செவ்வாய், 31 மார்ச், 2020

இதுவரை உலக நாடுகளை உலுக்கிய தொற்று நோய்கள்

இதுவரை உலக நாடுகளை உலுக்கிய தொற்று நோய்கள்...

பிளேக் டெத்

samayam tamil
இன்று உலகையே உலுக்கிக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் மக்களை அச்சத்தில் மட்டுமின்றி நாம் இறந்து விடுவோமா என்ற பீதியில் வைத்துக் கொண்டு இருக்கிறது.
தொழில்நுட்பம், மருத்துவம் என்று அனைத்திலும் நாம் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும், இன்னும் அவ்வப்போது உருவாக்கி வரும் தொற்று நோய்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறோம். இதற்குக் காரணம் போதிய விழிப்புணர்வு இல்லாதது என்று கூறுவதைவிட, துவக்கத்தில் தொற்று நோயின் பாதிப்பு எந்தளவிற்கு இருக்கும் என்பதை அளவிட தவறுவதுதான்.
அந்த வகையில்தான் தற்போது கொரோனாவும் நம்மை அச்சுறுத்தி வருகிறது. கடந்தாண்டு டிசம்பரில் சீனாவில் வெடித்த இந்த வைரஸை தீவிர தொற்று நோயாக கணக்கிட அந்த நாடு தவறிவிட்டது. தகவல்களையும் வெளியில் விடாமல் ரகசியம் காத்தது.
இதற்கு முன்பும் இதுபோன்று கடுமையான தொற்றுகளால் உலகமே திண்டாடியுள்ளது. கொரோனா வைரஸ் கடந்த நூற்றாண்டுகளில் பரவிய வைரஸ்களில் மிகவும் தீவிரமானது என்று கூறலாம். இதுவரை பரவிய மற்ற தொற்று நோய்களை இங்கே பார்க்கலாம்.
பிளேக் டெத் எனப்படும் பியுபோனிக் பிளேக்: 1347-51ஆம் ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகளை உலுக்கிய ஒரு தொற்று நோய் பிளேக் டெத். எலியில் இருந்து இந்த வைரஸ் பரவியது. ஐரோப்பா 30 முதல் 50% மக்கள் தொகையை இழந்தது. சுமார் 200 மில்லியன் மக்கள் இறந்தனர். இந்த துயரத்தில் இருந்து மீண்டு வர ஐரோப்பாவுக்கு 200 ஆண்டுகள் பிடித்தது.
சின்னம்மை
samayam tamil
சின்னம்மை: 1520ல் மெக்சிகோவில் வெடித்த சின்னமைக்கு 56 மில்லியன் மக்கள் பலியாயினர்.

ஸ்பானிஷ் புளூ

samayam tamil
ஸ்பானிஷ் புளூ: 1918-19களில் ஸ்பானிஷ் நாட்டில் பரவிய புளூவுக்கு ஸ்பானிஷ் புளூ என்றே பெயரிடப்பட்டது. இதற்கு 40-50 மில்லியன் மக்கள் பலியாயினர்.

ஜஸ்ட்டினியன் பிளேக்

samayam tamil
ஜஸ்ட்டினியன் பிளேக்: 541-42ஆம் ஆண்டுகளில் பரவிய ஜஸ்ட்டினியன் பிளேக் 30-40 மில்லியன் மக்களின் உயிரைக் குடித்தது. இந்த வைரசும் சீனாவில் இருந்து அல்லது இந்தியாவில் இருந்து எகிப்து பள்ளத்தாக்கிற்கு பரவியதாக கூறப்பட்டது. இது ஒரு பாக்டீரியா தொற்று.

ஹெச்ஐவி-எய்ட்ஸ்

samayam tamil
ஹெச்ஐவி-எய்ட்ஸ்: 1981ல் பரவிய எய்ட்ஸ் உலகம் முழுவதும் 25-30 மில்லியன் மக்களை காவு கொண்டது.

மூன்றாவது பிளேக்

samayam tamil
மூன்றாவது பிளேக்: 1855ல் பரவிய மூன்றாவது பிளேக்கிற்கு உலகம் முழுவதும் சுமார் 12 மில்லியன் மக்கள் பலியாயினர். சீனாவின் யுனான் மாகாணத்தில் இந்த தொற்று உருவானது. இந்த தொற்றுக்கு அதிகமாக சீனா மற்றும் இந்தியாவில் பலியாயினர். இதைத்தொடர்ந்து தெற்கு ஆப்ரிக்காவில் இருந்து சான் பிரான்சிஸ்கோ வரைக்கும் இந்த தொற்றுக்கு ஆயிரக்கணக்கில் பலியாயினர்.

ஆன்டோனைன் பிளேக்

samayam tamil
ஆன்டோனைன் பிளேக்: 165-180களில் பரவிய ஆன்டோனைன் பிளேக் 5 மில்லியன் மக்களின் உயிரை காவு வாங்கியது.

இத்தாலியன் பிளேக்

samayam tamil
இத்தாலியன் பிளேக்: 1629-31ஆம் ஆண்டுகளில் பரவிய இத்தாலியன் பிளேக்கிற்கு 2 லட்சத்து 80 ஆயிரம் மக்கள் பலியாயினர்.

​தி கிரேட் பிளேக் ஆப் லண்டன்

samayam tamil
தி கிரேட் பிளேக் ஆப் லண்டன்: 1665 - 1966ஆம் ஆண்டுகளில் வெடித்த இந்த பிளேக் நோய்க்கு 75000 முதல் 1 லட்சம் மக்கள் மக்கள் இறந்தனர்.

தி கிரேட் பிளேக் மார்செல்லி

samayam tamil
தி கிரேட் பிளேக் மார்செல்லி: 1720ஆம் ஆண்டில் வெடித்த இந்த பிளேக் நோய் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பிரான்சுக்கு பரவியது. இதற்கு 1 லட்சம் மக்கள் பலியாயினர்

​ஆசியன் புளூ

samayam tamil
ஆசியன் புளூ: 1957-58ஆம் ஆண்டுகளில் பரவிய ஆசியன் புளூவுக்கு 1.1 மில்லியன் மக்கள் இறந்தனர் .

ஹாங்காங் ரஷ்யன் புளூ

samayam tamil
ஹாங்காங் புளூ: 1968-70 ஆம் ஆண்டுகளில் வெடித்த ஹாங்காங் புளூவுக்கு ஒரு மில்லியன் மக்கள் பலியாயினர்
ரஷ்யன் புளூ: 1889-90களில் பரவிய ரஷ்யன் புளூவிற்கு ஒரு மில்லியன் மக்கள் பலியாயினர்

காலரா

samayam tamil
காலரா: 1817-1923ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் ஆறு முறை பரவிய காலரா நோய்க்கு மொத்தம் ஒரு மில்லியன் மக்கள் பலியாயினர்

​எபோலா

samayam tamil
எபோலா: 2014-16ஆம் ஆண்டுகளில் பரவிய எபோலா நோய்க்கு 11,300 பேர் பலியாயினர்.
ஜப்பான் சின்னம்மை: 735-37 ஆம் ஆண்டுகளில் ஜப்பானில் வெடித்த சின்னம்மைக்கு ஒரு மில்லியன் மக்கள் பலியாயினர்.
18ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய பிளேக்: 1700ஆம் ஆண்டுகளில் வெடித்த 18ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய பிளேக்காக கருதப்படும் தொற்று நோய்க்கு 6 லட்சம் பேர் பலியாயினர்.
சுவைன் புளூ: 2009-10ஆம் ஆண்டுகளில் பரவிய ஸ்வைன் புளூவுக்கு 2 லட்சம் பேர் பலியாயினர்
யெல்லோ பீவர்: 1800ஆம் ஆண்டுகளின் பின்னாட்களில் வெடித்த யெல்லோ பீவருக்கு சுமார் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் பேர் பலியாயினர்.

மெர்ஸ்

samayam tamil
மெர்ஸ்: 2015ஆம் ஆண்டில் வெடித்த இந்த தொற்று நோய் தற்போதும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்போது பரவிய இந்த தொற்று நோய்க்கு 850 பேர் பலியாயினர்.

​சார்ஸ்

samayam tamil
சார்ஸ்: 2002-03ஆம் ஆண்டுகளில் உலக மக்களை மீண்டும் அச்சத்துக்கு உள்ளாக்கிய மிகவும் கொடுமையான தொற்று நோய் சார்ஸ். இதற்கு 770 பலியாகி இருந்தனர். குறைந்த நாட்களில் இந்த வைரஸ் வீரியம் இழந்ததால், உலக மக்கள் தப்பித்தனர்.

கோவிட் 19

samayam tamil
கோவிட் 19: தற்போது உலக மக்களை துண்டாடி, மரண பீதியில் வைத்திருக்கும் ஒரு தொற்று. இந்த தொற்று நோயை சமாளிக்க முடியாமல் அமெரிக்காவே எமர்ஜென்சியை அறிவித்து, மக்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறது. என்ன செய்வது என்று தெரியாமல் உலக வர்த்தகம் சீரழிந்து, தொழில் நசிங்கி, கூலித் தொழிலாளர்கள் வேலை இழந்து பெறும் சிக்கலை உலகம் எதிர்கொண்டுள்ளது. என்ன மாதிரியான மருத்துவம் செய்வது என்று தெரியாமல் மருத்துவர்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர். இதுவும் சீனாவின் வுகான் மாகாணத்தில் உருவானது.
இந்த தகவல்கள் அனைத்தும் கிடைத்த ஆய்வுகளின் அடிப்படையில் இங்கு வழங்கப்பட்டுள்ளது.
நன்றி சமயம் .

உலகை உலுக்கிய கொள்ளைநோய்கள்


உலகை உலுக்கிய கொள்ளைநோய்கள்

உலகெங்கும் நடுக்கத்தோடு உச்சரிக்கும் பெயர் ‘கோவிட்-19’. சீனாவின் வூகான் நகரில் பரவத் தொடங்கிய இந்த நோய், மெல்ல மெல்ல உலகின் பிற நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்திருக்கிறது. சீனாவில் மட்டும் இதுவரை சுமார் 77,600 பேருக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அவர்களில் 2,663 பேரின் உயிரை இந்த நோய் பலிகொண்டிருக்கிறது. தென்கொரியாவில் கிட்டத்தட்ட 1,000 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போது இத்தாலி, ஈரான், இஸ்ரேல், லெபனானிலும் ‘கோவிட்-19’ தனது மரணக் கணக்கைத் தொடங்கியிருக்கிறது. இது சர்வதேச அளவிலான நெருக்கடிநிலைக்கான தருணம். நிலைமை மிகவும் மோசமானது என்றாலும், இதுபோன்ற கொள்ளைநோய்களை வரலாறு நெடுகிலும் பார்க்க முடியும். அவற்றுள் பலவும் ‘கோவிட்-19’-ஐவிட மிகவும் மோசமானவை.

ஜஸ்டீனியக் கொள்ளைநோய்


தற்போது இஸ்தான்புல் என்று அழைக்கப்படும் முந்தைய பைஸாண்ட்டைன் சாம்ராஜ்யத்தில் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் ஏற்பட்ட மிக மோசமான கொள்ளைநோய் இது. அப்போது பைஸாண்ட்டைன் சாம்ராஜ்யத்தை ஆண்டுகொண்டிருந்த பேரரசர் ஜஸ்டினியன் பெயரிலேயே இந்தக் கொள்ளைநோய் வழங்கப்படுகிறது. எகிப்திலுள்ள எலிகளிடமிருந்து தோன்றிய இந்த நோய், இஸ்தான்புல்லுக்குப் பரவியது. அந்த நகரத்தின் மக்கள்தொகையில் பாதிப் பேர் இந்த நோய்க்குப் பலியாகியிருக்கிறார்கள். அங்கிருந்து மத்தியத் தரைக்கடல் வழியாகப் பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்த நோய் பரவியது. சுமார் அரை நூற்றாண்டு கால அளவில் ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் இந்த நோயால் 2.5 கோடியிலிருந்து 10 கோடிப் பேர் உயிரிழந்திருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள்.

கருப்புக் கொள்ளைநோய்

கி.பி. 1346-ல் தொடங்கி 1353 வரை ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா போன்ற கண்டங்களில் தாண்டவமாடிய கொள்ளைநோய் இது. இந்தக் கொள்ளைநோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 7.5 கோடியிலிருந்து 20 கோடி வரை இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. ‘யெர்ஸினியா பெஸ்டிஸ்’ என்ற பாக்டீரியாவால் ஏற்பட்ட கொள்ளைநோய் இது. வணிகக் கப்பல்களில் உள்ள எலிகளின் உடலில் காணப்பட்ட உண்ணிகளால் இந்த நோய் பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தக் கொள்ளைநோயால் ஐரோப்பாவின் மக்கள்தொகையில் 30%-60% பலியானார்கள். இந்த நோயால் இழந்த மக்கள்தொகையை ஐரோப்பா திரும்ப எட்டுவதற்கு மேலும் 200 ஆண்டுகள் ஆயின என்பது குறிப்பிடத்தக்கது. இடைக்காலத்தில் ஐரோப்பிய வரலாற்றையே மாற்றியமைத்த கொள்ளைநோய் இது.

மூன்றாவது கொள்ளைநோய்

‘கோவிட்-19’-ஐப் போலவே இந்தக் கொள்ளை நோயும் சீனாவில்தான் உருவானது. சீனாவின் யூனான் மாகாணத்தில் 1850-களில் உருவான இந்தக் கொள்ளைநோய், சீனாவைத் தாண்டியும் பரவியது. மஞ்சள் மார்பு எலிகளிடமிருந்து உண்ணிகள் வழியாக மனிதர்களுக்கு இந்த நோய் பரவியது. சீனா ஒரு முக்கியமான வணிகக் கேந்திரமாக இருந்ததால் இந்தக் கொள்ளைநோய் ஹாங்காங், இந்தியாவில் பம்பாய், தென்னாப்பிரிக்காவில் கேப் டவுன், அமெரிக்காவில் சான் ஃப்ரான்ஸிஸ்கோ என்று கடல் நகரங்களைத் தாக்கியது. 1.2 கோடிக்கும் மேற்பட்டவர்களை இந்தக் கொள்ளைநோய் காவுவாங்கியிருந்தது. இதில் இந்தியாவில் மட்டும் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இந்தக் கொள்ளைநோய் 1960-கள் வரை சற்றே குறைந்த தீவிரத்துடன் நீடித்தது.

ஸ்பானிஷ் ஃப்ளூ

முதல் உலகப் போர் இறுதிக் கட்டத்தை நெருங்கியபோது வெடித்தது இந்தக் கொள்ளைநோய். பெயரில் ஸ்பானிஷ் இருந்தாலும் இது ஸ்பெயினில் தோன்றிய நோய் அல்ல. பிரான்ஸில்தான் இந்தக் கொள்ளைநோய் வெடித்தது. இது ஸ்பெயினிலிருந்து வந்திருக்கக்கூடும் என்று நினைத்து பிரெஞ்சுக்காரர்கள் வைத்த பெயர்தான் ‘ஸ்பானிஷ் ஃப்ளூ’. அதனால்தான், இன்று வரை இந்தக் கொள்ளைநோயை ‘ஸ்பானிஷ் ஃப்ளூ’ என்ற பெயரில் அழைப்பது ஸ்பெயினில் குற்றமாகக் கருதப்படுகிறது.

1918-1919 ஆகிய ஆண்டுகளில் உலகமெங்கும் இந்த நோய் தாண்டவமாடியதில் 5 கோடியிலிருந்து 10 கோடிப் பேர் வரை உயிரிழந்தார்கள். இது இரண்டு உலகப் போர்களாலும் ஏற்பட்ட உயிரிழப்பைக் காட்டிலும் அதிகம். முதல் உலகப் போரில் தங்கள் தோல்விக்குக் காரணம் ‘ஸ்பானிஷ் ஃப்ளூ’தான் என்று ஜெர்மானியர்கள் கருதினார்கள். மனிதர்கள் உருவாக்கிய எல்லா எல்லைக்கோடுகளையும் ‘ஸ்பானிஷ் ஃப்ளூ’ தாண்டியது. இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களின் எண்ணிக்கை காந்தியில் ஆரம்பித்து துருக்கியின் முதல் அதிபர் முஸ்தஃபா கெமால் அதாதுர்க் வரை நீளும். ஆங்கிலக் கவிஞர் டி.எஸ்.எலியட், ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட், ஃப்ரன்ஸ் காஃப்கா, டி.எச்.லாரன்ஸ், வால்ட் டிஸ்னி என்று பல ஆளுமைகளும் இந்தக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு மீண்டார்கள். பிரெஞ்சுக் கவிஞர் கியோம் அப்போலினேர், லெனினின் வலக்கரமாகத் திகழ்ந்த யாக்கோவ் ஸ்வெர்த்லோவ், ஆர்தர் கோனான் டாய்லின் மகன், டொனால்டு ட்ரம்ப்பின் தாத்தா என்று மாண்டவர்கள் பட்டியல் நீளும். மிக மோசமான வலியைத் தொடர்ந்து மரணம் ஏற்படுத்திய நோய் அது. இறந்தவர்களின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்து பார்த்தபோது, அவர்களின் நுரையீரல் நீல நிறத்திலும் திரவத்தால் நிரம்பியதுபோலவும் காணப்பட்டிருக்கிறது. நீரில் மூழ்கி இறந்தால் நுரையீரல் எப்படி இருக்குமோ அப்படி இருந்திருக்கிறது.

எச்.ஐ.வி.

எய்ட்ஸ் கொத்துக் கொத்தாகக் கொல்வதில்லை என்றாலும் அதனால் ஏற்படும் பாதிப்பு மிக அதிகம். எய்ட்ஸுக்குக் காரணமாக இருக்கும் ‘ஹ்யூமன் இம்யூனோடெஃபிஷியன்ஸி வைரஸ்’ தொற்று கண்டுபிடிக்கப்பட்ட 1980-களின் முற்பகுதியில் ஆரம்பித்து தற்போது வரை 7.5 கோடிப் பேரைத் தொற்றியிருக்கிறது. இதுவரை எச்.ஐ.வி.யால் 3.2 கோடிப் பேர் மரணமடைந்திருக்கிறார்கள். உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவல்படி ஆப்பிரிக்காவில் 25 பேரில் ஒருவர் எச்.ஐ.வி. தொற்றோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார். இதுவரை எய்ட்ஸுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், இந்நோய்க்கு எதிரான, தொடர்ச்சியான பிரச்சாரங்களால் குறிப்பிடத்தக்க விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. இதனால், 2005-2012 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எய்ட்ஸால் ஏற்படும் மரணம் 22 லட்சத்திலிருந்து 16 லட்சமாகக் குறைந்திருக்கிறது.

‘சார்ஸ்’, ‘ஸிகா’, ‘எபோலா’, ‘நிபா’, ‘மெர்ஸ்’ என்று சமீப காலமாக உலகம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் அதிகம். நவீன மருத்துவத்தின் உதவியாலும், உரிய தடுப்பு நடவடிக்கைகளாலும் இந்நோய்கள் கட்டுக்குள் வைக்கப்படுகின்றன. இது எதுவும் இல்லாத காலத்தில் மனிதர்கள் கொத்துக்கொத்தாக எப்படி செத்து வீழ்ந்திருப்பார்கள் என்பதைக் கற்பனைசெய்து பார்த்தால், நம் காலத்தின் நிலை எவ்வளவோ மேல் என்பது நமக்குப் புலப்படும்.

கொள்ளைநோய்களில் பலவும் சூறாவளிபோல் வந்துவிட்டுத் தாமாகவே சென்றுவிடுபவை. அவற்றுக்குத் தடுப்பு நடவடிக்கை எடுப்பதற்குள்ளும் மருந்து கண்டுபிடிப்பதற்குள்ளும் லட்சக்கணக்கானோரைக் கொன்றுவிடுபவை.

உலகம் முன்பு எப்போதையும்விட அதிக அளவில் தொடர்பில் இருக்கும் காரணத்தால் - சீனாவில் எங்கோ ஒரு நகரில் தோன்றிய நோய்க்காக - இன்று பதைபதைத்துக்கொண்டிருக்கிறோம் என்றாலும், இந்த விழிப்புணர்வு தேவையானதுதான். அதேசமயம், ஏழ்மையும் பீதியும் அச்சமும் கொள்ளைநோய்களின் தீவிரத்தை மேலும் அதிகப்படுத்தக்கூடும் என்பதையும் நாம் மறந்துவிடலாகாது; ஆகவேதான், கொள்ளைநோய்களின் காலத்தில் நிதானத்துடன் கூடிய விழிப்புணர்வு அவசியமாகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரியான திசையில் செல்ல பீதி அல்ல; நிதானமே அவசியம்!
நன்றி தி இந்து தமிழ் 

தூக்கம் - தூக்கத்தினை பற்றிய சில விந்தையான தகவல்கள் தெரிந்து கொள்ளலாம்.

தூக்கம் - தூக்கத்தினை பற்றிய சில விந்தையான தகவல்கள் தெரிந்து கொள்ளலாம்.


நன்கு தூக்கம் தூங்குபவர்கள் உடல் மற்றும் மூளை சுறுசுறுப்பாக இயங்குவதை உணரலாம். தூக்கம், மனித இனமான நமக்கு அவசியமான ஒன்றாகும். வயதிற்கு ஏற்ப தூங்கும் நேரம் வேறுபடும்.பிறந்த குழந்தைகளுக்கு பதினெட்டு மணி நேரம் வரை தூக்கம் தேவைப்படுகிறது. 
இரண்டரை வயது முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு குறைந்தது பதினோரு மணி நேரம் அவசியம். வளர வளர தூங்கும் நேரம் குறைந்து ஒரு நாளைக்கு சராசரியாக எட்டு மணி நேரம் தூக்கம் அவசியப்படுகிறது.
தூக்கத்தை நம்மால் ஒரு அளவுக்கு மேல் தூங்காமல் கட்டுபடுத்தி வைக்கமுடியாது. அதையும் மீறி அடக்கி வைக்கும் பட்சத்தில் ஒரு அளவுக்கு மேல் நம்மையும் அறியாமல் தூக்கம் நம்மை ஆக்கிரமித்து விடும். நாம் அதிக நேரம் முழித்து இருக்கும் போது, நமக்குள் "ஸெரோடோனின்" மற்றும் "நோராட்ரினலின்" என்பவை அதிகரித்து நம்மை தூக்கத்திற்கு கொண்டு போய் விடும். எவ்வளவு வெளிச்சம், எவ்வளவு இரைச்சல் மிகுந்த சத்தம் இருந்தாலும்நாம் தூங்கி விடுவோம்.
 பொதுவாக நாம் ஆறு முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். அப்போது தான் அடுத்து முழித்து இருக்கும் நேரத்தில் நாம் சுறுசுறுப்பாக இயங்க முடியும். விலங்குகளின் தூக்கம் எதிரிபிராணிகளின் வருகையை பொறுத்து மாறுபடும்.

நமது மனித உடல் அமைப்பு பற்றிய விந்தையான சில தகவல்கள் தெரிந்து கொள்ளலாம்.

நமது மனித உடல் அமைப்பு பற்றிய விந்தையான சில தகவல்கள் தெரிந்து கொள்ளலாம்.


முதலில் தலையில் இருந்து தொடங்குவோம். நமது தலைமுடியின் பலம் அதிகம். இதனை அலுமினிய கம்பிக்கு இணையாக ஒப்பிடுவர். ஒரு நாளைக்கு தலை முடி0.0714 அங்குலம் வளர்கிறது. நமது கண்கள் ஆயிரக்கணக்கான முறை கண்ணைச் சிமிட்டி கொண்டு இருக்கும். 
உறக்கத்தில் 15முதல் 30தடவை வரை புரளுகிறோம். நமது மூளை அணுக்கள் ஒருநாளைக்கு70,00,000 வேளை செய்கிறது. ஒரு நாளைக்கு 483 கன அடி காற்றை உட்கொள்கிறோம். நமது உடம்பில் மிகவும் பலமான விஷயம் பல்லில் இருக்கும் எனாமல்தான். இது யானையின் தந்தத்தை விட வலுவானது. ஒரு நாளைக்கு 48000 வார்த்தைகள் பேசுகிறோம். நமது கையினால் ஒரு வேலை செய்யும் போது முப்பது ஜாயிண்ட்களும், ஐம்பது தசைகளும் இயங்கும். ஒருநாளைக்கு 750 பெரிய தசை நார்களை நாம் இயக்குகிறோம். நமது விரல் நகமானது 0.00046 அங்குலம் வளர்கிறது. 
நமது இதயமானது ஒருநாளைக்கு1,03,680 தடவை துடிக்கும். நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, மூன்று பவுண்ட் கால்சியம் அடங்கி இருக்கிறது. ரத்தம் ஒருநாளைக்கு16,80,000 மைல்கள் ஓடுகிறது.

ஓஸோன் பற்றிய சில தகவல்கள் சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம்

ஓஸோன் பற்றிய சில தகவல்கள் சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம்


ஓஸோன் என்பது மூன்று ஆக்ஸிஜன் அணுக்கள் சேர்ந்தது ஒரு ஓஸோன் துகள் என்று கூறுகிறோம். நாம் சுவாசிக்கும் பிராண வாயுவில் தனிமத்தின் அளவு இரண்டு ஆக்ஸிஜன் அணுக்கள். பயங்கர இடி இடித்து மழை பெய்து முடித்தவுடன் காற்று துல்லியமாக இருப்பதற்கு ஓஸோன் தான் காரணம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரிய ஒளிக் கதிர்களில் இருந்து அகச்சிவப்பு கதிர்கள் மற்றும் புற ஊதா கதிர்கள் வரும். இந்த புற ஊதா கதிர்கள் பூமிக்கு வந்து நம்மையும் மற்ற உயிரனங்களையும் தாக்காமல் இந்த ஓஸோன் படலம் காக்கின்றது. பூமியைச் சுற்றி சுமார் முப்பது கி.மீ உயரத்தில் இந்த ஓஸோன் படலம் இருக்கிறது.
நமக்கு குடிநீர் சப்ளை செய்யும் குடிநீர் வாரியத்தின் தண்ணீரில் "சப்" என்று ருசி இல்லாமல் இருப்பதை மாற்றி சுவையை கூட்ட ஓஸோனில் காட்டி அனுப்புவர். இது ருசியையும் அதிகரிக்கும் மற்றும் தண்ணீரில் இருக்கும் பாக்டீரியாவையும் நீக்கும். கெமிக்கல் ஆலைகளில் எண்ணெய்களில் இருக்கும் கந்தக சக்தியை அகற்றுவதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு செய்தால் பாய்லர்களின் தரம் குறையாமல் அதிக காலம் வரை பாதுகாக்கலாம். கடற்கரை ஓரங்களில் காணப்படும் ஈரப்பதத்திற்கும் இந்த ஓஸோன் தான் காரணம்.  
இந்த ஓஸோன் படலம் பாதிக்கப்பட்டால் பூமியின் வெப்ப நிலை அதிகமாக இருக்கும். புற ஊதா கதிர்களின் தாக்கம் நேரடியாக நம்மை தாக்கினால் தோல் புற்றுநோய், தோல் சுருக்கம் மற்றும் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் அபாயம் போன்ற பாதிப்புகள் இருக்கும். எனவே இந்த ஓஸோன் படலம் பாதிக்காமல் நாம் பாதுகாக்க வேண்டும். குளிரூட்டிகள் மற்றும் புகையிலை தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகையினையும் குறைக்க வேண்டும். ஏற்கனவே ஓஸோனில் ஓட்டை இருப்பது அனைவரும் அறிந்ததே. மேலும் பாதிக்கப்படாமல் அதனை காக்க அனைவரும் ஒன்று சேர்ந்து முயற்சி செய்ய வேண்டும். வருடா வருடம் செப்டம்பர் மாதம்16ம் தேதி உலக ஓஸோன் தினமாக கொண்டாடப்படுகிறது.

பூமியை பற்றிய சில அரிய தகவல்கள் தெரிந்து கொள்ளலாம்

பூமியை பற்றிய சில அரிய தகவல்கள் தெரிந்து கொள்ளலாம்


நமக்கு தெரிந்து பூமியைப் பற்றி என்னவென்றால், பூமியில் நாம் வாழ்கிறோம் அதுமட்டும்தான். இந்த பூமியில் நம்மை போன்றுதான் விலங்குகள், தாவரங்கள், மரங்கள் மற்றும் மற்ற உயிரினங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. பூமியானது சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களில் ஒன்றாகும். பெரிய கோளுமாகும். பூமியின் சுற்றளவு சுமார்40,000 கி.மீ இருக்கும். இதன் ஆரமானது சுமார் 6350 கி.மீ இருக்கும். 
இந்த பூமி தன்னை தானே சுற்றிக் கொண்டிருக்கும். இவ்வாறு இது தன்னை தானே சுற்றி வர இது எடுத்து கொள்ளும் நேரமானது 23மணி நேரம் 56 நிமிடம் என கணக்கிடப்பட்டுள்ளது. அப்படி என்றால் ஒரு மணி நேரத்தில் சுமார் 1000 மைல் வேகத்தில் சுழலும். அவ்வாறு படுவேகமாக சுற்றும் பூமியில் எந்தவித அதிர்வுகளும் இல்லாமல் நாம் வாழ்வது ஒரு விந்தையான விஷயம் தான்.
பூமியில் இருக்கும் சமநிலை இல்லாத வானிலையால் பூமி பாதிப்பு ஏற்படுகிறது. புயல், சூறாவளி, வெள்ளம் ஆகியவற்றால். இது போக சுற்றுப்புற சூழலை நமது பங்கிற்கு வேறு தூய்மயை கெடுக்கிறோம். நம்மை வாழவைக்கும் இந்த பூமிக்கு நாம் செய்யும் கைம்மாறு நம்மால் இயன்ற வரை பூமியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

மழையைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள் தெரிந்து கொள்ளலாம்

மழையைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள் தெரிந்து கொள்ளலாம்


"நீரின்றி அமையாது உலகு" என்பது வள்ளுவர் வாக்கு. மனித இனமான நமக்கு மட்டுமல்ல உலகில் வாழுகின்ற அனைத்து வகையான உயிரனங்கள் மற்றும் தாவரங்கள் அனைத்திற்கும் நீரானது மிகவும் அவசியம். நீர் உருவாக மழை நமக்கு தேவை.
மழை எவ்வாறு உருவாகிறது? பூமியில் இருக்கும் நீர் ஆவியாகி மேகங்கள் மூலம் சேமிக்கபடுகிறது. குறிப்பிட்ட சில பருவகாலத்தில் மேகங்களில் நீர் கூறுகள் சேமிக்கபட்டு குளிர்ந்த காற்றின் மூலமாக மழை பூமியில் பொழிகிறது.
 தண்ணீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
அதனை தடுக்க உலகம் முழுவதும் ஏதோ ஒரு முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். செயற்கை மழையை பெறுவது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். செயற்கை மழையை ஊருவாக்குவது கூட மழை பொழிய வாய்ப்பு இருக்கும் சமயத்தில் மட்டுமே முயற்சிக்க முடியும். அதாவது பெய்யக்கூடிய மழையின் அளவை மட்டுமே அதிகரிக்க செய்ய முடியும். பொட்டாசியம் நைட்ரேட், சில்வர் அயோடைடு ஆகிய வேதிப்பொருள்கள் மேகத்தின் மேலே தூவுவதின் மூலமாக மேகத்தின் எடையை கூட்டி செயற்கையாக மழையை வரவைக்கலாம்.  இதற்கு ஆகும் செலவு அதிகம். சீன நாட்டு விஞ்ஞானிகள் இதனை தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். திபெத் பீடபூமியில் இதற்காக ஒரு கட்டமைப்பை அமைத்துள்ளனர். துபாய் நாட்டில் ஏற்கனவே செயற்கை முறையில் மழை பொழிவை செயல்படுத்தி இருக்கின்றனர். 
முடிந்த வரை தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம் வரும் சந்ததியினருக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்க்கலாம்.

லேசர் கதிர்கள் பற்றி சில தகவல்கள் தெரிந்து கொள்ளலாம்.

லேசர் கதிர்கள் பற்றி சில தகவல்கள் தெரிந்து கொள்ளலாம்.


லேசர் என்பது துல்லியமான ஒளிக்கற்றை. இதன் ஆங்கில விரிவாக்கம் "Light Amplification by Stimulated Emission of Radiation". இது ஒரு நுட்பமான சீரான ஒளி ஆகும்.
இதனை ஒருமித்த ஒளி என்றும் சொல்லலாம். ஒரு சில பொருட்களின் அணு அமைப்புகளோடு இணைந்த எலெக்ட்ரான்களை 'பம்ப்பிங்' செய்வதன் மூலமாக அணுக்கருவை சுற்றி குறிப்பிட்ட வட்ட வடிவில் சுற்றி கொண்டு இருக்கும் எலெக்ட்ரான்களை வேறு வட்டத்தில் சுற்றவைக்கும். இவ்வாறு திசை மாறி சுற்றும் எலெக்ட்ரான்கள் மீண்டும் தனது பழைய வட்டத்திற்கு இடம்பெயர முயற்சிக்கு stimulated emission என்று பெயர். அவ்வாறு இடம் பெயரும் போது அது ஃபோட்டானை வெளிப்படுத்தும். அந்த நேரம் ஒரு ஒளிக்கற்றை உருவாகும். இந்த ஒளிக்கற்றை ஒரே நிறமாக மற்றும் அதிக சக்தி வாய்ந்தும் இருக்கும். லென்ஸ் வழியாக பாயும் சாதாரண ஒளியை விடவும் பலமடங்கு துல்லியமான ஒரே நிறத்தில் உள்ள ஒளிப்புள்ளி ஆகும்.
இந்த லேசர் ஒளிக்கற்றைகளைக் கொண்டு மருத்துவ துறையில் சில நுட்பமான ஆபரேஷன்கள் செய்கிறார்கள்.

திமிங்கலம் பற்றி சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க

திமிங்கலம் பற்றி சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க


உலகில் இருக்கக்கூடிய உயிரினங்களில் மிகப் பெரியது திமிங்கலம் மட்டுமே. இவை ஒரு பாலூட்டி இனத்தைச் சார்ந்தவை. 100 முதல் 150 டன் எடை வரை திமிங்கலங்கள் உள்ளன.
கடலின் ஆழத்திற்கு சென்று கூட இறையை பிடிப்பதில் வல்லமை கொண்டது இந்த திமிங்கலம். இவை பொதுவாக சாதுவான வை.நுரையீரல் மூலம் சுவாசிக்கும் இது நீர்ப்பரப்பின் மேல் வந்து ஒரு முறை காற்றை சுவாசித்தால் 90 சதவிகித ஆக்ஸிஜனை பெறுகிறது.
இதன் மூலம் கடலின் ஆழம் வரை இதனால் செல்ல முடிகிறது. மனிதன் ஒரு முறை காற்றை சுவாசித்தால் 15 சதவிகித ஆக்சிசன் பெறுகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. குளிரை தாங்குவதற்காக எதுவாக அதன் தோள்கள் அமைக்கப்பட்டுள்ளது. இனப்பெருக்கத்தின் போது ஒரு வகை சமிக்கைகளை எழுப்புகின்றது. இது தண்ணீரில் பல கிலோ மீட்டர் வரை கேட்கிறது இதன் மூலம் தன் துணையிடம் இனப்பெருக்கம் செய்கின்றன. 70 ஆண்டுகள் வரை ஒரு திமிங்கலம் ஆனது வாழ்கிறது. அந்த காலகட்டங்களில் திமிங்கலத்தின் கொழுப்பிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயில் விளக்கு ஏற்றுவார்கள். திமிங்கலத்தின் தோலுக்காகவும் அதிக அளவு வேட்டையாடப் படுகிறது. இதனால் திமிங்கலம் ஆனது அழிக்கப்பட்டு வருகிறது. இரண்டு வருடத்திற்கு அல்லது நான்கு வருடத்திற்கு ஒரு முறைதான் குட்டிகள் போடுகிறது. இந்த குட்டிகள் ஒருமுறை பால் அருந்தினால் 200 லிட்டர் வரை அருந்தவும் செய்கிறது.
மீன்களுக்கும் திமிங்கலத்தின் இடையே பல்வேறு வேறுபாடுகள் உள்ளன.இவை நுரையீரல் வழியாக சுவாசிக்கின்றன. மீன்கள் செதில்கள் வழியாக சுவாசிக்கின்றன.ப்ளூ வால் என்று சொல்லக்கூடிய நீலத்திமிங்கலம் விளையாட்டு இளைஞர்களையும் சிறுவர்களையும் அடிமைப்படுத்தி வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

திங்கள், 30 மார்ச், 2020

இளஞ்சிவப்பு கடற்கரைகள்


இளஞ்சிவப்பு கடற்கரைகள்

வெள்ளை மற்றும் சாம்பல்  வண்ணம் கொண்ட கடற்கரைகளைக் கேள்விப்பட்டிருப்போம்; பார்த்திருப்போம். உங்களுக்கு வித்தியாசமான வண்ணங்களில் இயற்கை எழில் கொஞ்சும் அழகு களில் கடற்கரைகளைக் காண வேண்டுமா? அதற்கு பெர்முடா, கிரீஸ், ஸ்பெயின், இந்தோனேஷியா மற்றும் பஹாமாஸ் நோக்கி பயணிக்க வேண்டும். அங்கே குறிப்பிட்ட இடங்களில் உள்ள கடற்கரைகளைக் கண்டுவிட்டால் வியப்பின் ஆச்சர்யத்தில் கூக்குரலிட ஆரம்பித்துவிடுவீர்கள். இளஞ்சிவப்பு வண்ணத்தில் கடற்கரை மணலையும், முகம் பார்க்கும் அளவுக்கு தெளிவான தண்ணீரையும் காண்பதற்கு இரண்டு கண்கள் போதாது. அந்த அழகான இளஞ்சிவப்புக் கடற்கரைகளைப் பார்ப்போம்.

* எல்போ மற்றும் ஹார்ஸ்ஷுபே கடற்கரை, பெர்முடா. பிரிட்டிஷை ஒட்டி வட அட்லாண்டிக் கடல் பகுதியில் உள்ள இந்த இளஞ்சிவப்பு வண்ண கடற்கரையில் பயணிக்கும்போது இயற்கையின் அழகையும், அற்புதத்தையும் ஒன்றுசேர ரசிக்கலாம். இந்தக் கடற்கரையில் பல சுற்றுலாப் பயணிகள் இன்னமும் தங்கள் கால்களைப் பதித்ததில்லை. இங்குள்ள நூதன இடங்களும் காட்சிகளும் உங்கள் கண்களுக்கு விருந்தாக அமையும்.

* இலாஃபோனிசி அண்ட் பலூஸ் கடற்கரைகள், கிரீஸ். கிரீஸ் நாட்டின் கிரீட் பகுதியில் இவை அமைந்துள்ளன. கோடைகால சுற்றுலாப் பயணிகளும், தேனிலவு கொண்டாடுபவர் களும் கூடும் இடம் இது.சானியாவிலிருந்து இலாஃபோனிசி கடற்கரை உள்ள பகுதிக்குச்செல்லும் வழி முழு வதும், இயற்கை கொஞ்சும் கடற்காட்சிகளை ரசித்துச் செல்லலாம். சுத்தமான தண்ணீர் உங்களை நீச்சல் அடிக்கத் தூண்டும். ஒய்யாரமாக நடைபோட வைக்கும்.  இளஞ்சிவப்பு வண்ண மணல் கொண்ட கடற் கரையும், தெளிவான தண்ணீரும் சுற்றுலாப் பயணிகளை இங்கு குவிக்கின்றன.

* ப்ளயா டிசெஸ் இல்லிடீஸ் ஃபார்மென்டரியா, ஸ்பெயின். இபிஷாவிலிருந்து ஒரு படகை வாடகைக்குப் பிடித்து இந்த கடற்கரையை நோக்கிச் செல்ல வேண்டும். இளஞ்சிவப்பு வண்ண மணல் கொண்ட கடற்கரை, இயற்கை கொஞ்சும் வண்ணங் களைக் கொண்ட கடல் தண்ணீர் சுற்றுலாப் பயணிகளை சுண்டி இழுக்கிறது. கூடுதலாக இங்கு தரமான உணவகங்கள் மற்றும் தங்குமிடங்கள் உள்ளதால், 
ஏராளமானோர் குவிகின்றனர்.

* லாபாயின் பாஜோ, லோம்பாக் தீவு மற்றும் கொமோடோ தீவு, இந்தோனேஷியா. சுற்றுலாப் பயணிகள் இன்னமும் சரியாக கால் பதிக்காத இடம்.  கடல் தண்ணீரின் வண்ணமும், இளஞ்சிவப்பு வண்ண மணலும், காண்போரை சுண்டி இழுக்கின்றன. லோம்பாக் தீவுக்கு பாலியிலிருந்து எளிதில் படகில் பயணிக்கலாம். கொமோடோ தீவில் புரா ணங்களில் வரும் ஆச்சர்ய காட்சிகளை ரசிக்கலாம்.

* பிங்க் மணல் கடற்கரை, ஹார்பர் தீவு, பகா மாஸ். ஹாலிவுட் நட்சத் திரங்கள் அடிக்கடி விஜயம் செய்யும்  பகுதி இது. கிழக்கு அட்லாண்டிக் கடற்பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள தண்ணீர் ஆழமில்லாதது. நீந்துவதற்கு ஏற்ற இடம். பவளப்பாறைகளில் போரா மினி பெர்ரா என்ற குட்டியான ஜீவராசி வசிக்கிறது. அவற்றின் சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்களே கடல்மண்ணில் கலந்து அழகூட்டுகிறது.
நன்றி குங்குமம் முத்தாரம்

Posted by .
 -புவனாமகேந்திரன்.
    மதி கல்வியகம்.

செவ்வாய், 24 மார்ச், 2020

உடலின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி வெல்லும் கொரோனா வைரஸ்-செல்களுக்குள் நடக்கும் உயிர் போராட்டம்

உடலின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி வெல்லும் கொரோனா வைரஸ்-செல்களுக்குள் நடக்கும் உயிர் போராட்டம்!

கடந்த டிசம்பர் 2019ல் தனது நாட்டின் ஊஹான் நகரில் கொரோனா வைரஸ் என்ற புதிய வகை வைரஸ் தாக்கி வருவதாக சீனா வெளியுலகுக்கு முதன் முதலாக தெரிவித்தது.

இந்த வைரஸ் Severe acute respiratory syndrome (SARS-2) என்ற வகையை சேர்ந்தது. இந்த வைரஸ் உருவாக்கும் நோய்க்குப் பெயர் தான் கோவிட் -19

*வைரஸ் என்றால்?...*

முழுமையான உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரி தான் வைரஸ். ஒரு ஆர்என்ஏ(நமது செல்களில் ஜீன் எனப்படும் டிஎன்ஏ இருப்பது மாதிரி வைரஸ்களில் இருப்பது டிஎன்ஏவின் அரைகுறை வடிவமான RNA) அதைச் சுற்றி ஒரு புரதம் (Protein) மற்றும் கொழுப்பு சேர்ந்த ஒரு உறை (ஆல்கஹால் கொண்ட சானிடைசர்கள், சோப்பு நுரை பட்டால் இந்த உறை கறைந்து வைரஸ் அவுட்). அந்த உறையின் மீது ஆங்காங்கே முட்கள். இது தான் கொரோனா வைரஸ். இந்த முட்களின் வேலை எளிதாக எதிலும் ஒட்டிக் கொள்ளவதே. இந்த முட்களும் புரதத்தால் ஆனவையே. கொரோனா வைரசில் இந்த முட்கள் பார்ப்பதற்கு கிரீடத்தில் (Crown) இருக்கும் வேலைப்பாடு போல இருப்பதால் இந்த வைரசுக்கு கொரோனா வைரஸ் எனப் பெயர்.

இதை ஏன் அரைகுறை உயிரி என்கிறோம். இந்த வைரஸ்களால் தானாக வாழ முடியாது. இது ஒரு முழுமையான ஒட்டுண்ணி. ஏதோ ஒரு உயிரினத்தின் செல்லுக்குள் புகுந்து அந்த செல்லில் இருக்கும் திட, திரவப் பொருட்களையே உணவாக்கிக் கொண்டு பல்கிப் பெருகுவது தான் வைரஸ்களின் வேலை. செல்லுக்கு வெளியே சில மணி நேரமோ அல்லது சில நாட்களோ தான் இதனால் தாக்குப் பிடிக்க முடியும்.

இந்த வைரஸ் மூக்கு, வாய் அல்லது கண் வழியாக உள்ளே நுழைந்தவுடன் முதலில் தொண்டப் பகுதியை தாக்குகிறது. தொண்டையில் உள்ள திசுக்களின் செல்களில் இது பல்கிப் பெருகியவுடன் தான் தொண்டை வலியும் இருமலும் தொடங்குகிறது. இந்த வைரஸ்களை எதிர்த்து நம் உடலின் எதிர்ப்பு சக்தி (Immune system) மோதலை தொடங்குகிறது. அந்த மோதலின் அறிகுறி தான் காய்ச்சல். பெரும்பாலான வைரஸ்கள் அதிக வெப்ப நிலையை தாங்க முடியாதவை என்பதால், உடலின் வெப்ப நிலையை உயர்த்தி வைரஸ்களை காலி செய்ய நமது உடலின் எதிர்ப்பு சக்தி முயற்சிக்கிறது.

இந்த மோதலின்போதே பெரும்பாலான வைரஸ்களை நமது உடல் கொன்று விடுகிறது, கொரோனா வைரஸ் உள்பட. நமது உடலின் Immune system ஒரு மாபெரும் பாதுகாப்பு அரண். வைரஸோ, பாக்டீரியாவோ அல்லது வேறு ஒரு நுண்ணுயிரோ உடலுக்குள் புகுந்தவுடன் அவற்றை நமது உடல் இரு வகையான காரணிகளை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கிறது.

முதலாவது அந்த நுண்ணியிர் வெளியிடும் வேதியியல் பொருட்கள், இரண்டாவது அந்த நுண்ணியிரின் உருவம்.


இது வெளியில் இருந்து வந்த பொருள் என்பதை கண்டுபிடித்த உடனே நமது ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் அவற்றை கொல்லும் வேலையில் இறங்குகின்றன. வைரஸ், பாக்டீரியாவை அப்படியே விழுங்கி ஏப்பம் விடும் வேலைக்கு Macrophages, Neutrophils போன்ற அடியாட்களை வெள்ளை அணுக்கள் அனுப்புகின்றன.

ஆனால், இதையும் தாண்டி வைரஸோ பாக்டீரியாவோ உடலை பதம் பார்க்க ஆரம்பித்தால், அடுத்த கட்ட அரண்கள் வேலையில் இறங்கும். அதில் ஒன்று Innate lymphoid cells. இதன் ஒரு பிரிவான T- Killer cellகளின் வேலை வைரஸ்களால் பாதிக்கப்பட்ட உடல் செல்களை கொன்று, வெளியேற்றி உடல் திசுக்கள் மேலும் மோசமடையாமல் தடுப்பது. மேலும் வைரஸ்களுக்கு உணவாகிக் கொண்டிருக்கும் செல்களின் எண்ணிக்கையை குறைப்பது. இது தான் இதன் வேலை.

அதே நேரத்தில் Macrophages, Neutrophils போன்றவற்றால் தடுக்க முடியாத வைரஸ்களை ஒழித்துக் கட்ட நமது உடல் அனுப்பும் பிரம்மாஸ்திரம் தான் B cells எனப்படும் வைரஸ்களை தாக்கும் செல்கள். இந்த செல்கள் வைரஸ்களின் உருவத்தை அடையாளம் கண்டு, அதன் மீது ஒட்டிக் கொண்டு, அப்படியே இழுத்துச் சென்று Lumph nodes எனப்படும் நிணநீர் சுரப்பிகளில் வைத்து, அங்கு சுரக்கும் ரசாயனங்கள் உதவியோடு வைரஸ்களை கொல்லும்.

இந்த உடல் எதிர்ப்பு சக்தி ஒரு பக்கம் இருக்க...
தொண்டைப்பகுதியை அடைந்த கொரோனா வைரஸ்கள் அடுத்ததாக நமது உடலை பாதிப்பது நுரையீரலை. நுரையீரலின் உள் சுவற்றில் இருப்பவை மிக லேசான பில்லியன் கணக்கான எபிதீலியல் செல்கள். இந்த செல்களில் கொரோனா வைரஸ் ஒட்டிக் கொண்டு, துளை போட்டு தனது ஆர்என்ஏவை உள்ளே நுழைக்கும். இந்த ஆர்என்ஏ செல்லுக்குள் போய் லட்சக்கணக்கில் தனது பிரதிகளை ஜெராக்ஸ் மெசின் மாதிரி காப்பி எடுக்கும். இன்த ஒவ்வொரு ஆர்என்ஏவும் ஒரு வைரசாக மாறும்.

அந்த செல் முழுக்கவே வைரஸ்களால் நிறையும்போது, அந்த செல்லே வெடித்து மடியும். அந்த வெடிப்பில் இருந்து கிளம்பும் லட்சக்கணக்கான வைரஸ்கள் அடுத்தடுத்த செல்களை இதே போல தாக்கி அழித்து, பல்கிப் பெருகும். 10 நாட்களில் நுரையீரலின் பெரும்பாலான செல்களை இந்த வைரஸ் ஆக்கிரமிக்கும்.

இதுவரையும் கூட பிரச்சனை அதிகமில்லை. ஆனால், இந்த வைரஸ்களை அழிக்க நமது உடலின் Immune cells எனப்படும் எதிர் தாக்குதல் செல்கள் நுரையீரலில் நுழைந்து தாக்க ஆரம்பிக்கும்போது தான் பிரச்சனையே துவங்குகிறது.


மற்ற வைரஸ்களில் இருந்து கொரோனா இங்கே தான் மாறுபடுகிறது. இந்த கொரோனா வைரஸ், நமது உடலின் எதிர் தாக்குதல் செல்களுக்குள்ளேயே நுழைந்து அதையும் சேதப்படுகின்றன. சேதப்படுத்துவதோடு மட்டுமல்ல, அந்த செல்களின் ஜீன்களில் குழப்பத்தையும் ஏற்படுத்துகின்றன.


*அது என்ன வகையான குழப்பம்...*
நமது Immune system செல்கள் ஒன்றோடு ஒன்று தகவல் பரிமாறிக் கொள்வது சைட்டோகைன்ஸ் (Cytokines) எனப்படும் ஒரு வேதிப் பொருள் மூலம் தான். ஜீன்கள் பாதிக்கப்பட்ட எதிர் தாக்குதல் செல்கள் குழப்பமான சைட்டோகைன் தகவல்கள் அனுப்ப, நுரையீரலை பாதுகாக்க கிளம்பி வரும் Neutrophils செல்கள், கொரோனா வைரஸ்களுக்கு பதலாக உடலின் எதிர்ப்பு சக்தி செல்களை தாக்க ஆரம்பிக்கும்.

தினசரி செய்தித்தாள் படிக்க இணையவும்- https://t.me/njm_epapers
வார மாத இதழ்கள் படிக்க இணையவும்- https://t.me/njm_magz

அதே போல பாதிக்கப்பட்ட நுரையீரல் செல்களை தற்கொலை செய்ய வைத்து நோய் மேலும் பரவாமல் தடுக்க வேண்டிய வேலைக்காக வரும் T- Killer cellகள் வந்த வேலையை விட்டு விட்டு, நன்றாக இருக்கும் நுரையீரல் செல்களை அழியச் சொல்லி தகவல் தரும். இதனால் நுரையீரல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி, அடுத்ததாக பாக்டீரியா தாக்குதல், நிமோனியா உள்ளிட்ட தோற்று நோய்களுக்கு ஆளாக நேரிடும். இந்த இடத்தில் தான் மரணங்கள் நிகழ்கின்றன.

இப்படி உடலின் எதிர்ப்பு சக்தியையே நமது உடலுக்கு எதிராக திருப்பி விடுவதில் தான் கொரோனா வைரசின் முழு சக்தியும் அடங்கியுள்ளது. வைரசின் உருவத்தை வைத்து அடையாளம காணும் B- cellகள் கூட கொரோனாவிடம் இதுவரை எளிதில் வெற்றியை ஈட்டவில்லை. இந்த வைரஸ்கள் அனுப்பும் வேதியல் தகவல்கள் (Cytokines) எல்லா நேரமும் ஒரே மாதிரியாக இல்லை. அவை லட்சக்கணக்கான வகைகளில் மாறிக் கொண்டே இருப்பதால் T-killer cells, B cells ஆகியவற்றால் இவற்றை சரியாக அடையாளம் காண முடியவில்லை. இது தான் இந்த வைரசுக்கு எதிராக மருந்தோ தடுப்பு ஊசியோ தயாரிப்பதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிபது.

நாம் உண்ணும் அல்லது ஊசி மூலம் போட்டுக் கொள்ளும் மருந்துகள் உடலுக்குள் சென்றவுடன் வேதியியல் தகவல்களாக மாறித்தான் நோயை ஏற்படுத்தும் கிருமிகளோடு நேரடியாக மோதுகின்றன அல்லது உடலின் Immune system- உடன் பேசி, வேண்டிய எதிர்ப்பு மருந்தை உடலையே தயாரிக்க வைக்கின்றன.

ஆனால், கொரோனா நமது உடல் எதிர்ப்பு சக்தி சிஸ்டத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றுவிடுவது தான் இந்த வைரசுக்கு எதிராக எந்த மருந்தை வைத்து போராடுவது என்ற குழப்பத்தில் மருத்துவ உலகை ஆழ்த்தியுள்ளது.

கொரோனா வைரஸ்களின் கெமிக்கல் தாக்குதல்களால் குழம்பிப்போன T-killer cells, B cells-களும் ஏற்கனவே கொரோனா பாதித்த நுரையீரல்களை மேலும் பாதித்து உலகெங்கும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால், ஏற்கனவே நுரையீரல் பிரச்சனை, நோய் எதிர்ப்பு சக்தியில் பிரச்சனை உள்ளவர்களில் தான் இந்த உயிரிழப்புகள் அதிகமாக ஏற்படுகிறது.


நல்ல உடல் நிலையில் உள்ளவர்களுக்கு பிரச்சனை குறைவாகவே உள்ளது. உடலில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பெரும் குழப்பத்துக்கிடையிலும் பெரும்பாலான நேரங்களில் நமது உடல் எதிர்ப்பு சக்தி சிஸ்டம் கொரோனா வைரஸை தோற்கடித்துவிடுகிறது.

நீரிழிவு நோய் உள்ளவர்களின் ரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையால் உடலின் எதிர்ப்பு சக்தி முடக்குகிறது. அதே போல இதயக் கோளாறு, பி.பி உள்ளவர்களின் உடலில் நுண்ணிய ரத்தக் குழாய்கள் போதிய ரத்தத்தை எடுத்துச் செல்வதில் சிக்கல் வருவதால், உடலின் எல்லா பகுதிக்கும் போதி சக்தி கிடைப்பதில்லை, நோய் எதிர்ப்பு சக்தி உள்பட. ஆனால், சர்க்கரை அளவும் பிபியும் மருந்துகள், உடற்பயிற்சி மூலம் கட்டுப்பாட்டில் உள்ளவர்களுக்கு பிரச்சனை இல்லை. இங்கேயும் உடலின் எதிர்ப்பு சக்தி கொரோனாவை தோற்கடித்துவிடுகிறது என்பது தான் நல்ல செய்தி.

கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிடுவார்களா?
தெரியவில்லை.

35 ஆண்டுகளுக்கு முன் வந்த எய்ட்ஸ் நோய்க்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த எச்ஐவி வைரசும் கொரோனா வைரஸ் ரகத்தை சேர்ந்தது தான். அதுவும் நமது உடலின் எதிர்ப்பு சக்தியை கதிகலங்க வைக்கும் வைரஸ் தான்.

ஆனால், கொரோனா மாதிரி எச்ஐவி இவ்வளவு சாதாராணமாக இருமல், தும்மல் மூலம் எல்லாம் பரவவில்லை. அந்த வகையில் கொரோனா தான் கொடூரம்.

அதற்குத் தான் வீட்டிலேயே முடங்க சொல்கிறார்கள்.

இன்னும் மருந்து இல்லாத நிலையில், இந்த நோயில் இருந்து தப்பிப்பதே உசிதம்.

இந்த நோய் தாக்குதலை தவிர்ப்பதே இதற்கான இப்போதையே ஒரே மருந்து!

வெள்ளி, 13 மார்ச், 2020

8 மாவட்டங்களில் தமிழக அரசு நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 2020

8 மாவட்டங்களில் தமிழக அரசு நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 2020


தமிழக அரசும் தனியார் துறை நிறுவனங்களும் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் நடைபெற இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பு முகாம் சேலம், சென்னை, திருவள்ளூர், சிவகங்கை, திருவண்ணாமலை, பெரம்பலூர், காஞ்சிபுரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நடைபெற இருக்கிறது. இந்த வேலைவாய்ப்பு முகாம் பற்றிய முழுமையான தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி :
பத்தாம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.
பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்த ஆண்கள், பெண்கள் என இருபாலரும் கலந்து கொள்ளலாம்.
வயது வரம்பு :
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 18 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள் :
சேலம் மாவட்டம் - காலை 10 மணிமுதல் மதியம் 3 மணி வரை 13-03-2020, 20-03-2020, 27-03-2020 ஆகிய தேதிகளில் முகாம் நடைபெறும்.
சென்னை மாவட்டம் - காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை 13-03-2020, 20-03-2020 ஆகிய தேதிகளில் முகாம் நடைபெறும்.
திருவள்ளூர் மாவட்டம் - காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை 14-03-2020 அன்று முகாம் நடைபெறும்.
சிவகங்கை மாவட்டம் - காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை 14-03-2020 அன்று முகாம் நடைபெறும்.
திருவண்ணாமலை மாவட்டம் - காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை 14-03-2020 அன்று முகாம் நடைபெறும்.
காஞ்சிபுரம் மாவட்டம் - காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 14-03-2020 அன்று முகாம் நடைபெறும்.
நீலகிரி மாவட்டம் - காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 14-03-2020 அன்று முகாம் நடைபெறும்.
பெரம்பலூர் மாவட்டம் - காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை 21-03-2020 அன்று முகாம் நடைபெறும்.
வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் முகவரி :
சேலம் மாவட்டம்
மாடல் கரீர் சென்டர்,
பெண்கள் கலைக்கல்லூரி அருகில்,
கோரிமேடு, சேலம் - 08.
சென்னை மாவட்டம்
புரோபஷனல் அண்ட் எக்ஸிக்யூட்டிவ் எம்பிளாய்மெண்ட் ஆபீஸ்,
இன்ட கிரேடட் எம்பிளாய்மெண்ட் ஆபீஸ் கேம்பஸ்,
பெண்கள் ஐடிஐ அருகில்,
ஆலந்தூர் ரோடு, கிண்டி,
சென்னை - 32.
திருவள்ளூர் மாவட்டம்
எல் என் அரசு கலை கல்லூரி,
பொன்னேரி,
திருவள்ளூர் மாவட்டம்.
சிவகங்கை மாவட்டம்
அரசு பெண்கள் கலைக் கல்லூரி,
காஞ்சிரங்கால்,
சிவகங்கை மாவட்டம்.
திருவண்ணாமலை மாவட்டம்
அரசு கலைக்கல்லூரி,
திருவண்ணாமலை மாவட்டம்.
காஞ்சிபுரம் மாவட்டம்
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி,
திருக்கழுக்குன்றம்,
செங்கல்பட்டு மாவட்டம்,
காஞ்சிபுரம் - 603109.
நீலகிரி மாவட்டம்
பிளாண்டேஷன் ஒர்க்கர்ஸ் இண்டஸ்ட்ரியல் ட்ரைனிங் இன்ஸ்டிட்யூட்,
கூடலூர்,
நீலகிரி மாவட்டம்.
பெரம்பலூர் மாவட்டம்
ஸ்ரீ சாரதா பெண்கள் அறிவியல் மற்றும் கலை கல்லூரி,
பெரம்பலூர் மாவட்டம்.
வேலை வாய்ப்பு முகாமிற்கு கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள் :
இந்த வேலைவாய்ப்பு முகாமிற்கு செல்லும்பொழுது உடன் கல்விச் சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், மதிப்பெண் சான்றிதழ் நகல், மாற்றுச் சான்றிதழ் நகல், மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் எடுத்துச் செல்ல வேண்டும். அத்துடன் ஒரிஜினல் சான்றிதழ்களும் எடுத்துச் செல்ல வேண்டும்.