ஓஸோன் பற்றிய சில தகவல்கள் சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம்
ஓஸோன் என்பது மூன்று ஆக்ஸிஜன் அணுக்கள் சேர்ந்தது ஒரு ஓஸோன் துகள் என்று கூறுகிறோம். நாம் சுவாசிக்கும் பிராண வாயுவில் தனிமத்தின் அளவு இரண்டு ஆக்ஸிஜன் அணுக்கள். பயங்கர இடி இடித்து மழை பெய்து முடித்தவுடன் காற்று துல்லியமாக இருப்பதற்கு ஓஸோன் தான் காரணம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரிய ஒளிக் கதிர்களில் இருந்து அகச்சிவப்பு கதிர்கள் மற்றும் புற ஊதா கதிர்கள் வரும். இந்த புற ஊதா கதிர்கள் பூமிக்கு வந்து நம்மையும் மற்ற உயிரனங்களையும் தாக்காமல் இந்த ஓஸோன் படலம் காக்கின்றது. பூமியைச் சுற்றி சுமார் முப்பது கி.மீ உயரத்தில் இந்த ஓஸோன் படலம் இருக்கிறது.
நமக்கு குடிநீர் சப்ளை செய்யும் குடிநீர் வாரியத்தின் தண்ணீரில் "சப்" என்று ருசி இல்லாமல் இருப்பதை மாற்றி சுவையை கூட்ட ஓஸோனில் காட்டி அனுப்புவர். இது ருசியையும் அதிகரிக்கும் மற்றும் தண்ணீரில் இருக்கும் பாக்டீரியாவையும் நீக்கும். கெமிக்கல் ஆலைகளில் எண்ணெய்களில் இருக்கும் கந்தக சக்தியை அகற்றுவதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு செய்தால் பாய்லர்களின் தரம் குறையாமல் அதிக காலம் வரை பாதுகாக்கலாம். கடற்கரை ஓரங்களில் காணப்படும் ஈரப்பதத்திற்கும் இந்த ஓஸோன் தான் காரணம்.
இந்த ஓஸோன் படலம் பாதிக்கப்பட்டால் பூமியின் வெப்ப நிலை அதிகமாக இருக்கும். புற ஊதா கதிர்களின் தாக்கம் நேரடியாக நம்மை தாக்கினால் தோல் புற்றுநோய், தோல் சுருக்கம் மற்றும் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் அபாயம் போன்ற பாதிப்புகள் இருக்கும். எனவே இந்த ஓஸோன் படலம் பாதிக்காமல் நாம் பாதுகாக்க வேண்டும். குளிரூட்டிகள் மற்றும் புகையிலை தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகையினையும் குறைக்க வேண்டும். ஏற்கனவே ஓஸோனில் ஓட்டை இருப்பது அனைவரும் அறிந்ததே. மேலும் பாதிக்கப்படாமல் அதனை காக்க அனைவரும் ஒன்று சேர்ந்து முயற்சி செய்ய வேண்டும். வருடா வருடம் செப்டம்பர் மாதம்16ம் தேதி உலக ஓஸோன் தினமாக கொண்டாடப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக