2019 இந்தியா... உங்களை நிமிர வைத்த நிகழ்வுகள்... இதுவா?
2019ஆம் ஆண்டு : இந்தியா ஒரு பார்வை - பகுதி 3
நவம்பர்
👉மகாராஷ்டிர முதலமைச்சராக பதவியேற்ற சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
👉இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஆன தபால் சேவையானது மீண்டும் தொடங்கியது.
👉ஆந்திராவிலுள்ள மதுபார்களின் உரிமங்களை அதிரடியாக ரத்து செய்து அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டார்.
👉நாடு முழுவதிலும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் சுமார் 3 கோடியே 14 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
👉நடப்பு நிதியாண்டில் கணக்கில் வராமல் கைப்பற்றப்பட்ட பணங்களில், கிட்டத்தட்ட பாதியளவு 2000 ரூபாய் நோட்டுகளே என்பது தெரியவந்தது.
👉உலக பணக்காரர்களின் பட்டியலில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் மீண்டும் முதல் இடத்தை பிடித்தார்.
👉தாஜ்மஹாலின் வெளித்தோற்ற அழகை குறைந்த கட்டணத்தில் கண்டுகளிக்க ஆக்ராவில் புதிய இடம் அமைக்கப்பட்டது.
டிசம்பர்
👉துருக்கியில் 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மசூதி ஒன்று பாதுகாப்பு காரணத்திற்காக வேறு ஒரு இடத்திற்கு வாகனம் மூலம் நகர்த்தப்பட்டது. ஆயிரத்து 700 டன் எடையுள்ள பழமையான மசூதி ளுநடக Pசழிநடடநன ஆழனரடநச வுசயnளிழசவநச என்ற தொழில்நுட்பத்தின் மூலம் பெயர்த்து எடுக்கப்பட்டது.
👉பொழுதுபோக்கிற்காக மட்டுமின்றி வருமானத்தையும் ஈட்டிதரும் பிரபல சமூகவலைதளமான யூடியூப் மூலம் அமெரிக்காவை சேர்ந்த 8 வயது சிறுவன் 185 கோடி ரூபாய் சம்பாதித்து 2019ஆம் ஆண்டு அதிகம் சம்பாதித்த நபர்களின் வரிசையில் இடம் பிடித்தார்.
👉ஒடிஷாவில் நெகிழிப் பொருட்களை சேகரித்து தந்தால் இலவச உணவு வழங்கப்படும் என்ற புதுமையான திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்தது.
👉சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்த ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியை தவிர்த்து கூடுதலாக 75 கோடி ரூபாயை வழங்கக்கோரி இஸ்ரோ, மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது.
👉கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை அந்நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட்டின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக