திங்கள், 4 ஜூன், 2018

ஊழல் தடுப்புச் சட்டம் 1988 பற்றி....


ஊழல் தடுப்புச் சட்டம் 1988 பற்றி....

*ஊழல் மனப்பான்மை*

1,85,591 கோடி நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு,கர்னாடகம் 2,00,000 கோடி வக்பு வாரிய நிலமோசடி, 10,000 கோடிஉத்தரப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் தேசிய ஊரக சுகாதாரத்திட்டம், 1,76,000 கோடி 2G அலைக்கற்றை முறைகேடு,உத்தரப்பிரதேசம் 35,000 கோடி உணவு தானிய ஊழல், 3,500 கோடிகாமன்வெல்த் விளையாட்டு ஊழல் மட்டுமன்றி பட்டா சிட்டாமாறுதல்களுக்கு வாங்கும் நூறு இருநூறு ரூபாய்ஊழல்களெல்லாம் நம் அரசியல்வாதிகள், அரசுபணியாளர்களின் அடையாளமாக ஆகிவிட்டது.

அக்காலங்களில் சைக்கிளில் வரும் காவலரைக் கண்டு பெரும்செல்வந்தரும் மரியாதை கொடுப்பர். இக்காலங்களில் இந்தியகாவல் பணி அதிகாரிகள் கூட குற்றவாளி அல்லது ஒருவனதுசெல்வம் எப்படி சம்பாதிக்கப்பட்டது என பார்க்காமல் பணமுநிறைந்தவனுக்கு கொடுக்கும் மரியாதையும், சலுகைகளும் மிகஅதிகம் அதனால் வந்த அவலங்களும் மிக அதிகம்.

அரசு காரியங்களை நிறைவேற்றுவதற்குக் கொடுக்கப்படும்லஞ்சத்தொகையை விட, அரசு, மக்கள் பணிக்கு ஒதுக்கப்படும்தொகையில் முழுதாகவோ, சிறு பகுதியோ தான் மக்கள்பணிக்குச் செல்வதாக சொல்கிறார்கள்.

ஒரு டெண்டரை எடுக்கும் போதே 20% கொடுத்து டெண்டர் எடுத்து,துறை தலைவர், பொறியாளர், உதவி பொறியாளர், அலுவலஉதவியாளர், லாபம் என கொடுத்தது போக மீதி அத்திட்டத்திற்குசெலவழிக்கப் படுகிறது என்றால் அத்திட்டத்தின் நிலைஎன்னவாகுமோ?

லஞ்ச, லாவண்ய வழக்குகளில் சிக்கிக் கொள்ளும் அரசுபணியாளர்களை நீதிமன்றம் விடுவித்துவிடுவதும், லஞ்சம்மற்றும் ஊழல் துறை அதிகாரிகளுக்குத் துணைபோவது, தனக்குவரும் புகார்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கே தெரிவிப்பதுபோன்ற கேடுகளும் உண்டு.

கவிஞர் கா.மு. ஷெரிஃபின்;

“பணம் பந்தியிலே குணம் குப்பையிலே”

உடுமலை நாராயண கவியின்;

“முட்டாப் பயலையெல்லாம் தாண்டவக்கோனே –காசு

முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே” பாடல் வரிகள்சிந்திக்கத் தூண்டுகின்றன.

உளவியல் நோக்கில் லஞ்சம் பெறுவதும், அதை ஊக்குவிப்பதும்,காரியம் ஆக பிறருக்கு லஞ்சம் அளிப்பதும் மக்களிடம் உள்ளகுறையே என்றால் அது மிகையாகாது, வருமானத்திற்குஅதிகமாக சொத்து சேர்த்து பெரும் பங்களா, ஆடம்பரக் கார்,கணக்கற்ற சொத்து சேர்ப்பவர்களை நிந்தித்தால் ஒழியஅரசியல்வாதிகள், அதிகாரிகள், இடைத்தரகர்கள் மத்தியில்ஊழல் எண்ணத்தை ஒழிக்க முடியாது. ஊழல் தடுப்புச் சட்டம்,1988இல் உள்ள முக்கிய பிரிவுகளை மட்டும் பார்ப்போம்.

ஊழல் தடுப்புச் சட்டம்,1988 The Prevention of Corruption Act, 1988

அரசு பணியாளர் [பிரிவு.2(c)]

Public servant

அரசு பணியாளர் என்பவர்;

i. அரசாங்கத்தின் பணியில் இருக்கும் அல்லது அதனிடம் சம்பளம்பெறும் அல்லது பொதுக்கடமை எதனையும் புரிவதற்காகஅரசாங்கத்தால் கட்டணங்களாகவோ, தரகராகவோ பணியூதியம்வழங்கப்படும் நபர் எவரும்

ii. உள்ளாட்சி அமைப்பின் பணியில் இருக்கும் அல்லது அதனிடம்சம்பளம் பெறும் எவரும்

iii. மத்திய,மாகாண, மாநில சட்டத்தாலோ,அதன் வழியாலோ,நிறுவப்பட்ட கூட்டுருமத்தின் அல்லது அரசு நிறுவனத்தில்அல்லது அரசு நிதியுதவி பெறும் அமைப்பில் சம்பளம் பெறும் நபர்

iv. நீதிமுறை அலுவல் காரணமாக சட்டத்தால்அதிகாரமளிக்கப்பட்ட நபர்

v. நீதி நிர்வாகம் தொடர்பாக கலைப்பதிகாரி, சொத்துப் பேணுநர்அல்லது ஆணையர் நபர் எவரும்

vi. நீதிமன்றத்தால் அல்லது பொது அதிகார அமைப்பால் முடிவுசெய்வதற்காக, அறிக்கை செய்வதற்காக குறித்தனுப்பப்பட்டவர்

vii. தேர்தல் பணிக்காக அதிகாரம் அளிக்கப்பட்ட நபர்

viii. பொதுக்கடமைக்காக அதிகாரம் அளிக்கப்பட்ட நபர்

ix. மத்திய, மாநில, மாநில சட்டத்தாலோ,அதன் வழியாலோ,நிறுவப்பட்ட கூட்டுருமத்தின் அல்லது அரசு நிறுவனத்தில்அல்லது அரசு நிதியுதவி பெற்று அவற்றில் ஈடுபட்டுள்ள ஒருபதிவு பெற்ற கூட்டுறவு சங்க தலைவராக, செயலாளராகஇருக்கும் நபர்

x. பணியாளர் தேர்வாணையம், வாரியம், வாரியத்தின் சார்புதேர்வு நடத்தும் தெரிவுக்குழுவில் உறுப்பினர் எவரும்

xi. பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் எவரும்

xii. மத்திய, மாகாண, மாநில சட்டத்தாலோ, அதன் வழியாலோ,நிறுவப்பட்ட அரசு நிதியுதவி பெறும் அமைப்பில் சம்பளம் பெறும்நபர்

ஆவார்.

அரசுப் பணியாளர் எப்பொழுது ஊழல் குற்றம் செய்ததாககருதப்படுவார் [பிரிவு13]

Criminal misconduct by a public servant

அ) அரசுப் பணியாளர் அ) தமக்காகவோ அல்லது வேறுயாருக்காகவோ பணி சட்டப்படியான பணிஊதியம் அல்லாதகைக்கூலி எதிலாகிலும் தூண்டுகோலாகவோ வெகுமதியாகவோஎவரிடமிருந்தும் வாடிக்கையாக ஏற்பாராயின் அல்லதுகேட்டுப்பெறுவாராயின், ஏற்க உடன்படுவாராயின் அல்லது கேட்டுபெறுவதற்கு முயல்வாராயின்

ஆ) தம்மால் செய்யப்பட்டிருக்கிற அல்லது செய்யப்படவிருக்கிறநடவடிக்கை அல்லது எதனோடும் தொடர்பு கொண்டிருக்கிறஅல்லது தொடர்புடையவராக அநேகமாகத தொடர்புகொண்டிருந்திருக்கக் கூடுமென்று தாம் அறிந்துள்ள அல்லதுதம்முடைய அல்லது தாம் எவர் கீழ் பணிபுரிகிறாரோ அந்த அரசுப்பணியாளருடைய அலுவல்முறைப் பதவிப் பணிகளுடன் தொடர்புஎதுவுமுடைய எவரிமிருந்துதேனும் தமக்காகவோ அல்லது வேறுயாருக்காகவோ மறு பயனுக்காகவோ விலையுயர்ந்த பொருள்எதையேனும் வழக்கமாக தாம் ஏற்பாராயின் அல்லது கேட்டுப்பெறுவாராயின் அல்லது ஏற்க உடன்படுவாராயின் அல்லதுகேட்டுப்பெற முயல்வாராயின்

இ) அரசுப் பணியாளர் என்ற முறையில் தம்மிடம் அல்லது தம்கட்டாளுகையின் கீழ் ஒப்படைக்கப்பட்ட சொத்து எதனையும்நேர்மையற்ற முறையிலோ அல்லது மோசடியாகவோ தாம்கையாடல் செய்வாராயின் அல்லது பிறவாறு தமது சொந்தபயனுக்காக மாற்றிக் கொள்வாராயின் அல்லது பிறர் எவரையும்அவ்வாறு செய்ய அனுமதிப்பாராயின் அல்லது

I. ஊழலான அல்லது சட்டமுரணான வழிகளின் மூலமாகத்தமக்காகவோ அல்லது வேறு யாருக்காகவோ விலையுயர்ந்தபொருள் அல்லது பணமதிப்புள்ள பயன் எதனையும்பெறுவாராயின் அல்லது

II. அரசுப் பணியாளார் என்ற தமது பதவி நிலையைத் தவறாகப்பயன்பபடுத்துவதன் மூலமாகத் தமக்காகவோ அல்லது வேறுயாருக்காகவோ விலையுயர்ந்த பொருள் அல்லது பணமதிப்புள்ளபயன் எதனையும் பெறுவாராயின், அல்லது

III. அரசுப் பணியாளராக பதவி வகிக்கும் போது பொது நலன்ஏதுமின்றி எவருக்காகவும் விலையுயர்ந்த பொருள் அல்லதுபணமதிப்புள்ள பயன் எதனையும் கேட்டுப் பெறுவாராயின்,அல்லது

அவரோ, அவர் சார்பில் வரும் எவருமோ, அவருடையவருமானத்தின் தெரிநிலையான வழிவகைகளுக்குப்பொருந்தாத விகிதத்தில் பணம் தொடர்பான வழிவகைகளையோஅல்லது சொத்தையோ உடைமையில் கொண்டிருந்த அல்லதுபதவி காலத்தில் கொண்டிருந்து, அதற்கு தெளிவுறக் கணக்குகாட்ட முடியவில்லையாயின் குற்றச் செயலை செய்ததாகசொல்லப்படுவார்.

அரசு பணியாளர் கைகூலி பெறுதல் [பிரிவு.7]

அரசு பணியாளர் எவரிடமும் அத்தகைய அரசுப் பணியாளர் என்றமுறையில் அலுவல்முறைச் செயல் எதனையும் செய்ய அல்லதுசெய்யாமல் விட அல்லது எவருக்கேனும் சலுகையோ,சலுகையின்மையோ காட்ட அல்லது காட்டாமல் விட அல்லதுநன்மை அல்லது தீமை செய்வதற்கு அல்லது செய்ய முயல்வதற்குவெகுமதியாக தமக்காகவோ, வேறு எவருக்கோ கைக்கூலிஎதையாகிலும் ஏற்பாராயின் அல்லது கெட்டுப்பெறமுயல்வாராயின் அவர் ஆறுமாதங்களுக்கு குறையாத ஐந்துஆண்டுகள் வரை நீடிக்கலாகும் சிறைதண்டனையும் அபராதமும்விதித்து தண்டிக்கப்படத்தக்கவர் ஆவார்.

விளக்கங்கள்...

அ)அரசு பதவியை வகிக்க போவதாக நம்பச் செய்து ஏமாற்றிகைகூலி பெற்றால் இப்பிரிவில் வரையரை செய்யப்பட்டுள்ளகுற்றத்தை செய்தவராகார்.

ஆ)கைக்கூலி என்பது பணத்தால் மதிப்பிடத்தக்க கைகூலியைமட்டுமே குறிப்பதன்று.

இ)சட்டப்படியான பணியூதியம் என்பது அரசால் அல்லதுநிறுவனத்தால் அனுமதிக்கப்படுகின்ற பணியூதியங்கள்அனைத்தும் அடங்கும்

ஈ)’செய்வதற்கு தூண்டுகோல் அல்லது வெகுமதி” என்பதுகைகூலியை பெற்றுக்கொள்கிறவரை குறிக்கும்

உ)அரசாங்கத்துடன் தனக்குள்ள செல்வாக்கு, அந்த நபரை நம்பிகைகூலி கொடுப்பதற்கு தூண்டுவதால் அவர் குற்றம்செய்தவராகிறார்.

அரசு பணியாளர் ஊழல் அல்லது சட்டவிரோதமானவழிகளில் கைகூலி பெறுதல்[பிரிவு.8]

அரசுப் பணியாளர் எவரும் பிரிவு.7-இல் குறிப்பிடப்பட்டுள்ளசெயலை செய்ய வெகுமதியாக தமக்காகவோ, வேறு எவருக்கோஊழல் அல்லது சட்டவிரோதமாக கைக்கூலி எதையாகிலும்ஏற்பாராயின் அல்லது கேட்டுப்பெற முயல்வாராயின் அவர்ஆறுமாதங்களுக்கு குறையாத ஐந்து ஆண்டுகள் வரைநீடிக்கலாகும் சிறைதண்டனையும் அபராதமும் விதித்துதண்டிக்கப்படத்தக்கவர் ஆவார்.

அரசு பணியாளர் சொந்த செல்வாக்கை செலுத்த கைகூலிபெறுதல்[பிரிவு.9]

Taking gratification, for exercise of personal influence with public servant

அரசுப் பணியாளர் எவரும் பிரிவு.7-இல் குறிப்பிடப்பட்டுள்ளசெயலை செய்ய வெகுமதியாக தமக்காகவோ, வேறு எவருக்கோதன் சொந்த செல்வாக்கை செலுத்த வெகுமதியாக தமக்காகவோ,வேறு எவருக்கோ கைக்கூலி எதையாகிலும் ஏற்பாராயின்அல்லது கேட்டுப்பெற முயல்வாராயின் அவர் ஆறு மாதங்களுக்குகுறையாத ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கலாகும்சிறைதண்டனையும் அபராதமும் விதித்து தண்டிக்கப்படத்தக்கவர்ஆவார்.

ஊழல் குற்றச் செயலுக்கு அரசு பணியாளர்உடந்தையாயிருப்பதற்கு தண்டணை [பிரிவு.10]

அரசு பணியாளராய் இருந்து ஊழல் அல்லது சட்டவிரோதமானவழிகளில் கைகூலி பெறவும், சொந்த செல்வாகை செலுத்தகைகூலி பெறவும் உடந்தையாயிருப்பவருக்கு அவர் ஆறுமாதங்களுக்கு குறையாத ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கலாகும்சிறைதண்டனையும் அபராதமும் விதித்து தண்டிக்கப்படத்தக்கவர்ஆவார்.

விலைமதிப்புள்ள பொருளை பெறுதல் [பிரிவு.11]

அரசுப் பணியாளர் எவரும் பிரிவு.7-இல் குறிப்பிடப்பட்டுள்ளசெயலை செய்ய வெகுமதியாக தமக்காகவோ, வேறு எவருக்கோதன் சொந்த செல்வாக்கை செலுத்த வெகுமதியாக தமக்காகவோ,வேறு எவருக்கோ விலை உயர்ந்த பொருள் எதையாகிலும்ஏற்பாராயின் அல்லது கேட்டுப்பெற முயல்வாராயின் அவர் ஆறுமாதங்களுக்கு குறையாத ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கலாகும்சிறைதண்டனையும் அபராதமும் விதித்து தண்டிக்கப்படத்தக்கவர்ஆவார்.

பிரிவு.7இல் அல்லது 11-இல் வரையரை செய்யப்பட்ட குற்றசெயல்களுக்கு உடந்தையாயிருத்தல்[பிரிவு.12]

பிரிவு.7இல் அல்லது 11-இல் வரையரை செய்யப்பட்ட குற்றசெயல்களுக்கு உடந்தையாயிருப்பவருக்கு அவர் ஆறுமாதங்களுக்கு குறையாத ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கலாகும்சிறைதண்டனையும் அபராதமும் விதித்து தண்டிக்கப்படத்தக்கவர்ஆவார்.

குற்றச் செயலை செய்வதை வழக்கமாகக்கொண்டித்தல்[பிரிவு.14(ஆ)

பிரிவு 8,9,12 இன் படி குற்றச் செயலை செய்வதை வழக்கமாகக்செய்கிற எவரும் 2 ஆண்டுக்கு குறையாத 7 ஆண்டுகள் வரநீடிக்கலாகும் சிறைதண்டணையும் அபராதத்திற்கும்உள்ளாக்கப்படுவார்.

அபராதம் நிர்ணயப்பதற்கு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவை[பிரிவு.16]

அபராதம் நிர்ணயப்பதற்கு முன் குற்றஞ்சாட்டப்பட்டவர் அக்குற்றச்செயலை இழைத்ததன் மூலம் பெற்றிருக்கும் சொத்தின்மதிப்பினையும், கணக்கு காட்ட இயலாமலிருக்கும் சொத்தையும்கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்

குற்ற முயற்சிக்குத் தண்டணை[பிரிவு.15]

ஊழல் குற்றச் செயலை இழைக்க முயல்கிற எவரொவரும்,மூன்றாண்டுகள் வரை நீட்டிக்கலாகும் சிறை தண்டணையும்அபராதமும் விதித்து தண்டிக்கப்படுவார்.

ஊழல் புகார்களை அளிக்க முன்வரும் பொதுமக்கள்கீழ்க்கண்ட முகவரிகளுக்கு தங்களது புகார்களைஅனுப்பலாம்.

CENTRAL VIGILANCE COMMISSION

Satarkata Bhavan , A-Block

GPO Complex , INA

New Delhi - 110 023

THE DIRECTORATE OF VIGILANCE AND ANTI-CORRUPTION

NCB 21 TO 28, P.S.KUMARASAMY RAJA SALAI (GREENWAYS ROAD),

RAJA ANNAMALAIPURAM,

CHENNAI – 600 028.

Telephone : 91-44-24615929 / 24615949 / 24615989 / 24954142 / 9445048999 / 9445048990

By வழக்கறிஞர் சி.பி. சரவணன்

நன்றி : தினமணி (சட்டமணி) நாளிதழ் - 30.04.2018

      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக