முதல் பிரதமர்... நேரு கொண்டு வந்த திட்டங்கள் என்னென்ன?
இந்தியாவின் முதல் பிரதமர்..!!
கல்வி திட்டங்கள் :
🌹நேரு, 'இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில் தான் இருக்கிறது" என்பதை நன்கு உணர்ந்தார்.
🌹அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம்,
🌹இந்திய தொழில்நுட்ப கழகங்கள்,
🌹இந்திய மேலாண்மை கழகங்கள்,
🌹தேசிய தொழில்நுட்ப கழகங்கள் போன்ற அரசாங்க உயர்கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி கவனித்து வந்தார்.
🌹இலவச கட்டாய கல்வி திட்டத்தை செயல்படுத்தி ஆயிரக்கணக்கான பள்ளிகளை கட்டினார்.
🌹சிறந்த கிராமப்புறத் திட்டங்களை ஏற்படுத்தி, பள்ளிகளில் இலவச சத்துணவு திட்டத்தையும் அமல்படுத்தினார்.
🌹தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு, அரசுப்பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டினை ஏற்படுத்தினார்.
நேருவின் வெளியுறவு கொள்கைகள் :
👉நேரு அவர்கள், பல பிரச்சனைகளை திறம்பட சமாளித்து தீர்த்ததால், உலக பார்வையில் 'சமாதானப்படுத்துவதில் மன்னர்" என்றும் ஐக்கிய நாடுகளின் வலுவான ஆதரவாளராகவும் போற்றப்பட்டார்.
👉நேரு இந்திய வெளியுறவு கொள்கையின் சிற்பி எனப் போற்றப்படுகிறார். இந்திய மற்றும் சீன உறவை பேணுவதற்காகவும், அண்டை நாடுகளோடு நட்புறவை நிலை நிறுத்துவதற்காகவும் பஞ்சசீல கொள்கையை வெளியிட்டார்.
பஞ்சசீல கொள்கை :
👉நாடுகள் ஒன்றுக்கொன்று பிரதேச ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் மதித்தல்
👉ஆக்கிரமிப்பை தவிர்த்தல்
👉பிற நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாமல் இருத்தல்
👉சமத்துவம்
👉பரஸ்பர உதவி மற்றும் சமாதான சகவாழ்வு ஆகியவையே பஞ்சசீல கொள்கைகளாகும்.
அணிசேரா இயக்கம் :
🌹அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே இரண்டாம் உலகப் போருக்கு பின் பனிப்போர் நிலவிய நிலையில் நேரு இரு நாடுகளோடும் சேராமல் மூன்றாம் உலக நாடுகள் தனி அமைப்பாக செயல்படுவதற்காக அணிசேரா இயக்கத்தை (ழேn-யடபைnஅநவெ ஆழஎநஅநவெ)தொடங்கினார்.
🌹முன்னாள் பிரிட்டிஷ் குடியேற்ற நாடுகளை கொண்ட காமன்வெல்த் அமைப்பில் இந்தியா தொடர்வதற்கு நேரு வழிவகை செய்தார்.
🌹நேரு பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளால் பதினொரு முறை நோபல் (அமைதி) பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
🌹விண்வெளி மற்றும் அணுசக்தி துறையில் முன்னேற்றத்திற்கான விதைகள் அவர் காலத்திலே போடப்பட்டன. அயல்நாட்டில் இருந்த இந்திய விஞ்ஞானிகள் பலர் நேருவின் வேண்டுகோளால் இந்தியாவில் சேவை செய்ய வந்து சேர்ந்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக