புதன், 14 டிசம்பர், 2016

தமிழிலக்கிய வினா - விடை 1000

தமிழிலக்கிய வினா - விடை 1000

தமிழிலக்கிய வினா - விடை 1000 ,அகர வரிசையில் வெளியிடப்பெற்ற முதல் நூல்
1.        அகத்திய மாணவர்களின் எண்ணிக்கை -12
2.        அகத்தியர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததாகக் கூறும் செப்பேடு - வேள்விக்குடிச் செப்பேடு
3.        அகநானூற்றில் 1,3,5,7 என ஒற்றைப்படை எண் கொண்ட திணைப்பாடல்கள் – பாலைத்திணை
4.        அகநானூற்றில் 10,20,.40 போல 0,என முடியும்  திணைப்பாடல்கள்– நெய்தல்திணை
5.        அகநானூற்றில் 2,8,12,18 போல 2,8 ,என முடியும்  திணைப்பாடல்கள் – குறிஞ்சித்திணை
6.        அகநானூற்றில் 4,14,24,34 போல 4, என முடியும்  திணைப்பாடல்கள் – முல்லைத்திணை
7.        அகநானூற்றில் 6,16,26,36 போல 6,என முடியும்  திணைப்பாடல்கள் – மருதத்திணை
8.        அகநானூற்றில் பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் – நோய்பாடியார், ஊட்டியார்
9.        அகநானூற்றின் அடிவரையறை – 13 – 31 அடிகள்
10.     அகநானூற்றின் இரண்டாம் பகுதி – மணிமிடைப்பவளம்
11.     அகநானூற்றின் நூல் முழுமைக்கும் உரை எழுதியவர்கள் ,– வேங்கடசாமி  நாட்டார் , இரா.வேங்கடாசலம்பிள்ளை
12.     அகநானூற்றின் பாடல்களுக்கு உள்ள பழைய உரை எண்ணிக்கை– 90
13.     அகநானூற்றின் பிரிவுகள் – 3 ,களிற்றுயானைநிரை,மணிமிடைப்பவளம்,நித்திலக்கோவை
14.     அகநானூற்றின் முதல் பகுதி -களிற்றுயானை நிரை
15.     அகநானூற்றின் முதல் பதிப்பாசிரியர்  – வே.இராசகோபால்
16.     அகநானூற்றின் மூன்றாம் பகுதி – நித்திலக்கோவை
17.     அகநானூற்றுக்கு வழங்கும் வேறு பெயர் - நெடுந்தொகை
18.     அகநானூற்றுக்குப் பாயிரம் எழுதியவர் -– இடையன் நாட்டு மணக்குடியான் பால்வண்ணத்தேவன் வில்வதரையன்
19.     அகநானூற்றைத் தொகுத்தவர் – உப்பூரிக்குடிக்கிழார் மகனார் உருத்திரசன்மன்
20.     அகநானூற்றைத் தொகுப்பித்தவன் – பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
21.     அகப்பொருள் பாடுவதற்கேற்ற சிறந்த யாப்பு வடிவங்கள் -– கலிப்பா,பரிபாடல் ( தொல்காப்பியர்)
22.     அகராதி நிகண்டு ஆசிரியர் – சிதம்பரம் வனசித்தர்
23.     அகலிகை வெண்பா நூலாசிரியர் – சுப்பிரமணிய முதலியார்
24.     அசோகன் காதலி நாவலாசிரியர் - அரு.ராமநாதன்   
25.     அசோமுகி நாடக ஆசிரியர் - அருணாசலக் கவி
26.     அஞ்சி ஓடுவோர் மீது பகை தொடுதல் -  தழிஞ்சி
27.     அடிக்குறிப்புகளால் சிறப்பு பெற்ற நூல்கள் –ஐங்குறுநூறு,பதிற்றுப்பத்து
28.     அடிநூல் ஆசிரியர் –நத்தத்தனார்
29.     அடியார்க்கு நல்லாரை ஆதரித்தவர் -- பொன்னப்ப காங்கேயன்
30.     அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அற நூல் -  திருக்குறள்
31.     அதியமானைச் சிறப்பித்துப் பாடிய புலவர் -ஔவையார்
32.     அந்தகக் கவிராயர் எழுதிய உலா – திருவாரூர் உலா
33.     அந்தாதித் தொடை முதலில் இடம் பெற்ற நூல் – பதிற்றுப்பத்து –நான்காம் பத்து
34.     அப்துல் ரகுமானின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல் -  ஆலாபனை - 1999
35.     அப்பாவின் ஆசை,சிறுவர் நாடகம் – அரு.இராமநாதன்
36.     அபிதான சிந்தாமணி எனும் பேரகராதியை இயற்றியவர் – ஆ.சிங்காரவேலு முதலியார்
37.     .       அம்பிகாபதி அமராவதி நாடக ஆசிரியர் -   மறைமலையடிகள்
38.     அம்பிகாபதிக் கோவையைப் பாடியவர் - அம்பிகாபதி
39.     அம்மா வந்தாள் நாவல் ஆசிரியர் - தி.ஜானகிராமன்
40.     அமரதாரா எனும் கல்கியின் கடைசி நாவலைப் பூர்த்தி செய்தவர் – கல்கியின் மகள் ஆனந்தி
41.     அமிர்த சாகரர் பிறந்த ஊர் - தீபங்குடி
42.     அரக்கு மாளிகை  நாவலாசிரியர் –  லட்சுமி
43.     அரசனால்செய்யப்படும்சிறப்பு - மாராயம், எட்டி ,ஏனாதி,காவிதி,
44.     அரசனின் துயில் சிறப்பைக் கூறுவது - கண்படை நிலை – வாகைத் திணை
45.     அரசனுக்கு அறிவுரை கூறுவது - செவியறிவுறூஉ –பாடாண்
46.     அரிகேசரி என அழைக்கப்படும் மன்னன் – நின்ற சீர் நெடுமாறன்
47.     அரிச்சந்திர புராண ஆசிரியர் - வீரகவிராயர்
48.     அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராய் இருந்தவர் – மாணிக்கவாசகர்
49.     அருணகிரிநாதரின் சந்தப்பாடல் நூல் – திருப்புகழ்
50.     அரும்பைத் தொள்ளாயிரம் ஆசிரியர் -ஒட்டக்கூத்தர்
51.     அளவையால் பெயர் பெற்ற பழைய உரை – பன்னிருபடலம்
52.     அலி பாதுஷா நாடக ஆசிரியர் - வண்ணக் களஞ்சியப் புலவர்
53.     அவ்வையார் நாடக ஆசிரியர் – எத்திராஜு
54.     அவனும் அவளும் நூலின் ஆசிரியர் – நாமக்கல் கவிஞர்
55.     அழிந்துபட்ட படைக்கு மாறாகப் பிறர் நின்று தடுத்து நிறுத்துதல் - அழிபடைத்தாங்கல்         
56.     அறநெறிச்சாரம் பாடியவர்  - முனைப்பாடியார்
57.     அற்புதத் திருவந்தாதி பாடியவர் –  காரைக்காலம்மையார்
58.     அறிஞர் அண்ணா தமிழ் நாட்டின் பெர்னாட்ஷா என்றவர் – கல்கி
59.     அறுவகை இலக்கண ஆசிரியர் - வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள
[1260.     அன்று வேறு கிழமை புதுக்கவிதையாசிரியர் – ஞானக்கூத்தன்
61.     அன்னி மிஞிலி  காப்பிய நாடகம் எழுதியவர் – மு.உலகநாதன்
62.     அஷ்டபிரபந்தத்தின் மறுபெயர் – திவ்யபிரபந்த சாரம்
63.     ஆசாரக்கோவை ஆசிரியர் - பெருவாயின் முள்ளியார்
64.     ஆசாரிய ஹிருதயம் நூலாசிரியர் – அழகிய மணவாளர்
65.     ஆசிரியர் பெயர் தெரியாத சங்கப்பாடல்கள் எண்ணிக்கை – 102
66.     ஆட்டனத்தி ஆதிமந்தி ஆசிரியர் – கண்ணதாசன்
67.     ஆண்டவர் பிள்ளைத்தமிழ் பாடியவர் - சவ்வாது புலவர்
68.     ஆண்டிப் புலவர் எழுதிய நிகண்டு – ஆசிரிய நிகண்டு
69.     ஆணை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது – பரணி
70.     ஆத்மபோத பிரகாசிகை நூலாசிரியர் – சரவணமுத்துப் புலவர்
71.     ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியின் சிறப்பு- – கி.மு.800 காலத் தமிழ் எழுத்துக்கள் இடம்பெற்றது.
72.     ஆபுத்திரனுக்கு அட்சய பாத்திரம் தந்தவர் - சிந்தாதேவி
73.     ஆயிடைப்பிரிவு  -பரத்தையிற்பிரிவு
74.     ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்’ என்ற நூலின் ஆசிரியர்-– கனகசபைப்பிள்ளை
75.     ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்த எழுதப் பெற்ற இலக்கிய நூல் -குறிஞ்சிப் பாட்டு       
76.     ஆலவாயழகன் நாவல் ஆசிரியர் -  ஜெகசிற்பியன்
77.     ஆறாம் இலக்கணம் – புலமை இலக்கனம்
78.     ஆறில் ஒரு பங்கு நாவலாசிரியர் – பாரதியார்
79.     ஆறுமுக நாவலர்க்கு நாவலர் பட்டம் வழங்கிய நிறுவனம் –திருவாவடுதுறை மடம்
80.     இசை ஆராய்ச்சிக்குப் பெருந்துணை புரிந்த உரை – அடியார்க்கு நல்லார் உரை
81.     இசைச்சங்க இலக்கியங்கள் – குருகு ,வெண்டாழி, வியாழமாலை அகவல்
82.     இடைக்காலத்தில் தோன்றிய நாடகம் – குறவஞ்சி
83.     இடைச் சங்கத்தில்  இருந்த  மொத்த புலவர்கள் – 3700
84.     இடைச் சங்கத்தை ஆதரித்த அரசர்கள்  - 59
85.     இடைச்சங்க இலக்கியங்கள் – அகத்தியம் ,தொல்காப்பியம், மாபுராணம், பூதபுராணம்,இசைநுணுக்கம்
86.     இடைச்சங்கம் இருந்த இடம் – கபாடபுரம்
87.     இடைச்சங்கம் இருந்த மொத்த  ஆண்டுகள்  - 3700
88.     இதிகாச நிகழ்வுகள் அதிகம் இடம் பெற்ற நூல் – கலித்தொகை
89.     இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல கவிதையாசிரியர் – வைரமுத்து
90.     இந்திய – அரபு எண்ணான பதின் கூற்று – பழந்தமிழர் கண்டுபிடிப்பு
91.     இந்திய மொழியில் முதன்முதலாக வெளிவந்த நூல் – துர்க்கேச நந்தினி ( 1865)
92.     இந்தியா எனும் இதழ் நடத்தியவர் - பாரதியார்
93.     இந்திரகாளியம் என்னும் பாட்டியல் நூலை எழுதியவர் – இந்திரகாளியர்
94.     இந்திராயன் படைப்போர் எழுதியவர் – புலவர் அலியார்
95.     இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் எனும் அடிகள் இடம் பெற்ற நூல் – புறநானூறு
96.     இயல்,இசை,நாடகம் குறித்துக் கூறிய முதல் நூல் – பிங்கலம்
97.     இயற்பா , இசைப்பா எனப்பிரிக்கப்படும் நூல் - நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
98.     இயற்பெயர் சுட்டப்படும் சங்கப்புலவர் எண்ணிக்கை – 470
99.     இரகுநாத சேதுபதி மன்னனின் அவைக்களப் புலவர் – படிக்காசுப் புலவர்
100.  இரட்சணிய குறள் எழுதியவர் – எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
101.  இரட்டைப் புலவர்கள் பாடிய உலா- ஏகாம்பரநாதர் உலா
102.  இரட்டைப் புலவர்களின் பெயர் – இளஞ்சூரியன் ,முதுசூரியன்
103.  இரண்டாம் குலோத்துங்கனிடம் அமைச்சராய் இருந்தவர் -சேக்கிழார்
104.  இரத்தினச் சுருக்கம் இயற்றியவர் – புகழேந்திப் புலவர்
105.  இராபர்ட் டி நொபிலி தமிழகம் வந்த ஆண்டு - 17 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம்
106.  இராம நாடகக் கீர்த்தனைகள் எழுதியவர் – அருணாசலக்கவிராயர்
107.  இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் - மருதூர்
108.  இராமலிங்க அடிகளின் பாடல் தொகுப்பு - திருவருட்பா
109.  இராமாயண உள்ளுறைப் பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் நூலாசிரியர் – சுப்பிரமணிய முதலியார்
110.  இராமானுச நூற்றந்தாதி பாடியவர் - அமுதனார்
111.  இராவண காவியம் நூலாசிரியர் - புலவர் குழந்தை
112.  இராஜ ராஜசுர நாடகம் நடிக்கப் பட்ட ஆண்டு – கி.பி.10-ஆம் நூற்றாண்டு
113.  இருபத்திரண்டு  மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல் – திருக்குறள்
114.  இரும்புக் கடல் என அழைக்கப் படும் நூல் – பதிற்றுப் பத்து
115.  இருவகை நாடகம் –இன்பியல், துன்பியல்
116.  இலக்கண உலகின் ஏகசக்கரவர்த்தி - பாணினி
117.  இலக்கண விளக்கச் சூறாவளி இயற்றியவர் – சிவஞான முனிவர்
118.  இலக்கண விளக்கம் நூலாசிரியர் - திருவாரூர் வைத்தியநாத தேசிகர்
119.  இலக்கணக் கொத்தின் ஆசிரியர் – சுவாமிநாத தேசிகர்
120.   இலக்கிய உதயம் நூலாசிரியர்               - எஸ்.வையாபுரிப் பிள்ளை
121.  இலக்கியம் இதழாசிரியர் - சுரதா
122.  இலங்கேசுவரன் நாடக ஆசிரியர் – ஆர்.எஸ்.மனோகர்
123.  இல்லாண்மை எனும் நூலாசிரியர் – கனக சுந்தரம் பிள்ளை
124.  இளங்கோவடிகளுக்குக் கண்ணகி கதையைக் கூறியவர்- சாத்தனார்
125.  இறந்த மறவன் புகழைப் பாடுதல் - மன்னைக் காஞ்சி
126.  இறந்தவனின் தலையைக் கண்டு அவன் மனைவி இறந்துபடுவது- தலையொடு முடிதல்
127.  இறந்து பட்ட வீரர்களுக்குப் பாணர்கள் இறுதிகடன் செய்வது- பாண்பாட்டு – தும்பை
128.  இறையனார் அகப்பொருளுக்கு உரை எழுதியவர் - நக்கீரர்
129.  இறைவன் திருஞானசம்பந்தருக்குப் பொற்றாளம் அளித்த தலம் – திருக்கோலக்கா
130.  இறைவன் மாணிக்கவாசகரைஆட்கொண்ட ஊர் – திருப்பெருந்துறை
131.  ஈட்டி எழுபது நூலின் ஆசிரியர் - ஒட்டக்கூத்தர்
132.  ஈரசைச் சீரின் வேறுபெயர் - ஆசிரிய உரிச்சீர்
133.  ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே பாடியவர் - பொன்முடியார்
134.  உ.வே.சா வின் ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
135.  உட்கார்ந்து எதிரூன்றல் -  காஞ்சி
136.  உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றவர் - திருமூலர்
137.  உண்டாட்டு - கள்குடித்தல்
138.  உண்டாலம்ம இவ்வுலகம் எனப் பாடியவர் - கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
139.  உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற நூல் - புறநானூறு
140.  உண்பவை நாழி ,உடுப்பவை இரண்டே –என்று பாடியவர் –நக்கீரர்
141.  உமைபாகர்  பதிகம் பாடியவர் – படிக்காசுப் புலவர்
142.  உயிர்களிடத்து அன்பு வேணும் எனப்பாடியவர் – பாரதியார்
143.  உரிச்சொல் நிகண்டு எழுதியவர் – காங்கேயர்
144.  உரிப்பொருள் எனத் தொல்காப்பியம் கூறுவது- ஒழுக்கம்
145.  உரை நூல்களுள் பழமையானது – இறையனார் அகப்பொருள் உரை –நக்கீரர்
146.  உரை மன்னர் எனக் கா.சு.பிள்ளை வியந்து பாராட்டப்படுபவர் -சிவஞானமுனிவர்
147.  உரையாசிரியச் சக்கரவர்த்தி – வை.மு.கிருஷ்ணமாச்சாரியார்
148.  உரையாசிரியர் என்றழைக்கப்படுபவர் - இளம்பூரணர்
149.  உரையாசிரியர்கள் காலம் -13- ஆம் நூற்றாண்டு
150.  உரையாசிரியர்கள் நூலாசிரியர் – மு.வை.அரவிந்தன்
151.  உரையாசிரியர்களால் அதிக மேற்கோள் காட்டப்பட்ட சங்கநூல் – குறுந்தொகை
152.  உரைவீச்சு நூலாசிரியர் - சாலை இளந்திரையன்
153.  உலக மொழிகள் நூலை எழுதியவர் - ச.அகத்தியலிங்கம்
154.  உலகப் பெருமொழிகளில் தனிநிலை வகை – சீனமொழி
155.  உலகம் பலவிதம் – சாமிநாத சர்மா
156.  உலகின் முதல் நாவல் – பாமெலா
157.  உவமானச் சங்கிரகம் நூலின் ஆசிரியர் – திருவில்லிபுத்தூர் திருவேங்கட ஐயர்
158.  உவமைக் கவிஞர்                    -சுரதா
159.  உழிஞை வேந்தனைத் திருமாலாகக் கொண்டு புகழ்ந்துரைப்பது  - கந்தழி
160.  உழிஞைத் திணைக்கான புறத்திணை – மருதம்
161.  உழுது வித்திடுதல் - உழி ஞைப்படலம்
162.  உள்ளத்தில் ஒளி உண்டாயின் ,வாக்கினிலே ஒலி உண்டாகும் ” – பாரதியார்
163.  உன்னம் - நிமித்தத்தை உணர்த்தும் மரம்
164.  ஊசிகள் கவிதை நூலாசிரியர் – மீரா
165.  ஊர்கொலை - தீயிட்டு அழித்தல்
166.  ஊரும் பேரும் நூலாசிரியர் – ரா.பி. சேது பிள்ளை
167.  ஊரொடு தோற்றம் உரித்தென மொழிப –எனும் நூற்பா கூறும் இலக்கியத்தின் அடிப்படை –உலா
168.  ஊற்றங்கால் ஆண்டிப்புலவர் உரை எழுதிய நூல் – நன்னூல்
169.  எகிப்து பிரமிடுகளில் காணப்படும் தமிழ்நாட்டுப் பொருட்கள்- தேக்கு மரம், மசுலின் துணிகள்
170.  எகிப்து,சுமேரியா,மொகஞ்சதாரோ,ஹரப்பா நாகரிகங்களு
170.  எகிப்து,சுமேரியா,மொகஞ்சதாரோ,ஹரப்பா நாகரிகங்களுக்கு அடிப்படையானவர்கள் – தமிழர்கள்
171.  . எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை எழுதிய இரட்சண்ய யாத்திரிகம் – ஜான்பான்யன் எழுதிய The pilgrims progress
172.  .       எட்டுத் தொகை நூல்களில் அக நூல்கள் எண்ணிக்கை – ஐந்து
173.  எட்டுத்தொகை நூல்களில் அதிகமான அடி வரையறை கொண்ட நூல் – பரிபாடல்
174.  எட்டுத்தொகை நூல்களில் புற நூல்கள் – 3
175.  எட்டுத்தொகை நூல்களுள் அக நூல்கள் – ஐங்குறு நூறு ,குறுந்தொகை, நற்றிணை,   அகநானூறு,கலித்தொகை
176.  எட்டுத்தொகை நூல்களுள் அகமும்,புறமும் கலந்த நூல் – பரிபாடல்
177.  எட்டுத்தொகை நூல்களுள் புற நூல்கள் – புறநானூறு ,பதிற்றுப்பத்து
178.  எட்டுத்தொகைப்பாடல்களின் -  சிற்றெல்லை – 3 அடிகள் ,பேரெல்லை – 140 அடிகள்
179.  எண்பெருந்தொகை நூல் – எட்டுத்தொகை
180.  எதிர் நீச்சல்  நாடக ஆசிரியர் – கே.பாலச்சந்தர்
181.  எயில் காத்தல் – நொச்சி
182.  எவ்வழி நல்லர் ஆடவர்,அவ்வழிநல்லை,வாழி நிலனே –என்றவர் – ஔவையார் –புறநானூறு
183.  எழுவாய் வேறுமைக்கு உருபு உண்டு என்றவர் – புத்தமித்திரர்
184.   என் சரிதம் ஆசிரியர் -உ.வே.சா
185.  ஏசு நாதர் சரித்திரம் நூலாசிரியர் - தத்துவ போதக சுவாமிகள்
186.  ஏமாங்கதத்து இளவரசன் நாவல் ஆசிரியர் – திரு.வி.க
187.  ஏழகம்  - ஆட்டுக்கிடாய்
188.  ஏழைபடும் பாடு  நாவலாசிரியர்  - சுத்தானந்த பாரதியார்
189.  ஏறுதழுவுதல் கூறும் சங்க நூல் – கலித்தொகை
190.  ஐங். ஆதன்,ஆவினி,குட்டுவன்,கருமான்,கிள்ளி மன்னர்களைக் கூறும் நூல் – ஐங்குறுநூறு
191.  ஐங்.இந்திரவிழா,மார்கழி நீராடல்,தொண்டி ,கொற்கை  இடம்பெற்ற நூல் – ஐங்குறுநூறு
192.  ஐங்.கழனி ஊரன் மார்பு பழமை ஆகற்க – ஐங்குறுநூறு
193.  ஐங்.குறிஞ்சி நூறு பாடியவர் – கபிலர்
194.  ஐங்.நெய்தல் நூறு பாடியவர் – அம்மூவனார்
195.  ஐங்.நெற்பல பொலிக,பொன் பெரிது சிறக்க –இடம் பெற்ற நூல் –ஐங்குறுநூறு
196.  ஐங்.பாலை நூறு பாடியவர் – ஓதலாந்தையார்
197.  ஐங்.பேதைப்பருவ மகளிரின் விளையாட்டுக்கள் இடம்பெற்ற நூல் – ஐங்குறுநூறு
198.  ஐங்.மருதம் நூறு பாடியவர் – ஓரம்போகியார்
199.  ஐங்.முல்லை நூறு பாடியவர் – பேயனார்
200.  ஐங்குறு நூறு அடி வரையறை- 3 -6 அடிகள்

201.  ஐங்குறுநூற்றில் கடவுள் வாழ்த்துப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்
202.  ஐங்குறுநூற்றில் பழைய உரை உள்ள பாடல் எண்ணிக்கை -469
203.  ஐங்குறுநூற்றை முதலில் பதிப்பித்தவர் – உ.வே.சா
204.  ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் – புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார்
205.  ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவர் – யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
206.  ஐங்குறுநூறு அடிவரையறை – 3 – 6
207.  ஐங்குறுநூறு பாவகை – அகவற்பா
208.  ஐங்குறுநூறுக்கு உரை எழுதியவர் – ஔவை துரைசாமிப் பிள்ளை
209.  ஐந்திணை எழுபது நூலின் ஆசிரியர் – மூவாதியார்
210.  ஐந்திணை ஐம்பது ஆசிரியர் - மாறன் பொறையனார்
211.  ஐந்திலக்கணம் கூறும் தமிழ் நூல் – வீரசோழியம்
212.  ஐந்திறம் – இந்திர வியாகர்ணம் எனும் சமஸ்கிருத இலக்கண நூல்
213.  ஐரோப்பிய நாடக அங்கங்கள் – 5 .
214.  ஒட்டக் கூத்தருக்கு வழங்கப்பட்ட விருது – காளம்
215.  ஒரிசி,சிச்சிபெரோ எனும் கிரேக்க சொற்களின் தமிழ்த் திரிபுகள் – அரிசி ,இஞ்சிவேர்
216.  ஒரு கொலை.ஒரு பயணம் ஆசிரியர் – சுஜாதா
217.  ஒரு நாள்  என்ற நாவல் ஆசிரியர் – க.நா.சுப்பிரமணியன்
218.  ஒரு புளியமரத்தின் கதை  நாவலாசிரியர் - சுந்தர ராமசாமி
219.  ஒரு மன்னனின் தமிழ்ப்பற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் - குலோத்துங்கச் சோழனுலா
220.  ஒருபிடி சோறு -  சிறுகதை நூல் ஆசிரியர் – த.ஜெயகாந்தன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக