தமிழகத்தில் முதன் முறையாக சேலத்தில் கண்டுபிடிப்பு: ஒளி ஊடுருவும் இறகுகள் கொண்ட வண்ணத்துப்பூச்சி
தமிழகத்தில் முதன்முறையாக ஒளி ஊடுருவும் இறகுகள் கொண்ட வண்ணத்துப்பூச்சி சேலத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
சேலம் இயற்கை கழகம் அமைப் பைச் சேர்ந்த முருகேசன், இளவச ரன் மற்றும் குழுவினர் ஏற்காடு மலையை ஒட்டியுள்ள குரும்பப் பட்டி உயிரியல் பூங்கா அருகே உயிரினங்களை கண்டறியும் ஆய்வுக்குச் சென்றபோது, அரிதான வண்ணத்துப்பூச்சிகள் இருந்ததைக் கண்டறிந்தனர்.
இதுகுறித்து சேலம் இயற்கை கழகம் நிர்வாகிகள் கோகுல் மற் றும் முருகேசன் ஆகியோர் கூறிய தாவது: வண்ணத்துப்பூச்சிகளில் ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட இறகுகளைக் கொண்ட அரிய வகைகள் உள்ளன. அவற்றில், ‘இண்டியன் பைரட்’ எனப்படும் ‘டாருகஸ் இண்டிகா’ (Indian Pierrot - Tarucus Indica) என்ற மிகவும் அரிதான வண்ணத்துப்பூச்சி குரும் பப்பட்டி உயிரியல் பூங்காவை அடுத்துள்ள மலையடிவாரத்தில் இருந்ததைக் கண்டோம். பின்னர் சில நாட்கள் இடைவெளிக்குப் பின்னரும் அங்கே சென்று, அந்த வண்ணத்துப்பூச்சிகள் இருப்பதை உறுதி செய்தோம்.
இந்த வகை வண்ணத்துப் பூச்சிகள் நீலன் வகை என தமிழில் அழைக்கப்படுகின்றன. 60 ஆண்டு களுக்கு முன்னர் இதேபோன்ற மற்றொரு வகை வண்ணத்துப்பூச்சி முதுமலை வனப்பகுதியில் உள்ள மசினக்குடியில் கண்டறியப்பட்ட தாக, வனத்துறையினர் தெரிவித்த னர்.
ஆனால், ஒளி ஊடுருவும் தன்மை யுடைய இறகுகள், அவற்றில் கருப்பு நிறப் புள்ளிகளுடன் கூடிய தாக இருக்கும். 2 செமீ., நீளம் கொண்டுள்ள இந்த வண்ணத்துப் பூச்சியின் இறகுகள் 26 மிமீ முதல் 29 மிமீ நீளத்துடன் காணப் படுகின்றன.
‘டாருகஸ் இண்டிகா’ வகை, இந்தியாவில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
எனினும், இந்த வகை வண்ணத் துப்பூச்சியின் வாழ்க்கை முறை குறித்த தகவல் எதுவும் இதுவரை பதிவு செய்யப்பட வில்லை. எனவே, வனத் துறை யினர் மற்றும் உயிரின ஆய் வாளர்கள் உதவியுடன், ‘டாருகஸ் இண்டிகா’ வண்ணத்துப்பூச்சி வளரும் சூழல், அது வசிக்கும் தாவரம், வாழ்க்கை சுழற்சி உள்ளிட்டவை குறித்து முழு மையாக ஆராய்ந்து தகவல் களை சேகரித்து பதிவு செய்யவுள் ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவை அடுத்துள்ள மலைச் சரிவில் டாருகஸ் இண்டிகா வகை வண்ணத்துப் பூச்சி கண்டறியப்பட்டுள்ளது குறித்து சேலம் மாவட்ட வன அலுவலர் பெரியசாமி கூறும்போது, ‘அரிய வகை வண்ணத்துப்பூச்சி இருப்பதை உறுதி செய்துள்ளோம். இதுகுறித்த ஆய்வுகளின் அடிப் படையில், அவற்றின் வாழ்க்கை முறை உள்ளிட்ட அடிப்படை தகவல்களை சேகரிக்க முடியும்’ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக