காதி மற்றும் கிராம தொழில் துறை ஆணையத்தில் 342 அதிகாரி வேலை
மத்திய அரசின் காதி மற்றும் கிராம தொழில் துறை ஆணையத்தில் காலியாக உள்ள 342 உதவி இயக்குநர் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு குரூப்-பி மற்றும் குரூப்-சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து நவம்பர் 19-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 342
பணியிடம்: இந்தியா முழுவதும்
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
Group-B (Gazetted Post)
1. Assistant Director Grade-I (Khadi) - 03
2. Assistant Director Grade-I (Admn & HR) - 11
3. Assistant Director Grade-I (Training) - 02
4. Assistant Director Grade-I (Finance Budget Audit and Accounts) - 16
5. Assistant Director Grade-I (Village Industries) - 04
6. Senior Executive (Economic Research) - 18
Group-B (Non-Gazetted Post)
7. Senior Executive (Ec.R) - 37
8. Senior Executive (Legal) - 07
9. Junior Translator - 02
Group-C (Non-Gazetted Post: Technical & Non-Technical Posts)
10. Executive (Khadi) - 31
11. Executive (Village Industries) - 109
12. Executive (Training) - 23
13. Junior Executive (FBAA) - 67
14. Assistant (Training) - 04
15. Assistant (Village Industries) - 07
16. Publicity Assistant (II) - 01
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கைக்கான லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயதுவரம்பு: 18 முதல் 27, 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு மையங்கள்:
தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, குவகாத்தி, பெங்களூரு, ஹைதராபாத், ஜெய்ப்பூர், சண்டிகர், போபால், நாக்பூர், பூனே, திருவனந்தபுரம், லக்னோ, பாட்னா, ராஞ்சி, அகமதாபாத், ஜம்மூ, புவனேஸ்வர், வாரணாசி மற்றும் ஷிலாங்
விண்ணப்பக் கட்டணம்: குரூப்-பி (Gazetted) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1,200, எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.600. குரூப்-பி (Non Gazetted) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் பொது, ஓபிசி பிரிவினருக்கு ரூ.800, எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.400. குரூப்-சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் பொது, ஓபிசி பிரிவினருக்கு ரூ.500, எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.400 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.kvic.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.11.2017
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 21.11.2017
ஆன்லைன் எழுத்துத் தேர்வு 2017 டிசம்பர் 23, 24-ஆம் தேதிகளில் நடைபெறலாம்.
மேலும் விரிவான தகுதிகள், வயதுவரம்பு சலுகைகள், சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.kvic.org.in/kvicres/update/Detailed%20Advt%20KVIC%20for%20Website.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக