திங்கள், 7 அக்டோபர், 2019

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2331 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று 04.10.2019 மறு அறிவிப்பு


கல்லூரிகளில் பணியாற்றி கொண்டிருக்கும் தகுதி வாய்ந்த பேராசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி......

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2331 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று 04.10.2019 மறு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தகுதி வாய்ந்தவர்கள்
http://trb.tn.nic.in/arts_2019/msg5.htm
என்ற இணைய தளத்தில்
04.10.2019 அன்று காலை முதல்
30.10.2019 அன்று மாலை  5 மணி வரை
விண்ணப்பிக்கலாம்.


ஏதேனும் ஒரு முதுகலை பாடத்தில் 50 அல்லது 55 சதவீதம் மதிபெண்களோடு
NET or SLET or SET or SLST or CSIR or JRF தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது Ph.D. முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.


பொதுப்பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்கள் தவிர மற்றவர்கள்
முதுகலை பாடத்தில் 49.99 சதவீதம் பெற்றால் கூட தகுதி கிடையாது.
முழுமையாக 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
பொதுப்பிரிவை சார்ந்தவர்கள் மட்டும்  முழுமையாக 55 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.


அனைத்து பட்டங்களும் 04.10.2019 க்கு முன்பாகவே பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு கட்டணம்

Rs. 600 for General / BC / MBC


Rs. 300 for SC / ST / PwD

தேர்வு கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும்.

தேர்வு முறை

மொத்தம் 34 மதிபெண்களுக்கு வரிசை படுத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள்.


அனுபவத்திற்கு அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் (ஒரு வருடத்திற்கு 2 மதிப்பெண்கள்)


கல்வி தகுதிக்கு அதிகபட்சமாக 9 மதிப்பெண்கள்

Ph.D. க்கு 9 மதிப்பெண்கள்

PG with M.Phil and SLET or NET க்கு 6 மதிப்பெண்கள்

PG without M.Phil. and SET or NET க்கு 5 மதிப்பெண்கள்


நேர்முக தேர்விற்கு 10 மதிப்பெண்கள்

ஆக மொத்தம்
அதிகபட்சமாக
15 + 9 + 10 = 34 மதிப்பெண்கள்

மேற்கண்ட வகையில் 34 க்கு பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்படும்.

பணி அனுபத்திற்கு ஒரு ஆண்டுக்கு 2 மதிப்பெண்கள் என்றும்
அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வரை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பணி அனுபவம் எவ்வாறு கணக்கிடப்படும் என்றும் தெளிவாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது....


உதவி பேராசிரியர் பணிக்கான கல்வித்தகுதி ஒவ்வொரு கால கட்டங்களில் மாறிக்கொண்டு வருகிறது.
எனவே
அந்தந்த கால கட்டங்களில் UGC எதை கல்வித்தகுதி என்று நிர்ணயம் செய்துள்ளதோ
அந்த கால கட்டங்களில்
அந்த குறிப்பிட்ட கல்வித்தகுதியோடு கல்லூரிகளில் பணியாற்றி இருந்தால்
அந்த காலத்தை பணி அனுபவத்திற்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

அந்த கல்வித்தகுதி என்னவென்று
அறிவிக்கையில் தெளிவாக கூறப்பட்டு உள்ளது.

அதாவது

19.09.1991 க்கு முன்பு வரை உள்ள காலங்களில் பணியில் இருந்திருந்தால்
அவர்கள்
PG மட்டும் 50 சதவீதம் மதிபெண்களோடு முடித்து இருந்தால் போதும். வேறு எதுவும் தேவையில்லை.

ஆனால்
19.09.1991 ல் இருந்து
1992 முடிய உள்ள காலங்களில் பணியில் இருந்தால்
PG with 55 % மற்றும் NET or SET தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே தங்கள் பணி அனுபத்திற்கு மதிப்பெண் கோர முடியும்.

1993 ல் இருந்து 31.07.2002 வரையில் உள்ள காலங்களில் பணியில் இருந்திருந்தால்
PG with 55 % மற்றும் NET or SET தேர்ச்சி பெற்றவர்கள்
மற்றும்
31.12.1993 க்கு முன்பே
M.Phil முடித்தவர்களும்
Ph.D. Thesis சமர்பித்து உள்ளவர்களும்  மட்டுமே தங்கள் பணி அனுபத்திற்கு மதிப்பெண் கோர முடியும்.

31.07.2002 ல் இருந்து
14.06.2006 வரையிலான காலங்களில் பணியில் இருந்தால்
PG with 55 % மற்றும் NET or SET தேர்ச்சி பெற்றவர்கள்
மற்றும்
31.12.2002 க்கு முன்பே
Ph.D. Thesis சமர்பித்து உள்ளவர்கள்  மட்டுமே தங்கள் பணி அனுபத்திற்கு மதிப்பெண் கோர முடியும். (M.Phil தகுதி கிடையாது).

14.06.2006 ல் இருந்து
30.06.2010 வரையிலான காலங்களில் பணியில் இருந்தால்
PG with 55 % மற்றும் NET or SET தேர்ச்சி பெற்றவர்கள்
அல்லது
M.Phil முடித்தவர்கள் அல்லது
Ph.D. முடித்தவர்கள் என்று அனைவரும்  தங்கள் பணி அனுபத்திற்கு மதிப்பெண் கோர முடியும்.

30.06.2010 ல் இருந்து தற்போது வரைக்கும் (30.10.2019) உள்ள காலங்களில்
பணியில் இருந்தால்
PG with 55 % மற்றும் NET or SET தேர்ச்சி பெற்றவர்கள்
அல்லது
Ph.D. முடித்தவர்கள் மட்டுமே தங்கள் பணி அனுபத்திற்கு மதிப்பெண் கோர முடியும். (M.Phil தகுதி கிடையாது).


இதுவே பணி அனுபவத்திற்கு மதிப்பெண்கள் பெறுவதற்கான வழிமுறைகள் என்று TRB அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


அனுபவ சான்றிதழ்கள்
ஒவ்வொரு கல்வி நிறுவனத்திற்கும் தனித்தனியாக
 முறையான படிவம் 1 ல் பூர்த்தி செய்து அந்தந்த மண்டல JD அலுவலகம் மூலம் 04.10.2019 க்கு பிறகு பெறப்பட்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.



விண்ணப்பிக்கும் பொழுது
Photo (JPEG format, 20 to 60 kb)

Sign (JPEG format, 10 to 30 kb)

E-Mail ID

Mobile Number

இவை அனைத்தும் கண்டிப்பாக வைத்து இருக்க வேண்டும்.

மேலும்
விண்ணப்பிக்கும் பொழுது
அனைத்து சான்றிதழ்களும் JPEG வடிவில்
60 to 120 kb அளவில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

பதிவேற்றம் செய்ய வேண்டிய சான்றிதழ்கள்....

1.
SSLC Marksheet

2.
+2 Marksheet

3.
UG Degree Certificate

4.
PG Degree Certificate

5.
PG Consolidated Marksheet

6.
NET or SET Certificate

7.
M.Phill Certificate

8.
Ph.D. Certificate

9.
Experience Certificate

10.
Community Certificate


11.
Proof for claiming Tamil Medium Reservation (அனைத்து படிப்பும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டும்)


மேற்கண்ட அனைத்து சான்றிதழ்களும் தனித்தனியாக JPEG       வடிவில் ஸ்கேன் செய்யப்பட்டு
ஒவ்வொன்றும் 60 to 120 kb அளவில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.


M.Phil or Ph.D. பட்டங்கள்
03.04.2009 க்கு பிறகு    தொலைதூர கல்வி அல்லது திறந்த நிலை கல்வி மூலம் பெறப்பட்டு இருந்தால்
அந்த சான்றிதழ்கள் பணி நியமனம் மற்றும் பணி அனுபவத்திற்கு தகுதியற்றது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு  மற்றும் நேர்முகத்தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

மாத சம்பளம்

அடிப்படை ஊதியம்
57,700
Plus
DA 12 % on 57700
Plus
HRA
3200
Plus
MA
300

Total
Rs. 68,120

தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் விண்ணப்பித்து பயன் பெறுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக