மழையைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள் தெரிந்து கொள்ளலாம்
"நீரின்றி அமையாது உலகு" என்பது வள்ளுவர் வாக்கு. மனித இனமான நமக்கு மட்டுமல்ல உலகில் வாழுகின்ற அனைத்து வகையான உயிரனங்கள் மற்றும் தாவரங்கள் அனைத்திற்கும் நீரானது மிகவும் அவசியம். நீர் உருவாக மழை நமக்கு தேவை.
மழை எவ்வாறு உருவாகிறது? பூமியில் இருக்கும் நீர் ஆவியாகி மேகங்கள் மூலம் சேமிக்கபடுகிறது. குறிப்பிட்ட சில பருவகாலத்தில் மேகங்களில் நீர் கூறுகள் சேமிக்கபட்டு குளிர்ந்த காற்றின் மூலமாக மழை பூமியில் பொழிகிறது.
தண்ணீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
அதனை தடுக்க உலகம் முழுவதும் ஏதோ ஒரு முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். செயற்கை மழையை பெறுவது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். செயற்கை மழையை ஊருவாக்குவது கூட மழை பொழிய வாய்ப்பு இருக்கும் சமயத்தில் மட்டுமே முயற்சிக்க முடியும். அதாவது பெய்யக்கூடிய மழையின் அளவை மட்டுமே அதிகரிக்க செய்ய முடியும். பொட்டாசியம் நைட்ரேட், சில்வர் அயோடைடு ஆகிய வேதிப்பொருள்கள் மேகத்தின் மேலே தூவுவதின் மூலமாக மேகத்தின் எடையை கூட்டி செயற்கையாக மழையை வரவைக்கலாம். இதற்கு ஆகும் செலவு அதிகம். சீன நாட்டு விஞ்ஞானிகள் இதனை தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். திபெத் பீடபூமியில் இதற்காக ஒரு கட்டமைப்பை அமைத்துள்ளனர். துபாய் நாட்டில் ஏற்கனவே செயற்கை முறையில் மழை பொழிவை செயல்படுத்தி இருக்கின்றனர்.
முடிந்த வரை தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம் வரும் சந்ததியினருக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக