வெள்ளி, 23 ஜூன், 2017

கவிஞர்களின் புதினங்கள்:(with SHORTCUT Idea)




கவிஞர்களின் புதினங்கள்:(with SHORTCUT Idea)

 கவிஞர் கண்ணதாசன் அவர்களின் புதினங்கள்:(with SHORTCUT Idea)
1) பிருந்தாவனம்
2) விளக்கு மட்டுமா சிவப்பு
3) நடந்த கதை
4)ரத்த புஷ்பங்கள்
5) சிவப்புக்கல் மூக்குத்தி
6) சிங்காரி பார்த்த சென்னை
7) சிவகங்கை சீமை (நாடகம்)
8) மிசா, மாங்கனி
9) முப்பது நாளும் பவுர்ணமி
10) ராகமாலிகா, ராஜதண்டனை(நாடகம்)
11) வனவாசம்
SHORTCUT: "பி.வி.நரசிம்ம ராவ்" (இந்தியாவின் முன்னால் பிரதமர்)
இவருடைய பெயரின் ஒவ்வொரு எழுத்தும் கண்ணதாசன் அவர்களின் புதினங்களை குறிப்பதாகும்.
பி - பிருந்தாவனம்
வி - விளக்கு மட்டுமா சிவப்பு
ந - நடந்த கதை
ர - ரத்த புஷ்பங்கள்
சி - சிவப்புக்கல் மூக்குத்தி,சிங்காரி பார்த்த சென்னை
ம் - மிசா, மாங்கனி
ம - முப்பது நாளும் பவுர்ணமி
ரா - ராகமாலிகா, ராஜதண்டனை(நாடகம்)
வ் - வனவாசம்

கவிஞர் வைரமுத்து அவர்களின் நாவல்கள்.(with SHORTCUT IDEA)
1) சிகரங்களை நோக்கி
2) வானம் தொட்டுவிடும் தூரம்தான்
3)வில்லோடு வா நிலவே
4) காவி நிறத்தில் ஒரு காதல்
5)கள்ளிகாட்டு இதிகாசம்
6) கருவாச்சி காவியம்
7)மீண்டும் என் தொட்டிலுக்கு
8) மூன்றாம் உலகப்போர்
SHORTCUT : "சிவகாமி"
சிவகாமி ...என்ற பெயரில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் வைரமுத்து அவர்களுடைய நாவல்களின் முதல் எழுத்தை குறிக்கும் SHORTCUT ஐடியா.
சி - சிகரங்களை நோக்கி
வ - வானம் தொட்டுவிடும் தூரம்தான், வில்லோடு வா நிலவே
கா - காவி நிறத்தில் ஒரு காதல்,கள்ளிகாட்டு இதிகாசம்,
கருவாச்சி காவியம்
மி - மீண்டும் என் தொட்டிலுக்கு, மூன்றாம் உலகப்போர்

: பாரதி தாசன் படைப்புகள்:(with SHORTCUT IDEA)
1.இருண்ட வீடு
2.அமைதி
3.குடும்ப விளக்கு
4.மணிமேகலை
5.தேனருவி
6. சாரல்
7.இசை அமுது
8. பாண்டியன் பரிசு
9.எதிர்பாராத முத்தம்
10. காதல் நினைவுகள்
11. பிசிராந்தையார்
12. சேரதாண்டவம்
13. பிள்கினி
14. இளைஞன்
15.காதலா? கடமையா?
16. கடமை
17. இணையற்ற வீரன்
18. நல்ல தீர்ப்பு
மேற்கண்ட அணைத்து பாரதிதாசன் படைப்புகளையும் எழுதில் நினைவில் வைத்து கொள்ள கீழ்காணும் சிறுகதையினை நினைவில் வைத்துக்கொண்டால் போதுமானது:
SHORTSTORY:
"இருண்டவீடில் அமைதியான குடும்ப விளக்காக மணிமேகலை என்ற பெண் தேனருவி சாரலில் இசை அமுதினை பாடும்பொழுது பாண்டியன் என்ற மன்னன் பரிசு கொடுத்து எதிர்பாராத முத்தம் கொடுத்தான்.
இருவருக்கும் காதல் நினைவுகள் ஆரம்பமாவதை பார்த்த பிசிராந்தையார் கோர தாண்டவம் ஆடி நாட்டாமை பில்கணியிடம் இளைஞனை அழைத்து சென்றார்.
அவர் காதலா? கடமையா? என்று கேட்க கடமை என்று கூறினான் அந்த இளைஞன். உடனே நீதான் இணையற்ற வீரன் என்று நாட்டாமை நல்ல தீர்ப்பு கூறினார்.
[22/06, 8:27 PM] ‪+91 99525 94617‬: பம்மல் கே.சம்பந்தனார் இயற்றிய நாடக நூல்கள் (shortcut idea)
1) அமலாதித்யன்
2) வாணிபுரத்து வணிகன்
3)விரும்பிய விதமே
4) சபாபதி
5) சிறுத்தொண்டன்
6) யயாதி
7) மனோகரா
SHORTCUT : "அவசியம்"
மேற்கண்ட ஐடியாவில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் பம்மல் கே.சம்பந்தனார் இயற்றிய முக்கிய பம்மல் நாடக நூல்களை குறிப்பிடுகின்றன
அ - அமலாதித்யன்
வ - வாணிபுரத்து வணிகன், விரும்பிய விதமே
சி - சபாபதி , சிறுத்தொண்டன்
ய - யயாதி
ம் - மனோகரா
[22/06, 8:27 PM] ‪+91 99525 94617‬: சி.சு.செல்லப்பா அவர்களின் படைப்புகள்:(எழுத்து தவிர ) - SHORTCUT IDEA)
1) சரசாவின் பொம்மை
2) கலாமோகினி
3) ஜீவனாம்சம்
4) மணல் வீடு
5) மாற்று இதயம்
6) வாடிவாசல்
7) வெள்ளை
8) அறுபது சத்யாகிரகிகள்
9) மணிக்கொடி
10) சுதந்திர சங்கு
11) சுதந்திர தாகம்
சிறுகதை:
"சகல அம்சமும் நிறைந்த வீட்டினை மாற்றி வாசல் தெளித்து வெள்ளை அடித்து சத்யாகிரகிகள் கொடி ஏற்றி சுதந்திரம் கொண்டாடினார்கள்"
மேற்கண்ட ஐடியாவில் இடம்பெறும் ஒவ்வொரு வார்த்தையும் மேற்படி நூல்களை குறிப்பதாகும்.
சகல - (ச - சரசாவின் பொம்மைகள்), (கல- கலாமோகினி)
அம்சமும் - ஜீவனாம்சம்
வீட்டினை மாற்றி - மாற்று இதயம்
வாசல் தெளித்து - வாடி வாசல்
வெள்ளை அடித்து - வெள்ளை
சத்யாகிரகிகள் - அறுபது சத்தியாகிரகிகள்
கொடி - மணிக்கொடி
சுதந்திரம் கொண்டாடினார்கள் - சுதந்திர காற்று, சுதந்திர தாகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக