum Nages Act, 1948. குறைந்த பட்ச ஊதிய சட்டம்
13. Payment of Bonus Act, 1965. ஊக்கத்தொக்கை வழங்கு சட்டம்.
14. Payment of Gratuity Act, 1972. பணிக்கொடைப் பட்டுவாடா சட்டம்.
15. Payment of Wages Act, 1936. ஊதிய பட்டுவாடா சட்டம்.
16. Trade Union Act, 1926. தொழிற்சங்கங்கள் சட்டம்.
17. Workmen's Compensation Act, 1923. தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டம்.

Q49. Apprentice Act 1961 - பணிப்பயிற்சி சட்டம் 1961 என்பது என்ன?

"இளைஞர்கள் பணியில், குறிப்பாக தொழிற்சாலைகளில், அமர்வதற்கு முன், பலவகை தொழிலில் பயிற்சி பெறும்விதமாக உருவாக்கப்பட்ட ஒரு சட்டம். குறிப்பிட்ட காலம் (பொதுவாக 2 வருடம்) பயிற்சி பெறுவதுடன், அந்த காலத்தில் ஒரு உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சி பொதுவாக அரசாங்கத் தொழிற்சாலைகளிலும் அளிக்கப்படுகிறது. இவ்வாறு பயிற்சி பெற்று வெளிவரும் இளைஞர்கள் தொழிற்சாலை பணிகளில் சேருவதில் முன்னுரிமையும் பெறுகிறார்கள். இது ஒருவகை தொழிற்நுட்பப் பயிற்சி. 1.3.1962 முதல் அமலுக்கு வந்த்து. இந்தச் சட்டம் சரியான முறையில் இயங்குவதை மேற்பார்வை செய்வது தேசிய தொழிற்பயிற்சி குழு - National Council for Vocational Training - டெல்லி, இதன் மண்டல அலுவலகங்கள் மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் கான்பூர் ஆகிய இடங்களில் உள்ளது.
இந்த அமைப்பு மத்திய தொழிலாளர் துறை (Ministry of Labour)ன் கீழ் இயங்குகிறது. இச்சட்டத்தின் கீழ் 14 வயதுக்கு மேற்பட்ட பள்ளி, டிப்ளமோ மற்றும் தொழிற்கல்வியில் இளங்கலை பட்டம் முடித்த இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இவர்களுக்கு தொழிற்பயிற்சியின் போது விபத்து ஏற்படின் தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டம் 1923ன் கீழ் இழப்பீடு சரி செய்யப்படும்."

Q50. கொத்தடிமை ஒழிப்புச்சட்டம் - Bonded Labour System (Abolition) Act என்பது என்ன?

"ஒரு தொழிலாளி வேறு ஒருவரிடம் வாங்கிய கடனை (அவரே நேரடியாகவோ அல்லது அவரது பெற்றோர் / முன்னோர் வாங்கிய கடன்) திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில், கடன் கொடுத்தவரின் கட்டாயத்தின் பேரில், அவரிடம் வேலை செய்து கடனை தீர்ப்பதாக பணி செய்வது கொத்தடிமை எனப்படும். இவ்வாறு வேலை செய்பவர்கள் ஊதியம் கொடுக்கப்படாமல், மிகவும் மோசமான ஒரு சூழ் நிலையில் வைக்கப்படுவர்.
இந்த மனித நேயம் இல்லாத செயலிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் வகையில் உருவாக்கப்பட்ட இச்சட்டம் 25.10.1975 முதல் அமலில் உள்ளது. இச்சட்டம் உருவாவதற்கு முதன்மை காரணம் மறைந்த பிரதமர் திருமதி இந்திரா காந்தி."

Q51. குழந்தை தொழிலாளர் (தடுப்பு மற்றும் ஒழிப்பு) சட்டம் 1986 என்பது என்ன?

"14 வயதுக்குட்பட்ட சிரார்களை பணியில் அமர்த்தப்படுவதை தடுக்கும் சட்டம். இதன் முக்கிய நோக்கம் சிரார் கல்வியை மேம்படுத்துவது மற்றும் அவர்களின் உடல் ரீதியான துயரங்களைப் போக்குவது. இச்சட்டம் மத்திய/மாநில தொழிலாளர் துறையின் (Labour Ministry) கீழ் இயங்குகிறது."

Q52. ஒப்பந்த தொழிலாளர் சட்டம் 1970 (Contract Labour Act) என்பது என்ன?

"ஒருவர், ஒரு நிறுவனத்துடன், ஒரு குறிப்பிட்ட வேலையை, குறிப்பிட்ட தொகைக்கு, குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடித்து தருவதாக ஒப்பந்தம் செய்து கொண்டால் அவர் ""ஒப்பந்த்தாரர்""- ""Contractor"" என அழைக்கப்படுவார். அந்த ஒப்பந்ததாரர், அந்தப் பணியை முடிப்பதற்கு, தனக்கோ அல்லது நிறுவனத்துக்கோ, பணியாட்களை அமர்த்திக் கொள்வார்.
இந்த முறையில் பணியாளர்களுக்கு சரியான வேலை நேரம், ஓய்வு, சுற்றுச் சூழல், பாதுகாப்பு, ஊதியம் ஆகியவை சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அளிக்கப்படுவதை உறுதிசெய்வதற்காக உருவாக்கப்பட்ட சட்டம்."

Q53. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (Employees Provident Fund) என்பது?

"ஊழியர் சேம நிதி என்றும் அழைப்பர். ஊழியர்கள் தங்களது அவசரக்கால தேவைக்காகவும், ஓய்வுக் காலத்துக்காகவும் ஏதாவதுஒரு பகுதியை சேமிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டம். 1952ல் அமலாக்கப்பட்ட இந்த சட்டத்தின்படி ஊதியத்தில் 12 சதவிகிதம் சேமிப்பு செய்யப்படுகிறது. இந்தச் சட்டம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமலில் இல்லை. இந்த சட்டத்தின் மூலம் 100க்கும் மேற்பட்ட தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிற்சாலைகள் இந்த சட்டத்தின் கீழ் வருகின்றது. இந்த தொழிற்சாலை நிர்வாக அதிகாரிகள், தொழிலாளர்களிடமிருந்து வைப்பு நிதி பிடித்தம் செய்து, நிர்வாக பங்கையும் சேர்த்து, சம்பந்தப்பட்ட மண்டல வைப்பு நிதி ஆணையருக்கு குறிப்பிட்ட படிவங்களின் மூலம், குறிப்பிட்ட தேதிக்குள் அனுப்பிட வேண்டும்.
இவ்வகையாக பெறும் தொகையை மேலாண்மை செய்ய மண்டல வைப்பு நிதி ஆணையர் (Regional Provident Fund Commissioner) நியமிக்கப்பட்டுள்ளனர். ரயில்வே, தபால்துறை போன்ற பெரிய நிறுவனங்கள் இந்த வைப்பு நிதியை தாமாகவே மேலாண்மை செய்து கொள்கின்றன."

Q54. ஊழியர் அரசுக் காப்பீடு சட்டம் (Employees State Insurance Act) 1948 என்பது...B302

"தனியார் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் உடல் நிலை பாதிப்பு, மகப்பேறு கால மருத்துவம், பணியில் விபத்து போன்ற காலங்களில் தொழிலாளர்களுக்கு மருத்துவ மற்றும் நிதி உதவி அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டம். இச்சட்டத்தின் படி, தொழிலாளியின் ஊதியத்தின் 4.75 சதவிகிதம் நிர்வாக பங்காகவும், 1.75 சதவிகிதம் தொழிலாளி பங்காகவும் பிடித்தம் செய்யப்பட்டு, இதை மேலாண்மை செய்யும் குழுமத்திற்கு (Employees State Insurance Corporation) சேர்க்கப்பட வேண்டும்.
இந்த சட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்காக தனி மருத்துவமனை மாநிலங்களால் நடத்தப்பட்டு வருகிறது."

Q55. சம ஊதிய சட்டம் (Equal Remuneration Act 1975) என்பது...

"இந்திய அரசியல் சட்டத்தின் 39வது விதியின் கீழ், இயற்றப்பட்ட இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொழிலில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் இரு பாலருக்கும் சமமான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதே இச்சட்டத்தின் நோக்கம். இந்த சட்டம் 1976 முதல் அமலில் உள்ளது."

Q56. "தொழிற்சாலை" என்பதின் விளக்கம் என்ன?

"1. எந்த ஒரு இடத்தில், கடைசி 12 மாதங்களில், ஏதாவது ஒரு நாளாயினும், 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள், மின்சக்தி உதவியுடன், பொருள் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பின்...அல்லது
2. எந்த ஒரு இடத்தில், கடைசி 12 மாதங்களில் ஏதாவது ஒரு நாளாயினும், 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், மின்சக்தி உதவியின்றி, பொருள் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பின்... அந்த இடம்/வளாகம் ஒரு ""தொழிற்சாலை"" யாக கருதப்படுகிறது."

Q57. "தொழிற்சாலை சட்டம்" - Factory Act எப்போது அமலுக்கு வந்தது?

1.4.1948.

Q58. தொழிற்சாலை சட்டத்தின் நோக்கம் என்ன?

"(1). குறிப்பிட்ட பணி நேரமும், இடைவெளியும்;
(2). பணியிடத்தில் போதிய பாதுகாப்பு;
(3). பணி இடத்தில் தேவையான சுகாதார வசதி;
(4). பணி இடத்தில் சுகாதாரமான குடிநீர், உணவு, ஓய்வு அறைகள்;
(5). பெண் தொழிலாளர்களுக்கு தனிப்பட்ட வசதிகள், ஓய்வு அறைகள், குழந்தை பாதுகாப்பு அறைகள் போன்ற தொழிலாளர் நல வசதிகள்."

Q59. தொழிற்சாலைகளை ஆய்வு செய்யும் அதிகாரி யார்?

"முக்கிய தொழிற்சாலை ஆய்வாளர் - Chief Inspector of Factories - அவரால் நியமிக்கப்பட்ட ஆய்வாளர் (Inspector) ஆகியோர்.
இவர்கள் தொழிலாளர் துறை (Labour Department) யை சேர்ந்தவர்கள்."

Q60. தொழிலாளர்கள் நலம் சம்பந்தப்பட்ட சில முக்கிய கட்டுமான அம்சங்கள் யாவை?

"(1). 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் தொழிற்சாலைகளில் ஓய்வு அறைகளும், உணவு அருந்தும் இடங்களும்;
(2). 30க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்கள் பணிபுரியும் தொழிற்சாலைகளில், குழந்தைகள் காப்பகம் - அனைத்து வசதிகளுடன்;
(3) 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரியும் தொழிற்சாலைகளில் உணவகங்கள்;
(4) 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் தொழிற்சாலைகளில், தொழிலாளர் நல அதிகாரிகள்;
ஆகிய முக்கிய வசதிகள் இச்சட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு தொழிற்சாலையிலும் இருக்க வேண்டும்."

Q61. தொழிற்சாலை சட்டத்தின்படி, தொழிலாளர்களின் பணி நேரம் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும்?

"(1). ஒருவாரத்திற்கு 48 மணி நேரம்.
(2). ஒரு நாளைக்கு 9 மணி நேரத்துக்கு மேல் இருக்கக் கூடாது.
(3). தொடர்ச்சியாக பணி நேரம் 5 மணி நேரத்துக்கு மேல், குறைந்தபட்சம் 30 நிமிட இடைவெளி ஓய்வு இல்லாமல் இருக்கக்கூடாது.
(4). பணி நேரம், ஓய்வு (இடைவெளி) நேரம் சேர்த்து, ஒரு நாளைக்கு 10 1/2 மணி நேரத்துக்கு மேல் நீடிக்கக்கூடாது.
(5). ஒரு நாளைக்கு 9 மணி நேரம், வாரத்திற்கு 48 மணி நேரத்துக்கு மேல் ஒரு தொழிலாளி பணிபுரிய நேரிடின், அந்த கூடுதல் நேரம், கூடுதல் பணியாக (Over Time) கருதப்பட்டு, கூடுதல் நேரத்துக்கு, இரட்டிப்பு சம்பளம் அளிக்கப்பட வேண்டும்.
(6). இரவு 10 முதல் காலை 6 வரை பெண் தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது."

Q62. தொழிற்துறை முரண்பாட்டுச் சட்டம் - Industrial Dispute Act - எப்போது அமலுக்கு வந்தது?

1947

Q63. "தொழிற்துறை முரண்பாடு" - Industrial Dispute என்பது என்ன?

"நிர்வாகத்துக்கும், தொழிலாளிக்குமிடையே, அல்லதுதொழிலாளர்களுக்கிடையே (அ) நிர்வாகிகளுக்கிடையில், பணி சம்பந்தப்பட்ட, தொழிலாளர்களை பாதிக்கக்கூடிய, அவர்களுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள முடியாத சர்ச்சைகள், தொழிற்துறை முரண்பாடு என்று அழைக்கப்படுகிறது."

Q64. "வேலை இழப்பு" - Log Off என்பது என்ன?

"ஒரு தொழிற்துறை நிர்வாகத்தால், மின்தடை காரணமாகவோ, கச்சா பொருள் குறைபாட்டினாலோ, உற்பத்தி செய்யப்பட்ட பொருள் விற்பனையாகாமல் இருந்தாலோ, இயந்திர கோளாறு காரணத்தினாலோ, அல்லது வேறு ஏதேனும் காரணத்தினாலோ, பணியில் இருக்கும் தொழிலாளர்களை பணிக்கு அனுமதிக்க முடியாத சூழ்நிலை ""வேலை இழப்பு (Log Off)"" என்றழைக்கப்படுகிறது.
நிர்வாகத்தின் இந்த முடிவை, தொழிலாளர்கள் எதிர்த்து, தீர்வு காணமுடியாத நிலையில், இந்த பிரச்சனை ஒரு தொழிற்துறை முரண்பாடாகிறது (Industrial Dispute)"

Q65. "கதவடைப்பு" - Lock Out என்பது என்ன?

"ஒரு தொழிற்துறை நிர்வாகம், பணியிடத்தை தற்காலிகமாக மூடுவதோ, அல்லது பணியை நிறுத்துவதோ, அல்லது தொழிலாளர்களை பணி செய்ய அனுமதி மறுப்பதோ, கதவடைப்பு என்று அழைக்கப்படுகிறது.
இதற்கு நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களுக்கிடையே தீர்வு காணப்படா விட்டால், இது தொழிற்துறை முரண்பாடாகிறது."

Q66. "வேலை நிறுத்தம்" - Strike என்பது என்ன?

"ஒரு தொழிற்துறையில், பணியில் இருக்கும் ஒரு பிரிவினரோ, பகுதியினரோ அல்லது அனைவருமோ, பணி செய்ய மறுப்பது ""வேலை நிறுத்தம்"" எனப்படும். இதற்கு தீர்வு காணப்படாவிட்டால், இது ஒரு தொழிற்துறை முரண்பாடாகிறது."

Q67. நியாயமற்ற தொழில் நடவடிக்கை - Unfair Labour Practice என்பது என்ன?

"நிர்வாகம் தொழிலாளர்களை அவர்களுடைய முழுதிறமைக்கு பணிபுரிய விடாமல் (சட்டத்தில் சுமார் 16 காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது) சில உத்திகளை கையாளுவது அல்லது தொழிலாளர்கள் பணியில் தயக்கம், உற்பத்தியை தாமதப்படுத்துவது, மறுப்பது (சட்டத்தில் எட்டு வகை காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது) ஆகியவை இதற்குள் அடங்கும்."

Q68. பதவி நீக்கம் - Dismissal என்பது ஒரு தொழிற்துறை முரண்பாடா?

"ஆம். பாதிக்கப்பட்ட தொழிலாளி பணி நீக்க உத்தரவிற்கு எதிராக முறையீடு செய்தால் அது ஒரு தொழிற்துறை முரண்பாடு ஆகும்."

Q69. "சமாதான அதிகாரி" - Conciliation Officer என்பவர் யார்?

"தொழிற்துறை முரண்பாடு - Industrial Dispute - என்ற ஒன்று உருவானவுடன் அது உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய ஒன்று. அதனால், தொழிற்துறை உடனடியாக ஒரு அதிகாரியை ""சமாதான அதிகாரி"" யாக (Conciliation Officer) நியமிக்கிறது. அவர் இரண்டு தரப்பினரையும் அழைத்து சமாதானம் பேசி முரண்பாட்டுக்கு தீர்வு காண்பார்."

Q70. தொழிற்துறை நீதிமன்றம் (Labour Court) என்பது என்ன?

"தொழிற்துறை முரண்பாடு - Industrial Dispute சமாதான அதிகாரி மூலமாகவும் தீர்க்கப்படாத பட்சத்தில், சம்பந்தப் பட்டவர்கள் இந்த நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணலாம். இதைத் தவிர்த்து, தொழிலாளர்கள் தங்களது பணி சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் பல்வேறு நிலைகளிலும் தீர்க்கப்படாத நிலையில் இந்த நீதிமன்றம் மூலம் தீர்வு காணலாம். இந்த நீதிமன்றத்துக்கு, உயர் நீதிமன்ற நீதிபதி அளவில், நீதிபதியாக இருப்பார்."

Q71. தொழிற்துறை தீர்ப்பாயம் (Industrial Tribunal) என்பது என்ன?

"தொழிற்துறை முரண்பாடு, சில நேரங்களில் பெரும்பகுதி தொழிலாளர்களை பாதிக்க க்கூடிய சூழ் நிலையில், ஒரு நிரந்தர மற்றும் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு தீர்வை உருவாக்க அரசாங்கமே இவ்வகை தீர்ப்பாயங்களை, குறிப்பிட்ட காலவரம்பிற்குள் செயல்படுமாறு, உயர் நீதிமன்ற நீதிபதி அளவிலான நீதிபதி தலைமையில் உருவாக்கும். இவ்வகை தீர்ப்பாயங்கள் மாநில மற்றும் தேசிய அளவிலும் உருவாக்கப்படலாம்."

Q72. "தொழிற்துறை முரண்பாடு சட்டத்தின் கீழ் வேலை நிறுத்தம் மற்றும் கதவடைப்பு ஆகிய இரண்டுக்கும் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் யாவை?"

"வேலை நிறுத்தம் மற்றும் கதவடைப்பு இரண்டுக்குமே ஒரே வகையான நிபந்தனைகள் பொருந்தும்.
(1). இரண்டுக்குமே, 6 வார கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும்.
(2). அவகாசக் கெடு கொடுத்த 14 நாட்களுக்குள் இரண்டுமே நடைமுறைப்படுத்தக் கூடாது.
(3). கொடுக்கப்பட்ட அவகாசம் முடிவடைவதற்கு முன் இரண்டுமே நடைமுறை படுத்தப்பட மாட்டாது.
(4). சமாதான பேச்சு வார்த்தை நடைமுறையில் இருக்கும் போதும், பேச்சுவார்த்தை முடிந்த ஏழு நாட்களுக்குள், இரண்டுமே நடைமுறைப்படுத்தக் கூடாது.
இந்த விதிமுறைகள் மீறப்படும்போது, இரண்டு நடவடிக்கைகளும் சட்ட த்துக்கு புறம்பானதாகிறது."

Q73. "ஒரு தொழிற்துறை நிறுவனம் நிரந்தரமாக மூடும் ஒரு நிலை ஏற்பட்டால், அந்த நிறுவனம், எப்போது அரசாங்கத்துக்கும், தொழிலாளர்களுக்கும் முன் அவகாச அறிவிப்பு கொடுக்க வேண்டும்?"

60 நாட்களுக்குள்.

Q74. "செலவினங்களைக் குறைக்கும் ஒரு நடவடிக்கையாக தொழிலாளர் பணி நீக்கம் ஒரு நிறுவனத்தின் நடவடிக்கை. அவ்வாறு செய்யும்போது அந்த நிறுவனம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறை என்ன?"

"""கடைசியில் வந்தவர் முன் செல்லுதல்"" என்ற முறை கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது சம்பந்தப்பட்ட ஊழியருக்கு மூன்று மாத காலக்கெடு அல்லது மூன்று மாத முன் ஊதியம் கொடுக்கப்பட வேண்டும்."

Q75. "மகப்பேறு நன்மை (அ) வசதி சட்டம்" (Maternity Benefit Act) எப்போது அமலுக்கு வந்தது?

"1961. இச்சட்டத்தின் மூலம் பெண் தொழிலாளர்கள் மகப்பேறு (6 வாரங்கள்), கருத்தடை, சட்டரீதியான கருக்கலைப்பு ஆகிய காலங்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு, மருத்துவ உதவிச்செலவு ஆகியவை அளிக்கப்படுகிறது. இச்சட்டம் ESI சட்டம் 1948ன் கீழ்வரும் தொழிற்துறை நிறுவனங்களுக்குப் பொருந்தாது."

Q76. குறைந்தபட்ச ஊதியச்சட்டம் (Minimum Wages Act) என்பது என்ன?

"1948ல் அமல்படுத்தப்பட்ட இந்த சட்டம், ஒரு தொழிலாளிக்கு வாழ்வாதார குறியீட்டு எண் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட வேண்டும். இது குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்டதால் அவ்வப்போது மாற்றத்துக்குரியது."

Q77. ஊதிய பட்டுவாடாச் சட்டம் (Payment of Wages Act) 1965 என்பது என்ன?

"ஒரு தொழிலாளிக்கு அவருடைய ஊதியம் எவ்வகையில் பட்டுவாடாச் செய்யப்பட வேண்டும் என்பதைக் குறிக்கும் சட்டம். 1965ல் அமலுக்கு வந்த இச்சட்டம் 40 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்யும் அனைத்து நிறுவன அமைப்புகளுக்கும் பொருந்தும். 6500/- ரூபாய் ஊதியம் பெறும் அனைவருக்கும் இச்சட்டம் பொருந்தும். ரயில்வே, தபால், இதர மத்திய அரசு அலுவலகங்கள், சுரங்கம், விமானப்போக்குவரத்து, பாதுகாப்பு போன்ற துறைகளுக்கு மத்திய அரசும், தொழிற்துறை நிறுவனங்களுக்கு மாநில அரசும், இச்சட்டத்தின் விதிமுறைகளை செயல்படுத்துகிறது."

Q78. ஊதிய பட்டுவாடாச் சட்டம் 1965ன் முக்கிய அம்சங்கள் யாவை?

"(1). ஒவ்வொரு நிறுவனமும் தொழிலாளர்களின் ஊதிய கால வரம்பை (30 நாட்கள்) (Wage Period) நிர்ணயிக்க வேண்டும்.
(2). ஊதிய கால வரம்பு குறித்த அறிவிப்பு (Wage Period Notice) பொதுவான பணி இடத்தில் தெரிவிக்கப்பட வேண்டும் (ஊதிய நாளும் சேர்த்து). இந்த கால வரம்பு ஒரு மாதத்திற்கு மேல் நீட்டிக்கப்படக் கூடாது.
(3). எல்லா ஊதியமும் அன்றைய புழக்கத்திலிருக்கும் ரொக்கத்திலோ, காசோலையாகவோ அல்லது தொழிலாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படலாம்.
(4). ஊதியம், விடுமுறை அல்லாத பணி நாளில் கொடுக்கப்பட வேண்டும்.
(5). 100க்கும் குறைவான பணியாட்கள் பணிபுரியும் நிறுவனத்தில், ஊதிய கால வரம்பு முடிந்த 7வது நாளுக்குள் கொடுக்கப்பட வேண்டும். 1000க்கும் மேலான பணியாளர்கள் பணி செய்யும் நிறுவனங்களில், ஊதிய காலவரம்பு முடிந்த 10வது நாளுக்குள் கொடுக்கப்பட வேண்டும்.
(6). பணி நீக்கம் செய்யப்பட்டவரின் ஊதியம், பணி நீக்கம் செய்யப்பட்ட அடுத்த நாளில் கொடுக்கப்பட வேண்டும்.
(7). அங்கீகரிக்கப்பட்ட பிடித்தம் தவிர வேறு எந்த பிடித்தமும் ஊதியத்தில் செய்யக்கூடாது. ஊதியம் சம்பந்தப்பட்ட முறையீடுகள், நிர்வாகத்துடன் தீர்வு ஏற்படாவிட்டால், தொழிலாளர் ஆணையர், தொழிலாளர் நீதிமன்றம், தொழிற்துறை தீர்ப்பாயங்களில் எடுத்துச் சென்று தீர்வு காணலாம்."

Q79. பணிக் கொடைச்சட்டம் (Gratuity Act) என்பது என்ன?

"எந்த ஒரு தொழிற்சாலையிலோ அல்லது எந்த ஒரு நிறுவனத்திலும், 20க்கும் மேற்பட்ட தொழிலாளிகள், பணிபுரிந்தால் இந்த""பணி நன்கொடைச்சட்டம்"" (Gratuity Act) பொருந்தும். இச்சட்டத்தின் படி, 5 வருடத்திற்கு மேல் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளிக்கும், ஒவ்வொரு முடிவுற்ற பணி வருடத்துக்கும் (ஆறு மாதத்துக்கு மேலானால் ஒரு வருடமாக) 15 நாட்கள் ஊதியம் சம்பந்தப்பட்ட நிர்வாகம் கொடையாக அளிக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 பணி வருடங்களாக கணக்கில் கொள்ள வேண்டும். இந்தச் சட்டம் 1972 முதல் அமலுக்கு வந்தது."

Q80. தொழிற்சங்கச்சட்டம் - Trade Union Act 1926 என்பது என்ன?

"தொழிலாளர்கள் தங்களது உரிமைகளுக்காக நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி பெறுவதற்காக அமைக்கப்படுவதே தொழிற்சங்கம். 1918க்குப் பிறகு பல துறைகளில் தொழிற்சங்கங்கள் துவங்கத் தொடங்கின. இவற்றின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் விதமாக 1926ல் தொழிற்சங்க சட்டம் கொண்டுவரப்பட்டது. சுதந்திரத்திற்கு பிறகு 1947, 1950, 1964, 2001ல் நம் நாட்டு சூழ்நிலைக்கேற்ப மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன."

Q81. தொழிற்சங்கம் துவங்க முக்கிய நிபந்தனை / தேவை என்ன?

"குறைந்தபட்சம் ஏழு உறுப்பினர்கள். எந்த ஒரு நேரத்திலும், மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 10 சதவிகிதம் அல்லது 100 உறுப்பினர்கள் அங்கத்தினராய் இருத்தல் வேண்டும்."

Q82. தொழிலாளர் இழப்பீட்டுச்சட்டம் - Workmen Compensatin act 1923 - என்பது என்ன?

"இந்தச் சட்டம் ஜூலை 1924 முதல் அமலுக்கு வந்தது. தொழிலாளர்களுக்கு பணியில் ஈடுபட்டிருக்கும்போது ஏற்படும் விபத்துக்களால் ஏற்படும் உடல் ரீதியான இழப்பை ஈடு செய்வதே இச்சட்டத்தின் நோக்கம். இந்த சட்டத்தில் இழப்பு என்பதை ""சம்பாதிக்கும் திறன்"" (Earning Capacity) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இது மேலும், ""பகுதி இழப்பு"" (Partial Disability) மற்றும் ""முழுமையான இழப்பு"" (Permanent Disability) என்று பிரிக்கப்படுகிறது. பகுதி இழப்பு சதவிகித அடிப்படையில் (Percentage of Loss) மருத்துவர்களால் நிர்ணயிக்கப்பட்டு இழப்பீடு கொடுக்கப்படுகிறது.
இச்சட்டத்தில், இழப்புக்கான காரணங்கள், இழப்பீடு சதவிகிதம் ஆகியவை பட்டியலாக கொடுக்கப் பட்டுள்ளது. உதரணத்துக்கு, விபத்தால் ஒரு தொழிலாளிக்கு, ஒரு கையில் கட்டைவிரல் இழப்பு ஏற்பட்டால், அவருடைய சம்பாதிக்கும் திறனில் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப் பட்டுள்ளதால், இழப்பீடு அளிப்பது துரிதப்படுத்தப்படுகிறது. "

Q83. நம் நாட்டில் அமலில் உள்ள பல்வேறு சட்டங்களில் சில முக்கியமானவை:

"நம் நாட்டில் சில நூற்றுக்கும் மேலான பல சட்டங்கள் அமலில் உள்ளன. அவற்றில், இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (Criminal Procedure Code) மற்றும் ஆதாரச் சட்டம் (Evidence Act) ஆகியவை பின்வரும் பகுதிகளில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.
மற்ற சில முக்கியமான சட்டங்கள் பின்வருமாறு :
1. சங்கங்கள் பதிவுச் சட்டம் 1860 - Societies Registration Act.
2. இந்திய தண்டனைச் சட்டம் 1860 - Indian Penal Code.
3. இந்திய காவல்துறைச் சட்டம் 1861 - Indian Police Act.
4. இந்திய விவாகரத்துச் சட்டம் 1869 - Indian Divorce act.
5. இந்திய ஆதாரச் சட்டம் 1872 - Indian Evidence Act.
6. இந்திய ஒப்பந்தச் சட்டம் - 1872 - Indian Contract Act.
7. இந்திய கிறித்துவ திருமணச் சட்டம் 1872 - Indian Christian Marriage Act.
8. மாற்று முறை ஆவணச் சட்டம் 1881 - Negotiable Instruments Act.
9. பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப்பதிவுச் சட்டம் 1886 - Birth, Death and marriages Registration Act.
10. இந்திய காவல்துறைச் சட்டம் 1888 -Indian Police Act.
11. இந்திய ரயில்வே சட்டம் 1890 - Indian Railways Act.
12. நில கையகப்படுத்துதல் சட்டம் 1894 - Land Acquision Act.
13. அஞ்சலகச் சட்டம் 1894 - Indian Post Office Act.
14. இந்திய தபால் முத்திரைச் சட்டம் 1899 - Indian Stamp Act.
15. புராதனச் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டம் 1904 - Ancient Monuments Preservation act.
16. இந்திய ரயில்வே குழு ( ) சட்டம் 1905 - Indian Railway Board Act.
17. இந்திய நாணயச் சட்டம் 1906 - Indian Coinage Act.
18. உரிமையியல் சட்டம் 1908 - Code of Civil Procedure.
19. இந்திய து றைமுகங்கள் சட்டம் 1908 - Indian Ports Act.
20. இந்திய அருங்காட்சியக சட்டம் 1910 - Indian Museum Act.
21. கூட்டுறவு சங்கங்கள் சட்டம் 1912 - Cooperative Societies Act.
22. வனப்பறவைகள் மற்றும் விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 1912 - Wild Birds & Animals Protection Act.
23. இந்திய மருத்துவப் பட்டச் சட்டம் 1916 - Indian Medical Degrees Act.
24. பாஸ்போர்ட் சட்டம் 1920 - Paasport Act.
25. அலுவல் ரகசிய காப்பீட்டுச் சட்டம் 1923 - Official Secrets Act.
26. வைப்பு நிதிச் சட்டம் 1925 -Provident Funds Act.
27. இந்திய வனச் சட்டம் 1927 - Indian Forest Act.
28. குழந்தை திருமணத் தடைச் சட்டம் 1929 - Child Marriage Restraint Act.
29. இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934 - Reserve Bank of India Act.
30. ஆயுதப்படைகள் சட்டம் 1947 - Armed Forces Act.
31. செவிலியர் குழு சட்டம் 1947 - Indian Nursing Council Act.
32. பல் மருத்துவர்கள் சட்டம் 1948 - Dentist Act.
33. தேசிய மாணவர் படை சட்டம் 1948 - National Cadet Corps Act.
34. மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டம் 1948 - Census Act.
35. துணை ராணுவச் சட்டம் 1948 - Territorial aRmy Act.
36. வங்கிகள் நடைமுறை சட்டம் 1949 - Banking Regulation act.
37. மருந்துகள் கண்காணிப்புச் சட்டம் 1950 - Drugs Control Act.
38. விமானப்படைச் சட்டம் 1950 - Air Force Act.
39. ராணுவச் சட்டம் 1950 - Army Act.
40. குடியரசுத்தலைவர் ஊதியம் மற்றும் ஓய்வூதியச் சட்டம் 1951 - President's Emoluments & Pension Act.
41. மக்கள் பிரதி நிதித்துவச் சட்டம் 1951 - Representation of the People Act.
42. சுரங்கச் சட்டம் 1952 - Mines Act.
43. பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊதியம், படிக்காசு (அலவன்ஸ்) மற்றும் ஓய்வூதியச் சட்டம் 1954 - Salary, Allowances & Pension of Member of Parliaments Act.
44. உணவுக் கலப்பட த் தடுப்புச்சட்டம் 1954 - Prevention of Food Adulteration Act.
45. இந்து திருமணச் சட்டம் 1955 - Hindu Marriage Act.
46. குடியுரிமைச் சட்டம் 1955 -Citizenship Act.
47. நிறுவனங்கள் (கம்பெனி) சட்டம் 1956 - Companies Act.
48. பல்கலைக்கழக மானியக் குழு சட்டம் 1956 - University Grants Commission Act.
49. இந்து வாரிசு சட்டம் - Hindu Succession Act.
50. மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் 1956 - States Reorganisation Act.
51. தேசிய நெடுஞ்சாலைச் சட்டம் 1956 - National Highways Act.
52. இந்திய மருத்துவக் கழகச் சட்டம் 1956 - Indian Medical Council Act.
53. காப்புரிமைச் சட்டம் 1957 - Copyright Act.
54. ரயில்வே பாதுகாப்புப்படைச் சட்டம் 1957 - Railway Protection Force Act
55. கப்பற்படைச் சட்டம் 1957 - Navy Act.
56. ஆயுதப்படை (பிரத்தியேக அதிகார) சட்டம் 1958 - Armed Forces (Special Powers) Act.
57. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (ஊதியம் மற்றும் பணி விதிகள்) சட்டம் 1958 - Supreme Court Judges (Salaries and conditions of Service) Act.
58. வர்த்தக கப்பற்துறை சட்டம் 1958 - Merchant Shipping Act.
59. பிராணி வதை தடுப்புச் சட்டம் 1960 - The Prevention of Cruelty to Animals Act.
60. வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961 - Dowry Prohibition act. "
61. வருமான வரி சட்டம் 1961 - Income Tax Act.
62. அலுவல் மொழிச் சட்டம் 1963 -Official Languages Act.
63. சட்டபுறம்பான நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1967 - Unlawful Activities (Prevention) Act.
64. பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம் 1969 - Registration of Births and Deaths Act.
65. தேசிய மரியாதை அவமதிப்பு (தடுப்பு) சட்டம் 1971 - Prevention of Insults to National Honour Act.
66. நீதிமன்ற அவமதிப்பு சட்டம் 1971 - Contempt of Courts Act.
67. வனவாழ் உயிரினங்கள் பாதுகாப்பு சட்டம் 1972 - Wild Life (Protection) Act.
68. லஞ்ச ஒழிப்பு சட்டம் 1988 - Prevention of corruption Act.
69. அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் 1999 - Foreign Exchange Management Act.
70. தகவல் தொழில் நுட்ப சட்டம் 2000 - Information Technology Act.
71. தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 - Rights to Information Act.
72. தேசிய ஊரக வேலை வாய்ப்புச் திட்டம் 2005 - National Rural Employment Guarantee Act.
73. பெண்களுக்கு ஏற்படும் சமூக அ நீதிகள் தடுப்பு சட்டம் 2005 -Protection of Women from Domestic Violence Act.
74. தேசிய சின்னங்கள் தவறுதலாக பயன்படுத்துதல் தடுப்புச் சட்டம் 2005 - State Emblem of India (Prohibition of Improper Use) Act.
75. குழந்தை திருமணத் தடுப்புச் சட்டம் 2006 - Prohibition of Child Marriage Act.
76. குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 - Right of Children to free and Compulsory Education Act.
77. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 - National Food Security Act.
78. நிலம் கையகப்படுத்துவதில் சரியான இழப்பீடு, வெளிப்படை, புனரமைப்பு சட்டம் 2013 - Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act.
79. லோக் பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் 2013 - Tha Lokpal and Lokayuktas Act.
80. அம்பலப்படுத்தியவர் பாதுகாப்புச் சட்டம் 2011/14 - The Whistle Blowers Protection Act.
81. தேசிய நீதித்து நியமனக்குழு (கமிஷன்) - The National Judicial Appointments Commission Bill."

Q84. இந்திய தண்டனைச் சட்டம் - Indian Penal Code எப்போது அமலுக்கு வந்தது?

அக்டோபர் 1860.

Q85. இந்திய தண்டனைச் சட்டம் எந்த மாநிலத்துக்கு பொருந்தாது?

ஜம்மு காஷ்மீர்.

Q86. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு எந்த சட்டம் பொருந்தும்?

ரன்பீர் சட்டம். இச்சட்டம் காஷ்மீர் அரசர் ரன்பீர் சிங் (1857-1885) அவர்களால் தொகுக்கப்பட்ட து.

Q87. எவ்வகை குற்றங்கள், இந்திய தண்டனைச் சட்டத்தின்படி, குற்றமாக கருதப்பட மாட்டாது?

"1. 7 வயதுக்கு குறைவான குழந்தைகள் செய்யும் குற்றங்கள் (IPC விதி எண் 82).
2. 7 லிருந்து 12 வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் செய்யும் குற்றங்கள். இவர்கள் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்படுவார்கள் (IPC விதி எண் 83).
3. மன நிலை பாதிக்கப்பட்டவர் செய்யும் குற்றங்கள் (IPC விதி எண் 84).
4. விருப்பத்திற்கு எதிராக ஒருவர் குடி போதைக்குட்படுத்தப்பட்டு, அதனால் அவர் செய்த குற்றம் (IPC விதி எண் 85, 86).
5. ஒருவரின் ஒப்புதலுடன் மற்றொருவர் அவருக்கு செய்யும் நல்ல காரியம், ஆபத்தாக முடியும் பட்சத்தில், அந்த நபர் குற்றம் செய்தவராக கருதப்பட மாட்டார்.
உதாரணத்திற்கு, ஒரு மருத்துவர் ஒரு நோயாளிக்கு, அவருடைய ஒப்புதலுடன் ஒரு அறுவை சிகிச்சை செய்து, அந்த நோயாளி மரணம் அடையும் பட்சத்தில், அந்த மருத்துவர் குற்றவாளியாக கருதப்படமாட்டார். மருத்துவர் செய்ததில் தவறு நிரூபிக்கப்பட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் (IPC விதி எண் 87,88,89)
6. யாருடைய ஒப்புதலும் இல்லாமல், மற்றவர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய ஒரு செயல் அசம்பாவிதத்தில் முடியும் பட்சத்தில், அவர் குற்றவாளியாக கருதப்பட மாட்டார். (IPC விதி எண். 92)
7. தற்காப்புக்காக செய்யும் ஒரு காரியம் (IPC விதி எண் 96)."

Q88. "144 தடை உத்தரவு" என்பது என்ன?

"கலவரம் மற்றும் அமைதியின்மை நிலவும் பகுதிகளில் சகஜ நிலை திரும்புவதற்காக பயன்படுத்தப்படும் ஒரு அரசாங்க நடவடிக்கை. இந்திய தண்டனைச் சட்டம் விதி எண் 144ன் படி விதிக்கப்படும் இந்த உத்தரவின்படி, கலவரப்பகுதிகளில், சட்டத்துக்கு புறம்பாக கூட்டம் கூடுவது - 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் சேருவது தடை செய்யப்படுகிறது. (IPC விதி எண் 141 - 151 வரை)."

Q89. ஒரு அரசாங்க அலுவலர், அவரது சட்ட பூர்வமான நடவடிக்கையை செய்வதை ஒருவர் தடுப்பது...

"IPC விதி எண் 152 முதல் 186 வரை உள்ள காரணங்களின் அடிப்படையில் குற்றமாக கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். (IPC விதி எண் 152 முதல் 186 வரை)"

Q90. "ஒருவரோ அல்லது அதற்கு மேற்பட்டவர்கள், தனியாகவோ அல்லது கூட்டாகவோ, ஜாதி, மத அல்லது சமூக நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வது..."

IPC விதி எண் 153 A ன் கீழ் குற்றமாக கருதப்பட்டு தண்டனைக்குட்படுத்தப்படுவார்கள்.

Q91. "இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பொது இட த்தில், அமைதியை குலைக்கும் வகையில், சண்டையிட்டு கொள்வது..."

IPC விதி எண் 159ன் கீழ் குற்றமாக கருதப்பட்டு தண்டனைக்குட்படுத்தப் படுவார்கள்.

Q92. "ஒரு மக்கள் சேவகர், சட்டப்படி செய்ய வேண்டிய வேலைக்கு, கையூட்டு (லஞ்சம்) கேட்டுப் பெறுவது..."

IPC விதி எண் 164ன் படி குற்றமாகும்.

Q93. "ஒரு நபர், ஒரு மக்கள் சேவகரை, ஒரு சட்டப்படியான பணியில், ஒருவருக்கு சாதகமாக முடித்துக்கொடுக்க தூண்டுவது."

IPC விதி எண் 162ன் கீழ் குற்றமாகும்.

Q94. தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர், சட்டத்துக்கு புறம்பாக செய்யும் செயல்கள்...

IPC விதி எண் 171 A முதல் 171 I ன் படி குற்றச் செயல்களாகும்.

Q95. "அரசாங்க ரூபாய் நோட்டுகளையோ அல்லது ரூபாய் மதிப்புள்ள முத்திரைத்தாள் போன்றவற்றை கள்ளத்தனமாக அச்சடிப்பது..."

IPC விதி எண் 230 முதல் 263 A மற்றும் 489 A முதல் E வரையில் உள்ள விளக்கங்களின்படி குற்றமாகும்.

Q96. ஒரு வியாபாரி, எடைக்கற்கள் அல்லது இயந்திரம் பயன்படுத்துவதில் தவறுகள் செய்வது...

IPC விதி எண் 264 - 267ன் கீழ் தண்டிக்கப்படுவார்.

Q97. உணவுப் பொருளில் கலப்படம் செய்பவரை...

IPC விதி எண் 272ன் படி தண்டனைக்குள்ளாக்கலாம்.

Q98. மருந்துகளில் கலப்படம் செய்பவர் எந்த IPC விதியின் படி தண்டிக்கப்படுவார்?

IPC விதி எண் 274 முதல் 276.

Q99. அதிவேகமாகவும் அலட்சியமாகவும் வாகனம் ஓட்டுபவர் தண்டிக்கப்படுவது...

IPC விதி எண் 279ன் படி.

Q100. ஆபாச படங்கள், புத்தகங்கள் விற்பதோ அல்லது சுழற்சி செய்வதோ...

IPC விதி எண் 292 முதல் 294ன் படி குற்றமாகும்.

Q101. ஒருவருடைய மத சுதந்திரத்தை பாதிக்கும் நடவடிக்கை...

IPC விதி எண் 295 முதல் 298ன் படி குற்றமாகும்.

Q102. வரதட்சணைக் கொடுமை IPC எந்த விதிகளின்படி குற்றமாக கருதப்படுகிறது?

"IPC விதி எண் 304. வரதட்சணைக் கொடுமை மற்றும் அதனால் மரணம் ஆகிய நிகழ்ச்சிகள் திருமணத் தேதியில் இருந்து 7 வருடங்களுக்குள் நிகழுமேயானால், அது ஒரு நேரடி குற்றமாக கருதப்படும். இவ்வகை குற்றங்கள் வரதட்சணை தடைச்சட்டம் 1961ன் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும்."

Q103. "கொலை முயற்சி" என்பது IPCன் எந்த விதியின் படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது?

IPC விதி எண் 307.

Q104. "தற்கொலை முயற்சி" சட்டத்தின் முன் ஒரு குற்றமா?

IPC விதி எண் 309ன் படி ஒரு குற்றம்.

Q105. 12 வயதுக்குட்பட்ட குழந்தையை, பெற்றோர் கைவிட்டுச் செல்லுதல்... (Abandoning a Child)

IPC விதி எண் 317ன் படி குற்றமாகும்.

Q106. ஒருவரை வெளியில் எங்கும் செல்ல முடியாதவாறு அடைத்து வைத்தல் (Wrongful Confinement)...

"IPC விதி எண் 340 முதல் 348 வரை உள்ள விதிகளின் பல காரணங்களின் அடிப்படையில் இது ஒரு குற்றமாகும்."

Q107. ஆதாயத்துக்காக ஆட்கடத்தல் செய்வது குற்றமாக எந்த விதியின்படி கருதப்படுகிறது?

"IPC விதி எண் 359 முதல் 369 வரை உள்ள பல காரணங்களின் கீழ் குற்றமாக கருதப்பட்டு தண்டனை வழங்கப்படுகிறது."

Q108. கற்பழித்தல் (Rape) தொடர்பான குற்றங்கள்...

IPC விதி எண் 375, 376ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

Q109. திருட்டுக் குற்றங்கள் IPCன் எந்த விதிகளின் படி குற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது?

IPC விதி எண்கள் 378 முதல் 382 வரை.

Q110. பலாத்காரத்தினால் பணம் பறித்தல், IPCன் எந்த விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது?

IPC விதி எண்கள் 383 முதல் 388ன் கீழ்.

Q111. "திருட்டுக் குற்றங்கள், ஒருவருக்கு உடல் ரீதியான காயங்கள் அல்லது மரணமே ஏற்படுமேயானால் அந்த குற்றவாளியை..."

IPC விதி எண் 390 முதல் 402ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனைக்குள்ளாக்கப்படுவார்.

Q112. """கையாடல்"" என்பது அன்றாடம் கேள்விப்படும் குற்றங்களில் ஒன்று. அவ்வகை குற்றவாளிகள்..."

IPC விதி எண் 403 மற்றும் 404ன் கீழ் தண்டிக்கப்படுவார்கள்.

Q113. "நம்பிக்கை துரோகச் செயல்" எந்த சட்ட விதியின் கீழ் தண்டிக்கப்படுகிறது?

IPC விதி எண் 405 முதல் 409 வரை.

Q114. திருட்டுப் பொருளை வாங்குவது குற்றமா?

ஆம். IPC விதி எண் 410 முதல் 414 வரை உள்ள விளக்கங்களின் படி தண்டனை பெறக்கூடும். (அவ்வகைப் பொருளை வாங்கியவர் தாம் குற்றம் அற்றவர் என நிரூபிக்கப்படாத வரையில்).

Q115. "ஆதாயத்திற்காக ஒருவரை ஏமாற்றுவது எந்த IPC விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது?"

IPC விதி எண் 420.

Q116. """குற்ற நோக்கத்துடன் எல்லை மீறல்"" (Criminal Trespass) என்பது என்ன? அந்தக் குற்றம் IPCன் எந்தப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்?"

"உதாரணமாக, ஒருவருடைய சொத்தின் (வீடு, மனை) பகுதியையோ அல்லது முழுமையாகவோ ஆக்கிரமித்துக்கொண்டு விட்டுக்கொடுக்காமல் பிடிவாதமாய் இருப்பது அல்லது தன் பெயருக்கு மாற்றிக் கொள்வது இவ்வகைக் குற்றமாகும். இந்த வகைக் குற்றவாளிகள் IPC விதி எண் 405 முதல் 409 வரையின் கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்படுவார்கள்."

Q117. "போலி ஆவணங்கள் தயாரித்து (Forgery) மோசடி செய்யும் குற்றவாளிகள் மீது..."

IPC விதி எண் 463 முதல் 467 வரை உள்ள விதி விளக்கங்களின் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

Q118. "மனைவியோ/கணவனோ உயிருடன் இருக்கும்போது, வேறொருவரை திருமணம் செய்துக் கொள்வது..."

IPC விதி எண் 494ன் படி ஒரு குற்றம்.

Q119. "மான நஷ்ட ஈடு வழக்கு" என்பது...

"ஒருவரின் புகழை பங்கப்படுத்தும் வகையில் பேசுவதோ, எழுதுவதோ, பாதிக்கப்பட்டவரால் தொடுக்கப்படும் வழக்கு. இவ்வகைக் குற்றங்கள் IPC விதி எண்கள் 499-502ன் கீழ் தண்டனைக்குரியது."

Q120. "பொது இடத்தில், பொது மக்களுக்குத் தொல்லைக் கொடுக்கும் வகையில் நடந்துக் கொள்வது..."

IPC விதி எண் 75ன் படி குற்றமாகும்.

Q121. "குற்றவியல் நடைமுறைச் சட்டம் (Criminal Procedure Code) எப்போது நடை முறைக்கு வந்தது?"

"1973ல் இயற்றப்பட்டு, 1.4.1974ல் அமலுக்கு வந்தது. இதற்கு முன்னால் ஆங்கிலேயர்களால் 1861ல் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு, சுதந்திரத்திற்குப் பிறகு 1969ல் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. பிறகு 1972ல் புதிய சட்டம் இயற்றப்பட்டு, 1973ல் சட்ட அங்கீகாரம் பெற்று, 1.4.1974 முதல் அமலுக்கு வந்தது."

Q122. குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் நோக்கம்...

"குற்றங்களை ஆராய்ந்து, விசாரணை செய்து, குற்றவாளியை நீதிக்கு உள்ளாக்கி, (இந்திய தண்டனைச் சட்டம் விதி எண் 45ன் கீழ் விளக்கப்பட்டுள்ள குற்றங்களின் அடிப்படையில்) வழக்கு பதிவு செய்து நீதிமன்ற முடிவுக்கு எடுத்துச்செல்லுதல்."

Q123. அரசாங்க வழக்கறிஞர் (Public Prosecutor) நியமிக்கப்படுவது...

"குற்றவியல் நடைமுறைச் சட்ட (1973) விதி எண் 24ன் கீழ், அரசாங்கத்தின் சார்பாக, வழக்குகளை நீதிமன்றத்தில் முன் நிறுத்த, நியமிக்கப்படும் வழக்கறிஞர் இந்த விதியின் படி உச்ச நீதிமன்றத்தில் தொடங்கி, கடைசி நிலை நீதிமன்றம் வரையில் அரசாங்க வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுகிறார்கள்."

Q124. "பிடி ஆணை" (Warrant) இல்லாமல் ஒருவரை கைது செய்ய வழிவகுப்பது...

"இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் விதி எண் 41ன் படி ஒருவரை பிடி ஆணையின்றி கைது செய்யலாம். இந்த விதியில் அதற்கான காரணங்கள் விளக்கப்பட்டுள்ளது."

Q125. "இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் எந்த விதிப்படி, கைது செய்யப்பட்ட ஒருவர், ஒரு வழக்கறிஞரின் உதவியை நாடலாம்?"

CrPc விதி எண் 41 D.

Q126. இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் எந்த விதியின் கீழ், ஒரு ஆயுதப்படை வீர்ர், கைதிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்?

"Cr Pc 41 D ன் படி ஒரு ஆயுதப்படை வீரரை கைது செய்ய, மத்திய/மாநில அரசின் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளது."

Q127. இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் எந்த விதிப்படி, ஒரு பெண்மணியை மாலை 6 லிருந்து காலை 6 க்குள் கைது செய்யக்கூடாது?

Cr Pc விதி எண் 46 (A).

Q128. "இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டவிதிகள் 50 மற்றும் 51ன் கீழ் கைதாவதற்கு கொடுக்கப்பட்டுள்ள சலுகைகள் யாவை?"

"ஜாமீன் மறுக்கப்படக்கூடிய குற்றங்களை தவிர்த்து, மற்ற பிடி ஆணை இல்லாத கைது நேரங்களில், கைதானதற்கான காரணம் தெரிவிக்கப்பட வேண்டும். மேலும், ஜாமீன் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்க உதவிகள் நாடுவதற்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும்."

Q129. எவர் ஒருவரையும் கைது செய்து 24 மணி நேரத்திற்கு மேல் போலீஸ் காவலில் வைத்திருக்கக் கூடாது என்று CrPC யின் எந்த விதி கூறுகிறது?

"Cr Pc விதி எண். 57. கைது செய்த 24 மணி நேரத்துக்குள் (பயண நேரம் தவிர்த்து) ஒரு நீதிபதியின் முன் கைதியை முன் நிறுத்தி தக்க அனுமதி பெற வேண்டும். இந்த விதியை கடப்பதற்காகவே, வெள்ளி மாலை அல்லது அதற்கு மேலோ கைது செய்வது ஒரு வழக்கத்தில் உள்ளது. ஏனெனில் சனி மற்றும் ஞாயிறு நீதிமன்றங்கள் விடுமுறையில் இருக்கும். மேலும் காவல்துறை அந்த குற்றத்தைப் பற்றி மேலும் விவரங்கள் மற்றும் ஆதாரங்கள் சேமிக்க ஏதுவாக இருக்கும்."

Q130. "முன் ஜாமீன்" (Anticipatory Bail) பெற எந்த விதி வழி வகுக்கிறது?

Cr Pc விதி எண் 438.

Q131. இந்திய ஆதாரச் சட்டம் எந்த ஆண்டு அமலுக்கு வந்தது?

1872

Q132. எந்தெந்த நேரங்களில் கொடுக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்கள் நீதிமன்றங்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை?

"1. விதி எண். 24 - இந்திய ஆதாரச் சட்டம் - மிரட்டல், தூண்டுதல் அல்லது வாக்குறுதியின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்கள்.
2. விதி எண். 25 - இந்திய ஆதாரச் சட்டம் - காவல்துறை அதிகாரியிடம்/முன் கொடுக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம்.
3. விதி எண். 26 - இந்திய ஆதாரச் சட்டம் - காவலில் (Custody) இருக்கும்போது கொடுக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம்.
ஆகவே, ஒப்புதல் வாக்குமூலங்கள் நீதிபதி முன்பாகவோ அல்லது சம அதிகாரம் படைத்தவர் முன்போ தான் பதிவு செய்யப்படும்."

Q133. மரணத்தின் வாயிலில் இருக்கும் ஒருவர் எழுத்து மூலமாகவோ அல்லது வாய்மொழியாக கொடுக்கும் வாக்குமூலம்...

இந்திய ஆதாரச் சட்ட விதி எண்.32ன் படி, நீதிமன்றங்களில் ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்படும்.

Q134. கையெழுத்து, கையொப்பம், கைரேகை, மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை, இந்திய ஆதாரச் சட்டத்தின் எந்த விதியின் கீழ் பெற்றுக் கொள்ளப்படலாம்?

விதி எண். 45.

Q135. குற்றம் சாட்டப்பட்டவரின் முன் வரலாறு அல்லது பின்னணி...

விதி எண். 53 மற்றும் 54ன் கீழ் ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்படும்.

Q136. குற்றப்புகார் அளித்தவர் தான் குற்றம் நடைபெற்றதற்கான ஆதாரங்களை முன் வைக்க வேண்டும் என்பது...

இந்திய ஆதாரச் சட்டம் விதி எண். 101ன் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Q137. திருமணம் ஆன பெண்மணி, திருமணம் ஆன 7 வருடங்களில், சந்தேகத்துக்குரிய மரணம் (பொதுவாக தற்கொலை) அடைந்தால்...

"அவ்வகை மரணம், பொதுவாக வரதட்சணை அல்லது வேறு காரணங்களால், கணவன் அல்லது அவரது உறவினர்களின் தூண்டுதல்/கட்டாயத்தின் அடிப்படையில் ஏற்பட்டதாக கருதப்பட்டு விசாரணை நடத்தப்படும். (இந்திய ஆதாரச் சட்டம் விதி எண் 113 A மற்றும் B)."

Q138. பேச்சுத்திறன் (ஊமை) அற்றவர் கொடுக்கப்படும் சாட்சியம்...

"இந்திய ஆதாரச் சட்டம் விதி எண். 119ன் கீழ் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால் அவருடைய சாட்சியம் நீதிமன்றத்துக்கு விளங்கும் வகையில், திறந்த நீதிமன்றத்தில் சொல்லப்படும்போது, வாய்மொழி வாக்குமூலமாக ஏற்றுக்கொள்ளப்படும்."

Q139. அரசு முதன்மை ஆதரவுரைஞர் (Attorney General) என்பவர்...

"இது ஒரு சட்டரீதியான பதவி. இந்திய அரசியல் சட்டம் விதி எண் 76ன் கீழ் நியமிக்கப்படுவது. மத்திய அரசின் அனைத்து சட்ட சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு ஆலோசனை வழங்குவதுடன் முக்கியமான வழக்குகளில் மத்திய அரசின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வாதாடுவதும் இவருடைய முக்கிய பணி. மத்திய அரசால் பரிந்துரை செய்யப்பட்டு, குடியரசுத் தலைவர் அவர்களால் பணி நியமனம் செய்யப்படுகிறார்."

Q140. அரசு மூத்த வழக்கறிஞர் (Advocate General) என்பவர்...

"மாநில அரசுகளால் நியமிக்கப்படும் (சட்ட ரீதியல்லாத) அரசு சட்ட ஆலோசகர் மற்றும் வழக்கறிஞர். மாநில அரசால் பரிந்துரை செய்யப்பட்டு ஆளுநர் அவர்களால் நியமனம் செய்யப்படுகிறார். மத்திய அரசிலும் இந்தப் பதவி உண்டு."

Q141. "பஞ்சாயத்துக் குழு (Jury System) என்பது என்ன? அது எவ்வாறு முடிவுக்கு வந்தது?"

"ஆங்கிலேய நீதித்துறை முறைப்படி நியமிக்கப்பட்டு வந்த, நீதிமன்றத்துக்கு அப்பாற்பட்ட, ஒரு அமைப்பு. இதில் நீதிபதிகள் அல்லாத ஒரு குழு அமைக்கப்பட்டு, இதற்கு பரிந்துரைக்கப்பட்ட வழக்குகளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து பாரபட்சமில்லாத தீர்ப்பும் தண்டனையும் வழங்கி வந்தன. இந்த முறை, 1959 வரை பழக்கத்தில் இருந்தது. K.M. நானாவதி VS மகாராஷ்டிரா மாநில வழக்கின் மூலம் முடிவுக்கு வந்தது."

Q142. "சிறுவர்களின் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் கொண்டுள்ள மாநிலம் எது?"

கோவா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக