2019... கடந்து வந்த பாதை..!!
நியமனங்கள் - ஓர் பார்வை - பகுதி-3!!
செப்டம்பர்
பிரதமர் மோடியின் முதன்மைச் செயலாளராக மிகவும் நம்பிக்கைக்குரிய அதிகாரியான பிரமோத் குமார் மிஸ்ரா செப்டம்பர் 11ஆம் தேதி நியமிக்கப்பட்டார். மேலும், பிரதமர் அலுவலகத்தில் மற்றொரு முக்கியப் பொறுப்பிற்கும் நியமனம் நடந்தது. மூத்த அதிகாரியாகவும், முன்னாள் அமைச்சரவைச் செயலாளராகவும் இருந்த பி.கே. சின்ஹh, பிரதமர் அலுவலகத்திற்கான அலுவல்களுக்கான சிறப்பு அதிகாரியாக (ஓஎஸ்டி) நியமிக்கப்பட்டார்.
இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியா செப்டம்பர் 19ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டார்.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன துணைத் தலைவரும், மேலாண் இயக்குநருமான என்.சீனிவாசன் திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டு அறங்காவலர் குழு உறுப்பினராக செப்டம்பர் 19ஆம் தேதி மீண்டும் நியமிக்கப்பட்டார்.
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி செப்டம்பர் 22ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
இந்திய வனத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரி ஏ.வி.வெங்கடாசலம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக செப்டம்பர் 27ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
அக்டோபர்
ஐ.எம்.எஃப் என்று அழைக்கப்படும் பன்னாட்டு நிதியத்தின் இந்திய செயல் இயக்குநர் பதவியில் பொருளாதார நிபுணர் சுர்ஜித் பல்லா அக்டோபர் 1ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
உகாண்டா கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக ஜோனதன் மெக்கின்ஸ்ட்ரி அக்டோபர் 1ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டார்.
கிரீஸ் நாட்டிற்கான இந்தியாவின் புதிய தூதராக அம்ரித் லுகுன் அக்டோபர் 4ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டார்.
ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இந்திரஜித் மஹந்தி அக்டோபர் 6ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.
மத்திய சட்டத்துறை செயலராக (சட்ட விவகாரங்கள்) அனுப்குமார் மேந்திரத்தா அக்டோபர் 15ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
தேசிய மருத்துவ ஆணையத்தின் உறுப்பினராக, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர்.சுதா சேஷய்யன் அக்டோபர் 16ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார்.
அக்டோபர் 16ஆம் தேதி கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக, சென்னை அண்ணா பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத்துறை பேராசிரியர் பி.காளிராஜை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார்.
புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறையில் முதன்மை கல்வி அலுவலராக மீனாட்சிசுந்தரம் அக்டோபர் 17ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
தேசிய பாதுகாப்புப் படையான என்.எஸ்.ஜியின் தலைமை இயக்குநராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி அனுப் குமார்சிங் அக்டோபர் 19ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அக்டோபர் 23ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டார்.
அக்டோபர் 23ஆம் தேதி துனிசியாவின் புதிய அதிபராக காயிஸ் சயீது பொறுப்பேற்றுக் கொண்டார்.
பெல்ஜியம் நாட்டின் முதல் தற்காலிகப் பெண் பிரதமராக சோபி வில்லியம்ஸ் அக்டோபர் 28ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார்.
அக்டோபர் 30ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த போப்டே நியமனம் செய்யப்பட்டார்.
மும்பை காவல்துறை முன்னாள் ஆணையரும், மகாராஷ்டிர காவல்துறையின் முன்னாள் இயக்குநருமான தத்தாத்ரேய பட்சல்கிகர், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக அக்டோபர் 31ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக