புதன், 12 பிப்ரவரி, 2020

உலக வானொலி தினம் பிப்ரவரி 13


உலக வானொலி தினம் பிப்ரவரி 13

அறிமுகம்

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவினால் பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி, உலக வானொலி தினமாக கடந்த 2011 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

ஒரு தரமான வானொலி சேவை என்பது சிறந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவேண்டும். பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் தகவல்கள் போன்றவற்றினை வழங்குவதற்கு அப்பால், சாதாரண சமூகத்தில் மற்றும் தங்களது பிரதேசத்தில் இடம்பெறும் முக்கிய பிரச்சனைகளினையும் சிக்கல்களினையும் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்பினை உருவாக்கும் வகையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவேண்டும்.

யுனெஸ்கோ வழங்கும் வானொலி தினச்செய்தி
இன்று நாம் எவ்வாறு தகவல் பரிமாற்றம் செய்கின்றோம் மற்றும் தகவல்களை அணுகுகின்றோம் என்பது தொடர்பான தகவல் புரட்சியின் மத்தியில் வாழ்கின்றோம். இதுவரை இந்த ஆழமான மாற்றத்தின் மத்தியில் வானொலிகளின் ஈடுபாடும் முக்கியத்துவமும் மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாக உள்ளது.

கொந்தளிப்பு மிக்க நேரங்களில் முக்கிய இயங்குதளமாக செயற்பட்டு சமூகங்களை ஒன்று திரட்டுகின்றது. வேலைக்குச் செல்லும் வழியிலும், வீடுகளிலும், அலுவலகங்களிலும் அமைதியான நேரங்களிலும், மோதல் மற்றும் அவசர நிலைமைகளிலும் வானொலிகளானவை தகவல் மற்றும் அறிவுக்கான உயிர்நாடியாக விளங்குகின்றது. தலைமுறைகளினையும் கலாச்சாரங்களினையும் அலசி ஆராய்வதுடன் மனித இனத்தின் சொத்தான பன்முகத்தன்மையினை ஊக்குவிக்கவும், நம்மை உலகத்துடன் இணைத்துக் கொள்ளவும் வானொலி முக்கிய பங்காற்றுகின்றது.

அனைத்து இடங்களிலும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக குரல் கொடுக்கின்றது. இது நேயர்களது கருத்துக்களுக்கு செவிமடுப்பதுடன் அவர்களது தேவைகளுக்கும் பதிலளிக்கின்றது. மனித உரிமைகளினைப் பாதுகாப்பதற்கான சக்தியாக விளங்குவதோடு கௌரவம் மிகுந்ததும் அனைத்து சமூகங்களும் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வினை ஏற்படுத்தும் சக்திவாய்ந்ததொரு ஊடகமாகவும் வானொலிகள் செயற்படுகின்றன.

நிலைத்திரு அபிவிருத்தி இலக்குகளினை 2030 இல் அடைவதற்கான நிகழ்ச்சி நிரலினை அடைவதில் வானொலிகளது முக்கியத்துவம் பற்றி நோக்கின், அடிப்படை சுதந்திரங்களை முன்னெடுத்துச் செல்லுதல், சிறந்த ஆளுகை மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான அவசியமான தகவல்களை மக்கள் பயன்படுத்துவதற்கு மக்களை ஊக்குவித்தல் ஆழ்ந்த உட்படுத்தல் மற்றும் உரையாடல், புதிய சவால்களை கையாளுதல், காலநிலை மாற்றத்தினை எதிர்கொள்ளுதல் பாரபட்சங்களை எதிர்கொள்ளுதல் போன்றவற்றிற்கு வானொலிகள் இலகுவில் மக்களை அணுகக்கூடியதாகவும் மேலே கூறப்பட்டவை சார்ந்த உரையாடல்களை வலுத்தப்படுத்தக்கூடிய ஒரு ஊடகமாக காணப்படுகின்றது.

இந்த வானொலி தினமானது ஓலிபரப்பாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள், வானொலி நேயர்கள் போன்ற அனைத்து தரப்பினருடைய வானொலிக்கான அர்ப்பணிப்புக்களையும் வேண்டி நிற்கின்றது. அனைவரும் இணைந்து வானொலியினை சக்திமிக்கதொன்றாக வளர்த்தெடுக்க வேண்டும். வானொலி நேயர்களது கிளப் மற்றும் மன்றங்கள் இணைந்து அவர்களிடம் உள்ள ஒலிபரப்பாக்கும் அதிகாரம் மற்றும் அவர்கள் சொல்வதனை ஏனையோர் கேட்கும் தன்மை ஆகியவற்றினை பயன்படுத்தி சமூகத்தில் காணப்படும் பிரச்சனைகளுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்ட வேண்டும். நேயர்களை கவரக்கூடியதான கொள்கைகள் வானொலி ஒலிபரப்பின் இதயமாக விளங்குகின்றது. எண்ணங்கள் உண்மைக்கு சவால்விடும் போது நம்பகத் தன்மையான தகவல் மற்றும் அறிவு மிகவும் முக்கியமானது. சாதாரணமாக சமூகத்தில் இடம்பெறும் பிரச்சனைகளுக்கு எவ்வாறு வானொலி ஆக்கபூர்வமான தீர்வுகளை வழங்கமுடியும் மற்றும் மனிதஉரிமைகள், பாலின சமத்துவம், சமாதானம் போன்றவற்றினை தொடர்ந்து முன்னெடுக்க முடியும்.

1 கருத்து:

  1. Alright...

    What I'm going to tell you may sound really creepy, maybe even a little "out there..."

    HOW would you like it if you could simply push "Play" to LISTEN to a short, "musical tone"...

    And INSTANTLY attract MORE MONEY to your LIFE?

    I'm talking about hundreds... even thousands of dollars!!

    Sounds way too EASY? Think something like this is not for real??

    Well then, I'll be the one to tell you the news.

    Sometimes the most significant blessings life has to offer are the easiest to RECEIVE!!

    Honestly, I'm going to PROVE it to you by letting you listen to a REAL "miracle wealth building tone" I developed...

    YOU simply click "Play" and watch how money starts piling up around you... starting pretty much right away...

    GO here NOW to experience this magical "Miracle Wealth Building Tone" as my gift to you!!

    பதிலளிநீக்கு