திங்கள், 30 மார்ச், 2020

இளஞ்சிவப்பு கடற்கரைகள்


இளஞ்சிவப்பு கடற்கரைகள்

வெள்ளை மற்றும் சாம்பல்  வண்ணம் கொண்ட கடற்கரைகளைக் கேள்விப்பட்டிருப்போம்; பார்த்திருப்போம். உங்களுக்கு வித்தியாசமான வண்ணங்களில் இயற்கை எழில் கொஞ்சும் அழகு களில் கடற்கரைகளைக் காண வேண்டுமா? அதற்கு பெர்முடா, கிரீஸ், ஸ்பெயின், இந்தோனேஷியா மற்றும் பஹாமாஸ் நோக்கி பயணிக்க வேண்டும். அங்கே குறிப்பிட்ட இடங்களில் உள்ள கடற்கரைகளைக் கண்டுவிட்டால் வியப்பின் ஆச்சர்யத்தில் கூக்குரலிட ஆரம்பித்துவிடுவீர்கள். இளஞ்சிவப்பு வண்ணத்தில் கடற்கரை மணலையும், முகம் பார்க்கும் அளவுக்கு தெளிவான தண்ணீரையும் காண்பதற்கு இரண்டு கண்கள் போதாது. அந்த அழகான இளஞ்சிவப்புக் கடற்கரைகளைப் பார்ப்போம்.

* எல்போ மற்றும் ஹார்ஸ்ஷுபே கடற்கரை, பெர்முடா. பிரிட்டிஷை ஒட்டி வட அட்லாண்டிக் கடல் பகுதியில் உள்ள இந்த இளஞ்சிவப்பு வண்ண கடற்கரையில் பயணிக்கும்போது இயற்கையின் அழகையும், அற்புதத்தையும் ஒன்றுசேர ரசிக்கலாம். இந்தக் கடற்கரையில் பல சுற்றுலாப் பயணிகள் இன்னமும் தங்கள் கால்களைப் பதித்ததில்லை. இங்குள்ள நூதன இடங்களும் காட்சிகளும் உங்கள் கண்களுக்கு விருந்தாக அமையும்.

* இலாஃபோனிசி அண்ட் பலூஸ் கடற்கரைகள், கிரீஸ். கிரீஸ் நாட்டின் கிரீட் பகுதியில் இவை அமைந்துள்ளன. கோடைகால சுற்றுலாப் பயணிகளும், தேனிலவு கொண்டாடுபவர் களும் கூடும் இடம் இது.சானியாவிலிருந்து இலாஃபோனிசி கடற்கரை உள்ள பகுதிக்குச்செல்லும் வழி முழு வதும், இயற்கை கொஞ்சும் கடற்காட்சிகளை ரசித்துச் செல்லலாம். சுத்தமான தண்ணீர் உங்களை நீச்சல் அடிக்கத் தூண்டும். ஒய்யாரமாக நடைபோட வைக்கும்.  இளஞ்சிவப்பு வண்ண மணல் கொண்ட கடற் கரையும், தெளிவான தண்ணீரும் சுற்றுலாப் பயணிகளை இங்கு குவிக்கின்றன.

* ப்ளயா டிசெஸ் இல்லிடீஸ் ஃபார்மென்டரியா, ஸ்பெயின். இபிஷாவிலிருந்து ஒரு படகை வாடகைக்குப் பிடித்து இந்த கடற்கரையை நோக்கிச் செல்ல வேண்டும். இளஞ்சிவப்பு வண்ண மணல் கொண்ட கடற்கரை, இயற்கை கொஞ்சும் வண்ணங் களைக் கொண்ட கடல் தண்ணீர் சுற்றுலாப் பயணிகளை சுண்டி இழுக்கிறது. கூடுதலாக இங்கு தரமான உணவகங்கள் மற்றும் தங்குமிடங்கள் உள்ளதால், 
ஏராளமானோர் குவிகின்றனர்.

* லாபாயின் பாஜோ, லோம்பாக் தீவு மற்றும் கொமோடோ தீவு, இந்தோனேஷியா. சுற்றுலாப் பயணிகள் இன்னமும் சரியாக கால் பதிக்காத இடம்.  கடல் தண்ணீரின் வண்ணமும், இளஞ்சிவப்பு வண்ண மணலும், காண்போரை சுண்டி இழுக்கின்றன. லோம்பாக் தீவுக்கு பாலியிலிருந்து எளிதில் படகில் பயணிக்கலாம். கொமோடோ தீவில் புரா ணங்களில் வரும் ஆச்சர்ய காட்சிகளை ரசிக்கலாம்.

* பிங்க் மணல் கடற்கரை, ஹார்பர் தீவு, பகா மாஸ். ஹாலிவுட் நட்சத் திரங்கள் அடிக்கடி விஜயம் செய்யும்  பகுதி இது. கிழக்கு அட்லாண்டிக் கடற்பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள தண்ணீர் ஆழமில்லாதது. நீந்துவதற்கு ஏற்ற இடம். பவளப்பாறைகளில் போரா மினி பெர்ரா என்ற குட்டியான ஜீவராசி வசிக்கிறது. அவற்றின் சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்களே கடல்மண்ணில் கலந்து அழகூட்டுகிறது.
நன்றி குங்குமம் முத்தாரம்

Posted by .
 -புவனாமகேந்திரன்.
    மதி கல்வியகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக