வியாழன், 13 பிப்ரவரி, 2020

குரூப்4 கலந்தாய்வுக்கு செல்பவர்கள் கவனத்திற்கு ...

குரூப்4 கலந்தாய்வுக்கு செல்பவர்கள் கவனத்திற்கு 👇🏻

சிறுசேமிப்பு துறையில் முதல்முறையாக TNPSC மூலம் பணியாளர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
எனவே Junior assistant ah அந்த துறையை தேர்வு செய்பவர்கள் 2வருடத்தில் Assistant பதவி உயர்வு பெறலாம்

நிலம் மற்றும் பதிவேடுகள் துறை

தற்போது அந்த துறையை தேர்வு செய்தால் பணி ஓய்வு பெறும் வரை  உதவியாளர் நிலை தான் தொடரும் பதவி உயர்வு மிகவும் தாமதம்

அந்த துறையை  தேர்வு செய்ய வேண்டாம்

மற்றும்
Land settlement department
Land administration
இந்த துறையின் பணி ஓய்வு பெறும் வரை சென்னை நகரத்தில் தான் தோழர்களே

Revenue administrator department இதுவும் பணி சென்னையில் தான் ஓய்வு வரை

 பொதுப்பணி துறை

இந்த துறையில் பொறியாளர் முறையில் உள்ளே இருப்பவர்களுக்கு தான் அதிகாரம்
குரூப் 4
குரூப் 2A
மூலம் உள்ளே நுழைப்பவர்க்கு அதிகாரம் இல்லை
நாம் நிர்வாகம் சார்ந்த பணிகளை மட்டும் தான் செய்வோம்
பதவி உயர்வு மிகவும் தாமதம்
உதவியாளர் நிலை வர 6 வருடம் ஆகும்
கண்காணிப்பாளர் நிலை வர 15 வருடம் ஆகும்
அமைதியான துறை
வேலைப்பளு குறைவு
சொந்த மாவட்டம் மற்றும் வட்ட அளவில் பணி புரியலாம்.....

கல்லூரி கல்வி துறை

இந்த பணி பெரும்பாலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் வேலை இருக்கும்
உள்ளூரில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும்
பதவி உயர்வு மிகவும் குறைவு
மிகவும் அமைதியான துறை
பெண்களுக்கு மிகவும் உகந்த துறை

 தடய அறிவியல் துறை

துறை பொருத்தவரையில்  காவல்துறையின் ஒரு பகுதியாக தான் செயல்படுகிறது

ஆனால் நமக்கு இந்த துறையில் தொழில்நுட்ப பணி அல்ல
நாம் அமைச்சு பணியாள் மட்டுமே

இந்த துறைக்கு தொழில் நுட்ப தகுதி அதாவது அறிவியல் கல்வி தகுதி மூலம் TNPSC ஆட்களை தேர்வு செய்கிறது

எனவே அவருகளுக்கு தான் அங்கு பணி அதிகமாகவேயிருக்கும் 

தொழில்நுட்ப தகுதியில் உள்ளே செல்பவர்க்கு தான் பதவி உயர்வு நன்றாக இருக்கும்

நமக்கும் வேலைப்பளுயிருகும்

பதவி உயர்வு நிலைகள்

இளநிலை உதவியாளர் /தட்டச்சர்

உதவியாளர்

கண்காணிப்பாளர் நிலை

துறை பொருத்தவரையில் சென்னையில்தான் பணி

தடய அறிவியல் துறை

துறை பொருத்தவரையில் அதிகமாக சென்னையில் பணி

மதுரை கோயமுத்தூர் திருநெல்வேலி போன்ற இடங்களிலும் அலுவலங்கள் உள்ளன....

பொது நூலகத்துறை

இந்த வேலையில்லாத்துறை

முதலில் சென்னையில் தான் பணி பிறகு சொந்த மாவட்டத்தில் பணி புரியலாம்

இந்த துறை பெண்களுக்கான துறை ஏனென்றால்  அமைதியான துறை பணி தொந்தரவு இல்லாத துறை

மாவட்ட தலைநகர நூலகங்களில் மட்டுமே பணி இருக்கும்

சனி ஞாயிறு விடுமுறை தான்
இருந்தால் பணி உண்டு

மக்கள் அதிகாரம் இல்லாத துறை

பதவி உயர்வு நிலைகள்

உதவியாளர்
கண்காணிப்பாளர்

பதவி உயர்வு மற்ற துறைப்போல் குறைவு தான்

அமைதியான துறைக்கு உதாரணம்

வேற சொல்லும் அளவுக்கு இல்லை

இந்த துறையில் துறையின் கல்வி தகுதிக்கு ஏற்ப TNPSC மூலம் உள்ளே செல்பவர்க்கு தான் அதிகாரம் மற்றும் நல்ல பதவி உயர்வு உள்ளன

 கரூவூலத்துறை

இந்த துறையில் வேலைப்பளு இருக்கும்

மற்ற துறை போன்றதுதான் பதவி உயர்வு
உதவியாளர் நிலை
கண்காணிப்பாளர் நிலை

பதவி உயர்வு தற்போதைய நிலைமையில் குறைவு

B.COM முடித்தவர்கள் Account  Officer Grade போகலாம்

எப்போதாவது சனி கிழமை வேலை இருக்கும்

சொந்த மாவட்டத்தில் பணி புரிய வாய்ப்பு உண்டு

பணி தொந்தரவு இருக்காது

பெண்களுக்கு அருமையான துறை

துறை கிடைத்தால் எடுத்து கொள்ளுங்கள் மற்ற துறையைவிட 👌👌👌👌👌👌

 உயர்நீதிமன்றத்துக்கும்➖➖மாவட்ட நீதிமன்றதுக்கும் இடையேயுள்ள பணி விவரங்கள்

முதலில் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும் பதவி உயர்வு இரண்டிலும் சமமான பதவி உயர்வு தான் மாற்றம் இல்லை

நீதித்துறையில் வேலை என்றால் அவ்வளவு மரியாதை இருக்கும் சமுதாயத்தில் அவ்வளவு மரியாதை தான்

இரண்டிலும் சம வேலைப்பளுதன் இருக்கும்

சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தில் இரவு உண்டு வாரத்தில் குறிப்பிட்ட தினங்கள் மட்டும் இரவு 1மணி வரை வேலை
இது மாவட்ட நீதிமன்றத்துக்கு பொருந்தாது

இரண்டிலும் அடுத்தடுத்த பதவி உயர்வு நிலைகள்


1.உதவியாளர் நிலை வர 4 வருடம் ஆகும்

2.உதவி பிரிவு அலுவலர் நிவை வர 5-6 வருடங்கள் ஆகும்

இரண்டுக்கும் பொதுவான வித்தியாசம் என்னவென்றால் உயர்நீதிமன்றத்தில் அமைச்சு பணியாளுக்குகும் நீதிபதிக்கும் சம்பந்தம் இல்லை அமைச்சு பணியாள் தவறு செய்தாள் பதிவாளரிடம் தான் போய் நிற்க வேண்டும்
மற்றும் நீதிபதி கீழ் தட்டச்சு செய்யும் பணியும் கிடையாது

ஆனால் மாவட்ட நிதீமன்றத்தில் நீங்கள் தவறு செய்தால் நீதிபதி ஐயாவிடம் தான் செல்ல வேண்டும் மற்றும் நீதிபதியின் கீழ் இருந்து தட்டச்சு செய்யும் வேலையும் கடுமையான பணி

குறிப்பு : நீதிதுறையில் பணி புரிபவர்கள் தமிழக அமைச்சு பணியாளர்கள் அல்ல
நீங்கள் நீதிதுறை அமைச்சு பணியாளர்கள்.....

மற்றப்படி நீதிதுறை ஒரு அருமையான பணி வேலைப்பளுதான் இருக்கும் தவிர 👌👌👌👌

 வரைவாளர் துறை

இந்த வருவாய்துறையின் ஒரு பிரிவு தான்

இது அவ்வளவு மரியாதையான வேலை

வேலைப்பளு உள்ள துறை

சனி ஞாயிறு விடுமுறை தான்

வேலை இருந்தால் சனி உண்டு

மற்றப்படி அடுத்தகட்ட பதவி உயர்வு Interview post level
Senior வரைவாளர்

இந்த துறையில் தற்போது அனைத்து பணிகளும் முடிவுபெற்றன என்று சொல்கிறார்கள் அதாவது நீங்கள் இந்த பணியை தேர்வு செய்தால் 3 வருடம் கழித்து உங்களை நில அளவர் துறையில் சேர்த்து விடுவார்கள் ந

பிறகு நில அளவர் பிரிவில் Seniority ல் கடைசியாக சேர்க்கப்படுவீர்

துறையில் தற்போது உள்ள நிலைமை

எனவே தீர விசாரித்து எடுப்பது நலம்....

நிலம் மற்றும் பதிவேடுகள் துறை

இந்த துறை பொருத்தவரையில் வேலைப்பளு குகறைவு அலுவகத்தில் எப்போதும் சும்மா இருப்பது போன்றுதான் இருக்கும்
ஆனால் இந்த துறை மாவட்டத்திற்கு ஒரு  அலுவலகம் தான்
மிகவும் சிறிய துறை தான்

இந்த துறையில் பதவி உயர்வு உதவியாளர் நிலை விரைவில் 4 வருடத்தில் வந்துவிடும்

அடுத்த நிலை கண்காணிப்பாளர் நிலை வர 20 வருடம் ஆகலாம்
சில வரமால் கூட போகலாம் ஏனென்றால் இந்த துறையில் அனைவரும் இளைஞர்கள் தான் உள்ளனர்

இந்த துறையின் கட்டுபாட்டில் தான்
வரைவாளர்கள்
நில அளவர்கள்

பணி புரிகிறார்கள்

பெண்கைளுக்கு ஏற்ற துறை பணி தொந்தரவு இருக்காது

சனி ஞாயிறு விடுமுறை

50 வருடத்துக்கு முன்பு உள்ள நிலங்கள் யாருடைய பெயரில் உள்ளது என்பது இந்த துறையில் தான் உள்ளன பணி

Land Reforms Department

இந்த துறையின் பணி சென்னையில் தான் பணி ஓய்வு பெறும் வரை
இந்த துறை வருவாய் துறையின் ஒரு பிரிவு தான்
இந்த துறை போன்றதுதான்

Land and settlement Department
மாற்றம் இல்லை
பதவி உயர்வு நிலைகள்

அடுத்த நகர்வு
உதவியாளர்
கண்காணிப்பாளர்

வேலைப்பளு ரொம்ப அதிகம் இருக்கும்

சனி கிழமையும் வேலை உண்டு

சென்னை காஞ்சிபுரம் போன்றவர்களுக்கு இந்த துறை பொருந்தும்

 டவுண் பஞ்சாயத்து துறை

அதிகமான வேலைப்பளு உள்ள துறை

சனி கிழமையும் வேலை உண்டு

பஞ்சாயத்து என்றாலே வேலை தான் அதுவும் டவுண் பஞ்சாயத்து னா ரொம்ப வேலை

மற்ற துறைபோல் இல்லை பதவி உயர்வில்
அடுத்த நிலை

செயல் அலுவலர் நிலை வர 8-13 வருடங்கள் ஆகும்

ஆனால் அந்த பதவியின் சம்பளம் குரூப் 4 சம்பளம் தான் இதான் கொடுமை
ஆனால் அதிகாரம் நிறையவேயிருக்கும்

அமைதியில்லாத துறை என்றே சொல்லலாம்.....

 மறுசீரமைப்பு துறை(Rehdabilitation)

இந்த துறை பொருத்தவரையில் வருவாய்துறையின் கீழ் இயங்கும் ஒரு பிரிவு தான் இந்த துறை ஆனால் சென்னையில் மட்டும் தான் பணி ஓய்வு பெறும் வரை

பேரிடர் காலங்களில் இந்த துறையின் பணி அளவிட முடியாத பணி
முழு வீச்சில் செயல்பட வேண்டியயிருக்கும்

வேலைப்பளு அதிகமாகவேயிருக்கும்

சென்னை காஞ்சிபுரம் போன்றவர்களுக்கு சரி இந்த துறை

பதவி உயர்வு நிலைகள்

1.இளநிலை உதவியாளர் /தட்டச்சர்

2. உதவியாளர்

3. கண்காணிப்பாளர்

4.தனி பிரிவு அலுவலர்

இந்த நிலைகள் மட்டுமே

மாவட்ட அளவில் வருவாய்துறையில் பேரிடர்க்கு என்றே ஒரு பிரிவு உள்ளன அதன் பதவி நிலைகள்

இளநிலை உதவியாளர்/தட்டச்சர்

உதவியாளர்

சிறப்பு வருவாய் ஆய்வாளர்

சிறப்பு வட்டாச்சியர்

மழைகாலங்களில் பேரிடர்க்கு உருவாக்கப்பட்டது

 Stationary And Printing Department

சென்னை மதுரை திருச்சி போன்ற இடங்களில் மட்டும் தான் பணி புரிய முடியும்

ஆனால் அமைதியான துறை

பெண்களுக்கு உகந்த துறை

அமைதியான துறை தான் வேலைப்பளு இல்லாத துறை

சனி ஞாயிறு விடுமுறை தான்

பணி தொந்தரவு இருக்காது

பதவி உயர்வு காலதாமதம் ஆகும்

அடுத்தடுத்த நிலைகள் பதவி உயர்வில்

இளநிலை உதவியாளர் /தட்டச்சர்

உதவியாளர்

கண்காணிப்பாளர்

இன்னும் அடுத்தடுத்த இரண்டு நகர்வுகள் உள்ளன

துறையை பொருத்தவரையில்  குறிபிட்ட இடத்தில் தான் பணி புரிய முடியும்.....

Bill collector Department

இந்த துறை பொருத்தவரையில்  டவுண் பஞ்சாயத்துல் தான் பணி அவர்களுக்கு உள்ளே ஒரு பிரிவு இருக்கும்

அவர்களுக்கு பணி செய்யும் இடத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியினை கொடுத்து வரி வசூலிக்கும் பணி இருக்கும்

VAO,FILLED SURVYER போன்ற துறை போல் களப்பணி தான்ஆற்ற வேண்டும்

இதுவும் அதே மாதிரி தான் உங்களுக்கும் ஒரு உதவியாளர் உண்டு

வேலைப்பளு இருக்கும் சனிகிழமை வேலை இருக்கும்

அடுத்த பதவி உயர்வு பார்த்தால் செயல் அலுவலர் நிலை வர குறைந்நபட்சம் 10 - முதல் 14 வருடங்கள் ஆகும்
அடுத்த நிலை வர கண்காணிப்பாளர் நிலை என்று சொல்கிறார்கள்

இந்த பணியும் டவுண் பஞ்சாயத்து ல் உள்ள இளநிலை உதவியாளர் நிலைக்கும் அடுத்த பதவி உயர்வு செயல் அலுவலர் தான்

இளநிலை உதவியாளர்க்கு அலுவலக பணி

வரி வசூலிப்பவர்க்கு களப்பணி அவ்வளவு தான்
வித்தியாசம்

பெரும்பாலோனானர் வரி வசூலிப்பவர் நிலையே பணி ஓய்வு பெறும் நிலையில் இருந்து விடுகின்றர்
அடுத்த பதவி உயர்வு வேண்டாம் என்று

துறை பொருத்தவரையில் வேலைப்பளு அதிகமே......

1. பொதுநலம் மற்றும் தடுப்பு துறை மற்றும்

2. மருத்துவம் ஊரக சுகாத்தார துறை

இதில் முதல் உள்ள துறை கிராமங்களிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியமர்த்தப்படுவீர்கள்

இரண்டாவதாக உள்ள துறை மாவட்ட தலைநகரங்களில் உள்ள தலைமை மருத்துவ மனைகளில் பணியமர்த்தப்படுவீர்கள்

இரண்டிலும் பதவி உயர்வு என்பது காலதாமதம் ஆகும்

இந்த துறையை பொருத்தவரையில்   உங்களுக்கு தலைமை ஒரு மருத்துவர் தான்

வேலைப்பளு கொஞ்சம் அதிகமாகதான் இருக்கும்

பதவி உயர்வு நிலைகள்

1. இளநிலை உதவியாளர் /தட்டச்சர்

2. உதவியாளர்

3.கண்காணிப்பாளர்

உதவியாளர் நிலை வர 4-6 வருடங்கள் ஆகலாம்

அமைதியான துறை தான்

சொந்த மாவட்டத்தில் பணி புரிய வாய்ப்புண்டு

பெண்களுக்கு ஏற்ற துறை 

ஆதி திராடவிடர்கள் நலத்துறை  மற்றும்

பிற்படுத்தப்பட்டோர் துறை

இந்த இரண்டு துறைக்கும் பொதுவான வித்தியாசம் ஏதும் இல்லை

ஆனால் கொஞ்சம் வேலைப்பளு உள்ள துறை

மாவட்டத்திற்கு ஒரு  அலுவலகம் இருப்பதால் தாங்கள் சொந்த மாவட்டத்தில் பணி புரிய வாய்ப்புண்டு

பெண்களுக்கு மிகவும் உகந்த துறை

பணி தொந்தரவு இருக்காது

பதவி உயர்வு பொருத்தவரையில் மற்றதுறைப்போல் தான் காலதாமதம் ஆகும்

பதவி உயர்வு நிலைகள்

1. இளநிலை உதவியாளர்

2. உதவியாளர்

3.கண்காணிப்பாளர்

4. அடுத்தும் 1 கட்ட பதவி உயர்வு உண்டு என சொல்கிறார்கள்

அமைதியான துறைக்கு எடுத்துக்காட்டு இவை

சனி ஞாயிறு விடுமுறை தான்

 Information and public relation Department

இது மற்றத்துறை போல் இல்லை வேலை பளு அதிகம் அதிகம் ்அதிகம் அதிகம்

பதவி உயர்வு நிலைகள்

1. உதவியாளர் நிலை வர 4 வருடங்கள் ஆகும்

2. அதற்கு பிறகு 2 வழிகளில் பதவி உயர்வு பெறலாம்
1.Assistant public information officer
2. Public relations officer

இதில் எதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்

முதலில் சென்னையில் தான் பணி

பெண்களுக்கு இந்த துறை செட் ஆகாது வேலை அதிகமாக இருக்கும்

சென்னையில் வாரத்தில் 5 நாட்கள் தான் வேலை இருக்கும்

ஆனால் சொந்த மாவட்டதில் பணி மாறுதல் பெற்றால் வாரத்தில் 7 நாட்களும் வேலை இருக்கும் விடுமுறையே எதிர்பார்க்க முடியாத துறை

இதில் என்ன பணி என்றால்
அரசியல் கட்சி தலைவர்களின் மாவட்டத்தில் எங்கேயாவது பபொது கூட்டம்நடை பெற்றால் அந்த உரையை நாம் தொகுத்து மீடியா துறைக்கு அனுப்ப வேண்டும்

இதான் பணி

ஊரக வளர்ச்சி துறை( Rural Development Department)

இந்த துறை பொருத்தவரையில் சென்னையில் தான் பணி
பணி ஓய்வு பெறும் வரை....

பஞ்சாயத்து துறையில் உள்ள பதவி உயர்வு நிலைகள் இதிலும் தொடரும்

இரண்டும் ஒரே துறை தான்

சென்னையில் இருப்பது ஊரக வளர்ச்சி துறையின் தலைமையிடம் அங்கு தான் பணி...

வேலைப்பளு அதிகமாகவே இருக்கும்

சனி கிழமையும் வேலை உண்டு...

1 கருத்து:

  1. According to Stanford Medical, It's really the ONLY reason this country's women live 10 years more and weigh 42 lbs lighter than we do.

    (By the way, it really has NOTHING to do with genetics or some secret diet and really, EVERYTHING to related to "how" they eat.)

    BTW, I said "HOW", not "what"...

    TAP this link to uncover if this short test can help you release your real weight loss potential

    பதிலளிநீக்கு