கடந்து வந்த பாதை... 2019... இந்தியாவின் சாதனைகள்.. நினைவுகூறுவோம்..!!
2019ஆம் ஆண்டு : இந்தியா ஒரு பார்வை - பகுதி 1
ஜனவரி
👉வேலையில்லாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூடுதலாக உதவித்தொகை வழங்கப்படும் என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்தார்.
👉முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
பிப்ரவரி
👉பிரதமர் மோடிக்கு, தென் கொரியா அரசு சியோல் அமைதி விருதை வழங்கி கௌரவித்தது.
மார்ச்
👉விளையாட்டாக ஆன்லைன் தேர்வு எழுதிய பொறியியல் மாணவனின் திறமையை அறிந்த கூகுள் நிறுவனம் அவருக்கு ரூ.1.2 கோடி சம்பளத்துடன் பணி வழங்கியது.
👉விண்ணில் செயற்கைக்கோளை சுட்டுவீழ்த்தும் மிஷன் சக்தி என்ற சோதனை முயற்சியை வெற்றிகரமாக செய்து, விண்வெளியில் இந்தியா சாதனை படைத்தது.
👉ஃபோர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி 13வது இடத்திற்கு முன்னேறினார்.
ஏப்ரல்
👉ரஷ்ய நாட்டின் மிக உயர்ந்த விருதான புனித ஆண்ட்ரூ விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவிக்கப்பட்டது.
👉ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தராக நஜ்மா அக்தர் நியமிக்கப்பட்டார்.
👉இந்தியாவிற்கு 24 எம்.எச்-60 ரக ரோமியோ சீஹாக் ஹெலிகாப்டர்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்தது.
👉இந்தியாவின் எமிசாட் செயற்கைக்கோள், ஒரே ராக்கெட் மூலம் மூன்று வௌ;வேறு புவி சுற்றுவட்டப் பாதைகளில் நிலைநிறுத்தி சாதனை படைத்தது.
👉ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி45 என்ற ராக்கெட்டை இஸ்ரோ ஏவியது.
மே
👉ஒடிசாவில் தொடர்ந்து 5ஆவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய நவீன் பட்நாயக் நெடுநாள் முதலமைச்சர் வரிசையில் இடம் பெற்றார்.
👉இந்தியாவின் முதல் வாக்காளர் எனக் கருதப்படும் 102 வயதான ஷ்யாம் சரண் நேகி தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
👉ரேடார் பார்வை மூலம் பூமியை கண்காணிக்கும் ரிசாட் 2பி செயற்கைகோளை இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ளதாக அறிவித்தது.
👉சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தண்ணீர் மூலம் இயங்கக்கூடிய இன்ஜினை கோயம்புத்தூரை சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் வடிவமைத்து சாதனை படைத்தார்.
ஜூன்
👉தெலங்கானாவில் 80 ஆயிரம் கோடியில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட காலேஷ்வரம் நீர்ப்பாசனத் திட்டத்தை முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தொடங்கி வைத்தார்.
👉மிஸ் இந்தியா 2019ஆம் ஆண்டிற்கான பட்டத்தை ராஜஸ்தானை சேர்ந்த சுமன் ராவ் என்பவற்கு வழங்கப்பட்டது.
👉விண்வெளியில் இந்தியாவிற்கென தனியாக ஆய்வு மையம் 2030ஆம் ஆண்டுக்குள் அமைக்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
👉விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கான அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக