புதன், 29 ஜனவரி, 2020

கலீலியோ கலிலி... இவர் வாழ்க்கையில் நாம் என்ன கற்று கொள்ள வேண்டும்?



கலீலியோ கலிலி... இவர் வாழ்க்கையில் நாம் என்ன கற்று கொள்ள வேண்டும்?

கலீலியோ கலிலியின் புத்தகங்கள்..!!
கலீலியோவின் மரணம் :

🌞கலீலியோ கலிலி 1633ஆம் ஆண்டு முதல் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார். பத்து ஆண்டுகள் வீட்டுக்காவலிலேயே காலம் கழித்த கலீலியோ கலிலி 1642ஆம் ஆண்டு இருதயக் கோளாறு காரணமாக தனது 78வது வயதில் இயற்கை எய்தினார்.

கலிலியின் புத்தகங்கள் :

📚1621ல் கலீலியோ தனது முதல் நூல் 'த அஸயேர்" (வுhந யுளளயலநச) எழுதினார். இந்நூல் 1623ல் வெளியிட அனுமதி கிடைத்தது.

📚1630ல் னுயைடழபரந உழnஉநசniபெ வாந வுறழ ஊhநைக றுழசடன ளுலளவநஅ என்ற நூலை வெளியிட அனுமதி கோரினார். அதற்கும் 1632ல் தான் வெளியிட அனுமதி கிடைத்தது.

📚கலீலியோ தனது கண்டுபிடிப்புகள் அனைத்தையும் 'உரையாடல்" (டயலாக் - னுயைடழபரந) என்ற தலைப்பில் எழுதி புத்தகமாக வெளியிட்டார்.

📚அந்தப் புத்தகத்தில் மூன்று கற்பனைக் கதாபாத்திரங்கள் பேசிக் கொள்வது போல எழுதினார். ஒரு கதாபாத்திரம் கலீலியோவின் கண்டுபிடிப்புகளைப் பற்றி அறிவுப்பூர்வமாக பேசும். அடுத்த கதாபாத்திரம் அதை முட்டாள்தனமாக எதிர்க்கும். மூன்றாவது கதாபாத்திரம் திறந்த மனதுடன் அவற்றைப் பரிசீலிக்கும்.

📚உண்மையை உரக்கச் சொல்கிற தனிக்குரலாக நம் கருத்துக்கள் இருக்கும்பட்சத்தில், நம் கருத்து நம்மை வரலாற்றுப் பக்கங்களில் பதிய வைக்கும் என்பதற்கு கலீலியோ ஒரு சிறந்த உதாரணம்.

📚அவர் இறந்த பிறகு அவரது ஆராய்ச்சிகளையும், கண்டறிந்த உண்மைகளையும் உள்ளடக்கிய புத்தகம் ஐரோப்பா முழுவதும் வலம் வந்து அறிவுக்கண்ணை திறந்தது.

📚கண்கூடாக காணும் வரை அல்லது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படும் வரை எதையுமே ஏற்றுக்கொள்ளாத மனோபாவம்தான் உலகம் வியக்கும் கண்டுபிடிப்புகளை செய்ய கலிலிக்கு உதவியிருக்கிறது. 'வானியல் சாஸ்திரத்தின் தந்தை" என்ற பெயரையும் அவருக்கு பெற்றுத்தந்திருக்கிறது.

📚கலீலியோ போல் கேள்வி கேட்க துணிபவர்களுக்கும், புதிய உண்மைகளை கண்டுபிடிக்க முனைபவர்களுக்கும் விடாமுயற்சியுடன் தன்னம்பிக்கையோடு உழைப்பவர்களுக்கும் நிச்சயம் அந்த வானம் வசப்படும்.இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவர்...

வெள்ளி, 24 ஜனவரி, 2020

இந்திய தேசிய கொடி பற்றிய சில சுவாரசிய தகவல்கள்


இந்திய தேசிய கொடி பற்றிய சில சுவாரசிய தகவல்கள்.
   
சுதந்திர இந்தியாவின் அடையாளமாகவும், சுதந்திர போராட்ட வீரர்களின் உயிர்மூச்சாக பட்டொளி வீசும் இந்திய தேசிய கொடி பற்றிய சுவாரசிய தகவல்கள் இதோ உங்களுக்காக…

தேசபிதா மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட தலைவர்களும் லட்சகணக்கான மக்களும் கொடுங்கோல் ஆட்சி நடத்திய ஆங்கிலேயரிடம் போராடி, ஆகஸ்டு 15 1947 ஆண்டு சுதந்திரம் பெற்றதால் தான், இன்று நாமும் நம் சந்ததியினரும் சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம்.

இப்படி போராடி பெற்ற சுதந்திரத்தின் அடையாளமாகவும், நாட்டிற்காக தன் இன்னுயிரை நீத்த தியாகிகளை போற்றும் நினைவாக உருவானது தான், நம் இந்திய தேசியக் கொடி

தேசிய கொடியில் காவி, வெண்மை பச்சை என மூன்று வண்ணங்கள் உள்ளதால், மூவர்ணகொடி என்று அழைக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இம்மூன்று வண்ணத்திற்கும் ஒரு காரணம் உண்டு.

காவி நிறம் – பலத்தையும், தைரியத்தையும் குறிப்பதற்காகவும்,

வெண்மை நிறம் – உண்மை மற்றும் அமைதியையும்.

பச்சை நிறம் – வளர்ச்சி, பசுமை மற்றும் விவசாய செழிப்பைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

நடுவில் 24 ஆரங்களை கொண்டு இடம் பெற்றுள்ள அசோக சக்கரம், கடல் மற்றும் மேகத்தின் நிறத்தை குறிக்கும் வகையிலும், குறிப்பாக தர்மம் காக்கபட வேண்டும் என்ற நிலைபாட்டில் அமைந்துள்ளது.

ஆனால் இவ்வளவு சிறப்புமிக்க தேசிய கொடி உருவாக்கத்திற்கு மிக பெரிய வரலாற்று பின்னனியெ இருக்கிறது….

1947ல் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், ராஜேந்திர பிரசாத்தை தலைவராகவும், மவுலானா அபுல் கலாம் ஆசாத், சரோஜினி நாயுடு, சி.ராஜகோபாலச்சாரி, கே.எம். முன்ஷி, மற்றும் பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோரையும் குழு நபர்களாக கொண்ட ஒரு அவசர அமைப்பு முத்த தலைவர்கள் மேற்பார்வையில் அமைக்கபட்டது.

இந்த அமைப்பு, பல கூறுகளாக பிளவுபட்டிருக்கும் நாட்டை ஒரே தேசம் என்ற அடிப்படையிலும், உயிர் நீத்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தவும் தேசத்திற்கு ஒரு கொடி வேண்டும் என்று தீர்மானித்தது. அதன் தொடக்கமாக பல கொடிகள் உருவாகபட்டு ஒவ்வொறு முறையும் பல திருத்தங்கள் மேற்கொள்ளபட்டது. அப்படி நடந்த புரட்சியில் தேசிய கொடி மொத்தம் 22 முறை மாற்றி அமைக்கபட்டது.

இறுதியாக காவி, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று வண்ணங்களில், ஒரே அளவில் இருக்கும் பட்டைகளோடு, நடுவில் உள்ள வெள்ளைப் பட்டையில் அசோக சக்கரம் தாங்கிய கொடி இருக்க வேண்டும் என்றும் அக்கமிட்டி முடிவெடுத்தது.

23 ஜூன் 1947 அன்று தொடங்கிய இவ் விவாதத்தில், கொடியின் மாதிரி வடிவம் ஒன்று தயாரிக்கப்பட்டு, 1947ம் ஆண்டு ஜூலை மாதம் 22ம் தேதி அரசியல் சட்ட நிர்ணய சபையின் முன் அதன் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டது. அதற்கு முன்னதாக அனைத்து சமூகத்தினரும் ஏற்கும் வகையில், எந்த மத சாயலும் இல்லாமல் தேசியக் கொடி இருக்க வேண்டும் என்று சில நிபந்தனைகளையும் அக்கமிட்டி நிர்னயித்தது.

இறுதியாக பிங்காலி வெங்கய்யா வடிவமைத்த இந்திய விடுதலைக்காக பெரிதும் பங்காற்றிய இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கொடி அடிப்படையாக மாதிரியாக எடுக்கபட்டது. இந்த கொடியில் சில மாற்றங்கள் செய்யபட்டு அதுவே இந்திய தேசிய கொடியாக அக்கமிட்டி அறிவித்தது.

இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்திய தேசியக் கொடியை, நாடு சுதந்திரம் அடைந்த ஆகஸ்ட் 15, 1947ஆம் தேதி டெல்லியில் உள்ள கோட்டைக் கொத்தளத்தில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, ஆங்கிலேயர் கொடியை இறக்கிவிட்டு மூவர்ணக் கொடியை ஏற்றினார்.

பின் 1951-ஆண்டு இந்திய தரக்கட்டுப்பாட்டுத் துறையால் தேசியக்கொடிக்கு முதன்முதலாக அளவுமுறை நிர்ணயிக்கப்பட்டது. இந்த அளவு முறையானது கொடியின் நீள, அகலம், நிறங்களின் அளவு துணியின் தரம் மற்றும் கொடிக்கயிற்றின் தரத்தைப்பற்றியும் விவரிக்கிறது. முக்கியமாக கொடித்தயாரிப்பில் இவ்விகிதாச்சாரங்களை மீறுவது, மிகப்பெரிய குற்றமாக கருதபடும்.

மேலும் கொடியை பருத்தி, பட்டு இவற்றில் ஒன்றால் கையால் நெய்யப்பட்ட கைத்தறித்துணியில் தான் தயாரிக்க வேண்டும் என்பதும் சட்டமானது. தேசியக் கொடிக்கு உரிய மரியாதை செய்ய இந்திய தேசியக் கொடி சட்டம், 2002 இயற்றபட்டது. பொது இடங்களில் தேசியக் கொடியினை கிழித்தல்,எரித்தல், அவமதித்தல் தண்டனைக்குரிய குற்றமாகும், மேலும் தேசியக் கொடியை மண், தரை, தண்ணீரில் படும்படியாக பறக்கவிடக் கூடாது.

கொடி கிழிந்த நிலையிலோ, நிறம் மங்கிய நிலையிலோ ஏற்றக்கூடாது என்று சட்டம் இயற்றப்ப்ட்டது. அதுமட்டுமிலாமல் சூரிய உதயத்திற்கு பின்பு தேசியக் கொடியை ஏற்றவும் , சூரிய அஸ்தமனத்திற்குள் தேசியக் கொடியை இறக்கி விடவேண்டும் என்றும், தலைவர்கள் மறைவின் போது தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படுவது என பல கடுமையான சட்டங்கள் இயற்றப்படது.

மேலும் தேசிய கொடிக்கான அளவு விகிதாசாரமும் காலபோக்கில் நிர்னயிக்கப்ட்டது. எ.கா டெல்லி செங்கோடடையில் 8 * 12 அடியும் என்ற் அள்விலும், டெல்லி பாராளுமனறத்தில் 6 *9 அடி என்ற அளவிலும் கொடி ஏற்றப்ப்ட்டு , உரிய மரியாதை செலுத்தப்ட்டு வருகிறாது.

இன்னும் எத்தனை ஆண்டுகல் ஆனாலும் உயிர் தியாகம் செய்து சுதந்திரம் பெற்ற தியாகிகளை மறவாமல் தேசத்தையும், தேசிய கொடியையும் போற்றுவோம், பாதுகாப்பொம்..

ஜெய் ஹெந்த்

இந்திய தேசிய கொடியை முதலில் வடிவமைத்த ஆந்திராவைச் சேந்த பிங்கலி வெங்கய்யா அவரைப் பற்றி: அறியாத 10 தகவல்கள்


இந்திய தேசிய  கொடியை முதலில் வடிவமைத்த ஆந்திராவைச் சேந்த பிங்கலி வெங்கய்யா அவரைப் பற்றி: அறியாத 10 தகவல்கள்

நாட்டின் தேசியக்கொடியை வடிவமைத்த பெருமைக்குரிய பிங்கலி வெங்கய்யா 
அவரைப்பற்றிய அரிய தகவல்கள்:

* காந்தியின் ஆலோசனைப்படி, இந்திய தேசிய கொடியாம் மூவர்ணக்  கொடியை முதலில் வடிவமைத்த ஆந்திராவைச் சேந்த பிங்கலி வெங்கய்யா  ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் 1878-ம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி  பெடகள்ளேபள்ளி என்ற கிராமத்தில் பிறந்தவர்.

* இந்தியாவின் தேச தந்தையான  காந்தியின் ஆலோசனையை  ஏற்று, பிங்கலி வெங்கய்யா வடிவமைத்ததுதான் இந்தியா தேசியக் கொடி.

 * ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் 1878-ம் ஆண்டு  பெடகள்ளேபள்ளி என்ற கிராமத்தில் பிறந்தவர் வெங்கய்யா.  இந்திய தேசிய ராணுவத்தில் சேருமாறு இளைஞர்களுக்கு சுபாஷ் சந்திர போஸ் விடுத்த அழைப்பை ஏற்று, 19-வது வயதில் ராணுவப் பயிற்சி பெற்று, ஆப்பிரிக்காவில் நடந்த போயர் யுத்தத்திலும் (1899-1902) பங்கெடுத்துக் கொண்டார் வெங்கய்யா.

* தனது இளமை பருவத்தில்  நேதாஜியை பின்பற்றிய வெங்கய்யா பின்னாளில் தென் ஆப்பிரிக்காவில் தங்கியிருந்தபோது காந்தியைச் சந்தித்து, பின்னர் காந்தி கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.

* இந்தியா திரும்பியதும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான தலைமறைவு இயக்கங்களில் பங்கெடுத்துக்கொண்டார். இளமைக் காலத்திலிருந்து வேளாண்மையின் மீதிருந்த ஆர்வமும்  வெங்கய்யாவுக்கு தொடர்ந்தது. இதன் காரணமாக  பருத்திச் சாகுபடியில் தீவிரக் கவனம் செலுத்தினார். வேளாண் துறையில் பரிசோதனை முயற்சிகளிலும் ஈடுபட்டார்.

*  கல்வியின் மீதிருந்த ஆர்வத்தால், லாகூருக்குச் சென்று ஆங்கிலோ-வேதிக் பள்ளியில் சேர்ந்து சம்ஸ்கிருதம், உருது, ஜப்பானிய மொழிகளைக் கற்றுக்கொண்டார்.

* அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்ட கம்போடிய பருத்தி விதைகளையும் இந்தியப் பருத்தி விதைகளையும் கலப்புண்டாக்கி, புதிய பருத்தி ரகங்களை உருவாக்கினார்.

அவர் உருவாக்கிய தரமான பருத்தி விதைகளைப் பற்றி அறிந்துகொண்ட ‘ராயல் அக்ரிகல்சுரல் சொசைட்டி ஆஃப் லண்டன்’ அவரைக் கௌரவ உறுப்பினராகச் சேர்த்துக்கொண்டு பெருமைப்படுத்தியது. இதையடுத்து வெங்கய்யாவுக்கு பட்டி வெங்கய்யா என்று இன்னொரு அடைமொழியும் சூட்டப்பட்டது.

* 1916-ல் அவர், இந்தியாவுக்கு ஒரு தேசியக் கொடி (எ நேஷனல் ப்ளாக் ஃபார் இந்தியா) என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். தேசியக் கொடிக்கான 13 வடிவமைப்புகளைக் கொண்டிருந்தது அந்தப் புத்தகம். 1918 தொடங்கி 1921 வரைக்கும் காங்கிரஸின் ஒவ்வொரு கூட்டத்திலும் இந்தியாவுக்கு ஒரு தனிக் கொடி வேண்டும் என்று தொடர்ந்து வேண்டுகோளை விடுத்து வந்தார். அப்போது ஆந்திர தேசியக் கல்லூரியில்  விரிவுரையாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார் வெங்கய்யா.

* 1921-ல் விஜயவாடாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டம் நடந்தபோது, வெங்கய்யா மீண்டும் ஒருமுறை காந்தியைச் சந்தித்தார். அப்போது தேசியக் கொடி பற்றிய தனது புத்தகத்தையும் தான் வடிவமைத்த கொடியின் வடிவமைப்புகளையும் காந்தியிடம் காட்டினார்.

* எல்லா காலத்திலும், அனைத்துத் தலைமுறையையும் எழுச்சியுறச் செய்யும் வகையில் ஒரு புதிய தேசியக் கொடியை  உருவாக்குமாறு அவரைக் கேட்டுக்கொண்டார் காந்தி. அதையடுத்து ஒரே இரவில் வெங்கய்யா உருவாக்கிக் கொடுத்த தேசியக் கொடியை காங்கிரஸ் கூட்டத்தில் அறிமுகப்படுத்தி  காந்தியிடமிருந்து ஒப்புதலையும் பெற்றார்

* வெங்கய்யா. 1947-லிருந்து தீவிர அரசியலிலிருந்து விலகிவிட்டார் வெங்கய்யா. தான் இறந்த பிறகு தன்னைத் தேசியக் கொடியால் மூட வேண்டும் என்று விரும்பினார் வெங்கய்யா. அந்த ஆசை நிறைவேறியது. 1963-ல் அவர் காலமானபோது, அவர் வடிவமைத்த தேசியக் கொடி அவர் மீது போர்த்தப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

* பிங்கிலி வெங்கய்யா வடிவமைத்த கொடியில், வெண்மை நிறத்தின் நடுவே முதலில் கைராட்டை சின்னம் தான் இருந்தது. பின்னர், அது அசோக சக்கரமாக மாற்றப்பட்டது. இந்த இறுதி வடிவமைப்பைச் செய்தவர் பக்ருதின் தியாப்ஜி. இந்த வடிவமைப்புதான் தற்போது வரை பின்பற்றப்பட்டு வருகிறது. அதற்கு மூலகர்த்தாவான வெங்கய்யாவின் பிறந்த தினம் இன்று.

* பிங்கலி வெங்கய்யா, பக்ருதின் தியாப்ஜி வடிவமைத்த மூவர்ண கொடிதான் தற்போது இந்தியாவின் தேசியக்கொடியாக பட்டொளி வீசி பறக்கிறது.

சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்தன்றும் கொடி ஏற்றுவதில் உள்ள வேறுபாடுகள்.......


சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்தில் ஏற்றும் தேசிய கொடி பற்றிய சிறப்பு - தகவல்

சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்தன்றும் கொடி ஏற்றுவதில் உள்ள வேறுபாடுகள்.......

# முதல் வித்தியாசம்.....

பதினைந்து ஆகஸ்ட் சுதந்திர தினத்தன்று கொடி  ஏற்றும்போது கொடி கீழிருந்து மேலே கயிற்றால்  இழுத்து பிறகு கட்டப்பட்டுள்ள கொடி திறக்கப்பட்டு பறக்கவிடப்படும் அன்றைய தினத்திற்கு மரியாதை செய்யும் விதமாக செய்யப்படும் இந்த நிகழ்வுக்கு "கொடியேற்றம்" அதாவது Flag hoisting என்றழைக்கபடுகிறது.,

இருபத்து ஆறு ஜனவரி மாதம் குடியரசு தினத்தன்று
கொடி கம்பத்தின் உச்சியிலே கட்டப்பட்டு இருக்கும். அந்த முடிச்சு அவிழ்க்கப்பட்டு அதாவது கொடி  திறக்கப்பட்டு பறக்கவிடப்படும்  இதை கொடியை பறக்கவிடுதல்  அதாவது flag unfurling என்பார்கள்..

#இரண்டாவது   வித்தியாசம்......

சுதந்திரம் கிடைத்தபோது அரசியல் சட்டம் அமுலுக்கு வரவில்லை. அப்பொழுது பிரதமர் தான் நாட்டில் முதல் மனிதராக political head  கருதப்பட்டார். குடியரசு தலைவர் ஒரு constitutional monarchy, அவர் அப்போது பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் சுதந்திர தினத்தில் பிரதமர்  கொடி ஏற்றுகிறார். குடியரசு தலைவர் மாலையில் ரேடியோ தொலைக்காட்சி மூலமாக உரையாற்றுவார்..

குடியரசு தினத்தன்று அரசியல் சட்டம் அமுலுக்கு வந்தபடியால்  அரசியல் சட்டத்தின் தலைவர் மற்றும் பாதுகாவலர் என்ற முறையில் குடியரசு தலைவர் கொடியை பறக்கவிடுவார்..

#மூன்றாம் வித்தியாசம்.......

சுதந்திர தினத்தன்று டில்லி செங்கோட்டையில் கொடி ஏற்றபடுகிறது

குடியரசு தினத்தன்று டில்லி ராஜ்  பாத்தில் கொடி பறக்கவிடப்படுகிறது.......

செவ்வாய், 21 ஜனவரி, 2020

TNPSC Group 1 Syllabus 2020 - Prelims And Mains

TNPSC Group 1 Syllabus 2020 - Prelims And Mains



The Tamil Nadu Public Service Commission (TNPSC) sets the exam syllabus for recruitment to the Group 1 services in the state.
In this article, you can read and download the revised syllabus for the TNPSC Group 1 Exam 2020.
The TNPSC Group 1 Exam, officially known as the Combined Civil Service – 1 (CCS-1) is conducted in three stages:
  • Prelims – 1 paper (objective type) for 300 marks
  • Mains – 3 papers (descriptive) for a total of 750 marks
  • Interview – 100 marks
Candidates should go through the detailed TNPSC Group 1 Exam pattern as there has been a revision by the commission in the exam scheme.
For candidates’ reference, the important dates of TNPSC Group 1 Exam 2020 are given here:
Date of TNPSC Group 1 Prelims Exam 2020April 5, 2020
Dates of TNPSC Group 1 Mains Exam 2020July 2020 (Tentative)
For candidates’ reference, the important dates of TNPSC Group 1 Exam 2019 are given here:
Date of TNPSC Group 1 Prelims Exam 2019March 3, 2019
New Dates of TNPSC Group 1 Mains Exam 2019July 12, 13 and 14, 2019
Candidates can check the TNPSC Group 1 Exam
  2020 details, application procedure etc. at the linked article.
The TNPSC conducts the Combined Civil Service Exam on the lines of the  upsc ias exam. The IAS Exam is also conducted in three stages – Prelims, Mains and Interview.

TNPSC Group 1 Syllabus – Prelims

The Preliminary stage of the TNPSC Group 1 Exam comprises one objective type paper.
The Prelims is only the screening stage and the marks are not counted in the final merit list.
The TNPSC Syllabus for Group 1 Prelims Exam 2020 is given below:
Unit IGeneral Science
  • Physics
  • Chemistry
  • Botany
  • Zoology
Unit IICurrent Events
  • History
  • Political Science
  • Geography
  • Economics
  • Science

Unit IIIGeography
Unit IVHistory and Culture of India
Unit VIndian Polity
Unit VIIndian Economy
Unit VIIIndian National Movement
Unit VIIIAptitude and Mental Ability Tests
Logical Reasoning
TNPSC Group 1 Syllabus for Prelims 2020 will be updated after the release of official notification on January 20, 2020. Candidates can get the reference for the syllabus fro, the TNPSC Group 1 2019 exam. 
TNPSC Group 1 Syllabus PDF for Prelims 2020:- 
The candidates who clear the Prelims, reach the Main stage of the exam.

TNPSC Group 1 Syllabus for Mains 2020

The Mains Exam comprises three descriptive papers and each paper can be subdivided into three units covering broad subject areas.
Unlike theupsc mains, there are no optional papers/subjects in the TNPSC Group 1 Exam Syllabus.
The new TNPSC syllabus for Mains is summarised below:
  1. Paper 1 – General Studies
    1. Unit I – Modern History of India and Indian Culture
    2. Unit II – Social Issues in India and Tamil Nadu
    3. Unit III – General Aptitude and Mental Ability
  2. Paper 2 – General Studies
    1. Unit I – Indian Polity and Emerging Political Trends across the world affecting India
    2. Unit II – Role and impact of Science and Technology in the Development of India
    3. Unit III – Tamil Society (Culture and Heritage)
  3. Paper 3 – General Studies
    1. Unit I – Geography of India with special reference to Tamil Nadu
    2. Unit II – Environment, Biodiversity and Disaster Management
    3. Unit III – Indian Economy and Current Economic Trends and impact of Global Economy on India
TNPSC Group 1 Syllabus for Mains:
The syllabus for the state public service commission exams differ from the UPSC Civil Service Exam is one major aspect, i.e., the preparation has to focus on the subjects from the perspective of the state as well.
For e.g., in the TNPSC Group 1 Syllabus, the history, geography, social issues topics, etc. have to be understood from a pan-India perspective and from the perspective of Tamil Nadu state.
Students while preparing should note that General Studies preparation is mostly similar for UPSC and TNPSC Group 1 exam.

தமிழ்நாடு காவல்துறை பற்றி தெரிந்ததும், தெரியாததும்…

தமிழ்நாடு காவல்துறை பற்றி தெரிந்ததும், தெரியாததும்…

*] தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் காவல் நிலையங்கள் – 1452.

*] தமிழ்நாட்டில் உள்ள மொத்த மகளிர் காவல் நிலையங்கள் – 198.

*] தமிழ்நாட்டில் உள்ள மொத்த காவல் பரப்பளவு – 130058 ச.கி.மீ.

*] மொத்த காவல் பணியாளர்கள் – 113602..

*] தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் காவல் மண்டலங்கள் – 4.

தமிழ்நாடு காவல்துறை வடக்கு, மைய, மேற்கு மற்றும் தெற்கு என நான்கு காவல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒரு காவல் பொது ஆய்வாளர் (Inspector General of Police) தலைமையில் இயங்குகின்றன.

*] தமிழ்நாட்டில் உள்ள மொத்த ஆணையரகம் – 6.

தமிழகத்தில் உள்ள 6 பெரிய நகரங்களான சென்னை, மதுரை, கோயமுத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்கள் காவல்துறை காவல் ஆணையாளர் (Commissioner of Police) தலைமையில் இயங்குகின்றது.

*] தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் காவல் மாவட்டங்கள் – 33 (2 ரயில்வே உட்பட).

தமிழகம் 33 காவல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள் காவல் கண்காணிப்பாளர் (Superintendent of Police) தலைமையில் இயங்குகின்றன. இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு ஒரு துணை காவல் பொது ஆய்வாளர் (Deputy Inspector General of Police) மேற்பார்வை செய்கிறார்.

*] போலீஸ் துணை பிரிவுகள் – 247.

*] போக்குவரத்துக் காவல் நிலையங்கள் – 218.

*] திருச்சி ரேஞ்ச் ரயில்வே போலீஸ் நிலையங்கள் – 20.

*] சென்னை ரேஞ்ச் ரயில்வே போலீஸ் நிலையங்கள் – 21.

*] தமிழ்நாட்டில் 632 மக்களுக்கு 1 காவலர் என்ற அடிப்படையில் காவலர்கள் உள்ளனர்.

தமிழ்நாடு காவல்துறை தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றங்களைத் தடுக்கவும், தமிழ்நாடு அரசு உள்துறை அமைச்சகத்தின் கீழ், ஒரு தலைவரைக் (DGP) கொண்டு இயங்கும் அரசு சார்ந்த அமைப்பாகும். இது இந்தியாவில் ஐந்தாவது பெரிய காவல்துறை ஆகும்.

முதன் முதலில் இது மதராசு நகரக் காவல்துறைச் சட்டம் 1888 (The Madras City Police Act 1888) இற்கு ஏற்பத் துவக்கப்பட்டது. இச்சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் 1888, ஏப்ரல் 12 இலும், Governor-General -ன் ஒப்புதல் 1888, சூன் 26 இலும் வழங்கப்பட்டது. தொடக்கத்தில் ஒரு ஆணையாளரைக் கொண்டு உருவாக்கப்பட்ட இது சென்னை மாநகர எல்லை முழுமைக்குமாகத்தான் தன் செயல் எல்லையைக் கொண்டிருந்தது.

*] காவல் துறையின் பல்வேறு பிரிவுகள்

1] சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு (Law and Order).

2] ஆயுதம் அல்லது தமிழ்நாடு சிறப்புப் படை (Armed Police or Tamil Nadu Special Police).

3] பொதுமக்கள் பாதுகாப்பு (Civil Defence and Home Guards).

4] பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை (Civil Supplies, CID).

5] கடலோர காவல் துறை (Coastal Security Group).

6] குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை (Crime Branch, CID).

7] பொருளாதார சிறப்புப் பிரிவு (Economic Offences Wing).

8] செயல்பாடு – தமிழக ஆயுதப்படை மற்றும் ஆயுதப்படை பள்ளி (Operations – T.N. Commando Force & Commando School).

9] இரயில்வே காவல்துறை (Railways)

10] சிறப்புப் பிரிவு – உளவு மற்றும் பாதுகாப்பு (Special Branch , CID including Security).

11] குற்றப் பிரிவு (நுண்ணறிவு) (Co-Intelligence)

12] மதுவிலக்கு அமல் பிரிவு (Prohibition Enforcement Wing).

13] குடிமையியல் பாதுகாப்புப் பிரிவு (Protection and Civil Rights).

14] பயிற்சிப் பிரிவு (Training).

15] சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் (Social Justice and Human Rights).

16] போக்குவரத்துக் காவல் பிரிவு (Traffic).

பயிற்சி நிறுவனங்கள்:

அ) போலீஸ் அகாடமி – 1.

ஆ) Regl. போலீஸ் கம்ப்யூட்டர் பயிற்சி மையம். – 1.

இ) போலீஸ் பயிற்சி பள்ளி (நிரந்தரம்) – 8 (தூத்துக்குடி / திருச்சி / வேலூர் / கோயம்புத்தூர் / ஆவடி / விழுப்புரம் / சேலம் / மதுரை).

ஈ) போலீஸ் பயிற்சி கல்லூரி – அசோக் நகர்.

தமிழ்நாடு காவல் துறையில் பணி புரிபவர்களின் ஊதிய விவரம்:

1] காவல்துறைத் தலைமை இயக்குனர் (DGP) – 80,000.

2] காவல்துறைத் துணை தலைமை இயக்குனர் (ADGP) – 67000 – 79000.

3] காவல்துறை பொது ஆய்வாளர் ( Inspector General of Police ) – 37400- 67000 + 10000.

4] காவல்துறை துணை பொது ஆய்வாளர் ( Deputy Inspector General of Police ) – 37400 – 67000 + 8900.

5] காவல்துறை ஆணையர் ( Commissioners of Police ) – 37400 – 67000 + 12000.

6] காவல்துறைக் கண்காணிப்பாளர், ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட ( SPs, IPS including Asst. Inspector, Jt. SP, Addl. SP ) – 15600 – 39100 + 6600.

7] காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் (ASP), காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP) – 15600 – 39100 + 5400.

8] காவல்துறைக் கண்காணிப்பாளர் (SP) – 15600 – 39100 + 7600.

9] ஆய்வாளர் (Inspector) – 9300 – 34800 + 4900.

10] உதவி ஆய்வாளர் (சப் – இன்ஸ்பெக்டர் – பெண் அதிகாரிகள் உட்பட ) – 9300 – 34800 + 4800.

11] தலைமைக் காவலர் (Head Constable including Women HC ) 5200 – 20200 + 2800.

12] முதல்நிலைக் காவலர் (PC-I) ( Police Constable Gr-I incl. Women PC ) – 5200 – 20200 + 2400.

13] இரண்டாம்நிலைக் காவலர் (PC-II) ( Police Constable Gr-II including women ) – 5200 – 20200 + 1900.

தமிழ்நாடு காவல் துறை பதவி மற்றும் குறியீடுகள் :

dress

உலகின் 10 மிகப்பெரிய போலீஸ் படைகள்:

1. சீனா – 1,600,000 போலீஸ் அதிகாரிகள்.
2. இந்தியா – 1.585.353 போலீஸ் அதிகாரிகள்.
3. அமெரிக்கா: 794.300 போலீஸ் அதிகாரிகள்.
4. ரஷ்யா – 782001 போலீஸ் அதிகாரிகள்.
5. இந்தோனேஷியா: 579.000 போலீஸ் அதிகாரிகள்
6. மெக்ஸிக்கோ: 544.000 போலீஸ் அதிகாரிகள்
7. பிரேசில்: 478.001 போலீஸ் அதிகாரிகள்
8. துருக்கி: 412.624 போலீஸ் அதிகாரிகள்
9. நைஜீரியா: 371.800 போலீஸ் அதிகாரிகள்
10. பாக்கிஸ்தான்: 354.221 போலீஸ் அதிகாரிகள்.

கடலோர பாதுகாப்பு காவல் துறையினர்:

*] [13591 மீன் பிடிக்கும் கிராமங்கள் அடங்கிய கடலோர மாவட்டங்கள் ].

*] 6 மண்டல அலுவலகங்கள் (சென்னை / நாகை / வேதாரண்யம் / புதுக்கோட்டை / ராமநாதபுரம் / தூத்துக்குடி).

கடலோர பாதுகாப்பு காவல் குழு உபயோகிக்கும் வாகனங்கள்:

- 12 படகுகள் (12 டன்) – 12 படகுகள் (5 டன்).
– 8 திடமான ஊதப்பட்ட படகுகள் – 6 ஜெமினி படகுகள்.
– 12 அனைத்து நிலப்பரப்பு ஜீப்புகள், 12 அனைத்து நிலப்பரப்பு இருசக்கர வாகனங்கள்.
– 20 படகுகள், 30 நான்கு சக்கர வாகனங்கள், 60 இரு சக்கர வாகனங்கள்.

தமிழ்நாடு காவல் துறையில் மோப்ப நாய்கள்:

*] குற்றம் கண்டு பிடிப்பதில் – 80 மோப்ப நாய்கள்.
*] வெடித்துச் சிதறும் கண்டறிதலில் – 107 மோப்ப நாய்கள்.
*] போதைப் பொருள் பற்றி கண்டறிய – 4 மோப்ப நாய்கள் உள்ளன.

*] மலைக்குன்றுகள் உள்ள இடத்தில் பணி புரிய 4 (சென்னை / மதுரை / கோயம்புத்தூர் / திருச்சி) 38 குதிரைகள் பயன்படுத்தப்படுகின்றன.

*] மாநில போக்குவரத்துகளை திட்டமிட்டு சரிசெய்ய – 122 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் ( ஜிபிஎஸ் மூலம் ) உள்ளன.

தமிழ்நாடு பற்றிய விவரங்கள்:

வருவாய் நிர்வாகம் (2010-11):
1. வருவாய் மாவட்டங்கள் – 32.
2. வருவாய் கோட்டங்கள் – 76.
3. தாலுகா – 220.
4. உள்வட்டங்கள் – 1,127.
5. வருவாய் கிராமங்கள் – 16564.
6. கடலோர மாவட்டங்கள் – (2007-08) – 13.

உள்ளாட்சி அமைப்புகள் (2010-11):

1. மாநகராட்சிகள் – 12.
2. நகராட்சிகள் – 150.
3. ஊராட்சி ஒன்றியங்கள் – 385.
4. டவுன் பஞ்சாயத்துகள் – 559.
5. மாவட்டம் – 32.
6. கிராம ஊராட்சிகள் (RD ஊராட்சிகள் கொள்கை விளக்கக் குறிப்பு படி 2011-12) – 12524.
7. குக்கிராமங்கள் – 48452 (தமிழ்நாடு மின்சார வாரியம் அறிக்கை படி).

சட்டமன்றம் :

*] சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் – 234 + 1 (நியமனம் -ஆங்கிலோ – இந்திய உறுப்பினர் ).

பாராளுமன்ற (மக்களவை உறுப்பினர் – 39 ).
(மாநிலங்களவை உறுப்பினர் – 18).

சாலைகள் நீளம் :

*] தேசிய நெடுஞ்சாலைகள் – 4861.000 கி.மீ தொலைவு.

*] மாநில நெடுஞ்சாலைகள் – 56814.200 கி.மீ தொலைவு.

*] கார்ப்பரேஷன் மற்றும் நகராட்சி சாலைகள் – 18704.471 கி.மீ தொலைவு.

*] பஞ்சாயத்து யூனியன் மற்றும் கிராம ஊராட்சி சாலைகள்- 173153.436 கி.மீ தொலைவு.

*] டவுன் பஞ்சாயத்து சாலைகள் – 19151.753 கி.மீ தொலைவு.

*] மற்றவை (Forest Road) – 3342.423 கி.மீ தொலைவு.

*] கடலோர வரி – 1,076 கிலோ நீளம்.

*] ரயில்வேஸ்: பாதை நீளம் – 3880,90 கி.மீ தொலைவு. 

திங்கள், 20 ஜனவரி, 2020

இந்தியாவின் முதல் செயற்கைக்கோள்... எப்படி வந்தது?.. என்ன நடந்தது?...



இந்தியாவின் முதல் செயற்கைக்கோள்... எப்படி வந்தது?.. என்ன நடந்தது?...

ஆரியபட்டா செயற்கைக்கோள்..!!
🚀ஆரியபட்டா என்பது இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆகும். இந்தியாவில், வானவியலில் சிறந்து விளங்கிய ஆரியபட்டரின் நினைவாக முதல் செயற்கைக்கோளுக்கு இவருடைய பெயர் சூட்டப்பட்டது.

🚀முற்றிலும் இந்தியாவிலேயே தயாரித்து, சோவியத் யூனியனின் உதவியுடன், 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி ஆரியபட்டா செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இதுவே, இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆகும்.

🚀இதன் எடை 360கிகி ஆகும். சோவியத் ரஷ்யாவின் ராக்கெட் மூலம், கபூஸ்டின் யார்(முயிரளவin லுயச) ஏவுதளத்தில் இருந்து கொஸ்மொஸ்-3எம் என்ற ஏவுகலன் மூலம் செலுத்தப்பட்டது.


🚀ஆரியபட்டா பூமியில் இருந்து சுமார் 619 கி.மீ உயரத்தில் பறந்து வந்தது. எனினும், விண்வெளியில் இது 5 நாட்கள் மட்டுமே செயல்பட்டது. செயற்கைக்கோளுக்கு மின்சாரத்தை தயாரித்து அனுப்பும் பகுதி பழுதானதால், இந்த செயற்கைக்கோள் தொடர்ந்து செயல்படாமல் போனது.

🚀ஆரியபட்டா செயற்கைக்கோள், இந்திய வானிலை சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, விண்ணில் ஏவப்பட்டது. இதற்காக, பெங்கள+ருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் மாற்றம் செய்யப்பட்டு, தரை கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டது.

🚀ஆரியபட்டாவின் வெற்றியை நினைவுகூறும் விதமாக, அப்போதைய சோவியத் யூனியன் அரசு சிறப்பு தபால் தலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


செயற்கைக்கோளின் சிறப்பு :

🚀ஏப்ரல் 19, 1975ல், செயற்கைக்கோளின் 96.46 நிமிட சுற்றுப்பாதையில் 619 கிலோமீட்டர் (385 மைல்) சேய்மைநிலையிலும், 563 கிலோமீட்டர் (350 மைல்) அண்மைநிலையிலும், 50.7° சாய்வில் இருந்தது.

🚀இது எக்ஸ்ரே வானியல், வானியல் மற்றும் சூரிய இயற்பியலில் சோதனைகளை மேற்கொள்ள கட்டப்பட்டது. விண்கலம் 26 பக்க பாலிஹெட்ரான் 1.4 மீட்டர் (4.6 அடி) விட்டம் கொண்டது.

🚀அனைத்து முகங்களும் (மேல் மற்றும் கீழ் தவிர) சூரிய மின்கலங்களால் மூடப்பட்டிருந்தன.

🚀விண்கலம் மெயின்பிரேம் 1981ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை செயலில் இருந்தது. சுற்றுப்பாதை சிதைவு காரணமாக செயற்கைக்கோள் 11 பிப்ரவரி 1992ல் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து விழுந்தது.


🚀செயற்கைக்கோளின் படம் 1976 மற்றும் 1997க்கு இடையில் இந்திய இரண்டு ரூபாய் நோட்டில் தலைகீழாக தோன்றியது.


ஞாயிறு, 19 ஜனவரி, 2020

ஆரியபட்டா பற்றிய தகவல்கள்


காலத்தை வென்ற சாதனை... π... பிரம்மிக்க வைக்கும் கணிதமேதை..!!
 ஆரியபட்டா பற்றிய  தகவல்கள்  :

🌟கணிதத்தில் இவரே முதன் முதலில் கோள திரிகோணமிதியை (ளுphநசiஉயட வுசபைழழெஅநவசல) அறிமுகப்படுத்தினார். இந்த கணித உட்பிரிவு இன்றளவும் பலருக்கு சவாலாகவே இருக்கிறது. இதற்கு காரணம் கோள திரிகோணமிதி என்ற கணித பிரிவின் அடிப்படையில் நாம் சாதாரணமாக காணும் ஜியோமிதி கருத்துக்கள் உண்மையாகாது.

🌟உதாரணமாக, தள திரிகோணமிதியில் முக்கோணத்தில் அமைந்த மூன்று கோணங்களின் கூடுதல் மதிப்பு 180 டிகிரியாக அமையும் என்பதை பலர் அறிவர்.

🌟ஆனால் ஆரியபட்டா அறிமுகப்படுத்திய கோள திரிகோணமிதியில் முக்கோணத்தில் அமைந்த மூன்று கோணங்களின் கூடுதல் மதிப்பு 180 டிகிரிக்கு அதிகமாக இருக்கும். அதேபோல் கோள திரிகோணமிதியில் இணைக்கோடுகள் இரு புள்ளிகளில் (பொதுவாக வட துருவத்திலும், தென் துருவத்திலும்) சந்திக்கும்.

🌟மேலும் பித்தாகரஸ் தேற்றம் முற்றிலும் மாறுபடும். இவ்வாறு கோள திரிகோணமிதி, தள திரிகோணமிதியை (Pடயநெ வுசபைழழெஅநவசல) பொருத்தமட்டில் மொத்தமாக மாறுபட்ட சிந்தனையில் அமையும்.


π :

🌟கணிதம் மற்றும் வானவியலில் 'π" எனப்படும் வித்தியாசமான எண் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு வட்டத்தின் சுற்றுவட்ட அளவை, அதன் குறுக்களவால் வகுத்தால் கிடைக்கக்கூடிய எண் தான் 'π" எனப்படுகிறது.

🌟நாம் இப்பொழுது ஆரியபட்டீயா நூலில் இரண்டாம் பாகத்தில் ஆரியபட்டா ஏற்படுத்திய ஒரு குறிப்பை கருதி கொள்வோம்.

🌟'100 என்ற எண்ணுடன் நான்கை கூட்டுங்கள். அந்த தொகையை 8 ஆல் பெருக்குங்கள். அதனுடன் 62,000-ஐ கூட்டுங்கள். இந்த தொகையை 20,000 ஆல் வகுக்க வேண்டும். அப்போது கிடைக்கும் விடை 3.1416 என்பதுதான் அந்த வித்தியாசமான எண்" என்று ஆரியபட்டா கூறி இருக்கிறார்.

🌟கடந்த 1761-ம் ஆண்டில் ஐரோப்பாவில் லாம்பெர்ட் என்பவர், இந்த 'π" என்ற எண்ணின் அளவு 3.1416 என்பதை ஆராய்ச்சியின் மூலம் நிரூபித்தார். ஆனால் அதற்கு 1,300 ஆண்டுகளுக்கு முன்பே நமது ஆரியபட்டா, இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தி சாதனை படைத்து இருக்கிறார்.

🌟'π" என்ற இந்த எண்ணின் மூலம், பூமியின் சுற்றளவு 24,835 மைல் என்று ஆரியபட்டா கண்டறிந்து கூறி இருக்கிறார். இந்த அளவு, தற்போதைய நவீன கண்டுபிடிப்பில் இருந்து 70 மைல் மட்டுமே வித்தியாசப்படுகிறது என்பது வியப்பளிக்கிறது அல்லவா?

🌟இப்படிப்பட்ட ஆரியபட்டாவின் திறமைகளை இந்தியர்கள் முழுமையாக தெரிந்துகொள்வதற்கு முன், வெளிநாட்டினர் அவரது சாதனைகளைக் கண்டு வியந்து போற்றி இருக்கிறார்கள். ஆரியபட்டாவின் நூல் 13-வது நூற்றாண்டில் லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டதை தொடர்ந்து பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

🌟இவற்றில் குறிப்பிடத்தக்கது, அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர் வால்ட்டர் யுகென் கிளார்க் என்பவர் 1930-ம் ஆண்டில் வெளியிட்ட நூல் ஆகும். இதில் ஆரியபட்டாவின் 108 செய்யுள்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆரியபட்டாவின் புகழ் உலகின் பல பகுதிகளிலும் பரவியது.


போலியோ சொட்டு மருந்து ஏன் கட்டாயம் அளிக்க வேண்டும்..?


   
போலியோ சொட்டு மருந்து ஏன் கட்டாயம் அளிக்க வேண்டும்..?

போலியோ இல்லாத இந்தியா என இன்று  பெருமையுடன் சொல்லிக் கொள்கிறோம் என்றால் அதற்கு போலியோ சொட்டு மருந்துகளே காரணம்.

ஆனாலும் இன்றும் நைஜீரியா, பாக்கிஸ்தான் , ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் போலியோ தாக்கம் இருக்கிறது என்றாலும் அதற்கு முறையான மருத்துவ பாதுகாப்புகள் அளிக்கப்படாததே காரணம் என்றே சொல்லலாம்.

இப்படி முறையான மருத்துவ பாதுகாப்பை உறுதி செய்து போலியோ இல்லாத பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது என்றால் அது பெரும் சாதனையே.

இதற்காக அரசாங்கமும் பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியது என்றால் மிகையல்ல.

 இருப்பினும் சிலர் சொட்டு மருந்து ஏன் அவசியம் என்பதை தெரியாமலேயே சொட்டு மருந்து அளிக்கின்றனர். சிலர் கொடுக்காமலும் விடுகின்றனர்.

சொட்டு மருந்து ஏன்? என்று தெரியாமல் போடும் பெற்றோர்களை விட போடாமலேயே தவிர்க்கின்றவர்களுக்காகவே இந்த விளக்கம்.

போலியோ வைரஸ் என்பது நம் உடலின் தொண்டை, குடல் பகுதியில் தங்கியிருக்கும் மிகவும் மோசமான கிருமி.

 இது மலம் கழித்தலின் மூலமாகவோ அல்லது சளி, வாந்தி, எச்சில் மூலமாக காற்றில் பரவி மற்றவர்களுக்கு தொற்று நோயை உண்டாக்கும்.

 அவர்களுக்கு பக்கவாதம், நிரந்தரமாக உடல் உறுப்புகள் செயலிழத்தல் ஏன்..சிலருக்கு மரணம் கூட ஏற்படக் கூடும்.

இந்த போலியோ வைரஸை முற்றிலும் அழிக்க முடியாது என்றாலும், அதைக் செயலிழக்கச் செய்து கட்டுப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும் கண்டுபிடிக்கப்பட்டதே இந்த போலியோ தடுப்பு சொட்டு மருந்து.

இதை சரியாக எடுத்துக் கொள்வதன் மூலம் போலியோ பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.

எனவேதான் அரசாங்கமே முன் வந்து ஒவ்வொரு வருடமும் முகாம்கள் அமைத்து இலவசமாக போலியோ சொட்டு மருந்தை அளிக்கிறது. இது ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது.


 எனவே நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க மறவாதீர்கள்.

சனி, 18 ஜனவரி, 2020

உலகம் 2019... கடந்து வந்த பாதை... உங்கள் பார்வைக்கு..!



உலகம் 2019... கடந்து வந்த பாதை... உங்கள் பார்வைக்கு..!

2019-ஆம் ஆண்டு : உலகம் ஒரு பார்வை - பகுதி 4
நவம்பர்
👉குருநானக்கின் 550-வது பிறந்தநாளையொட்டி சிறப்பு நாணயம் ஒன்றை மோடி தாய்லாந்தில் வெளியிட்டார்.

👉லாட்டரியில் சுமார் ரூ. 29 கோடி பரிசு பெற்ற இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீனு ஸ்ரீதரன் நாயரை, அபுதாபி பிக் டிக்கட் லாட்டரி நிறுவனம் தேடிய சம்பவம் நிகழ்ந்தது.

👉அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஓராண்டு கவுண்ட் டவுன் தொடங்கியது.

👉சீனாவில் கின்னஸ் உலக சாதனைக்காக தயாரிக்கப்பட்டுள்ள தங்கக் கழிப்பறை ஒன்று, ஒரு வர்த்தக விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது. இதில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வைர கற்கள் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் அதன் மதிப்பு 12 லட்சம் அமெரிக்க டாலர்களாக இருக்கலாம் என கணிக்கப்பட்டது.

👉சுவிட்சர்லாந்து வங்கிகளில் செயல்பாடற்ற நிலையில் இருக்கும் 10 இந்தியர்களின் வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்திற்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்தது.

👉ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்ஸா விண்கல்லுக்கு அனுப்பிய ஹயபுஸா 2, தனது ஆராய்ச்சியை முடித்துக்கொண்டு பூமிக்கு 2020 ஆம் ஆண்டு திரும்பி வருவதாக அறிவித்தது.

👉நடப்பு ஆண்டில் மட்டும் ஃபேஸ்புக் நிறுவனம் சுமார் 50 லட்சத்து 40 ஆயிரம் போலி கணக்குகளை நீக்கியதாக தெரிவித்தது.

👉பாகிஸ்தானைச் சேர்ந்த இந்துப் பெண் ஒருவர் சிந்து மாகாணம் நடத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வில் வெற்றி பெற்று துணை உதவி ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

👉இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

👉அமெரிக்காவில் முதன்முறையாக ஆழ்மயக்க நிலையில் அதாவது மூளையின் செயல்பாட்டை நிறுத்தி வைத்து சிகிச்சை அளிக்கும் முறையை மனிதர்கள் மீது பரிசோதிக்கப்பட்டது.

👉இயற்கைச் சீற்றத்தின் தாக்குதலுக்கு அடிக்கடி ஆளாகும் ஜப்பானில் பூகம்பம், நிலநடுக்கம் போன்ற நேரங்களில் தலையில் அடிபட்டு மக்கள் உயிரிழக்க நேரிடுகிறது. இதைத் தவிர்ப்பதற்காக வெள்ளை நிறம் கொண்ட எளிதில் மடிக்கக்கூடிய தலைக்கவசம் ஜப்பான் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

👉சொந்த நாட்டை விட்டு வெளிநாடு சென்று வாழும் மக்கள் கணக்கெடுப்பு ஆய்வில் இந்தியர்களே முதலிடம் பிடித்துள்ளனர்.

டிசம்பர்
👉34 வயதான சன்னா மரின் தற்போது பின்லாந்தின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். உலகின் வயது குறைந்த பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

👉16 வயதான சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க்கை இந்த ஆண்டின் சிறந்த நபராக அமெரிக்காவின் டைம் இதழ் தேர்வு செய்தது.

👉செவ்வாய் கிரகத்தில் தரையில் ஒரு அங்குலத்திற்கு கீழ் நீர்ப்பனிக்கட்டிகள் இருப்பதை நாசா கண்டுபிடித்தது.

👉பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்-க்கு அந்நாட்டின் சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

👉மெக்சிகோவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மாயன் சமுதாய மக்களின் அரண்மனையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

👉நெதர்லாந்தின் யுஆளுவுநுசுனுயுஆ நகரில் உள்ள நதிகளில் தேங்கியிருக்கும் கழிவுகளை சுத்தம் செய்ய பபுல் பேரியர் (டீரடிடிடந டீயசசநைச) என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கால்வாய்களில் தேங்கியிருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை‌ எளிதில் அகற்றமுடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

👉அமெரிக்காவின் டெக்சாஸ் நகர மேயராக 7 மாத குழந்தை ‌பதவியேற்ற சுவாரஸ்யம் நிகழ்ந்தது.


வெள்ளி, 17 ஜனவரி, 2020

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் - 2020ம் ஆண்டிற்கான கால அட்டவணை வெளியீடு


டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் - 2020ம் ஆண்டிற்கான கால அட்டவணை வெளியீடு

தமிழக அரசு பணிகளில் கிளார்க் முதல் சப்-கலெக்டர் வரையிலான காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படுகின்றன.

குரூப்-1, குரூப்-2, குரூப்-4 தேர்வுகளுக்கான கால அட்டவணையை ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் டிஎன்பிஎஸ்சி வெளியிடும். அதன்படி 2020ம் ஆண்டிற்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஜனவரி:

ஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ் குரூப் 1, வேளாண்மை அதிகாரி (விரிவாக்கம்) தமிழக வேளாண்மை விரிவாக்க மையம், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மற்றும் அதிகாரி, தோட்டகலை உதவி அதிகாரி, தோட்டகலை மற்றும் தோட்ட பயிர் துறை

பிப்ரவரி:

ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் சர்வீஸ்(அலுவலக பணி)

மார்ச்:

ஒருங்கிணந்த நூலகம் மற்றும் தகவல் சேவை, மீன்வளத்துறை உதவி இயக்குனர் மற்றும் மீன்வள ஆய்வாளர், கல்லூரி கல்வி நிதி பிரிவு அதிகாரி

ஏப்ரல்:

ஒருங்கிணைந்த புவியியல் சர்வீஸ், ஒருங்கிணைந்த இன் ஜினியரிங் சர்வீஸ், ஒருங்கிணைந்த புள்ளியல் சர்வீஸ், உதவி இயக்குனர் கூட்டுறவுதுறை(தணிக்கை பிரிவு)

மே:

ஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ் குரூப்-2, 2ஏ.

ஜூலை:

செயல் அலுவலர் கிரேடு 1 குரூப் 7 ஏ சர்வீஸ்(அறநிலையத்துறை), செயல் அலுவலர் கிரேடு 3 குரூப் 8பி சர்வீஸ்(அறநிலைத்துறை), செயல் அலுவலர் கிரேடு 4 குரூப் 8 சர்வீஸ்(அறநிலைத்துறை), ஒருங்கிணந்த சிவில் சர்வீஸ் தேர்வு குரூப் 3, உதவி இயக்குனர் தொழில் மற்றும் வர்த்தகம் பிரிவு, தொழில்முறை உதவி இயக்குனர்(தோல்)

ஆகஸ்ட்:

உதவி கமிஷனர் தொழிலாளர் நலத்துறை

செப்டம்பர்:

ஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ்(விஏஓ உட்பட) குரூப் 4, அரசு மறுவாழ்வு மற்றும் செயற்கை மூட்டு மைஅய்த்தின் தொழில் ஆலோசகர்

அக்டோபர்:

வன பயிற்சி குரூப் 6

2019ல் நடந்த உலக நிகழ்வுகள்... நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்



2019ல் நடந்த உலக நிகழ்வுகள்... நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்...!

2019ஆம் ஆண்டு : உலகம் ஒரு பார்வை - பகுதி 3
ஆகஸ்ட்
👉சவுதி அரேபியாவில் பெண்கள் ஆண் துணை இல்லாமல் வெளிநாடுகளுக்கு செல்லலாம் என அந்நாடு அரசு அறிவித்தது.

👉கிரீன்லாந்தில் ஒரே நாளில் சுமார் ஆயிரத்து 100 கோடி டன் பனி உருகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

👉பிரான்ஸில் ராணுவ வீரர் ஒருவர், தானே உருவாக்கிய பறக்கும் இயந்திரம் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனைப் படைத்தார்.

👉பாகிஸ்தான் நாட்டு வான்பகுதியில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது.

செப்டம்பர்
👉உலக அளவில் ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார அமைப்பின் (றுர்ழு) புள்ளிவிவரம் தெரிவித்தது.

👉பெரும்பான்மை இல்லாததால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

👉அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதை அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதி செய்தார்.

👉சவுதி அரேபியா முதன் முறையாக சுற்றுலாப் பயணிகளுக்கான விசாக்களை வழங்க முடிவு செய்தது.

அக்டோபர்
👉2019 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜேம்ஸ் பீப்ள்ஸ், மைக்கேல் மேயர், திதியர் க்யூலோஸ் ஆகிய 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.

👉2019 ஆம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு ஜான் பி.கோடேனோவ்ஹ், ஸ்டான்லி விட்டிங்ஹோம், அகிரா யோஷினோ ஆகியோருக்கு இந்த நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டது.

👉2019 ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஆஸ்திரியாவின் பீட்டர் ஹாண்ட்கேவுக்கு அறிவிக்கப்பட்டது.

👉உலகளவில் 220 கோடி பேர் பார்வை குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

👉அமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பிஸோஸ் இரண்டாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

👉ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதியை கொல்ல உதவிய உளவாளிக்கு இந்திய மதிப்பில் 177 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.


வியாழன், 16 ஜனவரி, 2020

2019ஆம் ஆண்டு : உலகம் ஒரு பார்வை - பகுதி 2



நாம் கடந்து வந்த 2019... அப்படி என்ன நடந்தது?... உலகத்தில்...!
2019ஆம் ஆண்டு : உலகம் ஒரு பார்வை - பகுதி 2
மே
👉ஈபிள் டவரிலிருந்து கம்பி வழியே பறந்து சென்று, பாரீஸ் நகரத்தின் அழகை கண்டு ரசிப்பதற்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டது.

👉வாடகைக் கார் நிறுவனமான உபர் கடலுக்குள் செல்லும் நீர்மூழ்கி வாகனத்தை தயாரித்து புதிய சாதனையை படைத்தது.

👉இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவின் முதல் புகைப்படம் இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டது.

👉சிறந்த விமான நிலையங்கள் பட்டியலில் ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் 8 வது இடத்தை பிடித்தது.

👉பாகிஸ்தானைச் சேர்ந்த பாப்கார்ன் வியாபாரி ஒருவர் சொந்தமாக ஒரு விமானத்தை வடிவமைத்து சாதனை படைத்துள்ளார்.

👉உலகிலேயே முதல் முறையாக அமெரிக்காவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக ட்ரோன் மூலம் சிறுநீரகம் கொண்டு செல்லப்பட்டது.

👉சீனாவில் உள்ள 45 பல்கலைக்கழகங்களுக்கு மட்டும் ஆங்கில வழியில் மருத்துவ படிப்புகளை நடத்துவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது.

ஜூன்
👉ஜி-20 மாநாட்டின் போது இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு சந்திப்புக்கு முடிவு எடுக்கப்பட்டது.

👉உலகிலேயே முதன் முதலாக பி.எச்டி பட்டம் பெற்ற பெண்ணின் (எலீனா கார்னாரோ பிஸ்கோபியா) 373ஆவது பிறந்தநாளை கவுரவிக்கும் வகையில் சிறப்பு டூடுள் ஒன்றை வெளியிட்டு அவரை கூகுள் நிறுவனம் பெருமைபடுத்தியது.

👉உலகளாவிய தலைமைப் பதவிக்கான விருதுக்கு, சர்வதேச அளவில் புகழ்பெற்று விளங்கும் கூகுள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பு வகிக்கும் தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை தேர்வு செய்யப்பட்டார்.

ஜூலை
👉சனியின் துணைக் கோளான டைட்டனில் ஆளில்லா விமானத்தை அனுப்பவுள்ளதாக நாசா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

👉மதுபாட்டிலில் மகாத்மா காந்தியின் படத்தை பொறித்ததற்கு, இஸ்ரேல் நிறுவனம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியது.

👉இந்தியர்களுக்கு பயனளிக்கும் வகையிலான கிரீன் கார்டு தொடர்பான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

👉உலக பணக்காரர்கள் பட்டியலில் 2 ஆம் இடத்தில் இருந்த பில் கேட்ஸ் மூன்றாம் இடத்துக்கு பின்தள்ளப்பட்டார்.

👉அமெரிக்காவில் ஆன்லைன் வீடியோ கேம் போட்டியில் 16 வயது சிறுவன் ஒருவன் வெற்றிப் பெற்று 3 மில்லியன் டாலரை பரிசாக பெற்றார்.


புதன், 15 ஜனவரி, 2020

வரலாறு... புகழ்பெற்ற உயிரின ஆய்வாளர்... பிறந்த தினம்..!


வரலாறு... புகழ்பெற்ற உயிரின ஆய்வாளர்... பிறந்த தினம்..!

🌾🌾 மாட்டுப் பொங்கல் 🌾🌾

'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு"
என்ற வள்ளுவரின் கருத்து தமிழரிடத்தில் என்றும் வாழ்ந்திருக்கிறது. எனவே தான் மனிதர்களிடம் மட்டுமில்லை, விலங்குகளுக்கும் அந்நன்றியைக் காட்டியிருக்கிறார்கள் தமிழர்கள். மாடுகள், வயல்கள் மற்றும் பண்ணைகளை வைத்திருப்பவர்கள் இந்நாளை அவைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடுகிறார்கள்.டயேன் ஃபாசி



👉 அமெரிக்க விலங்கியலாளர் டயேன் ஃபாசி 1932ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி கலிபோர்னியாவில் பிறந்தார்.

👉 இவர் நீண்டகாலமாக ஆப்பிரிக்காவில் உள்ள ருவாண்டா நாட்டில் கொரில்லாக்களோடு வாழ்ந்து, கொரில்லாவை பற்றிய நுணுக்கமான குறிப்புகளைத் தொகுத்து வந்தார்.

👉 புகழ்பெற்ற உயிரின ஆய்வாளராகிய லூயி லீக்கி என்பவரால் ஊக்குவிக்கப்பட்டு இவர் கொரில்லாவை பற்றிய ஆய்வுகளை செய்து வந்தார். இவருடைய ஆய்வுகள் ஜேன் குட்டால், சிம்பன்சி பற்றி நடத்திய அரிய ஆய்வைப்போல முதன்மையானது. இவர் 1985ஆம் ஆண்டு மறைந்தார்.ஆனந்தரங்கம் பிள்ளை



இன்று இவரின் நினைவு தினம்..!
நாட்குறிப்பு மூலம் வரலாற்றை பதிவு செய்தவரான ஆனந்தரங்கம் பிள்ளை 1709ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி சென்னை பெரம்பூரில் பிறந்தார்.

இவர் பல தொழில்களை செய்து வந்தார். தினசரி நடக்கும் நாட்டு நிகழ்வுகளைக் குறிப்புகளாக எழுதிவைக்கும் பழக்கம் கொண்டவர். பல மொழிகளில் புலமை கொண்ட இவர் இந்திய மன்னர்கள், பிரெஞ்சுக்காரர்கள் இடையே பாலமாக விளங்கினார்.

ஏறக்குறைய 25 ஆண்டுகாலம் நாட்குறிப்பு எழுதியுள்ளார். 18-ம் நூற்றாண்டின் சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள், பிரெஞ்சுப் படையின் வெற்றி, தோல்விகள், டெல்லி மீதான பாரசீகப் படையெடுப்பு, குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட கடும் தண்டனைகள், கடல் வணிகம், இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளின் விவரம் உட்பட பல நிகழ்வுகளின் முக்கிய வரலாற்றுப் பதிவாக இவரது நாட்குறிப்பு திகழ்கிறது.

இவர் மறைந்து 85 ஆண்டுகளுக்குப் பிறகே இவரது நாட்குறிப்புகள் கிடைத்தன. உலக நாட்குறிப்பு இயக்கத்தின் முன்னோடியாகப் புகழ்பெற்ற ஆங்கில நாட்குறிப்பாளர் சாமுவேல் பெப்பீஸஷுடன் (ளுயஅரநட Pநிலள) ஒப்பிடப்பட்டு, 'இந்தியாவின் பெப்பீஸ்" எனவும், நாட்குறிப்பு வேந்தர் எனவும் போற்றப்பட்ட இவர் 1761ஆம் ஆண்டு மறைந்தார்.முக்கிய நிகழ்வுகள்
✍ 1938ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி இந்திய எழுத்தாளர் சரத்சந்திர சட்டோபாத்யாயா மறைந்தார்.✈ 2003ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி கொலம்பியா விண்வெளி ஓடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது.

செவ்வாய், 14 ஜனவரி, 2020

அட ! வரலாற்றில் இன்று இத்தனை நிகழ்வுகளா? - ஜனவரி 14 !


அட ! வரலாற்றில் இன்று இத்தனை நிகழ்வுகளா? - ஜனவரி 14 !

சிந்திக்க வைக்கும் சிந்தனை துளிகள்!
'எந்த ஒரு செயலையும் ஆர்வம் குறையாமல் நம்பிக்கையுடன் ஆரம்பியுங்கள்.. வெற்றி நம்மை தேடி வரும்.."நரேன் கார்த்திகேயன்



🏁 தமிழக கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் 1977ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி சென்னையில் பிறந்தார்.

🏁 உலக மோட்டர் பந்தயங்களிலேயே முதன்மையானதாக கருதப்படும் எஃப் 1 போட்டிகளில் கலந்து கொள்ளும் முதல் இந்தியர் இவரே ஆவார்.

🏁 இவருக்கு 2010ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது விளையாட்டு பிரிவில் வழங்கப்பட்டது.க.வெள்ளைவாரணனார்


✎ தமிழறிஞர் க.வெள்ளைவாரணனார் 1917ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி தஞ்சை மாவட்டம் குடந்தைக்கு அருகிலுள்ள திருநாகேசுவரத்தில் பிறந்தார்.

✎ இவர் இயற்றமிழோடு, இசைத்தமிழின் நுணுக்கங்களையும் அறிந்த நுண்ணறிவாளராகத் திகழ்ந்தார். இவர் இசைத்தமிழ் என்ற அரிய நூல் ஒன்றைத் தந்துள்ளார்.

✎ இந்நூல் முத்தமிழ்த் திறம், இசை நூல் வரன்முறை, இசையமைதி, இசைத்தமிழ் இலக்கியம், இசைக் கருவிகள், இசைப்பாட்டின் இலக்கணம், இசைத்தமிழ்ப் பயன், தமிழிசை இயக்கம், இசைத்தமிழ் வளர்ச்சிக்கு ஆக்கமாகும் பணிகள் என்ற ஒன்பது இயல்களை கொண்டுள்ளது.

✎ தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் இவருக்கு 1985ஆம் ஆண்டு கலைமாமணி விருதை வழங்கியது.

✎ தமிழ்மாமணி என பாராட்டப்பட்ட க.வெள்ளைவாரணனார் 1988ஆம் ஆண்டு மறைந்தார்.முக்கிய நிகழ்வுகள்
👉 1974ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது. ✍ 1960ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி தமிழக எழுத்தாளர் ஜெ.வீரநாதன் பிறந்தார்.💃 1932ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி இசை நடன சபா சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது.👉 2005ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி சனிக்கோளின், டைட்டான் என்ற நிலாவில் ஐரோப்பாவின் ஹியூஜென்ஸ் விண்கலம் இறங்கியது.

2019 இந்திய விருதுகள் - பகுதி 3 நோபல் பரிசு 2019


2019 கடந்து வந்த பாதை.. நோபல் பரிசு.. தட்டிச் சென்றவர்கள் யார்?
2019 இந்திய விருதுகள் - பகுதி 3
நோபல் பரிசு 2019
🏆எரித்திரியா எல்லைப் பிரச்சனையில் அமைதியான முறையில் தீர்வு கண்டதற்காக, அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா நாட்டின் பிரதமர் அபய் அகமது அலிக்கு வழங்கப்பட்டது.

🏆2019ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு எழுத்தாளர் பீட்டர் ஹண்ட்கேவுக்கு வழங்கப்பட்டது.

🏆லித்தியம்-அயன் பேட்டரியை மேம்படுத்தியதற்காக அமெரிக்க விஞ்ஞானி ஜான் கூட்எனஃப், இங்கிலாந்து விஞ்ஞானி ஸ்டான்லி விட்டிங்ஹாம், ஜப்பான் விஞ்ஞானி அகிரா யோஷினோ ஆகியோருக்கு 2019ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

🏆2019 இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜேம்ஸ் பீபிள்ஸ், மைக்கேல் மேயர், டிடியர் கியூலோஸ் ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

🏆மனித உடல் செல்கள் குறித்த ஆய்விற்காக வில்லியம் ஜி.கேலின், சர் பீட்டர் ரேட் கிளிப், கிரேக் எல்.செம்ன்ஸா ஆகியோருக்கு 2019 மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
சாகித்ய அகாடமி விருது
🏆சசிதரூர் ஆங்கில மொழியில் எழுதிய அன் ஈரா ஆப் டார்க்னெஸ் என்ற நூலிற்கு மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது.

🏆தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளரும், மூத்த படைப்பாளியுமான சோ.தர்மனின் சூழ் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது.
திடைப்படத் துறை
🏆திரைப்படத் துறையில் அளிக்கப்படும் உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருது 2019 ஆண்டு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு வழங்கப்பட்டது.

🏆பிரியா கிருஷ்ணசாமி இயக்கிய பாரம் படத்திற்கு சிறந்த தமிழ் படம் விருது வழங்கப்பட்டது.

🏆கோவாவில் நடைபெற்ற 50வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிக்கு 'கோல்டன் ஐகான்" சிறப்பு விருதை ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் வழங்கினார்.
சரஸ்வதி சம்மான் விருது :
'பக்ககி ஒத்திகிலிதே" என்ற கவிதை நூலுக்காக தெலுங்கு கவிஞர் கே.சிவா ரெட்டிக்கு, சரஸ்வதி சம்மான் விருது குடியரசு துணைத் தலைவர் வெங்கய நாயுடு வழங்கினார்.
பாரத ரத்னா விருது
🏆முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சமூக செயல்பாட்டாளர் நானாஜி தேஷ்முக் மற்றும் அசாம் பாடகர் பூபென் ஹசாரிகா ஆகியோருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.


திங்கள், 13 ஜனவரி, 2020

நியமனங்கள் - ஓர் பார்வை - பகுதி-3!!



2019... கடந்து வந்த பாதை..!!

நியமனங்கள் - ஓர் பார்வை - பகுதி-3!!
செப்டம்பர்
பிரதமர் மோடியின் முதன்மைச் செயலாளராக மிகவும் நம்பிக்கைக்குரிய அதிகாரியான பிரமோத் குமார் மிஸ்ரா செப்டம்பர் 11ஆம் தேதி நியமிக்கப்பட்டார். மேலும், பிரதமர் அலுவலகத்தில் மற்றொரு முக்கியப் பொறுப்பிற்கும் நியமனம் நடந்தது. மூத்த அதிகாரியாகவும், முன்னாள் அமைச்சரவைச் செயலாளராகவும் இருந்த பி.கே. சின்ஹh, பிரதமர் அலுவலகத்திற்கான அலுவல்களுக்கான சிறப்பு அதிகாரியாக (ஓஎஸ்டி) நியமிக்கப்பட்டார்.

இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியா செப்டம்பர் 19ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டார்.

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன துணைத் தலைவரும், மேலாண் இயக்குநருமான என்.சீனிவாசன் திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டு அறங்காவலர் குழு உறுப்பினராக செப்டம்பர் 19ஆம் தேதி மீண்டும் நியமிக்கப்பட்டார்.

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி செப்டம்பர் 22ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.

இந்திய வனத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரி ஏ.வி.வெங்கடாசலம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக செப்டம்பர் 27ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
அக்டோபர்
ஐ.எம்.எஃப் என்று அழைக்கப்படும் பன்னாட்டு நிதியத்தின் இந்திய செயல் இயக்குநர் பதவியில் பொருளாதார நிபுணர் சுர்ஜித் பல்லா அக்டோபர் 1ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.

உகாண்டா கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக ஜோனதன் மெக்கின்ஸ்ட்ரி அக்டோபர் 1ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டார்.

கிரீஸ் நாட்டிற்கான இந்தியாவின் புதிய தூதராக அம்ரித் லுகுன் அக்டோபர் 4ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டார்.

ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இந்திரஜித் மஹந்தி அக்டோபர் 6ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.

மத்திய சட்டத்துறை செயலராக (சட்ட விவகாரங்கள்) அனுப்குமார் மேந்திரத்தா அக்டோபர் 15ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.

தேசிய மருத்துவ ஆணையத்தின் உறுப்பினராக, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர்.சுதா சேஷய்யன் அக்டோபர் 16ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார்.

அக்டோபர் 16ஆம் தேதி கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக, சென்னை அண்ணா பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத்துறை பேராசிரியர் பி.காளிராஜை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார்.

புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறையில் முதன்மை கல்வி அலுவலராக மீனாட்சிசுந்தரம் அக்டோபர் 17ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.

தேசிய பாதுகாப்புப் படையான என்.எஸ்.ஜியின் தலைமை இயக்குநராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி அனுப் குமார்சிங் அக்டோபர் 19ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அக்டோபர் 23ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டார்.

அக்டோபர் 23ஆம் தேதி துனிசியாவின் புதிய அதிபராக காயிஸ் சயீது பொறுப்பேற்றுக் கொண்டார்.

பெல்ஜியம் நாட்டின் முதல் தற்காலிகப் பெண் பிரதமராக சோபி வில்லியம்ஸ் அக்டோபர் 28ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார்.

அக்டோபர் 30ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த போப்டே நியமனம் செய்யப்பட்டார்.

மும்பை காவல்துறை முன்னாள் ஆணையரும், மகாராஷ்டிர காவல்துறையின் முன்னாள் இயக்குநருமான தத்தாத்ரேய பட்சல்கிகர், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக அக்டோபர் 31ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.

ஞாயிறு, 12 ஜனவரி, 2020

நியமனங்கள் - ஓர் பார்வை !! (பகுதி-2)



2019... கடந்து வந்த பாதை..!!

நியமனங்கள் - ஓர் பார்வை !! (பகுதி-2)
ஜூன்
திருப்பதி தேவஸ்தான தலைவராக சுப்பாரெட்டி நியமிக்கப்பட்டுள்ளதாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஜூன் 23ஆம் தேதி அறிவித்தார்.

தமிழக காவல்துறையின் டிஜிபியாக ஜே.கே.திரிபாதி ஜூன் 29ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டார்.

தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக கே.சண்முகமும், சட்ட ஒழுங்கு டிஜிபியாக திரிபாதியும் ஜூன் 30ஆம் தேதி பதவியேற்று கொண்டனர்.
ஜூலை
தமிழக அரசில் சுமார் 9 ஆண்டுகள் நிதித்துறை செயலாளராக இருந்த சண்முகம் ஐஏஎஸ், தமிழக அரசின் தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து புதிய நிதித்துறை செயலாளராக எஸ்.கிருஷ்ணன் ஐஏஎஸ் நியமனம் செய்து ஜூலை 01ஆம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது.

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலினை நியமித்து ஜூலை 4ஆம் தேதி திமுக தலைமை அறிவிப்பை வெளியிட்டது.

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டை நியமித்து ஜூலை 9ஆம் தேதி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உத்தரவிட்டது.

ஜூலை 20ஆம் தேதி : பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர்.

மத்திய பிரதேச மாநில ஆளுநராக லால்ஜி டண்டன் நியமிக்கப்பட்டார்.

பீகார் மாநில ஆளுநராக பாகு சௌகான் (Phagu Chauhan) நியமிக்கப்பட்டார்.

உத்தரப்பிரதேச மாநில ஆளுநராக அனந்திபென் பட்டேல் நியமிக்கப்பட்டார்.

மேற்கு வங்க மாநிலத்தின் புதிய ஆளுநராக ஜக்தீப் தன்கர் (Jagdeep Dhankhar) நியமிக்கப்பட்டார்.

நாகலாந்து மாநில ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார்.

திரிபுரா மாநில ஆளுநராக ரமேஷ் பயாஸ் நியமிக்கப்பட்டார்.

மத்திய நிதித்துறை செயலாளராக ராஜீவ்குமார் ஜூலை 30ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
ஆகஸ்ட்
மத்திய அரசின் பாதுகாப்புத்துறை செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அஜய்குமாரை அமைச்சரவையின் நியமனக்குழு ஆகஸ்ட் 22ஆம் தேதி நியமித்தது.

பே.டி.எம் நிறுவனத்தின் புதிய தலைவராக அமித் நய்யார் ஆகஸ்ட் 27ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
செப்டம்பர் 01
இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் ஆளுநராக இருந்த பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கல்ராஜ் மிஸ்ரா அங்கிருந்து மாற்றப்பட்டு ராஜஸ்தான் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக பகத் சிங் கோஷ்யாரி நியமிக்கப்பட்டார்.

இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் ஆளுநராக முன்னாள் தொழிலாளர்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா நியமிக்கப்பட்டார்.

கேரள மாநிலத்தின் ஆளுநராக இருந்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான சதாசிவம் மாற்றப்பட்டு ஆரிஃப் முகமது கான் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

தமிழக பாஜகவின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற நியமனங்களை நாளைய பகுதியில் பார்க்கலாம்.


019 - இந்திய விருதுகள் ஓர் பார்வை..! - பகுதி-1



2019.. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி.. விருதுகளை அள்ளிச் சென்றவர்கள்..!!

2019 - இந்திய விருதுகள் ஓர் பார்வை..! - பகுதி-1
கல்வி, விண்வெளி, இராணுவம், விளையாட்டு... மேலும் இதுபோன்று ஒவ்வொரு துறையிலும் சாதிப்பவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படுகின்றன.

கடந்த 2019ஆம் வருடத்தில் எந்தெந்த துறைகளில் எவரெல்லாம் சாதனை படைத்தார்கள்? என்பதைப் பற்றி தெளிவாக காண்போம்..!

நேபாள நிலநடுக்கத்தில் சிக்கிய ஸ்பெயின் மக்களை இந்திய மீட்பு படையினர் காப்பாற்றியதற்காக, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு, உயரிய விருதான கிராண்ட் கிராஸ் விருதை வழங்கி ஸ்பெயின் அரசு கௌரவித்தது.

வன விலங்குகள் மற்றும் தாவரங்களை பாதுகாத்ததற்காக வழங்கப்படும் சர்வதேச விருதான 'உலகளாவிய எதிர்காலத்திற்கான இயற்கை விருது 2019" இந்தியாவின் திவ்யா கர்னாடு (னுiஎலய முயசயென) என்பவருக்கு வழங்கப்பட்டது.

மருத்துவ சேவையில் சிறப்பாக பணியாற்றியதற்காக மதுரை மருத்துவர் அமுதகுமாருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

பல்வேறு நாடுகளின் பெயர்களை கூறும் 2 வயது சிறுமி காவ்யஸ்ரீக்கு, மெடல்ஸ் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பு, உலக சாதனை விருது வழங்கி கௌரவித்தது.

கனடாவின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தால் வழங்கப்படும், வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, கனட திரைப்படத் தயாரிப்பாளர் தீபா மேத்தா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குஜராத்தில் அமைந்துள்ள, சர்தார் படேல் சிலையை வடிவமைத்த ராம் வான்ஜி சுதார் உட்பட மூவருக்கு கலாச்சார ஒருமைப்பாட்டுக்கான தாகூர் விருது வழங்கப்பட்டது.

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகில் 20 மீட்டர் தொலைவில் இருந்து 3 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்திய மேஜர் துசார் கவுபாவுக்கு கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டது.

ஆசியாவின் நோபல் விருது என்று கருதப்படும் மகசேசே விருதை இந்திய ஊடகவியலாளர் ரவீஷ் குமாருக்கு வழங்கப்பட்டது.

சுற்றுச்சூழல் மேம்பாடு, சுகாதாரம் மற்றும் மின்சார வசதிகளின் அடிப்படையில் வழங்கப்படும் 'இந்தியாவின் பசுமைக் கட்டிட விருதானது" (ஐனெயைn புசநநn டீரடைனiபெ யுறயசன) விஜயவாடா ரயில் நிலையத்திற்கு வழங்கப்பட்டது.

விமான சேவை மற்றும் விமான தரத்தின் அடிப்படையில் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள பிஜு பட்நாயக் விமான நிலையத்திற்கு 2018ஆம் ஆண்டிற்கான சிறந்த விமான நிலையம் என்ற விருது வழங்கப்பட்டது.

தன் வீட்டிற்குள் நுழைய முயன்ற பயங்கரவாதியை அடித்து விரட்டிய, ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த, 16 வயது சிறுவன் இர்பான் ரம்ஜான் ஷேக்குக்கு, சவுர்யா சக்ரா விருது வழங்கப்பட்டது.
ஸ்வச் சர்வேக்ஷன் விருது 2019
தூய்மையான நகரங்கள் பட்டியலில், மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம் தொடர்ந்து 3-வது ஆண்டாக முதலிடம் பெற்றுள்ளது. 2-வது இடத்தை சத்தீஸ்கர் மாநிலத்தின் அம்பிகாபூர் நகரமும், 3-ம் இடத்தை கர்நாடகத்தின் மைசூரும் பெற்றுள்ளது.

சிறிய நகரங்களில் தூய்மையான நகரத்திற்கான விருது தில்லி நகராட்சி நிர்வாகத்திற்கும், பெரு நகரங்களில் தூய்மையான நகரத்திற்கான விருது குஜராத்தின் அகமதாபாத்திற்கும், போபால் நகரத்திற்கு சிறந்த தூய்மையான தலைநகரம் என்ற பிரிவில் விருது வழங்கப்பட்டது.

சிறந்த கங்கை நகரத்திற்கான விருது உத்தரகாண்ட் மாநிலத்தின் கௌசார் நகரத்திற்கு வழங்கப்பட்டது.

சனி, 11 ஜனவரி, 2020

இந்தியாவில் நீங்கள் இதுவரை கேள்விப்படாத வரலாற்று சிறப்புமிக்க இடங்கள்


இந்தியாவில் நீங்கள் இதுவரை கேள்விப்படாத வரலாற்று சிறப்புமிக்க இடங்கள்!!


பல அழகிய வரலாற்று தளங்கள் கொண்ட நாடு தான் நம் நாடு. இந்த வரலாற்று தளங்களை நாம் காண, காணப்படும் முக்கிய காரணங்களுள் ஒன்றாக வரலாற்றை தவிர்த்து இயற்கை அழகும் அமைய, இதனால் சுற்றுலா பயணிகளுக்கான புகழ்பெற்ற இடமாக இது அமைகிறது. நம் நாட்டின் அனைத்து வரலாற்று இடங்களும் தனக்கான தனித்துவமிக்க கதைகளை தாங்கிக்கொண்டு விளங்க, அவற்றுள் பலவும் இங்கே நாம் வருவதன் மூலம் உண்மை என நம் மனதிற்கு புரியவைப்பதோடு, வாழ்க்கையை மாற்ற கூடியதாகவும் அமைகிறது.


வரலாற்று இடங்கள் மற்றும் அழகிய நினைவு சின்னங்கள் நம் நாடு முழுவதும் எவ்வித பற்றாக்குறையுமின்றி பரந்து விரிந்து காணப்பட, அவை எவ்வித பயண ஆர்வலர்களுக்கும் மனதில் இன்பத்தை விதைத்திடுகிறது. நினைவு சின்னங்களான தாஜ் மஹால், குதுப் மினார், ராஜஸ்தான் கோட்டை என அதோடு இணைந்து பொற்கோவில் பற்றியும் நாம் தெரிந்துக்கொள்ள, எண்ணற்ற பல இடங்கள் குறைவான தகவலை தாங்கிய வண்ணமும் இருக்கிறது. அப்பேற்ப்பட்ட குறைவாக பார்க்கப்படும் இலக்குகள் ஒவ்வொரு கோணத்திலும், உங்களை ஈர்த்திடவும் செய்கிறது.


டலட்டல் கார்:
சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வரும் எஞ்சியவைகளுள் ஒன்றாக இது இருக்க, தாய் அஹோம் கட்டிடக்கலையையும் கொண்டு பதினேழாம் நூற்றாண்டின் ஸ்வர்கதியோ ருத்ர சிங்கா என்பவரால் கட்டப்பட்டது தான் இந்த டலட்டல் கார் எனப்பட, இவர் தான் மிகவும் சக்திவாய்ந்த அஹோம் அரசராக ஆட்சி புரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜோர்ஹாத்திலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் நகரம் தான் ராங்க்பூர் எனப்பட; இந்த அமைப்பானது முதலில் இராணுவ அடித்தளத்திற்காக கட்டப்பட்டதால் அஹோம் அரசாட்சியின் ஆதாரமாக உயர்ந்து காணப்படுகிறது.

PC: Manojsahuctp


ஓசியன்:
பல ஆலயங்களையும், கோட்டைகளையும் மற்றும் அரண்மனையையும் ராஜஸ்தான் மாநிலத்தில் கொண்டிருக்க, ராஜஸ்தானின் வரலாற்று பிரியர்களுக்கான இடமாக காணப்படுகிறது. இருப்பினும், ஓசியனுக்கு மாறாக, பாலைவனமாக அல்லாமல் சோலைவனமாக நமக்கு புத்துணர்ச்சியை தருகிறது. இந்த சிறு கிராமமானது தார் பாலைவனத்தை சுற்றி கட்டப்பட்டிருக்க, கம்பீரமாக மணல் குன்றாக, ஜோத்பூரின் நினைவு சின்னமாக விளங்கும் இவ்விடத்தை தவிர்க்காமல் நாம் காண வேண்டியது அவசியமாகிறது.

இந்த குக்கிராமமானது ஒன்றல்லாமல் இரு ஆலயங்களுக்கு வீடாக விளங்க, ஆனால் 16 அழகிய புத்த வடிவமைப்பையும், ஜெய்ன் ஆலயத்தையும் கொண்டிருக்க 8 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் இது கட்டப்பட்டதெனவும் தெரியவருகிறது.

இதனை கடந்து, மிகவும் புகழ்மிக்க ஒன்றாக சாச்சியா மாத்தா ஆலயம், சூரிய ஆலயம் மற்றும் மஹாவீரா ஜெய்ன் ஆலயம் காணப்பட, இவை அலங்கரிக்கப்பட்ட தூண்களுடன், சிற்பம் நிறைந்த சுவற்றையும் கொண்டிருக்க, அது கஜுராஹோவை ஒத்த அழகுடனும் காணப்படுகிறது.

PC: Schwiki



ஷேத்தி ஹல்லி தேவாலயம்:
அதீத வரலாற்று மற்றும் வரலாற்று இடங்களை கொண்டிருக்கும் மாநிலமாக கர்நாடகா விளங்குகிறது. அரண்மனைகள் மற்றும் ஆலயங்கள் மத்தியில் 200 வருட பழமையான கோதிக் அமைப்பானது காணப்பட, ஹேமாவதி நதிக்கரையில் இது காணப்பட, இவ்விடமானது மெதுவாக சுற்றுலா ஆர்வலர்களை ஈர்க்க தொடங்க, ஆர்வமிக்க பயண ஆர்வலர்களை ஆனந்தத்திலும் இவ்விடம் தள்ளுகிறது.

இங்கே நதியில் மூழ்கி காணப்படும் அணையானது பருவ மழைக்காலத்தில் தான் ஒரு நினைவு சின்னமென நினைவுப்படுத்த ஆசைக்கொள்ள, தேவாலயமும் கோடைக்காலத்தில் நீரானது பின் வாங்கும்போது காட்சியளித்து கண்களுக்கு விருந்து படைத்திடுகிறது.

1800 ஆம் ஆண்டுக்கு பின் மதபிரசாரகர்களால் கட்டமைக்கப்பட்ட இவ்விடம், தாக்கத்தை ஏற்படுத்தும் இடமென்பதால் நம் மனதானது கண்டிப்பாக காண ஆசைப்படக்கூடும். இந்த அமைப்பை நீரானது விழுங்க, சேதமடைந்து காட்சியளிக்கும் இந்த நினைவு சின்னம், ஒரு சிலவற்றை இழந்தும் காணப்பட; ஆகையால், இங்கே நாம் விரைவில் பயணிப்பது நல்லதாகும்.



செல்லுலார் சிறை:
1857 மற்றும் 1943க்கு இடைப்பட்ட காலத்தில், எண்ணற்ற அரசியல் கைதிகளையும், இந்திய சுதந்திர போராட்ட புரட்சியாளர்களை ஆங்கிலேயர்களுக்கு எதிராக நம் மனதில் நினைவுப்படுத்த, போர்ட் ப்ளைரின் செல்லுலார் சிறையின் தனித்த சிறைகளுக்கு புகலிடமாக இது காணப்படுகிறது.


இதனை ‘களப்பணி' எனவும் அழைக்க, இந்த அமைப்பானதை சுதந்திரத்திற்கு பிறகு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுவிட, இந்திய காலனித்துவ கடந்த காலத்தின் நினைவிடமாக இது விளங்குகிறது. ஓர் அழகிய ஒளியும், ஒலியுமென கைதிகளின் த்ரில்லான வாழ்க்கை அனுபவத்தை இங்கே வருபவர்களுக்கு உரைத்திட, சிறைவாசம் கொண்டவர்களின் வாழ்வானது நம் மனதை நெகிழவைத்திடுகிறது.


விக்ரம்ஷீலா பல்கலைக்கழகம்:
இவ்விடம் பற்றிய எந்த வித விழிப்புணர்வற்று பலரும் இங்கே வந்து செல்ல, கடந்த கால பல அற்புதமான கல்வி மையத்தை இவ்விடம் கொண்டிருக்க, இந்தியாவில் காணப்படும் மையங்களுள் இதுவும் ஒன்றாக அமைய, பாகல்பூரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இந்த பல்கலைக்கழகம் காணப்படுகிறது.

மிகப்பெரிய புத்த போதனை மையங்களுள் ஒன்றாக இந்த பல்கலைக்கழகம் விளங்க, பரந்து விரிந்த நிலப்பரப்பில் காணப்படுகிறது. இவ்விடமானது 52 அறைகளை தாழ்வாரத்தின் இருப்பக்கங்களிலும் கொண்டு பரந்து விரிந்து காணப்பட, மாபெரும் ஸ்தூபாவை மையத்தில் கொண்டிருக்கிறது. விலைமதிப்பற்ற நூலகமானது இந்த தளத்தில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட, அவை மேலும் இந்தியாவின் அதீத அகன்று விரிந்த வரலாற்றை தெரிந்துக்கொள்ள உதவுகிறது.


அமர்கண்டாக்:
காட்டின் மத்தியில் உயர்ந்து காணப்படும் இவ்விடம், விந்தியா மற்றும் சத்புரா தொடர்ச்சிகள் சங்கமிக்கும் இடத்தின் அருகாமையில் அமைந்திருக்க, இந்த ஆலயமானது பல்வேறு விதமான வடிவ கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்க, 11 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்டது எனவும் தெரியவருகிறது.

இதனை தவிர்த்து, இந்த புவியியல் அமைப்பானது புதிரான அழகு முதல் கனவு ஆலயங்கள் மற்றும் சிற்பங்கள் வரை கொண்டிருக்க, அவற்றுள் ஸ்ரீ யந்திரா மஹா மேரு ஆலயமும் அடங்க, இதன் காட்சியானது நான்கு முகம் கொண்டு, திரிப்புர சுந்தரி தேவியையும் கொண்டு அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.




கிராமசபைக் கூட்டம் - கேள்வி பதில்கள்

கிராமசபைக் கூட்டம் - கேள்வி பதில்கள்

1. எந்தெந்த தேதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் ?

• 1. ஜனவரி 26 (குடியரசு தினம்)

• 2. மே 1 (உழைப்பாளர் தினம்)

• 3. ஆகஸ்டு 15 (சுதந்திர தினம்)

• 4. அக்டோபர் 02 (காந்தி ஜெயந்தி)

2. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில் கிராம சபை கூட்டம் நடைபெறுமா?

• ஆம். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில்தான் கிராம சபை கூட்டம் நடைபெறும்.

3. கிராம சபை கூட்டம் எந்த இடத்தில் நடக்கும்?

• உங்கள் கிராம பஞ்சாயத்திற்கு உட்படப் பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறும்.

• பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, வேறு ஒரு பொது இடத்திலோ கிராம சபை கூட்டம் நடைபெறும்.

4. கிராம சபையில் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?

• கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் கிராம சபையில் கலந்துகொள்ளலாம். ஆண்கள், பெண்கள், முதியவர்கள், பட்டியல் பிரிவினர் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.

5. கிராம சபையின் தலைவர் யார்?

• கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவர்.

• தலைவர் இல்லாதபோது துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார்.

• துணைத் தலைவரும் இல்லாதபோது வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் கிராம சபையின் தலைவராக செயல்படலாம்.

• இவர்கள் யாரும் இல்லாத போது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருப்பார்.

6. கிராம சபையில் குறைந்தபட்சம் எத்தனைப் பேர் கலந்துகொள்ள வேண்டும்?

• உங்கள் கிராம பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 பேர் என்றால், குறைந்தபட்சம் 50 பேர் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் கிராம சபை ஏற்றுக்கொட்டப்படும்.

• அதேபோல, உங்கள் கிராமத்தின் மக்கள் தொகை 501 முதல் 3000 வரை என்றால் 100 பேர் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும்.

• 3001 முதல் 10,000 பேர் கொண்ட கிராமத்தில் 200 பேரும் , 10,000 க்கு மேல் மக்கள் தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை.

• [அரசாணை நிலை எண் 130 ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை நாள் 25.09.2006 ]

7. தேவையான குறைவெண் வரம்பு இல்லாதபோது கிராம சபையின் நிலை என்ன?

• அரசாணையில் குறிப்பிட்டுள்ள குறைவெண் வரம்பு இல்லாதபோது கிராம சபை கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.

8. கிராம சபை தீர்மானம் எங்கெல்லாம் செல்லுபடி ஆகும்?

• சட்ட மன்ற நாடாளுமன்ற தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் கிராம சபை தீர்மானத்திற்கு உண்டு.

• இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட தீர்மானங்களை கொண்ட எந்த ஒரு கிராம சபை தீர்மானமும் எந்த ஒரு நீதிமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

• அரசு அலுவலகங்களிலும் உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

9. எந்தெந்த விசயங்களுக்காகக் கிராம சபையில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றலாம்?

• உங்கள் கிராமத்திற்கு சம்மந்தப்பட்ட எந்த ஒரு விசயத்திற்கும், தேவைக்கும் கிராம சபை தீர்மானம் நிறைவேற்றலாம்.

• பக்கத்துக்குக் கிராமத்தின் பிரச்சனையைத் தீர்க்கவோ அல்லது மாநில அளவில் சில கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என்றோ உங்கள் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றுவது பயனளிக்காது.

• உதாரணமாக, உங்கள் கிராமத்தில் இருக்கும் மதுக்கடையை மூடத் தீர்மானம் கொண்டுவரலாம்.

• ஆனால், தமிழகத்தில் மதுவிலக்கு வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றுவது பயனளிக்காது.

• மேலும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதாக உங்கள் கிராம சபை தீர்மானம் இருக்க வேண்டும்.

• அதாவது மதச்சார்பின்மை, சமூக நல்லிணக்கம், தனி நபர் உரிமை போன்ற விசயங்களை மீறுவதாக உங்கள் கிராம சபை தீர்மானம் இருக்கக் கூடாது.

10. தீர்மானம் இந்த வடிவில்தான் இருக்க வேண்டும் என வரைவு ஏதும் உள்ளதா?

• இல்லை. இயல்பான வாக்கியங்களைக் கொண்டே கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றலாம்.

• இந்த வடிவில்தான் இருக்கவேண்டும் என எந்த நிபந்தனையும் இல்லை.

11. மக்கள் முன்மொழியும் தீர்மானத்தை பஞ்சாயத்துத் தலைவரோ அதிகாரிகளோ நிராகரிக்க முடியுமா?

• முடியாது.

• கிராம சபை மக்களுக்கான சபை. பஞ்சாயத்துத் தலைவரோ, அதிகாரிகளோ மக்களின் கோரிக்கையை நிராகரிக்க முடியாது.

• கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சரி அல்லது தவறு என முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது.

12. கிராம சபை தீர்மானத்தின் நகலைக் கிராம மக்கள் பெறமுடியுமா? அதற்குக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டுமா?

• கிராம சபை தீர்மானத்தின் நகலைக் கிராம மக்கள் நிச்சயம் பெறமுடியும்.

• அதற்குக் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

13. கிராம சபையில் எத்தனைத் தீர்மானங்கள் நிறைவேற்றலாம்?

• இத்தனை தீர்மானங்கள்தான் நிறைவேற்ற வேண்டும் என்ற வரையறை ஏதும் இல்லை. எண்ணிக்கை வரம்பு இல்லை என்ற காரணத்தால் எண்ணற்ற தீர்மானங்கள் நிறைவேற்றுவதில் பயனில்லை.

• முக்கியமான மற்றும் குறிப்பிட்ட தீர்மானங்களை நிறைவேற்றி அதை நடைமுறைப்படுத்தி பயன்பெற வேண்டும்.

14. கிராம சபை தீர்மானத்தை நடைமுறைப் படுத்த வேண்டிய பொறுப்பு யாருடையது?

• பஞ்சாயத்துத் தலைவர், துணைத்தலைவர் , வார்டு உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அதிகாரிகளே கிராம சபை தீர்மானத்தை நடைமுறைப் படுத்த வேண்டிய பொறுப்புடையவர்கள்.

• கிராம இளைஞர்கள் , தன்னார்வலர்கள் முயற்சி எடுத்து, அரசு அதிகாரிகளுக்கு மற்றும் தலைவர் உட்படப் பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு நினைவூட்டல் அனுப்பி கிராம சபை தீர்மானத்தை விரைவாக நடைமுறைப்படுத்தலாம்.

15. கிராம சபை தீர்மானம் எத்தனை நாட்களுக்குச் செல்லுபடி ஆகும் ?

• கிராம சபை தீர்மானம் காலாவதியே ஆகாது. ஒருமுறை சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, சூழலின் தன்மை கருதி விவாதித்து [மறுபரிசீலனை செய்தோ, மாற்றம் செய்தோ அல்லது மறுத்தோ] வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் முந்தைய தீர்மானம் செயல் இழக்கக் கூடும்

16. சிறப்பு கிராம சபை என்றால் என்ன?

• தமிழகத்தில் நான்கு நாட்கள் கிராம சபை கூட்டம் கட்டாயம் நடைபெறும்.

• 1. ஜனவரி 26 (குடியரசு தினம்)

• 2. மே 1 (உழைப்பாளர் தினம்)

• 3. ஆகஸ்டு 15 (சுதந்திர தினம்)

• 4. அக்டோபர் 02 (காந்தி ஜெயந்தி)

•  இந்தக் கிராம சபைகளையும் தாண்டி கூடுதலாகக் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என மக்கள் நினைத்தால் கிராம சபை கூட்டத்தை நடத்தலாம்.

• அவ்வாறு கூட்டப்படும் கிராம சபை, சிறப்பு கிராம சபை என்று அழைக்கப்படும்.

17. சிறப்பு கிராம சபையைக் கூட்ட பஞ்சாயத்துத் தலைவர் முன்வராவிட்டால் என்ன செய்வது?

• சிறப்பு கிராம சபை கூட்டத்தை கூட்டப் பஞ்சாயத்து தலைவர் மறுத்தால், மக்கள் தங்களுக்குள் ஒரு தலைவரை நியமித்துக் கொண்டு [சிறப்பு கிராம சபைக்கு மட்டும் அவர் தலைவராக இருப்பர்] சிறப்பு கிராம சபையைக் கூட்ட மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கலாம்.

18. கிராம சபை தீர்மானத்தை விரைவாக நடைமுறைப்படுத்த என்ன செய்ய வேண்டும்?

• கிராம இளைஞர்கள் , தன்னார்வலர்கள் முயற்சி எடுத்து, அரசு அதிகாரிகளுக்கு மற்றும் தலைவர் உட்படப் பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு நினைவூட்டல் அனுப்பித் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் கிராம சபை தீர்மானத்தை விரைவாக நடைமுறைப்படுத்தலாம்.

19. முன்னுதாரண கிராம சபையில் காணப்படும் முக்கிய விசயங்கள் என்னென்ன?

• * மக்கள் சொல்வதை தலைவர் மற்றும் அதிகாரிகள் கவனமாக கேட்பது

• * மக்களின் சந்தேகங்களுக்கு முறையாகப் பதில் அளிப்பது

• * மகளிர் மற்றும் பட்டியல் பிரிவினருக்கு உரிய அங்கீகாரம் வழங்குதல்

• * பஞ்சாயத்தின் வரவு செலவு கணக்கை மக்கள் முன் வாசித்துக் காட்டுதல்

• * கிராம வளர்ச்சிக்காக விவாதிப்பது

20. கிராம சபையில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டுமா? அதிகாரிகள் வந்தால் நாற்காலியில் அமரலாமா?

• அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். முதலமைச்சரே வந்தாலும் கிராம சபையில் தரையில்தான் அமரவேண்டும்.

21. பக்கத்து ஊர் கிராம சபையில் நான் கலந்து கொள்ளலாமா?

• கலந்துகொள்ளலாம்.

• ஆனால், உங்களின் வாக்கு எந்தப் பஞ்சாயத்தில் உள்ளதோ அந்தக் கிராம பஞ்சாயத்தின் கிராம சபைக்கு மட்டுமே நீங்கள் உறுப்பினர்.

• மற்றோரு கிராமத்தின் கிராம சபையில் நீங்கள் பார்வையாளராக இருக்கலாம்.

22. இவர் கிராம சபையில் கலந்துகொள்ள கூடாது என யாரையாவது ஒதுக்கி வைக்க முடியுமா?

• முடியாது. உங்கள் கிராம பஞ்சாயத்தின் வாக்காளர் அனைவரும் உங்கள் கிராம சபையின் உறுப்பினர் ஆவார்கள்.

• எனவே, அவர்கள் அனைவரும் கிராமசபையில் கலந்துகொள்ள உரிமை படைத்தவர்கள்

உள்ளாட்சி அமைப்புகள்:

அடிப்படை கேள்விகள்

1. ஏன் இதை புதிய பஞ்சாயத்து என அழைக்கிறோம்?

• 1993 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பஞ்சாயத்துச் சட்டம், இதற்கு முன்பு இருந்த பஞ்சாயத்து சட்டத்தில் இல்லாத பல புதிய சரத்துக்களை கொண்டிருந்தது.

• அதில் குறிப்பாக; மாநில நிதி ஆணையம், மாநில தேர்தல் ஆணையம், கிராம சபை, மகளிர் மற்றும் பட்டியல் பிரிவினருக்கு இடஒதுக்கீடு போன்ற முக்கிய சரத்துக்களை கொண்டு இருந்தன.

• எனவே இப்புதிய பஞ்சாயத்துச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பஞ்சாயத்து அமைப்புகள் என்பதால் இவற்றை புதிய பஞ்சாயத்து அமைப்புகள் என அழைக்கிறோம்.

2. பஞ்சாயத்து நிர்வாகம் எத்தனை அடுக்குகளைக் கொண்டது?

• மூன்று அடுக்குகளைக் கொண்டது. 1. கிராம பஞ்சாயத்து, 2. பஞ்சாயத்து ஒன்றியம், 3. மாவட்ட பஞ்சாயத்து

3. தமிழகத்தில் மொத்தம் எத்தனைக் கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன?

• தமிழகத்தில் மொத்தம் 12,524 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன

4. நகர உள்ளாட்சி அமைப்புகள் என்னென்ன?

• பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆகியவை நகர உள்ளாட்சி அமைப்புகள் ஆகும்

5. ஒரு கிராம பஞ்சாயத்து எத்தனை உட்கிராமங்களை கொண்டிருக்கும்?

• இது ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திற்கும் மாறுபடும். ஒரே ஒரு உட்கிராமம் உள்ள பஞ்சாயத்தும் உள்ளது , பல உட்கிராமங்கள் உள்ள கிராம பஞ்சாயத்தும் தமிழகத்தில் உள்ளது.

• சராசரியாக ஏழு முதல் எட்டு உட்கிராமங்களை கொண்டிருக்கும் ஒரு கிராம பஞ்சாயத்து.

நன்றி : சட்ட பஞ்சாயத்து இயக்கம்

2019... கடந்து வந்த பாதை..!! நியமனங்கள் - ஓர் பார்வை !!



2019... கடந்து வந்த பாதை..!!

நியமனங்கள் - ஓர் பார்வை !!
2019-ம் வருடமானது பலவகையான மாற்றங்களை கொடுத்தது... அவற்றில் ஒன்று பணி நியமனங்கள்...

ஒவ்வொரு வருடமும் பலதரப்பட்ட துறைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கான பணி நியமனங்களை மாற்றி கொண்டுதான் இருக்கின்றனர்.

அதன்படி 2019ம் வருடத்தில் பல்வேறு துறைகளில், பல்வேறு பணிகளுக்கான நியமனங்கள் இடம்பெற்றன. இதில் சட்டத்துறை, நீதித்துறை, கல்வித்துறை, இராணுவம், முப்படைகள், கட்சிகள், புலனாய்வுத்துறை என பல்வேறு துறைகளிலும் பணி நியமனங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் புதிய நியமனங்கள், இடமாற்றங்கள் மற்றும் பணி நீடிப்பு ஆகியவைகளும் அடங்கும். அவற்றில் சில...
ஜனவரி
காங்கிரஸ் கட்சியில் மகளிர் அணியான மகிளா காங்கிரஸின் தேசியப் பொதுச் செயலாளராக அப்சரா ரெட்டி ஜனவரி 8ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
பிப்ரவரி
மத்தியப் புலனாய்வுத் துறை (Central Bureau of Investigation) இயக்குநராக ரிஷி குமார் சுக்லா பிப்ரவரி மாதம் 02ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார்.

மத்திய நேரடி வரிகள் ஆணையத்தின் தலைவரான சுசில் சந்திரா, தேர்தல் ஆணையராக பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
மார்ச்
இந்திய கடற்படையின் புதிய தளபதியாக கரம்பிர் சிங் (Karambir singh) மார்ச் மாதம் 23ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
ஏப்ரல்
தமிழக தேர்தல் பிரிவு டிஜிபியாக அசுதோஷ் சுக்லாவை நியமித்து தேர்தல் ஆணையம் ஏப்ரல் 11ஆம் தேதி உத்தரவிட்டது.
மே
குஜராத்தின் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் (ஜிஎன்எல்யு%2B) புதிய இயக்குநராக தமிழரான முனைவர் எஸ்.சாந்தகுமார் நியமிக்கப்பட்டார்.



வியாழன், 9 ஜனவரி, 2020

காலம் கடந்து நிற்கும் வானொலி... அன்றும்.. இன்றும்.. என்றென்றும்.. யார் அவர்? வானொலியின் தந்தை..!!



காலம் கடந்து நிற்கும் வானொலி... அன்றும்.. இன்றும்.. என்றென்றும்.. யார் அவர்?
வானொலியின் தந்தை..!!
📻இவ்வுலகில் பலதரப்பட்ட விஞ்ஞானிகள், அறிவியலாளர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் இருந்தாலும் வெகுசிலரே ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் சாதனங்கள் மற்றும் கருவிகளை கண்டுபிடிக்கின்றனர்.

📻மனிதனின் வாழ்வில் மிக முக்கிய திருப்பமாக அமைந்தது இவரது கண்டுபிடிப்பு...!!

📻தொலைக்காட்சி, இணையம் என்று பல தொடர்பு சாதனங்கள் வந்தாலும், இன்றும் பலரது வாழ்க்கையில் இவரின் கண்டுபிடிப்பிற்கென்று ஒரு தனி இடம் உண்டு.

📻இவரது விடாமுயற்சியால்தான் அதுவரை நிசப்தமாக இருந்த வானம் அதன்பிறகு குரல் மூலமும், இசை மூலமும் பேசத் தொடங்கியது.

📻இவரது கண்டுபிடிப்பு வெறும் பொழுதுபோக்கு சாதனமாக மட்டுமின்றி தகவல் களஞ்சியமாகவும் செயல்பட்டு வருகிறது.

📻என்ன சாதனம் அது? அதை கண்டுபிடித்தவர் யார்? என கண்டுபிடித்துவிட்டீர்களா?....

📻 ஆம்... நீங்கள் நினைத்தது சரிதான்...

📻வானொலியையும், கம்பியில்லாத தந்தி முறையையும் உலகிற்கு தந்த 'வானொலியின் தந்தை" என போற்றப்படும் மார்க்கோனி தான் அவர்...

👇👇



📻தொலைக்காட்சியின் வருகைக்கு முன்பு ரேடியோதான் செய்தி அறிந்துகொள்ளவும், பொழுதுபோக்கு சாதனமாகவும் இருந்தது.

📻நமது தாத்தா, பாட்டி காலங்களில் ஏன்? இப்போதும் கூட பலரின் உற்ற தோழனாக வானொலிதான் இருக்கிறது.

📻வானொலியைக் கேட்டுக்கொண்டே உறக்கத்தைத் தழுவுவோர் பலர்.

📻வானொலியைக் கேட்டுக்கொண்டே கண் விழிப்போரும் பலர்.

📻இருபத்தி நான்கு மணி நேரமும் எந்த வினாடியும் அந்த விசையை முடுக்கிவிட்டால் போதும் வான் அலைகளில் தவழ்ந்து வரும் இசை உங்கள் செவிகளில் வந்து மோதும்.

📻இப்போது இணையம், கைத்தொலைபேசி ஆகியவற்றின் மூலமும் கேட்க முடியும் என்றாலும், காற்றலைகளில் தவழ்ந்து வரும் வானொலியின் ஒலிப்பரப்பை உங்களின் செவிகளுக்கு கொண்டு வந்து சேர்க்க உதவும் முக்கியமான கருவி வானொலிதான்.

📻வானொலியை உலகிற்கு தந்து அதன் மூலம் நூற்றுக்கணக்கான வானொலி நிலையங்களின் ஒலிப்பரப்பை வான் அலைகளில் உலா வரச்செய்த மார்க்கோனி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை இனிவரும் பகுதிகளில் விரிவாக பார்க்கலாம்...!!
இதுபோல் இன்னும் 100-க்கும் மேற்பட்ட அரசியல், அறிவியல், சினிமா, விளையாட்டு என பல்வேறு துறைகளில் சாதித்தவர்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?...

2019-ல் நாம் இழந்தவை (பகுதி-2)..!


2019-ல் நாம் இழந்தவை (பகுதி-2)..!

ஆகஸ்ட்

முன்னாள் மத்திய-மந்திரி சுஷ்மா சுவராஜ் (வயத 67) உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.

நோபல் பரிசு பெற்ற முதல் அமெரிக்க கறுப்பின எழுத்தாளர் டோனி மாரீசன்(வயது 88) நியுயார்க்கில் உடல் நலக்குறைவால் காலமானார்.

பீகார் மாநில முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா (வயது 82) இன்று உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார்.

மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பாபுலால் கவுர் காலமானார்.

முன்னாள் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார். அவருக்கு வயது 66.

இந்தியாவின் முதல் பெண் டிஜிபி எனும் சிறப்புக்குரியவரான காஞ்சன் சௌதரி பட்டாச்சார்யா உடல்நலக்குறைவால் மும்பையில் காலமானார்.
செப்டம்பர்

ஜிம்பாப்வே நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ராபர்ட் முகாபே உடல் நல குறைவால் காலமானார்.

பிரபல மூத்த வழக்குரைஞரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான ராம் ஜெத்மலானி (வயது 95) தில்லியில் காலமானார்.
அக்டோபர்

புகழ்பெற்ற சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் (வயது 69) உடல்நலக்குறைவால் கர்நாடக மாநிலம் மங்களுhருவில் காலமானார்.

விண்வெளியில் முதன்முதலில் நடந்து சாதனை படைத்த முன்னாள் சோவியத் யு%2Bனியன் விண்வெளி வீரர் அலெக்ஸி லியோநோவ் (Alexei Leonov) காலமானார்.

கோவை கணபதி பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த நானம்மாள், சுமார் 90 ஆண்டுகளாக யோகா பயிற்சியில் ஈடுபட்ட இவர் தனது 99-ம் வயதில் காலமானார்.
நவம்பர்

மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான கைலாஷ் ஜோஷி (வயது 90) காலமானார்.

இந்திய கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் சுஷில் குமார் (வயது 79) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ய{ஹிரோ நகசோனே 101வது வயதில் டோக்கியோவில் காலமானார்.
டிசம்பர்

இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பாப் வில்லிஸ் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

புகழ்பெற்ற எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான, கன்னடத்தில் இருந்து எண்ணற்ற நு}ல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ள நஞ்சுண்டன் பெங்களூருவில் காலமானார்.

சாகித்திய அகாடமி விருது பெற்ற முதுபெரும் தமிழ் எழுத்தாளரும் நாவலாசிரியருமான டி. செல்வராஜ் (வயது 82) மதுரையில் காலமானார்.


புதன், 8 ஜனவரி, 2020

தான் கண்டுபிடித்தது... தனக்கே இறுதியில் பிடிக்கவில்லை... ஏன் தெரியுமா?... சொல்கிறார் பெல்...



தான் கண்டுபிடித்தது... தனக்கே இறுதியில் பிடிக்கவில்லை... ஏன் தெரியுமா?... சொல்கிறார் பெல்...
.அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்..!


📞 உலகையே சிறு கிராமமாக சுருக்கிய பெருமை அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்லையே சாரும் என்று கூறினால் அது மிகையல்ல!... ஆனால், தான் கண்டுபிடித்த தொலைபேசியை அவரே வெறுத்ததுதான் ஆச்சர்யமான செய்தி. ஆம்... கிரகாம் பெல்லின் இறுதிக் காலங்களில் கிராமத்து வீட்டில் அவர் சோதனைகளில் ஈடுபட்டபோது தொலைபேசியை தொல்லையாகக் கருதி அதை செயல்படாமல் ஆக்கியதாக ஒரு வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது.

📞 அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் மிகச் சிறந்த மனிதர். தேவைப்பட்டோருக்கு எப்போதுமே மறுக்காமல் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தார். காது கேளாதோர் மற்றும் பேச முடியாதோர் நலனில் அவர் அதிக அக்கறைக் காட்டினார்.

📞 இன்னும் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் பெல், மேபெல் ஹப்பர்ட் என்ற காது கேளாத பெண்ணை விரும்பி திருமணம் செய்து கொண்டார்.

📞 தொலைபேசியின் தந்தை கிரகாம் பெல் இறந்தபோது வட அமெரிக்கா முழுவதும் அவருக்கு வித்தியாசமான முறையில் அஞ்சலி செலுத்தினர்.

இதுபோல் இன்னும் 100-க்கும் மேற்பட்ட அரசியல், அறிவியல், சினிமா, விளையாட்டு என பல்வேறு துறைகளில் சாதித்தவர்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?...


உடனே தலைவர்களின் வரலாறு செயலியை தரவிறக்கம் செய்யுங்கள்..!!
📞 இவரின் இறுதிச் சடங்கின்போது வட அமெரிக்காவில் இருந்த அனைத்து தொலைபேசிகளையும் சில நிமிடங்களுக்கு பயன்படுத்தாமல் தங்கள் மரியாதையைச் செலுத்தினர் அமெரிக்கர்கள்.

📞 தொலைபேசியை நமக்கு தந்ததன் மூலம் உலகை ஒரு குக்கிராமமாக சுருக்கிய பெருமை அலெக்ஸாண்டர் கிரகாம்பெல்லையே சேரும். உலகின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகள் என்று ஒரு பட்டியல் போட்டால் அதில் தொலைபேசிக்கும் நிச்சயம் இடம் உண்டு.

📞 உடல் குறை உள்ளவர்களுக்கு உதவ வேண்டும் என்ற பெல்லின் உயரிய எண்ணமே அந்த மாபெரும் கண்டுபிடிப்பை நிகழ்த்த அவருக்கு உதவியது. உயரிய எண்ணங்கள் நம்மை உயர்த்தும் என்பதும், அந்த உயர்வால் நாம் விரும்பும் வானமும் வசப்படும் என்பதுதான் அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் நம் காதுகளில் சொல்லும் செய்தியாக இருக்கும்.
இவ்வுலகில் பலதரபட்ட விஞ்ஞானிகள், அறிவியலாளர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் இருந்தாலும், வெகுசிலரே ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் சாதனங்கள் மற்றும் கருவிகளை கண்டுபிடிக்கின்றனர்.

அதில் மனிதனின் வாழ்வில் மிக முக்கிய திருப்பமாக அமைந்தது இவரது கண்டுபிடிப்பு...!!


2019-ல் நாம் இழந்தவை..!



2019-ல் நாம் இழந்தவை..!

2019-ம் ஆண்டில் நாம் பல விதமான நிகழ்வுகளை சந்தித்திருப்போம். அதில் இழப்புகள் என்பது அனைவரிடத்திலும் ஏற்பட்டிருக்கும். அத்தகைய இழப்புகளில் முக்கியமானவை குறித்து இங்கு தெரிந்துகொள்வோம்...

ஜனவரி

உலகில் மிகவும் வயதான நபர் என்று அறிவிக்கப்பட்டிருந்த, மசாஸோ நோனாக்கா, ஜப்பான் நாட்டில் தனது 113-வது வயதில் காலமானார்.

டெல்லியில் முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் மரணம் அடைந்தார்.

தமிழின் முன்னணி இதழ்களில், கதை, கட்டுரை, கர்நாடக இசை கச்சேரிகளுக்கான விமர்சனங்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதிய சாருகேசி தனது 80 வயதில் காலமானார்.
பிப்ரவரி

பப்பு பாலிஸ்டர் என்ற செல்லப் பெயர் கொண்ட பிரபல இந்திய தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகரான சையித் பத்ர் உல் ஹசன் கான் பகதூர் (Syed Badr ul Hasan Khan Bahadur) உடல்நலக் குறைவால் காலமானார்.

சோவியத் படைகள் வாபஸ் பெற்ற பின் ஆப்கானிஸ்தான் நாட்டின் முதல் அதிபரான, முஜாதிதி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 93.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆராய்ச்சியாளரான வாலஸ் ஸ்மித் ப்ராக்கர், உடல் நலக் குறைவால் காலமானார்.

உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி மாவட்டத்தில் பிறந்த பிரபல ஹிந்தி எழுத்தாளரும், சிறந்த விமர்சகருமான, நாம்வர் சிங் (வயது 92) காலமானார்.
ஏப்ரல்

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கட்டுப்பாட்டு மையம் (ISAC) முன்னாள் இயக்குனரான எஸ்.கே. சிவகுமார் (வயது 66) கர்நாடகாவில் காலமானார்.
மே

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான், உடல் நலக்குறைவால் நெல்லையில் காலமானர். அவருக்கு வயது 75.

ரஷ்யாவைச் சேர்ந்த உலகின் மிகவும் வயதான மனிதரான 123 வயது அப்பாஸ் இலியிவ் காலமானார்.

பார்முலா ஒன் கார் பந்தய முன்னாள் சாம்பியன் நிக்கி லவுடா (வயது 70) காலமானார்.
ஜூன்

ஐரோப்பாவிலேயே மிக அதிக வயதான மூதாட்டி மரியா கியுசெப்பா ரோபுக்கி (Maria Giuseppa Robucci) தனது 116வது வயதில் காலமானார்.

பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் சதார் (வயது 88) காலமானார்.
ஜூலை

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஷீலா தீட்சித் உடல்நல குறைவால் காலமானார்.

சர்வதேச அணுசக்தி முகமையின் (ஐஏஇஏ) தலைமை இயக்குநர் யுகியா அமனோ (வயது 72) காலமானார்.

சீன முன்னாள் பிரதமர் லீ பெங், தனது 90வது வயதில் மரணமடைந்தார்.

வடக்கு ஆப்பிரிக்காவில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் என்ற பெருமையை பெற்ற துனிசியா அதிபர் பெஜி கெய்ட் 92 வயதில் காலமானார்.


செவ்வாய், 7 ஜனவரி, 2020

2019ஆம் ஆண்டு : விளையாட்டு ஒரு பார்வை - பகுதி 3



⚽2019 விளையாட்டு⛳ உலக சாதனை🏏 சொந்த மண்ணில் தொடர்ச்சியாக வெற்றி🏑
2019ஆம் ஆண்டு : விளையாட்டு ஒரு பார்வை - பகுதி 3
செப்டம்பர்
🏀ஏசியன் ஏஜ் குரூப் சாம்பியன்ஷிப் போட்டியில் நடிகர் மாதவன் மகன் வேதாந்த் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

🏀தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக ரூபா குருநாத் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

🏀ஃபிபாவின் சிறந்த வீரருக்கான விருதை‌ அர்ஜென்டினாவின் கால்பந்து வீரர் லியோனல்‌ மெஸ்ஸி பெற்றார்.

🏀அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

அக்டோபர்
🏀உலக இராணுவ விளையாட்டு போட்டியில் மாற்றுத்திறனாளிகள் ஓட்டப் பந்தயத்தில் தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் தங்கம் வென்றார்.

🏀இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவராகவும் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா செயலாளராகவும் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டனர்.

🏀சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 11 டெஸ்ட் தொடரை வென்ற முதல் அணி என்ற உலக சாதனையை இந்திய கிரிக்கெட் அணி படைத்தது.

🏀விஜய் ஹசாரே போட்டியில் யாசாஸ்வி ஜெயஷ்வால் இரட்டை சதம் அடித்து, மிகவும் குறைந்த வயதில் (17வயது) இரட்டை சதம் கடந்த வீரர் என்ற உலக சாதனையை படைத்தார்.

நவம்பர்
🏀சையது முஸ்டாக் அலி டி-20 கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் கர்நாடக வேகப்பந்து வீச்சாளர் அபிமன்யு மிதுன், ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.

🏀தொடர்ச்சியாக நான்கு டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றியை பெற்ற கேப்டன் என்ற சாதனையை இந்தியா கேப்டன் விராட் கோலி பெற்றார்.

டிசம்பர்
🏀சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதிற்கு ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் எல்லிஸ் பெர்ரி தேர்வு செய்யப்பட்டார்.

🏀ஊக்கமருந்து தொடர்பாக சமர்ப்பிக்கப்படும் அறிக்கையில் முறைகேடு செய்ததால், ஒலிம்பிக் உள்ளிட்ட எந்தவொரு சர்வதேச போட்டியிலும் அடுத்த 4 ஆண்டுகளுக்கு ரஷ்யா பங்கேற்க சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் தடைவிதித்தது.