8 மாவட்டங்களில் தமிழக அரசு நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 2020
தமிழக அரசும் தனியார் துறை நிறுவனங்களும் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் நடைபெற இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பு முகாம் சேலம், சென்னை, திருவள்ளூர், சிவகங்கை, திருவண்ணாமலை, பெரம்பலூர், காஞ்சிபுரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நடைபெற இருக்கிறது. இந்த வேலைவாய்ப்பு முகாம் பற்றிய முழுமையான தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி :
பத்தாம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.
பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்த ஆண்கள், பெண்கள் என இருபாலரும் கலந்து கொள்ளலாம்.
வயது வரம்பு :
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 18 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள் :
சேலம் மாவட்டம் - காலை 10 மணிமுதல் மதியம் 3 மணி வரை 13-03-2020, 20-03-2020, 27-03-2020 ஆகிய தேதிகளில் முகாம் நடைபெறும்.
சென்னை மாவட்டம் - காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை 13-03-2020, 20-03-2020 ஆகிய தேதிகளில் முகாம் நடைபெறும்.
திருவள்ளூர் மாவட்டம் - காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை 14-03-2020 அன்று முகாம் நடைபெறும்.
சிவகங்கை மாவட்டம் - காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை 14-03-2020 அன்று முகாம் நடைபெறும்.
திருவண்ணாமலை மாவட்டம் - காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை 14-03-2020 அன்று முகாம் நடைபெறும்.
காஞ்சிபுரம் மாவட்டம் - காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 14-03-2020 அன்று முகாம் நடைபெறும்.
நீலகிரி மாவட்டம் - காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 14-03-2020 அன்று முகாம் நடைபெறும்.
பெரம்பலூர் மாவட்டம் - காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை 21-03-2020 அன்று முகாம் நடைபெறும்.
வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் முகவரி :
சேலம் மாவட்டம்
மாடல் கரீர் சென்டர்,
பெண்கள் கலைக்கல்லூரி அருகில்,
கோரிமேடு, சேலம் - 08.
சென்னை மாவட்டம்
புரோபஷனல் அண்ட் எக்ஸிக்யூட்டிவ் எம்பிளாய்மெண்ட் ஆபீஸ்,
இன்ட கிரேடட் எம்பிளாய்மெண்ட் ஆபீஸ் கேம்பஸ்,
பெண்கள் ஐடிஐ அருகில்,
ஆலந்தூர் ரோடு, கிண்டி,
சென்னை - 32.
திருவள்ளூர் மாவட்டம்
எல் என் அரசு கலை கல்லூரி,
பொன்னேரி,
திருவள்ளூர் மாவட்டம்.
சிவகங்கை மாவட்டம்
அரசு பெண்கள் கலைக் கல்லூரி,
காஞ்சிரங்கால்,
சிவகங்கை மாவட்டம்.
திருவண்ணாமலை மாவட்டம்
அரசு கலைக்கல்லூரி,
திருவண்ணாமலை மாவட்டம்.
காஞ்சிபுரம் மாவட்டம்
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி,
திருக்கழுக்குன்றம்,
செங்கல்பட்டு மாவட்டம்,
காஞ்சிபுரம் - 603109.
நீலகிரி மாவட்டம்
பிளாண்டேஷன் ஒர்க்கர்ஸ் இண்டஸ்ட்ரியல் ட்ரைனிங் இன்ஸ்டிட்யூட்,
கூடலூர்,
நீலகிரி மாவட்டம்.
பெரம்பலூர் மாவட்டம்
ஸ்ரீ சாரதா பெண்கள் அறிவியல் மற்றும் கலை கல்லூரி,
பெரம்பலூர் மாவட்டம்.
வேலை வாய்ப்பு முகாமிற்கு கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள் :
இந்த வேலைவாய்ப்பு முகாமிற்கு செல்லும்பொழுது உடன் கல்விச் சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், மதிப்பெண் சான்றிதழ் நகல், மாற்றுச் சான்றிதழ் நகல், மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் எடுத்துச் செல்ல வேண்டும். அத்துடன் ஒரிஜினல் சான்றிதழ்களும் எடுத்துச் செல்ல வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக