தமிழ் நாடு வரலாறு அல்லது தமிழக வரலாறு
பண்டைய தமிழக வரலாறு
தமிழகத்திற்கு என தனிப்பட்டதொரு நாகரீகமும் பண்பாடும் வளர்ந்து வந்துள்ளன. அவை கடல் கடந்து சென்று அயல் நாடுகளிலும் பரவியுள்ளன. பழந்தமிழரின் வாழ்க்கை முறையையும் பண்பாட்டையும் அறிந்து கொள்வதற்கு சங்க இலக்கியம் நமக்கு பெரிதும் பயன்படுகின்றது. சங்ககாலத் தமிழர் பண்பாடுகளே தமிழரின் வரலாறு முழுவதிலும் தொடர்ந்து வந்து அவர்களுடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு அடிகோலி வந்துள்ளன.
இடைக்கால வரலாற்றில் கல்வெட்டுச் சான்றுகள் பெரிதும் பயன்பட்டு வந்துள்ளன. இக்கல்வெட்டுகளுள் பெரும்பாலான கோயில்களுக்கும் மடங்களுக்கும் மக்களும் மன்னர்களும் வழங்கிய கொடைகளையே குறிப்பிடுவனவாகும். ஆகவே அவற்றைக் கொண்டு தமிழ் சமுதாயத்தின் வரலாறு ஒன்றை வகுக்கக் கூடும் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுவது பொருத்தமானதன்று. எப்படி இலக்கியங்களில் காணப்படும் வரலாற்றுக் குறிப்புகள் அவ்வளவும் நம்ப முடியாதனவோ அப்படியே கல்வெட்டுச் செய்திகள் அவ்வளவும் நம்பத்தக்கன அல்ல. கல்வெட்டுக்கள் அவ்வப்போது பிற்காலத்தில் மாற்றியமைக்கப்பட்டது முன்டு, மேலும் ஆயிரக்கணக்கான கல்வெட்டுகள் இன்னும் வெளியிடப்படாமல் உள்ளன. எனவே இந்நிலையில் கல்வெட்டு செய்திகளை மட்டும் கொண்டு திட்டமான வரலாறு ஒன்றை முயல்வது சரியாக இருக்காது.
ஐவகை நிலங்கள்
தமிழர்கள் தமிழக நிலப்பகுதியை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகையாகப் பிரித்தனர். இந்த நில அமைப்பாகும் அங்கு அமைந்த தட்பவெப்பநிலை ஆளும் ஒவ்வொரு நிலத்து மக்களுடைய பழக்கவழக்கங்கள், உணவு, உடை, பண்பாடு முதலியன வேறுபடுவதை காணலாம்.
குறிஞ்சி நிலம்
மலையும் மலையைச் சார்ந்த இடமும் குறிஞ்சி எனப்படும். இங்கு வாழும் மக்கள் விலங்குகளை வேட்டையாடி உண்டு வாழ்கின்றனர். இவர்கள் இலைகளையும் தலைகளையும் மரப்பட்டைகளையும் உடைகளாக உடுத்தி கொண்டனர். குறிஞ்சி நிலத்தில் பெரும்பாலும் காடுகள் இருப்பதால் உணவு பொருட்கள் பயிரிடுவது அரிதாக இருந்தது, கிழங்கு, தேன், காய், கனி முதலியன இவர்தம் உணவுப் பொருட்கள் ஆகும். இவ்வாறு இவர்கள் உணவு தேடி தங்களை பாதுகாத்துக் கொள்வதிலேயே பெரும் பொழுதை கழிப்பதால், அறிவு வளர்ச்சி பெற இவர்களுக்கு நேரமில்லை. இதற்கு அடிப்படைக் காரணம் இவர்கள் வாழும் நிலத்தின் அமைப்பே ஆகும்.
முல்லை நிலம்
காடும் காட்டைச் சார்ந்த புல்வெளிகளும் உள்ள இடம் முல்லை எனப்படும். இங்கு வாழும் மக்கள் ஆடு மாடுகளை மேய்த்து வாழ்கின்றனர் நீர் வளம் உள்ள சில இடங்களில் வரகு, சாமை முதலியவற்றை பயிரிடுகின்றனர்; ஆடு நாடுகளினால் கிடைக்கும் பால், தயிர், மோர், வெண்ணை முதலியவற்றை அருகிலுள்ள மருத நிலத்திற்கு எடுத்துச் சென்று விற்று தமக்கு வேண்டிய உணவுப் பொருட்களையும் ஆடைகளையும் அணிகளையும் வாங்கி வருவர்; இரவில் நல் உணவு உண்டு மகிழ்வர். ஆடு மாடுகளை மேய்க்க செல்லும் இடையர்கள் மரநிழலில் ஒருங்கு கூடி புல்லாங்குழல், ஆம்பற்குழல் முதலியவற்றை இசைத்து மகிழ்வர். நண்பகலில் தம் கணவருக்கு உணவு கொண்டு செல்லும் ஆயர் மகளிர், ஆடவர் இசைக்கேற்ப நடனம் ஆடுவர். இவ்வாறு முல்லை நிலத்தில் இசைக் கலையும் நடனக்கலையின் ஒரு சிறிது வளர வழி ஏற்பட்டது.
பாலை நிலம்
பாலை, விளைவு ஒன்றுமில்லாத வறட்சியான பகுதி ஆகும். இங்கு வாழும் மக்கள் தங்களுக்கு வேண்டிய உணவுப் பொருட்களை பயிரிட முடியாது; ஆகவே வழிப்பறி செய்தும் பிற நிலங்களில் களவு செய்தும் வாழ்வது இயற்கை. இவ்வழியாக பொழுதை கழிப்பதால், அவர்களிடம் கல்வியறிவு வளர வாழ வழி இல்லை. இவ்வாறு ஒரு நில மக்களை கள்வர்கள் ஆக்குவதும் அந்த நில அமைப்பே ஆகும்.
மருதம் நிலம்
ஆற்றுப் பாய்ச்சல் உள்ள வயலும் வயல் சார்ந்த இடமும் மருதநிலம் எனப்படும். நாகரீக வளர்ச்சி பெற்ற பகுதி என் நிலப்பகுதி ஆகும். இந்நிலப்பகுதி நீர்வளத்தில் சிறந்திருப்பதால், இங்கு வாழும் மக்கள் நிலத்தைப் பண்படுத்தி பயிரிட்டு உணவுப் பொருட்களை குறுகிய காலத்தில் சேமித்து வைத்துக் கொள்கின்றனர். மிகுதியான தானியங்களை பிறருக்குக் கொடுத்து பொருள் வளம் பெறுகின்றனர்; நிலத்தின் தன்மையை அறிந்து பருத்தி பயிரிட்டு ஆடை நெய்யவும் அறிகின்றனர்; கைத்தொழில்கள் கற்றுப் பயனும் எய்துகின்றனர். உணவுக்காக மற்ற நிலை மக்களைப் போல இவர்கள் பெரும் பொழுதை கழிக்க தேவையில்லை; எனவே, கல்வியில் கருத்தைச் செலுத்தி அறிவை வளர்க்கின்றன. இவர்கள் முயற்சியால் இசைக்கலை, நடன கலை, ஓவியக்கலை முதலியன சிறப்பு பெறுகின்றன. பலவகையாக உடுத்து, நிறைவுடன் உண்டு, இம்மக்கள் மகிழ்ந்து வாழ்கின்றனர். ஆகவே மருத நிலம், அந்நிலமக்களை நாகரீகத்திலும் பண்பாட்டிலும் சிறந்து விளங்க உதவுகிறது.
நெய்தல் நிலம்
கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் நிலம் எனப்படும். பெரும்பாலும் மன்னர் பகுதியாதலால் அங்கு ஒன்றும் பயிரிட முடியாது. அங்கு வாழ்பவர் கடலிலே கலம் செலுத்தி மீன் பிடிக்கின்றனர். முத்துக் குளித்தலும் சங்கு எடுத்தலும் இவர்கள் செய்யும் பிற தொழில்கள் ஆகும். இவர்கள் தம் பொருள்களை அருகில் உள்ள மருத நிலத்தில் விற்று தமக்கு வேண்டிய உணவுப் பொருட்களையும் ஆடைகளையும் பெறுகின்றனர். பரந்துபட்ட கடலே இவர்களது உழு நீலம் ஆதலால் அவர்களுக்கு ஓய்வு நேரம் கிடைப்பதில்லை. ஆகவே, கல்வியிலும் நாகரீகத்திலும் பண்பாட்டிலும் இவர்கள் சிறக்க வழியில்லை. இம்மக்களின் இத்தகைய வாழ்க்கைக்கு இவர்கள் வாழும் நிலப்பகுதியின் அமைப்பே காரணமாகும்.
மனித இனத்திற்கு வேண்டிய எல்லா வசதிகளும் கிடைக்கப் பெற்றுள்ள நிலம் மருத நிலமாகும். ஆகவே, நிலத்தின் அமைப்பாலும் அது பெற்றுள்ள தட்பவெப்பநிலை ஆளும் மக்களின் வாழ்க்கை வளம் பெற்றுள்ளது என்பதையும், நிலத்தின் அமைப்பிற்கேற்ப மக்களின் பழக்கவழக்கங்கள், உடை, உணவு முதலியன மாறுகின்றன என்பதையும் இதிலிருந்து நாம் எளிதில் அறியலாம்.
சங்க காலம் கிமு 300 முதல் கிபி 300 வரை
கடல்கோளால் அழிந்த தென் மதுரையில் முதல் சங்கம், கபாடபுரத்தில் இடைச்சங்கமும், மதுரையில் கடைச்சங்கம் இருந்ததாக கருதப்படுகிறது சங்ககாலத்தை தமிழர்களின் பொற்காலம் என்பர்.தமிழில் இயற்றப்பட்ட பழமையான நூல் தொல்காப்பியம் இது கடைச்சங்கம் காலத்தில் இயற்றப்பட்டது. எட்டுத்தொகையில் பத்துப்பாட்டு புறநானூறு ஆனால் அது ஆகியவையும் சங்ககாலத்தில் ஏற்றப்பட்டன.
தமிழகம் ஒரு காலத்தில் தமிழ் மக்களை மட்டுமே குடிமக்களாக கொண்டிருந்தது. தமிழ் அரசர்கள் ஆகிய சேர சோழ பாண்டியர் தமிழகத்தை ஆண்டு வந்தனர். தமிழ்மொழி ஒன்றே நாட்டில் நிலவி இருந்தது. தமிழ் நாகரிகம் ஒன்றே தமிழகத்தில் பரவி இருந்தது. என்ன நாளடைவில் வடமொழி வாணர் சிறுசிறு தொகையினராக தமிழகத்தில் குடியேறினர். அவர்கள் பண்பாட்டு மொழியுடனும் வேதம் முதலிய நூல்கள் உடனும் புகுந்தமையால், அந்நாட்டு மக்கள் அவர்களை மதித்தனர். சிறந்த நாகரீகத்தில் வாழ்ந்த தமிழக மக்கள், வந்தவரை விருந்தினரை வரவேற்று, அவர்களிடமிருந்த நல்லவற்றை கைக்கொண்டனர். கூட்டுறவால் தொல்காப்பியருக்கு முற்பட்ட சங்க காலத்திலேயே தமிழ் மொழியில் வட சொற்கள் கலக்கத் தொடங்கின. இவ்வாறே வழிபாடு சமயம் முதலியவற்றிலும் புதிய பல கருத்துக்களும் பழக்கங்களும் இடம் பெறலாயின. வந்தவர் வழிபட்ட தெய்வங்களுக்கு தமிழகத்தில் கோயில்கள் உண்டாயின; அவர்கள்தான் சமயக் கதைகளும் இங்கு இடம்பெற்றன. இவ்வாறு வடமொழியாளர் கூட்டுறவால் தமிழகத்தில் சில துறைகளில் கலப்புகளும் மாறுதல்களும் ஏற்பட்டன. இவை வரலாற்றில் உண்டான மாறுதல்கள்.
தெனிந்திய அரசுகள்
பண்டைய தமிழகம் ஆனது, சேர, தோழா, பாண்டிய நாடு என்ற முப்பெரும் அரசியல் பிரிவுகளைக் கொண்டதாக இருந்தது. இது சங்க காலம் எனப்பட்டது. பின்னர் களப்பிரர்கள் கிபி 300 முதல் 600 ஆம் ஆண்டு வரையில் ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகள் தமிழகத்தை ஆண்டனர். அதன் பின்னர் பல்லவர்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.
பல்லவர் வரலாறு (Pallavargal)
பல்லவர்களின் அரசியல் வரலாறு
அவர்களின் தோற்றம் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இவர்களில் பாரசீகத்தை சேர்ந்தவர்கள் என்றும், சாதவாகனர்கள் கீழ் ஆட்சி அலுவலராக இருந்தவர்கள் என்றும், தொண்டை மண்டலத்தை தாயகமாக கொண்டவர்கள் என்றும் கூறுவர்.
பல்லவ மரபை, முற்கால பல்லவர் பிற்கால பல்லவர் என பிரித்து வழங்குவர். இவரின் தலைமையில் பல்லவர்கள், களப்பிரர்களை தோற்கடித்து வட தமிழ் நாடான தொண்டை மண்டலத்தில் நமது ஆட்சியை நிறுவினர். பல்லவர்களின் தலைநகரம் காஞ்சிபுரம் ஆகும்.
பிற்காலப் பல்லவர்கள் (கிபி 570- 903)
பிற்கால பல்லவ அரசர்களில் முதன்மையானவர் சிம்மவிஷ்ணு. இவர் களப்பிரர்களை வீழ்த்தி பல்லவர் ஆட்சி தொண்டை மண்டலத்தில் தொடங்கி வைத்தார். பின்னர் சோழ பகுதிகள் சிலவற்றை கைப்பற்றினர். மேலும் வடக்கில் ஆந்திர பகுதியான விஷ்ணுகுண்டின் முதல், தெற்கில் காவிரியாறு வரையில் விரிந்ததொரு பேரரசு நிறுவினார். அதனால் அவனிசிம்மன் அதாவது உலகின் சிங்கம் என புகழப்பட்டார்.
முதலாம் மகேந்திரவர்மன் (கிபி 600-630)
சிம்ம விஷ்ணுவின் மகன் முதலாம் மகேந்திரவர்மன் ஆவார். அவரது காலத்தில் சாளுக்கியர்களோடு பகைமை ஏற்பட்டது. மத்திய அரசு இரண்டாம் புலிகேசி, பல்லவ நாட்டின் மீது போர் தொடுத்தார். மகேந்திரவர்மனை தோற்கடித்து பல்லவ நாட்டின் வடபகுதிகளை கைப்பற்றினார்.
மகேந்திர வர்மன் தமது ஆட்சியின் தொடக்கத்தில் சமண சமயத்தை பின்பற்றினார். பின்னர் சைவக்குரவர் அப்பர் என்பவரால் சைவ மதத்திற்கு மாற்றப்பட்டார். மகேந்திர வர்மன் பல்வேறு திறன்களை கொண்டிருந்தார். கட்டிடக் கலையிலும், ஓவியக் கலையும் இசைக் கலையிலும், கொண்ட ஈடுபாட்டினால் இவர் பல சிறப்புப் பெயர்களை பெற்றிருந்தார். இவர் மகேந்திர மங்கலம், மகேந்திரவாடி என்ற இரண்டு நகரங்களை நிறுவினார்.
முதலாம் நரசிம்ம வர்மன் (கிபி 630-668)
முதலாம் மகேந்திரவர்மனின் மகன் முதலாம் நரசிம்மவர்மன் ஆவான். இவரை மாமல்லன் என்றும் அழைப்பர் மற்போரில் சிறந்தவர் என்பது இதன் பொருளாகும். சாளுக்கிய தலைநகரான வாதாபிக்கு படையெடுத்துச் சென்று வென்றதால் இவரை 'வாதாபி கொண்டான்' எனவும் புகழப்பட்டார். இவரது நண்பர் மானவா்மனுக்காக, இரு முறை இலங்கையின் மீது போரிட்டு வென்று ஆட்சியை மீட்டுக் கொடுத்தார். சிம்மவர்மன் ஆட்சியின்போதுதான் சீன பயணி யுவான்சுவாங், தலைவர் காஞ்சிக்கு வருகை தந்தார்.
நரசிம்மவர்மன் சிறந்த கட்டிடக்கலை நிபுணராகவும் விளங்கினார். மாமல்லபுரத்தில் உள்ள ஒற்றைக்கல் ரதங்கள் இவரது கட்டிடக்கலைக்கு சிறந்ததொரு எடுத்துக் காட்டாகும். இவரைத் தொடர்ந்து இரண்டாம் மகேந்திரவர்மன்(கிபி 668-670), முதலாம் பரமேஸ்வரவர்மன் (கிபி 670-691)ஆகியோர் ஆட்சி புரிந்தனர்.
இரண்டாம் நரசிம்மவர்மன் (இராஜசிம்மன்) கிபி 691-728
முதலாம் பரமேஸ்வரவர்மன் மகன் இரண்டாம் நரசிம்மவர்மன் ஆவான். இவரது ஆட்சி காலத்தில் பல்லவ நாடு, அமைதியும் வளமும் கொண்டு விளகியது. காஞ்சிபுரத்தில் கைலாசநாதர் கோயில், மாமல்லபுரத்தில் கடற்கரைக் கோயில், பனைமலையில் தாளகிரீசுவரர் கோயில் உட்படபல ஆலயங்களை இவர் கட்டினார்.
இவரது அரசவையில் பல அறிஞர்கள் இடம்பெற்றிருந்தனா். அவர்களுள் தண்டி என்ற வடமொழி அறிஞர்களும் ஒருவராவார். இவர் தண்டி அலங்காரம் என்னும் இலக்கண நூலை எழுதினார். சிம்மவர்மன் ஆட்சியில் சீனாவுடன் வணிக உறவு ஏற்பட்டது ஒரு முக்கிய நிகழ்வாகும்.
இரண்டா பரமேஸ்வரவர்மன் கிபி 728-731
இரண்டாம் நரசிம்மவர்மனின் மகனான இரண்டாம் பரமேசுவரவர்மன் கிபி 728 ல் ஆட்சியில் அமர்ந்தார். சாளுக்கிய மன்னர் இரண்டாம் விக்கிரமாதித்தனால் போரில் தோற்கடிக்கப்பட்டார். கங்கா்களோடு நடைபெற்ற போரில் பரமேஸ்வரவர்மன் கொல்லப்பட்டார். இவரது மரணத்துக்குப் பிறகு இவரின் மகன்கள் ஆட்சிக்கு வராத காரணத்தினால் சிம்மவிஷ்ணுவால் தொடங்கப்பட்ட பிற்கால பல்லவ மரபு முடிவடைந்தது.
இரண்டாம் நந்திவர்மன் கிபி 731-796
இரண்டாம் பரமேஸ்வரனின் இறப்பிற்குப் பிறகு சிம்ம விஷ்ணுவின் தம்பியும் இரண்யவர்மனின் மகனுமான இரண்டாம் நந்திவர்மன் என்பவர், பல்லவ அமைச்சர்கள், கடிகைகளின் (கல்வி நிலையங்கள்) உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரால் பல்லவ அரசர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாம் நந்திவர்மன் விஷ்ணு பக்தர் ஆவார். காஞ்சியில் வைகுண்ட பெருமாள் கோயிலைக் கட்டினார். திருமங்கை ஆழ்வார் இவரின் சமகாலத்தவர்.
பல்லவ பேரரசின் வீழ்ச்சி
பல்லவ அரசர்களில் இரண்டாம் நந்திவர்மனுக்குப் பிறகு ஆட்சி செய்தவர்கள் திறமையற்றவர்களாக இருந்தார்கள். இவர்கள் பாண்டியனுடன் போரிட்டார்கள். கடைசி பல்லவ அரசர் அபராஜிதனை (கிபி 885-903) சோழமன்னர் ஆதித்தன் தோற்கடித்தார். அபராஜிதனுக்குப் பிறகு தொண்டை மண்டலத்தில் பல்லவர்கள் ஆட்சி முடிவுற்றது.
பல்லவர்களின் நிர்வாகம்
பல்லவர்கள் சிறந்ததொரு நிர்வாக அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர். பல்லவ நாடு ' ரஸ்டிரம்ட எனப்படும் பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது. மண்டலங்கள் பல விஷயங்களாகவும் (கோட்டங்களாகவும்), விஷயங்கள் பல நாடுகளாகவும் நாடுகள் பல ஊர்களாகவும் பிரிக்கப்பட்டன. மைய அரசின் தலைவராக மன்னர் விளங்கினார். மன்னர்களுக்கு உதவியாக அமைச்சர்களும், செயலாளர்களும் இருந்தனர். உரிமையியல், குற்றவியல் ஆகிய நீதிமன்றங்களும் இருந்தன.
நிர்வாகத்தின் அடிப்படை அலகு கிராமமாகும். கிராமத்தை நிர்வகிக்க 'ஊர் அவை' இருந்தது. கிராமங்களில் வளர்ச்சிக்கு வாரியங்கள் பாடுபட்டன, ஏரி வாரியம், தோட்ட வாரியம், கோயில் வாரியம், உட்பட சுமார் இருபது வாரியங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
பல்லவர்களின் பங்களிப்பு
பல்லவ மன்னர்கள் கல்விக்கு பெரும் ஆதரவு தந்தனர். முதலாம் மகேந்திர வர்மன் மத்த விலாச பிரகசனம், பகவத் வியூகம் ஆகிய நூல்களை எழுதினார். பாரவி டகீதர் ஜூனியரம்ட என்ற நூலை எழுதினார் தம்பி என்பவர் அவந்தி சுந்தரி கதாசாரம் நூலகம், பெருந்தேவனார் வெண்பாவையும் எழுதினார். ஆழ்வார்களும், நாயன்மார்களும் எழுதிய பாடல்களில் பல, பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாகும். புகழ்பெற்ற நந்திக்கலம்பகமும் இக் காலகட்டத்தில் எழுதப்பட்டது.
பல்லவர் கால கலைகள்
திராவிட பாணியிலான கட்டடக் கலை பல்லவர்கள் காலத்தில் தொடங்கப்பட்டது. இவர்களது கட்டடக் கலையை நான்கு விதமாகப் பிரிக்கலாம். முதலாவதாக, பாறைக்குடைவு கோயில்கள். இவை முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் ஏற்படுத்தப்பட்டன. எடுத்துக்காட்டாக, மகேந்திரவாடி, மாமண்டூர், தளவானூர், சீயமங்கலம், திருச்சிராப்பள்ளி, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பல இடங்களில் உள்ளன. இரண்டாவதாக,ஒற்றைக் கல் ரகங்கள், மண்டபங்கள் ஆகியன. இவை மாமல்லபுரத்தில் உள்ளன. மூன்றாவது அமைப்பு, இராஜசிம்மன் வகையிலானது. காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோயில், மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில் ஆகியன இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். நான்காவது வகையானது, கட்டுமானக் கோயில்கள் ஆகும். காஞ்சியில் உள்ள முக்தீஸ்வரர் ஆலயம், வைகுந்த பெருமாள் கோயில் ஆகியவை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்.
பல்லவ மன்னர்கள் இசை, ஓவியம், நுண்கலைகளை ஆதரித்தனர். இசையில் வல்லவராய் திகழ்ந்ததால் முதலாம் மகேந்திர வர்மன் 'சங்கீர்ணசாதி' என்று புகழப்பட்டார். பல்லவர் காலத்து அழகிய ஓவியங்கள் காஞ்சி கைலாசநாதர் கோயிலில் காணப்படுகின்றன.
சோழப் பேரரசு (Chola)
சோழர்களின் வரலாறு மிகவும் பழமையானது. மகாபாரதத்திலும் அசோகரின் கல்வெட்டுகளிலும், மெகஸ்தனிஸ், தாலமி ஆகியோரது குறிப்புகளிலும் சோழர்களைப் பற்றிய செய்திகளை காண முடிகிறது.
சங்ககாலத்தில் சோழர்கள் திருச்சி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளை ஆட்சி செய்துள்ளனர். அவர்களது அன்றைய தலைநகரமாக உறையூர் விளங்கியது. சோழர்களது இலச்சினை 'புலி' உருவம் இடம்பெற்றது. முற்காலச் சோழர்களில் கரிகால் சோழன் புகழ் பெற்றவர் ஆவார். இவர் காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டினார்.
பிற்காலச் சோழர்கள்
கிபி 9 ஆம் நூற்றாண்டின் இடையில் அதிகாரத்துக்கு வந்த சோழர்கள், பிற்காலச் சோழர்கள் அல்லது பேரரசு சோழர்கள் என அழைக்கப்பட்டனர் இச்சோழ மரபு தென்னிந்தியாவின் இரு பகுதிகளையும், இலங்கை, கடாரம்,(சுமத்ரா, மலேசியப் பகுதிகள்) ஆகிய பகுதிகளையும் வென்றதால் இவர்கள் பேரரசு தோழர்கள் எனப்பட்டனர்.
பிற்காலச் சோழர்களின் எழுச்சிக்கு அடித்தளமிட்டவர் விஜயாலயச் சோழன் (கிபி 850-887).
விஜயாலய சோழனின் மகன் முதலாம் ஆதித்த சோழன் (கிபி 871-907). இவர் தொண்டைமண்டலம் உள்ளிட்ட சோழமண்டலத்தில் தன் குடைக்கீழ் கொண்டு வந்தார். கங்கா்களையும் கொங்கு நாட்டினரையும் வென்றாா் ஆதித்திய சோழனின் மகன் முதலாம் பராந்தகன் (கிபி 907-955) பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து, அதன் தலைநகரான மதுரையை வென்றதால் 'மதுரை கொண்டான்' எங்கு புகழப்பட்டார். புகழ்பெற்ற தக்கோலம் போரில் இராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணனிடம் தோற்று கிபி 955 இல் மரணம் அடைந்தார்.
முதலாம் பராந்தகனின் வழித்தோன்றல்கள்
கண்டராதித்தன் (கிபி 949-957), அரிஞ்சயன் (கிபி 956-957), இரண்டாம் பராந்தகன் (கிபி 956-973), ஆதித்தன் (கிபி 956-966), உத்தம சோழன் (கிபி 965-985).
முதலாம் ராஜராஜ சோழன் (கிபி 985-1014)
சோழ மரபில் ஆட்சி செய்த மன்னர்களில் மிகச் சிறந்த ஆட்சியாளர் முதலாம் இராஜராஜ சோழன் ஆவார். இவர் சிறந்த வெற்றியாளராகவும் விளங்கினார். சேரர், பாண்டியர், சாளுக்கியர்களை போர்களில் வென்றாா். இலங்கை மன்னன் ஐந்தாம் மனிதனையும் வென்று அனுராதபுரத்தில் சிவன் கோயிலை கட்டினார். மேலும் ராஜராஜன் முந்நீர் பழந்தீவுகள் எனப்பட்ட மாலத்தீவுகளையும் வென்றார். இவர் காலத்தில் சோழப் பேரரசின் பரப்பு தென்னிந்தியாவையும் கடந்து பரந்து விரிந்திருந்தது.
ராஜராஜன், சேரமன்னன் பாஸ்கரவா்மனை காந்தளூர் சாலை (திருவனந்தபுரம்) என்னுமிடத்தில் வென்றார். கல்யாணியை ஆண்ட சத்திய சரயாவிடமிருந்து வங்கியை கைப்பற்றி சக்தி வா்மனுக்கு அளித்தார். இவருடைய மகளே சக்தி வர்மனின் சகோதர விமலாதித்தனுக்கும் மணமுடித்தார். மேலும் கங்கவாடி, தடிகைபாடி, நுளம்பாடி ஆகிய மைசூரின் பகுதிகளையும், ரைச்சூர் தோஆப் தொகுதிகளையும் வென்றார்.
மும்முடிச்சோழன், ஜெயங்கொண்டான், சிவபாதசேகரன் போன்ற பல சிறப்புப் பெயர்களை ராஜராஜன் பெற்றிருந்தார். இவர் சைவ சமயத்தை பின்பற்றினார். இவரது காலத்தில்தான் தேவாரம் தொகுக்கப்பட்டது. கிபி 1010 ஆம் ஆண்டில் தஞ்சாவூரில் பெருவுடையார் கோவிலைக் கட்டினார். இவர் கிபி 1014ல் இயற்கை எய்தினார்.
முதலாம் ராஜேந்திரன் (கிபி 1012-1044)
ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழன் தன் தந்தை வழியில் சோழப் பேரரசை விரிவுபடுத்தினார். இடைதுறைநாடு (ரெய்ச்சுா்), கோள்ளிப்பக்கை (ஹைதராபாத் பகுதி), மண்ணைக்கடக்கம் (மால்கெட்), ஆகிய இடங்களை வென்றார். ஈழ மண்டலம் எனப்பட்ட இலங்கை முழுவதையும் கைப்பற்றினர். மேலும், பாண்டியர், சேரர், மேலைச் சாளுக்கியர் ஆகியோரையும் தோற்கடித்தார்.
வங்காளத்தின் மீது படையெடுத்த ராஜேந்திரன், அந்நாட்டு மன்னர் மகிபாலனை வென்றார். இவ்வெற்றியின் நினைவாக 'கங்கை கொண்ட சோழபுரம்' என்னும் நகரை நிறுவினார்.
ஸ்ரீவிஜயம், கடாரம் மற்றும் நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த பகுதிகள் மற்றும் மேலாயா தீபகற்பம் ஆகிய இடங்களை, கடல்கடந்து போரிட்டு வென்றது இவரது மிகச்சிறந்த செயலாகும். இவருக்கு, கங்கை கொண்டான், பண்டிதசோழன், கடாரம் கொண்டான் போன்ற சிறப்பு பெயர்கள் அழிக்கப்பட்டன. ராஜேந்திரன் காலத்தில் சோழப் பேரரசு ஆனது புகழின் உச்சநிலையை அடைந்தது.
முதலாம் ராஜேந்திரனின் வழித்தோன்றல்கள் முதலாம் இராசாதிராசன் கிபி 1018-1054, இரண்டாம் ராஜேந்திரன் கிபி1056-1064, இராச மகேந்திரன் கிபி 1060-01063, வீரஇராசேந்திரன் கிபி 1063-1070, அதிஇராசேந்திரன் கிபி1067 - 1070.
முதலாம் குலோத்துங்க சோழன் (கிபி 1071-1122)
முதலாம் ராஜேந்திர சோழனின் மகளான அங்கம்மா தேவி என்பவரின் மகனே முதலாம் குலோத்துங்க சோழன் ஆவார்.குலோத்துங்க சோழனின் தந்தை வெங்கியைச் சேர்ந்த இராசராசன் ஆவார். இவர் வேங்கை ஆண்ட சாளுக்கியமரபை சேர்ந்தவர். பின்னர் சோழ நாட்டு மன்னர் ஆனார். இவர் சோழ நாட்டுடன் வெங்கியை இணைத்து, சாளுக்கிய-தோழ மரபை தோற்றுவித்தார். மேலைச் சாளுக்கியர்களை வென்று கலிங்கத்தை கைப்பற்றினர். இவர் காலத்தில் இலங்கை சோழப் பேரரசில் இருந்து விடுதலை பெற்றது. ஸ்ரீவிஜயம் என்ற நாட்டுடன் நெருங்கி நட்புறவு கொண்டிருந்தார் கிபி 1077 ல் அங்கு வணிக குழுவினரையும் அனுப்பி வைத்தார்.
முதலாம் குலோத்துங்கன் சிறந்த நிர்வாகியாக விளங்கினார். நிலங்களை அளந்து வரி விதித்ததோடு, சுங்க வரியை நீக்கி வணிகத்தை எளிமைப்படுத்தியதால் இவர் 'சுங்கம் தவிர்த்த சோழன்' எனப் போற்றப்பட்டார்.
இவர், ஜெயம் கொண்டான், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, கம்பர், முதலான கவிஞர்களை ஆதரித்தார்.
சோழப் பேரரசு சிதறல்
சோழ மன்னன் மூன்றாம் இராஜேந்திரன் (கிபி 1246-1279) காலத்தில் சோழப் பேரரசு சிதைவுறத் தொடங்கியது, காடவராயன் போன்ற குறுநில மன்னர்களின் எழுச்சி, பாண்டிய நாட்டு எழுச்சி ஆகியவை தோழ அரசை நிலைகுலையச் செய்தது. பாண்டிய மன்னன் இரண்டாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், சோழ நாட்டின் கடைசி அரசனான மூன்றாம் இராஜேந்திரனைவென்று சோழநாட்டை கைப்பற்றினார்.
சோழர்களின் ஆட்சி முறை
சோழர்களின் ஆட்சி முறையானது சிறந்த, திறமையான நிர்வாக அமைப்பாக உருவாக்கப்பட்டிருந்தது. சோழநாட்டின் இவ்வாறாக அடிப்படை அலகு ' ஊர்' என்பதாகும். பல ஊர்கள் சேர்ந்தவை வளநாடு என்றும், பல வளநாடுகள் சேர்ந்தது மண்டலம் என்றும், மண்டலங்கள் அனைத்தும் ஒருங்கே சேர்ந்ததாக சோழநாடு விளங்கியது.
முதலாம் பராந்தக சோழன் காலத்தைச் சார்ந்த உத்திரமேரூர் கல்வெட்டு, கிராம நிர்வாகத்தை விரிவாக விளக்குகிறது. ஒவ்வொரு கிராமமும் ஊர் அல்லது சபை என்ற அமைப்பின் மூலம் நிர்வகிக்கப்பட்டது. கிராமசபை உறுப்பினர்கள் குடவோலை முறையின் படி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன்படி உறுப்பினர்களாக போட்டியிடுவோாின் பெயர்களை பனை ஓலையில் எழுதி ஒரு குடத்தில் இடுவர். ஒரு சிறுவன் அல்லது சிறுமியை அழகு முகத்தில் உள்ள ஓலைகளை எடுக்கச் செய்வா். அவ்வாறு 30 ஓலைகள் எடுக்கப்பட்டு, அவற்றில் உள்ள பெயர்களுக்குரியோா் உறுப்பினர்களாக அறிவிக்கப்படுவார்.
வாரியங்கள் என்று விரிவான நிர்வாக அமைப்பும் நடைமுறையில் இருந்தது. அவைகளுள், சமூகச் சமவத்சர வாரியம், ஏரி வாரியம், தோட்ட வாரியம், பஞ்ச வாாியம், பொன் வாரியம், புறவு வரி வாரியம் ஆகியவை குறிப்பிடத் தகுந்ததாகும். இதன் உறுப்பினர்கள் வாரிய பெருமக்கள் எனப்பட்டனர். வாரிய எண்ணிக்கையும், உறுப்பினர் எண்ணிக்கையும் கிராமங்களுக்கு ஏற்ப மாறுபட்டது.
சமூக பொருளாதார நிலை
சோழர்கால சமூகத்தில் சாதிமுறை வழக்கில் இருந்தது. சதி தேவதாசி போன்ற வழக்கங்கள் நடைமுறையில் காணப்பட்டன. பெண்கள் 'சிறுபாடு' என்னும் சிறுசேமிப்பு பழக்கத்தை மேற்கொண்டிருந்தனர்.
வரிப் பொத்தகம்
வரிவிதிப்பு நடைமுறைகளை சோழர் காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுதிக் தொகுத்தனர். இது வரிப் பொத்தகம்(புத்தகம்) எனப்பட்டது.
ராஜராஜன் காலத்தில் (கிபி 1001) வரி விதிப்புக்காண கணக்கெடுப்பு பணி சேனாதிபதி உழவன் என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.
இக்காலத்தில் நெசவு, உலோக உருக்குத்குத் தொழில்கள் மேன்மையுற்றன. மக்கள் மன்றங்கள் பரவலாக இருந்தன. சீனா, சுமத்ரா, ஜாவா, அரேபியா ஆகிய நாடுகளுடன் வணிக உறவு ஏற்பட்டிருந்தது.
சமயமும் கல்வியும்
சோழ வேந்தர்கள் சைவ சமயத்தின் மீது ஈடுபாடு கொண்டிருந்தனர். எனினும் பிற பிற சமயங்களான, வைணவம், சமணம், பௌத்தம் ஆகியவற்றையும் மதித்து நடத்தினர். ஆலயங்களும், மடங்களும் கல்வி மையங்களாக விளங்கின. இங்கு, வேதங்கள், புராணங்கள், கணிதம், மருத்துவம் ஆகியன கற்பிக்கப்பட்டன. இவைகளைப் பற்றிய குறிப்புகளை எண்ணாயிரம், திருமுக்கூடல், திருபுவனம் ஆகிய இடங்களில் உள்ள கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம்.
இலக்கியம்
சோழர் காலம் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு புத்துணர்வு தந்தது. சேக்கிழாரால் பெரிய புராணமும் (திருத்தொண்டர் புராணம்), திருத்தக்க தேவரால் சீவக சிந்தாமணியும் எழுதப்பட்டன. கம்பராமாயணத்தை கம்பரின், கலிங்கத்துப் பரணியை செயங்கொண்டாரும் எழுதினர். சைவ நூலான பன்னிரு திருமுறைகளை நம்பியாண்டார் நம்பியும், வைணவ நூலான திவ்ய பிரபந்தத்தை நாதமுனிகள் கொடுத்தனர். மூவருலா, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், தக்கயாகபரணி ஆகியவற்றை ஒட்டக்கூத்தர் எழுதினார். உரையாசிரியர்களான இளம்பூரனார், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் ஆகியோர் தோழர் காலத்தவரே.
கலையும், கட்டிடக்கலையும்
திராவிட பாணியிலான கலைகளும், கட்டிடக்கலையும் சோழர் காலத்தில் முழு வடிவத்தைப் பெற்றன. கோயில் கருவறையின் மீது கட்டப்பட்ட விமானம் உயரமாக வடிவமைக்கப்பட்டது. கிருஷ்ணா ஆறு தொடங்கி, மன்னார் வளைகுடா வரையில் சுமார் 70 ஆலயங்களில் சோழர்களின் சிறந்த கட்டிடக்கலை அடையாளங்களைக் காணலாம். திருச்சிராப்பள்ளி, திருவரங்கம், தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம், திருவண்ணாமலை, சுசீந்திரம், திருவனந்தபுரம், உடுப்பி போன்ற இடங்களில் கட்டப்பட்ட ஆலயங்கள் சோழர்களின் கலையை பிரதிபலிக்கும் வகையில் சிறப்புடன் திகழ்கின்றன.
முற்காலச் சோழர்களின் கட்டிடக்கலை ஆனது எளிமையான வேலைப்பாடுகளை உடையதாகும். நார்த்தாமலையின் விஜயாலய சோழீஸ்வரம், கொடுங்கலூரின் ஐவர் கோயில் ஆகியன இக் காலத்தை சேர்ந்தவை. பிற்காலச் சோழர்களின் தொடக்க காலத்தில் எழுப்பப்பட்ட ஆலயங்கள் கம்பீரமானவை. அவை தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் மற்றும் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சிவன் கோவில் போன்றவையாகும். தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் உலக தொன்மையான சின்னங்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது போற்றுதலுக்குரியதாகும். தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலின் விமானத்தின் உயரம் 216 அடி ஆகும். மூலவரின் மீது கட்டப்பட்ட விமானம் 13 அடுக்குகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பிற்காலச் சோழர்களது கட்டிட பணிகள் அழகும், நேர்த்தியும் அமைந்தனவாகும். தஞ்சாவூர் சுப்ரமணியர் ஆலயம், தாராசுரம் அறிவட்டேசுவரா் கோயில், கும்பகோணம் அருகே திருபுவனம் என்னும் இடத்தில் உள்ள கம்பஹரேஸ்வரர் அல்லது திருபுவனேஸ்வரர் கோவில் ஆகியனவும் பிற்கால சோழர்களால் கட்டப்பட்டவை.
சிற்பங்கள்
சோழர்களது சிற்பங்களிலும், உலோகச் சிற்பங்களிலும் காணப்படும் அழகிய உருவங்கள், கற்பனை வடிவங்கள், அலங்கார வேலைப்பாடுகள் எல்லாமே அவர்களது தனித்துவமிக்க ஈடுபாட்டை பிரதிபலிக்கிறது. இதனுள் முதலாம் இராஜராஜனின் சிற்பமானது கலைநயம் கொண்டது. சிவன், விஷ்ணு, பிரம்மா, எண் கரங்களுடன் காட்சி தரும் துர்க்கை, ஆகிய ஆலயச் சிற்பங்கள் அனைத்துமே மிகுந்த அழகு வாய்ந்தவை.
கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலில் உள்ள நடராசர், அர்த்தநாரீஸ்வரர் ஆகிய உலோகச் சிலைகள், சோழர் காலத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
ஓவியங்கள்
சோழர்களது சுவர் ஓவியங்கள் எழிலுற அமைந்துள்ளன. அவை, தஞ்சாவூர், திருமயம், காஞ்சி கைலாசநாதர் கோயில், நார்த்தாமலை விஷ்ணு கோயில் ஆகிய இடங்களில் காணலாம்.
இசை
நுண்கலை எனப்படும் இசைக்கலை ஆனது வளர்ச்சி பெற்ற காலம் இது. இன்றைய கர்நாடக இசைக்கு சோழர் காலத்தில்தான் அடித்தளம் இடப்பட்டது. இதே நாட்களில்தான் பரதநாட்டியம் என்னும் அழகு மிளிரும் ஆடற்கலையும் தோன்றியது.
சோழர் ஆட்சியின் விளைவுகள்
கிபி 850ல் தொடங்கி கிபி 1279 ஆம் ஆண்டு வரையில் சுமார் 430 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி செய்த சோழர்களின் காலத்தில் தமிழகம் பல துறைகளில் வளர்ச்சி கண்டது. அரசியல், நிர்வாகம், தமிழ் இலக்கியம். கோயில் கட்டிடக்கலை, இசை, ஆடல் ஆகிய அனைத்து கலைகளிலும் சோழர்கள் தங்களின் தாக்கத்தினையும், முத்திரையையும் பதித்தார்கள்.
கடல் கடந்து பல நாடுகளை தான் ஆட்சியின் கீழ் கொண்டு வந்த ட'பேரரசுச் சோழ' களின் காலத்தில் தமிழ் சமுதாயத்தின் பெருமை திக்கெட்டும் பரவியது.
பாண்டிய பேரரசு (Pandya)
அன்றைய காலகட்டத்தில் பிறந்து பாண்டிய பேரரசானது இன்றைய மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களும், திருச்சிராப்பள்ளியின் ஒரு பகுதி மற்றும் திருவாங்கூாின் சில பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. மெகஸ்தனிஸ், பிளினி, ஆகியோரது குறிப்புகளும், பழந்தமிழ் இலக்கியங்களிலும், யுவான்சுவாங், மார்க்கோ போலோ ஆகியோரின் பயணக் குறிப்புகளிலும் பாண்டியரின் வரலாற்றுச் செய்திகளை அறியலாம். பாண்டியர்களின் வரலாற்றை, முற்காலப் பாண்டியர்கள், முதலாம் பாண்டியப் பேரரசு மற்றும் இரண்டாம் பாண்டியப் பேரரசு என மூன்று காலகட்டங்களாக வகைப்படுத்தப்படுகிறது.
முற்காலப் பாண்டியர்கள்
முற்கால பாண்டியர்கள் தமிழை வளர்க்க தமிழ் சங்கங்கள் அமைத்தல் பெருமை பெற்றவர்கள். பாண்டியர்களின் தலைநகரம் மதுரை ஆகும். அவர்களது இலச்சினை மீன் உருவம் ஆகும். தமிழகத்தை களப்பிரர்கள் கைப்பற்றியபோது முற்கால பாண்டியர் ஆட்சியானது முடிவுக்கு வந்தது.
முதலாம் பாண்டியப் பேரரசு
பாண்டிய அரசர் கடுங்கோன், களப்பிரர்களை வென்று கிபி ஆறாம் நூற்றாண்டின் இறுதியில்பாண்டியர்களின் ஆட்சியை மலரச் செய்தார். இக்கால கட்டத்தையே (கிபி 550-950) முதலாம் பாண்டியப் பேரரசு காலம் என்பர்.
அரிகேசரி மாறவர்மன், இரணதீரன், முதலாம் மாறவர்மன் இராஜசிம்மன் முதலாம் வரகுணன் மற்றும் ஸ்ரீ மாற ஸ்ரீவல்லபன் ஆகியோர் முதலாம் பாண்டியப் பேரரசின் முக்கிய அரசர்கள் அவர்கள். இவர்கள் பாண்டிய பேரரசை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், சேலம் ஆகிய இடங்களில் விரிவு படுத்தினார்கள்.
முதலாம் பாண்டியப் பேரரசின் முடிவு
ஸ்ரீ மாற ஸ்ரீவல்லபனின் வழித்தோன்றல்கள் பல்லவ, சோழர்களோடு பலமுறை போரிட நேர்ந்தது. கிபி 10 முதல் 11 ஆம் நூற்றாண்டு வரை பாண்டியர்கள் பலமுறை போரிட்டும் தமது பழைய பெருமையை நிலை நிறுத்த முடியவில்லை. அவர்களோடு நடந்து தொடர் போராட்டங்களில் பாண்டிய பேரரசு சிதறுண்டு போனது.
இரண்டாம் பாண்டியப் பேரரசு
கிபி 13 ஆம் நூற்றாண்டில் பாண்டியர்கள் மெல்ல, சோழரின் தலைமையிலிருந்து விடுபட்டு தங்களது தனியரசை நிறுவினர். இந்த நிலையில் விக்கிரம பாண்டியனுக்கும், வீரபாண்டியனுக்கும் இடையில் வாரிசு உரிமைப் போர் ஏற்பட்டது. சோழ வேந்தன் மூன்றாம் குலோத்துங்கனின் ஆதரவோடு விக்கிரம பாண்டியன் ஆட்சியை பிடித்தார் முதலாம் ஜடாவா்ம குலசேகர பாண்டியன் (கிபி 1190-1216) தனது தந்தை விக்கிரம பாண்டியனை அடுத்து ஆட்சிப் பொறுப்பேற்றார். இவரது ஆற்றலால், மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஆகிய பகுதிகளில் தம் குடையின் கீழ் கொண்டு வந்தார். இவரையடுத்து ஆட்சி செய்ய இவரது சகோதரன் மாறவர்மன் சுந்தர பாண்டியனுக்கு மகுடம் சூட்டினார்.
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கிபி 1216-1238)
இவர் ஆட்சிக்கு வந்த பின் கிபி 1219ல் மூன்றாம் குலோத்துங்க சோழன் i போரிட்டு வென்றார். எனினும் ஹொய்சலாளர்கள் சோழர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதால் தான் வென்ற சோழ நாட்டை குலோத்துங்கனிடமே கொடுத்தார். இதனால் 'சோணடு வழங்கியருளிய சுந்தரபாண்டியன்' என்று புகழப்பட்டார்.
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1238-1253)
இவர் ஆட்சி ஏற்ற பின் ஹொய்சாள மன்னா் சோமேஸ்வரன் உதவியுடன், சோழ மன்னன் இராஜேந்திரன் இடமிருந்து சில பகுதிகளை மீட்டெடுத்தார்.
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (கிபி 1253-1268)
இவர், இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனை அடுத்து ஆட்சிப் பொறுப்பேற்றார். இவரது காலத்தில் பாண்டிய பேரரசு வடக்கே, நெல்லூர், கடப்பா முதற்கொண்டு தெற்கே கன்னியாகுமரி வரையில் விருது பெற்றது. எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தரபாண்டியன், மகா ராஜாதி ராஜா, ஸ்ரீ பரமேஸ்வரன், பொன் வேய்ந்த பெருமாள்ட என்றெல்லாம் இவர் சிறப்பிக்கப்பட்டாா்.
இவரது மகன் முதலாம் மாறவர்மன் குலசேகரன் (கிபி 1268-1308) ஆட்சியின்போது பேரரசு மேலும் வலுப்பெற்றது. இவர் இலங்கையையும், சேரா்களிடமிருந்து கொல்லம் பகுதியையும் வென்றார். இதனால் கொல்லம் கொண்ட பாண்டியன் என்று சிறப்பிக்கப்பட்டார். இவனது ஆட்சிக்குப் பிறகு, பாண்டிய நாட்டின் புகழ் வீழ்ச்சி அடையத் தொடங்கியது.
பாண்டிய பேரரசின் வீழ்ச்சி
முதலாம் மாறவர்மன் குலசேகரனின் மகன்களான சுந்தர பாண்டியனுக்கும், வீரபாண்டியனுக்கும், ஏற்பட்ட வாரிசுரிமைப் போரில் பாண்டியநாடு பிளவுபட்டது. சுந்தரபாண்டியன், டெல்லியை ஆண்ட அலாவுதீன் கில்ஜியின் உதவியை நாடினார். அலாவுதீன் தமது தளபதி மாலிக்காபூர் என்பவரை அனுப்பி ஆட்சியை மீட்டுத் தந்தார்.
கில்ஜிமரபினருக்குப்பின் வந்த துக்ளக் மரபினர் தங்களின் ஆதிக்கத்தை தென்னிந்தியாவிலும் விரிவு படுத்தினார்கள். பாண்டிய பேரரசு தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தார்கள். பின்னர் துக்ளக் பரப்பினர் வீழ்ச்சி அடைந்த காரணத்தினால் மதுரை சுல்தான்கள் தனியே மதுரையை ஆள தொடங்கினார்கள். மதுரை சுல்தான்களின் எழுச்சியினால் முழுமையாக பாண்டிய பேரரசு வீழ்ச்சியடைந்தது.
பாண்டியர்களின் நிர்வாகம்
பாண்டிய நாடு முழுவதும் பாண்டிய மண்டலம் எனப்பட்டது. மண்டலமானது பல பல வளநாடுகளாகவும், வளநாடு பல ஊர்கள் ஆகவும் பிரிக்கப்பட்டது. மன்னர் தமக்கு உதவியாக, அரையர்கள் எனப்பட்ட அமைச்சர்களையும் நியமித்துக் கொண்டார். வரியை பெறுவதற்கும் கணக்குகளை சரி பார்க்கவும் சிறப்பு அதிகாரிகளையும் பணியமர்த்தினார்.
உள்ளாட்சி
அறநிலை, நீர்நிலை நாணயம், வரித்தண்டல் மற்றும் நீதி வாரியங்கள் என்ற வாரியங்களும், ஒவ்வொரு கிராமத்தையும் நிர்வகித்தனர்.
தொழில்
வேளாண்மை வாணிபம் மக்களின் முக்கியத் தொழிலாக இருந்தன. வேளாண் தொழில் செய்வோர் 'பூமி புத்திரர்கள்' எனப்பட்டனர். அடிமைகள் பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டனர். பாண்டிய நாடு முத்துக் குளிக்கும் தொழிலில் சிறந்து விளங்கியது. பாண்டிய நாட்டு முத்துக்கள் வெளிநாட்டு சந்தைகளில் விரும்பி வாங்கப்பட்டன. கொற்கை, தொண்டி ஆகியன சிறந்த துறைமுகங்களாக விளங்கின.
இலக்கியம்
திருவாசகம் மாணிக்கவாசகரால் எழுதப்பட்டது. ஆண்டாள் திருப்பாவையையும் நம்மாழ்வார் திருப்பல்லாண்டையும் வில்லிபுத்தூரார் மகாபாரதத்தையும், அதிவீரராம பாண்டியன் நைடதம் என்னும் நூலையும் எழுதினர். சேயூர் முருகன் உலா மற்றும் இரத்தினகிரிஉலா ஆகிய நூல்களை ஸ்ரீ கவிராயர் எழுதினார். பாண்டியர் கலை, இலக்கிய வளர்ச்சிக்கு பெரும்பங்களித்தனர்.
கலைகளும், கட்டிடக்கலையும்
பாண்டியர்கள் கலைகளை வளர்ப்பதிலும் கட்டிடக்கலையிலும் குறிப்பிடத்தகுந்த அளவு பங்காற்றியுள்ளனர். கோயில் கட்டிடக்கலையில் கருவரை, விமானம், பிரகாரம், கோபுரம் ஆகிய கட்டுமான பணிகளில் பாண்டியர்களின் கலை பாங்கு தனித்துவம் பெற்றது.
பாறைகளை குடைந்து குடைவரைக் கோயில்களை உருவாக்குவதிலும் இவர்கள் முத்திரை பதித்துள்ளனர். பாண்டியர்கள் 50க்கும் மேற்பட்ட குடைவரைக் கோயில்களை உருவாக்கியுள்ளனர். எடுத்துக்காட்டாக திருப்பரங்குன்றம், ஆனைமலை, கழுகுமலை, திருச்சிராப்பள்ளி, குன்றக்குடி, சித்தன்னவாசல் ஆகியவற்றைக் கூறலாம்.
கோவில்பட்டி, திருப்பத்தூர், மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், ஆகிய இடங்களில் உள்ள கட்டுமானக் கோயில்கள் பாண்டியர் காலத்தவை ஆகும். குலசேகர பாண்டியன் என்ற மன்னன் தனது ஆட்சிக்குட்பட்ட இடங்களில் உள்ள எல்லா கோயில்களிலும், அர்த்தமண்டபம், மணிமண்டபம், சன்னதிகள் ஆகியவற்றை கட்டி தந்துள்ளார்.
கோயில்கள் மக்களது வாழ்வில் முக்கிய இடம் பெற்றன. அவை, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடமாகவும், மக்கள் கூடிப் பேசும் மன்றமாகவும், அரசியல், பொது பிரச்சனைகள் ஆகியவற்றை பேசித் தீர்ப்போம் அம்பலமாகவும் இருந்தன. மேலும், சமயப் பாடல்கள், இசை, கதைக்களம், நாடக மேடை, போன்ற பல்வேறு கலைகளின் தொட்டிலாகவும் விளங்கின.
சிற்பங்கள்
பாண்டியன் சிற்பங்கள் அழகும், அலங்காரமும் மட்டும் வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், விலைமதிப்பற்ற வரலாற்றுச் செய்திகளையும் நமக்கு தருகின்றது. மேலும் சோமேஸ்கந்தர், துர்க்கை, கணபதி, நரசிம்மர், நடராசா் ஆகிய சிற்பங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற சிற்பங்களை, கழுகுமலை, திருப்பரங்குன்றம், திருமலைபுரம், நார்த்தாமலை, குன்றக்குடி ஆகிய இடங்களிலும் காணலாம்.
ஓவியங்கள்
அனைத்து நுண்கலைகளிலும் பாண்டியர் கால ஓவியங்கள் தனித்துவம் பெற்றுள்ளன. ஸ்ரீ மாறன் ஸ்ரீவல்லபன் காலத்திது சுவர் ஓவியத்தை, சித்தன்னவாசல் குடைவரையில் காணலாம். அதில் வரையப்பட்டுள்ள தாமரை பூக்கள், துள்ளும் மீன்கள், நீராடும் யானைகள் போன்ற ஓவியங்கள் அழகு வாய்ந்தவை.
பாண்டிய மன்னர்கள், தமிழர் சமுதாயத்திற்கும், தென்னிந்திய வரலாற்றுக்கும் ஏராளமான, விலைமதிப்பற்ற அடையாளங்களை விட்டுச் சென்றுள்ளனர் என்றார் மிகையாகாது.
சேர் பேரரசு (Cherar)
சேரர் மன்னர்களின் வரலாற்றை பதிற்றுப்பத்து நூலிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகின்றது. இதில் முதலாம் பத்து பாடல்களில் பாட்டுடைத் தலைவனாக கருதப்படும் உதியஞ்சேரல் என்னும் சேர மன்னன் ஆவான். இவன் பாரதப்போரில் கலந்து கொண்ட கௌரவர், பாண்டவ சேனைகளுக்கு பெருஞ்சோறு வழங்கினான் இம்மன்னன் என்று தமிழ் இலக்கியத்தில் சில குறிப்புகள் காணப்படுகின்றன. பாரதப்போரில் சோறு வழங்கியவன் சேரமன்னன் என்பதைப் பற்றி பல கருத்து வேறுபாடுகள் ஆய்வாளர்களிடையே காணப்படுகின்றன. இவன் மகன் இமயவரம்பன் இரண்டாம் பத்துக்கு பாட்டுடைத் தலைவனாக விளங்குகின்றான். இவன் அரபிக்கடலில் கடற்கொள்ளைகள் நடத்திவந்த கடம்பர்களை வென்று அவர்களுடைய காவல் மரமான கடம்பை அறுத்து வெற்றி கொடி நாட்டினான். இவன் யவனர்களை பல போர்களில் தோல்வியுறச் செய்தான். வட இந்தியாவில் இமயமலை வரையிலும் படையெடுத்துச் சென்று ஆரிய மன்னரை வணங்க வைத்தார். இவனைப் பற்றி குமட்டூர் கண்ணனார் பாடிய பாடல் பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்தாக சேர்க்கப்பட்டுள்ளன.
சேர மன்னர்கள் மிகவும் சிருடனும் சிறப்புடனும் திகழ்பவன் சேரன் செங்குட்டுவன் ஆவான். இவன் இமயவரம்பனுக்கு இரண்டாம் மனைவியின் பால் பிறந்தவன். சோழன் கரிகாலன் இறந்த பிறகு அவருடைய மகன் கிள்ளிவளவன் அரசு கட்டில் ஏறாதவாறு சோழ இளவரசர்கள் ஏழுவர் கிளர்ச்சி செய்தனர். செங்குட்டுவன் கிள்ளிவளவனுக்கு போர் துணை நல்கி அவனுக்கு முடிசூட்டுவித்தான்.
சேரர்களின் பரம்பரையில் மற்றுமொரு வேந்தன் ஆடுகொட்பாட்டுச் சேரலாதன் என்பான். குட்ட நாட்டின் மேல் படையெடுத்து வந்தவர்களான சதகன்னர்களை முறியடித்தவன் இவன்.
செல்வக்கடுங்கோ வழியாதான் என்ற மற்றும் ஒரு சேர மன்னனைப் பற்றி கபிலர் பாடிய பாடல் பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்தாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இவன் மகன் பெயர் பேர் பெருஞ்சேரல் இரும்பொறை என்பதாகும். தகடூர் என்ற இடத்தில் நிகழ்ந்த பெரியதொரு போரில் சோழ பாண்டிய மன்னரை முறியடித்து வரலாற்று புகழ்பெற்ற வெற்றியொன்றைக் கொண்டான். இவனுடைய போர் திறனை வியந்து 'தகடூர் யாத்திரை' இன்னும் ஒரு முறை ஒரு புலவர் பாடினார். இந்நூல் இப்போது மறந்துவிட்டது. பெருஞ்சேரல் இரும்பொறை தமிழ் புலவர்களை பெரிதும் பாராட்டி வந்தான்.
பதிற்றுப்பத்தின் ஒன்பதாம் பத்து தலைவன் இளஞ்சேரல் இரும்பொறை என்பவன். கோப்பெருஞ் சோழனையும், இளம் பழையன் மாறன் என்ற பாண்டியனையும், விச்சி என்ற குறுநில மன்னன் ஒருவனையும், இச் சேரமன்னன் போரில் வென்றான்.
முகலாய ஆட்சி
வட இந்தியாவை ஆண்ட அலாவுதீன் கில்ஜி ஆட்சி காலத்தில் மாலிக்காபூர் மூலமாக முகலாய ஆட்சியாளர் பார்வை தமிழகத்தை நோக்கி திரும்பியது. பின்னர் கிபி 1323 ல் டெல்லி சுல்தான் முகமது பின் துக்ளக் மதுரையைக் கைப்பற்றி தமிழகத்தில் முகலாயர் ஆட்சியை துவக்கினார். இது கியாசுதீன் காட்சி வரை நீடித்தது.
நாயக்கர் ஆட்சி
மதுரையில் கிபி 1529 முதல் நாயக்கர்களின் ஆட்சி துவங்கியது நாயக்கர் ஆட்சி காலத்தில் தான் குறுநில மன்னர்கள் பாளையக்காரர்களாக ஆக்கப்பட்டார்கள். மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் மிக முக்கியமானவர் திருமலை நாயக்கர். இவர்தான் தற்போது உள்ள மீனாட்சியம்மன் கோயிலின் பிற பகுதிகள் மற்றும் திருமலை நாயக்கர் மஹால் போன்ற புகழ்பெற்ற கட்டிடங்களை கட்டியவர். திருமலை நாயக்கர் காலத்தில் போர்த்துக்கீசியர்களும், டச்சுக்காரர்களும் வியாபாரத்திற்காக தமிழ்நாட்டுக்கு வந்தனர்.
ராணி மங்கம்மாள் தன் பேரன் இரண்டாம் சொக்கநாதருக்கு காப்பாளராக இருந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். இவர் சிறந்த ஆட்சியாளர் என்று கருதப்படுகிறார். மங்கம்மாளுக்கு பின்பு ஆண்ட சொக்கநாத நாயக்கர் ஆட்சித் திறமை அற்றவர். சமய பணிகளிலேயே காலத்தை கழித்து கிபி 1731 ல் காலமானார். சொக்கநாத நாயக்கருக்கு குழந்தை இல்லாததால் அவர் மனைவி மீனாட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். ஆற்காடு நவாப் மதுரையை கைப்பற்றுவதற்காக. சந்தாசாகிப் தலைமையில் ஒரு படையை அனுப்பினார். சந்தாசாகிப் மதுரை அரசி மீனாட்சியை கைது செய்தார். மீனாட்சி தற்கொலை செய்து கொண்டார். இத்துடன் மதுரை நாயக்கர் ஆட்சி முடிவுற்றது.
தஞ்சை மராட்டியர் ஆட்சி
தனது சகோதரன் வெங்கோஜிக்கு ஆதரவாக மராட்டிய மன்னன் சிவாஜி கிபி 1667-77 ல் படையெடுத்து தஞ்சையை வெற்றி கொண்டார்.
ஐரோப்பியர் வருகை
வாஸ்கோடகாமா கிபி1498 ல் கள்ளிகோட்டைக்கு வந்து முதல் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் போர்ச்சுகீசியர்கள் குடியேறினர். அவர்களைத் தொடர்ந்து டச்சுக்காரர்களும், அடுத்து ஆங்கிலேயர்களும் தமிழகத்திற்கு வந்தனர், இவர்களுக்கு இடையே நடக்கும் நாடு பிடிக்கும் போட்டியில் ஆங்கிலேயர்கள் இந்தியா முழுவதையும் கைப்பற்றவே தமிழகமும் அவர்கள் கைக்கு போயிற்று ஆங்கிலேயர்கள் தங்கள் வசமிருந்த தமிழ்நாட்டின் பகுதிகளை இணைத்து சென்னை மாகாணம் என்ற பெயரில் தனி மாகாணம் அமைத்தனர்.
நன்றி ஒன்இந்தியா.
#tamilnadu #tamilnaduday
Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக