வியாழன், 31 அக்டோபர், 2019

தமிழ்நாடு பற்றிய 25 தகவல்கள்


தமிழ்நாடு பற்றிய 25 தகவல்கள்

தமிழ்நாட்டின் சிறப்புகள்


1. தமிழக அரசு முத்திரையில் உள்ள கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்  கோபுரம்

2. தமிழகத்தின் நுழைவாயில்     - தூத்துக்குடி


3. தமிழகத்தின் மான்செஸ்டர்     - கோயம்புத்தூர்

4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம்  - கோயம்பத்தூர்

5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம்     - பெரம்பலூர்

6. மிக உயரமான தேசியக்கொடி மரம் -  புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)

7. மிகப் பெரிய பாலம் -  பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )

8. மிகப் பெரிய தேர்  -  திருவாரூர் தேர்

9. மிகப்பெரிய அணைக்கட்டு   -  மேட்டுர் அணை

10. மிகப் பழமையான அணைக்கட்டு -  கல்லணை

11. மிகப்பெரிய திரையரங்கு   -  தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)

12. மிகப்பெரிய கோயில்   -  தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்

13. மிகப்பெரிய கோயில் பிரகாரம்  -  ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்

14. மிகப்பெரிய கோபுரம்   -  ஸ்ரீ ரெங்கநாதர்  கோயில் கோபுரம் (திருச்சி)

15. மிகப்பெரிய தொலைநோக்கி  -  காவலூர் வைணுபாப்பு (700 m)

16. மிக உயர்ந்த சிகரம்  - தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]

17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )

18. மிக நீளமான ஆறு   -   காவிரி (760 km)

19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம்  -  சென்னை (25937/km2)

20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம்  -  சிவகங்கை (286/km2)

21. மலைவாசல் தலங்களின் ராணி   -  உதகமண்டலம்

22. கோயில் நகரம் – மதுரை

23. தமிழ்நாட்டின் ஹாலந்து  -  திண்டுக்கல் (மலர் உற்பத்தி)

24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்

25. மிகப்பெரிய சிலை  - திருவள்ளுவர் சிலை (133 அடி)

Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144


தமிழ்நாடு பொது தகவல்கள்


தமிழ்நாடு பொது தகவல்கள்

1 ) இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது?

7வது இடம்

2 ) இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?

23 வது இடம்

3 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?

16வது இடம்

4 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?

15வது இடம்

5 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?

14வது இடம்

6 ) சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை எங்குள்ளது?

மதுரை

7 ) சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

2004

8 ) தமிழக மக்களின் சராசரி தனிநபர் வருமானம் எவ்வளவு?

72993

9 ) தமிழக உயர்நீதி மன்றம் எங்குள்ளது?

சென்னை

10 ) தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு?

1076 கி.மீ

11 ) தமிழக சட்டசபை எந்த ஆண்டு முதல் ஒரு அவையாக மாற்றப்பட்டது

1986

12 ) தமிழகத்தில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாவட்டம் எது?

கன்னியாக்குமரி (92.14 சதவீதம்)

13 ) தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்?

சென்னை (23,23,454)

14 ) தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?

சென்னை (46,81,087)

15 ) தமிழகத்தில் உள்ள ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?

68.45 ஆண்டுகள்

16 ) தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் எத்தனை?

13 மாவட்டங்கள்

17 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

234

18 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற நியமன உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு?

1

19 ) தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் எவ்வளவு?

12 துறைமுகங்கள் தமிழகத்தில் உள்ளன

20 ) பன்னாட்டு விமான நிலையம் எங்குள்ளது?

சென்னை

21 ) தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?

71.54 ஆண்டுகள்

22 ) தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

15979

23 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகர பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

561

24 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

146

25 ) தமிழகத்தில் உள்ள ராஜ்யசபாவின் எண்ணிக்கை எவ்வளவு?

18

26 ) தமிழகத்தில் உள்ள லோக்சபாவின் எண்ணிக்கை எவ்வளவு?

39

27 ) தமிழகத்தில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது?

தர்மபுரி (64.71 சதவீதம்)

28 ) தமிழகத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?

பெரம்பலூர் 5,64,511

29 ) தமிழகத்தில் மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம்?

சென்னை (26903பேர் ஒரு சதுர கி.மீட்டரில் வாழ்கின்றனர்)

30 ) தமிழகத்தில் மிகக்குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது?

நீலகிரி (1சதுர கி.மீட்டரில் 288 மட்டுமே வாழ்கின்றனர்)

31) தமிழகத்திலுள்ள மொத்த மாவட்டங்கள் எத்தனை?

32

32) தமிழகத்தின் 31 வது மாவட்டம் எது?

அரியலூர்

33) தமிழகத்தின் 32 வது மாவட்டம் எது?

திருப்பூர்

34 ) தமிழகத்தின் கல்வியறிவு எவ்வளவு சதவீதம்?

80.33 சதவீதம்

35 ) தமிழகத்தின் காடுகளின் பரப்பு எவ்வளவு?

17.58 சதவீதம்

36 ) தமிழகததின் மாநில விலங்கு எது?

வரையாடு

37 ) தமிழகத்தின் முக்கிய 3 துறைமுகங்கள் எது?

சென்னை, எண்ணூர், தூத்துக்குடி

38 ) தமிழகத்தின் முக்கிய ஆறுகள் எது?

காவேரி, வைகை, தாமிரபரணி, பாலாறு, பவானி

39 ) தமிழகத்தின் முக்கியமான 6 விமானநிலையங்கள் எங்குள்ளது?
1. சென்னை
2. கோவை
3. மதுரை
4. திருச்சி
5 தூத்துக்குடி
6 சேலம்

40 ) தமிழ்நாட்டில் 2011 கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் எவ்வளவு?

999 பெண்கள் (1000 ஆண்கள்)

41 ) தமிழ்நாட்டில் காடுகள் அதிகமாக உள்ள மாவட்டங்கள் எவை?

1. நீலகிரி
2. சேலம்
3. வேலூர்
4. கன்னியாக்குமாரி

42 ) தமிழ்நாட்டில் காடுகள் குறைவாக உள்ள மாவட்டங்கள் எவை?

1. திருவாரூர்
2. இராமநாதபுரம்
3. தூத்துக்குடி
4. கடலூர்

43) தமிழ்நாட்டில் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட முதல் மாவட்டம் எது?

மதுரை (மேலக்கோட்டை - ஆண்டு 1997)

44) தமிழ்நாட்டின் இணைய தளம் எது?

www.tn.gov.in

45) தமிழ்நாட்டின் தலைநகரம் எது?

சென்னை

46 ) தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு?

ஒரு ச.கி.மீட்டருக்கு 555 பேர்

47 ) தமிழ்நாட்டின் மாநில அரசு சின்னம் எது?

திருவில்லிபுத்தூர் கோபுரம்

48 ) தமிழ்நாட்டின் மாநில எல்லையை குறிப்பிடுக?

கிழக்கே வங்காள விரிகுடா, மேற்கே கேரளா, வடக்கே ஆந்திரபிரதேசம், தெற்கே இந்தியபெருங்கடல்

49 ) தமிழ்நாட்டின் மாநில தமிழ்தாய் வாழ்த்து எது?

நீராடும் கடலுடுத்த

50 ) தமிழ்நாட்டின் மாநில நடனம் எது?

பரத நாட்டியம்

51 ) தமிழ்நாட்டின் மாநில பறவை எது?

மரகதப்புறா

52 ) தமிழ்நாட்டின் மாநில மரம் எது?

பனைமரம்

53 ) தமிழ்நாட்டின் மாநில மலர் எது?

செங்காந்தர் மலா்

54 ) தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது?

கபடி

55 ) தமிழ்நாட்டின் மொத்த பரப்பு எவ்வளவு?

1,30,058 ச.கி.மீ

56 ) தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு?

7,21,38,958 ஆண் 36158871 பெண் 35980087


Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

தமிழ் நாடு தினம் நவம்பர் 01 ல் தமிழ்நாட்டி‌ன் சிறப்புகள்


தமிழ் நாடு தினம் நவம்பர் 01 ல்
தமிழ்நாட்டி‌ன் சிறப்புகள்

      எத்தனையோ சிறப்பு வாய்ந்த அம்சங்கள் தமிழ்நாட்டில் இடம்பிடித்துள்ளன. அவை எல்லாம் தமிழ்நாட்டை சிறப்பிக்கின்றன. அவற்றின் பட்டியலைக் காண்போம்.
கல்லணைதான் மிகப் பழமையான அணைக்கட்டு ஆகும்.
அதிகமான ஏரிகள் கொண்ட மாவட்டமாக காஞ்சிபுரம் அமைந்துள்ளது.
மிக உயர்ந்த சிகரமான தொட்டபெட்டா தமிழகத்தின் சிறப்புதான்.
ஈரோடு அடுத்து மேட்டூரில் உள்ள அணைதான் மிகப்பெரிய அணையாகும்.
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக தஞ்சாவூர் திகழ்கிறது.
தொலைநோ‌க்‌கிக‌ளிலேயே காவலூர் வைணுபாப்பு மிகப்பெரிய தொலைநோக்கியாகும்.
தமிழகத்தின் நுழைவாயிலாக, துறைமுகத்தைக் கொண்ட தூத்துக்குடி திகழ்கிறது.
கங்கைக்கு ஈடான ஆறாக காவிரி ஆறு விளங்குகிறது. இது தென்னாட்டு கங்கை என்றும் அழைக்கப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கோயிலின் கோபுரம் மிக உயர்ந்த கோபுரம் என்ற பெருமையை கொண்டுள்ளது.
மலை வாசஸ்தலங்களில் எல்லாம் ராணியாக திகழ்வது ஊட்டியாகும்.
      தமிழ்நாடு சுற்றுலா, அதன் தன்னிகரில்லா கலாச்சரம், பழம்பெருமை, இயற்கைத்தன்மை மற்றும் அழகினால், தனிச்சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது. எவ்வித பயணியாக இருப்பினும், ஆசுவாசமான மனோபாவம் கொண்ட ஒரு சுற்றுலாப் பயணியோ, அல்லது பயணத்தின் அனைத்து அம்சங்களையும் எடை போடக் கூடிய கூரிய திறனாய்வு கொண்ட ஒரு ஆர்வலரோ, யாராக இருப்பினும், அப்பயணியின் கற்பனைகள் மற்றும் உவகைகளுக்கு ஈடு கொடுக்கக்கூடியதாய் உள்ளது. தமிழ்நாடு, தன் தனிச்சிறப்பு வாய்ந்த புராதனப் பெருமையினால், சுற்றுலாப் பயணிகளின் மிக விருப்பமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

தமிழ்நாட்டு மலை வாசஸ்தலங்கள் – அறைகூவல் விடுத்து சலனப்படுத்தும் பயணப் பிரதேசங்கள்!

தமிழ்நாட்டின் மலை வாசஸ்தலங்களில், முக்கியமாக, ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற பெருஞ்சிறப்பு பெற்ற தலங்களில், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கூடுகின்றனர்.

நீலகிரியின் மலை வாசஸ்தலங்களான ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகியவை தங்களின் இயற்கை எழில் மற்றும் தேக ஆரோக்கியத்துக்கு உகந்த வானிலை ஆகியவற்றால், சுற்றுலாப் பயணிகளின் அளவில்லா கற்பனா சக்திக்கு உயிரூட்டக்கூடியனவாய், அவர்களுக்கு வரவேற்பு அறைகூவல் விடுக்கின்றன.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு, தமிழ்நாட்டின், புகழ்பெற்ற மற்றொரு மலை வாசஸ்தலமாகும். அவ்வளவாக யாரும் இதுவரை சென்றிராத கொல்லிமலை மற்றும் வால்பாறை ஆகியவையும் கொஞ்சம் கொஞ்சமாக சுற்றுலாப் பயணிகளிடையே பரிச்சயமாகி வருகின்றன.

தமிழ்நாட்டு கடற்கரைகள் – கவர்ந்திழுக்கும் கரையோர வசீகரங்கள்!

தமிழகத்தின் கரையோர சுற்றுலாத்தலங்கள், முடிவின்றி அகல விரிந்திருக்கும் கடல்நீரின் அழகு சூழ, அனைத்து அம்சங்களும் பொருந்தியனவாய், ஒரு முழுமையான கடற்கரை விடுமுறையை அளிக்கவல்லனவாக உள்ளன.

கடற்கரை விடுமுறை என்றாலே, மஹாபலிபுரம் கடற்கரை நம் கண் முன்னே விரியும். மெரீனா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை ஆகியவை, தமிழ் நாட்டின் தலைநகரான சென்னைக்கு வருவோர்க்கு பயண விருந்தளிப்பனவாய் உள்ளன.

மஹாபலிபுரம் மற்றும் சென்னை கடல் நீரின் விரிவாக்கமாக விளங்கும் கோவளம் கடற்கரை, அதற்குரிய அழகோடு சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கிறது.

நாகப்பட்டின மாவட்டம், தமிழ்நாட்டின் முக்கியமான சில கரையோர சுற்றுலாத்தலங்களான நாகூர், வேளாங்கண்ணி, சிக்கல், கோடியக்கரை, வேதாரண்யம், மன்னார்குடி மற்றும் தரங்கம்பாடி ஆகியவற்றை, உள்ளடக்கியுள்ளது.

நாகூர், வங்காள விரிகுடாவின் கரையோரத்தில், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியின் எல்லையோரத்தில் அமைந்துள்ள, இனிய முரண்பாடுகளைக் கொண்ட ஒரு சிறிய நகரமாகும். பூம்புஹார், ஒரு கடற்கரையோர தலமாக இருப்பதோடல்லாமல், வரலாற்றுச் சிறப்பு பெற்று, புகழ் பெற்ற தமிழ் காப்பியமான சிலப்பதிகாரத்திலும் இடம் பெற்றதாகத் திகழ்கிறது.

கன்னியாக்குமரி, இந்தியாவின் தெற்குக் கடைக்கோடியில், வங்காள விரிகுடா, அரேபியக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகியவை சங்கமமாகும் இடத்தில் அமையப்பெற்றுள்ளது.

இதன் பூகோள அமைப்பு மற்றும் சுண்டி இழுக்கும் சுற்றுலா அம்சங்களினால், இது தமிழ்நாடு சுற்றுலாவின், அதீத மவுசு கொண்ட தலமாக விளங்குகிறது. திருச்செந்தூர் மற்றும் இராமேஸ்வரம் ஆகியவை கடற்கரையோரம் அமைந்துள்ள சில முக்கிய வழிபாட்டுத் தலங்களாகும்.

தமிழ்நாட்டின் பாரம்பரிய முனைகள் ! கலாச்சார மையங்கள்!

தமிழ்நாட்டின் சில சுற்றுலாத் தலங்கள், அவற்றின் வலிமையான பாரம்பரியம் மற்றும் கலாச்சார மணம் கமழும் தன்மைக்காகவே, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளிடையே பெரும் புகழ் பெற்றுள்ளன.

இவ்வகை தலங்களில் முதன்மையானது, செட்டிநாடு பகுதியில், மிகப் பிரபலமாய் இருக்கும் காரைக்குடி ஆகும். இங்குள்ள சமையற்கலை, நெசவுகள், ஏராளமான கோயில்கள் மற்றும் சொகுசு விடுதிகளாக மாற்றப்பட்டுள்ள மாளிகைகள், ஆகியவை தமிழ் கலாச்சாரத்தின் முக்கிய ஆதாரங்களாகத் திகழ்கின்றன.

கொங்கு கலாச்சாரம் தவழும் கோயம்புத்தூர், கோயில் நகரங்களான மதுரை மற்றும் தஞ்சாவூர் ஆகியவையும் தமிழ் கலாச்சாரத்தின் உறைவிடங்களாக விளங்குகின்றன. இவை, இந்த நவீன யுகத்திலும், கலாச்சாரப் பெருமை பொதிந்து காணப்படுகின்றன.

தமிழ்நாட்டுக் கோயில்கள் – ஆவலை தூண்டும் அற்புதங்கள்!

தமிழ்நாட்டின் கோயில்கள், தமிழ்நாடு சுற்றுலாவின், முத்திரை பதித்த மிக முக்கியமான தலங்களாகும். இங்குள்ள கோயில்களின் கோபுரங்கள் உயர்ந்தோங்கிய வண்ணம், தேர்ந்த சிற்ப வேலைப்பாடுகளும், அடுக்கடுக்கான சித்திர வேலைப்பாடுகள் மற்றும் வடிவங்களும் கொண்டவையாக மிளிர்கின்றன.

தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் ஆகியவற்றின் தெய்வாம்சம் மற்றும் இவற்றை ஆண்ட அப்போதைய மன்னர்களால் நிறுவப்பட்டுள்ள கட்டிடக்கலை அற்புதங்களை பார்க்கவென்றே சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து குவிகின்றனர்.

தாராசுரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருமணஞ்சேரி, திருக்கருக்காவூர் ஆகியன கட்டாயமாக சென்று வரக் கூடிய சில முக்கிய கோயில்களாகும்.

பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டுள்ள மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில், தமிழ்நாட்டின் கட்டிடக்கலைக்கு உன்னதமானதோர் சான்றாக, அற்புதமான சிற்ப வடிவங்களை கொண்ட கோயிலாக, உயரிய கட்டிடக்கலை அதிசயமாக விளங்குகிறது.

அலைகளற்ற அமைதியான கடற்கரையில் அமைந்துள்ள இராமேஸ்வரம் கோயில், சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றை கொண்டுள்ள சிறப்பு வாய்ந்ததாகும். தமிழ்நாட்டில், பாடற்பொருள் சார்ந்த கோயில்கள், ஆன்மீக சுற்றுலாக்களில் முக்கிய இடம் வகிக்கின்றன.

தஞ்சாவூரை சுற்றியுள்ள நவக்கிரக கோயில்கள் (ஒன்பது கிரகங்கள்), ஒன்பது கிரகங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டவை ஆகும். இக்கோயில்களுக்கு, நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

ஆலங்குடி (வியாழன்), திருநள்ளாறு (சனி), கஞ்சனூர் (வெள்ளி), திருவேற்காடு (புதன்), திருநாகேஸ்வரம் (பாம்பு கிரகம்), கீழ்பெரும்பள்ளம் (பாம்பு கிரகம்), சூரியனார் கோயில் (சூரியக் கடவுள்), திங்களூர் (சந்திரன்) மற்றும் வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்) ஆகியனவே அந்த ஒன்பது நவக்கிரக கோயில்களாம்.

பஞ்சபூதக் கோயில்கள் (ஐம்பூதங்கள்) – சிவபெருமான், ஐம்பூதங்களின் ஆதாரமாகவும், அவற்றின் திவ்ய தரிசனமாகவும் போற்றப்பட்டதால், இக்கோயில்கள், அவருக்காக அர்ப்பணிக்கப்பட்டவை ஆகும்.

திருவானைக்காவல், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் சிதம்பரம் ஆகியவை தமிழ்நாட்டில் அமைந்துள்ளன; காளஹஸ்தி மட்டும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளது.

வீரம் மற்றும் விவேகம் நிரம்பியவராய் வர்ணிக்கப்படும், சுப்ரமண்யர் என்றும் அழைக்கப்படும் தமிழ்க் கடவுளான முருகனின், ஆறு போர் முகாம்களான பழநி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழமுதிர்ச்சோலை, திருத்தணி மற்றும் சுவாமிமலை ஆகியவை ஒவ்வொன்றும், ஒவ்வொரு தனிச்சிறப்புடன், கோயில்களுள் ஐம்பொன்னாய் ஜொலிக்கின்றன.

தமிழ்நாட்டின் நகரங்கள்

சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, வேலூர், திருப்பூர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய நகரங்கள், மாநிலத்தின் வெவ்வேறு ஊர்களுக்கும் செல்வதற்கான முக்கிய பயண தலங்களாக விளங்குகின்றன.

1. தமிழக அரசு முத்திரையில் உள்ள கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்

2. தமிழகத்தின் நுழைவாயில் - தூத்துக்குடி

3. தமிழகத்தின் மான்செஸ்டர் - கோயம்புத்தூர்

4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் - கோயம்பத்தூர்

5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் - பெரம்பலூர்

6. மிக உயரமான தேசியக்கொடி மரம் - புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)

7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் - பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )

8. மிகப் பெரிய தேர் - திருவாரூர் தேர்

9. மிகப்பெரிய அணைக்கட்டு - மேட்டுர் அணை

10. மிகப் பழமையான அணைக்கட்டு - கல்லணை

11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) - தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)

12. மிகப்பெரிய கோயில் - தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்

13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் - ராமேஸ்வரம் கோயில் பிரகாரம் 14. மிகப்பெரிய கோபுரம் - ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)

15. மிகப்பெரிய தொலைநோக்கி - காவலூர் வைணுபாப்பு (700 m)

16. மிக உயர்ந்த சிகரம் - தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]

17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )

18. மிக நீளமான ஆறு - காவிரி (760 km)

19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் - சென்னை (25937/km2) 20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் - சிவகங்கை (286/km2)

21. மலைவாசல் தலங்களின் ராணி - உதகமண்டலம்

22. கோயில் நகரம் – மதுரை

23. தமிழ்நாட்டின் ஹாலந்து - திண்டுக்கல் (மலர் உற்பத்தி)

24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்

25. மிகப்பெரிய சிலை - திருவள்ளுவர் சிலை (133 அடி)


Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

தமிழ்நாட்டின் சிறப்புகள் அறிந்து கொள்ளுங்கள்


தமிழ்நாட்டின் சிறப்புகள் பல உள்ளன. அவற்றில் சில‌.

தமிழ்நாட்டில் பேசப்படும் தமிழ்மொழி உலகில் உள்ள பராம்பரிய மொழிகளில் ஒன்றாகும்.

தமிழ்நாடு பொருளாதாரத்தில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலிடம் மகாராஷ்டிரா ஆகும்.

இந்திய தேசியக் கொடியைத் தனது முத்திரையில் கொண்டுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும்.

இந்தியாவில் கண்டறியப்பட்ட மொத்த கல்வெட்டுக்களில் 60 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள கீழ்கண்ட இடங்கள் யுனெஸ்கோவால் பாராம்பரிய நினைவுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

      மகாபலிபுரம்

      தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம்

      கங்கை கொண்ட சோழபுரம் கோவில்

      தாரகாசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோவில்

      நீலகிரி மலை ரயில்

      மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்

1806-ல் வேலூரில் நடைபெற்ற சிப்பாய் கலகம் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக நடைபெற்ற மாபெரும் முதல் எதிர்ப்பு நிகழ்வாகும்.

தமிழ்நாடு காவல்துறையில் 12.5 சதவீதப் பெண்கள் பணிபுரிவதால் இந்தியாவில் அதிகப் பெண்களைக் கொண்ட காவல்துறையாக தமிழ்நாடு உள்ளது.

2000 ஆண்டுகள் பழமையான தமிழ் இலக்கியம் உலகில் மிகவும் தொன்மையானது.

இந்தியாவில் வாழை, மஞ்சள், மலர்கள் மற்றும் மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றை அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

பக்தி இயக்கம் தமிழ்நாட்டில் தோன்றி இந்தியாவின் மற்ற இடங்களுக்குப் பரவியது.

கபடி விளையாட்டு தமிழ்நாட்டில் தோன்றியது.

உடல் உறுப்புகளின் தானத்திலும் தமிழ்நாடு, இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ளது.

சூரிய மின்னாற்றல், காற்று மின்னாற்றல் உற்பத்தியில் தமிழ்நாடு, இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவின் வாகன ஏற்றுமதியில் மொத்தம் 60 சதவீதம் தமிழ்நாட்டின் சென்னையில் நடைபெறுகிறது.

இந்தியாவின் பழமையான ஷாப்பிங் மால் சென்னையில் உள்ள ஸ்பென்சர் பிளாஸா ஆகும்.

சென்னையின் கோயம்பேடு பேருந்து நிலையம் ஆசியாவில் மிகப்பெரியது ஆகும்.

வண்டலூர் உயிரியல் பூங்கா இந்தியாவில் பரப்பரளவில் மிகப்பெரியது மற்றும் முதல் பொது விலங்குப் பூங்காவாகும்.

உலக சுகாதார நிறுவனம் அடையாறு புற்றுநோய் நிறுவனத்தை நாட்டின் உயர்தர நிறுவனமாக அறிவித்துள்ளது.

சென்னையின் கத்திப்பாறா சந்திப்பு ஆசியாவின் மிகப்பெரிய க்ளோவர்லீஃப் ஃப்ளையோவர் பாலம் ஆகும்.

மெரினா கடற்கரை நீளமான இயற்கையான நகர்புற கடற்கரை ஆகும்.

உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி மின்னாற்றல் தயாரிக்கும் அமைப்பு தமிழ்நாட்டின் கமுதியில் அமைந்துள்ளது.

தமிழ்நாடு இந்தியாவில் அதிகளவு ஜனாதிபதிகளைக் கொடுத்துள்ளது. சர்வப்பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன், வெங்கட்ராமன், டாக்டர் ஏ.பி.ஜேஅப்துல் கலாம்.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இந்தியாவின் பழமையான நீர்பறவைகள் சரணாலயம் ஆகும்.

இந்தியாவில் உள்ள பூக்கும் தாவரங்களில் 24 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளன.

இந்தியாவின் மிகப்பெரிய ரோஜாத் தோட்டம் ஊட்டியில் உள்ளது. இங்கு 22000 வகையான பூக்கள் காணப்படுகின்றன.

முதல் மூன்று பாரத ரத்னா விருதுகளைப் பெற்றவர்கள் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள். சர்.சி.வி.ராமன், ராஜாஜி, சர்வப்பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆவர்.

உலகின் புகழ்பெற்ற கணிதவியலாளரான சீனிவாச ராமானுஜம் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்.

1914-18-ல் நடைபெற்ற முதல் உலகப்போரில் சென்னை நகரம் ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி ஆகிய அதிக வெளிநாட்டவர்களால் தாக்கப்பட்டது.

திருக்குறள் உலகில் அதிகளவு மொழி பெயர்க்கப்பட்ட மதசார்பில்லாத நூலாகும். இது உலகப் பொதுமறை என்று வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு இந்தியாவின் மூன்று கடல்களால் சூழப்பட்டுள்ளது.

பாம்பன் பாலம் இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும். மேலும் இது இந்தியாவின் இரண்டாவது பெரிய நீளமான பாலம் ஆகும்.

கிண்டி பொறியியல் கல்லூரி இந்தியாவில் உள்ள பழமையான தொழில்நுட்ப கல்லூரிகளில் ஒன்று. 1794-ல் கணக்கெடுப்பு பள்ளியாக ஆரம்பிக்கப்பட்ட இது 1859-ல் கல்லூரியாக மாற்றப்பட்டது.

சென்னை மாநகராட்சி தொடங்கப்பட்டு 365 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. இது லண்டனுக்கு அடுத்தபடியான உலகிலேயே இரண்டாவது பழமையான மாநகராட்சியாகும்.

சென்னை இந்தியாவின் சுகாதாரத் தலைநகராக விளங்குகிறது. சென்னை மருத்துவமனைகள் ஒவ்வொரு நாளும் 150 வெளிநாட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கின்றன.

கோயமுத்தூரில் உள்ள சிறுவாணி ஆற்றுநீரானது உலகின் சுவைமிக்க நீராகும். சிறுவாணி என்பது பவானி ஆற்றின் கிளைநதியாகும்.

தமிழ்நாட்டின் சிறப்புகள் பற்றி அறிவோம். மற்றவர்களும் அறியும் வண்ணம் செய்வோம்.


Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

தமிழ் நாடு தினம் நவம்பர் 01.தமிழகத்தை பற்றிய தகவல்கள்


தமிழ் நாடு தினம் நவம்பர் 01.தமிழகத்தை பற்றிய தகவல்கள்

தமிழகம் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் சென்னை மாகாணம் என்றும் அழைக்கப்பெற்றது. இதனைத் தமிழ்நாடு என்று மாற்றக்கோரி போராட்டங்கள் நடைபெற்றன. சங்கரலிங்கனார் என்பவர் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார்.[11] பின்னர் மதராசு ஸ்டேட் என்று இருந்த பெயர் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.

தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் பரப்பளவில் 11 ஆவதாகவும், மக்கள்தொகையில் ஆறாவதாகவும் விளங்குகிறது. இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் பங்களிப்பதில் இரண்டாவதாகவும் உள்ளது.[12] 2006 ஆம் ஆண்டில் மனித வளர்ச்சிச் சுட்டெண்ணில் பத்தாமிடத்தில் (ஒன்றிய ஆட்சிப்பகுதிகளையும் சேர்த்தால் பதினாறாவது இடத்தில்) இருந்தது.[13] மேலும் இந்தியாவிலேயே அதிக நகர்ப்புறமாக்கப்பட்ட மாநிலமாகத் திகழ்கிறது.[14] இந்தியாவின் 6% மக்கள்தொகையே கொண்டிருந்தும் மிகக் கூடுதலான வணிக நிறுவனங்கள் கொண்ட மாநிலமாகவும் (10,56%) மொத்த வேலை வாய்ப்புகள் கொண்ட மாநிலங்களுள் இரண்டாவதாகவும் (9,97%) விளங்குகிறது[15].

கி.மு. 500க்கும் முன்பிருந்தே இப்பகுதியில் தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். 20000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமை வாய்ந்த தமிழ் மொழி கல்வெட்டுக்களும் இலக்கியமும் காணக் கிடைக்கின்றன.[16][சான்று தேவை] தொன்கதை பாரம்பரியத்தின் படி தமிழ் மொழியானது சிவ பெருமானால் அகத்தியருக்குக் கற்பிக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது.[17][18][19][20][21][22][23][24] தமிழ்நாட்டில் பல இயற்கை வளங்கள், தமிழர் கட்டிடக் கலை சாற்றும் கோவில்கள், மலைத்தலங்கள், கடலோர ஓய்விடங்கள், பல சமயத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்துள்ளன; எட்டு உலக பாரம்பரியக் களங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.[25][26]

புவியமைப்பு

Tamil Nadu topography map
தமிழ்நாடு இந்திய தீபகற்பத்தின் தென் கோடியில் அமைந்துள்ளது. வடக்கில் கருநாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களும், மேற்கில் கேரளாவும் உள்ளன. ஒன்றிய பகுதி, புதுச்சேரி (முன்பு பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்டது) தமிழ் நாட்டின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இம்மாநிலத்துக்குத் தென்கிழக்கில் இலங்கைத் தீவு உள்ளது. நாட்டின் ஏனைய பல பகுதிகளைப் போலன்றி, தமிழ்நாடு, அக்டோபர் – திசம்பர் மாதங்களில் "வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று" மூலமே மழை பெறுகிறது. இக்கால கட்டத்தில் வங்காள விரிகுடாவில் உருவாகும் புயற்சின்னங்களின் மூலம் பெய்யும் மழையை உழவர்கள் பெரிதும் நம்பியுள்ளனர். இம்மாநிலத்தின் முதன்மையான ஆறான காவிரி ஆறு வடக்கே கருநாடக மாநிலத்தில் குடகு மலையில் உருவாகித் தமிழ்நாட்டில் பாய்கிறது. வைகை, தாமிரபரணி, தென்பெண்ணை ஆறு, பாலாறு ஆகியவை பிற முதன்மையான ஆறுகளாகும். மதராஸ் என்று 1996 வரை அழைக்கப்பட்டு வந்த சென்னையே தமிழ்நாடு மாநிலத்தின் மிகப் பெரிய நகரமும் அதன் தலைநகரமுமாகும். பதின்மூன்று கிலோமீட்டர் நீளமுடையதும், உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையுமான, மெரீனா கடற்கரை சென்னையில் உள்ளது. மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், தஞ்சாவூர், திண்டுக்கல், திருநெல்வேலி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், தூத்துக்குடி மற்றும் வேலூர், நாகர்கோவில், ஓசூர் தமிழ்நாட்டின் மாநகரங்கள் ஆகும்.

வரலாறு

கீழடி,சங்க காலம் நகர தொல்லியல் எச்சம்
முதன்மைக் கட்டுரைகள்: தமிழ்நாட்டு வரலாறுமற்றும் பண்டைய தமிழ் வரலாற்று மூலங்கள்
தமிழ்நாடு பண்டைக் காலத்தில் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களால் ஆளப்பெற்றது. மேலும், இம்மாநிலம் பல கோயில்களையும், சிற்பங்களையும் பெற்ற கலை அம்சம் கொண்ட பகுதியாக விளங்குகிறது.

தமிழகத்தின் எல்லைகளைத் தொல்காப்பியப் பாடல்

வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்
என்று வரையறுக்கிறது (தொல்காப்பியம், சிறப்புப் பாயிரம், 1-3).

தொன்றுதொட்டே தமிழ் மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு தமிழகம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. அதற்குச் சான்றாகக் கீழ்வரும் இலக்கியக் குறிப்புகளைக் காட்டலாம்:

வையக வரைப்பில் தமிழகம் கேட்ப (புறநானூறு, 168 :18)
இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்க (பதிற்றுப்பத்து, இரண்டாம் பத்து, பதிகம் : 5)
இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறிய (சிலப்பதிகாரம், அரங்கேற்றுகாதை : 38)
சம்புத் தீவினுள் தமிழக மருங்கில் (மணிமேகலை, 17: 62)
தமிழ்நாடு, ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்கே வாழுகின்ற தமிழ் இன மக்களின் தோற்றம் தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர், ஒரு காலத்தில் இந்தியா முழுதும் பரவி வாழ்ந்திருந்த தமிழர்கள், சிந்து வெளி நாகரீகத்துக்கு உரியவர்களுள் ஒரு பிரிவினராக இருந்தனர் என்று கருதுகிறார்கள். இவ்வினத்தவருடைய தெற்கு நோக்கிய பெயர்வு, ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கையுடன் தொடர்புபடுத்தப்படுகின்றது. இக்கொள்கைப்படி, வடக்கிலிருந்து வந்த ஆரிய ஆக்கிரமிப்பு தமிழர்களை இன்றைய இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளா ஆகியவை அடங்கிய தென்னிந்தியாவுக்குள் ஒடுக்கியதாகக் கருதப்படுகின்றது. வரலாற்று உண்மைகள் எவ்வாறு இருப்பினும், தற்காலத் தமிழ் மக்களுடைய அடையாளம் மேற்கண்ட கொள்கைகளின் அடிப்படையிலேயே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது எனலாம்.


மதுரை மீனாட்சியம்மன் கோயில் (1600). 170 அடி உயரத்தில் எழுகின்ற தெற்குக் கோபுரம்
இன்றைய தமிழ்நாட்டையும் உள்ளடக்கிப் பரந்திருந்த பண்டைய தமிழர் நாடு, பல்வேறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. இவற்றைக் காலத்துக்குக் காலம் பல அரச வம்சங்கள் ஆண்டுவந்தன. இவற்றுள் முதன்மையாகக் குறிப்பிடத்தக்கவர்கள்,வேளிர்கள் பாண்டியர், சேரர், சோழர், பல்லவர், சாளுக்கியர், விஜய நகரத்தார், நாயக்கர் என்போராவர்.

மேலே குறிப்பிடப்பட்ட மதுரை தற்கால மதுரைக்குத் தெற்கே அமைந்திருந்து பிற்காலத்தில் ஏற்பட்ட கடல்கோளினால் முற்றாக அழிந்து போனதாகப் பழந்தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறியக்கிடைக்கின்றது. பாண்டிய நாடு கல்வியிலும், வணிகத்திலும் சிறந்து விளங்கியது. தமிழகத்தின் மக்கள் அக்காலத்தின் பேரரசுகளாகிய கிரேக்க, ரோமப் பேரரசுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அவ்வப்போது பல்லவர்களாலும், சோழர்களாலும் அடக்கப்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டின் ஆற்றல் மிக்க அரச பரம்பரைகளில் ஒன்றாகப் பாண்டியர் விளங்கினர்.

கிபி 1 தொடக்கம் 4 ஆம் நூற்றாண்டுவரை
சங்ககால மூவேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியர் கிபி முதலாம் நூற்றாண்டு தொடங்கி நான்காம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் ஆட்சி செலுத்தினர். இவர்களுள் சேரர்களில் செங்குட்டுவன் மன்னனும், சோழர்களில் கரிகால் சோழன் மன்னனும், பாண்டியர்களில் நெடுஞ்செழியன் மன்னனும் பெயர் பெற்ற ஆட்சியாளர்களாகத் திகழ்ந்து, மிகவும் புகழ்பெற்று விளங்கினர். சேரர்கள் தற்கால கேரள மற்றும் கொங்கு மாவட்டங்களிலும், சோழர்கள் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளிலும், பாண்டியர்கள் மதுரை, நெல்லை மற்றும் தென் கேரள மாவட்டங்களிலும் செல்வாக்கு செலுத்தினர். இவர்கள் கூட்டணியால் தமிழகம் வடதிசை மவுரிய குப்தா பேரரசுகளின் ஆளுகையினை எதிர்த்து தனியரசுகளாக விளங்கின இவர்களின் போர் நடவடிக்கைகளில் சிறந்து விளங்கியதாக நம்பப்படுகிறது.

கிபி 4 தொடக்கம் 9 ஆம் நூற்றாண்டுவரை

கடற்கரைக் கோயில்; அமைத்தவர்: பல்லவர்; இடம்: மாமல்லபுரம்; காலம்: (கி.பி.எட்டாம் நூற்றாண்டு.) – யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களம்.
கி.பி. நான்காம் நூற்றாண்டு முற்பகுதியில் களப்பிரர் என்னும் குலம் தெரியாத அரசர்கள் தமிழகத்தை ஆண்டனர். அவர்கள் மூவேந்தர்களையும் அடக்கி ஆண்டதால் அவர்களின் வரலாறு தெரியாமல் போயினும், பல்லவர் என்னும் அக்கால புதிய அரசர்கள் சுயாட்சி செலுத்தியதால் அவர்களைப் பற்றி மட்டும் குறிப்பிடத்தக்க ஆவணங்கள் கிடைத்துள்ளன. இக்களப்பிர அரசர்கள் கிபி 4 தொடக்கம் 6 ஆம் நூற்றாண்டுவரை ஆண்ட காலத்தைத் தமிழகத்தின் இருண்ட காலம் என்று வரலாற்றாளர்கள் கூறுவதுண்டு. கி.பி. நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சிறந்த கோவில்களை அமைத்த பல்லவர்கள் முன்னணிக்கு வந்தனர். இவர்கள் தென்னிந்தியாவில் 400 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தினர். காஞ்சிபுரத்தைத் தலை நகரமாகக் கொண்டு தமிழ்நாட்டின் பெரும்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள் சோழரைத் தோற்கடித்தனர். இவர்கள் செல்வாக்கு இலங்கை வரை பரவியிருந்ததாகக் கருதப்படுகிறது. முதலாம் மகேந்திரவர்மனும், அவனுடைய மகனான நரசிம்மவர்மனும் பல்லவர்களுள் சிறந்து விளங்கிய அரசர்களாவர். பல்லவர் கட்டிடக்கலை பல்லவர் காலத்திலேயே வளர்ச்சியடைந்து உருப்பெற்றது. இறுதிப் பல்லவ மன்னன் அபராசிதன் ஆவான். இவன் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆதித்த சோழனால் தோற்கடிக்கப்பட்டதுடன் பல்லவராட்சி தமிழ் நாட்டில் முடிவுக்கு வந்தது.

இக்காலகட்டத்தில் (கிபி 300 – கிபி 600) பௌத்தம் தமிழகத்தில் மிகவும் செல்வாக்கோடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.[27]

9 தொடக்கம் 13 ஆம் நூற்றாண்டுவரை

இராசேந்திர சோழன் ஆட்சியில் சோழப் பேரரசு கி.பி. 1030
கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். இராசராச சோழன் மற்றும் அவனது மகனான இராசேந்திர சோழன் ஆகியோரது காலத்தில் சோழர், தென்னிந்தியாவில் ஆற்றல் மிக்கவர்களாக உருவெடுத்தனர். இவர்களுடைய பேரரசு, மைய இந்தியா, ஒரிசா, மற்றும் வங்காளத்தின் சில பகுதிகள்வரைகூடப் பரவியிருந்தது.


தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்; கட்டியவர்: முதலாம் இராசராச சோழன்
இராசராச சோழன் கிழக்கிலிருந்த சாளுக்கிய அரசர்கள் மற்றும் சேர மன்னர்களை வீழ்த்தினான். அத்துடன் பாண்டிய அரசிடமிருந்து, இலங்கையின் சில பகுதிகளையும் கைப்பற்றினான். இராசேந்திர சோழன் மேலும் முன்னேறி அந்தமான் நிக்கோபார் தீவுகள், இலட்சத்தீவுகள், சுமத்ரா, சாவா, மலேயா மற்றும் பெகு தீவுகளையும் தன் கப்பற்படையைக் கொண்டு கைப்பற்றினான். அத்துடன் தற்போதைய பீகார் மற்றும் வங்காளப் பகுதிகளை ஆண்டு வந்த மகிபாலனையும் வீழ்த்தினான். தன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் எனும் தலைநகரை உருவாக்கினான். பதின்மூன்றாம் நூற்றாண்டுவாக்கில் சோழர்களின் ஆதிக்கம் குறைந்தது.

14ஆம் நூற்றாண்டு
14ஆம் நூற்றாண்டில் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு பாண்டியர்கள் மீண்டும் எழுச்சி பெற்றனர். ஆயினும் அந்த எழுச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1316 இல் வடக்கிலிருந்து படையெடுத்து வந்த கில்சி ஆட்சியாளர்கள், மதுரையை முற்றுகையிட்டு சூறையாடினர். இசுலாமியர்களின் படையெடுப்பு சோழர்களையும் பாண்டியர்களையும் ஆற்றலற்றவர்களாக்கி இசுலாமிய "பாமினி" ஆட்சிக்கு வித்திட்டது. இசுலாமியப் படையெடுப்புக்கு பதிலடி தரும் வண்ணம் பல்வேறு சிற்றரசுகள் சேர்ந்து விசயநகர பேரரசைத் தோற்றுவித்தன. இப்பேரரசின் பல்வேறு பகுதிகள் பிரிக்கப்பட்டு அவற்றை மேற்பார்வையிட நாயக்கர்கள் என்னும் ஆட்சியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அம்பியை தலை நகராகக் கொண்டிருந்த விசய நகரப் பேரரசு செல்வச் செழிப்போடும் அமைதியுடனும் திகழ்ந்தது.

ஆனால், 1564 ஆம் ஆண்டு வாக்கில் நடந்த தலிகோட்டா போரில், தக்காணப் பீடபூமியைச் சேர்ந்த சுல்தான்களால் விசயநகர ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு, அவர்கள் ஆட்சிக்கடங்கிய பகுதிகள் யாவும் நாயக்கர்களிடையே பிரித்தளிக்கப்பட்டன. நாயக்கர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு அரசியல் அமைப்புகள் மாற்றி அமைக்கப்பட்டன, பாளையங்கள் உருவாக்கப்பட்டு கிராம சுய ஆட்சி முறை ஒழிக்கப்பட்டது. தஞ்சை மற்றும் மதுரையைச் சேர்ந்த நாயக்கர்கள் புகழ் பெற்று விளங்கியதோடு பழங்கால கோயில்களைப் புதுப்பிக்கவும் செய்தனர்.

இன்றைய கேரளாவும் மலபாரை ஒட்டிய பகுதிகளும் சேர நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. கடலை ஒட்டியிருந்த சேரர்களின் ஆட்சிப்பகுதி ரோமானியர்களுடனான வாணிபத்திற்கு ஏதுவாக இருந்தது. ஆங்கிலேய படையெடுப்பு நிகழும் வரை சேரர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த சிறிய நிலப்பகுதி பெரும்பாலும் வேறெவருடைய படையெடுப்பிற்கும் ஆளாகாமல் இருந்தது.

17 ஆம் நூற்றாண்டு
1639இல் ஆங்கிலேயர்கள் மதராசில் (தற்பொழுது சென்னை என்று அழைக்கப்படுகிறது) கிழக்கிந்தியக் கம்பெனியை நிறுவியபிறகு தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய பகுதி தொடங்கியது. தமிழ்நாட்டு சிற்றரசர்களிடையே நிலவி வந்த சச்சரவுகளைப் பயன்படுத்தி அவர்களைப் பிரித்தாண்டு, அவர்களின் மேல் தங்கள் அதிகாரத்தைச் செலுத்தத் தொடங்கினர். தமிழ்நாடும் அதைத் தொடர்ந்து தென்னிந்தியாவும் மெல்ல மெல்ல ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஆங்கிலேயர் அதிகாரத்தைத் தம் வசப்படுத்திய இந்தக் காலகட்டத்தில் அவர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் ஆட்சியாளர்களும் கணிசமானோர் இருந்தனர். வீரபாண்டிய கட்டபொம்மன்,அனந்த பத்மநாப நாடார், பூலித்தேவன், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், வாண்டாயத் தேவன், அழகு முத்துக்கோன், வீரன் சுந்தரலிங்கம், ஒண்டி வீரன், பெரிய காலாடி, தீரன் சின்னமலை போன்ற ஆட்சியாளர்கள் வெள்ளையரை எதிர்த்துப் போரிட படைகளைத் தலைமையேற்று நடத்தினர்.

20 ஆம் நூற்றாண்டு

மதராசு மாகாண வரைபடம்
1947இல் இந்தியா விடுதலை அடைந்தபோது, மதராசு மாகாணம் (படம்) (The Madras Province) மதராசு மாநிலம் ஆனது. ஆனால் 1948ஆம் ஆண்டுவரை புதுக்கோட்டை சமஸ்தானம் தொண்டைமான் மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. இதுவே இந்தியாவோடு சேர்ந்த கடைசி சில சமஸ்தானங்களுள் ஒன்றாகும். தமிழ்நாடு, கடலோர ஆந்திரப் பகுதிகள், மேற்கு கேரளம், தென் மேற்கு கருநாடக கடற்கரைப் பகுதிகள் ஆகியவை மதராசு மாநிலத்தின் கீழ் வந்தன. 1953இல் மதராசு மாநிலத்தின் தெலுங்கு பேசும் மக்களுள்ள வட பகுதிகள் ஆந்திர மாநிலமாகவும், தமிழ் பேசும் தென் பகுதிகள் மதராசு மாநிலமாகவும் மேலும் பிரிக்கப்பட்டது. 1956இல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் மதராசு மாநிலத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்நாடகத்திற்கும் இடையே பிரித்தளிக்கப்பட்டது. 1969இல், மதராசு மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ‎திருவாங்கூர்-கொச்சி மாநிலத்தின் தென்பகுதியில் தமிழ் பேசும் மக்கள் வாழிடம் கன்னியாகுமரி மாவட்டமாக உருவாக்கப்பட்டு, நவம்பர் 1, 1956இல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது.

பாரம்பரியம்
தமிழ்நாடு, இன்றும் செழிப்புடன் விளங்கும், வளமான இலக்கிய, இசை, நடனப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது. இது இந்தியாவின் அதிக அளவு கைத்தொழில் மயமாக்கப்பட்ட மாநிலங்களுள் ஒன்று.

சுப்பிரமணிய பாரதி, வ. உ. சிதம்பரம்பிள்ளை, சி. வி. இராமன், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், பெருந்தலைவர் காமராசர், சுப்பிரமணியன் சந்திரசேகர், ஆர். கே. நாராயண், ஆர். வெங்கட்ராமன், சி. என். அண்ணாதுரை, சீனிவாச ராமானுசன், அப்துல் கலாம், பாரதிதாசன், அயோத்தி தாசர், திரு.வி.க., கண்ணதாசன், என்.எஸ்.கிருட்டிணன், ஈ.வே.ரா பெரியார் ஆகியோர் மாநிலத்தின் நன்கு அறியப்பட்டவர்களில் சிலராவர். இவர்களோடு, இளங்கோவடிகள், கண்ணகி, திருவள்ளுவர், தொல்காப்பியர், ஔவையார், கம்பர், கரிகால்சோழன், இராசராச சோழன், போன்ற முற்காலத்தவரும் இன்றும் நினைவில் இருப்பவர்களாகும்.

அரசியல்
முதன்மைக் கட்டுரைகள்: தமிழக அரசியல்மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234 மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39 ஆகும். 1986 வரை தமிழ்நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட மன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஒரு அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்து எடுக்கப்படுகின்றனர்.

தமிழ்நாட்டின் முதன்மையான அரசியல் கட்சிகளாக திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை விளங்குகின்றன. இந்திய தேசிய காங்கிரசு, இந்தியக் குடியரசுக் கட்சி, அகில இந்திய பார்வார்டு பிளாக், இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்), பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், பாரதிய ஜனதா கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், முஸ்லீம் லீக், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாக உள்ளன.

பெரியார் 1916இல் தோற்றுவித்த திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்து, 1949 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தை சி. என். அண்ணாதுரை தோற்றுவித்தார். 1947 இல் இந்திய விடுதலைக்குப் பிறகு 1967 வரை தமிழ்நாட்டை இந்திய தேசிய காங்கிரசு ஆண்டது. 1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தது. 1972 இல் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பிரிந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை, ம. கோ. இராமச்சந்திரன் தோற்றுவித்தார். 1977இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முதலில் ஆட்சியைப் பிடித்தது.

1967 முதல் 2016 இல் கடைசியாக நடந்த சட்டமன்றத் தேர்தல்வரை தி.மு.க. அல்லது அ.இ.அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளில் ஒன்று அல்லது அக்கட்சிகள் தலைமை வகிக்கும் கூட்டணிகள் பெரும்பான்மை தொகுதிகளை வென்று வருகின்றன. தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தல்களில் பல கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதுண்டு என்றாலும், இதுவரை தனிக்கட்சி ஆட்சியே நடைபெறுகிறது. முதன் முறையாகத் தி.மு.க. ஒரு அறுதிப் பெரும்பான்மையற்ற சிறுபான்மை அரசாகச் (2006–2011) செயல்பட்டது. இருப்பினும், தமிழக கட்சிகள் நடுவண் அரசில் செல்வாக்கோடு விளங்கிக் கூட்டணி ஆட்சி அமைக்க உதவவும், பங்கேற்கவும் செய்கின்றன.

மாநில நிர்வாகப் பிரிவுகள்
தமிழ்நாடு நிர்வாக வசதிகளுக்காக பல்வேறு பிரிவுகளாப் பிரிக்கப்பட்டுள்ளது.[28]

மாவட்டங்கள் வருவாய்ப் பிரிவுகள் வட்டங்கள் குறுவட்டங்கள் வருவாய் கிராமங்கள் மாநகராட்சிகள் நகராட்சிகள் பேரூராட்சிகள் ஊராட்சி ஒன்றியங்கள் நகரப் பஞ்சாயத்துகள் கிராமப் பஞ்சாயத்துகள் மக்களவைத் தொகுதிகள் சட்டமன்றத் தொகுதிகள்
37 82 285 1349 17,680 12 528 125 385 561 12,618 39 234
மாவட்டங்கள்
முதன்மைக் கட்டுரைகள்: தமிழக மாவட்டங்கள்மற்றும் தமிழக வருவாய் வட்டங்கள்

தமிழக மாவட்டங்கள்
தமிழ் நாட்டில் தற்போது 37 மாவட்டங்கள் உள்ளன. மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன. இவற்றுள் விதிவிலக்காக, கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில், நீலமலை மாவட்டத்தின் தலைநகர் உதகமண்டலம் என்றுள்ளன. தற்போதுள்ள மாவட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாகப் பெயர்மாற்றம் பெற்றுவந்துள்ளன. ஒரு சில காலகட்டங்களில் மாவட்டங்களின் பெயருடன் காலம் சென்ற தமிழக தலைவர்கள் பெயரும் இணைத்துப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்தன. தற்போது அப்பெயர்கள் நீக்கப்பட்டு, மாவட்டங்களின் பெயர்கள் மட்டும் நிலைத்து நிற்கின்றன. இந்த 37 மாவட்டங்களில் 288 வருவாய் வட்டங்கள் உள்ளது.

அரியலூர் மாவட்டம்
இராமநாதபுரம் மாவட்டம்
ஈரோடு மாவட்டம்
கடலூர் மாவட்டம்
கரூர் மாவட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
கன்னியாகுமரி மாவட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம்
கிருட்டிணகிரி மாவட்டம்
கோயம்புத்தூர் மாவட்டம்
சிவகங்கை மாவட்டம்
சென்னை மாவட்டம்
சேலம் மாவட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
தருமபுரி மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
இராணிப்பேட்டை மாவட்டம்
திருப்பத்தூர் மாவட்டம்
திருநெல்வேலி மாவட்டம்
திருப்பூர் மாவட்டம்
திருவண்ணாமலை மாவட்டம்
திருவள்ளூர் மாவட்டம்
திருவாரூர் மாவட்டம்
தூத்துக்குடி மாவட்டம்
தேனி மாவட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம்
நாமக்கல் மாவட்டம்
நீலமலை மாவட்டம்
புதுக்கோட்டை மாவட்டம்
பெரம்பலூர் மாவட்டம்
மதுரை மாவட்டம்
விருதுநகர் மாவட்டம்
விழுப்புரம் மாவட்டம்
வேலூர் மாவட்டம்
தென்காசி மாவட்டம்
செங்கல்பட்டு மாவட்டம்
மாநகரங்கள்
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் முதல் 16 பெரிய நகரங்கள்:[29]

சென்னை
ஆவடி
கோயம்புத்தூர்
மதுரை
திருச்சி
சேலம்
திருப்பூர்
ஈரோடு
திருநெல்வேலி
வேலூர்
தூத்துக்குடி
தஞ்சாவூர்
திண்டுக்கல்
திருவண்ணாமலை
நாகர்கோவில்
ஒசூர்
உள்ளாட்சி அமைப்புகள்
இந்த article காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த article தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும்.
முதன்மைக் கட்டுரைகள்: தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்மற்றும் தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
தமிழ்நாட்டில் 15 மாநகராட்சிகளும், 123 நகராட்சி மன்றங்களும், 529 பேரூராட்சிகளும், 385 ஊராட்சி ஒன்றியங்களும் மற்றும் 12,524 ஊராட்சி மன்றங்களும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு
தமிழ்நாடு இந்தியாவின் ஏழாவது மக்கட்தொகை மிகுந்த மாநிலமாகும். 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 72.147.030 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 36.137.975 மற்றும் பெண்கள் 36.009.055 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7,423,832 ஆக உள்ளது. அதில் சிறுவர்கள் 3.820.276 ஆகவும்: சிறுமிகள் 3.603.556 ஆகவும் உள்ளனர். மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 15.61% ஆக உள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 996 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 555 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் படிப்பறிவு 51,837,507 (80.09 %) ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 28.040.491 (86,77 %) ஆகவும், பெண்களின் படிப்பறிவு 23.797.016 (73,44 %) ஆகவும் உள்ளது. நகரப்புறங்களில் 48,40% மக்களும், கிராமப்புறங்களில் 51,60 % மக்களும் வாழ்கின்றனர்.[30]

சமயம்
தமிழகத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 63.188.168 (87,58 %) ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 4,229,479 (5,86 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 4.418.331 (6,12 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள்தொகை 14.601 (0,02 %) ஆகவும், சமண சமய மக்கள்தொகை 89.265 (0,12 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 11.186 (0,02 %) ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 7.414 (0,01 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள்தொகை 188.586 (0,26 %) ஆகவும் உள்ளது.

மொழிகள்
89 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். தெலுங்கு (5.65%), கன்னடம் (1.68%), உருது (1.51%), மலையாளம் (0.89%) ஆகிய மொழிகளும் பேசப்படுகின்றன.

பழங்குடிகள்
முதன்மைக் கட்டுரை: தமிழகப் பழங்குடிகள்
தமிழகத்தின் மக்கள்தொகையில் 3.5% மக்கள் பழங்குடிகள் (2001 கணக்கெடுப்பு). மாநிலத்தில் 40-க்கும் மேற்பட்ட பழங்குடிகள் உள்ளனர். நீலமலை, ஆனைமலை, கொல்லிமலை ஆகிய பகுதிகளில் குறிப்பிடத் தக்க எண்ணிக்கையில் தோடர், காடர், குறும்பர், காணிக்காரர், மலமலசர், பணியர், பளியர் முதலிய பழங்குடி இன மக்கள் வாழ்கின்றனர்.

பொருளாதாரம்
முதன்மைக் கட்டுரை: தமிழ்நாட்டுப் பொருளாதாரம்
தமிழ்நாடு, நல்ல தொழில் வளர்ச்சி கண்டுள்ள ஒருசில இந்திய மாநிலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. தமிழக மக்கள் தொகையில் குறிப்பிடத் தகுந்த பகுதியினர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர் பொறியியல், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்கள், நெசவாலைகளுக்கும், ஆடை ஏற்றுமதி, விவசாய உபகரணங்கள், மோட்டார், கிரைண்டர் உற்பத்திக்கும், ஈரோடு மஞ்சள் உற்பத்தி மற்றும் விற்பனை, பால் உற்பத்தி, போர்வைகள் மற்றும் ஆடை ஏற்றுமதிக்கும், கரூர் இல்ல உப-சவுளி ஏற்றுமதி மற்றும் கனரக வாகன கூடு கட்டும் தொழில்களுக்கும், திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கும், சேலம் இரும்பு உருக்கு, அலுமினியம், ஆலைகளுக்காகவும், சவ்வரிசி, மாம்பழம், பட்டு சேலை, பருத்தி உற்பத்திக்கும், கனரக தொழிற்சாலைகளுக்கும், மின்சார உற்பத்திக்காகவும், கனரக வாகனங்கள் கட்டுமானத்திலும், நிலக்கடலை, கரும்பு, தக்காளி போன்ற பயிர் உற்பத்திக்கும், நாமக்கல் கோழிப் பண்ணைகளுக்கும், சிவகாசி அச்சுத்தொழில், பட்டாசு உற்பத்திக்கும், காவிரி பாசன பகுதியில் அமைந்துள்ள திருச்சி, தஞ்சாவூர் போன்ற பகுதிகளும் கன்னியாகுமரி மாவட்ட நாஞ்சில் நாட்டுப் பகுதியும் விவசாயத்திற்கும், வேலூர் தோல் தொழிலுக்கும், சென்னை வாகன உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களுக்கும் பெயர் பெற்றுள்ளன. பாலிவுட் என அழைக்கப்படும் மும்பை திரைப்படத் துறைக்கு அடுத்ததாக, தமிழகத் திரைப்படத்துறை இந்தியாவின் இரண்டாவது பெரிய திரைப்படத் தொழில் மையமாகக் கோலிவுட் என்னும் பெயரோடு (கோடம்பாக்கம் + ஹாலிவுட் என்பதன் பெயர்த் தழுவல்) திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும், பெருமளவில் தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன.

தற்போதைய விலையில், 2011–2012 ஆண்டு கணக்கின்படி, தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி – 132.4 பில்லியன் அமெரிக்க டாலர் [31].
இந்தியாவில் தொழிற்சாலைகள் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம் - 26122 [32]
மொத்த தொழில்துறை உற்பத்தியில் நாட்டில் முதலிடம்.
வெளிநாட்டு நேரடி முதலீட்டில் இந்தியாவில் முதல் மூன்று மாநிலங்களில் ஒன்று.
இந்தியாவில் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பில், தமிழ்நாட்டின் பங்கு 35 %
சென்னையின் தானுந்துத் தயாரிப்பு திறன்: தானுந்து 13,80,000, வர்த்தக வாகனங்கள்: 3,61,000, ஸ்யுவி: 1,50,000
தானுந்துத் தொழிற்சாலைகள்: யுன்டாய், போர்டு, நிசான், அசோக் லேய்லான்ட்
சென்னையில் உள்ள டயர் தயாரிப்பு நிறுவனங்கள்: எம்.ஆர்.எஃப், அப்பல்லோ டயர்ஸ், மிஷ்ஷலின், ஜெ.கெ டயர்ஸ்
இலத்திரனியல் தொழிற்துறை: நோக்கியா, பாக்ஸ்கான், பிளக்ஸ்டிராநிக்ஸ், டெல், பிஒய்டி, வீடியொக்கான், சாம்சங், மோட்டரோலா
இந்தியாவில் கறி-கோழி வளர்ப்பில், தமிழ்நாடு இரண்டாவது பெரியது [33].
இந்தியாவில் பால் உற்பத்தியில், தமிழ்நாடு இரண்டாவது பெரியது [33].
மின்சாரம்: 18083 மெகா வாட்(இரண்டாவது பெரியது)
சிறப்பு பொருளாதார மண்டலம்: 92, தொழிற் பூங்கா: 19 [33]
அதிக சாலை அடர்த்தி (மூன்றாவது பெரியது).
சுகாதாரம், வீடமைப்பு, கல்வி ஆகிய துறைகளில் வளர்ச்சி அடைந்த மாநிலம்.
.ரகுராம் ராஜன் அறிக்கையின் படி தமிழ்நாடு இந்தியாவின் மூன்றாவது முன்னேறிய மாநிலம்[34].
தமிழ்நாட்டின் ஏழ்மை நிலை
முதன்மைக் கட்டுரை: தமிழ்நாட்டின் ஏழ்மை நிலை
ரகுராம் ராஜன் அறிக்கையின் படி 2013 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் ஏழ்மைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் விகிதம் 11.28 விழுக்காடு. இது மற்ற இந்திய மாநிலங்களை ஒப்பிடுகயில், தமிழ்நாட்டின் ஏழ்மை விகிதம் குறைவு.[35]

2004/2005ஆம் ஆண்டுகள் எடுத்த கணக்கெடுப்பு பணியின்போது 29.4 சதவீதத்தினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருந்தனர்.[36] ஆனால் இது 1999/00 கணிப்பீட்டின் படி 12-17 மில்லியன் மக்கள் அல்லது 21 விழுக்காடு மட்டுமே இருந்தது.[37]

கல்வி அறிவு மற்றும் சமூக வளர்ச்சி
முதன்மைக் கட்டுரை: தமிழ்நாட்டில் கல்வி
சமூக முன்னேற்றத்தின் குறியீடுகளான (மனித வளர்ச்சிச் சுட்டெண்) பரவலான கல்வியறிவு, ஆண் - பெண் சமத்துவம், மேம்பட்ட பொது சுகாதாரம், நீண்ட சராசரி மனித ஆயுள், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, வேலை வாய்ப்புகள், தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் இந்தியாவின் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாகத் தமிழ்நாடு விளங்குகிறது.

தமிழ்நாட்டு மக்களின் கல்வியறிவு இந்தியாவின் சராசரியைவிட அதிகம். இங்கு 2001–2011 கால கட்டத்தில் 74,04%ல் இருந்து 80,33% என்று கல்வியறிவு அதிகரித்தது. இன்று தமிழ்நாட்டில் 86,81% ஆண்களும் 73,86% பெண்களும் கல்வியறிவுடையவர் ஆவர். தமிழ்நாட்டில் 37 பல்கலைக்கழகங்கள், 454 பொறியியல் கல்லூரிகள், 1.150 கலைக் கல்லூரிகள், 2550 பள்ளிக்கூடங்கள் மற்றும் சுமார் 5.000 மருத்துவமனைகள் உள்ளன. இங்கு இரண்டு நடுவண் அரசு கல்வி நிறுவனங்கள் உள்ளன. அவை சென்னையில் அமைந்த இந்திய தொழில்நுட்பக் கழகம்,பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சியில் அமைந்த தேசிய தொழில்நுட்ப கழகம் ஆகும். மேலும் புகழ் மிக்க சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம்,அண்ணாமலை பல்கலைக்கழகம்,சேலம் சோனா பொறியியல் கல்லூரி,பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனம், வேலூர் கிருத்துவ மருத்துவ கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர்,பச்சையப்பன் கல்லூரி சென்னை, இலயோலாக் கல்லூரி ஆகியனவும் உள்ளன. தமிழகத்தில் வருடந்தோறும் 130.000 பேர் பொறியியல் படிப்பு முடித்துத் தேர்ச்சி பெறுகின்றனர். இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில் அமைந்துள்ளது.

525 பொறியியல் கல்லூரிகள்– 226034 பொறியியல் பட்டதாரிகள் (2012).
447 பலதொழில்நுட்பப் பயிலகம் – 171637 தொழில்நுட்பர்கள் (2012).
1622 தொழில் பயிற்சி நிறுவனம் – 173746 (2012).
மருத்துவ கல்லூரி – 28 (ஆண்டு – 2012)[38].
பண்பாடு
முதன்மைக் கட்டுரை: தமிழர் பண்பாடு
தமிழர் பண்பாடு நீண்ட கால வரலாறு கொண்டது. இலக்கியம், இசை, நாடகம் என்பன சார்ந்த பல்வேறு கலை வடிவங்கள் தமிழ்நாட்டில் சிறப்பான நிலையில் உள்ளன. பரத நாட்டியம், கர்நாடக இசை, திராவிடக் கட்டிடக்கலை போன்ற புகழ் பெற்ற உயர் கலை வடிவங்கள் பெரும்பாலும் தமிழகத்தில் வளர்ச்சியடைந்து சிறப்பெய்தியவை.

மொழியும் இலக்கியமும்
முதன்மைக் கட்டுரை: தமிழ்
தமிழ்நாட்டின் ஆட்சி மொழி தமிழ் மொழி ஆகும். ஆங்கிலமும் அலுவல் மொழியாகப் பயன்படுகிறது. இந்தியா செம்மொழியாக அங்கீகரித்துள்ள மொழிகளில் தமிழ் முதலிடத்தில் உள்ளது. தமிழரின் பண்பாட்டில் தமிழ் மொழி மிக இன்றியமையாத இடத்தை வகிக்கிறது. சங்க இலக்கியங்கள் எனப்படும் தமிழின் மிகப் பழமையான இலக்கியங்கள் யாவும் செய்யுள் வடிவில் இயற்றப்பட்டவையாகும். தொன்மைக் காலம் முதலே இலக்கியம் மட்டுமல்லாமல் மக்களின் வாழ்க்கைக்கும் இலக்கணம் கண்ட மொழி தமிழ் மொழியாகும்.

திருக்குறள் என்ற அறநூல் தமிழின் மிகச் சிறந்த நீதிநூல் ஆகும். இது உலகின் பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தன்னை இன்னாரென அடையாளம் காட்டாத ஒரு சிறந்த தமிழ்ப் புலவரால் இயற்றப்பட்டது இந்நூலாகும். நாடு, மொழி, இனம் கடந்து உலக மக்கள் யாவருக்கும் பொதுவான நீதியைக் கூறுவதால் திருக்குறள் உலகப் பொதுமறையெனப் போற்றப்படுகிறது.

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு

மாடல்ல மற்றை யவை (திருக்குறள் 400)

தமிழின் இலக்கியங்களிலிருந்து அக்கால தமிழ் மக்களின் தலைசிறந்த பண்பாடு, வாழ்க்கை முறை போன்ற கூறுகளை நாம் அறியமுடிகிறது. இந்தியாவின் முதல் நூல்கள் தமிழிலேயே அச்சாயின. தமிழகத்தின் முதல் அச்சுக்கூடம் புன்னைக்காயலில் 1578இல் போர்த்துகீசியரால் நிறுவப்பட்டது.[39] பின்னர் தரங்கம்பாடி அச்சுக்கூடத்திலும் சென்னையிலும் ஏராளமான தமிழ் இலக்கியங்கள் அச்சுவடிவம் பெற்றன. இந்திய விடுதலைப் போரில் மக்களின் விடுதலை உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கு தமிழ் கவிஞர்களான பாரதியார், பாரதிதாசன் போன்றோரின் கவிதைகள் உதவியாய் இருந்தன. தற்காலத்தில் வாலி, வைரமுத்து, தாமரை போன்ற தமிழ்க் கவிஞர்கள் கவிதை படைக்கின்றனர். தமிழ் எழுத்தாளர்களால் புதினங்கள், சிறுகதைகள், பெருங்கதைகள் எனத் தமிழ் நூல்கள் வெளிவருகின்றன.

போக்குவரத்து
முதன்மைக் கட்டுரை: தமிழ்நாட்டில் போக்குவரத்து
தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து மூலம் சிறு கிராமங்களை இணைப்பதால் போக்குவரத்து வளர்ச்சி அடைந்துள்ளது. இரயில் போக்குவரத்து மூலம் பெரும்பான்மையான நகரங்களையும், விமான போக்குவரத்து மூலம் முக்கிய நகரங்களையும் இணைக்கின்றன. 2013-ஆம் கணக்கெடுப்பின் படி இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

விழாக்கள்

தமிழர்களின் வீரவிளையாட்டுக்களில் ஒன்றான ஏறுதழுவலில் காளையை அடக்கும் இளைஞன்
பொங்கல் திருநாள் (தமிழர் திருநாள் அல்லது உழவர் திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது), தமிழர்கள் கொண்டாடும் முதன்மையான திருநாள் ஆகும். தமிழ் மாதமான தை முதல் நாள் (சனவரி 14 அல்லது 15)-ல் இத்திருநாள் கொண்டாடப்படுகிறது.
நோன்புப் பெருநாள், பக்ரீத், முகரம் இசுலாமியப் புத்தாண்டு
பொங்கல் தவிர தீபாவளி, தைப்பூசம், வினாயகர் சதுர்த்தி, சரசுவதி (கல்விக் கடவுள்) பூசை, ஆயுத பூசை , கிறிஸ்துமஸ், புனித வெள்ளி போன்ற சமயம் சார்ந்த திருநாட்களும் கோடைக்கொண்டாட்டமாம் தமிழ் புத்தாண்டு திருநாளும் (சித்திரை மாதம் முதல் நாள் - ஏப்ரல் 13 அல்லது 14) மற்றும் ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் நடைபெறுகின்றன.

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை
சுற்றுலாத்துறை
முதன்மைக் கட்டுரை: தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை
தமிழ்நாடு அழகிய நிலப் பகுதிகள், பாரம்பரியச் சின்னங்கள் நிறைந்த சுற்றுலா முதன்மைத்துவம் உள்ள மாநிலமாகும். தமிழ்நாடு, திராவிடக் கட்டிடக்கலை பாணியைப் பிரதிபலிக்கும் கோயில்களுக்குப் புகழ் பெற்றது. இக்கோயில்களுக்கு வியக்க வைக்கும் கோபுரங்களும் ரதங்களும் அழகு சேர்க்கின்றன. இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவிலின் மூன்றாம் பிரகாரம், உலகின் மிகப் பெரியதாகும். சோழர் கால தஞ்சை பெரிய கோவிலும், பல்லவர் கால மாமல்லபுரம் சிற்பங்களும் கோவில்களும் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இராமநாதபுரம், தஞ்சாவூர், கும்பகோணம், மதுரை, சுவாமிதோப்பு காஞ்சி,சேலம், தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், மேச்சேரி பத்ரகாளியம்மன் மற்றும் செங்காட்டூர்(சேலம்) ஆகியவை கோயில் நகரங்களாகத் திகழ்கின்றன. கன்னியாகுமரி கடல் முனையில் அமைந்துள்ள வள்ளுவர் சிலையும் காண வேண்டிய இடமாகும். எழில் கொஞ்சும் நீலகிரி மற்றும் கோடைக்கானல் மலைப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அடர்ந்த வனப் பகுதிகள், கிழக்குக் கடற்கரை, ஏற்காடு, மேட்டூர், பூலாம்பட்டி போன்ற சுற்றுலா தளங்கள் உள்ளன.

தமிழக வரலாறு


தமிழக வரலாறு

தற்கால இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மண்டலம் வரலாற்றுக் காலத்துக்கு முன்பு முதல் மக்கள் வாழும் உறைவிடமாக தொடர்ந்து இருந்துவந்துள்ளது. தமிழ்நாட்டின் வரலாறும் தமிழ் மக்களின் நாகரீகமும் உலகின் மிகப் பழமையானவையாகும். முந்தைய பழங்கற்காலம் முதல் தற்காலம் வரையிலான தமிழ்நாட்டின் வரலாறு முழுவதிலும், இந்தப் பகுதியானது பல்வேறு புறக் கலாச்சாரங்களுடன் ஒருங்கிணைந்து இருந்து வந்துள்ளது. வரலாற்றில் ஒப்பீட்டளவில் குறுகிய காலப் பகுதிகளைத் தவிர்த்து, பிற காலகட்டங்களில் தமிழ்நாடு பகுதி புற ஆக்கிரமிப்புகள் எதுவுமின்றி சுதந்திரமாக இருந்து வந்துள்ளது.

சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவ பேரரசுகளே நான்கு பண்டைய பூர்வீக தமிழ் பேரரசுகளாக இருந்தன. இவர்கள் தனித்தன்மை வாய்ந்த கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பகுதியை ஆட்சி செய்தனர், இதனால் உலகில் அழியாமல் வழக்கத்திலிருந்த சில பழமையான இலக்கியங்களின் வளர்ச்சி சாத்தியமானது. இவர்கள் ரோமப் பேரரசுடன் அதிகப்படியான கடல்வழி வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். இப்பகுதியின் தலைமைக்காக இந்த மூன்று வம்சத்தைச் சேர்ந்தவர்களும் ஒருவருக்கொருவர் தொடர்ச்சியாக போரிட்டுக் கொண்டனர். மூன்று பேரரசுகளும் பாரம்பரியமாக ஆட்சி செய்துவந்த இந்தப் பகுதியை மூன்றாம் நூற்றாண்டில் நுழைந்த களப்பிரர்கள் விரட்டியதால் இப்பகுதியின் பாரம்பரிய ஆட்சி வடிவம் மாறியது. பாண்டியர்கள் மற்றும் பல்லவர்கள் மீட்டெழுந்து களப்பிரர் ஆதிக்கத்தை முறியடித்து தங்களின் பாரம்பரிய பேரரசுகளை மீண்டும் நிலைநாட்டினர். வீழ்ந்திருந்த சோழர்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவர்களையும் பாண்டியர்களையும் தோற்கடித்து, தங்களது பெரும் சக்தியாக எழுச்சியடைந்து கிட்டத்தட்ட தெற்கு தீபகற்பப் பகுதி முழுவதும் தங்கள் பேரரசை விரிவுபடுத்தினர். வங்காள விரிகுடா பகுதியில் சோழப் பேரரசு சுமார் 3,600,000 கி.மீ2 அளவிற்குப் பரவி இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில் இருந்த ஸ்ரீ விஜயா பேரரசு பகுதியையும் சோழரின் கடற்படை கட்டுப்பாட்டில் கொண்டிருந்தது.

வடமேற்கு பகுதியிலிருந்து வந்த இசுலாமிய படைகளின் ஊடுருவல் காரணமாக இந்தியாவின் மற்ற பகுதிகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் தமிழ்நாட்டின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. பதினான்காம் நூற்றாண்டில் பண்டைய மூன்று பேரரசுகளின் வீழ்ச்சி காரணமாக, தமிழ்நாடு விஜயநகரப் பேரரசின் ஒரு அங்கமாக மாறியது. விஜயநகரப் பேரரசின் கீழ் தெலுங்கு பேசும் நாயக்கர் ஆட்சியாளர்கள் தமிழ்ப் பகுதியை ஆட்சி செய்தனர். மராத்தியர்களின் குறுகிய கால வருகை தமிழ்ப் பகுதியில் ஐரோப்பிய வணிக நிறுவனங்களின் வருகைக்கு வழிவகுத்தது. பதினேழாம் நூற்றாண்டின் போது இவ்வாறு வணிகம் செய்ய வந்தவர்கள் இறுதியில் இந்தப் பகுதியின் பூர்வீக ஆட்சியாளர்களை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தனர். தென்னிந்தியாவின் பல பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாகாணம் பதினெட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இப்பகுதி பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியால் நேரடியாக ஆட்சி செய்யப்பட்டது. இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு மொழியியல் எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்பட்டது.

வரலாற்றுக்கு முந்தைய காலம்

பழைய கற்காலம்

தமிழ்நாட்டின் பகுதிகளில் பழங்கற்கால குடியிருப்புகள் இருந்த வரலாற்றுக்கு முற்பட்ட காலப்பகுதியானது கி.மு 500,000 ஆண்டிலிருந்து கி.மு 3000 ஆண்டு வரை நீடித்திருந்ததாக மதிப்பிடப்படுகிறது. பழங்கற்காலத்தின் பெரும்பாலான காலகட்டங்களில் இப்பகுதியில், அடர்த்தியற்ற காட்டுப் பகுதிகள் அல்லது புல்வெளி சார்ந்த சுற்றுச்சூழலில் அமைந்த ஆற்றுப் பள்ளதாக்குகளுக்கு அருகிலேயே மனிதர்கள் வாழ்ந்து வந்தனர். இந்தப் பகுதிகளில் மக்கட்தொகை அடர்த்தி மிகக் குறைவாக இருந்தது ஆகையால் தென்னிந்தியாவில் இரண்டு இடங்களில் மட்டுமே தொடக்க பழங்கற்கால கலாச்சாரம் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னையின் வடமேற்கு பகுதியில் உள்ள அத்திரம்பாக்கம் பள்ளதாக்கு இந்தப் பகுதிகளில் ஒன்றாகும்.[2] தமிழ்நாட்டின் வடக்குப் பகுதிகளைச் சுற்றி பழங்கற்காலத்திய விலங்குகளின் புதைப்படிமங்கள் மற்றும் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் சார்ந்த ஆய்வுகள் கூறுகின்றன. இவை கி.மு 300,000 ஆண்டு காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம்.[3] தென்னிந்தியாவில் வாழ்ந்த மனிதர்கள் பெரும்பாலும் பண்டைய "பழங்கற்காலத்தில்" நீண்ட காலம் வாழ்ந்த ஹோமோ எரக்டஸ் இனத்தைச் சேர்ந்தவர்களாவர். மேலும் இவர்கள் கைக்கோடரி மற்றும் வெட்டுக்கத்தி ஆகியவற்றைப் பயன்படுத்தி வேட்டையாடி சேகரித்து வாழும் மக்களாக இருந்தனர்.[4]

50,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தற்கால மனித இனத்தின் (ஹோமோ செப்பியன்ஸ் செப்பியன்ஸ் ) மூதாதைய இனத்தினர் மிகவும் மேம்பட்ட நிலையிலும், பல்வேறு கற்களைப் பயன்படுத்தி தகடு போன்ற கருவிகள் மற்றும் மெல்லிய நுண்தகடு கருவிகளையும் உருவாக்கி பயன்படுத்தியிருந்தனர். சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து நுண்கல் கருவிகள் என்று அறியப்படும் இன்னும் சிறிய கருவிகளை மனிதர்கள் உருவாக்கினர். சூரிய காந்தக் கல், அகேட் கல், சிக்கிமுக்கி கல், குவார்ட்ஸ் கல் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி நுண்கற்கள் கருவிகளை மனிதர்கள் உருவாக்கினர். 1949 ஆம் ஆண்டில், இது போன்ற நுண்கல் கருவிகளை திருநெல்வேலி மாவட்டத்தில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.[5] நுண்கற்கள் காலமானது கி.மு 6000-3000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலமாகும் என தொல்லியல் துறை ஆய்வுகள் கூறுகின்றன.[6]

புதிய கற்காலம் தொகு
தமிழ்நாட்டில் சுமார் கி.மு 2500 ஆண்டு புதிய கற்காலம் தொடங்கியது. சாணைபிடித்தல் மற்றும் மெருகேற்றல் போன்ற முறைகளைப் பயன்படுத்தி புதிய கற்காலத்தைச் சேர்ந்த மனிதர்கள் தங்கள் கற்கருவிகளுக்கு நயமான வடிவம் அளித்தனர். பண்டைய எழுத்துக்களைக் கொண்ட புதிய கற்காலத்தைச் சேர்ந்த கோடரியின் மேற்பகுதி தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[7] புதிய கற்கால மனிதர்கள் பெரும்பாலும் சிறிய சமதளமான மலைகள் அல்லது மலையின் அடிவாரத்தில், சிறிய, ஏறத்தாழ நிரந்தரமான குடியிருப்புகளில் வாழ்ந்தனர். மேய்ச்சல் காரணங்களுக்காக அவ்வப்போது அவர்கள் இடம் விட்டு இடம் பெயர்ந்தனர். அவர்கள் இறந்தவர்களை பள்ளங்கள் அல்லது புதைகலங்களில் புதைத்து சடங்குகளை முறையாகச் செய்தனர். அவர்கள் ஆயுதங்கள் மற்றும் கருவிகளை உருவாக்க தாமிரத்தைப் பயன்படுத்தவும் தொடங்கினர்.

இரும்புக் காலம் தொகு
இரும்பைப் பயன்படுத்தி ஆயுதங்கள் மற்றும் கருவிகளை வடிவமைக்கும் முறையை மனிதர்கள் இரும்புக் காலத்தின் போது தொடங்கினர். பல நூறு இடங்களில் காணப்படும் பெருங்கற்களாலான இடுகாடுகளைக் கொண்டு தீபகற்ப இந்தியாவில் இரும்புக் காலக் கலாச்சாரம் இருந்ததை அறிய முடிகிறது.[8] இடுகாடு நினைவுச் சின்னங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு மற்றும் அவற்றின் வகைகளைக் கொண்டு வடக்குப் பகுதியிலிருந்து தெற்குப் பகுதிக்கு இரும்புக் கால குடியேற்றங்கள் பரவியதாகத் தெரிகிறது. திருநெல்வேலி மாவட்டத்தின் ஆதிச்சநல்லூர் மற்றும் இந்தியாவின் வடக்கு பகுதிகளில் நடைபெற்ற அகழ்வாய்வுகளை ஒப்பிடும் போது பெருங்கற்களாலான குடியேற்றங்கள் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்ததற்கான அடையாளங்கள் கிடைத்தன.[9]

சுமார் கி.மு 1000 வது ஆண்டைச் சேர்ந்த பெருங்கற்களாலான புதைகல இடுகாடுகள் இருந்ததற்கான தெளிவான முற்கால அடையாளங்கள் இடுகாடுகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன, குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 24 கி.மீ தொலைவில் இருக்கும் ஆதிச்சநல்லூர் என்ற இடத்தில் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தொல்பொருள் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் பூமியிலிருந்து 157 புதைகலங்களை அகழ்ந்தெடுத்தனர். அவற்றில் 15 கலங்களில் மனிதனின் மண்டை ஓடு, எலும்புக் கூடுகள் மற்றும் மற்றும் எலும்புகள், உமி, அரிசி தானியங்கள், கருகிய அரிசி மற்றும் புதிய கற்கால கோடரிக் கருவி ஆகியவற்றைக் கொண்டிருந்தன. கண்டெடுக்கப்பட்டுள்ள புதைகலத்தில் எழுத்தப்பட்ட எழுத்துகள், 2800 ஆண்டுகளுக்கு முந்தைய புதிய கற்காலத்தின் தமிழ்-பிராமி வரிவடிவத்தை ஒத்திருப்பதாக இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.[10] தொடர்ந்து அகழ்வாய்வு சோதனைகளை மேற்கொள்ளுவதற்கான தொல்லியல் களமாக ஆதிச்சநல்லூர் அறிவிக்கப்பட்டுள்ளது.[11][12]

தற்போதைய பொதுவான காலத்திற்கு முந்தைய தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் பற்றிய குறிப்புகள், கி.மு 300 ஆண்டைச் சேர்ந்த அசோகரின் சாசனத்திலும் கி.மு 150 ஆண்டைச் சேர்ந்த கதிகும்பா கல்வெட்டிலும் (ஓரளவு) கண்டறியப்பட்டுள்ளது. மிகப் பழைய வட்டெழுத்து ரீதியான சான்றில் தமிழ் நாட்டில் இருந்த ஆட்சி பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன, அதில் பாண்டிய நாட்டிலிருந்து களப்பிரர்களை வெளியேற்றிய பாண்டிய அரசன் கடுங்கோன் (c.560–590 CE) என்பவனைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது - நீலகண்ட சாத்திரி, தென்னிந்தியாவின் வரலாறு பக்கம் 105, 137

முற்கால வரலாறு தொகு
முதன்மைக் கட்டுரை: சங்க காலம்

கார்வேலாவின் ஹத்திகும்பா கல்வெட்டு
பண்டைய தமிழ்நாட்டில், வேந்தர் என அழைக்கப்பட்ட அரசர்களின் தலைமையின் கீழ் இருந்த மூன்று முடியாட்சி மாநிலங்களும் வேள் அல்லது வேளிர் என்ற பட்டப் பெயர் கொண்டு அழைக்கப்பட்ட பல பழங்குடி இனத் தலைவர்களின் தலைமையில் இருந்த பழங்குடி இனக் குழுக்களும் இருந்தன.[13] இவர்களுக்கும் அடுத்ததாக, உள்ளூர் பகுதிகளின் இனக் குழுக்களின் தலைவர்கள் இருந்தனர், இவர்கள் கிழார் அல்லது மன்னர் என அழைக்கப்பட்டனர்.[14] கி.மு மூன்றாம் நூற்றாண்டின் போது தக்காணப் பீடபூமி மௌரியப் பேரரசின் ஒரு அங்கமாக இருந்தது. கி.மு முதல் நூற்றாண்டின் இடைப்பகுதி முதல் கி.பி இரண்டாம் நூற்றாண்டு வரை இந்த பகுதி சாதவாகனர் வம்சத்தினரால் ஆளப்பட்டது. வடக்கு பகுதியைச் சேர்ந்த இந்தப் பேரரசுகளின் கட்டுப்பாட்டிலிருந்து தமிழ் பகுதி தன்னிச்சையாக இருந்தது. தமிழ் அரசர்கள் மற்றும் குழுத்தலைவர்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். பெரும்பாலும் அவர்கள் சண்டையிடுவது இடங்களுக்காகவே. அரசனின் நீதிமன்றங்கள் ஆற்றலைப் பகிர்ந்தளிப்பதற்கு பதிலாக சமூக நிகழ்வுகளுக்கான மையங்களாக இருந்தன. அவை வளங்களைப் பகிர்ந்தளிக்கும் மையங்களாக இருந்தன. ஆட்சியாளர்கள் படிப்படியாக வட இந்தியார்களின் ஆதிக்கம் மற்றும் வேதக் கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கினர். இவைகள் ஆட்சியாளரின் நிலையை மேம்படுத்த பலி கொடுக்கும் பழக்கத்தையும் ஊக்குவித்தன.[15]

அசோகப் பேரரசின் கீழ் இல்லாத பேரரசுகள் மற்றும் இந்தப் பேரரசுடன் நட்பு நிலையில் இருந்த பேரரசுகள் பற்றிய தகவல்கள் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுடன் சேர்ந்து சோழர்கள், பாண்டியர்கள் மற்றும் சேரர்களின் வம்சங்கள் (கி.மு 273-232) அசோகத் தூண்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.[16][17] நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த தமிழ் பேரரசுகளின் கூட்டமைப்பைபற்றி கி.மு 150 ஆண்டைச் சேர்ந்த கலிங்கப் பேரரசை ஆட்சி செய்த அரசன் கார்வேலனின் ஹத்திகும்பா கல்வெட்டு, குறிப்பிடுக்கிறது.[18]

முற்கால சோழர்களில் கரிகாலச் சோழன் மிகப் புகழ்பெற்றவராக இருந்தார். சங்க இலக்கியங்களின் பல்வேறு செய்யுள்களில் கரிகாலச் சோழன் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.[19] பின்னாளில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் நூலில் வரும் பல்வேறு கதைகளிலும் கரிகாலன் பற்றிய செய்திகள் முக்கிய பொருளாக இருந்தது. மேலும் 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இலக்கிய நூல்கள் மற்றும் கல்வெட்டுகளிலும் கரிகாலன் பற்றிய தகவல்கள் உள்ளன. இமாலயம் வரையிலான இந்தியா முழுவதையும் வென்றவன் எனவும் நிலமானியங்களைக் கொண்டு காவேரி ஆற்றின் வெள்ளத்தை தடுப்பதற்காக கரைகளைக் கட்டியவன் எனவும் இந்த நூல்கள் விளக்குகின்றன.[20] சங்க இலக்கியங்களில் இந்த தகவல்கள் இல்லை என்பதால் இந்த வரலாறு பற்றி வெளிப்படையாக தெரிவதில்லை. சோழர்களில் மற்றொரு புகழ்ழெற்ற மன்னன் கோச்செங்கண்ணன் ஆவான். சங்க கால இலக்கியப் பாடல்கள் பலவற்றில் அவனைப் பற்றி புகழ்ந்து பாடப்பட்டுள்ளது. இடைக்காலத்தின் போது சைவ அறிவாளராகவும் கருதப்பட்டார்.[21]


தொலெமியின் நிலப்படக்கலையை தொடர்ந்து உருவாக்கப்பட்ட தென்னிந்தியாவின் பழமையான வரைபடம்.
இந்திய தீபகற்பத்தின் தென்கோடிப் பகுதியான கொற்கையிலிருந்து முதலில் ஆட்சி செய்ய தொடங்கிய பாண்டியர்கள் பின்னாளில் மதுரை நகருக்கு மாறினர். சங்க இலக்கியத்திலும் பாண்டியர்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதே காலத்தில் இருந்த கிரேக்க மற்றும் உரோமானிய ஆவணங்களிலும் பாண்டியர்கள் பற்றி உள்ளது. மெகஸ்தனிஸ், இந்திகா என்ற தனது நூலில் பாண்டியப் பேரரசு பற்றி குறிப்பிட்டுள்ளார்.[22] மதுரையின் தற்போதைய மாவட்டங்கள், திருநெல்வேலி மற்றும் தெற்கு கேரளாவின் சில பகுதிகளை பாண்டியர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பாண்டியர்கள் கிரேக்கம் மற்றும் உரோம் ஆகிய நாடுகளுடன் வணிகத் தொடர்பையும் கொண்டிருந்தனர்.[23] பாண்டியர்கள் தமிழகத்தின் மற்ற பேரரசுகளுடன் இணைந்து ஈழத்தின் தமிழ் வணிகர்களுடன் வணிக மற்றும் திருமணத் தொடர்பையும் கொண்டிருந்தனர். சங்க இலக்கியங்களின் பல்வேறு பாடல்களில் பாண்டிய மன்னர்கள் பலர் பற்றி குறிப்புகள் காணப்படுகின்றன. இவர்களில் 'தலையாலங்கானம் வென்ற' நெடுஞ்செழியன் மற்றும் தியாகச் செயல்களுக்கான சிறப்பான ஒருவராக குறிப்பிடப்படும் ஆரான் முதுகுடுமி பெருவழுதி என்ற மற்றொரு நெடுஞ்செழியன் ஆகியோர் சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளனர். அகநானூறு மற்றும் புறநானூறு போன்ற தமிழ்நூல்களின் தொகுப்புகளில் உள்ள சிறிய பாடல்கள், மதுரைக் காஞ்சி மற்றும் நெடுநல்வாடை போன்ற இரண்டு முக்கிய நூல்களிலும் (பத்துப்பாட்டு தொகுப்புகளில் உள்ளது) சங்க காலத்தில் பாண்டிய பேரரசில் மேற்கொள்ளப்பட்ட சமூக மற்றும் வணிக ரீதியான செயல்கள் பற்றிய செய்திகள் உள்ளன. மூன்றாம் நூற்றாண்டின் முடிவில் களப்பிரர்களின் ஊடுருவல் காரணமாக முற்காலப் பாண்டியர்களின் புகழ் மறைந்து போனது.

தென்னிந்தியாவின் மலபார் கடற்கரை அல்லது அதன் மேற்கு பகுதியுடன் இணைந்த, தற்போதைய கேரள மாநிலம் ஆகியவை ஒன்றிணைந்த பகுதியாக சேரர்களின் பேரரசு இருந்தது. கடல் வழியாக ஆப்பிரிக்காவுடன் வாணிகம் செய்வதற்கு ஏற்ற வகையில் அவர்களின் இருப்பிடம் இருந்தது.[24][25] இந்தியாவின் மாநிலமான கேரளாவில் உள்ள இன்றைய மக்கள், பண்டையக் காலத்தில் தங்கள் பகுதியை ஆட்சி செய்த சேரர்கள் பேசிய மொழியே பேசுகின்றனர். மேலும் தமிழ் நாட்டின் பிற பகுதிகளுடனும் இவர்கள் பரவலான தொடர்பு கொண்டிருந்தனர். இது ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டு வரை மட்டுமே வழக்கத்தில் இருந்தது, இதன் பிறகு தமிழ் மொழியில் வடமொழியின் தாக்கம் காரணமாக மொழியின் தனிப்பட்ட அங்கீகாரம் மாறி புதிய மொழி ஒன்று பயன்பாட்டிற்கு வந்தது.[26]

பழமையான இலக்கியங்கள் தமிழில் வளர்வதற்கு இந்த முற்கால பேரரசுகள் ஆதரவளித்தன. சங்க இலக்கியம் என்று அறியப்படும் செவ்வியல் இலக்கியம் கி.மு 200 முதல் 300 ஆம் ஆண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்ததாக அறியப்படுகிறது.[27][28] சங்க இலக்கியத்திலுள்ள பாடல்கள் பெரும்பாலும் உணர்வு மற்றும் பொருள் சார்ந்த தலைப்புகளையே கொண்டுள்ளன. இடைக்காலத்தில் இவைகள் வகைப்படுத்தப்பட்டு பல்வேறு தொகை நூல்களாக திரட்டப்பட்டுள்ளன. செழுமையான நிலம் மற்றும் பல்வேறு தொழில் சார்ந்த மக்கள் குழுக்கள் பற்றியே இந்த சங்கப் பாடல்கள் சித்தரிக்கின்றன. இந்த பகுதிகளை ஆட்சி செய்வது பரம்பரை குடியாட்சி முறையில் இருந்தது. எனினும் இந்த பகுதிகளின் செயல்பாடுகள் மற்றும் ஆட்சி செய்பவரின் ஆற்றல் ஆகியவை முன்பே இயற்றப்பட்ட ஒழுங்குமுறைகளை (தர்மம் ) பின்பற்றியே இருந்தது.[29] மக்கள் தங்களின் அரசரிடம் மிகவும் விசுவாசமாக இருந்தனர். உலகம் சுற்றும் புலவர்களும் இசைக்கலைஞர்களும் நடனக் கலைஞர்களும் தாராள மனமுடைய அரசனின் அவைகளை அலங்கரித்தனர். இசை மற்றும் நடனக் கலைகள் மேம்பட்டு புகழ்பெற்றிருந்தன. சங்ககாலப் பாடல்களில் பல்வேறு வகையான இசைக் கருவிகள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தன. தெற்கு பகுதி மற்றும் வடக்கு பகுதி நடனங்களை ஒருங்கிணைத்து புதிய வகை நடனம் ஆடுவது இந்த காலத்தில் தான் தொடங்கியது. இந்த வகை நடனங்கள் காப்பியமான சிலப்பதிகாரத்தில் முழுமையாக வெளிப்பட்டு இருந்தது.[30]

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகம் சிறப்பான முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டு இயக்கத்தில் இருந்தது. தொல்லியல் துறை ஆய்வுகள் மற்றும் இலக்கியங்களில் யுவனர்களுடனான வெளிநாட்டு வணிகம் செழுமையாக இருந்தததைக் கூறுகின்றன. தென்னிந்தாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் இருந்த முசிறி மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதியின் துறைமுக நகரம் பூம்புகார் ஆகிய இரு இடங்களில் ஏராளமான கப்பல்கள் நிறுத்தப்பட்டு வெளிநாட்டுப் பொருள்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்து வணிக மையங்களாக விளங்கின.[31] இந்த வணிகம் இரண்டாம் நூற்றாண்டிற்கு பிறகு வீழ்ச்சியடையத் தொடங்கியது. மேலும் உரோமானிய அரசுக்கும் பண்டைய தமிழ் நாட்டிற்கும் இருந்த நேரடி உறவு அரபியர்கள் மற்றும் கிழக்கு ஆப்ரிக்காவை சேர்ந்த ஆக்சுமைட்களின் நேரடி வணிகத்தால் சிதைவுறத் தொடங்கியது. உள்நாட்டு வணிகம் சிறப்பாக இருந்தது, பொருள்கள் வாங்குவது மற்றும் விற்பது பண்டகமாற்று முறைப்படி நடந்தது. பெரும்பாலான மக்களுக்கும் அதிக நிலங்களைக் கொண்டிருந்த பரம்பரை விவசாயிகளான வெள்ளாளர்களுக்கும் விவசாயம் தலைமைத் தொழிலாக இருந்தது.[32]

இடைக்காலம் (300–600) தொகு
முதன்மைக் கட்டுரை: களப்பிரர்
கி.மு 300 முதல் 600 ஆம் ஆண்டு வரையிலான சங்க காலம் முடிவுற்ற பிறகு தமிழ் பகுதியில் என்ன நடந்தது என்பதற்கான தகவல் இல்லை. சுமார் 300 ஆம் ஆண்டுவாக்கில் களப்பிரரின் வருகையினால் அனைத்துப் பகுதிகளும் பாதிப்புக்குள்ளாயின. தமிழ் மன்னர்கள் நிறுவி இருந்த ஆட்சியை நீக்கிவிட்டு நாட்டில் கழுத்தை நெறிக்கும் ஆட்சியை களப்பிரர்கள் மேற்கொண்டனர். இதனால் பிற்கால இலக்கியங்களில் களப்பிரர் ஆட்சியாளர்கள் "கொடுங்கோலர்கள்" என்று குறிப்பிடப்பட்டது.[33] களப்பிரரின் தோற்றம் மற்றும் ஆட்சிப் பற்றிய தகவல்கள் அவ்வளவாக இல்லை. தங்கள் நினைவாக தொல்பொருள் அல்லது நினைவுச் சின்னத்தையோ இவர்கள் அதிக அளவில் விட்டுச் செல்லவில்லை. களப்பிரர் பற்றிய தகவல்கள் புத்தம் மற்றும் சமண இலக்கியங்களில் மட்டுமே அங்குமிங்குமாக உள்ளன.[34]

களப்பிரர்கள் புத்தம் அல்லது சமண நம்பிக்கையைப் பின்பற்றியதாகவும், இவர்கள் முற்கால நூற்றாண்டுகளில் தமிழ் பகுதியில் வாழ்ந்த பெரும்பாலான மக்கள் பின்பற்றிய இந்து மதங்களுக்கு (அஸ்திகா பள்ளிகள் மூலம் ) எதிராக இருந்தனர் எனவும் வரலாற்றாசிரியர்கள் ஊகஞ்செய்கின்றனர்.[35] ஏழாம் நூற்றாண்டு மற்றும் எட்டாம் நூற்றாண்டில் களப்பிரர் ஆட்சி வீழ்ந்த பிறகு வந்த இந்து மதத்தைச் சேர்ந்த அறிஞர்கள் தங்கள் நூல்களில் இவர்கள் பற்றி எந்த ஒரு குறிப்பையும் குறிப்பிடவில்லை. குறிப்பாக இவர்களது ஆட்சியை பற்றி எதிர்மறையாகவே குறிப்பிட்டு வைத்தனர். இவர்களது ஆட்சிக்காலம் ஓர் "இருண்ட காலம்" (இடைக்காலம்) என அழைக்கப்பட இதுவே காரணமாக இருக்கலாம். இங்கு ஆட்சி செய்து கொண்டிருந்த ஆட்சியாளர் குடும்பங்களில் சில களப்பிரர்களிடமிருந்து விலகி வடக்கு நோக்கி சென்று தங்களுக்கான இடங்களைத் தேர்வு செய்து கொண்டனர்.[36] பௌத்தம் மற்றும் சமண சமயங்கள் சமூகம் முழுவதும் பரவி நன்னடத்தை நெறிக் கவிதைகளுக்கு முக்கியத்துவம் அளித்தது.

எழுதுவது என்பது அதிகமானது, மேலும் தமிழ்-பிராமி எழுத்து முறையில் இருந்து தோன்றிய வட்டெழுத்து தமிழ் எழுத்துக்களை எழுதுவதற்கான தலைமை வரிவடிவமாக ஆனது.[37] தொடக்க நூற்றாண்டுகளில் எழுத்தப்பட இசையுடன் பாடும் பாடல்கள் ஒன்றாக திரட்டப்பட்டுள்ளன. இதிகாசச் செய்யுளான சிலப்பதிகாரம் மற்றும் வாழ்வியல் நெறிகளை கற்பிக்கும் திருக்குறள் போன்றவை இந்த காலகட்டங்களில் எழுதப்பட்டவையாகும்.[38] களப்பிரர் அரசர்கள் காலத்தில் இருந்த பௌத்தம் மற்றும் சமண அறிஞர்கள் அரசர்களால் ஆதரிக்கப்பட்டனர், இதனால் அக்கால இலக்கியங்களின் இயல்புகளில் அதன் தாக்கம் இருந்தது. இவ்வகையான இயல்புகளைக் கொண்ட பல்வேறு நூல்களும் இக்காலகட்டங்களில் இருந்த சமண மற்றும் பௌத்த சமயத்தை சார்ந்த எழுத்தாளர்களின் நூல்களாகும். நடனம் மற்றும் இசைத் துறையில், நாட்டுப்புற வடிவங்களுக்கு பதிலாக வடக்கத்திய பண்புகளின் பாதிப்பைக் கொண்ட புதிய வடிவங்களைப் பின்பற்றும் புதிய வகைகளுக்கு மேட்டுக்குடி மக்கள் ஆதரவளித்தனர். பழைய கற்கோவில்களில் சில இந்த காலகட்டத்தைச் சேர்ந்தவையாகும். பல்வேறு தெய்வங்களுக்காக கட்டப்பட்ட செங்கல் கோவில்களும் (கோட்டம் , தேவகுலம் , பள்ளி ) இலக்கியப் படைப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. பல்லவர்கள் மற்றும் பாண்டிய அரசுகளின் மீட்டெழுச்சியால் ஏழாம் நூற்றாண்டில் களப்பிரரின் ஆட்சி அகன்றது.[39]

களப்பிரர்கள் வெளியேறிய பிறகும் சமண மற்றும் பௌத்த மதத்தின் தாக்கம் தமிழ்நாட்டில் இருந்தது. முற்கால பாண்டிய மற்றும் பல்லவ அரசர்கள் இந்த மதங்களைப் பின்பற்றினர். இந்து மதம் நலிவுறுவதை பொறுத்துக் கொள்ள இயலாத இந்து மதத்தினரின் எதிர்வினைகள் வளர்ந்து ஏழாம் நூற்றாண்டின் பிந்தைய பகுதிகளில் உயர்க்கட்டத்தை அடைந்தன.[40] இந்து மதம் புத்துயிர் பெற்ற சமயத்தில் சைவம் மற்றும் வைணவ இலக்கியங்கள் பல உருவாக்கப்பட்டன. புகழ்பெற்ற பற்று இலக்கியங்கள் வளர்ச்சியடைய பல்வேறு சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் தூண்டுதலாக இருந்தனர். ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார் நாயன்மார்களில் முதலானவராகக் கருதப்படுகிறார். சைவ இறைவாழ்த்து பாடகர்களான சுந்தரமூர்த்தி, திருஞான சம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரும் இந்த காலகட்டத்தை சார்ந்தவர்கள் தான். பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார் போன்ற வைணவ ஆழ்வார்கள் வழங்கிய தெய்வ திருமறைகள் மற்றும் பாடல்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்ற நான்காயிரம் பாடல்களைக் கொண்ட திரட்டாக தொகுக்கப்பட்டுள்ளது.[41]

பேரரசுகளின் காலம் (600–1300) தொகு
வரலாற்றின் இடைக்காலங்களில் தமிழ்நாடு பல்வேறு பேரரசுகளின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் கண்டது. இந்த பேரரசுகளில் சிலர் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் தங்கள் ஆதிகத்தைச் செலுத்தி மிகவும் புகழ்பெற்று இருந்துள்ளனர். சங்க காலத்தின் போது மிக தலைமையாக இருந்த சோழர்கள் முதல் சில நூற்றாண்டுகளின் போது முற்றிலும் காணப்படவில்லை.[42] பாண்டியர்கள் மற்றும் பல்லவர்களுக்கிடையே போட்டியுடன் தொடங்கிய இந்தக் காலம் சோழர்களுக்கு புத்துயிர் அளிப்பதாக இருந்தது. சோழர்கள் சிறப்பான முறையில் அதிகாரம் பெற்று ஆட்சி செய்தனர். சோழர்களின் வீழ்ச்சி பாண்டியர்களுக்கு புத்தெழுச்சியாக அமைந்தது. கோவில் கட்டுதல் மற்றும் சமய இலக்கியம் பாண்டியர்கள் ஆட்சிக் காலத்தில் சிறப்பானவையாக அமைந்த காரணத்தினால் இந்த காலகட்டத்தில் இந்து மதம் மீண்டும் பலப்படுத்தப்பட்டது.[43]

முந்தைய காலத்தில் இருந்த சமணம் மற்றும் பௌத்த மதங்களின் தாக்கங்களை குறைத்து இந்து மதத்தின் பிரிவுகளான சைவம் மற்றும் வைணவம் ஆகியவை ஆதிக்கத்தில் இருந்தன. சோழ அரசர்கள் அதிகமாக ஆதரித்த சைவ மதம், கிட்டத்தட்ட நாட்டின் மதமாக இருந்தது.[44] இன்று இருக்கும் பழங்காலக் கோவில்களில் சில கோவில்கள் பல்லவர்களால் இந்தக் காலகட்டத்தில் கட்டப்பட்டதாகும். மாமல்லபுரத்தில் பாறையைக் குடைந்து கட்டப்பட்டுள்ள கோயில் மற்றும் காஞ்சிபுரத்தில் இருக்கும் கம்பீரமான கைலாசநாதர் கோவில் மேலும் வைகுண்டபெருமாள் கோவில் ஆகியவை பல்லவரின் கலைக்கு எடுத்துக்காட்டுகளாகும். அதிகமான வெற்றிப்பேறு மூலம் தாங்கள் அடைந்த செல்வங்களைக் கொண்டு எப்போதும் நிலைத்திருக்கும் வகையில் அமைந்துள்ள கோவில்களில் ஒன்றான தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில் மற்றும் வெண்கல சிற்பங்கள் சோழர்களின் கலைக்கு எடுத்துக்காட்டுகளாகும். சிவன் மற்றும் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்களுக்கு காணிக்கையாக கிடைக்கும் பணம், நகைகள், நிலங்கள், விலங்குகள் ஆகியவற்றால் கோவில்கள் பொருளாதார மையங்களாக மாறின.[45]

தமிழ்நாடு முழுவதும் தமிழை எழுதுவதற்கான தமிழ் வரிவடிவம் மாற்றப்பட்டு வட்டெழுத்து வரிவடிவம் பயன்படுத்தப்பட்டது. மதச்சார்பற்ற மற்றும் மதம் சார்ந்த இலக்கியம் இந்தக் காலகட்டத்தில் வளம் பெற்றது. தமிழ் காப்பியமான கம்பரின் இராமாவதாரம் பதின்மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகும். குழந்தைகளுக்கான பாடல்களை எழுதுவதில் மிகவும் ஆர்வம் கொண்ட ஔவையார் கம்பரின் சமகாலத்தவராவார். மதச்சார்பற்ற இலக்கியங்கள் பொதுவாக அரசர்களைப் பற்றி புகழ்ந்து பாடுவதற்காக எழுதப்படும். முந்தைய காலத்தில் எழுதப்பட்ட சமய பாடல்கள் மற்றும் சங்க காலத்தின் பழைய இலக்கியங்கள் கண்டறியப்பட்டு தொகை நூல்களாக தொகுக்கப்பட்டன. சமயம் சார்ந்த சடங்குகள் மற்றும் விழாச் சடங்குகளில் சமய ஆசான்கள் வடமொழியைப் பயன்படுத்தினர். இதன் மூலம் வடமொழி ஆதரிக்கப்பட்டது. முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில் வாழ்ந்த நம்பி ஆண்டார் நம்பி என்பவர் சைவ நூல்களை ஒன்றாக திரட்டி திருமுறைகள் என்ற பதினோரு நூல்களாக வெளியிட்டுள்ளார். இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் (1133–1150 CE) வாழ்ந்த சேக்கிழார் எழுதிய பெரியபுராணம் என்ற நூலில் சைவம் பற்றிய தகவல்கள் வரைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. முதலாம் குலோத்துங்க சோழன் இரண்டு முறை கலிங்க நாட்டிற்கு படையெடுத்துச் சென்றான் என்பது பற்றிய செய்திகளைக் கூறும் செயம்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி வாழ்க்கை வரலாறு பற்றிய பழங்கால எடுத்துக்காட்டாகும்.[46]

பல்லவர்கள் தொகு
முதன்மைக் கட்டுரை: பல்லவர்

பல்லவர்கள் மாமல்லபுரத்தில் உருவாக்கிய கடற்கரை கோவில் (எட்டாம் நூற்றாண்டு)
முதலாம் மகேந்திரவர்மன் மற்றும் அவரது மகன் மாமல்ல முதலாம் நரசிம்மவர்மன் ஆகியோரின் தோற்றத்துடன் ஏழாம் நூற்றாண்டு முதல் பல்லவர்களின் ஆட்சியை தமிழ்நாடு கண்டது. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு பல்லவர்கள் ஆட்சி அடையாளம் காணப்படவில்லை.[47] சாதவாகனர் அரசர்களின் செயல் அலுவலர்களாக பல்லவர்கள் இருந்தார்கள் என்று அறிஞர்களால் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.[48] சாதவாகனர்களின் வீழ்ச்சிக்கு பின்பு ஆந்திரா மற்றும் தமிழ்நாடு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் பல்லவர்கள் வைத்துக் கொண்டனர். பல்லவர்கள் தக்காணப் பீடபூமியை ஆட்சி செய்த வீடணுகுண்டினா என்பவருடன் திருமண உறவும் கொண்டிருந்தனர். சுமார் கி.பி 550 ஆண்டுவாக்கில் சிம்மவிஷ்ணு என்ற அரசனின் ஆட்சிக்காலத்திலேயே பல்லவர்கள் மிகவும் புகழ்பெறத் தொடங்கினர். சோழர்களை அடிமைப் படுத்தி தெற்கு பகுதியில் உள்ள காவேரி ஆறு பகுதிகள் வரை பல்லவர்கள் ஆட்சி செய்தனர்.

முதலாம் நரசிம்மவர்மன் மற்றும் பல்லவமல்லன் இரண்டாம் நந்திவர்மன் ஆட்சிக் காலத்தில் பல்லவர்கள் சிறப்பாக இருந்தனர். காஞ்சிபுரத்தை தலைநகரமாகக் கொண்டு தென்னிந்தியாவின் பல பகுதிகளை பல்லவர்கள் ஆண்டனர். பல்லவர்கள் காலத்தில் திராவிடக் கட்டடக்கலை உயரிய நிலையில் இருந்தது.[சான்று தேவை] யுனெசுகோவினால உலகப் பாரம்பரிய இடம் என்று அறிவிக்கப்பட்ட கடற்கரைக் கோவில் இரண்டாம் நரசிம்மவர்மன் அரசனால் கட்டப்பட்டது. சீனாவில் உள்ள பௌத்த மதத்தின் கொள்கையான சென் பிரிவை நிறுவிய போதி தர்மர் என்பவர் பல்லவ வம்சத்தின் இளவரசர் என்று பல்வேறு அடையாளங்கள் கூறுகின்றன.[49][50]

வடப்பியை நடுவாகக் கொண்டு ஆறாம் மற்றும் ஏழாம் நூற்றாண்டில் சாளுக்கியர் குலம் தக்காண பீடபூமியின் மேற்கு பகுதியில் எழுச்சியடைந்தது. முதலாம் மகேந்திரவரமன் ஆட்சி காலத்தில் இரண்டாம் புலிகேசி (c.610–642) என்பவர் பல்லவ பேரரசின் மீது படையெடுத்தார். மகேந்திரவர்மனின் அடுத்தவரான நரசிம்மவர்மன் சாளுக்கியர் மீது திடீரென படையெடுத்து அவற்றைக் கைபற்றி வடப்பியை தனது வசமாக்கிக் கொண்டார். சாளுக்கியர் மற்றும் பல்லவர்களுக்கு இடையே இருந்த பகை 750 ஆம் ஆண்டில் சாளுக்கியர்கள் மறையும் வரை சுமார் 100 ஆண்டுகள் வரை தொடர்ந்திருந்தது. சாளுக்கியர்களும் பல்லவர்களும் பலமுறை சண்டையிட்டுள்ளனர். பல்லவர்களின் தலைநகரமான காஞ்சிபுரம் இரண்டாம் நந்திவர்மன் ஆட்சிக் காலத்தில் இரண்டாம் விக்ரமாதித்யா என்ற அரசனால் கைப்பற்றப்பட்டது.[51] இரண்டாம் நந்திவர்மன் நீண்ட ஆட்சிக் காலத்தைக் (732–796) கொண்டிருந்தார். 760 ஆம் ஆண்டில் கங்கைப் பேரரசைக் (தெற்கு மைசூர்) கைப்பற்ற பயணம் செய்த படைகளுக்கு இரண்டாம் நந்திவர்மன் தலைமை தாங்கினார். பல்லவர்கள் பாண்டியர்களுடனும் தொடர்ச்சியாக சண்டையில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் எல்லைப் பகுதி காவேரி ஆற்றின் கரைபபகுதிகள் வரை பரவியது. பாண்டியர்கள் மற்றும் சாளுக்கியர்கள் என்ற இரண்டு பேரரசுகளிடம் பகையாக இருந்த காரணத்தினால் இவர்களுக்கு எதிராக பல்லவர்கள் போரிட வேண்டியிருந்தது.

பாண்டியர்கள் தொகு
முதன்மைக் கட்டுரை: பாண்டியர்

பாண்டிய பேரரசு
தெற்குப் பகுதியில் களப்பிரர் ஆட்சியை வீழ்த்திய பெருமை பாண்டிய மன்னன் கடுங்கோன் (560–590) என்பவரைச் சாரும்.[52] கடுங்கோன் மற்றும் அவரது மகன் மாறவர்மன் அவனிசூளாமணி பாண்டியர்களின் ஆட்சிக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தினர். பாண்டிய மன்னன் சேந்தன் தனது ஆட்சிக் காலத்தில் ஆற்றலை சேர நாடு வரைக்கும் விரிவாக்கினார். இவரது மகன் அரிகேசரி பராந்தக மாறவர்மன் (c. 650–700) நீண்டகாலம் செழிப்பாக ஆட்சி செய்தார். அவன் பல போர்களின் மூலம் பாண்டியர்களின் ஆற்றலை விரிவாக்கினான். பாண்டியர்கள் பண்டைய காலத்திலிருந்தே புகழ்பெற்றவர்கள். பதின்மூன்றாம் நூற்றாண்டில், அப்போதிருந்த பேரரசுகளில் மிகவும் செல்வமிக்க பேரரசு என்று மார்க்கோ போலோ பாண்டிய பேரரசைக் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் ரோமன் பேரரசு வரையிலான பரவலான தொடர்புகளுடன் இருந்தனர், அத்தொடர்புகள் அரசியல் நயமிக்கவையாகவும் இருந்தன.[53]

தங்கள் ஆட்சி எல்லையை விரிவாக்கிய பின்னர், சில ஆண்டுகள் கழித்து பல்லவர் ஆட்சிக்கு பல்வேறு இடையூறுகளை பாண்டிய பேரரசு விளைவித்தது. பாண்டிய மன்னர் மாறவர்மன் இராசசிம்மா சாளுக்கியர் மன்னர் இரண்டாம் விகுரமாதிதியனுடன் கூட்டணி வைத்து பல்லவ அரசர் இரண்டாம் நந்திவர்மனைத் தாக்கினர்.[54] காவிரிக் கரையில் நடந்த போரில் முதலாம் வரகுனன் பல்லவர்களைத் தோற்கடித்தார். பாண்டியர்களுக்கு அதிகரித்து வரும் ஆற்றலை தடை செய்வதற்காக பல்லவ மன்னர் நந்திவர்மன், கொங்கு மற்றும் சேர நாடுகளின் தலைவர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டார். போர்வீரர்கள் பலமுறைப் போரிட்டுக் கொண்டாலும் இறுதியில் பாண்டிய மன்னர்களின் படையே வெற்றி பெற்றது. பாண்டியர்கள் சுரீமாற சுரீவல்லபா என்பவரின் துணையுடன் இலங்கை மீது படையெடுத்து 840 ஆம் ஆண்டில் வடக்குப் பகுதிகளை அழித்தனர்.[55]

சுரீமாறாவின் துணையுடன் பாண்டியர்களின் ஆட்சி ஆற்றல் தொடர்ந்து வளர்ந்தது. பல்லவர்களின் பல்வேறு பகுதிகள் பாண்டியர்களின் கட்டுப்பாட்டில் வந்தன. வடக்கில் தக்காண பீடபூமியின் சாளுக்கியர்களை தோற்கடித்த இராட்டுரகுடாசு அமைப்புகளால் தற்போது பாண்டியர்களுக்கு நெருக்கடி அதிகமானது. கங்கை மற்றும் சோழர்களின் துணையுடன் மூன்றாம் நந்திவர்மன் என்ற அரசனை பல்லவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சுரீமாறாவை தெள்ளாறு போரில் தோற்கடித்தனர். பல்லவர்களின் பேரரசு வைகை ஆறு வரை மீண்டும் நீண்டது. பல்லவ அரசன் நரிபதுங்க என்பவரால் அரிசில் என்ற இடத்தில் பாண்டியர்கள் தோற்கடிக்கப்பட்டனர் (c. 848). பல்லவர்களின் மேலாளுமையை பாண்டியர்கள் பிறகு ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று.[56]

சோழர்கள் தொகு
முதன்மைக் கட்டுரை: சோழர்
பாண்டியர்கள் மற்றும் பல்லவர்களுக்கிடையே இருந்த சண்டையைப் பயன்படுத்திக் கொண்டு 850 ஆம் ஆண்டுகளில் விசயாலய சோழர் தஞ்சாவூரைக் கைப்பற்றி இடைக்கால சோழர் ஆட்சிக்கான அடித்தளத்தை அமைத்தார். இடைக்காலத்தில் சோழர் வம்சத்தை விசயாலய சோழர் நிறுவினார். அவரது மகன் முதலாம் ஆதித்யா சோழர்களின் ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதற்கான உதவிகளைச் செய்தார். 903 ஆம் ஆண்டில் பல்லவ பேரரசுக்குள் நுழைந்து பல்லவ அரசன் அபராசிதாவை போரில் கொன்றதன் மூலம் பல்லவர்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.[57] முதலாம் பராந்தக சோழன் ஆற்றலில் பாண்டிய நாடு முழுவதும் சோழப் பேரரசு பரவியது. சோழப் பேரரசுக்குள் தங்களது பகுதிகளை விரிவாக்கம் செய்த இராட்டுராகுட்டா குழுக்களினால் தனது ஆட்சிக் காலத்தின் இறுதியில் முதலாம் பராந்தக சோழன் பாதிக்கப்பட்டார்.


ராஜேந்திர சோழரின் ஆட்சியில் சோழ பேரரசு1030).
மன்னர்களின் முறையற்ற ஆட்சித் திறமை, அரண்மனைக் கிளர்ச்சி மற்றும் வாரிசுகளின் தகராறு ஆகியவை ஏற்பட்டு அடுத்து வந்த ஆண்டுகளில் சோழர்கள் தற்காலிகமாக வீழ்ச்சியடைந்தனர். பலமுறை முயற்சி செய்தும் பாண்டிய நாட்டை முழுவதுமாக வீழ்த்த முடியவில்லை. மேலும் வடக்கு பகுதியில் இராட்டுராகுடா குழுவினரும் மிகவும் வலிமை வாய்ந்த எதிரிகளாக இருந்தனர். எனினும், முதலாம் இராசராச சோழனுக்குப் பிறகு 985 ஆம் ஆண்டு சோழர் ஆட்சி மீண்டும் மலர்ந்தது. இராசராசன் மற்றும் அவரின் மகனான முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் பொருளாதாரம் மற்றும் கலாச்சார ரீதியாக சோழர்கள் ஆசியாவில் கவனிக்கத்தக்க வீரர்களாக மாறினர். தெற்குப் பகுதியில் மாலத்தீவுகளில் இருந்து வடக்கில் வங்காளத்தில் உள்ள கங்கை ஆற்றங்கரைப் பகுதிகள் வரை சோழர்களின் ஆட்சிப் பகுதிகள் பரவி இருந்தன. தென்னிந்திய தீபகற்பம், இலங்கையுடன் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மாலத்தீவுகள் ஆகிய பகுதிகளில் இராசராச சோழன் வெற்றிக் கொண்டார். மலேய தீவுக்குழுமத்தில் இருந்த சுரீவிசயா பேரரசை தோற்கடித்து இராசேந்திர சோழன் சோழர்களின் ஆட்சியைப் பரப்பினார்.[58] பீகார் மற்றும் வங்காளப் பகுதியின் அரசனான மகிபாலா என்பவரை இவர் தோற்கடித்தார். வெற்றியைக் கொண்டாடும் விதமாக கங்கைகொண்ட சோழபுரம் (கங்கைப் பகுதியில் சோழர்கள் வெற்றி பெற்றதன் நினைவாக உருவாக்கப்பட்ட நகரம் ) என்ற புதிய தலைநகரத்தை உருவாக்கினார். சோழப் பேரரசு உயராற்றலில் இருந்த போது இலங்கையின் தெற்கு தீபகற்ப பகுதியிலிருந்து தங்களது பகுதிகளை வடக்கிலுள்ள கோதாவரி பகுதி வரை விரிவாக்கியது. இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் கங்கை ஆறு வரை நீண்டிருந்த பகுதிகளை சோழர்கள் அடக்கி ஆண்டனர். மலேய தீவுக்குழுமத்திலிருந்த சுரீவிசய பேரரசுக்குள் படையெடுத்து சோழப் பேரரசின் கடற்படை வீரர்கள் வெற்றி கண்டனர்.[59] சோழப் பேரரசின் இராணுவ வீரர்கள் தாய்லாந்து மற்றும் கம்போடியாவின் கெமர் பேரரசுகளிடம் நேரடியாக வரி வசூல் செய்தனர்.[60] இராசராசன் மற்றும் இராசேந்திர சோழன் போன்ற மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் சோழப் பேரரசு மிகவும் வளர்ச்சியடைந்தது. பேரரசை சுயமாக ஆட்சி செய்து கொள்ளும் பல உள்ளூர் பகுதிகளாகப் பிரித்தனர். அவற்றின் அலுவலர்கள் பொதுத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[61]


பெருவுடையார் ஆலயம்
இந்த காலம் முழுவதும், சோழர்கள் ஆட்சியை இலங்கையிலிருந்து அகற்ற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து போராடும் சிங்களர்கள், தங்களது பாரம்பரியப் பகுதிகளின் சுயாட்சியை மீண்டும் பெற முயற்சித்துக் கொண்டிருந்த பாண்டிய மன்னர்கள், சோழப் பகுதிகளைக் கைப்பற்றுவதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்த மேற்கு தக்காணப் பகுதிகளைச் சேர்ந்த சாளுக்கியர்கள் ஆகியோரால் சோழர்களுக்கு தொடர்ந்து தொல்லை ஏற்பட்டது. சோழர்கள் தங்களின் எதிரிகளுடன் இந்த வரலாற்றுக் காலம் முழுவதும் தொடர்ச்சியாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். சாளுக்கியர்களும் சோழர்களும் தங்களது ஆற்றலில் சம அளவில் இருந்தனர். துங்கபத்ரா ஆற்றை எல்லையாகக் கொள்வதற்கு இரண்டு பேரரசுகளும் இரகசியமாய் ஒப்புக் கொண்டனர். வெங்கி பேரரசில் சோழர்களின் தலையீடு காரணமாக இரண்டு பேரரசுகளுக்கிடையே கருத்து வேறுபாடு அதிகரித்துக் கொண்டிருந்தது. சோழர்களும் சாளுக்கியர்களும் பலமுறை போரிட்டுக் கொண்டனர். இவர்களது போர் சில நேரங்களில் முடிவில்லாத இக்கட்டான நிலையில் இருந்துள்ளது.

கோதாவரி ஆற்றின் தெற்கு கரையில் அமைந்துள்ள வெங்கி பகுதிகளைச் சுற்றியுள்ள கிழக்கு சாளுக்கியர்களுடனான சோழர்களின் திருமணம் மற்றும் அரசியல் உறவு இராசராசன் ஆட்சிக் காலத்தில் சோழர்கள் வெங்கி பேரரசுக்குள் நுழைந்ததிலிருந்து தொடங்கியது. வீரராஜேந்திர சோழனின் மகன் ஆதிராஜேந்திர சோழன் 1070 ஆம் ஆண்டு ஏற்பட்ட கலகத்தின் போது படுகொலை செய்யப்பட்டார். இவரைத் தொடர்ந்து சோழர்களின் ஆட்சிக்காக சாளுக்கிய சோழர் வம்சத்தைச் சேர்ந்த முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். குலோத்துங்கன் வெங்கி பேரரசின் அரசன் இராசராச நரேந்திராவின் மகனாவார். சாளுக்கிய சோழர் வம்சத்தில் முதலாம் குலோத்துங்க சோழன் மற்றும் விகுரம சோழன் போன்ற திறமை வாய்ந்த அரசர்கள் குறைவாகவே இருந்தனர். சோழ அரசர்கள் தங்கள் ஆற்றலை இழப்பது இந்த காலகட்டத்திலிருந்து தொடங்கியது. சிங்களர்கள் மீட்டெழுச்சி காரணமாக இலங்கையின் தீவுப் பகுதிகளில் சோழர்கள் தங்களது ஆற்றலை இழந்து வெளியேறினர்.[62] மேற்கு பகுதியின் சாளுக்கிய அரசனான ஆறாம் விகுரமாதிதியா என்பவரிடத்தில் வெங்கிப் பேரரசையும், கங்காவாதி (மைசூரின் தெற்கு மாவட்டங்கள்) பகுதிகளை சாளுக்கிய இராணுத்தைச் சேர்ந்த போசள விடுணுவருதனா என்பவரிடமும் 1118 ஆம் ஆண்டுகளில் தங்கள் ஆற்றலை சோழர்கள் இழந்தனர். பாண்டிய நாட்டுப் பகுதிகளைக் கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக பாண்டியர்களின் ஆட்சிப் பொறுப்பிற்கு பலர் உரிமைக் கோரினர். இதன் காரணமாக உள்நாட்டுப் போரில் உரிமை பெற்ற பதிலியாக சிங்களர்கள் மற்றும் சோழர்கள் கலந்துக் கொண்டனர். பாண்டியர்களின் ஆற்றலைக் கட்டுப்படுத்தி கட்டுப்பாட்டில் வைப்பதற்காக காஞ்சிபுரத்தில் நிரந்தரமாக ஒரு போசள் இராணுவம் சோழர்கள் வாழ்ந்த இறுதி நூற்றாண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சோழ வம்சத்தின் கடைசி அரசானாக மூன்றாம் ராஜேந்திர சோழன் இருந்தார். காடவர் தலைவர் முதலாம் கோப்பெருஞ்சிங்கன் இராசேந்திராவை வெற்றிக் கொண்டு அவரை சிறையில் அடைத்தார். இராசேந்திராவின் ஆட்சி முடிவடைந்த காலத்தில் (1279) சோழர் பேரரசு முழுவதையும் பாண்டியர்கள் கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.[63]

பாண்டியர்களின் மறுமலர்ச்சி தொகு
நூற்றாண்டுகள் வரை இருந்த பல்லவர்கள் மற்றும் சோழர்களின் ஆதிக்கம் சடாவர்மன் சுந்தர பாண்டியன் என்ற பாண்டிய மன்னனால் மாற்றப்பட்டு, 1251 ஆம் ஆண்டு முதல் பாண்டியர்களின் ஆட்சி மீண்டும் மலர்ந்தது. கோதாவரி ஆற்றின் கரைகளிலிருந்த தெலுங்கு பேசும் நாடுகள் முதல் இலங்கையின் வடக்குப் பகுதியின் பாதியளவு வரை பாண்டியர்கள் ஆதிக்கத்தில் வந்தது. 1308 ஆம் ஆண்டில் முதலாம் மறவர்மன் குலசேகர பாண்டியன் இறந்த பிறகு ஆட்சிப் பொறுப்பை யார் ஏற்பது என்று அவரின் மகன்களுக்கிடையே போட்டி ஏற்பட்டது. சட்டப்படி வாரிசான சுந்தர பாண்டியன் மற்றும் சட்டப்படி வாரிசல்லாத வீர பாண்டியன் (அரசனால் பரிந்துரை செய்யப்பட்டவர்) ஆகியோர் ஆட்சிப் பொறுப்பிற்காக சண்டையிட்டுக் கொண்டனர். பின்னாளில் தில்லி சுல்தானகத்தின் படையெடுப்பு காரணமாக மதுரை தில்லி சுல்தானகத்தின் ஆட்சி அதிகாரத்திற்கு மாறியது (சுந்தர பாண்டியனின் வெற்றிக் காலங்களில் பாதுகாப்பு அரணாக மதுரை இருந்தது).

தில்லி சுல்தானகம் தொகு
முதன்மைக் கட்டுரை: மதுரை சுல்தானகம்
தில்லி சுல்தானகத்தின் அலாவுதீன் கில்ஜி என்பவரின் தளபதி மாலிக் காஃபூர் 1311 ஆம் ஆண்டு மதுரை மீது படையெடுத்து மதுரையைக் கைப்பற்றினார்.[64] திருநெல்வேலியைச் சுற்றியுள்ள சிறிய பகுதிகளை பாண்டியர்கள் மற்றும் அவர்களின் வழித்தோன்றல்கள் சிறிது காலம் ஆட்சி செய்தனர். குலசேகர பாண்டியனின் சேர இராணுவத் தளபதியான ரவிவர்மன் குலசேகரன் (1299–1314) பாண்டிய ஆட்சியை தனது உரிமையாக்கிக் கொண்டான். நாட்டின் உறுதியற்ற நிலையைப் பயன்படுத்திக் கொண்டு தென் தமிழகம் முழுவதையும் படையெடுத்து கன்னியாகுமரி முதல் காஞ்சிபுரம் வரையிலான பகுதிகள் அனைத்தையும் சேர பேரரசின் கீழ் இரவிவர்மன் குலசேகரன் கொண்டு வந்தார். சென்னையின் புறநகர் பகுதியான பூந்தமல்லி என்ற இடத்தில் இவர் பற்றிய கல்வெட்டு கண்டு எடுக்கப்பட்டது.[65]

விஜயநகரம் மற்றும் நாயக்கர் காலம் (1300–1650) தொகு
முதன்மைக் கட்டுரைகள்: விஜயநகரப் பேரரசு, மதுரை நாயக்கர்கள்மற்றும் தஞ்சை நாயக்கர்கள்

நாயக்கர் மன்னரால் சீர்செய்யப்பட்ட தென்னிந்தியாவின் மதுரை நகரில் உள்ள மீனாட்சி ஆலயம்.
பதினான்காம் நூற்றாண்டில் தில்லி சுல்தானகத்தின் பற்றுதல் இந்துக்களிடையே பகையுணர்வை ஏற்படுத்தியது. இதன் காரணமாக இந்துக்கள் ஒன்றாக இணைந்து விஜயநகரப் பேரரசு என்ற புதிய பேரரசை உருவாக்கினர். கர்நாடகத்தின் விஜயநகரம் என்ற நகரத்தை மையமாகக் கொண்டு இந்துக்களுக்கான விசயநகரப் பேரரசை ஹரிஹரா மற்றும் புக்கா ஆகிய இருவரும் நிறுவினர்.[66] புக்காவின் ஆட்சியில் விஜயநகரப் பேரரசு வளம் பெற்று தெற்குப் பகுதி முழுவதும் பரவியது. தென்னிந்தியாவின் பல பேரரசுகளை புக்கா மற்றும் அவரது மகன் கம்பனா கைப்பற்றினர். கில்ஜி இராணுவத்தின் மிஞ்சிய வீரர்களை கொண்டு நிறுவப்பட்டிருந்த மதுரை சுலதானகத்தை 1371 ஆம் ஆண்டு விஜயநகரப் பேரரசு தோற்கடித்தது.[67] தென்னிந்தியாவின் பகுதிகள் முழுவதையும் இந்த பேரரசு இறுதியாக கைப்பற்றியது. நாயக்கர் என்ற பதவியில் உள்ளூர் ஆளுநர்களை நியமித்து பேரரசின் பல்வேறு பகுதிகளை ஆட்சிச் செய்யுமாறு விஜயநகரப் பேரரசு ஏற்பாடு செய்தது.

தள்ளிக்கோட்டைப் போரின் போது தக்காண சுல்தான்களால் 1564 ஆம் ஆண்டு விஜயநகரப் பேரரசு தோற்கடிக்கப்பட்டது.[68] உள்ளூர் நாயக்கர் ஆளுநர்கள் விஜயநகரப் பேரரசின் ஆட்சிக்கு விடுதலை அறிவித்து தங்களது ஆட்சியைத் தொடங்கினர். மதுரை நாயக்கர்கள் மற்றும் தஞ்சாவூர் நாயக்கர்கள் பிரிவினர் நாயக்கர்களில் மிகவும் பிரபலமானவர்கள். தஞ்சாவூர் நாயக்கர்களின் ரகுநாத நாயக்கர் (1600–1645) நாயக்கர்களில் மிகவும் சிறப்பானவராக இருந்தார்.[69] வணிகம் செய்வதை ஊக்குவிக்கும் எண்ணத்தில் சலுகைகளை வழங்கி தரங்கம்பாடி என்ற இடத்தில் வணிக மையம் ஒன்றை 1620 ஆம் ஆண்டு ரகுநாத நாயக்கர் அமைத்தார்.[70] எதிர்காலத்தில் ஐரோப்பியர்கள் நமது நாட்டின் வளங்கள் மீது பற்றுக் கொள்வதற்கு இந்த வணிக மையம் அடித்தளமாக அமைந்தது. டச்சுக்காரர்களின் வெற்றி ஆங்கிலேயர்களை தஞ்சாவூர் பகுதியில் வணிகம் செய்ய ஊக்கமளித்தது. எதிர்விளைவு ஏற்படுவதற்கான காரணமாக இது அமைந்தது. தஞ்சாவூர் நாயக்கர்களின் கடைசி அரசனாக விசய ராகவா (1631–1675) இருந்தார். நாட்டில் இருந்த பல்வேறு பழையக் கோவில்களை புதுப்பித்து நாயக்கர்கள் மீண்டும் கட்டினர். அவர்களது பங்களிப்புகளை நாட்டின் பல இடங்களில் இன்றும் காணலாம். பழைய கோவில்களுக்கு பெரிய தூண்களைக் கொண்டு மண்டபங்கள், நீளமான முகப்பு கோபுரங்கள் போன்றவற்றை அமைத்து தங்கள் காலத்தின் சமய கட்டமைப்புகளை நாயக்கர்கள் விரிவாக்கம் செய்துள்ளனர்.

மதுரையை ஆட்சி செய்த நாயக்கர்களில் திருமலை நாயக்கர் மிகவும் பிரபலமானவர். கலை மற்றும் கட்டடக்கலைக்கு பாதுகாப்பு அளித்து மதுரையைச் சுற்றி இருந்த பழையச் சின்னங்களை புதிய கட்டமைப்புகளுடன் திருமலை நாயக்கர் விரிவாக்கம் செய்தார். 1659 ஆம் ஆண்டு திருமலை நாயக்கரின் மறைவுக்கு பின்பு மதுரை நாயக்கரின் பேரரசு முடிவுக்கு வர ஆரம்பித்தது. இவருக்கு பிந்தைய அரசர்கள் பலம்குன்றிய விதத்தில் இருந்ததால் மதுரை மீதான படையெடுப்பு மீண்டும் துவங்கியது. மைசூரின் சிக்க தேவ ராயர் மற்றும் இசுலாமிய அரசர்கள் செய்தது போல மராத்தா பேரரசின் சிறந்த மன்னரான சிவாஜி போஸ்லேவும் தெற்கு நோக்கி படையெடுத்தார். இதன் காரணமாக தெற்கு பகுதிகளில் கலவரம் மற்றும் நிலையற்ற தன்மை நிலவியது. உள்ளூர் ஆட்சியாளராக இருந்த இராணி மங்கம்மாள் இந்த படையெடுப்புகளை துணிவுடன் தடைச் செய்தார்.[71]

நிசாம்கள் மற்றும் நவாப்களின் ஆட்சி தொகு
விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் ஐரோப்பியர்கள் தமிழ்நாட்டில் குடியேறத் தொடங்கினர். செஞ்சி மற்றும் பழவேற்காடு அருகில் இருக்கும் கோரமண்டல கடற்கரை பகுதியில் வணிகம் செய்வதற்கான வணிக நிலையங்களை டச்சுக்காரர்கள் 1605 ஆம் ஆண்டு நிறுவினர். பழவேற்காட்டின் வடக்கு பகுதியைச் சுற்றியுள்ள 35 மைல்கள் (56 km) ஆறுமுகன் (துர்க்கராஜ்பட்ணம்) கிராமப் பகுதிகளில் கிழக்கிந்திய கம்பனி ஒரு 'தொழிற்சாலையை' (சேமிப்புக்கிடங்கு) 1626 ஆம் ஆண்டு நிறுவியது. கம்பனி நிருவாகத்தின் அலுவலர்களில் ஒருவரான ஃப்ரான்சிஸ் டே (Francis Day) என்பவர், வந்தவாசி பகுதியின் நாயக்கரான தர்மலா வேங்கடாதிரி நாயக்கர் என்பவரிடம் இருந்து மதராஸ்பட்டணம் என்ற மூன்று-மைல் (5 கிமீ) இடம் கொண்ட மீன்பிடி கிராமத்தை 1963 ஆம் ஆண்டில் தனது உரிமையாக்கிக் கொண்டார். மணற் சிறுதட்டுகளைக் கொண்டு சுமார் ஐந்து சதுர கிலோமீட்டர் பரப்பில் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அரண்மனையை கிழக்கிந்திய கம்பனி உருவாக்கியது.[72] இது தான் மதராஸ் நகரத்தின் ஆரம்பமாகும். வேலூர் கோட்டை மற்றும் சந்திரகிரியைச் சார்ந்து பேடா வெங்கட ராயன் என்ற விஜயநகர அரசன் (அரவிடு மரபு) கோரமண்டலக் கடற்கரையை ஆட்சி செய்து கொண்டிருந்தார். இவரின் ஒப்புதலுடன் இந்த சிறிய நிலப்பகுதியில் தனியுரிமையுடன் வியாபரம் செய்ய ஆங்கிலேயர் ஆரம்பித்தனர்.[73]

பீசப்பூர் (Bijapur) இராணுவத்தின் ஒரு பகுதியினர் விஜயராகவா என்பவருக்கு உதவி செய்வதற்காக தஞ்சாவூர் பகுதிக்கு வந்து மதுரை நாயக்கரிடமிருந்து வல்லம் என்ற பகுதியை 1675 ஆம் ஆண்டு கைப்பற்றினர். தஞ்சாவூர் பேரரசு முழுவதும் தங்களது ஆட்சியை நிலைநிறுத்த விஜயராகாவா மற்றும் இகோஜி (Ekoji) ஆகியோரை பீசப்பூர் இராணுவத்தினர் கொலைச் செய்தனர். இவ்வாறாக தஞ்சாவூரில் மராத்தா ஆட்சி தொடங்கியது. இகோஜிக்குப் பிறகு அவரின் மூன்று மகன்களான சாஜி (Shaji), முதலாம் சரபோஜி (Serfoji I), முதலாம் துலஜா (Thukkoji) என்கிற (alias) துக்கோஜி தஞ்சாவூரை ஆட்சி செய்தனர். மராத்திய ஆட்சியாளர்களில் இரண்டாம் சரபோஜி (1798–1832) மிகவும் சிறப்பானவர். கலை மீது கொண்ட நாட்டம் காரணமாக தனது வாழ்க்கையை அர்ப்பணம் செய்தார். கற்றுக் கொடுத்தலில் முதன்மையாக தஞ்சாவூர் மாறியது. கலை மற்றும் இலக்கியத்திற்கு பாதுகாப்பு அளித்து சரஸ்வதி மஹால் நூலகத்தை தனது இடத்தில் சரபோஜி நிறுவினார். வடக்குப் பகுதியிலிருந்து வந்த இசுலாமியர்களின் படையெடுப்பு தக்காணபீடபூமியின் மக்கள் மற்றும் ஆந்திர நாடுகளைச் சேர்ந்த இந்து மக்களை நாயக்கர் மற்றும் மராத்தா அரசர்களின் பாதுகாப்பில் இருக்குமாறு செய்தது. கர்நாடக இசையின் மும்மூர்த்திகளுடன் பிரபல கர்நாடக இசை அமைப்பாளாரான தியாகராஜா (1767–1847) இந்தக் காலகட்டங்களில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்தனர்.[74]


18 ஆம் நூற்றாண்டின் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையின் மாதிரிச் சித்திரம்.
முகலாய அரசர் ஔரங்கசீப் ஆட்சிக் காலம் 1707 ஆம் ஆண்டு முடிவடைந்த பிறகு வந்த போர்கள் பலவற்றை இவரது ஆட்சிக் கலைத்தது. மேலும் இவர்களது பேரரசில் அடிமையாக இருந்த பலரும் தங்கள் சுதந்திரத்தை வலியுறுத்தினர். தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பு பல நூறு பாளையக்காரர் அல்லது பொலிகர் என்பவர்களிடம் அளிக்கப்பட்டது. இவர்கள் குறிபிட்ட கிராமங்களை ஆட்சி செய்தனர். இந்த உள்ளூர் தலைவர்கள் தங்கள் பகுதிகளில் அடிக்கடி போரிட்டுக் கொண்டனர். இந்த நிலை தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவின் பகுதிகளில் குழப்பத்தையும் கலவரத்தையும் ஏற்படுத்தியது. இந்த குழப்பமான நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஐரோப்பிய வணிகர்கள் வணிகம் செய்யத் தொடங்கினர்.[75]

ஐரோப்பியர்களின் குடியேற்றம் (1750–1850) தொகு
முதன்மைக் கட்டுரை: பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்
ஆங்கிலோ-பிரான்சு சண்டைகள் தொகு

முகமது அலி கான் வாலாசா, கர்னாடிக்கின் நவாப் (1717–1795)
பிரான்சுக்காரர்கள் இந்தியாவிற்கு புதியவர்களாக வந்தவர்கள். பிரான்சு கிழக்கிந்திய கம்பனி 1664 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, இந்தியாவில் தாங்கள் வணிகம் செய்வதற்கான அனுமதியை ஔரங்கசீப்பிடமிருந்து பிரான்சு அதிகாரிகள் 1666 ஆம் ஆண்டு பெற்றனர். கோரமண்டல கடற்கரைப் பகுதியில் உள்ள பாண்டிச்சேரியில் பிரான்சுக்காரர்கள் தங்கள் வணிக நிலையங்களை அமைத்தனர். 1739 ஆம் ஆண்டு காரைக்கால் பகுதியை கைப்பற்றியதன் மூலம் ஜோசப் ஃப்ரான்கோஸ் டூப்லெக்ஸ் பாண்டிச்சேரியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஐரோப்பாவில் ஆஸ்திரிய உரிமைக்கான போர் 1740 ஆம் ஆண்டு தொடங்கியது. இதன் விளைவாக இந்தியாவில் இருந்த ஆங்கிலேயர் மற்றும் பிரான்சு வீரர்களுக்கு இடையே சண்டை மூண்டது. கோரமண்டல கடற்கரைப் பகுதியில் இரண்டு நாட்டின் கடற்படைகளும் பல்வேறு சண்டைகளில் ஈடுபட்டனர். லா போர்டோனைஸ் (La Bourdonnais)தலைமையில் வந்த பிரான்சு படையினர் சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையை 1746 ஆம் ஆண்டு தாக்கி தங்கள் வசமாக்கிக் கொண்டனர். இந்த போரில் சிறைச் சாலையில் அடைக்கப்பட்டவர்களில் ராபர்ட் க்ளைவ் என்பவரும் ஒருவர். ஐரோப்பாவில் நடைபெற்ற போர் 1748 ஆம் ஆண்டு முடிவடைந்தது. ஆக்ஸ்-லா-சாப்பள் அமைதி (Aix-la-Chapelle) உடன்படிக்கையின் படி மதராஸ் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டது.[76]

ஆங்கிலேயருக்கும் பிரான்சுக்காரர்களுக்கும் இடையே இருந்த இராணுவச் சண்டை முடிவுற்று அரசியல் ரீதியான சண்டைகள் தொடங்கியது. பிரான்சுக்காரரிடம் மிகவும் பற்றுதலுடன் இருந்த கர்நாடகத்தின் நவாப் மற்றும் ஐதராபாத் நிசாம் ஆகிய இரண்டு பதவிகளும் ஆட்சியாளர்களால் பறிக்கப்பட்டது. டூப்லேக்ஸின் ஆதரவுடன் சந்தா சாகிப் கர்நாடகத்தின் நவாப் பொறுப்பேற்றார். இந்தப் பகுதியை முதலில் ஆட்சி செய்த முகம்மது அலி கான் வாலாஜா என்பவருக்கு ஆங்கிலேயர் ஆதரவு கொடுத்தனர். ஆற்காடு பகுதியில் இருந்த சந்தா சாகிப்பின் கோட்டையை தாக்குதல் செய்து ஆட்சிப் பொறுப்பை எடுத்துக் கொள்வதற்காக 1751 ஆம் ஆண்டு க்ளைவ் முகம்மது அலிக்கு உதவி செய்தார். க்ளைவ்வை ஆற்காடு பகுதியிலிருந்து வெளியேற்றும் சந்தா சாகிப்பின் முயற்சிக்கு பிரான்சுக்காரர்கள் உதவி செய்தனர். பிரான்சுக்காரகளுடன் ஆற்காடு இராணுவத்தினரும் இணைந்து போரிட்ட போதிலும் ஆங்கிலேயர்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் தோல்வி அடைந்தனர். பாரிஸ் ஒப்பந்தம் (1763) படி கர்நாடகத்தின் நவாப்பாக முகம்மது அலி முறைப்படி அறிவிக்கப்பட்டார். இந்த செயல்களின் விளைவாக 1765 ஆம் ஆண்டு முதல் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. தென்னிந்தியாவில் ஆங்கிலேயர் ஆதிக்கத்தை அங்கீகரிக்கும் விதமாக டெல்லி பேரரசு தீர்ப்பாணை ஒன்றை வெளியிட்டது.[77]

ஆங்கிலேய அரசாங்கத்தின் ஆதிக்கம் தொகு

சென்னை மாகாணம், 1909
கம்பனி ஆட்சி நிர்வாகம் அதிகரித்துக் கொண்டிருந்த நிலையிலும் தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் பகுதிகளில் தங்கள் கருத்தை எடுத்துரைக்க இயலாத காரணத்தினால், தாங்கள் கைப்பற்றிய பகுதிகளில் சரிவர ஆட்சி செய்ய இயலாத நிலைக்கு கம்பனி ஆட்சியாளர்கள் ஒவ்வொரு நாளும் தள்ளப்பட்டனர். ஆங்கிலேய பாரளுமன்றத்தைச் சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணங்கள் கம்பனி ஆட்சியை ஆங்கிலேய அரசாங்கமே மேற்கொள்ளும் நிலையை வலியுறுத்தியது. கம்பனியின் நிதி நிலைமையும் மோசமாக இருந்தது. நிதிக்காக பாராளுமன்றத்தில் விண்ணப்பமும் செய்திருந்தனர். இந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, ஆங்கிலேய பாராளுமன்றம் சீரமைப்பு சட்டம் (கிழக்கிந்திய கம்பனி சட்டம் என்றும் அறியப்படும்) என்ற சட்டத்தை 1773 ஆம் ஆண்டு இயற்றியது.[78] கம்பனி நிர்வாகத்தை நிர்வகிப்பதற்கான விதிமுறைகளை தளர்த்தி ஆளுநர் பதவியை உருவாக்குவது போன்றவை இந்த சட்டத்தில் இடம்பெற்றிருந்தன. இவ்வாறாக வாரென் காசுடிங்ஸ் (Warren Hastings) முதல் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1784 ஆம் ஆண்டின் பிட்ஸ் இந்தியா சட்டம் கம்பனி நிர்வாகத்தை ஆங்கிலேய அரசாங்கத்தின் துணை நிலையாக மாற்றியது.

ஆங்கிலேயர் ஆதிக்க நிலப்பகுதிகளில் வேகமான வளர்ச்சியும் விரிவாக்கமும் அடுத்த சில பத்தாண்டுகளில் இருந்தது. 1766 முதல் 1799 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஆங்கிலேய-மைசூர் போர்கள் மற்றும் 1772 முதல் 1818 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஆங்கிலேய-மராத்திப் போர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை கம்பனி ஆட்சியின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.[79] வரிவசூல் செய்யும் முறையில் கம்பனி அதிகாரிகளுடன் மதுரை பேரரசைச் சேர்ந்த பாளையக்காரர்களின் தலைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல் சச்சரவாக மாறியது. பாளையக்காரர்கள் தங்கள் பகுதியே தாங்களே நிர்வகிக்கும் அதிகாரம் பெற்றிருந்தனர். இது ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு எதிரான முதல் எதிர்ப்பாக அமைந்தது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பாளையக்காரர் தலைவரான கட்டபொம்மன் கம்பனி நிருவாகத்தினரின் வரி வசூலிக்கும் முறைக்கு எதிராக 1790 ஆம் ஆண்டு கலகம் செய்தார். முதல் பாளையக்காரர் போரின் போது (1799–1802) கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு 1799 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். ஒரு வருடங்கள் கழித்து இரண்டாம் பாளையக்காரர் போர் தீரன் சின்னமலை என்பவரால் நடத்தப்பட்டது. திப்புசுல்தான் பேரரசுக்கு பிறகு ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற மூன்று போரிகளில் வெற்றி பெற்ற தீரன் சின்னமலை மற்றும் அவரது இரண்டு சகோதரர்கள் சட்டவிரோதமாக தூக்கிலிடப்பட்டனர். ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற போரில் உயிரிழந்த இறுதி தமிழ் மன்னர் தீரன் சின்னமலை ஆவார். பல்வேறு இயக்கங்களை நடத்தி இந்த போரட்டங்களை கம்பனி ஆட்சியாளர்கள் தடைச் செய்தனர். தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளைத் தங்களது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள பாளையக்காரர் போர் முடிவுகள் ஆங்கிலேயருக்கு உதவியது.[80]

1798 ஆம் ஆண்டு லார்ட் வெல்சுலே (Lord Wellesley) என்பவர் ஆளுநராக பொறுப்பேற்றார். பின்வந்த ஆறு ஆண்டுகளில் அதிகமான வெற்றிகளைப் பெற்று கம்பனி ஆதிக்கத்தின் அதிகார எல்லைகளை இரண்டு மடங்காக உயர்த்தினார். பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவில் மீண்டும் அதிகார உரிமை பெறுவதை தடை செய்தார். தக்காண பீடபூமி மற்றும் கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்த பலரை அழித்தார். முகலாய பேரரசை கம்பனி பாதுகாப்பின் கீழ் கொண்டு வந்து தஞ்சாவூரின் முகலாய மன்னரான சரபோஜியை கட்டாயப்படுத்தி உடன்படிக்கையின் கீழ் ஆட்சி செய்யும் நிலைக்கு கொண்டு வந்தார். மதராஸ் மாகாணம் நிறுவப்பட்டு கம்பனி ஆட்சியின் கீழுள்ள பகுதிகள் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டது. ஆங்கிலேயர்களின் நேரடி நிருவாகம் மக்களிடையே சினத்தை ஏற்படுத்தியது. மதராஸ் மாகாணத்தின் ஆளுநராக இருந்த வில்லியம் பெண்டிக் பிரபு உள்ளூர் வீரர்கள் தங்களது சமய குறிகளை (விபூதி, திலகம் போன்றவை) செய்து கொள்ளக் கூடாது என்று ஆணையிட்டதைத் தொடர்ந்து வேலூர் பாசறையைச் (cantonment) சேர்ந்த வீரர்கள் 1806 ஆம் ஆண்டில் கலகம் செய்தனர். கிறித்துவ மதத்திற்கு மாறுவதற்கு இந்தச் சட்டம் தங்களை கட்டாயப்படுத்துவதாக எதிர்ப்பு தெரிவித்து வீரர்கள் கலகம் செய்தனர். 114 ஆங்கிலேய அதிகாரிகள் கொலைச் செய்யப்பட்டும், பல நூறு கிளர்ச்சியாளர்கள் தூக்கிலிடப்பட்டும் இந்த கலகம் ஒடுக்கப்பட்டது. அவமதிப்பு காரணமாக பெண்டிக் பிரபு பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.[81][82]

கம்பனி ஆட்சியின் முடிவு தொகு
கம்பனி ஆட்சிப் பகுதிகளின் பல்வேறு மாவட்டங்களில் நிலவிய அதிருப்தி நிலைமைகள் 1857 ஆம் ஆண்டின் சிப்பாய் போரில் வெடித்தது. கூட்டணி ஆட்சி நிலவில் இருந்த இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்தக் கலகம் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தியது. தமிழ்நாடு அதிகமாக பாதிக்கப்படவில்லை. போரின் விளைவால் கம்பனி ஆட்சியை ரத்து செய்யும் 1858 ஆம் ஆண்டு சட்டத்தை ஆங்கிலேய அரசு அறிவித்து, அரசாங்கத்திடம் ஆட்சியை ஒப்படைத்தது.

ஆங்கிலேயர் ஆட்சி (1850–1947) தொகு
முதன்மைக் கட்டுரை: பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
1858 ஆம் ஆண்டு முதல் பிரத்தானிய அரசு இந்தியாவில் நேரடியாக ஆட்சி செய்வதாக கருதியது. ஆரம்ப காலங்களில் அரசாங்கம் தன்னிசையாக செயல்பட்டது. இந்தியர்களின் உணர்வுகளை முக்கியமானதாக ஆங்கிலேய அரசு கருதவில்லை. உள்ளூர் அரசாங்கத்தில் இந்தியர்கள் பங்குகொள்ள பிரித்தானியாவின் இந்திய பேரரசு அனுமதி வழங்க ஆரம்பித்தது. உள்ளூர் அரசாங்கத்தில் இந்திய மக்களுக்கு பங்கு அளிக்கும் தீர்மானத்தை வைசிராய் ரிப்பன் 1882 ஆம் ஆண்டு இயற்றினார். 1892 ஆம் ஆண்டின் இந்திய கவுன்சில் சட்டம் மற்றும் 1909 ஆம் ஆண்டின் மிண்டோ-மோர்லே சீர்திருத்தம் போன்ற சட்டமியற்றல்கள் மதராஸ் மாகாண சட்ட மேலவையை நிறுவுவதற்கு வழி செய்தது.[83] மகாத்மா காந்தி தலைமையில் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கம், இந்திய அரசுச் சட்டம் (மோண்டாகு-செம்ல்ஸ்ஃபோர்டு சீர்திருத்தம் என்றும் அறியப்படுகிறது) என்ற சட்டத்தை வெளியிடுவதற்கு காரணமாக அமைந்தது. உள்ளூர் தொகுதிகளுக்கான முதல் தேர்தல் 1921 ஆம் ஆண்டு நடைபெற்றது.[83]


சென்னை மாகாணப் பஞ்சம் (1877).நிவாரணம் வழங்குதல்.விளக்கப்பட்ட இலண்டன் செய்தியிலிருந்து (1877)
கோடைக்காலத்தில் பருவமழை சரியாக பெய்யாதது மற்றும் ரியோத்வரி அமைப்பின் நிருவாகத்தில் கிடைத்த குறைவான வருமானம் ஆகியவற்றால் 1876–1877 ஆம் ஆண்டுகளில் சென்னை மாகாணத்தில் கடுமையான பஞ்சம் நிலவியது.[84] அரசாங்கமும் பல தொண்டு நிறுவனங்களும் இணைந்து நகரம் அதன் புறநகர்ப் பகுதிகளில் பல நிவாரணப் பணிகளை மேற்கொண்டன. இந்தியாவிலிருந்த ஐரோப்பியர்களிடமிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பஞ்ச நிவாரண நிதி பெறப்பட்டது. பஞ்சத்தால் பாதிகப்பட்ட இடங்களில் போதுமான அளவு உதவிகளை செய்ய இயலாத ஆங்கிலேய அரசாங்கத்தை விமர்சனம் செய்து வில்லியம் டிக்பை போன்ற மனிதநேயமிக்கவர்கள் கண்டனம் செய்து எழுதினர்.[85] மூன்று முதல் ஐந்து மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்ட பிறகு, 1878 ஆம் ஆண்டில் பெய்த பருவமழையினால் பஞ்சம் முடிவுக்கு வந்தது.[84] பஞ்சத்தால் ஏற்பட்ட அழிவுகளின் விளைவால் பஞ்சக் குழுமம் என்ற குழுமம் 1880 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் நிறுவப்பட்டு பேரழிவு நிவாரணக் கொள்கைகள் வகுக்கப்பட்டது. பஞ்ச நிவாரண நிதியாக 1.5 மில்லியன் ரூபாயை அரசாங்கமும் ஒதுக்கியது. எதிர்காலத்தில் இவ்வாறு பஞ்சம் ஏற்பட்டால் அதன் விளைவுகளைக் குறைப்பதற்காக வாய்க்கால் கட்டுதல், தரை மற்றும் தொடர்வண்டி பாதைகளை மேம்படுத்துதல் போன்ற குடிமையியல் வேலைகளும் மேற்கொள்ளப்பட்டன.

சுதந்திரப் போராட்டம் தொகு
சுதந்திரம் பற்றிய எண்ணம் நாடு முழுவதும் மேலோங்கி இருந்தது. ஆங்கிலேயர்களின் காலணி ஆதிக்கத்தை எதிர்த்து சுதந்திரத்திற்காக பாடுபட தமிழ்நாட்டிலிருந்தும் பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் தாமாக முன்வந்தனர். 1904 ஆம் ஆண்டு ஈரோடு அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த திருப்பூர் குமரன் இவர்களில் குறிப்பிடத்தக்கவர். ஆங்கிலேயருக்கு எதிராக கண்டனப் பேரணி நடத்திய போது குமரன் உயிரிழந்தார். பாண்டிச்சேரியில் இருந்த பிரெஞ்சு அரசு பிரித்தானிய காவல்துறையினரிடமிருந்து தப்பித்துக் கொள்ள முயன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இடமளித்து ஆதரவு தந்தது. பாண்டிச்சேரியில் வாழ்ந்தவர்களில் 1910 ஆம் ஆண்டு வாழ்ந்த அரவிந்தரும் ஒருவர். அரவிந்தர் காலத்தில் வாழ்ந்தவர்களில் கவிஞர் பாலசுப்ரமணிய பாரதியும் ஒருவர்.[86] புரட்சிகரமான பாடல்கள் பலவற்றை தமிழில் எழுதியதன் மூலம் சுதந்திரப் புரட்சியை பாரதி ஏற்படுத்தினார். இந்தியா என்ற இதழையும் பாண்டிச்சேரியிலிருந்து பாரதி பிரசுரம் செய்தார். தமிழ் புரட்சியாளர்களான வி.வி.எஸ்.அய்யர் மற்றும் வி.ஒ. சிதம்பரம் பிள்ளை ஆகியோருடன் அரவிந்தர் மற்றும் பாரதியார் நட்புடன் இருந்தனர்.[86] இந்தியாவில் ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய இராணுவம் (INA), என்ற அமைப்பின் உறுப்பினர்களில் தமிழ்நாட்டிலிருந்து குறிப்பிட்ட உறுப்பினர்கள் இருந்தனர்.[87][88] INA வின் முக்கிய தலைவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த லட்சுமி சேகள் என்பவரும் ஒருவர்.

டாக்டர். டி.எம். நாயர் (Dr. T.M. Nair) மற்றும் ராவ் பகதூர் தியாகராய செட்டி (Rao Bahadur Thygaraya Chetty) ஆகியோர் 1916 ஆம் ஆண்டின் பிராமணன்-அல்ல அறிக்கை (Non-Brahmin Manifesto) மூலம் திராவிட இயக்கத்திற்கான அடித்தளம் அமைத்தனர்.[89] இரண்டு வகையான இயக்கங்களை மையமாகக் கொண்டு 1920 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் வட்டார அரசியல் உருவானது. 1921 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நீதிக் கட்சி இவைகளில் ஒன்று. இந்திய சுதந்திர இயக்கத்தைப் பற்றிக் கருத்தில் கொள்ளாமல், சமூகத்தில் பின்தங்கிய வகுப்பினர் மீது இழைக்கப்படும் கொடுமைகளை நீதிக் கட்சி கருத்தில் கொண்டிருந்தது. மற்றொரு இயக்கம் ஈ.வி.இராமசாமி நாயக்கர் தலைமை வகித்த சமயமற்ற, பிராமணர் அல்லாதவர் சீர்திருத்த இயக்கம்.[89] 1935 ஆம் ஆண்டில் அனைத்திந்திய கூட்டரசு சட்டத்தை ஆங்கிலேய அரசு வெளியிட்டது முதல் தனியாட்சிக்கான முயற்சிகள் 1935 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கப்பட்டன. உள்ளூர் தேர்தல்கள் மீண்டும் நடத்தப்பட்டன. தமிழ்நாட்டில் நீதிக் கட்சியை தோற்கடித்து காங்கிரசு கட்சி ஆட்சியைப் பிடித்தது. பள்ளிகளில் இந்தி மொழியை கட்டாயமாக அறிமுகம் செய்யும் காங்கிரசு அரசின் முடிவை எதிர்த்து இராமசாமி நாயக்கர் மற்றும் சி.என்.அண்ணாதுரை இணைந்து 1938 ஆம் ஆண்டில் தங்களது போரட்டத்தைத் தொடங்கினர்.[90]

சுதந்திரத்திற்கு பிந்தைய காலம் தொகு

மெதராஸ் என்ற பெயரிலிருந்து மாற்றம் செய்யப்பட்டு 1969 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ்நாடு அரசியல் மாநிலம்.
1947 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்ற பிறகு மேற்கொண்ட மாநிலங்கள் பங்கீடு தமிழ்நாட்டில் பெரிய அளவில் விளைவை ஏற்படுத்தவில்லை. மதத்தினரிடையே பிரிவினை வாத வன்முறைகள் ஏதுமில்லை. தமிழ்நாட்டில் அனைத்து சமயத்தினரும் ஒருவருக்கொருவர் மரியாதை மற்றும் அமைதியான இணக்க நிலையுடனும் இருந்தனர். மதராஸ் மாகாணத்தில் காங்கிரசு கட்சி முதல் அமைச்சரவையை அமைத்தது. சி.ராசகோபாலாச்சாரி (இராஜாஜி) முதல் முதலமைச்சராக பொறுப்பேற்றார். மெதராஸ் மாகணாம் என்பது மெதராஸ் மாநிலம் என்று மாற்றியமைக்கப்பட்டது. மெதராஸ் மாநிலத்தில் இருந்த தெலுங்கு பேசும் மக்களுக்காக ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்று பொட்டி திருராமலு என்பவர் போரட்டம் செய்தார். இந்திய அரசாங்கம் மெதராஸ் மாநிலத்தைப் பிரிப்பது என்று முடிவு செய்தது.[91] ராயலசீமா மற்றும் அதைச் சுற்றிய ஆந்திரக் கடற்கரைப் பகுதிகள் ஆந்திரப் பிரதேசம் என்ற புதிய மாநிலமாக 1953 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. பெல்லாரி மாவட்டம் மைசூர் மாநிலத்தின் ஒரு பகுதியாக மாறியது. 1956 ஆம் ஆண்டு தெற்கு கன்னடா மாவட்டம் மைசூருக்கு மாற்றப்பட்டது. மலபார் கடற்கரை மாவட்டங்கள் புதிதாக உருவாக்கபட்ட கேரள மாநிலத்தின் பகுதிகளுடன் இணைக்கப்பட்டு, மெதராஸ் மாநிலம் தற்போதைய வடிவத்தை எட்டியது. மெதராஸ் மாநிலம் தமிழ்நாடு (தமிழர்கள் வாழும் பகுதி) என்ற பெயருக்கு 1968 ஆம் ஆண்டில் மாற்றப்பட்டது.

இலங்கையில் இனப் பிரிவுச் சார்ந்த சண்டை காரணமாக 1970 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் அதிகமான இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு தப்பி வந்தனர். தமிழ் அகதிகளின் அவலநிலை தமிழக அரசியல் கட்சிகளிடையே எழுச்சியுடன் கூடிய ஆதரவை உண்டாக்கியது.[92] இலங்கை தமிழர்கள் நிலைக் குறித்து இலங்கை அரசிடம் பரிந்துரை செய்யுமாறு தமிழக அரசியல் கட்சிகள் இந்திய அரசாங்கத்திற்கு நெருக்கடி அளித்தன. தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.ஈ) இயக்கத்தை இலங்கையில் கட்டுப்படுத்துவதற்காக இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு முன்னாள் பிரதம மந்திரி ராஜீவ் காந்தி அனுப்பினார். இதன் காரணமாக 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 அன்று ராஜீவ் காந்தி இலங்கையைச் சேர்ந்த இயக்கத்தினரால் படுகொலைச் செய்யப்பட்டார். அது முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.ஈ) இயக்கம் தமிழ்நாட்டில் தன் ஆதரவை இழந்தது.[93][94]

2004 ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஏற்பட்ட இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளை வெகுவாக பாதித்தது. இந்த பேரழிவில் தோராயமாக 8000 மக்கள் உயிரிழந்தனர்.[95] அதிக மக்கள் தொகை கொண்ட இந்திய மாநிலங்களில் ஆறாவது இடத்தில் உள்ள தமிழ்நாடு, பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள மாநிலங்களில் 2005 ஆம் ஆண்டின் அறிக்கையின் படி ஏழாம் இடத்தில் இருந்தது.[96] திறமை வாய்ந்த பணியாளர்களின் தேவை அதிகரிப்பு காரணமாக தமிழ்நாட்டில் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. சாதி வாரியாக 69 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு தமிழ்நாட்டில் பரவலாக இருந்த உடன்பாடு செயல் காரணமாக மாநிலத்தின் கல்வி நிலையங்கள் மற்றும் வேலைவாய்ப்பு அனைத்திலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 69 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. சாதி வாரியாக இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு தமிழ்நாட்டில் பொதுமக்களிடம் பெரிய அளவில் ஆதரவு இருந்தது. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக குறிப்பிடப்படும் படியான போராட்டங்கள் ஏதும் நடைபெறவில்லை.[97]

பிராந்திய அரசியலின் பரிணாம வளர்ச்சி தொகு
சுதந்திரம் பெற்ற பிறகு தமிழ்நாட்டின் அரசியல் நிலைமை மூன்று விதமான நிலைகளை அடைந்துள்ளது. 1947 ஆம் ஆண்டுக்கு பிறகு இருந்த காங்கிரசு கட்சியின் செல்வாக்கு 1960 ஆம் ஆண்டில் திராவிட கட்சியின் கொள்கைகளால் மாறியது. 1990 ஆம் ஆண்டின் இறுதி வரை இந்த நிலை நீடித்திருந்தது. திராவிட அரசியல் கட்சிகளில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக மற்ற அரசியல் கட்சிகளுடன் ஒப்பந்தம் செய்து கூட்டணி அரசாங்கம் அமைக்கும் நிலையை தற்போது கொண்டிருக்கிறது.

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) என்ற கட்சியினை 1949 ஆம் ஆண்டு அண்ணாதுரை தொடங்கினார்.[98] தமிழ்நாட்டில் இந்திக் கலாச்சாரம் திணிக்கப்படுவதை எதிர்க்க முடிவு செய்து இந்தியாவின் தெற்கு பகுதியை திராவிடர்களுக்கு என்று தனியாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் திமுக விடுத்தது. திராவிட நாடு தனிப்பட்ட மாநிலமாக இருக்க வேண்டும் என்பது கோரிக்கையாக இருந்தது. திராவிட நாடு என்பது தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, கர்நாடாக மற்றும் கேரளாவின் பகுதிகளை உள்ளடக்கிய திராவிடர்களின் நாடு என்பதாகும்.[99] மதராஸ் மாகாணத்தில் இந்திய தேசிய காங்கிரசு கட்சிக்கு 1950 ஆம் ஆண்டு இறுதி வரை இருந்த ஈடுபாடு மற்றும் 1962 ஆம் ஆண்டில் இந்தியப் பகுதிகளில் சீனாவின் நுழைவு ஆகிய காரணங்கள் உடனடியாக திராவிட நாடு கோரும் கோரிக்கைக்கு இடையூறாக அமைந்தது. இந்திய அரசியலமைப்பில் 1963 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பதினாறாவது சட்டத் திருத்தம் பிரிவினை வாதக் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்தது. இதன் காரணமாக திராவிடனுக்கு தனிப்பட்ட நாடு கோரிக்கையை திமுக முழுமையாக நிறுத்திவிட்டு இந்திய அரசியலமைப்பில் செயல்திறன் மிக்க சுயாட்சி கட்சியாக மாறுவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்தியது.[100]

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதால் கிடைத்த மக்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி சுதந்திரத்திற்கு பின்னர் அரசாங்கத்தை அமைத்த காங்கிரசு கட்சி 1967 ஆம் ஆண்டு வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. மாநிலப் பள்ளிகளில் கட்டயாமாக இந்தி மொழியைக் கொண்டு வரும் மத்திய அரசாங்கத்தை எதிர்த்து 1965 மற்றும் 1968 ஆம் ஆண்டு நடத்திய போரட்டங்களுக்கு திமுக தலைமை தாங்கியது. வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிலையங்களில் உடனடி செயலாக்கம் போன்றவை தமிழ்நாட்டில் முதன்மையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது திராவிட இயக்கத்தின் கோரிக்கையாக இருந்தது.[101] அண்ணாதுரை மற்றும் கருணாநிதி போன்ற திராவிட இயக்கத்தின் தலைவர்கள் தங்களிடமிருந்த எழுத்து திறமையைப் பயன்படுத்தி மேடை நாடகங்கள் மற்றும் திரைப்படங்கள் மூலமாக இயக்கத்தின் அரசியல் செய்திகளைப் பரப்பினர்.[102] தமிழ்நாட்டின் முதலமைச்சராக பின்னாளில் பதவியேற்ற எம்.ஜி இராமச்சந்திரன் என்பவரும் நாடகம் மற்றும் திரைப்பட நடிகராவார்.[103]

1967 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. திமுக கழகம் இரண்டாக பிளவுபட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அஇஅதிமுக) என்ற கட்சியினை 1971 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் துவங்கினார். இன்று வரை திமுக மற்றும் அஇஅதிமுக இரண்டு கட்சிகளும் தமிழ்நாடு அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.[104] 1977, 1980 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அஇஅதிமுக கட்சியைச் சேர்ந்த எம்.ஜி.ஆர் மூன்று முறை தொடர்ச்சியாக மாநிலத்தில் ஆட்சி செய்தார். கட்சியினருக்கிடையே ஏற்பட்ட பல்வேறு பிரிவுகள் காரணமாக எம்.ஜி.ஆரின் இறப்பிற்கு பின்னர் அஇஅதிமுக பிளவுற்றது. முடிவில் ஜெ.ஜெயலலிதா அஇஅதிமுக கட்சியின் தலைமைப் பொறுப்பேற்றார்.

1990 ஆம் ஆண்டின் பின்பகுதியில் பல்வேறு அரசியல் சமநிலை மாற்றங்கள் தமிழ்நாடு அரசியலில் நிலவின. இறுதியாக திமுக மற்றும் அஇஅதிமுக கட்சிகளுக்கு தமிழ்நாட்டு அரசியலில் இரட்டை முன்னுரிமை அளிக்கப்பட்டது. காங்கிரசு கட்சியில் 1996 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஏற்பட்ட பிளவு தமிழ் மாநில காங்கிரசு என்ற கட்சி உருவாக காரணமானது. தமாகா கட்சி திமுக கட்சியுடன் கூட்டணியுடனும், திமுக கட்சியிலிருந்து பிரிந்த மற்றொரு கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (மதிமுக) அஇஅதிமுக கட்சியுடனும் கூட்டணியுடன் இருந்தன. பல்வேறு சிறிய கட்சிகள் மக்களிடையே பிரபலமடையத் தொடங்கின. திமுக மற்றும் தமாகா கட்சி 1996 ஆம் ஆண்டு தேசிய பாராளுமன்ற தேர்தலில் வைத்திருந்த கூட்டணியை முறியடிக்கும் விதத்தில் அஇஅதிமுக கட்சி பல்வேறு சிறிய கட்சிகளுடன் இணைந்து 'மிகப்பெரிய கூட்டணியை' உருவாக்கியது. தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைப்பதற்கான முதல் நிகழ்வாக இது இருந்தது. இன்றும் தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் போது அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொள்கின்றன. காங்கிரசு கட்சியின் தேர்தல் செல்வாக்கு தேசிய அளவில் 1990 ஆம் ஆண்டு முதல் குறைய ஆரம்பித்தது. இதன் காரணமாக தமிழ்நாடு உள்ளிட பல மாநிலங்களில் காங்கிரசு கட்சி கூட்டணி வைத்துள்ளது. இதன் காரணமாக திராவிடக் கட்சிகள் மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றன.