சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாள், ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா?
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 5ம் தேதி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த தினம், ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
1962ம் ஆண்டு, நாட்டின் ஜனாதிபதியாக சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பதவி வகித்தபோதுதான், முதல் முறையாக நாட்டில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்ட ஆரம்பித்தது.
1882ம் ஆண்டு அப்போதைய ஆந்திர மாநிலத்தின் திருத்தணியில் பிறந்தவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். தெலுங்குதான் இவர் தாய் மொழியாகும். இவரது தந்தை, சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை பூஜாரியாக்க வேண்டும் என்று விரும்பினார். ஆநால், சர்வபள்ளி ராதாகிருஷ்ணனோ, திருப்பதி, வேலூர் நகரங்களில் பள்ளிப் படிப்பை முடித்து, சென்னையிலுள்ள கிறிஸ்தவ கல்லூரியில் தத்துவவியல் முடித்தார்.
பேராசிரியராக பணி
தத்துவவியலில் மாஸ்டர் டிகிரி வாங்கிய சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், 'ரவிந்திரநாத் தாகூரின் தத்துவம்' என்ற பெயரில் 1917ம் ஆண்டு புத்தகம் வெளியிட்டார். சென்னை பிரசிடென்சி கல்லூரி மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணியாற்றினார். அந்த காலகட்டங்களில், மாணவர்களால் மிகவும் மதிக்கப்பட்டு அன்பு செலுத்தப்பட்டார். மிகவும் புத்திசாலியான பேராசிரியர் என மாணவர்களால் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் புகழப்பட்டார்.
பல்கலைக்கழகம்
ஆக்போர்டில் உரை
உயரிய விருது
பாரத ரத்னா
1975ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் மறைந்தார். 1984ம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டது.
பின்னணி
ஏன் தெரியுமா
சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் கற்பிக்கும் திறமை, மாணவர்கள் அவர் மீது கொண்ட அன்பு போன்றவை காரணமாக ஆசிரியர்களில் இவர் ஒரு உதாரண புருஷனாக விளங்குகிறார். எனவேதான், இவரது பிறந்த நாள், இந்தியாவில், ஆசிரியர் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக