திங்கள், 21 அக்டோபர், 2019

முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற புதிய நடைமுறை...!



முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற புதிய நடைமுறை...!

✍ TNPSC Group-2 %26 2A போட்டித் தேர்வில், முதன்மைத் தேர்வுக்கான (Main Exam) தேர்ச்சி நடைமுறையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

✍ முதல்நிலைத் தேர்வுக்கு (Preliminary Exam) ஏற்கனவே தேர்வாணையம் புதிதாக அறிவித்துள்ள பாடத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது.

✍ தமிழகத்தின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள், தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் என்ற தலைப்பின் கீழ் TNPSC Group-2 %26 2A புதிய பாடத்திட்டத்தில் உள்ள UNIT-8, 9 ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் வகையில் கேள்விகள் கேட்கப்படும்.

✍ தேர்வாளர்களின் தகவலுக்காகவும், அவர்கள் தங்களை தேர்வுக்கு தயார்ப்படுத்திக் கொள்வதற்காகவும் முதல்நிலைத் தேர்வுக்கான (Preliminary Exam) மாதிரி வினாத்தாள் இந்த மாத இறுதியில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.

✍ முதன்மை எழுத்துத் தேர்வு (Main Exam) : முந்தைய மாற்றத்தின்படி, முதன்மைத் தேர்வானது (Main Exam) ஒரே தேர்வாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இரண்டு தேர்வுகள் கொண்டதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

✍ தமிழில் இருந்து ஆங்கிலம், ஆங்கிலத்தில் இருந்து தமிழ் ஆகியவற்றில் மொழிபெயர்ப்பு செய்யும் பகுதியானது 100 மதிப்பெண்கள் கொண்ட தேர்வாக நடைபெறும். இந்தத் தேர்வில் தகுதிபெற 25 மதிப்பெண்கள் அவசியம் பெற வேண்டும். குறைந்தபட்ச மதிப்பெண்கள் 25 பெற்றால் மட்டுமே இரண்டாவது தாள் மதிப்பீடு செய்யப்படும்.

✍ தகுதித்தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் தேர்வாளர்களின் தரவரிசை நிர்ணயத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. தமிழக கிராமப்புற மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இத்தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த தரம், பட்டப் படிப்பிலிருந்து பத்தாம் வகுப்பு தரத்துக்கு இப்போது மாற்றப்பட்டுள்ளது.

✍ இதன் மூலம் தமிழ் மொழியில் எழுத, படிக்கத் தெரிந்த மாணவர்களால் மட்டுமே இத்தேர்வில் தேர்ச்சி பெறும் சு%2Bழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்புப் பகுதியைத் தவிர்த்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் ஏனைய பகுதிகள் அனைத்தும் இரண்டாவது தாள் தேர்வாக மாற்றப்பட்டுள்ளது.

✍ முன்னர் 200 மதிப்பெண்கள் கொண்ட தேர்வானது, தற்போது 300 மதிப்பெண்கள் கொண்ட தேர்வாக 3 மணி நேரம் நடைபெறும்.

✍ விண்ணப்பதாரர் இத்தாளில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே தர நிர்ணயத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

✍ முதல்நிலைத் தேர்விலும் (Preliminary Exam) முதன்மை எழுத்துத் தேர்விலும் (Main Exam) வெற்றிபெற, தேர்வாளர்கள் தமிழர் நாகரிகம், பண்பாடு, சங்க காலம் தொடங்கி இக்காலம் வரை தமிழ் மொழி மற்றும் இலக்கியம், தமிழகத்தின் பல்வேறு கலை மரபுகள், சமூகப் பொருளாதார வரலாறு, திருக்குறள், சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு ஆகியவற்றை நன்கு அறிந்திருக்க வேண்டும் என்ற சு%2Bழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே, தேர்வாளர்கள் இப்போதே பயிற்சியை தொடங்குங்கள்..! உங்களுக்கான அரசு வேலையை பெற்றிடுங்கள்...!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக