வியாழன், 2 ஜனவரி, 2020

2019-ஆம் ஆண்டு : உலகம் ஒரு பார்வை - பகுதி-1 !



2019-ஆம் ஆண்டு : உலகம் ஒரு பார்வை - பகுதி-1 !

ஜனவரி
👉 அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் சபாநாயகராக நான்சி பெலோசி தேர்வு செய்யப்பட்டார்.

👉 கோல்டன் குளோப் விருது 2019-க்கான வெற்றியாளர்களை அறிவித்தது.

👉 பன்னாட்டு நிதியத்தின் (ஐஎம்எப்) முதல் பெண் தலைமைப் பொருளாதார நிபுணராக மைசு%2Bரை சேர்ந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டார்.

👉 இயற்கையின் விந்தைகளில் ஒன்றான சு%2Bப்பர் ப்ளட் வுல்ஃப் மூன் ஜனவரி 20 மற்றும் 21-ம் தேதிகளில் நிகழ்ந்தது.

பிப்ரவரி
👉 ஆஸ்திரேலியாவில் சுமத்ரான் என்ற அரிய வகை புலி 3 குட்டிகளை ஈன்றது.

👉 முட்டாள் என திட்டியதால் திருமணம் ஆகி மூன்றே நிமிடத்தில் கணவனை விவகாரத்து செய்த சம்பவம் குவைத்தில் நடந்தது.

👉 ஐக்கிய அரபு எமிரேட்சின் தலைநகர் அபுதாபியில் உள்ள நீதிமன்றங்களில், இந்தி அலுவல் மொழியாக அங்கீகரிக்கப்பட்டது.

👉 அமெரிக்காவில் நடைபெற்ற கிராமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பாப் பாடகி லேடி காகா, பிராண்டி கார்லே ஆகியோர்க்கு மூன்று விருதுகள் வழங்கப்பட்டது.

👉 செவ்வாய் கிரகத்தில் வீசிய புயல் காரணமாக காணாமல் போன ஆப்பர்சு%2Bனிட்டி ரோவர் மொத்தமாக செயலிழந்துவிட்டதாக நாசா விஞ்ஞானிகள் அதிகாரப்பு%2Bர்வமாக அறிவித்தனர்.

👉 உலகப் புகழ்பெற்ற தி கிஸ் புகைப்படத்தில் இடம்பெற்ற ராணுவ வீரர் ஜார்ஜ் மெண்டோன்சா காலமானார்.

👉 அமெரிக்காவில் நடைப்பெற்ற மிஸ் இந்திய அமெரிக்க அழகிப் போட்டியில், நியு%2B ஜெர்சியை சேர்ந்த கிம் குமாரி அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.

👉 வரலாற்றிலேயே முதன்முதலாக ஒரு பெண் தூதுவரை சவுதி அரேபியா நியமனம் செய்தது.

மார்ச்
👉 லண்டனில் உள்ள ஏல நிறுவனம் ஒன்றில் திப்பு சுல்தான் பயன்படுத்தியக் கலைப்பொருட்கள் ரூ.97.32 லட்சத்துக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

👉 இலக்கியத்திற்கு இந்த ஆண்டு இரண்டு நோபல் பரிசுகள் வழங்கப்படும் என அதிகாரப்பு%2Bர்வமாக அறிவிக்கப்பட்டது.

👉 பின்லேடன் மகன் ஹம்ஸா பின்லேடனின் குடியுரிமையை, சவுதி அரேபியா அரசு திரும்பப் பெற்றது.

ஏப்ரல்
👉 உலகிலேயே மிகவும் நீளமான விமானம், கலிபோர்னியாவில் தனது முதல் பயணத்தை மேற்கொண்டது.

மே
👉 ஈபிள் டவரிலிருந்து கம்பி வழியே பறந்து சென்று, பாரீஸ் நகரத்தின் அழகை கண்டு ரசிப்பதற்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டது.

👉 வாடகைக் கார் நிறுவனமான உபர் கடலுக்குள் செல்லும் நீர்மூழ்கி வாகனத்தை தயாரித்து புதிய சாதனையை படைத்தது.

👉 இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவின் முதல் புகைப்படம் இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டது.

👉 சிறந்த விமான நிலையங்கள் பட்டியலில் ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் 8 வது இடத்தை பிடித்தது.

👉 பாகிஸ்தானைச் சேர்ந்த பாப்கார்ன் வியாபாரி ஒருவர் சொந்தமாக ஒரு விமானத்தை வடிவமைத்து சாதனை படைத்துள்ளார்.

👉 உலகிலேயே முதல் முறையாக அமெரிக்காவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக ட்ரோன் மூலம் சிறுநீரகம் கொண்டு செல்லப்பட்டது.

👉 சீனாவில் உள்ள 45 பல்கலைக்கழகங்களுக்கு மட்டும் ஆங்கில வழியில் மருத்துவ படிப்புகளை நடத்துவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக