நெட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள நெட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய அளவிலான கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் தேசிய அளவிலான தகுதித் தேர்வு எனப்படும் நெட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெறுதல் அவசியம்.
இந்தத் தேர்வை என்.டி.ஏ. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதம் என இரண்டு முறை நடத்துகிறது. டிசம்பர் மாதத்திற்கான தேர்வு தேதி இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், டிசம்பர் 2 முதல் 6ஆம் தேதி வரையிலான ஏதேனும் ஒரு தேதியில் நடத்தப்படலாம் எனக்கூறப்படுகிறது.
இந்நிலையில் மத்திய நெட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில், ஆன்-லைன் முறையில் மட்டுமே இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க விரும்புவோர் https://nta.ac.in என்ற இணையதள முகவரியை அணுகலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியாக அக்டோபர் 9 தேதியும், தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி டிசம்பர் 31 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நெட் தேர்வை பொருத்தவரை இரண்டு தாள்கள் இடம்பெற்றிருக்கும். இரண்டு தாள்களிலும் கொள்குறி தேர்வு முறை கேள்விகள் மட்டுமே கேட்கப்படும். முதல் தாளில் 100 மதிப்பெண்களுக்கான 50 கேள்விகளும், இரண்டாம் தாளில் 200 மதிப்பெண்களுக்கான 100 கேள்விகளும் இடம்பெற்றிருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக