24 மொழிகளுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் விவரம்
2016-ம் ஆண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட 24 இந்திய மொழிகளுக்கு, சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அங்கீகரிக்கப்படாத 4 மொழிகளுக்கு ‛பாசா சம்மான்' விருதுகளும் அறிவிக்கப்பட்டன
*24 மொழிகளுக்கு..*
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், பெங்காலி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 24 இந்திய மொழிகளில் வெளியான சிறுகதை, கவிதைகள், நாவல், கட்டுரை, திறனாய்வு உள்ளிட்ட படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டன. தமிழுக்கு நெல்லையை சேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசனுக்கு ‛ஒரு சிறு இசை' என்ற சிறுகதை தொகுப்பிற்காக விருது வழங்கப்பட்டது.
*ரூ.1 லட்சம் பரிசு :*
விருது பெறும் எழுத்தாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும், தாமிரப் பட்டயம் வழங்கப்படும். அடுத்த ஆண்டு(2017) பிப்.,22ம் தேதி டில்லியில் நடைபெறும் விழாவில் தேர்வானவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
*விருது விபரம் :*
*தமிழ் - வாணிதாசன் (சிறுகதை)*
*தெலுங்கு - பாப்பி நனி சிவசங்கர் (கவிதை)*
*கன்னடம் - கோலுவாரு முகம்மது குன்ஹி (நாவல்)*
*மலையாளம் - பிரபா வர்மா (கவிதை)*
*ஹிந்தி - நஸீரா சர்மா (நாவல்)*
*பெங்காலி - நிரிசிங்கபிரசாத் பதூரி (கட்டுரை)*
*ஆங்கிலம் - ஜெர்ரி பின்டோ (நாவல்)*
*உருது - நிஜாம் சித்திக் (திறனாய்வு)*
*சம்ஸ்கிருதம் - சித்தனாத் ஆச்சார்யா (கவிதை)*
*அசாமி - ஜனான் புஜாரி (கவிதை)*
*மணிப்பூரி - மொய்ரங்தம் ராஜன் (சிறுகதை)*
*குஜராத்தி - கமல் வோரா (கவிதை)*
*ஒடியா - பரிமிதா சத்பதி (சிறுகதை)*
*பஞ்சாபி - சுவராஜ்பிர் (நாடகம்)*
*காஷ்மீரி - அஜீஸ் ஹஜினி (திறனாய்வு)*
*ராஜஸ்தானி - புலாஹி சர்மா (சிறுகதை)*
*மராத்தி - அஸாராம் லொமேட் (சிறுகதை)*
*நேபாளி - கீதா உபாத்யாய் (நாவல்)*
*போடோ - அஞ்சு (கவிதை)*
*சந்தாலி - கோவிந்த சந்திர மாஜி (கவிதை)*
*சிந்தி - நந்த் ஜவேரி (கவிதை)*
*டோக்ரி - சத்ரபால் (சிறுகதை)*
*மைத்திலி - ஷியாம் தரிஹரே (சிறுகதை)*
*கொங்கணி - எட்வின் ஜெ.எஃப். டி'சௌசா (நாவல்)*
*‛பாசா சம்மான்' விருது :*
அங்கீகரிக்கப்படாத மொழிகளான குருக், லடாக்கி, ஹல்பி மற்றும் சவுராஷ்டிரா ஆகிய 4 மொழிகளின் வளர்ச்சிக்கு உதவிய எழுத்தாளர்களுக்கு ‛பாசா சம்மான்' விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் சவுராஷ்டிரா மொழிக்காக தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் டி.ஆர்.தாமோதரன் மற்றும் டி.எஸ்.சரோஜா சுந்தரராஜன் ஆகியோர் விருது பெற தேர்வாகியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக