தமிழ் எழுத்து..!
நம் தாய்மொழி தமிழ் எழுத்துக்கள் ஒரு நாள் திடீரென உருவானவை அல்ல !
வளர்ச்சிப்போக்கில் மாற்றத்தின் தேவை கருதி உருமாறி ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தாண்டி தமிழ் உலகின் தொன்மையான மொழியாக தமிழர்களை பெருமைப்படுத்துகிறது. இன்று நாம் பயன்படுத்தும் எழுத்துக்கள் பல்லாயிரம் ஆண்டுகளின் வளர்ச்சியில் உருவானவை. அவற்றுக்கான சான்றுகள் நம்மிடம் உள்ளன.
கொற்கைத் அகழ்வாய்வில் கிடைத்த பானை ஓட்டில் இருந்த தமிழ் எழுத்துக்கள் 8ம் நூற்றாண்டை சார்ந்தது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொருந்தல் அகழ்வாய்வில் கிடைத்த மண்பாண்டங்களில் எழுதப்பட்டிருந்த தமிழில் காலம் கி.மு. 5ம் நூற்றாண்டை சேர்ந்தவை.
வட ஈழத்தில் தமிழில் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இவை கி.மு 4ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை.
இந்தியாவில் கிடைத்த கல்வெட்டுகளில் 75 சதவீதத்திற்கும் மேலானவை தமிழில் இருக்கின்றன.
ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வில் கி.மு 800ஆம் ஆண்டு தமிழி எழுத்துப் பொறிப்பு கிடைத்துள்ளன. ஆதிச்சநல்லூரில் கிடைத்த பழமையான மண்பாண்டங்களின் காலம் கி.மு 4000 என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு இருந்த சுரங்கத் தொழிற்சாலையின் காலம் கி.மு1500. ஆனால் இதுவரை ஆதிச்சநல்லூரில் ஒரு சதவீதத்துக்கும் குறைவான ஆய்வுகள் மட்டுமே நடந்துள்ளன என்பது வருத்தத்துக்குரியது.
அகழ்வாய்வுகள் செய்யும்போது கீழ் அடுக்கில் உள்ள மட்பாண்டங்களில் குறியீடுகள், முதுமக்கள் தாழி பெருங்கற்படை காலத்தில் உருவான ஓவிய வரைவுகள் கிடைத்துள்ளன. அதற்கு மேல் அடுக்கில் தமிழி எழுத்துக்கள் கிடைத்துள்ளன. தமிழ் எழுத்துக்களுக்கு இடையில் குறியீடுகளும் காணப்படுகின்றன. இதனால் தமிழ் எழுத்து பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு வரிவடிவமாக இக்குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என தெரிகிறது.
திருக்குறள் போன்ற சங்க நூல்கள் அனைத்தும் வட்டெழுத்தில் எழுதப்பட்டுள்ளது.
கி.பி 2ம் நூற்றாண்டு முதல் கி.பி 12ம் நூற்றாண்டு வரை வட்டெழுத்து முறையே தமிழகத்தில் இருந்துள்ளது.
சங்ககாலத்தில் வழங்கிவந்த பழந்தமிழ் எழுத்து பின்னர் பிராமி எழுத்தாக மாறி அதிலிருந்து வளர்ந்து வட்டெழுத்தாக உருவாகி பின்னர் சோழர்கால எழுத்தான தமிழ் எழுத்து உருவானது. 10ம் நூற்றாண்டில் இருந்து ராஜ ராஜ சோழன் கல்வெட்டில் தமிழ் எழுத்துக்கள் தெளிவான வடிவங்களில் உள்ளன. இவை 12ஆம் நூற்றாண்டு காலம் வரையிலானது. 12 முதல் 15 ம் நூற்றாண்டு வரை எழுத்துக்களில் பல சீர்திருத்தங்கள் உருவாகின.
வீரமாமுனிவர் இரட்டைக் கொம்பு முறை சேர்ப்பது போன்ற சீர்திருத்தங்களை கொண்டுவந்தார்.
பிற்காலத்தில் பெரியார் தமிழ் மொழியை அச்சில் ஏற்றுவதற்கு எளிதாக யானை கொம்பு போன்ற எழுத்துக்களை மாற்றி *னை,றை,பை* என எழுதியும் அவற்றையே தொடர்ந்து பயன்படுத்தியும் வந்தார். பின்னர் அது அரசாணையாக மாற்றப்பட்டது. படிப்படியாக உலகத்தமிழர்கள் அனைவரும் அதை பின்பற்றுகிறோம்.
காலத்திற்கு ஏற்ப விஞ்ஞானத்திற்கு ஏற்ப வளர்ந்து நிற்கும் மொழி நம் மொழி. தாய் மொழியை காப்பதற்காக உயிர் துறந்தவர்கள் உலகில் வேறெங்கும் கிடையாது.
தமிழ் என்ற நம் அடையாளத்தை சீர்குலையவிடாமல் பாதுகாத்து, புவி இருக்கும் காலம் வரை தமிழை வாழ வைப்பது நம் கடமையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக