ஞாயிறு, 24 ஜூன், 2018

இந்திய வரலாறு முக்கிய வினாக்கள்...


இந்திய வரலாறு முக்கிய வினாக்கள்...

தீவிரவாதிகள் காலம் - (1905 - 1916)

🇮🇳 தீவிரவாதிகள்:-
1. பாலகங்காதர திலகர்
2. லாலாலஜிபதி ராய்
3. பிபின் சந்திர பால்
4. அரவிந்த கோஷ்
🇮🇳 தீவிரவாதிகள் முக்கிய குறிக்கோள் - சுயராஜ்யம் அல்லது முழு விடுதலை
🇮🇳 தீவிரவாதிகள் பின்பற்றிய வழிமுறைகள்:
1. அரசு நீதிமன்றங்களையும், பள்ளிகளையும், கல்லூரிகளையும் புறக்கணிப்பதன் மூலம் பிரிட்டிஷ் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுப்பது.
2. தேசிய பொருட்களை ஆதரிப்பது, அந்நிய பொருட்களை வாங்க மறுப்பது.
3. தேசிய கல்வியை அறிமுப்படுத்தி வளர்ப்பது.
🇮🇳 ஷெர்-இ-பஞ்சாப் (பஞ்சாப் சிங்கம்) என்று அழைக்கப்பட்டவர் - லாலா லஜபத் ராய்
🇮🇳 லோக் மான்யர் என்று அழைக்கப்பட்டவர் - பால கங்காதர திலகர்
🇮🇳 பால கங்காதர திலகர் நடத்திய பத்திரிக்கைகள் - மராத்தா (ஆங்கிலம் மொழி) கேசரி (மராத்தி மொழி)
🇮🇳 பால கங்காதர திலகர் முக்கிய முழக்கம் - சுயராஜ்யம் எனது பிறப்புரிமை அதனை அடைந்தே தீருவேன்
🇮🇳 பால கங்காதர திலகர் நடத்திய விழாக்கள் - விநாயகர் சதுர்த்தி, சிவாஜி பண்டிகை
🇮🇳 சைமன் குழு போராட்டத்தின் போது தடியடி பட்டு இறந்தவர் - லாலா லஜபத் ராய்
🇮🇳 மிதவாதியாக இருந்து தீவிரவாதியாக மாறியவர் - பிபின் சந்திர பால்
🇮🇳 தீவிரவாதியாக இருந்து ஆன்மீக வாதியாக மாறியவர் - அரவிந்த் கோஷ்
🇮🇳 அரவிந்த் கோஷ் முக்கிய முழக்கம் - அரசியல் சுதந்திரம் பெறுவதே நாட்டின் உயிர் மூச்சு
🇮🇳 அரவிந்த கோஷ் வெளியிட்ட பத்திரிக்கை - சுதேசி பந்தனா, சாதானா சமாஜ்
🇮🇳 புபேந்திரநாத் தத் வெளியட்ட பத்திரிகை - யுகாந்தர்
🇮🇳 ராஜ்பிகாரி போஸ் மற்றும் சச்சிந்திர சன்யா இருவரும் ஹார்டின்ச் பிரபு யானை மீது செல்லும் போது குண்டுவீசி தாக்கினர்
🇮🇳 மதன்லால் திங்ரா 1909 கர்சன் பிரபுவை இலண்டனில் படுகொலை செய்தார்
🇮🇳 பகத் சிங், பட்கேஸ்வரதத் இவர்கள் மத்திய சட்டப்பேரவையில் 1929-ல் வெடிகுண்டு வீசினார்கள்
🇮🇳 டாக்கா அனுசீலன் என்ற தீவிரவாத இயக்கத்தை தொடங்கியவர் - பூலின்தாஸ்
🇮🇳 கொல்கத்தா அனுசீலன் சமிதி தொடங்கியவர் - பீரேந்திரகுமார் கோஷ், ஜே.என். பானர்ஜி, பிரமோத் மித்ரா
🇮🇳 மித்ரமேளா என்ற இயக்கத்தை தொடங்குயவர் - சர்வார்க்கர் பிரதர்ஸ்
🇮🇳 இந்துஸ்தான் ரிபப்ளிக் அசோசியேசன் (HRA) 1924 தொடங்கியவர் - சச்சிந்திர சன்யால், ஜோஸப் சாட்டர்ஜி
🇮🇳 காதர் பார்ட்டி தொடங்கியவர் - லாலா ஹர் தயாள்
🇮🇳 காதர் பார்ட்டி தொடங்க அமெரிக்காவில் உறுதுணையாக இருந்தவர் - சோஹன்சிங் பக்கன்
🇮🇳 காதர் பார்ட்டி முக்கிய தலைவர்கள் - ரஹமத் அலிஷா, பாய்பரமானந்த், ராமசந்திரா
🇮🇳 காதர் பார்ட்டி நடத்திய பத்திரிகை - காதர்
🇮🇳 இலண்டனில் இந்தியா ஹவுசில் ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா இந்திய தேசியவாதிகள் ஆன மதன்லால் திஸ்ரா, வி.டி.சாவர்க்கர், வி.வி.எஸ். அய்யர், டி.எஸ்.எஸ்.ராஜன் மற்றும் மேடம் காமா ஆகியோர்களை ஒன்று திரட்டினார்.
🇮🇳 அஜித் சிங் என்பவர் ஒரு இரகசிய அமைப்பை ஏற்படுத்தினார்.
🇮🇳 வந்தே மாதரம் என்ற தாய் நாட்டு பற்று மிக்க பாடலை இயற்றியவர் - பக்கிம் சந்திர சட்டர்ஜி
🇮🇳 சூரத் பிளவு - 1907
🇮🇳 தமிழ்நாட்டில் இருந்த தீவிரவாதிகள்
1. சுப்பிரமணிய பாரதி
2. வ.உ.சிதம்பரனார்
3.சுப்பிரமணிய சிவா
4. வாஞ்சிநாதன்
5. வ.வே.சு. அய்யர்
6. நீலகண்ட பிரம்மச்சாரி
🇮🇳 பாரத மாதா சங்கம் தோற்றுவித்தவர் - நீலகண்ட பிரம்மச்சாரி
🇮🇳 தன்னாட்சி இயக்கம் புனேவில் ஏப்ரல் மாதம் தொடங்கியவர் - பால கங்காதர திலகர்
🇮🇳 தன்னாட்சி இயக்கம் சென்னையில் செப்டம்பர் மாதம் தொடங்கியவர் - அன்னி பெசன்ட்

இந்திய தேசிய இயக்கங்களின் மகாத்மா காந்தி முக்கியமாக பங்குகள்:-

🇮🇳 காந்திய காலம் : (1917 - 1948)
🇮🇳 காந்தி பிறந்த ஆண்டு - 2 அக்டோபர் 1869
🇮🇳 காந்த பிறந்த ஊர் - போர்பந்தர்
🇮🇳 இவர் இங்கிலாந்து சென்று சட்டம் பயின்று இந்தியா திரும்பிய ஆண்டு - 1891
🇮🇳 1893 தென் ஆப்பிரிக்கா சென்ற காந்தி அங்கு ஆரம்பிக்கப்பட்ட கொள்கை - இன ஒதுக்கல் கொள்கை
🇮🇳 காந்தி இந்தயா திருப்பிய ஆண்டு - 9 ஜனவரி 1915
🇮🇳 இந்தியாவில் காந்தி நடத்தி,முதல் போராட்டம் - சம்ரான் (1917)
🇮🇳 காந்தியடிகள் அடுத்த போராட்டம் - அகமதாபாத் மில் ஸ்ட்ரைக்
🇮🇳காந்தியடிகள் அடுத்த போராட்டம் -  கேதா சத்தியாகிரகம்

கிலாபத் இயக்கம்:-

🇮🇳 கிலாபத் இயக்கம் தோன்ற முக்கிய காரணம் - முதல் உலகப் போரில் துருக்கியின் தோல்வி
🇮🇳 முஸ்லிம்களுக்கு பெருத்த அவமானமாக கருதப்பட்டது - செவெரஸ் உடன்படிக்கை (1920)
🇮🇳 உலக முஸ்லிம் தலைவராக இருந்தவர் - காலிப் (துருக்கி சுல்தான்)
🇮🇳கிலாபத் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் - மௌலானா அபுல் கலாம் ஆசாத், எம்.ஏ.அன்சாரி, சைபுதீன் கிச்லு, அலி சகோதரர்கள்
🇮🇳 கிலாபத் இயக்கம் கிலாபத் தினமாக அனுசரிக்கப்பட்ட நாள் - 19 அக்டோபர் 1919
🇮🇳 மகாத்மா காந்தி தலைமையில் இந்துக்களும் முஸ்லீம்களும் கலந்து கொண்ட ஒரு மாநாட்டை கூட்டிய நாள் - 23 நவம்பர் 1919
🇮🇳 மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தில் கிலாபத் இயக்கம் கலந்து கொண்ட வருடம் - 1920
*2. ஒத்துழையாமை இயக்கம்:-*
🇮🇳 ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்ற ஆண்டு - 1920
🇮🇳 ஒத்துழையாமை இயக்கம் எங்கு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ஏற்படுத்தப்பட்டது - கொல்கத்தா
🇮🇳 ஒத்துழையாமை இயக்கத்தில் முக்கிய காரணம் - ரௌலட் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலை, மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம்
🇮🇳 ஒத்துழையாமை இயக்கத்தில் எதிர்ப்புகள் நிலைகள் - 3
1. ஆங்கில அரசிடமிருந்து பெற்ற பதவிகளையும், பட்டங்களையும், விருதுகளையும் துறத்தல்
2. வேலைநிறுத்தம், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சட்டமன்ற நடவடிக்கைகள் அனைத்தையும் புறக்கணிக்கப்பட்டனர்.
3. வரி செலுத்துவதை மறுத்தல்.
🇮🇳 வரிகொடா இயக்கம் தொடங்கியவர் - சர்தார் வல்லபாய் படேல்
*3. சௌரி சௌரா :-*
🇮🇳 சௌரி சௌரா நடைபெற்ற  - 5 பிப்ரவரி 1922
🇮🇳 சௌரி சௌரா நடைபெற்ற இடம் - கோரக்பூர் மாவட்டம் (உத்திர பிரதேசம்)
🇮🇳 சௌரி சௌரா சம்பவத்தில் கலந்து கொண்டவர்கள் - விவசாயிகள்
🇮🇳 சௌரி சௌரா சம்பவத்தில் காவல் நிலையத்தில் தீ வைக்கப் பட்டது இதில் இறந்த காவலர்கள் எண்ணிக்கை - 22
🇮🇳 சௌரி சௌரா சம்பவத்தில் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திய தினம் - 11 பிப்ரவரி 1922
🇮🇳 காந்தி கைது செய்யப்பட்ட ஆண்டு - 10 மார்ச் 1922
*4. சுயராஜ்ய கட்சி*
🇮🇳 சுயராஜ்ய கட்சி தொடங்கியவர்கள் - சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு
🇮🇳 சுயராஜ்ய கட்சி தொடங்கப்பட்ட வருடம் - 1 ஜனவரி 1923
🇮🇳 சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற ஆண்டு - நவம்பர் 1923
🇮🇳 1923 நடந்த சட்டமன்ற பொது தேர்தலில் சுயராஜ்ய கட்சி வெற்றி பெற்று மத்திய சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் - மோதிலால் நேரு
🇮🇳 வங்காள சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் - சித்தரஞ்சன் தாஸ்
🇮🇳 சித்தரஞ்சன் தாஸ் மறைவு - ஜூன் 1925
🇮🇳 ஒத்துழையாமை இயக்கத்தை தொடர்ந்து நடத்த வலியுறுத்தியவர்களுக்கு எவ்வாறு அழைக்கப்பட்டனர் - No Changers
🇮🇳 No Changers என்று அழைக்கப்பட்டவர்கள் - சர்தார் வல்லபாய் படேல், டாக்டர் ராஜேந்திர பிரசாத்
🇮🇳 ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தி விட்டு, சட்டசபை அவை நடவடிக்கைகளில் கலந்து கொண்டு இந்திய மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்த விரும்பியவர்கள் - Pro Changers
🇮🇳 Pro Changers என அழைக்கப்பட்டவர்கள் - சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு

🌶சைமன் குழு வருகை:-

🇮🇳 1919 ஏற்படுத்தப்பட்ட சட்டத்தை மறு ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட குழு - சைமன் குழு
🇮🇳 சைமன் குழு இந்தியா வருகை - 1927
🇮🇳 சைமன் குழுவில் இருந்த உறுப்பினர்கள் - 7
🇮🇳 சைமன் குழு தலைவர் - சர் ஜார்ஜ் சைமன்
🇮🇳 சைமன் குழுவில் இருந்த உறுப்பினர்கள் அனைவரும் - ஆங்கிலேயர்கள்
🇮🇳 சைமன் குழு இந்தியர்கள் புறக்கணிக்க காரணம் - அதில் இந்தியர் ஒருவர் கூட இல்லை
🇮🇳 சைமன் குழு பம்பாய் வந்தடைந்த ஆண்டு - 3 பிப்ரவரி 1928
🇮🇳 லாகூரில் லாலா லஜிபதி ராய் தலைமையில் எதிர்ப்பு நடைபெற்ற நாள் - 30 அக்டோபர் 1928
🇮🇳 சைமன் குழு போராட்டத்தில் தடியடி பட்டு இறந்தவர் - லாலா லஜபத் ராய்
🇮🇳 பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்பட்டவர் - லாலா லஜபத் ராய்
🇮🇳 லாலா லஜபத் ராய் தடியடி செய்தவர் - சான்ரசன்
🇮🇳 சைமன் குழு போராட்டத்தின் முக்கிய முழக்கம் - சைமனே திரும்பிப்போ (Simon, Go back)
🇮🇳 சைமன் குழு அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு - 1930
🇮🇳 சைமன் குழு முக்கிய குறைபாடு - இரட்டை ஆட்சி பற்றியது

🌶நேரு அறிக்கை:-

🇮🇳 இங்கிலாந்தின் அயலுறவுச் செயலாளர் - பிர்கன் ஹெட் பிரபு
🇮🇳 பிர்கன் ஹெட் பிரபு தூண்டுதல் உருவானது தான் - நேரு அறிக்கை
🇮🇳 அனைத்து கட்சி கூட்டம் கூடிய நாள் - 28 பிப்ரவரி 1928
🇮🇳 எதிர்கால இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒன்றை  வரைவதற்கு குழு ஒன்றை ஏற்படுத்தியவர் - மோதிலால் நேரு
🇮🇳 அந்த குழுவில் இருந்த உறுப்பினர்கள் எண்ணிக்கை - 8
🇮🇳 அந்த குழுவில் தலைவராக இருந்தவர் - மோதிலால் நேரு
🇮🇳 நேரு அறிக்கை சிறப்பு கூறுகள்:
1. நிலையான டொமினியன் அந்தஸ்து வழங்கப்படுதல்
2. மத்தியில் முழுப் பொறுப்பு வாய்ந்த அரசு
3. மாகாணகளுக்கு சுயாட்சி
4. மத்திய மாகாண அரசுகளுக்கிடையே தெளிவான அதிகாரப்பகிர்வு
5. மத்தியில் இரண்டு அவைகள் கொண்ட சட்டமன்றம்
🇮🇳 முஸ்லீம் லீக் தலைவர் முகம்மது அலி ஜின்னா அவர்கள் நேரு அறிக்கை முஸ்லிம் மக்களின் நலனுக்கு எதிரானதாக கருதினார்.
🌶 லாகூர் காங்கிரஸ் மாநாடு:-
🇮🇳 லாகூர் காங்கிரஸ் மாநாட்டின் தலைவராக இருந்தவர் - ஜவஹர்லால் நேரு
🇮🇳 லாகூர் காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற ஆண்டு - 1929
🇮🇳 லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் முக்கிய குறிக்கோள் - பூர்ண சுதந்திரம்
🇮🇳 இம்மாநாட்டில் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்ட இடம் - ராவி நதிக்கரையில்
🇮🇳 இம்மாநாட்டில் மூவர்ணக்கொடி ராவி நதிக்கரையில் ஏற்றப்பட்ட நாள் - 31 டிசம்பர் 1929
🇮🇳 இம்மாநாட்டின் முடிவில் மகாத்மா காந்தி தலைமையில் சட்டமறுப்பு இயக்கம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
🇮🇳 இந்திய சுதந்திர நாளாக அறிவிக்கப்பட்ட நாள் 26 ஜனவரி 1930

 🌶 சட்டமறுப்பு இயக்கம்:-

🇮🇳 சட்டமறுப்பு இயக்கம் வேறுபெயர் - உப்பு சத்தியாக்கிரகம் இயக்கம்
🇮🇳 காந்தியின் 11 அம்ச கோரிக்கை வலியுறுத்தி நடைபெற்ற இயக்கம் - சட்டமறுப்பு இயக்கம்
🇮🇳 சட்டமறுப்பு இயக்கத்தின் போது இந்திய கவர்னர் ஜெனரல் - லார்ட் இரவின் பிரபு
🇮🇳 சட்டமறுப்பு இயக்கம் போராட்டம் மேற்கொண்ட நாள் - 12 மார்ச் 1930
🇮🇳 சட்டமறுப்பு இயக்கம் தொடங்கப்பட்ட இடம் - சபர்மதி ஆசிரமம்
🇮🇳 காந்தியுடன் சென்ற ஆதரவாளர்கள் - 79
🇮🇳 சட்டமறுப்பு இயக்கத்தில் கலந்து கொண்ட பெண் ஆதரவாளர் - சரோஜினி நாயுடு
🇮🇳 சட்டமறுப்பு இயக்கம் நடைபெற்ற தூரம் - 241 மைல்கள் (400 கி.மீ.)
🇮🇳 சட்டமறுப்பு இயக்கம் முடிவுபெற்ற இடம் - தண்டி
🇮🇳 சட்டமறுப்பு இயக்கம் முடிவுபெற்ற நாள் - 6 ஏப்ரல் 1930
🇮🇳 தமிழகத்தில் உப்பு சத்தியாக்கிரகம் தலைமை ஏற்றி நடத்தியவர் - சி. ராஜகோபாலச்சாரி
🇮🇳 சி. ராஜகோபாலாச்சாரி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்ட இடம் - திருச்சியில் இருந்து வேதாரண்யம்
🇮🇳 கேரளாவில் உப்பு சத்தியாகிரகம் தலைமை ஏற்று நடத்தியவர் - கேளப்பன்
🇮🇳 கேளப்பன் உப்பு சத்தியாகிரகம் நடத்திய இடம் - கோழிக்கோட்டில் இருந்து பையனூர்
🇮🇳 வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் சட்டமறுப்பு இயக்கம் தலைமை ஏற்று நடத்தியவர் - கான் அப்துல் கபார்கான் (எல்லை காந்தி)

🌶 வட்டமேசை மாநாடுகள்:-

🇮🇳 வட்டமேசை மாநாடுகள் நடைபெற்ற ஆண்டுகள் - 1930, 1931, 1932
🇮🇳 வட்டமேசை மாநாடுகள் நடைபெற்ற இடம் - இலண்டன்
🇮🇳 முதல் வட்டமேசை மாநாடு நடைபெற்ற நாள் - 12.11.1930
🇮🇳 முதல் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் - காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகள்
🇮🇳 முதல் வட்டமேசை மாநாடு தோல்வியில் முடிந்தது.
🇮🇳 முதல் வட்டமேசை பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் - ராம்சே மெக்டொனால்டு
🇮🇳 இரண்டாம் வட்டமேசை மாநாடு நடைபெற்ற நாள் - 07.09.1931
🇮🇳 இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டவர் - காந்தி
🇮🇳 இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் செய்து கொண்ட ஒப்பந்தம் - காந்தி இர்வின்
🇮🇳 மூன்றாம் வட்டமேசை மாநாடு நடைபெற்ற நாள் - 17.11.1932
🇮🇳 மூன்று வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டவர் - டாக்டர் பி. ஆர்.அம்பேத்கார்
🇮🇳 மூன்றாவது வட்டமேசை மாநாட்டில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு தனி இடஒதுக்கீடு கோரிக்கை வைத்தவர் - டாக்டர் பி. ஆர்.அம்பேத்கார்
🇮🇳 தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு தனி இடொதுக்கீடு அறிவித்தவர் - ராம்சே மெக்டொனால்டு
🇮🇳 தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு தனி இடஒதுக்கீடு பெயர் - கம்யூனல் அவார்ட்
🌶 காந்தி இர்வின் ஒப்பந்தம்:-
🇮🇳 காந்தி இர்வின் ஒப்பந்தம் உருவாக உறுதுணையாக இருந்தவர் - ஸ்ரீதேஜ்பகதூர் சேப்ரூ மற்றும் டாக்டர். ஜெயகர்
🇮🇳 காந்தி இர்வின் ஒப்பந்தம் முடிவில் ஏற்பட்டது - காங்கிரஸ் ஒத்துழையாமை நிறுத்தியது
🌶 பூனா ஒப்பந்தம்:-
🇮🇳 கம்யூனல் அவார்ட் ராம்சே மெக்டொனால்டு அறிவித்த நாள் - 16 ஆகஸ்ட் 1932
🇮🇳 கம்யூனல் அவார்ட் முடிவில் யார்யார்க்கும் எல்லாம் தேர்தலில் தனி இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது - முஸ்லிம்கள், ஐரோப்பியர்கள், சீக்கியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள்
🇮🇳 தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீடு அளித்ததை எதிர்த்து காந்தி மேற்கொண்ட முடிவு - சாகும் வரை உண்ணாவிரதம்
🇮🇳 காந்தி சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட இடம் - ஏர்வாடா சிறை
🇮🇳 இதனை முடிவுக்கு கொண்டு வர அம்பேத்கார் காந்தி யை சந்தித்து ஒப்பந்தம் செய்து கொண்டனர்
🇮🇳 காந்தி அம்பேத்கார் மேற்கொண்ட ஒப்பந்தம் - பூனா ஒப்பந்தம்

🌶 ஆகஸ்ட் நன்கொடை:-

🇮🇳 ஆகஸ்ட் நன்கொடை வழங்கியவர் - லின்லித்கொ பிரபு
🇮🇳 லின்லித்கொ பிரபு ஆகஸ்ட் நன்கொடை அளித்தார் நாள் - 8 ஆகஸ்ட் 1940
🇮🇳 ஆகஸ்ட் நன்கொடை மூலம் இந்தியர்களுக்கு வழங்கப் பட்டது - டொமினியன் அந்தஸ்து
🇮🇳 இந்தியர்களை இரண்டாம் உலகப் போரில் ஈடுபடுத்த ஆங்கிலேயர் அளித்தது தான் - ஆகஸ்ட் நன்கொடை

🌶 தனிநபர் சத்தியாகிரகம்:-

🇮🇳 1940 காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற இடம் - ராம்ஹார்
🇮🇳 1940 காங்கிரஸ் மாநாட்டில் தலைவர் - மௌலானா அபுல்கலாம் ஹசத்
🇮🇳 தனிநபர் சத்தியாகிரகம் நடத்தியவர் - ஆச்சாரியார் வினோ பாபாவே
🌶 கிரிப்ஸ் தூதுக்குழு:-
🇮🇳 கிரிப்ஸ் தூதுக்குழு இந்தியா வந்த ஆண்டு - 1942
🇮🇳 கிரிப்ஸ் தூதுக்குழு தலைவராக இருந்தவர் - சர் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ்
🇮🇳 கிரிப்ஸ் தூதுக்குழு காந்தி எவ்வாறு கூறினார் - திவால் ஆகிக்கொண்டு இருக்கும் வங்கியின் பின் தேதியிட்ட காசோலை

🌶 வெள்ளையனே வெளியேறு இயக்கம்:-

🇮🇳 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் முக்கிய காரணம் - கிரிப்ஸ் தூதுக்குழு பேச்சுவார்த்தை தோல்வி
🇮🇳 வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடத்தியவர் - காந்தி
🇮🇳 வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்ற ஆண்டு - 8 ஆகஸ்ட் 1942
🇮🇳 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் தீர்மானம் ஏற்றப்பட்ட இடம் - பம்பாய்
🇮🇳 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் தீர்மானத்தின் காந்தியின் முக்கிய முழக்கம் - செய் அல்லது செத்துமடி
🇮🇳 காந்தியை அமைக்கப்பட்ட சிறை - பூனா
🇮🇳 ஜவஹர்லால் நேரு, அபுல் கலாம் ஆசாத் போன்றவர்களை அமைக்கப்பட்ட சிறை - அகமதுநகர் கோட்டைகோட்டை

🌶 இந்திய தேசிய இராணுவம்:-

🇮🇳 நேதாஜி காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஆண்டு - 1938 (ஹரிபூரா), 1939 (திரிபூரா)
🇮🇳 நேதாஜி வீட்டுகாவலில் இருந்து எந்த மாறுவேடத்தில் தப்பிசென்றார் - ஆப்கானியர் போல்
🇮🇳 நேதாஜி வீட்டுகாவலில் இருந்து தப்பி ஓடிய இடம் - ஜெர்மனி
🇮🇳 ஜெர்மனியில் இருந்த நேதாஜி எங்கு சென்றார் - ஜப்பான் (1942)
🇮🇳 ஜப்பானில் இருந்து எங்கு சென்றார் - சிங்கப்பூர் (2 ஜூலை 1943)
🇮🇳 சிங்கப்பூரில் இந்திய விடுதலை கழக தலைவராக இருந்தவர் - இராஷ்பிகாரி போஸ்
🇮🇳 இந்திய விடுதலை கழக இந்திய தேசிய இரணுவமாக இராஷ்பிகாரி போஸ் யாரிடம் ஒப்படைத்தார் - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
🇮🇳 இந்திய தேசிய இராணுவம் எவ்வாறு அழைக்கப்பட்டது - ஆசாத் இந்து ஃபவுஜ்
🇮🇳 இந்திய தேசிய இராணுவத்தின் தளபதியாக சுபாஷ் சந்திரபோஸ் பொறுப்பெற்றதற்காக கிடைத்த பட்டம் - நேதாஜி
🇮🇳 நேதாஜி என்பதன் பொருள் - தலைவர்
🇮🇳 இந்திய தேசிய இராணுவத்தை பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதில் ராணி லட்சுமிபாய் பிரிவின் தலைவர் - கேப்பன் லஷ்மி (தமிழ்நாடு)
🇮🇳 நேதாஜி யின் முக்கிய முழக்கங்கள் - ஜெய்ஹிந்த், டெல்லி சலோ, இரத்தத்தை கொடுங்கள் சுதந்திரத்தை கொடுக்கிறேன்
🇮🇳 முதன்முதலில் காந்தியை தேசத் தந்தை அழைத்தவர் - நேதாஜி
🇮🇳 இந்தியா தேசிய ராணுவம் இந்தியாவில் முதலில் கைப்பற்றிய இடம் - மௌடாக் (மே 1944)
🇮🇳 அந்தமான் நிக்கோபார் தீவுகள் நேதாஜிக்கு வழங்கிய நாடு - ஜப்பான்
🇮🇳 அந்தமான் எவ்வாறு பெயர் மாற்றப்பட்டது - சாஹட்
🇮🇳 நிக்கோபார் எவ்வாறு பெயர் மாற்றப்பட்டது - சுவராஜ்
🇮🇳 நேதாஜி எவ்வாறு இறந்ததாக நம்பப்படுகிறது - பாங்காங்க்கிலிருந்து டோக்கியோ செல்லும் வழியில் விமான விபத்தில் 18 ஆகஸ்ட் 1945
🌶 அமைச்சரவை தூது குழு:-
🇮🇳 அமைச்சரவை தூது குழு அமைந்த இங்கிலாந்து பிரதமர் - அட்லி
🇮🇳 அமைச்சரவை தூது குழு  வேறுபெயர் - கேபினட் தூதுக்குழு
🇮🇳 அமைச்சரவை தூது குழு இருந்தவர்கள் - லார்ட் பெத்திக் லாரன்ஸ் (தலைவர்), சர். ஸ்டாபோர்டு கிரிப்ஸ், ஏ.வி.அலெக்சாண்டர்
🇮🇳 அரசியலமைப்பு குழுவிற்கான தேர்தல் நடைபெற்ற ஆண்டு - ஜூலை 1946
🇮🇳 இத்தேர்தலில் 214 பொது தொகுதியில் 205 காங்கிரஸ் வெற்றி 78 ல் 73 முஸ்லிம் லீக் வெற்றி
🇮🇳 இடைகால அரசாங்கத்தின் பிரதமர் பதவி வகித்தவர் - ஜவஹர்லால் நேரு (2 செப்டம்பர் 1946)
🌶 மௌவுண்ட்பேட்டன் திட்டம்:-
🇮🇳 மௌவுண்ட்பேட்டன் இந்திய வைஸ்ராயாக பதிவியேற்ற ஆண்டு - 24 மார்ச் 1947
🇮🇳 மௌவுண்ட்பேட்டன் திட்டம் கொண்டு வரபட்ட ஆண்டு - 3 ஜூன் 1947
🇮🇳 ஆங்கில அரசின் கடைசி அரசப்பிரதிநிதி (வைசிராய்) - மௌவுண்ட்பேட்டன்
🇮🇳 மௌவுண்ட்பேட்டன் திட்டம் அல்லது வேறு பெயர் - ஜூன் 3 திட்டம்
🇮🇳 மௌவுண்ட்பேட்டன் திட்டத்தின் முடிவு - இந்திய, இந்தியன் யூனியன் எனவும் பாகிஸ்தான் யூனியன் எனவும் பிரிக்கப்பட்டது, இந்திய சுதேசிய அரசுகள் ஏதாவது ஒன்றில் சேர்ந்து கொள்ளவோ அல்லது சுதந்திரத்துடன் இருக்கவோ செய்யலாம் என அறிவிக்கப்பட்டது
🇮🇳 காந்தியை சுட்டு கொண்ட ஆண்டு - 30 ஜனவரி 1948
🇮🇳 காந்தியை சுட்டு கொன்றவர் - நாதுராம் விநாயக் கோட்சே

சமுதாய கலாச்சார இயக்கம் - தொடங்கியவர்:-

⭕ ஆத்மிய சபா - ராஜாராம் மோகன் ராய்
⭕ பிரம்ம சமாஜம் - ராஜாராம் மோகன் ராய்
⭕ தர்மசபா - ராதாகான் தெப்பூ
⭕ தத்துவபோதின சபா - தேவேந்திரநாத் தாகூர்
⭕ பிராத்தனா சமாஜ் - ஆத்மராம் பாண்டுரங்கன்
⭕ ஆரிய சமாஜம் - சுவாமி தயானந்தர் சரஸ்வதி
⭕ தியாசோஃபிகல் சொசைட்டி - பிளவாத்ஸ்கி, ஆல்காட்
⭕ சாதரான பிரம்ம சமாஜம் - ஆனந்த் மோகன் போஸ்
⭕ டெக்கான் கல்வி கழகம் - ஜி.ஜி. அகார்கர்
⭕ தேவசமாஜ் - ஜி. அக்னிஹோத்ரி
⭕ ராமகிருஷ்ணா மிஷன் - சுவாமி விவேகானந்தர்

ஆங்கில ஆட்சியின் கல்வி வளர்ச்சி மற்றும் இந்தியா கல்வி வளர்ச்சி பற்றிய தகவல்கள்:-

🌈 1813 - பட்டயச் சட்டம் (கல்விக்காக ஒரு இலட்சம் ஒதுக்கீடு செய்தது)
🌈  1833 - லார்ட் மெக்காலே அறிக்கை
🌈 1854 - சார்லஸ் உட்ஸ் அறிக்கை (இந்திய கல்வியில் மகாசாசணம்)
🌈 1857 - கொல்கத்தா, பம்பாய்,  சென்னை பல்கலைகழகம் அமைத்தல்
🌈 1883 - ஹன்டர் கல்வி குழு
🌈 1902 - ராலே கமிஷன்
🌈 1904 - பல்கலைக்கழக சட்டம்
🌈 1917-1919 - சேட்லர் குழு
🌈 1929 - ஹார்ட்க் கமிஷன்
🌈 1937 - வார்தா கல்வி முறை
🌈 1944 - சார்ஜண்ட் கமிஷன்
🌈 1948 - இராதாகிருஷ்ணன் கமிஷன்
🌈 1956 - பல்கலைக்கழக மாண்ய குழு
🌈 1964 - கோத்தாரி கமிஷன் அறிக்கை

 இந்திய தலைவர்கள் எழுதிய நூல்கள்:-

📖 Hindu swaraj - மகாத்மா காந்தி
📖 Discovery of India - ஜவஹர்லால் நேரு
📖 Indian Struggle - சுபாஷ் சந்திரபோஸ்
📖 India divided - இராஜேந்திர பிரசாத்
📖 Unhappy India - லாலா லஜபதி ராய்
📖 Wake up India - அன்னி பெசண்ட்
📖 India in Transition - எம்.என்.ராய்
📖 India wins Freedom - மௌலானா அபுல் கலாம் ஆஸாத்
📖 War of Indian Independence - வி.டி. சாவர்க்கர்
📖 An Hindu view of Life - டாக்டர் ராதாகிருஷ்ணன்
📖 My Truth - இந்திரா காந்தி
📖 India 2020 - டாக்டர். ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்
📖 Ignited Minds - டாக்டர். ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்
📖 Broking Wings - சரோஜினி நாயுடு
📖 Life divine - அரவிந்த கோஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக