சங்க கால வரலாறு
சங்க காலம் ( Sangam period ) என்பது
பண்டைய தென்னிந்திய
வரலாற்றில் நிலவிய தமிழகம்
தொடர்பான ஒரு
காலப்பகுதியாகும்.
இக்காலப்பகுதி கிமு நான்காம்
நூற்றாண்டில் இருந்து கிபி
இரண்டாம்
நூற்றாண்டு வரை
நீடித்திருக்கலாம் எனக்
கருதப்படுகிறது. மதுரையை
மையமாகக் கொண்டு
தமிழ்ப்புலவர்கள் சங்கம் அமைத்து
தமிழ் வளர்த்தனர் என்ற காரணத்தால்
இக்காலப்பகுதிக்கு இப்பெயர்
சூட்டப்பட்டுள்ளது.
"ஓங்கிய சிறப்பின் உயர்ந்த
கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக,
உலகமொடு நிலைஇய
பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக, என்
நிலவரை;" -- ( புறம்:72 )
என்று பாண்டியன்
தலையாலங்கானத்துச்
செருவென்ற நெடுஞ்செழியன்
பாடியுள்ள புறநானூற்றுப்
பாடல் வரிகளே இத்தகைய
புலவர்கள் கூட்டம் இருந்ததற்குச்
சான்றாகும்.
முற்காலத் தமிழ் மொழியில்
தமிழகம் என்ற சொல் 168 ஆவது
புறநானூற்றுப் பாடலில்
பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி
தமிழகம் என்று குறிக்கப்பட்ட
இப்பகுதி முழுவதுமாக
தமிழ்மொழி பேசும் மக்கள்
வாழும் பகுதியாகும்.
தற்பொழுது இப்பிரதேசம்
தோராயமாக தற்காலத்
தென்னிந்தியா என்பதாக
அறியப்படுகிறது.
இத்தென்னிந்தியப் பகுதியில்
தமிழ்நாடு, கேரளா ,
ஆந்திரப்பிரதேசம் சில பகுதிகள்,
கர்நாடக மாநிலத்தின் சில
பகுதிகள், இலங்கை முதலிய
பகுதிகளும் அடங்கும்.
வரலாறு
தென்னிந்திய புராணங்களில்
காணப்படும் கூற்றுகளின்படி,
முற்காலத் தமிழகத்தில் தலைச்
சங்கம், இடைச் சங்கம் மற்றும்
கடைச் சங்கம் ஆகிய மூன்று
சங்கங்கள் இருந்ததாக
நம்பப்படுகிறது.
இம்முச்சங்கங்களில் மூன்றாவது
சங்க காலமான கடைச்சங்கக்
காலத்தையே
வரலாற்றாசிரியர்கள்
சங்ககாலமாக எடுத்துக்
கொள்கின்றனர். முதல் இரண்டு
சங்கங்களும் புராணங்களில்
புகழ்பெற்று வாழ்பவை என்றே
கருதுகின்றனர் . .ஒவ்வொரு
சங்கத்திலும் அச்சசங்க
காலத்திற்கென சங்க இலக்கியங்கள்
படைக்கப்பட்டு தோற்றம்
கண்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
கல்வெட்டுகள , சங்க இலக்கியங்கள் ,
மற்றும் தொல்பொருள் தரவுகள்
ஆகியவையே
தென்னிந்தியாவின் ஆரம்ப கால
வரலாற்று ஆதாரங்களாக
திகழ்கின்றன.
சுமாராக கி.மு 400 மற்றும்
கி.பி. 200 ஆண்டுகளுக்கு
இடையேயான காலத்தில்,
தமிழகத்தில் சேர , சோழ பாண்டியப்
பேரரசுகள் இருந்துள்ளன.
இவைதவிர வேளிர் போன்ற சில
சுயாட்சி தலைவர்கள் ஆட்சியும்
தமிழகத்தில் இருந்துள்ளது,
இலக்கியச்
சான்றுகள்
முதன்மை கட்டுரைகள்: பண்டைய
தமிழ் வரலாற்று மூலங்கள்மற்றும்
சங்க இலக்கியம்
பழந்தமிழகத்தின் வரலாறு ,
தமிழர்களின் சமூக-அரசியல்
சூழல் பண்பாட்டு வழக்கங்கள்
தொடர்பான விரிவான தகவல்கள்
உள்ளடங்கிய சொத்துக்களாக
இலக்கியம் மற்றும் கல்வெட்டுகள்
திகழ்கின்றன. வரலாற்றுக்கு
முந்தைய காலம், தொன்மைக்
காலம், இடைக்காலம் என்று
மூன்று காலப் பிரிவுகளாகப்
தமிழக வரலாறு
பிரிக்கப்பட்டுள்ளது. தமிழ்
தேசியத்தின் சமூக-அரசியல்
மற்றும் கலாச்சார நிகழ்வுகளில்
புரிதலை வழங்குகின்ற
வகையில் உலகெங்கிலும் உள்ள
இலக்கியங்களும், கல்வெட்டு
ஆதாரங்களும் திகழ்கின்றன.
கலாச்சாரம்
மேலதிக தகவல்கள்: பண்டைத்
தமிழகத்தின் பொருளியல் நிலை,
பண்டைத் தமிழகத்தின் விவசாயம்,
பண்டைத் தமிழகத்தின்
தொழிற்சாலைகள்
சமயம்
பெரும் இலக்கண நூலான
தொல்காப்பியம் , பத்து நூல்களின்
திரட்டான பத்துப்பாட்டு , எட்டு
நூல்களை உள்ளடக்கிய எட்டுத்
தொகை , சிலப்பதிகாரம் ,
மணிமேகலை மற்றும் சீவக
சிந்தாமணி போன்ற பதினெட்டு
சிறு படைப்புகளையும்
பண்டைய தமிழ் இலக்கியங்கள்
உள்ளடக்கியுள்ளது. பண்டைய
தமிழர்கள் நெருக்கமாக இயற்கை
வழிபாட்டின் வேர்களை
பின்பற்றிய செயல் வட
இந்தியாவில் பின்பற்றப்பட்ட அதன்
சமகால வேத இந்து மதத்திற்கு
எதிரான புறமதத்தினன் போல
இருந்தது. பண்டைய சங்க
இலக்கியங்களில் சிவன்
முழுமுதற் கடவுளாக
கருதப்பட்டான். அதேவேளையில்
முருகன் வழிபாடும் மக்களால்
கொண்டாடப்பட்டது.
தமிழ்ப்புலவர்கள் இரு
கடவுளரையும் சங்கம் ஏறி பாடி
முழங்கியுள்ளனர். தமிழ்கூறு
நல்லுலகம் தங்கள் வாழ்வியலை
அகவாழ்வு, புறவாழ்வு என்றும்
வகை படுத்தி இருந்தனர். அவர்கள்
வாழ்ந்த நிலப்பரப்பை இயற்கை
அமைப்பிற்கு ஏற்றவாறு
குறிஞ்சி , முல்லை , மருதம் ,
நெய்தல் , பாலை என ஐவகையாகப்
பிரித்து அப்பகுதிகளின்
சூழலை ஒட்டிய கடவுள்களையும்
வழிபட்டனர். மலை சார்ந்த
குறிஞ்சி நில மக்கள் செவ்வேள்
எனப்படும் முருகனையும், காடு
சார்ந்த முல்லைநில மக்கள்
திருமாலையும், வயல் சார்ந்த
மருதநில மக்கள் வேந்தனையும்,
கடல் சார்ந்த நெய்தல்நில மக்கள்
கடலோன் என்ற தெய்வத்தையும்
வழிபட்டனர். பழம்பெரும் இலக்கண
நூலான தொல்காப்பியம்
கொற்றவை என்ற தாய் கடவுளைக்
குறிப்பிட்டுள்ளது. இதைத் தவிர
மாயோன், வாலி போன்ற
தெய்வங்களும் பண்டைகாலத்தில்
இருந்துள்ளன. இடைக்காலத்தில்
தமிழ் இலக்கியங்களில்
இந்துமதத்தின் ஆதிக்கம்
தலைதூக்கியது. இதனால்
சிவனை பின்பற்றுவோர்
சைவர்கள் என்றும் விஷ்ணுவைப்
பின்பற்றுவோர் வைனவர்கள்
என்றும் இரு பிரிவுகள்
தோன்றின.
முருகக் கடவுளை மிகவும்
பிரபலமான தெய்வமாக
வழிபட்டனர். ஆரம்ப காலத்தில்
சிவபெருமானின் மகனாக
நம்பப்பட்ட கார்த்திகேயனே
முருகன் என்று அடையாளம்
காணப்பட்டது. முதலில்
உள்ளூரில் வேறுபட்ட தெய்வமாக
கருதப்பட்ட முருக வழிபாடு
பின்னர் வலிமை
பெற்றிருக்கலாம். தமிழ்
கலாச்சாரத்தை ஆய்வு
செய்தவர்களில் முக்கிய
ஆய்வாளாரான கமில் வி
சுவலபில் அவர்களும்,
பகுப்பாய்வு செய்வதற்குரிய
மிகவும் சிக்கலான கடவுள்களில்
ஒருவராக சுப்பிரமணிய –
முருகனும் உள்ளார் என்கிறார்.
ஆதிகாலத்தில் இருந்த கொற்றவை
வழிபாடு பின்னாளில் அதாவது
இடைக்காலம் தொட்டு
இன்றுவரை அம்மன் வழிபாடு
அல்லது மாரியம்மன் வழிபாடாக
மாற்றம் பெற்றுள்ளது.
சிலப்பதிகாரத்து
நாயகியாகியாகிய கன்ணகியை
தெய்வமாக்கிய பத்தினி
வழிபாடும் தமிழர்களிடம்
குறிப்பாக இலங்கையில்
பொதுவாக காணப்பட்டது.
இவர்களைத் தவிர திருமால்,
சிவன் , கணபதி , பிற இந்து
தெய்வங்கள் யாவருக்கும் கோயில்
கட்டி வழிபடும் வழக்கமும்
பின்பற்றப்பட்டது.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்
தமிழ் ஆய்வுகள் தலைவர் ஜார்ஜ்
எல் ஆர்ட் மதுரைச் தமிழ்ச்சங்கமே
சிறப்பான இலக்கியச் சங்கம்
என்கிறார்.
காலக் கணிப்பு முறை
திருவிழாக்கள்
கலைகள்.
**********************************
சங்க இலக்கியம்
சங்க இலக்கியம் எனப்படுவது
தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட
காலப்பகுதியில் எழுதப்பட்ட
செவ்வியல் இலக்கியங்கள் ஆகும்.
சங்க இலக்கியம் 473 புலவர்களால்
எழுதப்பட்ட 2381 பாடல்களைக்
கொண்டுள்ளது.இப்புலவர்களுள்
பல தரப்பட்ட தொழில்
புரிந்தோரும், மற்றும்
பெண்களும் உண்டு.
சங்க இலக்கியங்கள்
அக்காலகட்டத்தில் வாழ்ந்த
தமிழர்களின் தினசரி வாழ்க்கை
நிலைமைகளைப் படம்பிடித்துக்
காட்டுவதாய் உள்ளது.
பண்டைத் தமிழரது காதல்,போர்,
வீரம், ஆட்சியமைப்பு, வணிகம்
போன்ற நடப்புகளைச் சங்க
இலக்கியப்பாடல்கள் எமக்கு
அறியத்தருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக