வியாழன், 24 மே, 2018

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு தேசிய விருது


ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு தேசிய விருது

புதுடில்லி:

65வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த இசை மற்றும் பின்னணி இசைக்கான இரண்டு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் சிறந்த படமாக செழியன் இயக்கிய, "டூ-லெட்" தேர்வாகி இருக்கிறது.

சினிமா துறையில் உள்ளவர்களை கவுரவிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு, தேசிய விருதுகளை அறிவிக்கிறது. 65வது தேசிய விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்தது.

🏆ரஹ்மானுக்கு இரண்டு விருது

மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்திற்கு இசையமைத்ததற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதும், ஸ்ரீதேவி நடித்த மாம் படத்திற்கு பின்னணி இசைக்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

🏆பாகுபலிக்கு இரண்டு விருதுகள்

இந்திய சினிமாவில் அதிக வசூல் சாதனை புரிந்த, ராஜமவுலி இயக்கிய பாகுபாலி 2 படத்திற்கு, சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ், மக்களைக் கவர்ந்த மற்றும் ஆக்ஷ்ன் காட்சிகளுக்காக 3 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

🏆மற்ற விருதுகள் விபரம்.....

🏆சிறந்த நடிகர் : ரித்தி சென்(நகர்கிரதான்)

🏆சிறந்த நடிகை : ஸ்ரீதேவி (மாம்)

🏆சிறந்த இயக்குநர் : ஜெயராஜ் (பயணக்கம்)

🏆சிறந்த துணை நடிகர் : பஹத் பாசில் (தொண்டிமுதலும் த்ரிகாஷியம்)

🏆சிறந்த துணை நடிகை : திவ்யா தத்தா (இரடா)

🏆சிறந்த திரைக்கதை : தொண்டிமுதலும் த்ரிகாஷியம்

🏆சிறந்த திரைக்கதை தழுவல் : பயணக்கம்

🏆சிறந்த பின்னணி பாடகர் : யேசுதாஸ்

🏆சிறந்த பின்னணி பாடகி : சாஷா திரிபாதி(வான் வருவான்... காற்று வெளியிடை)

🏆சிறந்த குழந்தை நட்சத்திரம் : பனிதா தாஸ் (வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்)

🏆சிறந்த ஒளிப்பதிவு : பயணக்கம்

🏆சிறந்த படத்தொகுப்பு : வில்லேஜ் ராக்ஸ்டார் மற்றும் ரிமா தாஸ்

🏆சிறந்த பாடலாசிரியர் : முத்துரத்னா, மார்ச் 22

🏆சிறந்த இசையமைப்பாளர் : ஏ.ஆர்.ரஹ்மான் (படம் : காற்று வெளியிடை)

🏆சிறந்த பின்னணி இசை : ஏ.ஆர்.ரஹ்மான் (படம் : மாம்)

🏆சிறந்த ஆக்ஷ்ன் : அப்பாஸ் அலி மொகுல் (படம் : பாகுபலி 2)

🏆சிறந்த நடனம் : கணேஷ் ஆச்சார்யா (படம் : டாய்லெட் ஏக் பிரேம் கதா)

🏆சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் : பாகுபலி 2

🏆சிறந்த குழந்தைகள் படம் : மார்கியா

சிறந்த சுற்றுச்சூழல் படம் : இரடா

சிறந்த சமூக படம் : ஆலொருக்கம்

மக்களை கவர்ந்த படம் : பாகுபலி 2

சிறப்பு விருதுகள்

மராத்தி படம் : மார்கியா

ஒரியா படம் : ஹலோ மிரர்

சிறந்த நடிகை : பார்வதி (படம் : டேக் ஆப்)

சிறந்த நடிகர் : பங்கஜ் திரிபாதி (படம் : நியூட்டன்)

தேசிய ஒருமைப்பாட்டிற்கான நர்கிஸ் தத் விருது : தப்பா

சிறந்த அறிமுக இயக்குநருக்கான இந்திரா விருது : பேம்பாலி (சிஞ்சர்)

தாதா சாகேப் பால்கே விருது : வினோத் கன்னா (மறைந்த ஹிந்தி நடிகர்)

மாநில மொழி படங்கள் விருது

சிறந்த தமிழ் படம் : டூ-லெட்

சிறந்த தெலுங்கு படம் : காஸி

சிறந்த மலையாளம் படம் : தொண்டிமுதலும் த்ரிகாஷியம்

சிறந்த கன்னட படம் : ஹெப்பெத்து ராமாக்கா

சிறந்த ஹிந்தி படம் : நியூட்டன்

சிறந்த பெங்காலி படம் : மயூராக்ஷி

சிறந்த அசாமி படம் : இஷ்ஷூ

சிறந்த குஜராத்தி படம் : 'த்'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக