செவ்வாய், 31 டிசம்பர், 2019

2020... ஆண்டின் முதல் நாள்... ஜனவரி 01... வரலாறு என்ன சொல்கிறது?



2020... ஆண்டின் முதல் நாள்... ஜனவரி 01... வரலாறு என்ன சொல்கிறது?

🎉 🎉 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....! 🎉 🎉



'இதயம் கூட ஒரு வெற்று காகிதம்தான்
வருடத்தின் முதல் நாள் அன்று
இனி புதிதாக எழுத ஆரம்பிப்போம்....!

இனி வரும் நாட்களில் முயற்சிகள் எல்லாம்
இமயத்தை தாண்டிச் சென்று சாதனைகள் படைக்கும்
என்ற நம்பிக்கையோடு அடியெடுத்து வையுங்கள்...!

நீங்கள் தொலைத்த வெற்றிகள் எல்லாம்
இனி உங்களுக்கு
ஒரு புது முகவரி தேடித் தரும்
இந்த இனிய புத்தாண்டில்......!"

🎉🎉🎉புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2020🎉🎉🎉இன்றைய பொன்மொழி !
'உன் வெற்றிகளை எண்ணி பார்க்காதே... உன் தோல்விகளை மட்டும் எண்ணிப்பார்... வெற்றியை விட உயர்ந்தது." சத்தியேந்திர நாத் போஸ்



இந்திய இயற்பியலாளர் சத்தியேந்திர நாத் போஸ் 1894ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார்.

இவர் 1920ஆம் ஆண்டுகளில் குவாண்டம் துறையில் மேற்கொண்ட ஆய்விற்காகவும், அதன் மூலம் போஸ்-ஐன்ஸ்டீன் செறிபொருள், போஸ்-ஐன்ஸ்டீன் புள்ளியியல் போன்ற தத்துவங்களுக்காகவும் அறியப்படுகிறார். இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவரான பால் டிராக் என்பவரால் போஸான் வளிமத்திற்கு இவரது நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது.

இவர் அறிவியலில் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி பத்ம விபூஷண் விருது இவருக்கு இந்திய அரசால் 1954ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இவர் 1974ஆம் ஆண்டு மறைந்தார். முக்கிய நிகழ்வுகள்
1995ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி உலக வணிக அமைப்பு உருவாக்கப்பட்டது.
1992ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி கோபால் (ஊழுடீழுடு) நிரலாக்க மொழியை கண்டறிந்த கிரேஸ் முர்ரே ஹாப்பர் மறைந்தார்.
1999ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி யூரோ நாணயம் (ஐரோப்பா) அறிமுகமானது.1881ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி மணியார்டர் அனுப்பும் முறை தொடங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக