சர்வதேச அன்னையர் தினம் மே இரண்டாவது ஞாயிறு.(International Mother's Day)
( 10 மே 2020 )
அன்னையர் தினம் உருவான விபரம்;-
Ann Jarvis என்ற பெண் சமூகசேவகி அமெரிக்காவின் West Virginia மாநிலத்தில் Grafton என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்தார். அப்போது அங்கு நடந்த யுத்தத்தில் அமெரிக்க வீரர்கள் பலர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்கள் சிதறிச்சீரழிந்தன. பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும், போர் இல்லாத சமாதானம் நிலவவும் Ann Jarvis கடுமையாக போராடினார். இறுதிவரை சமூகசேவகியாகவே வாழ்ந்து 1905 ம் ஆண்டில் மறைந்தார்.
Ann Jarvis ன் மகள் Anna Marie Jarvis தன்தாயின் நினைவாக உள்ளூரில் இருந்த ஒரு தேவாலயத்தில் 1908 ம் ஆண்டு மே மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று 'சிறப்புவழிபாடு' ஒன்றை நடத்தினார். தன்தாயாரின் நினைவை போற்றியதைப் போலவே, எல்லோரும் அவரவர் அன்னையை கௌரவிக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது.
அன்னையைப் போற்றுவது குறித்த தனது எண்ணத்தை அவர் மாநில அரசுக்குத் தெரிவித்தார். அரசாங்கமும் அவருடைய கருத்தை ஏற்று 1913-ம் ஆண்டு முதல் அன்னையர் தினத்தை அங்கீகரித்து அறிவித்தது.
அமெரிக்க அதிபர் Woodrow Wilson ம் இதை ஏற்றுக்கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக