நுகர்வோர் உரிமைகள் ,
மனிதனுடைய உரிமைகள் பல்வகைப்பட்டன.
ஒரு மனிதன் மனிதனாக வாழ அத்தியாவசி யமான அனைத்தையும் மனித உரிமைகள் எனப் பொதுவாகக் கூறுகின்றோம். மனிதனுடையஅடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறையுள் என்பன அத்தி யாவசியமான உரிமைகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இவ்வகையில், தமது அடிப்படை வாழ்க்கைக்குரிய பொருட் களையும், சேவைகளையும் நுகர்வோருடைய உரிமைகளைத் தெரிந்து கொள்வது அவசியமாகும்.
நுகர்வோர் என்பவர்?
பொது வழக்கிலே நுகர்வோர் என்பவர்,பொருட்களையும் சேவைகளையும் விலை கொடுத்துப் பெற்றுக் கொள்பவர் எனக் குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு பொருட்களையும்சேவைகளையும் பெற்றுக் கொள்வோர் தமது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்குரிய கடப் பாட்டையும் உடையவர்களாவர்.
நுகர்வோர் உரிமைகள்
கைத்தொழில் வளர்ச்சி, தொழில்நுட்ப அபிவிருத்தி புதிய கண்டுபிடிப்புக்கள் என்பன புதிய பொருட்களையும், சேவை கைளையும் நாளாந்தம் சந்தையில் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றது. உலகமயமாக்கலின் விளைவாக நாட்டிற்கு நாடு போட்டி நிலவுகின்றது.
ஒவ்வொரு நாடும் உலகில் தமது இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி பல வகையான நவீன உபகரணங்கள்,வாகனங்கள் என எண்ணிலடங்காத பொருட்களையும், சேவைகளையும்அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றது.
இது நுகர்வோரை நோக்கிய ஒரு பயணமாக இருக்கின்றது. நுகர்வோரைக் கவரக்கூடிய வகையில், அவர்களுடைய தேவைகள்,அந்தஸ்துக்களை அறிந்து இவ்வாறான வியாபார நட வடிக்கைகள் நடைபெற்றுக் கொண் டிருக்கின்றன.
பொருட்களையும் சேவைகளையும்விலைக்கொடுத்து வாங்கும் நாம் அவை தரம் வாய்ந்தவையாகும், நீடித்து உழைக்கக்கூடியதாகவும்,தமது தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியதாகவும்குறைபாடின்றி இருக்கவேண்டுமென எதிர்பார்ப்பதிலும் எவ்வித தவறும் இல்லை.
நுகர்வோர் உரிமைகளை ஏன் சட்டங்கள் மூலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கேள்வி எம்மிடையே எழக்கூடும். சட்டம் சமூகத்தின் நடவடிக்கைகளை ஒழுங்கமைக்கும் ஒரு கருவி எனவும் மக்கள் இந்த நடவடிக்கைகளால் பாதிப்படையும் போது பரிகாரம் வழங்கும் ஒரு ஆயுதம் எனவும் பார்த்தோம்.
நுகர்வோருடைய பாதுகாப்புகள் தொடர்பாகப் பார்க்கின்ற போது உலகளாவிய ரீதியில் நுகர்வோர் உரிமைகள் எல்லா நாடுகளிலும் கவனமெடுக்கப்பட்டு விருத்தி செய்யப்பட்டு வருகின்ற ஒரு துறையாகும்.
போட்டி ரீதியான வியாபாரச் சந்தையில் குறைபாடுடைய பொருட்கள், சேவைகள் நியாயமற்ற வியாபார நடைமுறைகள், கறுப்பச் சந்தை என்பன தோன்றியுள்ள வேளையில் நுகர்வோர் தம்முடையகடப்பாடுகளையும் உரிமைகளையும் பற்றித் தெரிந்திருப்பது அவசியமாகும்.
அதேவேளை, அவர்களைப் பாதுகாப்பதற்கு ரிய வழிவகைகளை மேற்கொள்வது அரசினுடைய கடப்பாடாகவும் இருந்து வருகின்றது.
சர்வதேச நுகர்வோர் அமைப் பினால் பின்வருவன நுகர்வோர் உரிமைகளாக வரைவிலக் கணப்படுத்தப்பட்டுள்ளன:
1. அடிப்படைத் தேவைகளைத் திருப்தியாகப் பெற்றுக் கொள்ளும் உரிமை: அனைத்துநுகர்வோரும், உணவு, குடிநீர், உடை, வீடு, சுகாதார வசதிகள் என்பனவற்றைப் பெற்றுக் கொள்ளும் உரிமை இதனைச் சற்று விரிவாக எடுத்துப் பார்க்கின்ற போது உணவு- சமைத்த உணவாகவோ அல்லது டின்களில், போத்தல்களில் அடைக்கப்பட்ட உணவு மற்றும் சமைப்பதற்குத் தயாராக இருக்கும் அரிசி, காய்கறி, ஏனைய பொருட்களை நாம் விலை கொடுத்து வாங்கும் போது அவை சுத்தமானதாகவும் உடலுக் குக் கேடு விளைவிக்காத வகையிலும் இருக்க வேண்டும்.
ஹோட்டலில் சரியான முறையில் சுத்தமாக சமைக்காத உணவுகளை பெற்றுக் கொள்ளும் நாம் அதன் விளை வாக பல நோய்களுக்கு ஆளாகின்றோம். இதேபோன்று சுத்தமான குடிநீர் அவ சியமாகும்.
மேலும் ஒவ்வொரு வீட்டுக்கும் நீர் வசதியும்,முறையாக அமைக்கப்பட்ட மலசல கூடம் என்பன அத்தியாவசிய மானதாகும்.
இன்னொரு முக்கிய விடயத்தைக் குறிப்பிடும் நாம் பொது மலசலகூட வசதிகளை ஆங்காங்கே நகர்ப்புறங்களில் அமைக்கப்பட்டிருப்பதைக் காண்கின்றோம். அவற்றுக்குக் கட்டணங்கள் அறவிடப்படுகின்றன. எனினும், அவற்றைச் சரியாகசுகாதாரமான முறையில் நடத்தி நிர்வகிக்கத் தவறுகின்ற போது நுகர்வோராகிய நாம் இந்தச் சேவையில் திருப்தியடைய முடியாது.
இன்னுமொரு விடயமாக பொதுவைத்தியசாலையில் மக்கள் செளக்கிய வசதிகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டுசெல்கின்ற போது அங்கு முறையாக சேவைகள் கிடைக்கின்ற போது மனிதனுடைய அடிப்படைத் தேவைகளில் அவனால் திருப்தியடைய முடியாத நிலை தோன்றும். இங்கு நுகர்வோர் உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
2. நுகர்வோர் தமது உரிமைகள் பற்றி அறிந்து கொள்ளும் உரிமை: மனித உரிமைகளில் தகவல் பெற்றுக் கொள் வதற்கான உரிமை முக்கிய இடம் பெறுகின்றது. இந்தியா உட்பட பல நாடுகளில்தகவல் பெறுவதற்கான உரிமைகள் சட்டமாக்கப்பட்டுள்ளன.
நுகர்வோர் தொடர்பாக இவ்வுரிமையைத் தொடர்புபடுத்திப் பார்க்கும் போது ஏற்கனவேகுறிப்பிட்டது போல சந்தையில் போலியான மக்களை ஏமாற்றக் கூடிய வகையில் பல பொருட்கள்,சேவைகள் கிடைக்கின்றன. எனவே,சரியானவற்றைத் தெரிந்து கொள்வதற்கான உரிமை நுகர்வோரிடம் இருக்கின்றது. நுகர்வோரை கவரக்கூடிய வகையில் பல விதமான விளம்பரங்கள்,துண்டுப் பிரசுரங்கள், பிழையான கூற்றுக்கள் என்பன வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
எனவே, நுகர்வோர் உரிமை தொடர்பான விழிப்புணர்வை ஊட்டல் அவசியமாகும். இதற்காகபாடசாலைகள், பல்கலைக் கழகங்கள் போன்ற கல்வி நிறுவனங்களும் ஏனைய அரச சார்பற்ற சமூக நிறுவனங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி போன்ற சாதனங்கள் ஊடாக மக்கள் தம்முடையஉரிமைகள் பற்றி அறிந்துகொள்ள ஆவண செய்ய வேண்டிய கடப்பாடு எம்மிடத்தில் உண்டு.
3. பொருட்களைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமை: நியாயமான விலையில் தமக்குத் தேவையான பொருட்களையும் இலகுவாகச் சென்று பெற்றுக்கொள்ளக்கூடிய உரிமை உண்டு.
4. பாதுகாப்பான பொருட்களை சேவைகளைப்பெறும் உரிமை: விலைகொடுத்து வாங்கும் பொருட்கள் நல்ல நிலையில் உதாரணமாகபழுதடைந்த பொருட்கள், நச்சுத்தன்மையடைந்த பொருட்களை பெறாது உடலுக்கு ஏற்றபொருட்களைப் பெறும் உரிமை நுகர்வோருக்கு உண்டு.
5. பாதிப்படைந்த நுகர்வோருடைய குறைகளைக்கூறி பரிகாரம் பெறக்கூடிய உரிமை: நுகர்வோர் நலன்கருதி பொருட்களை வாங்கும் போது நுகர்வோர் தமக்கு ஏற்பட்ட அநீதியைஉடனடியாக அவ் விடத்திலேயே கடை உரிமையாளரிடம் கூறி, அதற்குரிய பரிகாரம் பெறஉரித்துடையவர். அவ்வாறு அல்லாத போது வேறு நிறுவன ரீதியான பரி காரங்களைப் பெற்றுக் கொள்ளும் உரிமையுண்டு.
6. நுகர்வோர் உரிமைக்கான கல்வியைப் பெறும் உரிமை: நுகர்வோர் உரிமைகள் தொடர்பாக அடிப்படை விளக்கத்தைப் பெற்றுக் கொள்ளும் உரிமை நுகர்வோருக்கு உண்டு.
இலங்கையில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டம்
ஏற்கனவே இருந்து வந்த 1979ம் ஆண்டின் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்டதிற்குப் பதிலாக இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் பொருட்கள் என்பது, உணவு, குடி பானம், மருந்துப் பொருட்கள்,எண்ணெய் (பெற்றோல், டீசல்) போன்றவையாகும். சேவை என்பது, ‘வங்கி, காப்புறுதி, நிதி மற்றும் விநோத சேவைகள் உள் ளடக்குகின்றது. மேலும் இச்சேவை என்பதன் கீழ் தொழில்சார் ரீதியான சேவைகளான வைத்திய சேவை, சட்டத் தரணிகள்,கணக்காய்வாளர், கணக்காளர், பொறியியலாளர்,சட்ட மற்றும் நில அளவையாளர் போன்றவையும்உள்ளடக்கப்படுகின்றது.
எனவே மேலே கூறப்பட்ட பொருட்கள் அல்லதுசேவைகளை பணம் கொடுத்துப் பெறும் நாம் அப்பொருட்கள் அல்லது சேவைகளின் குறைபாடு காரணமாக பாதிப்படையும் போது இச்சட்டத்தின் கீழுள்ள பரிகாரங்களைப் பெறலாம்.
(அ) நுகர்வோரின் கடப்பாடுகள்
நுகர்வோருடைய கடப்பாடுகள் எமது உரிமைகளை பெற்றுக் கொள்ள கடப்பாடுகள் அல்லது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றுதல் வேண்டும். அவ்வகையில் முதலாவதாக நாம் அனைவரும் கடைகள், சந்தை, சிறப்பு அங்காடி போன்ற இடங் களில் பொருட்களை வாங்கச்செல்லும் போது அப்பொருட்களுக்குரிய ஆகக்கூடிய சில்லறை விலையைப் பார்ப்பது அத்தி யாவசியமான கடமையாகும்.
ஆகக்கூடிய விலையைவிட அதிகமாகக் குறிப்பிடப் பட்டிருந்தால் போனால் போகட்டும் என்று அசட்டையாக நாம் இருக்கக் கூடாது.
கடை உரிமையாளர் அல்லது விற்பனை முகவரிடம் அவ்விலையைப் பற்றி விசாரிக்க வேண்டும். இது நுகர்வோர் ஒவ்வொருவருடைய பிரதான கடமையாகும். சில வேளைகளில் வேலைப்பழு காரணமாக அவசரமாக பொருட்களை வாங்கச் செல் லும் போது கால நேரத்தை வீணடிப்பது அவசியமற்றது எனக் கருதி நம்மில் சிலர் எவ்வளவு விலையானாலும் கொடுத்துவிட்டு வருவது வழக்கமாகும்.
இங்கு இரண்டு விடயங்கள் அவதானிக்கப்பட வேண்டும். முதலாவது நமது கடமையைச் சரியாகச் செய்யத் தவறுகிறோம், இரண்டாவது வியாபாரிகள் மோசடியான செயல்களை ஈடுபட மறைமுகமாகஊக்குவிக்கின்றோம்.
(ஆ) காலாவதியாகும் திகதியை அவதானித்தல்
பொருட்களை வாங்கும் போது உற்பத்தி செய்யப்பட்ட திகதியையும், காலாவதியாகும் திகதியையும் அவதானிப்பது அசியமாகும். சில வியாபாரிகள் காலாவதியான பொரு ட்களை விற்று மக்களை ஏமாற்றும் நட டிவக்கையில் ஈடுபடுவர். வீட்டுக்குஎடுத்துச் சென்ற பின்பு திகதியை பார்ப்பதில் பிர§¡யசனமில்லை. பொருட்களைவாங்குமிடத்திலேயே அதனைக் கவனித்து அதன் விளைவாக ஏற்படக்கூடிய அபாயங்களைத்தவிர்த்துக் கொள்வது நல்லது.
(இ) பொருட்களின் உத்தரவாதத்தை அவதானித்தல்
சில பொருட்களை வாங்கும் போது இரண்டு வருடம் அல்லது ஒரு வருட கால உத்தரவாதம் வழங்கப்படும். அக்காலப்பகுதியில் பொருட்களில் ஏற்படக்கூடியபிரச்சினைகளைத் திருத்தி தரக்கூடிய வாய்ப்புக்களை வியாபார நிலையங்கள் வழங்கும்.
உதாரணமாக தையல் இயந்திரம், தொலைக்காட்சி,வானொலி போன்ற இலத்திரனியல் சாதனங்களை வாங்கும் போது குறிப்பிட்ட காலத்திற்கு உத்தரவாதம் வழங்கப்படும். அதனை உரிய முறையில் பார்த்து வாங்குவது நுகர்வோரின்கடமையாகும்.
(ஈ) விலைப்பட்டியல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதா என்பதை அவதானித்தல்
ஒவ்வொரு வியாபார நிலையமும் தமது வியாபார நிலையத்தில் பொருட்களின் விலைப்பட்டியலைக் காட்சிக்கு வைத்தல் சட்டத்தால் அத்தியாவசியப்படுத்தப்பட்டுள்ள விடயமாகும். எனவே, கடைகளில் விலைப்பட்டியல் இல்லாத போது அதனைப் பற்றிக் கேள்வி கேட்க வேண்டிய கடப்பாடு நுகர்வோருக்கு இருக்கின்ற அதேவேளை, அது உரிமையும் ஒன்றாகும். கடை உரிமையாளர் அல்லது விற்பனைப் பிரதிநிதி அதற்குரிய விளக்கத்தை அளிக்கக் கடமைப்பட்டுள்ளார்.
(உ) நுகர்வோர் தமக்கு ஏற்படும் அநீதிகளை முறையிடுதல்
மேலே உள்ள கடமைகளை நிறைவேற்றும் அதேசமயம், உடடினயாக கடை உரிமையா ளரால்அல்லது விற்பனைப் பிரதிநிதியால் சரியான நியாயமான பரிகாரம் ஒன்று எட்ட முடியாத போது நுகர்வோர் தமக்கு இழப்புக்களை உரிய இடத்தில் முறையிடுவது அவசியமாகும். இதற்குரிய நிறுவன ரீதியான பரிகாரங்களைப் பின்பு விரிவாகப்பார்ப்போம்.
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் பிரதான இலக்குகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
(அ) நுகர்வோரின் வாழ்க்கைக்கு உகந்ததல்லாத பொருட்கள் சேவைகளை சந்தைப்படுத்துவதில் இருந்து தடை செய்தல்.
(ஆ) நியாயமற்ற வியாபார நடைமுறைகளை வியாபாரிகள் அமுல்படுத்தி அதன் மூலம் நுகர்வோர் அடையக்கூடிய தீமைகளை தடை செய்தல்.
(இ) தமக்குரிய இயலுமான விலையைக் கொடுத்து சந்தையிலிருந்து பொருட்கள் சேவைகைளைப் பெற்றுக் கொள்ள வழி வகை செய்தல். சந்தையில் தமது வாழ்க் கைக்குத் தேவையான பல பொருட்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விலைகளில் காணப்படுகின்றன.
எல்லோரா லும் அதிக விலை கொடுத்து பொருட்கள்சேவைகளைப் பெற்றுக் கொள்ள இயலாது. அதற்குரிய காரணம் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளேயாகும். எனவே, உயிர் வாழ் வதற்கு அத்தியாவசியமான உணவுப் பொருட்களையும் வாழ்க்கையை மேம் படுத்திக் கொள்ளத் தேவையான ஏனைய சேவைகளையும் பெற்றுக் கொள்வதற்கு ஆவண செய்ய வேண்டியது அரசின் கடப்பாடு என்ற வகையில் நுகர்வோர் விவகார அதிகார சபை இந்த இலக்கை எட்ட முயற்சி எடுத்து வருகின்றது.
(ஈ) தமது கடமைகளை, இலக்குகளை சரிவரச் செய்தலும், சில வேளைகளில் வியாபாரிகள் சட்டத்தை மீறி, சட்டத்திற்கு முரணாக நியாயமற்ற பொருட்களை விற் பனை செய்தல், அத்தியாவசியப் பொருட் களைப் பதுக்கி வைத்தல், போன்றவற்றின்மூலம் நுகர்வோர் சுரண்டப்படுகின்ற போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நுகர்வோர் விவகார சபை பரிகாரம் பெற்றுத்தரும் இலக்கையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
(உ) போட்டி ரீதியான சந்தையை ஊக்குவித்தல்.
(ஊ) நுகர்வோர் கல்வியூட்டல்
நுகர்வோர் விவகார அதிகார சபை கட்டமைப்பு
1. நுகர்வோர் விவகார அதிகார சபை
2. நுகர்வோர் விவகார மேன்முறையீட்டு கவுன்சில்
நுகர்வோரின் முறைப்பாடுகள்
நுகர்வோர் தாம் விலை கொடுத்து வாங்கிய பொருட்கள் அல்லது சேவை களுடைய உற்பத்தி தரம், விநியோகம் செய்யும் முறைகள், பொருட்களை பொதி செய்தல் முறை, பொருட்களின் பக்கட்டுகளில் உற்பத்தி செய்யப்பட்ட திகதி, காலாவதி யாகும்திகதிகளை குறிப்பிடாமை, நிறை குறைந்த பொருட்களை விற்பனை செய் தல் என்பனதொடர்பில் நுகர்வோர் விவகார சபைக்கு முறைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். பின்வரும் முகவரிக்கு முறைப்பாட்டை அனுப்பி வைத்தல் வேண்டும்.
இயக்குநர் நுகர்வோர் விவகார சபை
இல. 27, வொக்ஷோல் வீதி,கொழும்பு 2
முறைப்பாட்டை மேற்கொள்ளும் போது யாருக்கு எதிராக செய்யப்படுகின் றதோ உதாரணம், ஒரு கடையெனின் அந்தக் கடையினுடைய பெயர்,விலாசம் மற்றும் தமக்கு ஏற்பட்ட பாதிப்பு என்பனவற்றைச் சரிவரக் குறிப்பிட வேண்டியது அவசிய மாகும். மேலும் முறைப்பாட்டை மேற்கொள்பவர் முழு விபரங்களையும் தெளிவாக அனுப்பி வைத்தல் வேண்டும்.
நுகர்வோருடைய இலகுவான அணுகல் கருதி நுகரல்வோர் அதிகார சபை ஒவ்வோர் மாவட்டத்திலும் மாவட்ட காரியாலயங்களை தாபித்துள்ளது.
(District Office) கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்திற்கு வரும் சிரமத்தைத் தவிர்த்து இந்த மாவட்ட அலுவலகங்களில் தமது முறைப்பாடுகளைப் பதிவு செய்யலாம். இங்கு கடமையாற்றும் அலுவலர்‘மாவட்ட குறைகேள் அதிகாரி’ என அழைக்கப்படுவர்.
ஒவ்வொரு மாவட்ட அலுவலகமும் மூன்று அலுவலர்களைக் கொண்டுள்ளது. இவர்கள் மாவட்ட அலுவலர்களுக்கு முறைப்பாட்டை சமரசம் செய்துவைப்பவர்களாக தொழிற்படுகின்றனர். முறைப்பாட்டாளரும், வியாபாரி அல்லது யாருக்கு எதிராக முறைப்பாடு செய் யப்பட்டதோ அவரும்,தமது பிரச்சினையை சுமுகமாக அவ்விடத்திலேயே தீர்த்துக் கொள்ள முடியும்.
நுகர்வோர் விவகார சபைக்கு முறைப்பாடாக அன்றி தமது அறிவுக்கு எட்டும் வகையில் ஏதோ ஒருஇடத்தில் நுகர்வோர் அதிகார சபைச் சட்டம் மீறப்படுகின்றது என அறிந்து கொள்ளும் போது விசாரணை மேற்கொள்ளப்படலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக