காலத்தை வென்ற சாதனை... π... பிரம்மிக்க வைக்கும் கணிதமேதை..!!
ஆரியபட்டா பற்றிய தகவல்கள் :
🌟கணிதத்தில் இவரே முதன் முதலில் கோள திரிகோணமிதியை (ளுphநசiஉயட வுசபைழழெஅநவசல) அறிமுகப்படுத்தினார். இந்த கணித உட்பிரிவு இன்றளவும் பலருக்கு சவாலாகவே இருக்கிறது. இதற்கு காரணம் கோள திரிகோணமிதி என்ற கணித பிரிவின் அடிப்படையில் நாம் சாதாரணமாக காணும் ஜியோமிதி கருத்துக்கள் உண்மையாகாது.
🌟உதாரணமாக, தள திரிகோணமிதியில் முக்கோணத்தில் அமைந்த மூன்று கோணங்களின் கூடுதல் மதிப்பு 180 டிகிரியாக அமையும் என்பதை பலர் அறிவர்.
🌟ஆனால் ஆரியபட்டா அறிமுகப்படுத்திய கோள திரிகோணமிதியில் முக்கோணத்தில் அமைந்த மூன்று கோணங்களின் கூடுதல் மதிப்பு 180 டிகிரிக்கு அதிகமாக இருக்கும். அதேபோல் கோள திரிகோணமிதியில் இணைக்கோடுகள் இரு புள்ளிகளில் (பொதுவாக வட துருவத்திலும், தென் துருவத்திலும்) சந்திக்கும்.
🌟மேலும் பித்தாகரஸ் தேற்றம் முற்றிலும் மாறுபடும். இவ்வாறு கோள திரிகோணமிதி, தள திரிகோணமிதியை (Pடயநெ வுசபைழழெஅநவசல) பொருத்தமட்டில் மொத்தமாக மாறுபட்ட சிந்தனையில் அமையும்.

π :
🌟கணிதம் மற்றும் வானவியலில் 'π" எனப்படும் வித்தியாசமான எண் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு வட்டத்தின் சுற்றுவட்ட அளவை, அதன் குறுக்களவால் வகுத்தால் கிடைக்கக்கூடிய எண் தான் 'π" எனப்படுகிறது.
🌟நாம் இப்பொழுது ஆரியபட்டீயா நூலில் இரண்டாம் பாகத்தில் ஆரியபட்டா ஏற்படுத்திய ஒரு குறிப்பை கருதி கொள்வோம்.
🌟'100 என்ற எண்ணுடன் நான்கை கூட்டுங்கள். அந்த தொகையை 8 ஆல் பெருக்குங்கள். அதனுடன் 62,000-ஐ கூட்டுங்கள். இந்த தொகையை 20,000 ஆல் வகுக்க வேண்டும். அப்போது கிடைக்கும் விடை 3.1416 என்பதுதான் அந்த வித்தியாசமான எண்" என்று ஆரியபட்டா கூறி இருக்கிறார்.
🌟கடந்த 1761-ம் ஆண்டில் ஐரோப்பாவில் லாம்பெர்ட் என்பவர், இந்த 'π" என்ற எண்ணின் அளவு 3.1416 என்பதை ஆராய்ச்சியின் மூலம் நிரூபித்தார். ஆனால் அதற்கு 1,300 ஆண்டுகளுக்கு முன்பே நமது ஆரியபட்டா, இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தி சாதனை படைத்து இருக்கிறார்.
🌟'π" என்ற இந்த எண்ணின் மூலம், பூமியின் சுற்றளவு 24,835 மைல் என்று ஆரியபட்டா கண்டறிந்து கூறி இருக்கிறார். இந்த அளவு, தற்போதைய நவீன கண்டுபிடிப்பில் இருந்து 70 மைல் மட்டுமே வித்தியாசப்படுகிறது என்பது வியப்பளிக்கிறது அல்லவா?
🌟இப்படிப்பட்ட ஆரியபட்டாவின் திறமைகளை இந்தியர்கள் முழுமையாக தெரிந்துகொள்வதற்கு முன், வெளிநாட்டினர் அவரது சாதனைகளைக் கண்டு வியந்து போற்றி இருக்கிறார்கள். ஆரியபட்டாவின் நூல் 13-வது நூற்றாண்டில் லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டதை தொடர்ந்து பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
🌟இவற்றில் குறிப்பிடத்தக்கது, அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர் வால்ட்டர் யுகென் கிளார்க் என்பவர் 1930-ம் ஆண்டில் வெளியிட்ட நூல் ஆகும். இதில் ஆரியபட்டாவின் 108 செய்யுள்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆரியபட்டாவின் புகழ் உலகின் பல பகுதிகளிலும் பரவியது.
அருமையான பதிவு
பதிலளிநீக்குhttps://tamilmoozi.blogspot.com/2020/04/blog-post_80.html?m=1